புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10 
107 Posts - 49%
heezulia
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10 
7 Posts - 3%
prajai
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10 
234 Posts - 52%
heezulia
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10 
18 Posts - 4%
prajai
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25 பகுதி 1- 4 அம்பிகா சிவம்


   
   
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Wed Feb 11, 2015 11:52 am

இனிய நண்பர்களுக்கு,

இது சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் தொடரின் 25வது பதிவு. சற்றே நீண்ட பதிவு. இதுபோலவே 50, 75, 100வது பதிவுகளும் சற்றே விரிவாகவே இடம்பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பதிவில் இடம் பெறும் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்கள் பிறந்த ஊரான ஒட்டப்பிடாரத்தில்தான் என் தாய்வழிப் பாட்டி திருமதி தையல்நாயகி நடராஜன் பிறந்தார் என்பதும் அவர் வ.உ.சி.யின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவகையில் என் தாத்தாவான வ.உ.சி.யைப் பற்றி எழுதுவதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

இதுவரை வந்தவற்றை மின்னூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். கூடிய விரைவில் ஈகரையில் பதிவிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடரும் சாதனையாளர்களின் சரித்திரம்...... படித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. கூடுமானவரை மறுமொழி இட்டால் எனது முயற்சிகளுக்கு மேலும் உற்சாகம் தரும்.

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.


பிறப்பும், படிப்பும்

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பாஞ்சாலங்குறிச்சி என்ற ஊரின் அருகில் உள்ள ஊர் ஒட்டப்பிடாரம். ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது ஒரு வட்டத்தின் தலைநகராக அந்த ஊர் விளங்கியது. அங்கு நீதிமன்றம் செயல்பட்டு வந்தது. புகழ்பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றியவர் உலகநாதபிள்ளை.

அவரின் மனைவி பெயர் பரமாயி. அவர்களுடைய இல்வாழ்க்கையின் பயனாக, இறைவன் தந்த வரமாக 1872, செப்டம்பர்  5-ம் தேதி வ.உ.சி. பிறந்தார்.

உலகநாத பிள்ளையின் பாட்டனார் சிதம்பரம் பிள்ளை ஒரு கவிஞராக இருந்தவர்.  அவரை கவிஞர் சிதம்பரம் என்றுதான் மக்கள் அழைத்தார்கள். உலகநாதபிள்ளையும், அவரின் தந்தையும் வழக்கறிஞர் தொழில் செய்தவர்கள் என்பதால் அவர்களின் வீட்டையே அந்தப் பகுதி மக்கள் வக்கீல் வீடு என்றுதான் அழைத்தார்கள்.

தன்னுடைய மகனுக்கும் தன்னுடைய பாட்டனார் பெயரான சிதம்பரம் பிள்ளை என்பதையே பெயராகச் சூட்டி மகிழ்ந்தார் உலகநாதபிள்ளை.

ஒட்டப்பிடாரத்தில் உள்ள திண்ணைப் பள்ளியில் வ.உ.சி.யின் ஆரம்பக் கல்வி ஆரம்பமாகியது.  அங்கு தமிழ்வழியில் படித்தார். அவருக்கு பாடம் சொல்லிக் கொடுத்தவர் வீரப்பெருமாள் அண்ணாவி.

அவர் வ.உ.சி.க்கு ஆத்திசூடி முதலான நல்வழி காட்டும் பல நூல்களைக் கற்பித்தார். கணிதத்தையும் சிறப்பான முறையில் கற்றுத் தந்தார்.

ஆங்கிலக் கல்வியும்  மிகவும் முக்கியம் என்று கருதிய உலகநாத பிள்ளை வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலை பார்த்த ஆபிஸ் கிருஷ்ணய்யர் என்பவரை வீட்டிற்கே வரவழைத்து  இரவு நேரத்தில் ஆங்கிலம் கற்றுத் தர ஏற்பாடு செய்தார்.

வ.உ.சி.யும் ஆங்கிலத்தை மிகவும் நன்றாகக் கற்றுத் தேறினார்.

இரண்டு வருடங்கள் சென்றபிறகு கிருஷ்ணய்யர் பணி மாறுதல் பெற்றுச் சென்றுவிட்டார். அதனால் தன்னுடைய மகனின் படிப்பு பாழாகிவிடக் கூடாது என்று நினைத்த உலகநாதபிள்ளை மகனுக்காக ஒரு பள்ளியையே கட்டிவிட்டார்.  மற்ற மாணவர்களும் அப்பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அதில் ஆசிரியராகப் பணியாற்றிய அறம் வளர்த்த நாதர் என்பவரால் தமிழும், ஆங்கிலமும் மாணவர்களுக்கு சிறப்பாக கற்றுத் தரப்பட்டன.

ஊருக்கே கல்வியெனும் ஒளிவிளக்கை ஏற்றிவைத்த பெருமை உலகநாத பிள்ளைக்குக் கிடைத்தது.

மேல் படிப்பும், சட்டப் படிப்பும்

பள்ளிப் பருவத்தில் மிகவும் செல்லமாக வளர்ந்த வ.உ.சி. பல குறும்புகளைச் செய்துள்ளார். அதனால் தன்னுடைய தந்தையிடம் அடிகளும் வாங்கியுள்ளார்.

ஒருநாள் வ.உ.சி. செய்த குறும்பின் காரணமாக கோபம் அதிகமான உலகநாத பிள்ளை  அடித்து நொறுக்கி விட்டார். அதில் மனமுடைந்த வ.உ.சி. வீட்டைவிட்டு வெளியேறி விட்டார்.

வீட்டை விட்டு வெளியேறிய அவர் துறவிபோல் பல ஊர்களிலும் சுற்றித் திரிந்துவிட்டு மதுரைக்குச் சென்றார். அங்கிருந்து அவர் மீண்டும் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டார்.

தூத்துக்குடியில் இருந்த கால்டுவெல் பள்ளி, புனித சேவியர் உயர்நிலைப் பள்ளி, திருநெல்வேலியில் இருந்த இந்து கல்லூரி உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் மேல்படிப்பை படித்தார்.

அவரின் அறிவுத்திறன் நாளுக்கு நாள் அபாரமாக வளர்ச்சியடைந்தது. அனைத்துத் தேர்வுகளிலும் சிறப்பான முறையில் படித்து ஆசிரியர்களே வியக்கும் வகையில் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தார்.

மெட்ரிகுலேஷன் தேர்வில் படித்துத் தேறியபிறகு உலகநாதபிள்ளை அவரை ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணியில் சேர்த்து விட்டார்.

சிறிதுகாலம் அங்கு பணியாற்றிய அவருக்கு அந்தப் பணி மனநிறைவைத் தரவில்லை. சட்டம் படிக்க விரும்பிய அவர்  திருச்சிக்குச் சென்று படித்தார். அவர் சட்டம் படிக்க கணபதி அய்யர், ஹரிஹர அய்யர் ஆகியோர் வழிகாட்டினார்கள்.

1895-ஆம் ஆண்டு இரண்டாம் நிலை வழக்கறிஞராகத் தேர்ச்சி பெற்றுத் திரும்பினார்.

குற்றவியல் பிரிவில் சிறந்த வழக்கறிஞராகப் பெயர் பெற்றார். அவர் அதைத் தொழிலாகச் செய்யவில்லை. ஒரு தொண்டாகவே செய்ய விரும்பினார். பணத்திற்காக மட்டும் தன்னுடைய சட்ட அறிவைப் பயன்படுத்த விரும்பாத அவர் பாமர மக்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்தினார்.

ஊரில் அவரை நேர்மைக் குணம் நிறைந்தவர் என்று போற்றினார்கள். அவர் வாதாடிய பெரும்பாலான வழக்குகளில் வெற்றியடைந்தார். வெற்றிபெற முடியாது என்று அவர் நினைத்தால் இரண்டு தரப்பினரிடமும் பேசி சமாதானமாகப் போய்விடுமாறு கூறி சமரசம் செய்து வைத்துவிடுவார்.


நேர்மையான வழக்கறிஞர்

எந்த ஒரு சூழ்நிலையிலும், நிரபராதிகள்  தண்டிக்கப் படக்கூடாது என்பதில் கவனம் செலுத்திய வ.உ.சி. காவல்துறையினரால் தவறாக வழக்குகள் ஜோடிக்கப் பட்டதால் துன்பம் அடைந்தவர்களுக்கு இலவசமாகவே சட்ட உதவிகளைச் செய்து தந்தார்.

குறுகிய காலத்திலேயே குற்றவியல் வழக்குகளில் மிகவும் சிறந்த வழக்கறிஞர் என்ற பெயரைப் பெற்று தன் இனத்திற்குப் பெருமை சேர்த்தார்.

அவருக்கு 23 வயதானபோது திருச்செந்தூரைச் சேர்ந்த தமிழறிஞர் சுப்ரமணிய பிள்ளை என்பவரின் மகளான வள்ளியம்மை என்பவருடன் திருமணம் நடைபெற்றது. வ.உ.சி.யின் மனப்போக்கு அறிந்து நடந்துகொள்ளும் குணவதியாகத் திகழ்ந்தார் வள்ளியம்மை.

இருவரும் மனமொத்து, மகிழ்வுடனும், பாசத்துடனும் இல்லற வாழ்வை இனிமையாக  நடத்தினார்கள். சாதி, மத வேறுபாடுகள் இருந்த அந்தக் காலத்தில் வ.உ.சி. சாதி வெறி இல்லாமல் அனைவரையும் அனுசரித்துப் போகும் மனநிலையுடன் செயல்பட்டார்.  

அவருக்கேற்றாற்போல் அவருடைய மனைவியும் நடந்துகொண்டார்.

எந்தவிதமான சாதிப் பாகுபாடுகளும் இல்லாமல் அனைவரையும் மனிதர்களாக மதித்து நடத்தினார்கள். அவர்களுடைய வீட்டிலேயே தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவரைத் தங்களுடன் தங்கவைத்திருந்தார்கள் என்பதிலிருந்தே அவர்களுடைய முற்போக்கான சிந்தனையை அறிந்து கொள்ளலாம்.

1898-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராக இணைந்து கொண்டார்.

நேர்மையாக செயல்படும் குணம் உள்ள வ.உ.சி. யைப் பார்த்தால் மற்ற அதிகாரிகள் சற்றே பயப்படும் அளவிற்கு அவரின் வாதத்திறமை இருந்தது.

லஞ்சம் வாங்கிய குற்றவியல் நீதிபதியின் மீது வழக்குத் தொடர்ந்து அவருக்கு தண்டனை பெற்றுத் தந்தார். பஞ்சாபகேசன் என்பவர் பணிநீக்கம் செய்யப்படவும், லஞ்சம் வாங்குவதை பழக்கமாகக் கொண்டிருந்த வாசுதேவராவ் என்பவர் பணி இறக்கம் பெறவும் காரணமாக இருந்தார்.

தலைமைக் காவலர் ஒருவரும் வ.உ.சி.யின் வாதத் திறமையால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அடுத்தடுத்து காவல்துறை, நீதித்துறை ஆகியவற்றில் பணியாற்றியவர்களை பகைத்துக் கொண்டிருக்கும் மகனைப் பார்த்து கவலையடைந்த உலகநாதபிள்ளை அவரை தூத்துக்குடிக்கு அனுப்பி வைத்தார்.


தூத்துக்குடி வாழ்க்கையும், சுதேசி வாழ்க்கையும்

1900-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். வ.உ.சி.யின் தேசிய உணர்வும், நாட்டுப்பற்றும் அங்கிருந்த நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும் கவர்ந்தது.

கர்சன் வங்காளத்தை இரண்டாகப் பிரிக்கும் திட்டத்தை அறிவித்தார். அதனால் வங்காளத்தில் மட்டுமல்லாமல்  நாடெங்கும்  பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அது புரட்சியாக வெடிக்கும் நிலை ஏற்பட்டது.

அதன் விளைவாக மக்கள் அந்நியப் பொருட்களை புறக்கணிக்கத் தொடங்கினார்கள். அந்நியத் துணிகளை வீதியில் போட்டு எரித்தனர்.  

அந்த சுதேசி இயக்கத்தின்பால் வ.உ.சி. ஈர்க்கப்பட்டு சாலைகளில் அந்நியத் துணிகளைப் போட்டு எரித்ததோடு, அங்கிருந்த மக்களிடையே “இங்கே எரிவது அந்நியத் துணி மட்டுமல்ல ஆங்கில ஏகாதிபத்தியமும்தான்.  இதோடு நின்றுவிடக் கூடாது, தொடர்ந்து இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபட வேண்டும்“ என்று உணர்ச்சி பொங்கப் பேசியதோடு பிரம்மாண்டமான ஊர்வலமும் செல்லத் தொடங்கினார்கள்.

கலெக்டரின் உத்தரவுப்படி அவர்களை மறித்த போலீஸார், “எங்கள் நாட்டுத் துணிகளை எரித்ததன் மூலம் எங்கள் நாட்டையே அவமதித்துள்ளீர்கள். உடனடியாகக் கலைந்து போய்விடுங்கள்” என்று எச்சரித்தார்கள்.

கலெக்டரின் உத்தரவு எங்களை ஒன்றும் செய்யாது என்று கூறிய தொண்டர்கள் தொடர்ந்து ஊர்வலமாக வந்தே மாதரம், சுதேசிப் பொருட்களை மட்டும் வாங்குவோம் என்று கோஷமிட்டவாறு செல்லத் தொடங்கினார்கள். போலீஸார் தடியடி நடத்தினார்கள். வ.உ.சி. உட்பட பலரையும் வேனில் ஏற்றிச் சென்று பாளையங்கோட்டை சிறைச்சாலையில் வைத்திருந்து பின்னர் விடுவித்தனர்.

அதுவரை வெளிநாட்டுத் துணிகளைப் பயன்படுத்தி வந்த அவர் அதன்பின்னர் நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை மட்டுமே பயன்படுத்தத் தொடங்கினார்.

பின்னர் இந்தியர்கள் இந்தியப் பொருட்களை வாங்குவதற்காக சுதேசி பண்டகசாலை ஒன்றையும் தூத்துக்குடியில்  நிறுவினார்.

அதற்குப் பிறகு தாய்நாட்டுப் பற்று மிக்க வ.உ.சி. தன்னுடைய வழக்கறிஞர் பணியை உதறித் தள்ளிவிட்டு முழுமையாக சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடிவெடுத்தார்.

நெசவாளிகளின் துயர் துடைக்க தர்ம நெசவு சாலை என்ற நூற்பாலை ஒன்றைக் கட்டுவதற்கான முயற்சி ஒன்றிலும் ஈடுபட்டார்.

ஆனால் போதிய நிதிகிடைக்காத காரணத்தால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வீராவேச உரை நிகழ்த்தி மக்களின் மனதில் விடுதலை வேட்கையை உண்டாக்கினார்.

இந்தியா என்ற பத்திரிக்கை அப்போது மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்றிருந்தது. பாரதியார் அதில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். அவரின் பாடல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகத் தொடங்கியிருந்தது.

சென்னைக்குச் சென்ற வ.உ.சி. இந்தியா பத்திரிக்கைக்குச் சென்றபோது அதன் நிறுவனர் திருமலாச்சாரியார் அவரை அன்புடன் வரவேற்று அமர வைத்தார்.

அங்கே முறுக்கு மீசையுடன் கம்பீரமாகக் காட்சியளித்த பாரதியாரையும் அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார். இருவரும் நீண்டநாள் பழகிய நண்பர்களைப்போல் பேசிக் கொண்டார்கள்.

பாரதியாரின் எழுத்துக்கள் வ.உ.சி.க்கும், வ.உ.சி.யின் போராட்டங்கள் பாரதிக்கும் முன்னரே அறிமுகம் ஆகியிருந்ததே அதற்குக் காரணம்.

பாரதியாரை சந்தித்து வந்தபின்னர் வ.உ.சி.யின் விடுதலை வேட்கை மிகவும அதிகமானது. தீவிரமாக போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார்.

இந்திய தேசிய காங்கிரஸில் அப்போது மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று இரு பிரிவினர் செயல்பட்டு வந்தனர். அதில் பாலகங்காதர  திலகரின் தலைமையிலான  தீவிரவாதிகளின் செயல்பாடுகள் வ.உ.சி. யை ஈர்த்தன.

காந்தியின் அமைதியான போராட்ட வழியான அகிம்சைக் கொள்கையை விட, ஆங்கிலேயர்களுக்கு  தக்க பதிலடி கொடுத்தால்தான் அவர்கள் சரிப்பட்டு வருவார்கள் என்ற அதிரடிக் கொள்கை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

வள்ளியம்மை 1901-ஆம் ஆண்டு இறந்து விட்டதால் பிரிவுத் துயரால் வாடிய வ.உ.சி. மிகவும் கவலையாகவே காணப்பட்டார்.

பிற்காலத்தில் எழுதிய தன்னுடைய சுயசரிதையில் மனைவியின் குணநலன்களைப் பற்றி பல பாராட்டுக்களை வழங்கியுள்ளார்.

பின்னர் வள்ளியம்மையின் சொந்தத்திலேயே மற்றொரு பெண்ணை குடும்பத்தினர் வற்புறுத்திய காரணத்தால் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

ஜனசங்கத்தின் கிளையை தூத்துக்குடி ஜன சங்கம் என்ற பெயரில் வ.உ.சி. தொடங்கினார். அந்த அமைப்பின் முக்கியக் குறிக்கோள்கள் சுதேசிக் கல்வி, சுதேசியத் தொழில் முயற்சி, நீதிமன்றப் புறக்கணிப்பு.

subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Wed Feb 11, 2015 12:20 pm

கப்பலோட்டிய தமிழன்

வ.உ.சி.யின் சுதேசிய முயற்சிகளின் காரணமாக அன்றைய சென்னை மாகாணத்தின் வெள்ளையர் எதிர்ப்புக் குரல் கேட்ட ஒரே இடமாக தூத்துக்குடி விளங்கியது.

தூத்துக்குடியில் வெள்ளையர்களின்  பிரிட்டிஷ் இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி லிமிடெட் கொழும்புவிற்கும், தூத்துக்குடிக்கும் இடையில் பயணிகளுக்கும், சரக்குப் போக்குவரத்திற்கும் கப்பல் விட்டிருந்தார்கள்.  

ஒரே காலனியாதிக்க ஆட்சியில் இருந்த காரணத்தால் மிகவும் லாபகரமாக அந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது.

அந்த நிறுவனத்தில் எப்போதும் வெள்ளையர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது. அதனால் இந்திய வணிகர்கள் பாதிக்கப்பட்டனர்.

பாதிப்படைந்த வியாபாரிகள் சிலர் தூத்துக்குடிக்கும், கொழும்புவிற்கும் இடையில் கப்பலை நாமே இயக்க வேண்டுமென்று முயற்சி செய்தார்கள்.

அதற்கு முன்னோட்டமாக சி.வ.நல்லபெருமாள் பிள்ளை கப்பல் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். கப்பல்களை மும்பையில் இருந்த கப்பல் முதலாளியோடு குத்தகை அடிப்படையில் ஒப்பந்தம் செய்துகொண்டார்.  

வெள்ளையர்களின் சூழ்ச்சியின் காரணமாக ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்னரே அந்தக் கப்பல்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர். அதனால் அந்த நிறுவனம் முற்றிலுமாக முடக்கப்பட்டது.
அதன்பின்னர் சுதேசிக் கப்பல் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி கப்பலோட்டிய தமிழன் என்ற பெயரைப் பெற்றார் வ.உ.சி.

வெள்ளையர்களை எதிர்த்து வாணிபம் செய்வதற்காகத் தொடங்கப்பட்ட அந்தக் கப்பல் நிறுவனத்தைப் பார்த்த வெள்ளையர்கள் அதிர்ச்சியும், பயமும் அடைந்தார்கள்.

சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி 1906, அக்டோபர் மாதம்  16-ம் தேதி பதிவு செய்யப்பட்டது. அந்தக் கம்பெனியின் மூலதனம் பத்து இலட்சம் என்று முடிவு செய்து பங்கு ஒன்று இருபத்தைந்து ரூபாய் வீதம் பத்தாயிரம் பங்குகளை விற்பனை செய்வதன்மூலம் மூலதனத்தைத் திரட்ட முடிவு செய்யப்பட்டது.

இந்தியா, இலங்கை முதலிய ஆசிய கண்டத்து நாடுகளிடமிருந்து மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

இயக்குநர்கள் குழுவில் பதினைந்துபேர் இருந்தார்கள். பிரபல வழக்கறிஞர் சேலம் விஜயராகவாச்சாரியார் ஒருவர். தலைவராக பாலவநத்தம் ஜமீன்தார், மதுரை நான்காவது தமிழ்ச்சங்க நிறுவனரான பாண்டித்துரைத்  தேவரும் நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் உதவிச் செயலாளராக வ.உ.சி. விளங்கினார்.

அந்த நிறுவனம் லாப நோக்கத்தோடு மட்டும் உருவாக்கப்பட்டதில்லை. தேச பக்தியோடு, வெள்ளையர்களுக்கு எதிராக ஒரு செயலில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே அது உருவாக்கப்பட்டது.
அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களை சேர்ப்பதற்காக வ.உ.சி. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

நான் திரும்பி வரும்போது கப்பலோடுதான் வருவேன். இல்லையேல் அங்கேயே கடலில் வீழ்ந்து மடிவேன் என்று வீர சபதம் செய்துவிட்டுச் சென்றிருந்தார்.

அவர் மும்பை சென்றிருந்த சமயத்தில் அவரின் மூத்த மகன் உலகநாதன் நோய்வாய்ப்பட்டு இறந்துபோன செய்தி வந்தபோதும், அவருடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதும் அவர் மனம் கலங்காமல் தேசத்தின் நலனுக்காக தன் பணியைத் தொடர்ந்தார்.

பக்கிரி சேட் என்பவரிடம் பங்குகளை சுமார் இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து திரும்பினார். அந்தத் தொகையே கம்பெனிக்கு பெரிய மூலதனமாக அமைந்தது.

கப்பலை விலைக்கு வாங்கும்வரை காத்திருக்க விரும்பாமல் மாங்குசீட்டன் என்ற கப்பலை வாடகைக்கு அமர்த்திக் கொண்டார்.

1907, மே மாதம் வ.உ.சி.யால் வாங்கி வரப்பட்ட எஸ்.எஸ். காலியோ,  எஸ்.வேதமூர்த்தி என்பவர் பிரான்ஸிலிருந்து வாங்கி வந்த எஸ்.எஸ்.லாவோ என்ற பெயரில் இரண்டு கப்பல்கள் தூத்துக்குடிக்கு வந்தன.  கூடவே இரண்டு இயந்திரப் படகுகளும் வாங்கப்பட்டன. ஒவ்வொன்றிலும் 42 முதல் வகுப்பு பயணிகளும், 24 இரண்டாம் வகுப்பு பயணிகளும், 4000 மூட்டை சரக்குகளையும் ஏற்றும் அளவிற்கு வசதியிருந்தது.
சுதேசி கப்பல் நிறுவனம் தொடங்கியது பற்றி  பாரதியார் ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டார். அதில் புத்திரப்பேறு இல்லாத பெண்ணொருத்தி ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளைப் பெற்றாள் என்ன ஆனந்தம் அடைவாளோ அதுபோல் ஆனந்தம் ஏற்படுமோ அதுபோல் நம் பாரத மாதாவும் இவ்விரண்டு கப்பல்களைப் பெற்றதனால் மகிழ்வடைவாள் என்பது உறுதி.

வ.உ.சி.யும், அவருடைய நண்பர்களும் தாய்நாட்டிற்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்துவிட்டார்கள் என்று தன் மகிழ்ச்சியை அந்தக் கட்டுரையில் வெளியிட்டிருந்தார்.

வ.உ.சி.தான் கப்பல் நிறுவனத்தில் முழு மூச்சாகச் செயல்படுகிறார் என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் அவரை தங்கள் பக்கம் இழுப்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தார்கள்.
அவரிடம் அன்போடு பேசிப் பார்த்தார்கள். கப்பல்கள் வாங்க ஆகியிருந்த பணத்தைப்போல் மூன்று மடங்கு பணம் தருகிறோம். நீங்கள் அந்த நிறுவனத்திலிருந்து விலகிவிடுங்கள் என்று கூடக் கேட்டுப் பார்த்தார்கள்.

தாய்நாட்டுப் பற்று மிக்க பிள்ளைமார் இனச் சிங்கம் அதற்கு மசியுமா? பணம் பெரிதல்ல, எனக்கு தன்மானம்தான் முக்கியம் என்பதுபோல் அவர்களுக்கு பதிலளித்துவிட்டுத் திரும்பினார்.
அதன்பிறகு பல்வேறு சதிவேலைகளில் ஈடுபட்டும் வ.உ.சி.யை பணியவைக்க முடியவில்லை.

ஆங்கிலக் கம்பெனிக்கு அதிக அளவில் இழப்பு ஏற்படத் தொடங்கியது. ஆனாலும் அவர்கள் கட்டணத்தை அதிரடியாகக் குறைத்து வணிகர்களை தங்கள் பக்கம் இழுக்கப் பார்த்தார்கள்.
ரயில்வே அதிகாரிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அந்தக் கட்டணத்தையும் குறைத்தார்கள்.

தலைகீழாக கரணம் அடித்தபோதும் அவர்களின் இழப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே சென்றது.

மக்களின் ஆதரவு சுதேசி கப்பல் நிறுவனத்திற்கே இருந்தது.அந்தக் காலத்திலேயே சுமார் 40000 ரூபாய் நஷ்டம் ஆங்கிலேயர்களின் நிறுவனத்திற்கு ஏற்பட்டது.
ஆங்கிலேயர்கள் அரண்டுபோகும் விதமாக கப்பல் விட்ட வ.உ.சி.யை அனைத்துப் பத்திரிக்கைகளும் பாராட்டின.

பொதுமக்கள் தங்கள் தலைவனுக்கு கப்பலோட்டிய தமிழன் என்று பாராட்டுரை வழங்கினார்கள்.

நண்பர் சுப்ரமணியசிவா

1908-ஆம் ஆண்டு, வத்தலகுண்டு என் றஊரில் பிறந்து தேசத்தின் பல பாகங்களுக்கும் சென்று வந்த விடுதலை உணர்வுமிக்க சுப்ரமணியசிவா தூத்துக்குடிக்கு வந்து வ.உ.சி.யின் வீட்டிலேயே தங்கி போராடத் தொடங்கினார்.

இருவரின் எண்ண அலைகளும் ஒன்றுபோல் இருந்ததால் அவர்களின் போராட்டங்கள் வலுப்பெற்றன.

பாலகங்காதரத் திலகரின் போராட்ட வழிமுறைகள் அவர்கள் இருவரையும் கவர்ந்தன.

தேசாபிமான சங்கத்தை வ.உ.சி. நிறுவியிருந்தார். அதன் சார்பாக இருவரும் சேர்ந்து தூத்துக்குடிப் பகுதியில் பல இடங்களில் அனல்பறக்கும் சொற்பொழிவுகளை ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஏற்பாடு செய்தார்கள்.

அவர்களின் வீராவேசமான பேச்சைக் கேட்ட மக்கள் எழுச்சி பெற்றார்கள்.

அப்போது ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த கோரல் மில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் தங்களின் ஊதிய உயர்வுக்காகப் போராட்டம் நடத்தி வந்தார்கள்.

அதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட இருவரும் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்படி உற்சாகப்படுத்தினார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கினார்கள்.

ஊதிய உயர்வு, வார விடுமுறை, இதர வசதிகள் போன்றவற்றை தங்கள் கோரிக்கைகளாக முன்வைத்தனர்.

அதே நேரத்தில் தொழிலாளர்களின் சார்பாக நிர்வாகத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார் வ.உ.சி. அவர் வழக்கறிஞர் என்பதால் தொழிலாளர் தரப்பு நியாயத்தை தெளிவாக முன்வைத்து வாதாடினார்.
மாவட்ட ஆட்சியரின் ஆணைக்கேற்ப காவலர்கள் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியபோதும், வ.உ.சி.யின் வழிகாட்டுதலின்படி தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்கள்.

வ.உ.சி.யை திருநெல்வேலி ஆட்சியர் விஞ்ச் எச்சரித்தார். தூத்துக்குடி வியாபாரிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஆங்கிலேயர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை விற்பனை செய்ய மறுத்தார்கள். அதனால் இலங்கையிலிருந்து தங்களுக்கான உணவுப் பொருட்களை ஆங்கிலேயர்கள் வரவழைத்தனர்.

கடும் போராட்டத்திற்குப் பிறகு இறுதி வெற்றி தொழிலாளர்களுக்கே கிடைத்தது.

வ.உ.சி.யின் வழிகாட்டுதல்கள்தான் தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை பெற்றுத் தந்தது என்று தொழிலாளர்கள் மகிழ்ந்தனர்.

ஒன்பது நாட்கள் இடைவிடாமல் நடைபெற்று இறுதியில் வெற்றியடைந்த அவர்களின் போராட்டம் பற்றி இந்தியா முழுவதும் தகவல் பரவியது.

அதே காலகட்டத்தில் வ.உ.சி.யின் செயல்பாடுகள் சுதேசி கப்பல் நிறுவனத்தில் இருந்த மற்ற பங்குதாரர்களுக்கு அச்சத்தைக் கொடுத்தன. ஏதாவது ஒருவிதத்தில் ஆங்கிலேயர்களுடன் அவர் தொடர்ந்து பகை உணர்வை வளர்த்துக்கொண்டே இருக்கிறாரே என்று கவலைப்பட்ட அவர்கள் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாத அளவிற்கு செயல்படத் தொடங்கினார்கள்.

வ.உ.சி. இனிமேல் ஆங்கிலேயருக்கு எதிரான செயல்களில் ஈடுபடக்கூடாது என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள்.

சுதேசி இயக்கத்தின் தலைவர் விபின் சந்திரபால் கைது செய்யப்பட்டு விடுதலை பெறும் நாளை வ.உ.சி.யும், சுப்ரமணியசிவாவும் மிகவும் சிறப்பாகக் கொண்டாட முடிவெடுத்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டம் நடத்த ஆங்கிலேய அரசு தடை விதித்தது. கடுமையான 144 தடை உத்தரவுக்கும் அஞ்சாமல் மனதில் உறுதியுடன் அவர்கள் தாங்கள் நினைத்தபடியே விழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தாமிரபரணி ஆற்றில் சுலோச்சன முதலியார் பாலத்தின் மேல்புறம் உள்ள பிள்ளையக் கட்டளை மண்டபம் முன்பாக வ.உ.சி பேசினார். பின்னர் தூத்துக்குடிக்குத் திரும்பினார்.

அங்கு வைத்து அவரை கைது செய்தால் மிகப்பெரிய கலவரம் வெடிக்கும் வாய்ப்புள்ளது என்று கருதியதால் திருநெல்வேலிக்கு அவர்களை வரவழைத்து கைது செய்யும் எண்ணத்துடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வ.உ.சி., சுப்ரமணிய சிவா இருவரையும் வருமாறு அழைத்தார்.

அவர்கள் தங்களை கைது செய்யப் போகிறார்கள் என்பது தெரிந்தும் உறுதியான மனதுடன் எதையும் சந்திக்கும் வீரத்துடன் வ.உ.சி. தன் நண்பரை அழைத்துக்கொண்டு பயணமானார்.

அங்கு சென்று மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்தார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் விஞ்சு “நீங்கள் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்தி அரசை நிந்தனை செய்து பேசியது தவறு. பாமர மக்களிடையே வந்தே மாதரம் கோஷத்தைக் கூறி அவர்களின் உணர்ச்சியைத் தூண்டியது மன்னிக்க முடியாத குற்றம், ஆங்கிலேயர்களுக்கு எதிராக கப்பல் வேறு விட்டிருக்கிறீர்கள்.” என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறினார்.

வழக்கறிஞரான வ.உ.சி. அதற்கு பதிலடி கொடுத்தார்.

“எங்கள் நாட்டில் நாங்கள் சுதந்திரமாகப் பேச உங்களிடம் எதற்கு அனுமதி பெறவேண்டும். வந்தே மாதரம் என்பதன் பொருள் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? தாய்நாட்டைப் போற்றுகிறோம் என்ற பொருள் கொண்ட அந்தப் பாடலைப் பாடியதில் என்ன தவறு?” என்று உறுதியாகக் கேட்டார்.

வெள்ளைப் பரங்கியரின் திட்டப்படி அவர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

வழக்கு, தீர்ப்பு, சிறைத்தண்டனை

நீதிபதி பின்ஹே என்பவர் அந்த வழக்கை விசாரித்தார். வ.உ.சி. தனது செயலுக்கு தக்க விளக்கம் அளித்து, மன்னிப்புக் கேட்டால் விடுதலை செய்ய வாய்ப்புள்ளது என்று நீதிபதி கூறியும் வ.உ.சி. அடிபணிய மறுத்தார்.

அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சுப்ரமணியசிவத்திற்கு தங்க இடம் கொடுத்ததற்காகவும், தடையை மீறி அரசாங்கத்திற்கு எதிராக மக்களைத் தூண்டும் வகையில் சொற்பொழிவு நிகழ்த்தியதற்காகவும் இரட்டை ஆயுள் தண்டனையை அந்தமான் சிறையில் அனுபவிக்க வேண்டும் என்று கொடுமையான தண்டனை வழங்கப்பட்டது.

இரண்டு தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்குமாறு நீதிபதி பின்ஹே தீர்ப்பு வழங்கினார்.

அந்தத் தீர்ப்பு நாடெங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பாரதியார் போன்ற தலைவர்கள் அதை எதிர்த்து அறிக்கை வெளியிட்டனர். பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

திருநெல்வேலி, தூத்துக்குடி நகரங்களில் கலவரம் ஏற்பட்டது. தங்கள் தலைவனைக் கைது செய்து சிறையில் அடைத்ததோடு அவருக்கு கடும் தண்டனை வேறா? என்று வெகுண்டெழுந்த மக்கள் கூட்டத்தை தடுக்க முடியாமல் தவித்தனர் ஆங்கிலேயர்.

அப்போது திருநெல்வேலி சப் கலெக்டராக இருந்த ஆஷ் துரை கலவரத்தை அடக்க வழி தெரியாமல் மக்களை நோக்கி தன்னுடைய கைத்துப்பாக்கியால் கண்மூடித் தனமாக சுடத் தொடங்கினார்.
அதில் நான்குபேர் உயிரிழந்தனர். கலவரம் மேலும் கட்டுக்கடங்காமல் போயிற்று.

சென்னையிலிருந்து இராணுவம் வரவழைக்கப்பட்டு கலவரம் அடக்கப்பட்டது.

அந்தக் கலவரத்திற்கும் வ.உ.சி., சுப்ரமணிய சிவா இருவரும்தான் காரணம் என்று கூசாமல் பொய் சொன்னார்கள்.

பாளையங்ககோட்டை சிறையில் அதிகாரிகளுக்குத் தெரியாமலேயே இந்து, வந்தே மாதரம், சுதேசமித்திரன் ஆகிய பத்திரிக்கைகளை ரகசியமாக வரவழைத்துப் படித்தனர்.

திருக்குறள், பகவத்கீதை, ஜோதிட நூல்கள் ஆகிய நூல்களைப் படித்தும், சிறைக்கைதிகள் கூறிய மதுரைவீரன் சரித்திரம், கட்டபொம்மன் சரித்திரம் ஆகியவற்றையும் கேட்டு மகிழ்ந்தனர்.

தூத்துக்குடியில் இருந்த வணிகர்கள் ஒன்றுசேர்ந்து வ.உ.சி.க்கு ஜாமீன் வாங்கிக் கொடுத்தனர். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத வ.உ.சி. சுப்ரமணிய சிவா மற்றும் பத்மநாப ஐயங்கார் ஆகியோரும் தன்னுடன் வர வாய்ப்பில்லாதபோது நான் ஜாமீனில் வரமாட்டேன் என்று கூறிவிட்டார்.

அந்த விஷயத்தைப் பற்றி ‘நன்று செய்தீர் சிதம்பரம் பிள்ளை’ என்று வந்தே மாதரம் இதழில் அரவிந்தரும், ‘சிதம்பரம் பிள்ளையின் பெருங்குணம்’ என்று சுதேசமித்திரன் இதழும் பாராட்டி எழுதின.
கேசரி இதழ் வ.உ.சி.க்கு வழங்கப்பட்ட தண்டனையை கடுமையாக விமர்சனம் செய்து எழுதியது. ஆங்கிலேயப் பத்திரிக்கைகள் சிலவும் வ.உ.சி.க்கே ஆதரவு தெரிவித்தன.

சென்னை உயர்நீதி மன்றத்திலும், லண்டனிலிருந்த பிரிவியூ கவுன்சிலிலும் மேல்முறையீடு செய்ததன் விளைவாக வ.உ.சி.க்கு வழங்கப்பட்டிருந்த இரட்டை ஆயுள் தண்டனை ஆறாண்டுகளாகக் குறைக்கப்பட்டது.
மேலும் அந்தமான் சிறையில் தற்போது இடமில்லை என்பதால் புதிய கைதிகள் யாரையும் அனுப்ப வேண்டாம் என்று அங்கிருந்த சிறை அதிகாரி கேட்டுக் கொண்டதால் வ.உ.சி.யை அங்கு அனுப்பவில்லை.

பாளையங்கோட்டை சிறையில் அதுவரை விசாரணைக் கைதியாக இருந்தவர் அதன்பின்னர் சிறைத்தண்டனை பெற்ற கைதியாக மாறிவிட்டார். அவருடை யசொந்த உடையை வாங்கிக் கொண்டு சிறைக் கைதிகளுக்கான முரட்டுத்துணி வழங்கப்பட்டது.

அவரின் மேல் ஆத்திரத்தில் இருந்த ஆங்கிலேய அரசாங்கம் அவருக்கு மொட்டையடித்து, கைகளிலும், கால்களிலும் சங்கிலி மாட்டி அழகு பார்த்தது.

இப்படிப்பட்ட கொடுமையான வேதனைகளை அவர் சகித்துக் கொண்டார். எல்லாம் நம் தேசத்தின் நன்மைக்காக.

subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Wed Feb 11, 2015 12:28 pm

செக்கிழுத்த செம்மல்

அடுத்த நாளே அவர் கோவை சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் பல கொடுமைகளுக்கு ஆளானார்.

செக்கில் மாடுகளுக்கு பதிலாக வ.உ.சி.யை கட்டி செக்கிழுக்க வைத்தனர்.  “என் அன்னை பாரதத்தாயின் விலங்கு ஒடியட்டும்” என்று கூறியவாறே செக்கிழுத்தார் நம் தலைவர்.  அந்தச் செக்கு இன்னும் கோவை சிறைச்சாலையில் உள்ளது.

மேலும் சணல் கிழிக்கும் இயந்திரத்தில் வேலை பார்க்குமாறு பணிக்கப்பட்டார். அந்த வேலையைச் செய்தபோது அவருடைய கைகளில் தோல் உரிந்து ரத்தம் வடிந்தது. அதைப் பார்த்த மற்ற கைதிகள் “வக்கீல் ஐயா உங்கள் கைகளில் ரத்தம் வடிவதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நாங்கள் கிழிக்கிறோம். நீங்கள் செய்ய வேண்டாம்” என்று கூறினார்கள்.

ஆனால் அதை மறுத்த வ.உ.சி. “நீங்கள் எனக்கு உதவி செய்ய முன்வந்ததற்கு மிக்க நன்றி. ஆனால் நம் பாரத அன்னைக்காக நான் இத்தகைய கொடுமைகளை தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்” என்று மன உறுதியுடன் சொல்லிவிட்டார்.

கல் உடைக்க வைத்தும் கொடுமைப்படுத்தினார்கள்.

அதே ஆண்டு வ.உ.சி.யின் ஆயுள் தண்டனை ரத்துசெய்யப்பட்டது. மீண்டும் அவர் விசாரணைக் கைதியாக வைக்கப்பட்டார். அங்கிருந்த ஜெயிலர் வ.உ.சி.யை வேலை பார்க்க வற்புறுத்தினார்.

ஆனால் விசாரணைக் கைதிகளை வேலை வாங்கக்கூடாது என்று கூறிய வ.உ.சி. வேலை பார்க்க மறுத்துவிட்டார். உடனே கோபமடைந்த ஜெயிலர் வ.உ.சி.யை ஒரு தனியறையில்  பூட்டிவைத்து ஆனந்தம் அடைந்தார்.

வழக்கமாக கைதிகளைப் பார்வையிட வரும் மருத்துவரிடம் வ.உ.சி. புகார் செய்தார். மருத்துவர் சொன்னதன்படி காலையிலும், மாலையிலும்  ஒரு மணி நேரம் மட்டும் வெளியில் விடப்பட்டார்.
அந்த காலகட்டத்தில்தான் ஆலன் எழுதிய ‘அண் ச் Mச்ண கூடடிணடுஞுtட’ என்ற நூலை தமிழில் மனம்போல் வாழ்வு என்று மொழிபெயர்த்தார். பின்னர் திருக்குறள் அறத்துப்பாலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

அதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படும்போது உ.வே.சா.அவர்களுக்கு கடிதம் எழுதி அதை நிவர்த்தி செய்துகொண்டார்.

சிறையில் இருந்த ஒரு கொலைக்கைதி வ.உ.சி.க்கு வணக்கம் தெரிவித்ததைக் கண்ட ஜெயிலர் அவனைத் துன்புறுத்தியதால் அவன் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து அவரை கத்தியால் குத்தினான்.
அந்தக் கலவரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது வ.உ.சி. அந்தக் கைதிக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தார்.

கைதிகளை தேவையில்லாமல் அடக்குமுறைக்கு ஆளாக்கி துன்புறுத்துகிறார்கள், அவர்களை அடிப்பது, கொடுமையான வேலைகளை வாங்குவது, சாப்பாட்டில் கற்கள் இருப்பது போன்ற பல விஷயங்களையும் அவர் நீதிபதியிடம் தெரிவித்தார்.

இவ்வளவு விஷயங்களை நீதிபதியிடம் கூறிவிட்டு சிறைக்கு மீண்டும் திரும்பினால் விளைவு மோசமாக இருக்கும் என்பது தெரிந்திருந்தபோதும் வ.உ.சி. அஞ்சாநெஞ்சத்துடன் உண்மைகளை எடுத்துரைத்தார்.
அதன்பிறகு  அப்போது சென்னை மாகாணத்தில் இருந்த ஆறு சிறைச்சாலைகளில் ஒன்றான கண்ணனூர் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

கோவை சிறைச்சாலையைக் காட்டிலும் அழகான சுற்றுச்சூழல் கண்ணனூரில் காணப்பட்டது. அங்கிருந்தபோதுதான் லோகோபகாரி இதழ் ஆசிரியர் பரலி சு.நெல்லையப்பர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தன்னுடைய சுயசரிதையை எழுதினார் வ.உ.சி.

அதன் முதல் பகுதி 1916-ம் வருஷம் எழுதப்பட்டது. அதன் பிற்பகுதி வ.உ.சி. சிறையிலிருந்து வெளியே வந்தபிறகு தினமணி ஆசிரியரான டி.எஸ்.சொக்கலிங்கம் கேட்டதால் 1930-ஆம் ஆண்டு தொடக்கத்தில் எழுதப்பட்டது.

அந்த நூல் முழுவதும் அகவற்பா வடிவில்  அழகாக இயற்றப்பட்டது.

வ.உ.சி.யின் மகன் சுப்ரமணியன் வ.உ.சி. விடுதலை பெற்றுத் திரும்பிய பிறகு வாழ்ந்த வாழ்க்கையை சுருக்கமாக எழுதி அதனுடன் பிற்காலத்தில் இணைத்தார்.

அதற்குப் பிறகு பல்வேறு விதமான தடைகளை மீறி 1912, டிசம்பர் 24-ம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

பாளையங்கோட்டையிலிருந்து கோவை சிறைக்கு மாற்றியபோது திருநெல்வேலி ரயில் நிலையம், மணியாச்சி ரயில் நிலையம் போன்றவற்றில் மக்கள் கூட்டம் திரண்டு நின்று வழியனுப்பியது.
திருச்சி ரயில் நிலையத்தில் மாணவர்கள் அவரை சந்தித்து உரையாடினர். கோவையிலும் அவரை வரவேற்கப் பலர் நின்றிருந்தார்கள்.

ஆனால் கண்ணனூரிலிருந்து அவர் வெளியே வந்தபோது அவரை வரவேற்க அவருடைய மனைவி, சுப்ரமணிய சிவா மற்றும் நெருங்கிய உறவினர்கள் தவிர வேறு யாரும் வரவில்லை என்பது மனதை வருந்தச் செய்யும் நிகழ்ச்சி.

சேலம் சிறையிலிருந்து அப்போதுதான் விடுதலையாகி வந்திருந்த சுப்ரமணிய சிவா அப்போது தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோதும் அவர்களுக்கிடையே இருந்த நட்பின் காரணமாக அவரை வ.உ.சி. கட்டித்தழுவி தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார்.

விடுதலை

விடுதலையானபிறகு அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர்கள் பாரதியாரும், சுப்ரமணியசிவாவும்தான்.

சிறையில் இருந்து வெளியில் வந்தபிறகும் அவர் அடைந்த இன்னல்களுக்கு அளவேயில்லை. அவர்மேல் கிரிமினல் வழக்கு போடப்பட்டிருந்ததால் அவரால் வழக்கறிஞர் தொழிலைத் தொடர முடியவில்லை.
செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர் தேசத்திற்காக தன்னுடைய சொத்துக்களை இழந்திருந்தார். அவருக்கு பொருளாதார சிரமங்கள் ஏற்பட்டன.

கோவைக்குச் சென்று சிவகவி மணி, சி.கே.சுப்ரமணிய முதலியார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் திருப்போரூரில் இருந்த வங்கியில் அலுவலராகப் பணிபுரிந்தார்.

வ.உ.சி.யின் நிலையை அறிந்த திலகர் சுயராஜ்ய நிதியிலிருந்து மாதம் ஐம்பது ரூபாய் கொடுத்து உதவினார்.  திரு.வி.க.வுடன் சேர்ந்து பஞ்சாலைத் தொழிற்சங்கம், டிராம்வே தொழிற்சங்கம் ஆகியவற்றில் பணியாற்றினார்.

தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் யூனியன் சார்பாக  விழுப்புரம், மதுரை, நாகப்பட்டினம் ஆகிய ஊர்களுக்குச் சென்று தொழிற்சங்கங்கள் அமைப்பதில் ஈடுபட்டார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக தொழிற்சங்கங்களை இயக்குவதில் அவர் முன்னின்றார்.

பின்னர் மீண்டும் தூத்துக்குடிக்கு வந்த அவர் வழக்கறிஞர் தொழிலை எப்படியாவது மீண்டும் பெற்றுவிடவேண்டுமென்று நினைத்த வ.உ.சி.க்கு நீதிபதி இ.எச்.வாலஸ் என்பவர் உதவினார். அதனால் மீண்டும் வேலை கிடைத்தது.

பின்னாளில் நன்றி மறவாமல் வ.உ.சி. தன்னுடைய மகனுக்கு வாலீஸ்வரன் என்று பெயர் வைத்து மகிழ்ந்தார்.

கோவை சிறையில் இருந்தபோது தனக்கு உதவிபுரிந்த சுப்ரமணிய முதலியார் என்பவரின் நினைவாக தன்னுடைய மற்றொரு மகனுக்கு சுப்ரமணியன் என்று பெயர் சூட்டினார்.

தென்னாப்பிரிக்காவில் கப்பல் நிறுவனத்திற்காக நிதி திரட்டி உதவிய தென்னாப்பிரிக்க வாழ் தமிழர் வேதியப்பிள்ளை என்பவருக்கு நன்றி செலுத்தும் விதமாக தன்னுடைய மகளுக்கு வேதவல்லி என்று பெயர் சூட்டினார்.

கோவில்பட்டியில்...

கோவில்பட்டியில் தன்னுடைய 1924-ஆம் ஆண்டு மீண்டும் தன்னுடைய வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். காங்கிரஸ் தொண்டர்களுக்காகவும், ஏழை, எளிய மக்களுக்காகவும் இலவசமாகவே வாதாடினார்.
ஒட்டப்பிடாரத்திற்கு அருகேயிருந்த சாலிகுளம் காட்டுப்பகுதி எட்டயபுரம் ஜமீன்தாருக்குச் சொந்தமானது.

அங்கு தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் அங்கு சென்று விறகு வெட்டி வந்தார். அவரை ஜமீன் காவலர்கள் கையும் களவுமாகப் பிடித்து அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவில்பட்டி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது குற்றவாளி வ.உ.சி.யிடம் சென்று முறையிட்டார்.

விறகு வெட்டி வந்தபிறகு அவர் வீட்டில் ஏதும் விசேஷம் நடந்ததா என்று வ.உ.சி. கேட்டார். என் மகள் வயதுக்கு வந்ததுதான் விசேஷம். ஆனால் என் வீட்டில் வறுமையான நிலை இருப்பதால் அவளுக்கு சடங்குகூட செய்யவில்லை என்று அந்த ஏழை கூறினார்.

உடனே வ.உ.சி. தன்னுடைய மகள் வயதுக்கு வந்துவிட்டதால் விசேஷத்திற்காக விறகு வெட்டுவதற்காக ஜமீன்தாரிடம் அனுமதி வாங்கிவிட்டு அதன்பிறகே விறகு வெட்டினேன் என்று அந்தத் தொழிலாளியிடம் எழுதி வாங்கிக் கொண்டார்.

வழக்கு தள்ளுபடியாகி விடும் என்று உறுதி கூறி அவரை அனுப்பி வைத்தார்.

ஒரு கட்டு விறகுக்காக ஜமீன்தார் கோர்ட்டிற்கு வரமாட்டார் என்ற நம்பிக்கையில்தான் வ.உ.சி. அவ்வாறு கூறியிருந்தார்.

அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை. வழக்கு அந்தத் தொழிலாளிக்கே சாதகமாக அமைந்தது. அவருக்கு தண்டனை ஏதும் வழங்காமல் அவரை விடுவித்தனர்.

அந்தத் தொழிலாளி வ.உ.சி.க்கு நன்றி தெரிவித்துச் சென்றார்.


தமிழறிஞர்

கோவில்பட்டியில் வாழ்ந்தபோது தம்மிடம் இருந்த பல பழைய ஓலைச்சுவடிகளை ஒப்பிட்டுப் பார்த்து சில சீர்திருத்தங்களைச் செய்து பழைய  நூல்கள் சிலவற்றைப் பதிப்பித்தார்.

திருக்குறள் அறத்துப்பாலை மணக்குடவர் உரையுடன் 1918-ஆம் ஆண்டு வெளியிட்டார். மணக்குடவர் உரையை முதன்முதலாக வெளியிட்ட பெருமை வ.உ.சி.க்கே உரியது.

திருக்குறளின்மேல் வ.உ.சி.க்கு பெரிய பற்றுதலும், மரியாதையும் இருந்தது. அவர் “தமிழர்கள் அனைவரும் திருக்குறளை உரையுடன் படித்துப் பாராயணம் செய்யவேண்டும்.

அனைத்துக் குறட்பாக்களையும் பொருளுடன் உணராதவர்கள் முற்றும் துறந்த முனிவர்களாக இருந்தாலும், என்னைப் பெற்ற தந்தையாக இருந்தாலும், நான் பெற்ற பிள்ளைகளாக இருந்தாலும் நான் அவர்களை முழுமையானவர்களாகக் கருதவில்லை” என்று கூறினார்.

வழக்கறிஞர் தொழிலில் அவர் ஈடுபட்டிருந்தாலும் அவரின் மனம் எப்போதும் தாய்நாட்டின் விடுதலை குறித்தே சிந்தித்துக் கொண்டிருந்தது.

1920-ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தைக் கொண்டு வந்தார் காந்தி. அதுபற்றிய தீர்மானத்தைக் கொண்டு வருவதற்காக கொல்கத்தாவில் மாநாடு ஒன்று லாலா லஜபதிராய் தலைமையில்  நடைபெற்றது.

அந்த மாநாட்டில் வ.உ.சி.யும் கலந்து கொண்டார். காங்கிரஸின் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த வ.உ.சி.யை காந்தியின் அமைதிக் கொள்கைகள் கவரவில்லை.
 
ஆனால் மாநாட்டில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத் தீர்மானம் நிறைவேறியது. அதனால் காங்கிரஸிலிருந்து சற்றே விலகியிருக்க முடிவு செய்தார்.

தமிழகம் திரும்பியவுடன் காந்தியின் ஒத்துழையாமை இயக்கக் கொள்கைகளால் நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத்தர முடியாது என்று பல்வேறு அறிக்கைகள் மூலமாக பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தினார்.

subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Wed Feb 11, 2015 12:33 pm

மீண்டும் விடுதலைப் போராட்டம்

ஆங்கில அரசின் அதிகார மையங்களில் இந்தியர்களும் வேலையில் சேர்ந்து ஆங்கிலேயர்களை உள்ளே இருந்து கொண்டே கலங்கடிக்க வேண்டும் என்பதே வ.உ.சி.யின் வாதமாக இருந்தது.

1927-ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற ஒரு அரசியல் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

ஒத்துழையாமை இயக்கத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இருப்பினும் அந்த இயக்கமே முற்றுப்பெறும் நிலை வந்துவீட்டது. இந்தியர்களிடையே புரட்சிகரமாக எழுந்துள்ள விடுதலைப் பொறி ஒருபோதும் அணைந்து போகாது என்று உணர்ச்சியுடன் பேசினார்.

சிறிது காலத்திற்குப் பிறகு காந்தி தன்னுடைய ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்துவதாக அறிவித்ததால் வ.உ.சி. மீண்டும் காங்கிரஸில் இணையும் நேரம் வந்தது.

1932-ஆம் ஆண்டு மீண்டும் தூத்துக்குடிக்கே வந்துவிட்டார்.

சிறை வாழ்க்கையில் அனுபவித்த சிரமங்கள், பொருளாதார சிரமங்கள் ஆகியவற்றின் காரணமாக அவரின் உடல்நிலை குன்றத் தொடங்கியது.

1935-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் இராஜேந்திர பிரசாத் தூத்துக்குடிக்கு வருகை புரிந்தார். செல்லும் வழியில் நோய்வாய்ப்பட்டிருந்த வ.உ.சி.யைப் பார்த்து விட்டு அன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் “தூத்துக்குடிக்கு வரும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது, அவர் சிறைசென்றபோது மிகவும் வருந்தியவன் நான்” என்று பேசினார்.

அதே ஆண்டில் வ.உ.சி. சிவஞானபோதம் நூலுக்கு உரை எழுதி வெளியிட்டார்.

ஒரு மாதம் படுத்த படுக்கையாக இருந்த வ.உ.சி. நோய் தீர்க்கும் வழியறியாமல் மனம் வருந்தினார். அந்த நிலையிலும் தன்னைப் பார்க்க வருபவர்களிடம் நம் நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு குறித்து கவலைப்பட்டார்.

உயிர் போகும் தருவாயில் தேவாரப் பாடல்களையும், திருவாசகத்தையும் வாசிக்கச் சொல்லிக் கேட்டார்.

பாரதியார் பாடல்களை மிகவும் விரும்பிப் படிக்கும் பழக்கமுடைய அவர் என்று தணியும் சுதந்திர தாகம் என்ற பாடலை மிகவும் ரசித்துப் படிக்கும் பழக்கமுடையவர். அந்தப் பாடலை வாசிக்குமாறு சொல்லிக் கேட்டார்.

தான் மரணமடையும்போது தன் தாய்த்திருநாட்டின் விடுதலையைப் பார்க்க இயலவில்லையே என்று மனம் வருந்தினார்.

சுடர் அணைந்தது

1936-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி நள்ளிரவில், தாய்நாட்டிற்காகவே தன் உடல், பொருள் அனைத்தையும் அர்ப்பணித்த அவர் தன்னுடைய ஆவியையும் இறுதியாக தேசமென்னும் தாய்க்கே அர்ப்பணித்து பிரியாவிடை பெற்றார்.

அவர் இறந்த செய்தி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவியது. மக்கள் அனைவரும் கதறி அழுதார்கள்.

தங்களுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய தலைவர் இறந்துவிட்டாரே என்று தொழிலாளர்கள் மனம் வருந்தி கண்ணீர் வடித்தார்கள்.

இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு ஜலபிரபா என்ற கப்பல் பயணம் தொடங்கியபோது சர்தார் வல்லபாய் பட்டேல் வ.உ.சி. யை நினைவுகூர்ந்து அவரைப்பற்றிப் பேசினார்.

தென்பாண்டி வணிகர்கள் சங்கம் தூத்துக்குடிக்கும், சிங்களத் தீவிற்கும் இடையே வாணிபம் செய்ய விரும்பி ஒரு கப்பல் வாங்கி அதற்கு வ.உ.சிதம்பரம் என்று பெயர் வைத்து மகிழ்ந்தார்கள்.

அந்தக் கப்பல் முதல்முறையாக தன் பயணத்தைத் தொடங்கியபோது கவர்னர் ஜெனரல் ராஜாஜி வந்திருந்து, வீரர் வ.உ.சி. வாழ்க என்று ஐம்பதாயிரம் மக்களுக்கு நடுவில் கோஷமிட்டார். மக்கள் ஆரவாரம் செய்ய அந்தக் கப்பல் மிதந்து சென்றது.

அவரைப் போற்றும் வகையில் தற்போது தூத்துக்குடி துறைமுகத்திற்கு நம் இனத்தின் ஒளிவிளக்கான வ.உ.சி.யின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பணி

வ.உ.சி எழுதிய நூல்கள்

எனது பாடல் எனது திரட்டு
மெய்யறம்
மெய்யறிவு
சுயசரிதை
எனது அரசியல் பெருஞ்சொல்
வ.உ.சி. கண்ட பாரதி


வ.உ.சி. பதிப்பித்த நூல்கள்

திருக்குறள் அறத்துப்பால் மணக்குடவர் உரையுடன்
தொல்காப்பியம் இளம்பூரணர் உரையுடன் (அகத்திணை இயல் மற்றும் புறத்திணை இயல்)
தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
தொல்காப்பியம் பொருளதிகாரம்
இன்னிலை


வ.உ.சி. உரை எழுதிய நூல்கள்

திருக்குறள் அறத்துப்பால்
சிவஞானபோதம்


வ.உ.சி.யால் மொழிபெயர்க்கப்பட்ட
ஜேம்ஸ் ஆலனின் நூல்கள்


அகமே புறம்
மனம் போல் வாழ்வு
வலிமைக்கு மார்க்கம்
சாந்திக்கு மார்க்கம்

இந்த நூல்கள் தவிர பல்வேறு கட்டுரைகளையும் எழுதியுள்ளார் வ.உ.சி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 11, 2015 1:23 pm

அருமை சிவம் .தொடருங்கள்.....................

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 25  பகுதி 1- 4 அம்பிகா சிவம் DaSpQBUReWxvFqE0vbLO+223797_401416126580671_1315406942_n
.
.
சிவம், இந்த நான்கு பாகங்களையும் ஒரே திரி இல் இணைத்து விடவா? சொல்லுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Wed Feb 11, 2015 1:47 pm

krishnaamma wrote:அருமை சிவம் .தொடருங்கள்.....................
.
.
சிவம், இந்த நான்கு பாகங்களையும் ஒரே திரி இல் இணைத்து விடவா? சொல்லுங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1120103

இணைத்துவிடலாம். தங்கள் உதவிக்கு நன்றி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 11, 2015 1:51 pm

subramaniansivam wrote:
krishnaamma wrote:அருமை சிவம் .தொடருங்கள்.....................
.
.
சிவம், இந்த நான்கு பாகங்களையும் ஒரே திரி இல் இணைத்து விடவா? சொல்லுங்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1120103

இணைத்துவிடலாம். தங்கள் உதவிக்கு நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1120114

ஓகே.....செய்துவிடுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 11, 2015 1:56 pm

ம்.....இப்போ இதெல்லாம் ஒரே திரி இல் இருக்கு.....இனி உங்களுடைய 24 திரிகளையும் இணைத்து விடுகிறேன் ஓகே வா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 11, 2015 2:04 pm

krishnaamma wrote:ம்.....இப்போ இதெல்லாம் ஒரே திரி இல் இருக்கு.....இனி உங்களுடைய 24 திரிகளையும் இணைத்து விடுகிறேன் ஓகே வா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1120120

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 11, 2015 2:05 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:ம்.....இப்போ இதெல்லாம் ஒரே திரி இல் இருக்கு.....இனி உங்களுடைய 24 திரிகளையும் இணைத்து விடுகிறேன் ஓகே வா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1120120

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1120123

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக