புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10 
60 Posts - 46%
ayyasamy ram
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10 
54 Posts - 41%
mohamed nizamudeen
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10 
2 Posts - 2%
prajai
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10 
420 Posts - 48%
heezulia
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10 
28 Posts - 3%
prajai
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம்


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Tue Feb 03, 2015 9:26 pm

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் -1


ஆப்ரஹாம் லிங்கன்

ஒரு மனிதனால் எத்தனை தோல்விகளைத் தாங்க முடியும். ஒன்று இரண்டு அதற்குள்ளாகவே மனமொடிந்து விடுவார்கள். தங்கள் பாதையை மாற்றிக் கொள்வார்கள்.

ஆனால் தோல்விகளை தடைக்கற்களாகக் கருதாமல் அவற்றைப் படிக்கற்களாகக் கருதி தோல்விகளிலிருந்து பெற்ற  அனுபவங்களையே தன் வாழ்க்கையின் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்பவர்கள் புத்திசாலிகள்.

தோல்விகள் ஏற்பட்டால் துவண்டு விடுவார்கள் சாதாரண மனிதர்கள். அந்தத் தோல்வியையே துவண்டு போகச் செய்வார்கள் வெற்றிவீரர்கள்.

அப்படித் தோல்விக்கே தோல்வியைக் கொடுத்தவர்தான் ஆப்ரஹாம் லிங்கன்.

ஆம் அவர் காணாத தோல்விகள் இல்லை, ஆனால் அத்தனை தோல்விகளிலிருந்தும் மீண்டு வந்தார்.

தோல்விகளின் குழந்தை என்றுகூட அவரை செல்லமாக அழைத்தார்கள்.

அவரின் தோல்விகளிலிருந்து அவர் மட்டும் பாடம் கற்கவில்லை நாமும் கற்றுக் கொள்ளலாம்.

அவருடைய 22 வயதிலிருந்து 51 வயது வரை அவர் கண்ட தோல்விகள் ஏராளம்.

வியாபாரத்தில் தோல்வி, சட்டம் படிப்பதில் தோல்வி, தேர்தலில் தோல்வி, காதலில் தோல்வி, செனட் தேர்தலில் தோல்வி, துணை அதிபர் தேர்தலில் தோல்வி என்று அவர் தோல்வியின் அத்தனை பரிமாணங்களையும் கண்டார்.
ஆனால் அவர் அதற்காகவெல்லாம் அலட்டிக் கொள்ளவேயில்லை.

தன் கடமையை நேரம் தவறாமல் செய்துகொண்டே வந்தார். தினந்தோறும் அவரின் வேலைகளைச் செய்வதில் அவர் அயரவில்லை.

அவர் தோல்வியுற்றபோதெல்லாம் அவரைக் கேலிசெய்தவர்களைக் கண்டு அவர் மனம் நோகவில்லை. அவர்களின் எண்ணம் அப்படி, எனது எண்ணம் வெற்றியை அடைவதுதான் என்று அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருந்தார்.
கடைசியாக அவர் அத்தனை தோல்விகளுக்கு அப்புறமாக  அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார்.

ஆனால் அப்போதும் பலர் குறை சொன்னார்கள். நம்மைச்சுற்றி எப்போதும் குறைசொல்லவும், கிண்டலடிக்கவும் ஆட்கள் இருப்பார்கள்.

அதைத்தாண்டி வருவது மட்டுமே வெற்றியாளனாக நினைப்பவரின் வேலை.

நாம் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றிபெறுவது என்பது சாத்தியமல்ல. அதற்காக வேலை ஒன்றும் பார்க்காமல் இருப்பதும் புத்திசாலித்தனமல்ல.

இறங்கி வேலை பார்க்க வேண்டும், வழியில் முட்களும் இருக்கும், ரோஜாக்களும் இருக்கும். ரோஜாக்களை நினைத்துக் கொண்டே முட்களைக் கடக்க வேண்டும்.

லிங்கனின் கடைசி லட்சியமான அதிபர் பதவியை அவர் அடைவதற்கு முன் அவர் பட்ட தோல்விகளை நினைத்துப் பார்த்தால் சாதாரணக் காரியங்களுக்கு நாம் படும் துயரங்கள் எல்லாம் துச்சமாகத் தெரியும்.

வாழ்க்கையில் வீழ்வது என்பது பெரிய விஷயமல்ல, அந்த வீழ்ச்சியை நினைத்துக்கொண்டு வீழ்ந்தே கிடப்பதுதான்  முட்டாள்தனம்.

வீழ்ந்ததே தெரியாமல் உடனே எழுபவன்தான் வெற்றிக்கோட்டைத் தொடுகின்றான்.

தோல்வி என்பது நாம் துயரப்பட வருவதல்ல, நம்மை பலப்படுத்த வருவது. நம் மனதை மேலும் மேலும் வெற்றியை நோக்கிச் செலுத்த வருவது.

தோல்விகளைத் தட்டிவிட்டு விரைபவன் வெற்றிக்கனியை சுவைப்பான்.

தோல்வி தந்த சோகத்தில் ஆழ்பவன் , புதைகுழியில் வீழ்வான்.

தோல்வி வரும்போதெல்லாம் லிங்கனை நினைத்துக் கொள்ளுங்கள். எழுந்து வெற்றியை நோக்கிச் செல்லுங்கள்.

தோல்விகள் என்பவை தடைக்கற்கள் அல்ல, அவையே வெற்றிக்குப் படிக்கற்கள். தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் அந்தப் பாடத்தை உங்கள் வெற்றிக்குப் பயன்படுத்துங்கள்.

subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Tue Feb 03, 2015 9:30 pm

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் -2

ஹெலன் கெல்லர்

ஒரு குட்டிக்கதை சொல்வார்கள். ஒரு தவளையைப் பிடித்துவந்து ஆராய்ச்சி செய்தார்களாம். முதலில் ஒரு காலை வெட்டிவிட்டு ஜம்ப் என்றபோது அந்தத் தவளை குதித்ததாம். மற்றொரு காலையும் வெட்டிவிட்டு மீண்டும் ஜம்ப் என்றார்களாம். அப்போதும் அந்தத் தவளை சிறிது கஷ்டப்பட்டு குதித்ததாம்.

மூன்றாவது காலையும் வெட்டிவிட்டு ஜம்ப் என்றபோதும் இருந்த ஒரு காலைப் பயன்படுத்தி அந்தத் தவளை குதித்தது. நான்காவது காலையும் வெட்டிவிட்டு ஜம்ப் என்றபோது அந்தத் தவளை பேசாமல் இருந்தது. உடனே அதைவைத்து ஆராய்ச்சி செய்தவர்கள் தவளையின் நான்கு கால்களையும் வெட்டிவிட்டால் அதற்குக் காது கேட்காது என்று எழுதினார்களாம்.

அந்தக் கதை எதற்காகச் சொல்லப்பட்டதோ, தெரியவில்லை. ஆனால் நாம் கவனிக்க வேண்டியது மூன்று கால்கள் போன நிலையிலும் தன்னிடமிருந்த ஒரே காலைப் பயன்படுத்தி ஜம்ப் பண்ணிய தவளையின் மன உறுதியைத்தான்.

எதை வேண்டுமானாலும் இழந்துவிட்டால் திரும்பப் பெற்றுவிடலாம் ஆனால் நமது தன்னம்பிக்கையை மட்டும் இழந்துவிடக்கூடாது. அது ஒன்று போதும் அதன்மூலம் எதையும் பெற்றுவிடலாம்.
அத்தகைய மன உறுதியும் தன்னம்பிக்கையும் உடைய ஒருவர்தான் ஹெலன் கெல்லர்.

பிறந்தபோது நல்ல ஆரோக்கியத்துடன் காணப்பட்ட ஹெலன் கெல்லர் தனது ஒன்றரை வயதில் ஏற்பட்ட கடுமையான காய்ச்சல் காரணமாக கண் பார்வை, பேசும் சக்தி, கேட்கும் திறன் ஆகிய மூன்றையும் இழந்துவிட்டார். அதற்காக அவர் மனம் உடைந்து போய்விடவில்லை.

ஹெலன் கெல்லரின் பெற்றோர் அப்போது மிகவும் புகழ்பெற்றவராக விளங்கிய அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்லிடம் யோசனை கேட்டார்கள். அவரின் ஆலோசனையை ஏற்ற அவர்கள் சல்லிவன் என்னும் ஆசிரியையிடம் ஹெலனை படிக்க அனுப்பினார்கள்.

சல்லிவன் போல் நல்ல ஆசிரியை கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ஹெலனுக்கு வாழ்க்கையில் புதுவசந்தம் வீசத் தொடங்கியது அதன்பிறகுதான்.

பார்வையற்றோருக்கான பிரெயில் முறையில் தனது கல்வியைத் தொடர்ந்த ஹெலன் கெல்லர் இடைவிடாத பயிற்சியின் காரணமாக தனது இழந்த பேச்சாற்றலைத் திரும்பப் பெற்றார். மற்றவர்களைப்போல் பேச்சாற்றல் வந்துவிட்டதே என்று அவர் விட்டுவிடவில்லை. தனது பேச்சாற்றலை வளர்த்துக்கொண்டு புகழ்பெற்ற பேச்சாளராக வளரத் தொடங்கினார்.

கல்லூரியில் படித்துப் பட்டமும் பெற்றார். காது கேட்காத, கண் பார்வையற்றவர் ஒருவர் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றது அதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தன் தகுதிகளை உயர்த்திக்கொண்ட அவர் சிறந்த எழுத்தாளராகவும் புகழ்பெறத் தொடங்கினார்.

முழு ஆரோக்கியமான உடலை வைத்துக்கொண்டு உழைக்க மறுக்கும் சோம்பேறிகளுக்கு மத்தியில் அவர் முழுநேரமும் உழைத்தார். ஊனமுற்றவர்களின் நலனைக் கருதி ஒரு அமைப்பை ஏற்படுத்தினார்.
ஹெலன் கெல்லர் எழுதிய புத்தகங்கள் மற்றும் அவரது பேச்சுக்கள் அடங்கிய ஒலி நாடாக்கள் உலகம் எங்கும் பரவலாக விற்பனையானது.

அவரிடம் ஒரு பேட்டியின்போது உங்கள் வெற்றி ரகசியம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அவர் அளித்த பதில்தான் அனைவருக்கும் உந்து சக்தியாக விளங்கும் பதில்.

“இந்த உலகத்தை என்னால் பார்க்க முடியவில்லை என்பது ஒரு குறைதான் ஆனால் அந்தக் குறையை நான் போக்கிக் கொள்ள வேண்டுமானால் இந்த உலகமே என்னைத் திரும்பிப் பார்க்கவேண்டும் என்று விரும்பினேன் அதற்காகவே என் நேரத்தைச் செலவிட்டேன்”

ஊனமாகப் பிறந்தபோதும் அதை சற்றும் நினைக்காமல் உலகப் புகழ்பெற்ற அந்தப் பெண்ணின் அசாத்தியமான மன வலிமையை என்னவென்று சொல்வது?

வாழ்வில் வெற்றிபெற ஊனம் ஒரு தடையல்ல. இலக்கை நோக்கிய பயணத்தில் எதுவும் தடையல்ல.

subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Tue Feb 03, 2015 9:35 pm

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 3

முகமது அலி

ஒவ்வொரு மனிதனும் வெற்றிபெறவே விரும்புகிறான். அவ்வாறு வெற்றி பெறுபவனையே உலகம் ஞாபகம் வைத்துக்கொள்கிறது. இரண்டாவதாக வருபவனை உலகம் மறந்துவிடுகிறது,
அதனால்தான் வெற்றி தேவதையுடன் உறவாடவே அனைவரும் விரும்புகிறார்கள்.

1964- ஆம் ஆண்டு உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டைப் போட்டியில் 22 வயதே ஆன ஒரு இளைஞன் கலந்து கொண்டிருந்தான். அவன் எதிர்த்து நின்றதோ குத்துச்சண்டையில் புகழ்பெற்ற சாம்பியனாக இருந்த லிஸ்டன் என்பவரை.

எதிரிகளைப் பதம் பார்ப்பதில் லிஸ்டன் பேர்வாங்கியவர். அவரிடம் குத்து வாங்கி வீழ்ந்த பலரைத்தான் அதுவரை பார்த்திருந்தார்கள் பார்வையாளர்கள்.
முதல்முறையாக அவரின் புருவத்தில் குத்திய இளைஞனை ஆர்வமாகப் பார்த்தார்கள்.

ஆறாவது சுற்றுக்குப் பிறகு லிஸ்டனின் புருவத்தில் காயம், கைமூட்டு நழுவியிருந்தது. வலியின் காரணமாக அவர் தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியவில்லை.
உலக சாம்பியனாக மாறினான் அந்த இளைஞன். அவன் பெயர் முகமது அலி. இயற்பெயர் காஸியஸ் மெர்ஷிலி¢ஸ் கிளைவ்.

அதுவரை அவனுடைய பயிற்சியாளர் முதல் இடத்தைத் தவிர வேறு எதையும் கற்பனையில்கூட பார்க்காதே என்று அவருக்கு அறிவுறுத்தியிருந்தார். அது குத்துச்சண்டைக்கு மட்டுமல்ல, வாழ்வின் அனைத்து நிலைகளுக்கும் பொருந்தும்.

முகமது அலி கலந்துகொண்ட அனைத்துப் போட்டிகளிலும் அவர் முதலிடத்திலேயே தொடர்ந்து நீடித்தார். அவரை எதிர்த்தவர்கள் எளிதாக மண்ணைக் கவ்வினார்கள்.
எப்படி அந்த வெற்றி சாத்தியமாயிற்று?

அவரின¢ உடல், மனம், சொல், சிந்தனை அனைத்திலும் முதல் இடம் ஒன்று மட்டுமே இருந்தது. அதைத்தவிர அவர் வேறொன்றையும் சிந்தித்ததே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு அவர் வெற்றியை மனக்கண்ணில் பார்த்துப் பழகியிருந்தார்.

தன்னுடைய பனிரெண்டு வயதில் குத்துச்சண்டை கற்றுக்கொள்ளத் தொடங்கினார் முகமது அலி.

ஆனால் அவர் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு சம்பவம் நடைபெற்றது.

அவருக்கு பதினெட்டு வயது ஆனபோது, இத்தாலியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு தன் தாய்நாட்டிற்காக தங்கப்பதக்கத்தை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியுடன் திரும்பி வந்தார்.
ஆனால் அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை. தன்னுடைய நண்பர்கள் சிலருடன் அவர் ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தபோது, கறுப்பர்களுக்கு இந்த ஹோட்டலில் இடமில்லை என்று தடுத்து நிறுத்தப்பட்டார்.
ஒலிம்பிக்கில் தாய்நாட்டிற்காக, தான் தங்கப்பதக்கம் வாங்கி வந்திருப்பதாக அவர் சொல்லியும் ஹோட்டலின் ஊழியர் அவரை உள்ளேவிட மறுத்தார்.

வெறுத்துப்போன முகமது அலி தான் வாங்கிவந்த தங்கப்பதக்கத்தை ஆற்றில் வீசிவிட்டு ஆறுதல் அடைந்தார்.

சொந்த நாட்டிலேயே வெறுத்து ஒதுக்கப்பட்ட அவர் இ¢ஸ்லாம் மதத்திற்கு மாறினார். தன்னுடைய பெயரை முகமது அலி என்று மாற்றிக் கொண்டார்.

கடுமையான பயிற்சிகள், ஓய்வில்லாத பயிற்சிகள், இடைவிடாத பயிற்சிகள், எந்த நேரமும் பயிற்சிகள். அவருடைய ஒரே இலக்கு முதல் இடம். அதை அடைந்தார். தக்கவைத்துக் கொண்டார். அவர் குததுச்சண்டை உலகில் இருந்தவரை பெற்ற வெற்றிகள் பலப்பல.

அவரை அல்ஸீமர் நோய் தாக்கியது. அதன்பின்பு குத்துச்சண்டையில் ஈடுபடுவதை விட்டுவிட்டு கறுப்பர்களின் சுதந்திரத்தி¢ற்காக அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். சமூக சேவை புரிந்தார்.

எந்தச் செயலில் ஈடுபட்டாலும் இடைவிடாமல் கடுமையான பயிற்சி, முதல் இடத்தைப் பற்றிய சிந்தனை, செயல்பாடுகள் இருந்தால் முதலிடத்தை நோக்கி நீங்கள் போகவேண்டியதில்லை. அது உங்களை நோக்கி வரும். வந்தே தீரும்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 03, 2015 9:36 pm

அருமை, அருமை...............தொடருங்கள் புன்னகை சூப்பருங்க
.
.
.
உங்களைப்பற்றி அறிமுகம் பகுதிக்கு சென்று , அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 03, 2015 9:46 pm

//வாழ்வில் வெற்றிபெற ஊனம் ஒரு தடையல்ல. இலக்கை நோக்கிய பயணத்தில் எதுவும் தடையல்ல.//

ரொம்ப சரி புன்னகை............... சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 03, 2015 9:47 pm

//எந்தச் செயலில் ஈடுபட்டாலும் இடைவிடாமல் கடுமையான பயிற்சி, முதல் இடத்தைப் பற்றிய சிந்தனை, செயல்பாடுகள் இருந்தால் முதலிடத்தை நோக்கி நீங்கள் போகவேண்டியதில்லை. அது உங்களை நோக்கி வரும். வந்தே தீரும்//

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Tue Feb 03, 2015 9:48 pm

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 4

இந்தியாவின் தங்க மங்கை பி.டி.உஷா

ஒரு விஷயத்தில் ஆர்வமிருந்தால் போதும். எந்த விஷயத்தையும் சாதித்துவிடலாம். ஏதோ ஒரு வேலையைச் செய்துவிட்டு, கடனே என்று வாழ்வதைவிட நமக்குப் பிடித்தமான வேலையை ஆர்வமாகச் செ¢ய்தால் போதும், நம் வாழ்வின் லட்சியத்தை அடைந்துவிடலாம்.

1985 மற்றும் 1986- ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகத் தடகள விளையாட்டுக்களில் முதல் பத்து பெண் விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராக விளங்கியவர் பி.டி.உஷா. அவரின் சாதனை இன்றுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு முன்பும், பின்னரும் எந்த விளையாட்டு வீரரும் அந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை என்பதுதான் சாதனை.

பி.டி.உஷாவின் முழுப்பெயர் பிலாவுள்ளகண்டி தெக்கெப்பரம்பில் உஷா. கேரளாவில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் பய்யோலி என்ற ஊரில் பிறந்தார் பி.டி.உஷா.

படிப்பு ஒருபக்கம் இருந்தாலும் சிறு வயதிலேயே விளையாட்டில் ஆர்வம் கொண்டவராக அவர் விளங்கினார்.

பள்ளியில் படிக்கும் காலத்தில் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமாகக் கலந்து கொள்வது அவரது வழக்கம். பெரும்பாலான போட்டிகளில் அவர் வெற்றியும் பெற்றுவிடுவார்.

வெற்றி பெறுவதற்காக அவர் தவறாமல் பயிற்சி செய்வார். கேரளாவில் கண்ணனூரில் பெண்களுக்கான விளையாட்டுப் பள்ளி தொடங்கப்பட்டபோது கோழிக்கோடு மாவட்டத்தின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அவர்.

முறையான பயிற்சி, தணியாத ஆர்வம் கொண்டிருந்த காரணத்தால் நாளுக்கு நாள் அவருடைய திறமை வளர்ந்தது.

அவருக்கு 13 வயது ஆனபோது தேசிய அளவிலான தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்டு தேசிய சாதனை படைத்தார். அன்று அவருடைய வெற்றி ஆரம்பமானது.

பின்னர் பல தேசியப் போட்டிகளில் வெற்றிவாகை சூடி பல பதக்கங்களை அள்ளி வந்தார். தடகள விளையாட்டில் புயல்போல் பாய்ந்துவரும் அவர் அனைவரையும் கவர்ந்தார்.

தேசிய அளவில் பல வெற்றிகளைப் பெற்ற அவர் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார். 1980- ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் முதன்முறையாக கலந்துகொண்டார். அதில் அவர் பதக்கம் எதுவும் பெறாவிட்டாலும் அதன்பின்னர் இரண்டு வருடங்களுக்குப் பிறகு டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டங்களில் வௌ¢ளிப் பதக்கங்களைப் பெற்றார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தடகளப் போட்டிகளில் பங்கேற்ற அவர் சுமார் 13 தங்கப் பதக்கங்களை வென்று நம் நாட்டிற்குப் பெருமை சேர்த்தார். அதனால் ஆசிய தடகள ராணி என்று புகழப்பட்டார்.

திருமணத்திற்குப் பிறகு சில ஆண்டுகள் விளையாட்டு உலகிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் கணவரின் ஊக்கத்தால் மீண்டும் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களைப் பெற்றார்.

தன்னுடைய 36வது வயதில் காலில் தொடர்ச்சியாக வலி இருந்த காரணத்தால் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். சுமார் 20 ஆண்டுகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்த அவருக்கு இந்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருது மற்றும் அர்ஜுனா விருது ஆகியவற்றை வழங்கி கௌரவித்தது. மேலும் இந்திய ரயில்வேயில் அதிகாரி பணி வழங்கி பெருமைப்படுத்தியது.

இந்தியாவின் தங்க மங்கை, ஓட்டப் பந்தய ராணி, பய்யோலி எக்ஸ்பிரஸ் என்று பல பெயர்களால் அவர் அழைக்கப்படுகிறார்.

ஓய்வு பெற்றபின்னும் விளையாட்டை விட்டுப் பிரியாத அவர் தற்போது பயிற்சிப் பள்ளி ஒன்றை நடத்தி பயிற்சியாளராக தன்னுடைய பணியைத் தொடர்கிறார்.

சிறு வயதிலிருந்தே சாதனைகள் பலவற்றைப் படைத்த பி.டி.உஷாவிற்கு, கடுமையான பயிற்சியும், விடாமுயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதே தாரக மந்திரமாக இருந்தது.

subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Tue Feb 03, 2015 9:53 pm

மிக்க நன்றி சகோதரி

subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Tue Feb 03, 2015 10:07 pm

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 5

கல்பனா சாவ்லா

ஒரு இலட்சியத்தை எடுத்துக் கொள், அதை நோக்கி தினம் தினம் முன்னேறு. இறுதியாக உன் இலக்கை அடையமுடியும் என்று மனோதத்துவ அறிஞர்கள் கூறுவதுண்டு. அதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் கல்பனா சாவ்லா.

ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம் என்றில்லாமல் நாம் மறைந்தாலும் நம் பெயர் இந்த பூமியில் நிலைத்திருக்க வேண்டுமென்ற கனவுடன் செயல்பட்டவர் அவர். கல்பனா என்றாலே கனவு என்பதுதான் அர்த்தம் என்பது வியக்கவைக்கும் விஷயம். அவரின¢ கனவு வீணாகவில்லை. அவர் எண்ணம் போலவே அவர் மறைந்துவிட்டாலும் அவரின் புகழ் இன்றும் நிலைத்துள்ளது.

கல்பனாவிற்கு சிறு வயதாக இருந்தபோதே வானில் பறக்கும் விமானங்களின் மேல் ஆர்வம் அதிகம். அண்ணனுடன் பள்ளிக்குச் செல்லும் நாட்களில் வானில் விமானம் பறக்கும் சத்தம் கேட்டாலே ஆசையாகப் பார்ப்பார். அவள் பிறந்த ஊரில் விமானப் பயிற்சிப் பள்ளி இருந்ததாலும்  அவள் ஆசைக்கு மேலும் ஊக்கம் பிறந்தது.

ஹரியானாவின் கர்னால் என்ற ஊரில் 1961- ம் ஆண்டு ஜனவரி 7 ம் தேதி பனார்சிதாஸ் சாவ்லா, சன்யோகிதா தம்பதியருக்கு கடைக்குட்டியாகப் பிறந்தார் கல்பனா. கல்பனாவின் பெற்றோர் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக இந்தியாவிற்கு வந்தவர்கள். கல்பனாவின் தந்தை படாத கஷ்டமில்லை, செய்யாத தொழிலில்லை. ஆனாலும் அவரிடம் தேவைக்கு அதிகமாகவே நம்பிக்கையும், மன உறுதியும் இருந்தன. அதுவே பின்னாட்களில் கல்பனாவிற்கும் வெற்றியைத் தேடித் தந்தது.

தன் அண்ணனுடன் சேர்ந்து கிளைடர் விமானம் ஓட்டுவதற்கான பயிற்சியை சிறு வயதிலேயே கற்றுக் கொண்டார்.

கல்லூரியில் பயிலும் காலம் வந்தவுடன், சண்டிகரில் இருந்த பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் படிப்பதற்காக சேர்ந்தார். அப்போது அந்த வகுப்பில் இருந்த ஒரே பெண் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு அவளின் திறமையைக் கண்ட அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் வியந்து பாராட்டினார்கள்.

முதுகலைப் படிப்பிற்காக அமெரிக்காவில் இருந்த டெக்ஸாஸ் மாநிலத்திலிருந்த ஆர்லிங்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளில் படித்துத் தேறினார். கொலராடோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

அதன்பின்னர் அமெரிக்காவில்  வணிக முறையிலான விமானத்தை இயக்குவதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டது.

தான் எண்ணியபடியே அனைத்தையும் கற்றுத் தேர்ந்த கல்பனா நாசாவின் ஆம்ஸ் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளராகப் பணியில் சேர்ந்தார்.பின்னர் ஏவுகணைகள், விமானங்கள் ஆகியவற்றை சிக்கலின்றிப் பறக்க வைப்பது போன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

நாசாவின் ஆராய்ச்சியாளர் பதவிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்பனா அதற்காக. நாசா அளித்த ஒன்றரை ஆண்டு மிகக் கடுமையான பயிற்சியைக் கடந்து அவர் நினைத்தபடி வானில் பறக்கத் தயாராகி விட்டார்.

1997ம் ஆண்டு கொலம்பியா எஸ்.டி.எஸ் 87 என்ற விண்கலம் விண்ணில் பறக்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கல்பனாவுடன் சேர்த்து ஆறுபேர் கொண்ட குழுவினர்  உலகை 252 முறை சுற்றித் திரும்பினார்கள். பின்னர் 1998ம் ஆண்டு கல்பனா மீண்டும் விண்வெளிக்குச் செல்வதற்காக நாசாவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திரும்பவும் 2003ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி கொலம்பியா ஜி.டி.எஸ் 107 விண்ணில் சீறிப் பாய்ந்தது. திட்டமிட்டபடியே சரியாகப் பயணித்தது. பிப்ரவரி மாதம் 1ம் தேதி டெக்சாஸ் மாநிலத்தின் மீது விண்கலம் பறந்தபோது வானிலை தெளிவாகவே இருந்தது. பதினாறு நிமிடங்களுக்குள் விண்கலம் வெற்றிகரமாக பூமியை வந்தடையும் என்று நாசா விஞ்ஞானிகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த சம்பவம் நிகழ்ந்தது. தொடர்பு அறுந்துபோன நிலையில் நியூ மெக்சிகோ தாண்டி டெக்சாஸ் மாநிலத்தில் விண்கலம் விழுந்து சிதறியது. யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்வாக அது ஒரு விநாடியில் நடந்துவிட்டது. விண்வெளி வீரர்கள் அனைவரும் உயிரிழந்தனர். கொலம்பியா நொறுங்கிப் போனது.

கொலம்பியா வெடித்துச் சிதறியதற்கான காரணம் முழுமையாக கண்டறியப்படவில்லை.

கல்பனா தன் உயிர் விண்ணிலேயே பிரிய வேண்டுமென்று முன்பே சொல்லியிருந்ததுதான். அவரது ஆசைப்படியே விண்வெளியில் அவரது உடல் சிதைந்து உயிர் பிரிந்தது.

அவருக்கு விண்வெளிமீது அவ்வளவு காதல் இருந்தது. பறப்பதை மட்டுமே அவர் சிந்தித்தார், அதைத்தவிர அவர் வேறு எதையும் சிந்திக்க அவருக்கு நேரமிருக்கவில்லை.

இலட்சியத்தை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். நிச்சயம் அதை அடைவீர்கள் கல்பனாவைப் போல். உலகம் உங்களை எப்போதும் நினைவில் வைத்திருக்கும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 03, 2015 10:10 pm

ம்ம்ம்ம்...................இந்தியாவின் தங்க மங்கை அவர் புன்னகை சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக