புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_m10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram
கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_m10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10 
57 Posts - 39%
T.N.Balasubramanian
கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_m10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_m10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_m10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10 
4 Posts - 3%
Manimegala
கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_m10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_m10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_m10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10 
2 Posts - 1%
prajai
கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_m10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_m10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_m10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10 
423 Posts - 48%
heezulia
கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_m10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10 
297 Posts - 34%
Dr.S.Soundarapandian
கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_m10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_m10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_m10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10 
29 Posts - 3%
prajai
கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_m10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_m10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_m10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_m10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_m10கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள்


   
   
CHENATHAMIZHAN
CHENATHAMIZHAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 04/02/2015

PostCHENATHAMIZHAN Sat Feb 14, 2015 7:29 pm

கண்ணதாசனின் குறள்நெறிச் சிந்தனைகள்
                                                                                                       
                                                                                                     முனைவர். ப.ஆனந்தநாயகி காமராஜ்
                                                                                                       உதவிப் பேராசிரியர்
                                                                                                      நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி.

              வள்ளுவம் சொல்லாத வாழ்க்கைத் தத்துவம் எதுவும் உலகில் இல்லை; வள்ளுவத்தைச் சாராத படைப்புகளும் உலகில் இல்லை. அவ்வகையில், கண்ணதாசன் வள்ளுவர் பரம்பரையில் வந்தவர் ஆதலால், அவரது படைப்பிலும் வள்ளுவத்திற்குப் பஞ்சமில்லை. வள்ளுவர் வரையறுத்த வாழ்க்கை உண்மைகள் பலவற்றைத் தம்படைப்புகளில் கலந்து சுவைபட தந்த பெருமை திரையிசைக் கவிஞர்களில் கண்ணதாசனையே மிகுதியும் சாரும்.

இறைமையின் வெளிப்பாடு
             
             இறைமை என்பது மனிதநேயத்தை வளர்க்க உதவும் உணர்வுகளில் ஒன்று. “தமக்கும் மேலே ஒரு சக்தி உள்ளது” என்னும் நிலைப்பாட்டை மனித மனத்தில் விதைக்க அது உதவுகிறது. அவ்வுணர்வுக்கு நாயகனான இறைவனைப்பற்றிப் பல்வேறு சமயங்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறக்காணலாம்.
பொதுவாக, குணம்-குறியற்றவராகக் கருதப்படும் இறைவனுக்கு எட்டுக்குணங்கள் இருப்பதாகச் சமயங்கள் பலவும் மொழிகின்றன. வள்ளுவரும் ஒன்றுமுதல் எட்டுக் குறட்பாக்கள்வரை எட்டுக்குணங்களையும் வரையறுக்கிறார்.

ஆதிபகவன் - முதலும் முடிவும்  அற்றவன்
வாலறிவன் – தூய அறிவினன்

மலர்மிசை ஏகினான் – அன்பு வடிவானவன்
வேண்டுதல் வேண்டாமை இல்லான் - பந்தபாசங்களினின்றும்  நீங்கியவன்.

இருவினை சேரான் - முற்றும் உணர்ந்தவன்.
ஐந்தறிவித்தான் - தன்வயத்தன்.

தனக்குவமை இல்லான் - பேரருள் உடையவன்.
அறவாழி அந்தணன் - முடிவில்லா
                                                                  ஆற்றலுடையவன்.
இவ்வாறு, தம் எட்டுக் குறட்பாக்களில் சொன்ன எட்டுக் குணங்களையும் சேர்த்து 9- ஆவது குறளில் மேற்கண்ட எண்குணத்தவனைத் தலைவணங்கு என்றும், 10-ஆவது குறட்பாவில் அவ்வாறு வணங்கினால் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கரையேறலாம் எனவும் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இப்பத்துக் குறட்பாக்களையுமே பல்வேறு பாடல்களில் பரிணமிக்கச் செய்துள்ளார் கண்ணதாசன். சான்றாக,
“ அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி !
ஆதிபகவன் முதலென்றே உணரவைத்தாய் தேவி !
............................................................................................................
எண்ணும் எழுத்தென்னும் கண்திறந்தாய் !
என்னும் பாடலடிகளுக்குள்,

“ அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு “

“ எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு”
என்னும் குறட்பாக்கள் பொதிந்துள்ளன.

பொதுவாக இறைவன் மிகப்பெரியவன்  என்பதும், இறைவனே இவ்வுலக உயிர்களைப் படைத்துள்ளான் எனக்கருதுவதும், இறைவனை என்ணிவாழ்ந்தால் துன்பம் நீங்கி இன்பம் பெருகும் என்பதும் உலகத்தார் நம்பிக்கையாக உள்ளது. அந்நம்பிக்கையை மெய்ப்பிக்கும் முகமாக,
“ தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந் தார்க்கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது”
எனும் குறட்பா அமைந்துள்ளது.

    கண்ணதாசன் ஆத்திகம்-நாத்திகம் ஆகிய இருநிலைகளிலும் கருத்துக்களை வெளிப்படுத்தியவராயினும், ஆத்திகநிலையே அவரிடத்து மேலோங்கியிருந்ததை அறியமுடிகிறது. எனவே, இறைநம்பிக்கையில் ஆழ்ந்த உணர்வு அவர் கொண்டிருந்தார் என்பதும் தெரியவருகின்றது. வள்ளுவப்பெருமானின் இறைநம்பிக்கையைக் கண்ணதாசனும் ஏற்றுக்கொண்டு,
“ அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை அந்த
அண்ணலே தந்துவைத்தான் ஆறுதலை”
என்று பாடியிருப்பது அறியத்தக்கது. மேலும் வேண்டியவர் வேண்டாதவர் அவனுக்கு இல்லை என்னும் தொடர், “ வேண்டுதல் வேண்டாமை இலானடி சேந்தார்க்கு” என்னும் குறட்பாவை நினைவுகூர்வதாய் உள்ளது.

காதல்குறித்த சிந்தனை

        ஒத்த உள்ளம் கொண்ட தலைவன்-தலைவியரிடையே எழும் அன்புணர்வே காதல் எனப்படுகிறது. காதல் தோன்றுவதற்கும், அது வளர்ச்சியடைவதற்கும் கண்களே காரணமாகின்றன. இருவரின் கண்களும் காதல்மொழி பேசும்பொழுது வாய்மொழி தேவையில்லை என்பதை,

“கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல”
என்று உணர்த்துகிறார் வள்ளுவர்.

உலகத்தில் ஒரேமொழிதான் உண்டு என்றும், அதுவும் உள்ளம்பேசும் காதல்மொழி மட்டும்தான் என்றும் கூறும் கண்ணதாசன் இக்கருத்தை,

“ கண்ணோடு கண்சேர்ந்து கொண்டதடி
 வார்த்தைநின்றதடி ! மௌனம் வந்ததடி”

என்றுரைப்பது காதலின் உயர்ந்த நிலையை வரையறுப்பதாய் உள்ளது.
கண்வழியே புகுந்து கருத்தினிலே உறைந்து நின்ற காதலரைக் கண்ணிமைக்காது கண்ணுக்குள்ளேயே சிறைவைக்கிறாள் தலைவி ஒருத்தி. தம்கண்கள் இமைத்தால் கூட காதலர் மறைந்துவிடுவாரோ எனக்கருதி கண்களை மூடாமல் விழித்தே இருக்கிறாள். அவளது நிலையை,

“ இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திங்கே
ஏதிலர் என்னும் இவ் வூர்”
என்று குறட்பா மொழிகிறது. அவளது இந்நிலையைக் கண்ணதாசனும்,

“ கண்திறந்து நானிருந்தேன் கட்டழகர் குடிபுகுந்தார் !
கண்திறந்தால் போய்விடுவார் கண்மூடிக் காத்திருப்பேன்”
என மொழிவது எண்ணத்தக்கது.

காதலுக்குக் காரணமான கண்களே அக்காதல் உணர்வு மிகுதியால் தோன்றும் துன்பத்தின்போது நீரைச்சொரிகின்றன. இத்துன்ப நிகழ்வை,
“ கண்தாம் கலுழ்வது எவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது”
என்னும் குறட்பாவழி அறியலாம்.

இதனைக் கருத்திற் கொண்ட கண்ணதாசனும், இக்கருத்தை வலியுறுத்தும் முகமாக,
“ கண்கள் தீட்டும் காதல் என்பது அது
கண்ணில் நீரை வரவழைப்பது”
என்று பாடியுள்ளமை அறிதற்பாலது.

     ஒன்றுபட்ட உள்ளத்தோடு காதல்கொண்டிருப்பினும் சந்தர்ப்பச் சூழல்கள் இருவரிடையேயும் பிரிவை ஏற்படுத்தலாம். ஒருகாலத்தில், “ பிரியேன்., பிரியின் உயிர் தரியேன்” என்று வாக்களித்தவர் பிரிவென்ற ஒன்றைத் தந்த நிலையில் பெண்ணின் மனம் எவ்வாறு இருக்கும் என்பதை,
“அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
 தேறியார்க்கு உண்டோ தவறு”
என்று புலப்படுத்துகிறார் வள்ளுவர். இந்நிலையைக் கண்ணதாசன்,
“ மறவேன் மறவேன் என்றார்- உடனே
மறந்து விட்டார் தோழி !
பறந்து விட்டார் தோழி !”
என்றுரைக்கிறார்.

      பிரிவின் கொடுமை தலைவன்-தலைவியரை வாட்டுவது இயல்பே. அவ்வாட்டத்தால் தூக்கத்தை இழப்பதும் இயல்பே.அத்தகு துன்பத்தை எய்திய தலைவி ஒருத்தி, “ உலகில் உள்ள அனைத்து உயிர்களும் தூங்கிக்கிடக்கின்றன; நானும், இவ்விரவுப்பொழுதும் மட்டும் தூங்காது தனித்திருக்கின்றோம். காரணம், தான்மட்டும் தனித்திருக்க வேண்டியுள்ளதேயென்று இரவு என்னையும் தூங்கவிடாமல் செய்துவிட்டது என்றும் புலம்புகிறாள். அவளது இக்கூற்றை,
“ மன்னுயி ரெல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை”
என்னும் குறட்பாவழி அறியலாம். கண்ணதாசன் இரவுப்பொழுதுக்குப் பதிலாக அப்பொழுதில் தோன்றும் நிலவு அவளுக்குத் துணையாக இருப்பதாகப் பாடுகிறார். அதனை,
“பூ உறங்குது பொழுதும் உறங்குது
நீ உறங்கவில்லை- நிலவே
கான் உறங்குது காற்றும் உறங்குது
நான் உறங்கவில்லை”
என்பதன் மூலம் அறியலாம்.

இல்வாழ்க்கைப்பயன்:-

       இல்லறம்,துறவறம் என்னும் இருவகை அறங்களுள் இல்லறமே தூய்மையானது என்பர். “ இல்லறமல்லது நல்லறமன்று” என்பார் ஒளவை.
கணவன்-மனைவி இடையேயான அன்பும், அவ்விருவரும் சேர்ந்து ஆற்றும் தலையாய அறமும் இல்வாழ்க்கையைப் பண்புடையதாக்கிப் பயனைப்பெருகச் செய்கின்றன. இதனை விளக்கும் முகமாக,
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”
என்கிறார் வள்ளுவர். இதைக்கருத்தில் கொண்ட கண்ணதாசனும்,
“ அன்பும் அறனும் உடையவர் வழ்வில்
பண்பும் பயனும் சேரும் - இதை
அறிந்தவர் காண்பார் ஆனந்தமென்றே
திருக்குறள் நூலும் கூறும்
தமிழ்மறை யாவும் பாடும்”
என்றுரைத்து வள்ளுவ மறையோடு பிறமறைகளையும் இணைத்துக் காட்டுகின்றார். இதன்மூலம், வள்ளுவத்திற்குப் பின் எழுந்த நீதிநூல்களும்  வள்ளுவநெறியையே பின்பற்றுகின்றன என்பதைத் தெளிவுபட உணரலாம்.

      ஓர் ஆடவனுக்குக் கல்வி, வீரம் போன்ற புறஒழுக்கங்களால் பெருமை ஏற்பட்டாலும், இல்லத்தில் அவன் வருகைக்காகக் காத்திருந்து அன்பைச்செலுத்தாத மனைவி அமையவில்லையெனில் அவனால் நிம்மதியற்ற-பயனற்ற வாழ்வே வாழமுடியும். இதனை,
“ இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லதன் மாணாக் கடை”
என்னும் குறட்பாவால் அறியலாம். இக்கருத்தைச் சார்ந்தே,
“ ஆயிரம் கல்வி அறிவெனத் தேறினும்
ஆடவன் வாழ்வும் அன்புடை மனைவி
இல்லாதாயின் இல்லாதாகும்”
என்னும் கண்ணதாசனின் கருத்தும் அமைந்துள்ளது அறியத்தக்கது.

மானத்தின் பெருமை

           மனிதன், தன்மானத்தைக் காக்கவேண்டுமாயின் அவமானம் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறான். மானம் என்பது மனிதனுக்கு மட்டும் உரியதா? எனும்போது அஃறிணை உயிர்களுக்கும் உரியதாக மதிக்கப்படுவதைக் காணலாம். அவ்வுயிர்களுள் மானுக்கு அம்மானம் உள்ளது என்பதைக் குறட்பாவழி நிலைநாட்டுகிறார் வள்ளுவர். காரணம் ஐயறிவு படைத்த மானினம் தன் மானத்தைக் காக்கத் துணிகின்ற போது, ஆறறிவு படைத்த மனிதனுக்கு அது எவ்வளவு தேவையாகிறது என்பதை உணரவேண்டும் என்பதேயாம்.
“ மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்”
என்னும் அவரது உயர்ந்த குறட்பா இச்சிந்தனையை விளக்குவதாய் உள்ளது. இக்கருத்தை உள்வாங்கிய கண்ணதாசனும்,
“ மானம் பெரியதென்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா”?
என்று பாடுகிறார். மனிதன் அம்மானத்தைக் காக்கத்துணியாத போது,
“ மான்களுக்கும் மானம்வைத்தான்
மனிதனுக்கு என்ன வைத்தான்?”
என்று வினா எழுப்புகிறார்.

சினமென்னும் கொல்லி

         மனிதனை எளிதில் வீழ்த்துவது சினம். அது எவரைச்சார்ந்தாலும் நல்லது எது? தீயது எது? என்று ஆராய்ந்து செயலாற்றவிடுவதில்லை. அது யாரைச்சார்கிறதோ அவரையும், அவரைச்சார்ந்தவரையும் அழிக்கும் தன்மையது என்பது வள்ளுவர்தம் கருத்து. அனுபவம் மிக்க அனைவரின் கருத்தும் இதுவேயாகும்.
“ சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்”
எனும் குறட்பா சினத்தை, “ கொல்லி” என்று சுட்டக் காணலாம். கண்ணதாசன் அச்சினத்தை “நெருப்பு” என்கிறார்.
“ நெருப்பு வைத்தால் வீடெல்லாம் ஒளியிருக்கும்
மனதிலே நெருப்புவைத்தால் வைத்தவனை எரிக்காதோ”
என்னும் கருத்து சினத்தின் வெம்மை எத்தகையது என்பதனைத் தெளிவாகப் புலப்படுத்துகிறது. இவையாவும் கோபம்கொண்ட மனிதர் வாழ்வு அவலத்தின் உச்சத்திற்கே சென்றுவிடும் என்றும் எச்சரிக்கை செய்யக்காணலாம்.

இவ்வாறு வள்ளுவத்தை ஏற்றுக்கொண்டு பலபடைப்புகளைத் தந்த கண்ணதாசன் எதிர்மறைக் கருத்தொன்றையும் பதிவுசெய்யக் காணலாம். அஃதாவது “ இடுக்கண் வருங்கால் நகுக” என்னும் வள்ளுவரின் கருத்தை விமர்சிக்கும் முகமாக,

“ துன்பம் வரும் வேளையிலே சிரிங்க  
 என்று சொல்லிவச்சார் வள்ளுவரும் சரிங்க
 பாம்பு வந்து கடிக்கையில் பாழும் உடல் துடிக்கையில்
 யார்முகத்தில் பொங்கிவரும் சிரிப்பு “

என்று கேட்பது அனுபவ நோக்காக அறியமுடிகிறது.
எனினும், வள்ளுவ ஆசான் துன்பத்தையும் இன்பமாகக் காணமுயற்சி செய்தால் வாழ்வு இலகுவாகும் என்னும் நோக்கில் கூறியுள்ளமை மனதைப்பண்படுத்தும் பக்குவமொழியாகும்.

மனிதஇனம் மாண்புடன் வாழ்வதற்குக் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறிமுறைகளையெல்லாம் வகுத்தளித்தவர்  வையகப்பெரும்புலவர் வள்ளுவர். தான்பெற்ற அனுபவங்களையே திரையிசைப் பாடல்களாகவும், இன்னபிற படைப்புகளாகவும் பெருமளவில் தந்து, தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவராக உயர்ந்து நிற்பவர் கவியரசர் கண்ணதாசன்.  குறளின் கருத்துக்களைத் தொட்டு நிற்கும் கண்ணதாசனின்  பாடல்களும் தமிழர் நெஞ்சத்தை விட்டகலாது தற்கால இலக்கியத்திற்கு அணிசேர்த்துக் கொண்டுதானிருக்கின்றன.
           ______________________________________

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக