புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆன்மீகக் கதைகள்  Poll_c10 ஆன்மீகக் கதைகள்  Poll_m10 ஆன்மீகக் கதைகள்  Poll_c10 
29 Posts - 62%
heezulia
 ஆன்மீகக் கதைகள்  Poll_c10 ஆன்மீகக் கதைகள்  Poll_m10 ஆன்மீகக் கதைகள்  Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
 ஆன்மீகக் கதைகள்  Poll_c10 ஆன்மீகக் கதைகள்  Poll_m10 ஆன்மீகக் கதைகள்  Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
 ஆன்மீகக் கதைகள்  Poll_c10 ஆன்மீகக் கதைகள்  Poll_m10 ஆன்மீகக் கதைகள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆன்மீகக் கதைகள்  Poll_c10 ஆன்மீகக் கதைகள்  Poll_m10 ஆன்மீகக் கதைகள்  Poll_c10 
194 Posts - 73%
heezulia
 ஆன்மீகக் கதைகள்  Poll_c10 ஆன்மீகக் கதைகள்  Poll_m10 ஆன்மீகக் கதைகள்  Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
 ஆன்மீகக் கதைகள்  Poll_c10 ஆன்மீகக் கதைகள்  Poll_m10 ஆன்மீகக் கதைகள்  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
 ஆன்மீகக் கதைகள்  Poll_c10 ஆன்மீகக் கதைகள்  Poll_m10 ஆன்மீகக் கதைகள்  Poll_c10 
8 Posts - 3%
prajai
 ஆன்மீகக் கதைகள்  Poll_c10 ஆன்மீகக் கதைகள்  Poll_m10 ஆன்மீகக் கதைகள்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 ஆன்மீகக் கதைகள்  Poll_c10 ஆன்மீகக் கதைகள்  Poll_m10 ஆன்மீகக் கதைகள்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 ஆன்மீகக் கதைகள்  Poll_c10 ஆன்மீகக் கதைகள்  Poll_m10 ஆன்மீகக் கதைகள்  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
 ஆன்மீகக் கதைகள்  Poll_c10 ஆன்மீகக் கதைகள்  Poll_m10 ஆன்மீகக் கதைகள்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
 ஆன்மீகக் கதைகள்  Poll_c10 ஆன்மீகக் கதைகள்  Poll_m10 ஆன்மீகக் கதைகள்  Poll_c10 
2 Posts - 1%
sram_1977
 ஆன்மீகக் கதைகள்  Poll_c10 ஆன்மீகக் கதைகள்  Poll_m10 ஆன்மீகக் கதைகள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீகக் கதைகள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 07, 2015 12:01 am

1 . சதாசிவ பிரமேந்திரர்

சதாசிவ பிரமேந்திரர் என்ற ஞானி கோயில் நகராம் மதுரையில் 18ம் நூற்றாண்டில் அவதரித்தவர். பெற்றோர் இட்ட பெயர் சிவராமகிருஷ்ணன். இளமை முதலே வீடு, வாசல், சொந்தம், பந்தம் என்ற பற்றில்லாமல் இருந்தார். படிப்பில் திறமைசாலியான இவர், மொழியியல், கலைகள் மற்றும் தத்துவஞான வித்தகராகத் திகழ்ந்தார். அக்காலத்தில், குழந்தை திருமணம் செய்து வைப்பது வழக்கம்.

பிரம்மேந்திரருக்கும் அவ்வாறே செய்து வைக்கப்பட்டது. திருமணமான குழந்தைகள் பருவமடையும் வரை பெற்றோர் வீட்டிலேயே இருப்பது வழக்கம். பிரம்மேந்திரரின் மனைவியும் அவ்வாறே இருந்தாள். பிரம்மேந்திரர் குருகுலம் சென்று விட்டு திரும்பியதும், அம்மா வாசலில் நின்று எதிர்பார்த்துக் காத்திருப்பார். வந்ததும் அவருக்கு உணவு தருவாள். ஒருநாள், அம்மாவை வாசலில் காணவில்லை. வீட்டிற்கு, மனைவியின் தந்தையும், உறவினர்கள் சிலரும் வந்திருந்தனர். எல்லார் முகத்திலும் ஆனந்தம். உணவு தயாராகிக் கொண்டிருந்தது. பிரம்மேந்திரர் 13 வயது பாலகன் தானே!

பசியோடு வந்தார். அம்மாவைக் காணததால் ஏமாற்றம். வீட்டுக் குள் சென்று, உறவினர்கள் வருகைக்கான காரணத்தை அறிந்து கொண்டார். அம்மாவிடம் சாப்பாடு கேட்டார்.

""கொஞ்சம் பொறுத்துக் கொள். மாமாவும் உ<றவினர்களும் வந்துள்ளார்கள் இல்லையா? சாப்பாடு தயாராகிறது. அவர்களுடன் சேர்ந்து சாப்பிடலாம். அதுவரை பசியைப் பொறுத்துக் கொள்ளடா குழந்தை!'' என்று அமைதிப்படுத்தினாள். இது எல்லா தாய்மார்களும் சொல்வது தானே! ஆனால், சிறுவனான பிரம்மேந்திரர் மனதில் இது பெரிய அலைகளைக் கிளப்பியது.

""ஆஹா...குடும்ப வாழ்க்கை துவங்கும் முன்னரே இப்படி ஒரு நிலையா? இன்று சாப்பாடு இல்லை என்கிறாள் அம்மா. நாளை என்ன இல்லை என்று சொல்வாளோ? இப்படி எத்தனை 'இல்லை' களை நாம் சமாளிக்க வேண்டியிருக்குமோ! வேண்டாம் இந்த குடும்ப வாழ்க்கை,'' என்று யோசித்தவர் வீட்டை விட்டுப் போய்விட்டார். துறவறம் பூண்டார். ஒரு கவுபீனம் (கோவணம்) கூட உடலில் இல்லாமல் நிர்வாண நிலையில் இருந்தார். பல ஊர்களில் சுற்றித்திரிந்தார். ஒருநாள் ஈரோடு அருகிலுள்ள கொடுமுடியில் காவிரி நதியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். திடீரென வெள்ளம் வர, மணல் அதிகமாக அடித்து வரப்பட்டு அவரை மூடிவிட்டது. வெள்ளம் வற்றியதும், மணலைத் தோண்டிப் பார்த்தால், தலையில் மண்வெட்டி காயத்துடன் ரத்தம் வழிய அவர் தன் வழியில் சென்றார்.

ஒருமுறை இவர் குறுநிலமன்னன் ஒருவனது அந்தப்புரத்துக்குள் நுழைந்து விட்டார். நிர்வாணநிலையில் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்ததால் கோபமடைந்த மன்னன், அவரது கையை வெட்டிவிட்டான். வெட்டுப்பட்டது கூட தெரியாமல் அவர் தன்போக்கில் நடந்தார். வியப்படைந்த மன்னன், அவரிடம் மன்னிப்பு கேட்ட போது தான் கை போனதே அவருக்கு தெரிய வந்தத. பிறகு வெட்டுப்பட்ட தன் கையுடன் நடந்து சென்ற போது, ஆச்சரியப்பட்ட மன்னன் அவரிடம் மன்னிப்பு கேட்டான். உணர்வு நிலைக்கு திரும்பிய பிரம்மேந்திரர், துண்டான கையை ஒட்ட வைத்துக் கொண்டார்.

இவர் பல நூல்களை எழுதியுள்ளார். கீர்த்தனைகள் பாடியுள்ளார். அத்வைத ரசமஞ்சரி, யோக சுகதாரம், ஆத்ம வித்யா விலாசம், சித்தாந்த கல்பவல்லி ஆகியவை இவரது நூல்கள். இப்படி பல அதிசயங்கள் செய்த அவர் கரூர் அருகிலுள்ள நெரூரில் சமாதியானதாக தகவல் உண்டு.



 ஆன்மீகக் கதைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 07, 2015 12:02 am

ஆன்மிக கதைகள் - 2 - இதுதான் நிஜமான பக்தி!

பாகவதர் ஒருவர் கஜேந்திர மோட்சம் பற்றி சுவாரஸ்யமாக விவரித்துக் கொண்டிருந்தார்.

"" கஜேந்திரன் என்னும் யானை தாமரைத் தடாகத்தில் மலர் பறிக்க வந்தது. குளத்தில் இருந்த கூகு என்ற முதலை, யானையின் காலினை இழுத்தது. முதலையின் வாயில் க்கிக் கொண்ட யானை செய்வதறியாது திகைத்தது. தான் வழிபடும் பெருமாளே கதி என்று நினைத்து "ஆதிமூலமே' என்று அபயக்குரல் எழுப்பியது. குரலைக் கேட்ட பெருமாள் வைகுண்டத்திலிருந்து கருடன் மீது பறந்து வந்து கஜேந்திரனைக் காப்பாற்றினார்,'' என்று சொல்லிக்கொண்டிருந்த போது, உபன்யாசத்துக்கு வந்திருந்த பெரியவர் ஒருவர் இடைமறித்தார்.

""பாகவதரே! யானையின் கூக்குரல் வைகுண்டம் வரை எப்படி கேட்கும்? அதைக்கேட்டாலும் கூட பெருமாள் உடனே எப்படி அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்?'' என்றார்.

நிகழ்ச்சியை விவரித்துக் கொண்டிருந்த பாகவதருக்கு இதற்கு பதில் தெரியவில்லை. ஏதோ படித்ததையும், கேட்டதையும் கொண்டு கதை சொன்னவர் விழிக்க ஆரம்பித்து விட்டார். உடனே பாகவதரின் மகன் எழுந்தான்.

""ஐயா! உங்கள் கேள்விக்கு பதில் நான் சொல்கிறேன்,'' என்றான். சிறுவனின் பதிலைக் கேட்க அனைவரும் ஆர்வமாயினர்.

""மக்களே! வைகுண்டம் என்பது எங்கோ வானத்தில் இல்லை. அவரவர் இருக்குமிடமே வைகுண்டம் தான்! அதாவது கூப்பிடு தூரத்தில் வைகுண்டம் இருக்கிறது. பரம்பொருள் எங்கும் நிறைந்திருக்கிறான். நம்பிக்கையோடு அழைத்தால் அவன் உடனே ஓடி வருவான், '' என்றான். அனைவரும் இந்த பதில் கேட்டு கைதட்டினர். நம்பிக்கையே பக்தி என்ற உண்மையை உணர்ந்தனர்.

கடவுளை அதிகம் சிந்திப்பது யார்?

அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் இல்லத்துக்கு ஒரு முனிவர் வந்தார். அப்போது அபிமன்யு வீட்டில் இல்லை. அவனது மனைவி உத்தரையைச் சந்தித்து ஆசி வழங்கிய அவர், ஒரு வித்தியாசமான கண்ணாடியைப் பரிசாக அளித்தார். அந்தக் கண்ணாடியில் பார்ப்பவர் முகம் தெரியாது. யார் நமக்கு பிரியமானவரோ அவரது முகம் தெரியும். உத்தரை கண்ணாடியை உற்றுப் பார்த்தாள். அவளது இதயத்தில் வீற்றிருக்கும் அவளது கணவன் அபிமன்யு தெரிந்தான். சற்றுநேரத்தில் வீட்டுக்கு வந்த அபிமன்யு அந்தக் கண்ணாடியைப் பற்றிய விபரமறிந்து வியந்தான். அதை அவன் பார்த்தபோது, அவனது இதயநாயகி உத்தரை தெரிந்தாள். இருவரும் மனமொத்த தம்பதியராக இருப்பது கண்டு மகிழ்ச்சியில் மிதந்தனர். இந்நேரத்தில், அபிமன்யுவின் தாய்மாமன் கண்ணன் அங்கு வந்தார்.

""கண்ணாடியைப் பார்த்து கணவனும், மனைவியும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே! என்ன விஷயம்?'' என்று கேட்டார்.

""மாமா! இந்தக் கண்ணாடியைப் பாருங்கள். இதில் நீங்கள் தெரியமாட்டீர்கள். உங்களுக்கு பிரியமானவர் தெரிவார். உங்கள் மனதைக் கவர்ந்தது எனது அத்தை ருக்மிணியா, பாமாவா, மற்ற அத்தைகளா என்று பார்க்கிறேன்,'' என வேடிக்கையாகச் சொன்னான் அபிமன்யு.யாராவது ஒரு மனைவியை அடையாளம் காட்டி, இன்னொருத்தியிடம் மாட்டிக்கொள்வானா அந்த மாயவன்! அவன் கண்ணாடியைப் பார்த்தான். அதில் சகுனி தெரிந்தான்.

""இதென்ன விந்தை,'' என அபிமன்யு கேட்டான்.

""அபிமன்யு! என்னை வணங்குபவர்கள் கூட காரியம் ஆக வேண்டுமென்றால் தான் என்னை நினைப்பார்கள். ஆனால், சகுனி தூக்கத்தில் கூட என்னைக் கொன்றே தீர வேண்டுமென துடிக்கிறான். எப்போதும் அவனுக்கு என் நினைவு, அதனால் எனக்கும் அவன் நினைவு,'' என்றார். பார்த்தீர்களா! நோக்கம் எதுவானாலும், பக்தர்களை விட நாத்திகர்கள் தான் கடவுளை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை!



 ஆன்மீகக் கதைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 07, 2015 12:04 am

ஆன்மிக கதைகள்-3 - நிஜமான அன்பே வழிபாடு

காவிரியாற்றங்கரையில் உள்ள திருச்சாத்தமங்கை என்னும் ஊர் சிவனருள் பெற்ற புண்ணியபூமி. படைப்புக்கடவுள் பிரம்மா சிவபெருமானைப் பூஜித்து அருள்பெற்ற தலம். இங்குள்ள கோயிலில் மலர்க்கண்ணியம்மை சமேதராய், அவயந்திநாதர் என்ற பெயரில் சிவபெருமான் குடிகொண்டிருக்கிறார். இங்கு சிவத்தொண்டு செய்யும் வேதியர் குடும்பத்தில் பிறந்தார் திருநீலநக்கர். எப்போதும் சிவனையே சிந்திப்பவராய் வாழ்ந்து வந்த இவர் ஒரு மார்கழித் திருவாதிரை நாளில் சிவதரிசனத்திற்காக தன் மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பினார். நீல நக்கருக்கு உதவியாக அவருடைய மனைவி பூஜைக்கான பூக்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அயவந்திநாதர் சிலையில் விஷம் கொண்ட சிலந்திப்பூச்சி ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதைக் கண்ட அம்மையாரின் மனம் துடித்தது. செய்வதறியாமல் தன் வாயினால் ஊதி லிங்கத்தின் மீது சென்ற பூச்சியை கீழே விழச் செய்தார். ஆனால், துரதிர்ஷ்டமாக அவரது எச்சில் துளிகள் ஈசனின் சிலையில் பட்டுவிட்டது.

இதைப் பார்த்த திருநீலநக்கருக்கு கோபம் அதிகமாகி விட்டது. சிவஅபசாரம் செய்த தன் மனைவியை நோக்கி வெகுண்டு எழுந்தார். ""அறிவில்லாதவளே! அபசாரம் செய்துவிட்டாய். எம்பெருமானின் மேனியை எச்சில்படுத்திவிட்டாயே!'' என்று அடிக்க கையை ஓங்கினார்.

ஆத்திரம் கொண்ட கணவர் முன்னால் ஒடுங்கி நின்ற அந்தப் பெண்மணி மெல்லிய குரலில், ""பொன்னார் மேனியனின் திருமேனி புண்ணாகாமல் இருக்க சிலந்தியை ஊதி விரட்டியது பாவமா?'' என்று சொல்லி அழுதாள்.

அவரோ சமாதானம் ஆகவில்லை. "" ஆயிரம் சமாதானம் சொன்னாலும் நீ செய்த பழிச்செயலை ஒருபோதும் என்மனம் ஒப்புக்கொள்ளப்போவதில்லை. சிவ அபச்சாரம் செய்த நீ இன்றுமுதல் என்மனைவி அல்ல. நான் உன் கணவனும் அல்ல,''என்று சொல்லி பூஜையைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு இல்லம் நோக்கி கிளம்பினார்.

நீலநக்கரின் மனைவி வேறு வழியின்றி கோயிலேயே தங்கிவிட்டார்.

ஈசன் முன்னால் அமர்ந்து, ""உனக்கு பூச்சேவை செய்தேன். ஆனால், நான் சூடும் பூவுக்கு காரணமானவரிடம் இருந்து பிரித்து விட்டாயே,'' என்று கதறினார்.

அன்றிரவில், நீலநக்கர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இறைவன் கனவில் தோன்றி, ""நீலநக்கரே! என் உடம்பைப் பாரும். உன் மனைவி ஊதிய இடம் தவிர மற்ற இடமெல்லாம் கொப்புளங்கள் தோன்றியுள்ளன. என்மேல் கொண்ட அன்பினால் செய்த செயலுக்கு அவள் மேல் நீர் ஆத்திரம் கொண்டது முறையா? '' என்றார்.

கண்விழித்த நாயனார் பதறியடித்து மனைவியைத் தேடி கோயிலுக்கு ஓடிவந்தார். ஈசனே கனவில் தோன்றி தன்னிடம் குறைபட்டுக் கொண்டதை அவரிடம் தெரிவித்ததோடு, உண்மையான அன்புடன் தவறே செய்தாலும் கூட இறைவன் மன்னிப்பான் என்ற உண்மையை உணர்வதாகவும், மனைவியிடம் கடுமையாக நடந்து கொண்டதற்காகவும் வருத்தப்படுவதாகச் சொன்னார்.

இருவரும் அவயந்திநாதரைப் பணிந்து வணங்கினர். அன்று முதல் தம்பதியர் இருவரும் காதலால் ஒன்றிணைந்து சிவ வழிபாட்டை தொடர்ந்து வந்தனர். சிவயாத்திரையாக பல தலங்களுக்கும் சென்று வந்த திருஞானசம்பந்தர் ஒருசமயத்தில் திருச்சாத்த மங்கைக்கு வருவதாக அறிந்தார் நீலநக்கர். அவயந்தி நாதரை தரிசிக்க வந்த திருஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், மதங்கசூளாமணி அம்மையார் ஆகியோரை மேளதாளத்துடன் வரவேற்றார். அவர்களோடு அவயந்திநாதரை வழிபாடு செய்து மகிழ்ந்தார். திருஞானசம்பந்தரையும் மற்ற அடியவர்களையும் பிரிவதற்கு நீலநக்கரால் முடியவில்லை. அவர்களோடு நீலநக்கரும், அவரது மனைவியும் உடன் புறப்பட்டனர். திருஞானசம்பந்தருக்கு ஆச்சாள்புரத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்கும் பாக்கியத்தைப் பெற்ற நீலநக்கர். அங்கு தோன்றிய சிவபரஞ்சுடரொளியில் கலந்து சிவப்பேறு பெற்றார். ஐதீகத்தை விட இறைவன் மேல் வைக்கும் நிஜமான அன்பே உண்மை வழிபாடாகும்.



 ஆன்மீகக் கதைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 07, 2015 12:05 am

ஆன்மிக கதைகள் -4 - என் உயிரினும் மேலான.

அரசன் ஒருவனுக்கு கலைப்பொருட்கள் மீது தீராத ஆசை. எங்கே எதைப் பார்த்தாலும், வாங்கி வைத்து விடுவான். ஒரு சமயம் கலையம்சம் மிக்க பளிங்குச்சிலைகள் சிலவற்றை அவன் வாங்கினான். அவற்றைப் பார்த்து பார்த்து ரசித்தான். தன் மனைவியை விட அவற்றை அதிகம் நேசித்தான். காலையில் எழுந்ததும், மனைவியின் முகத்தைப் பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருந்த அவன், சிலைகள் மேல் வைத்த பாசத்தால் அவற்றைப் பார்க்கத் துவங்கிவிட்டான். அவற்றில் சிறு தூசு படியக் கூட அவனது மனம் இடம் கொடுக்கவில்லை. எனவே, சிலைகளைத் துடைக்க ஒரு தனி பணியாளை நியமித்து விட்டான். ஒருநாள், அந்த பணியாள் சிலையைத் துடைக்கும் போது, எப்படியோ சரிந்து கீழே விழுந்து கை உடைந்துவிட்டது. தகவலறிந்த மன்னன், அந்தப் பணியாளøனை சாட்டையால் நையப் புடைத்து விட்டான். இருப்பினும், அவனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. அவனுக்கு மரணதண்டனை விதித்து விட்டான்.

அந்தப் பணியாளனை மறுநாள் காலையில் தூக்கிலிட முடிவு செய்யப்பட்டு, சிறைறயில் அடைக்கப்பட்டான். அவன் தன் நிலையை எண்ணி கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான். அன்று மாலையில் ஒரு துறவி வந்தார். அரசன் அவரிடம், தான் மையல் கொண்டிருந்த சிலை உடைந்து போனது பற்றி வருத்தத்துடன் சொன்னான்.

""அதற்கென்ன, நான் இதைச் சரியாக்கி முன்போலவே சிலையை உருவாக்குகிறேன்,'' என்ற முனிவரிடம் மன்னன் மகிழ்ச்சியுடன் தலையாட்டினான். முனிவர் உடைந்த சிலையைப் பார்த்தார். திடீரென அதைக் கீழே தள்ளினார். அருகில் இருந்த மற்ற சிலைகளையும் தள்ளி நொறுக்கினார். மன்னனின் ஆத்திரத்திற்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. ""துறவியே! உமக்கென்ன பித்துப்பிடித்து விட்டதா?'' என்றான்.

""அப்பனே! பித்து உனக்குத்தான். அழியும் பொருட்கள் மீது ஆசையெனும் பித்து கொண்டுள்ளாய். அதனால் ஒரு உயிரையே பறிக்கத்துணிந்தாய். என்னையும் கொன்றுவிடு. இனியாவது, பல உயிர்கள் பலியாவது தடுக்கப்படும்,'' என்றார். மன்னன் தன் தவறை உணர்ந்தான். உயிரினும் மேலானது எதுவுமில்லை என்பதைப் புரிந்து கொண்டான். பணியாளனை விடுதலை செய்தான்.



 ஆன்மீகக் கதைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 07, 2015 12:06 am

ஆன்மிக கதைகள்-5 - மீன் வயிற்றில் குழந்தை

விதர்ப்ப தேசத்தை பீஷ்மகன் என்பவன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு ருக்குமி என்னும் மகனும், ருக்மணி என்னும் மகளும் இருந்தனர். அழகில் சிறந்த ருக்மணியும், கிருஷ்ணரும் காதல் கொண்டனர். கிருஷ்ணர் தன் காதலை பீஷ்மகனிடம் தெரியப்படுத்தினார். ஆனால், ருக்மணியின் சகோதரன் ருக்குமி, இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தான். தன் தங்கையை, சிசுபாலன் என்பவனுக்கு மணம் முடித்து வைக்கும்படி தந்தையிடம் வற்புறுத்தி சம்மதமும் வாங்கி விட்டான்.

எல்லா நாட்டுக்கும் மணஓலை அனுப்பப்பட்டது. சிசுபாலனின் நண்பர்களான ஜராசந்தன், பவுண்டரகன் என்று பலரும் அழைப்பிதழை பெற்றனர். அவர்கள், திருமண வைபவத்தைக் காண விதர்ப்பதேசம் வந்தனர். கிருஷ்ணருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. கிருஷ்ணரும், பலராமன் மற்றும் யாதவர்கள் புடைசூழ விதர்ப்பதேசம் புறப்பட்டு வந்தார். திருமணம் நடக்கும் முன்பு, கிருஷ்ணர் மணப்பெண்ணான ருக்மணியை தூக்கிக் கொண்டு துவாரகைக்கு தேரில் கிளம்பினார். ருக்குமிக்கு தகவல் தெரிந்தது. அவன் கிருஷ்ணரைக் கொல்வேன் என்று சபதம் செய்து, அவரைத் துரத்தினான். ஓரிடத்தில் கிருஷ்ணரின் தேரை மறித்தான். இருவருக்கும் கடும் போர் நடந்தது. ருக்குமியை கிருஷ்ணர் வீழ்த்தினார். பின்னர், ருக்மணியோடு துவாரகை சென்றடைந்தார்.

ருக்மணி- கிருஷ்ணர் கல்யாணம் விமரிசையாக நடந்தது. சிறிது காலத்தில், மன்மதனின் அம்சத்தில் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள் ருக்மணி. அவனுக்கு பிரத்யும்னன் என்று பெயரிட்டனர்.

தன்னைக் கொல்வதற்காக துவாரகையில் பிறந்த ருக்மணியின் பிள்ளையைப் பற்றி கேள்விப்பட்டான் சம்பரன் என்னும் அசுரன். மாய வடிவில் யாரும் அறியாமல் துவாரகைக்குச் சென்றான். பிறந்து ஆறே நாளான சிசுவை தூக்கி வந்து கடலில் எறிந்துவிட்டு ஓடிவிட்டான்.

கடலில் கிடந்த பிரத்யும்னனை மீன் ஒன்று விழுங்கியது. கடலில் செம்படவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, குழந்தையை விழுங்கிய மீனும் வலையில் சிக்கியது. சம்பராசுரனின் அரண்மனைக்கு, மன்னனின் சாப்பாட்டுக்காக அந்த மீன்கள் கொண்டு செல்லப்பட்டன.

மாயாவதி என்ற சமையல்காரி அந்தமீன்களை சமையலுக்காக நறுக்கினாள். ஒரு மீனின் வயிறு அங்கும் இங்கும் அசையவே, அதை பக்குவமாக அறுத்தாள். அதற்குள் உயிரோடு இருந்தபிரத்யும்னனைக் கண்டு ஆச்சரியம் கொண்டாள். குழந்தை எப்படி மீனுக்குள் வந்தது என்று எண்ணியபோது, அவளுடைய சந்தேகத்தைத் தீர்க்க நாரதமகரிஷி அங்கு வந்தார்.

நாரதர் அவளிடம், ""மாயாவதி! கிருஷ்ணரின் குழந்தை பிரத்யும்னன் இவன். சம்பரனுக்கு யமனாக வந்திருக்கிறான். இவனை வளர்த்து வா,'' என்று கூறி மறைந்தார். மாயாவதியும் கண்ணும் கருத்துமாக பிரத்யும்னனை வளர்த்துவந்தாள். ஒருநாள் மாயாவதி பிரத்யும்னனிடம், ""பிரத்யும்னா! நீ கிருஷ்ணரின் பிள்ளை. உன் தாயான ருக்மணி துவாரகையில் இருக்கிறாள்,'' என்ற உண்மையை எடுத்துச் சொன்னாள். தன் பெற்றோரிடம் இருந்து தன்னைப் பிரித்த சம்பராசுரனுடன் போர் செய்து கொன்றான் பிரத்யும்னன். வெற்றியுடன் திரும்பிய பிரத்யும்னன், தன்னை வளர்த்த மாயாவதியை அழைத்துக் கொண்டு ஆகாயமார்க்கமாக துவாரகை கிளம்பினான். கிருஷ்ணரின் சாயலில் இருந்த அப்பிள்ளையைக் கண்டதும் யாதவர்கள் கிருஷ்ணர் என்றே எண்ணி மகிழ்ந்தனர். ருக்மணிக்கு அவனைக் கண்டதும் தாய்மை உணர்வு பொங்கியது. நாரதரும் கிருஷ்ணரை அழைத்துக் கொண்டு துவாரகை வந்து சேர்ந்தார். நீண்ட நாளாக காணாமல் போன தன் பிள்ளை திரும்பக் கிடைத்ததை எண்ணி ருக்மணி எல்லையில்லாமகிழ்ச்சி கொண்டாள்.



 ஆன்மீகக் கதைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 07, 2015 12:07 am

ஆன்மிக கதைகள் 6 - குடிப்பழக்கம் நம் குடும்ப நற்பெயரை அழித்துவிடும்

போதிசத்துவர் என்ற மகான் ஏராளமான செல்வத்தை தன்னிடம் வைத்திருந்தார். அதை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவுவதில் அவருக்கு பரமானந்தம்! இறைக்கிற கிணறு தான் ஊறும் என்பதற்கேற்ப, பரந்த மனப்பான்மையுள்ள தகுதி மிக்க இவரிடம் தர்மத்திற்குரிய பணத்தைக் கொடுத்தால், அது தகுதியானவர்களைச் சென்றடையும் என்ற நோக்கத்தில் தர்மவான்களும், பெரும் செல்வந்தர்களும் இவரிடம் பணத்தைக் கொடுக்க ஆரம்பித்தனர். இப்படியாக நான்கு கோடி பொற்காசுகள் அவரிடம் சேர்ந்துவிட்டன.

போதிசத்துவரைத் தேடி வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஒருநாள் போதிசத்துவர் காலமாகி விட்டார். மக்கள் பட்ட வருத்தத் திற்கு அளவேயில்லை. இருப்பினும், அவரது மகன் இதேபோல தானதர்மம் செய்வார், தங்கள் கஷ்டங்கள் தீருமென நம்பினர். அவர்கள் அந்த மகனைத் தேடிச் சென்று உதவி கேட்டனர். அவனோ குடிகாரன். போதையில் உளறிக் கொண்டிருந்தான். அவனை எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தனர். தன்னைத் தேடி வந்தவர்களிடம், ""ஏனடா! ஏதோ கொடுத்து வைத்ததைப் போல கேட்கிறீர்களே! என் தகப்பனார் எனக்குத் தான் சொத்தை விட்டுச் சென்றுள்ளாரே தவிர, உங்களுக்கு வாரி வழங்க இல்லை. என் தகப்பனாரிடம் இதுவரை நீங்கள் அடித்த கொள்ளை போதாதா? அப்பாவியான அவரை ஏமாற்றி நீங்கள் பணம் பெற்றீர்கள். ஆனால், உங்கள் பருப்பு என்னிடம் வேகாது,'' எனச் சொல்லி விரட்டிவிட்டான்.

அது மட்டுமல்ல! தினமும் குடித்தும், குடியால் மதிமயங்கி பெண் பழக்கத்தில் சிக்கியும், தன் தந்தை சேர்த்து வைத்த சொத்து அனைத்தையும் இழந்த அவன், தெருவில் யாரும் கண்டு கொள்ளாதவனாய் பிச்சைக்காரனாய் திரிய ஆரம்பித்தான். தான் செய்த தர்மத்தால் சொர்க்கத்தில் தேவர்களுடன் அமர்ந்திருந்த போதிசத்துவர் தன் மகனின் இந்த அவலநிலை கண்டு அழுதார். அவரது கண்ணீரின் காரணத்தை அறிந்த தேவர்கள்,"" போதிசத்துவரே! உங்கள் தர்மம் உங்களைக் காப்பாற்றினாலும் உங்கள் பிள்ளையைக் காப்பாற்றவில்லையே என வருந்த வேண்டாம். அவரவர் முன் வினைப்பயன் காரணமாகத் தான் இந்த நிலை உண்டாகிறது. இருப்பினும், தங்கள் கண்ணீர் எங்களை வருத்துகிறது. நாங்கள் உங்கள் பிள்ளையின் கையில் ஒரு அட்சய பாத்திரம் ஒன்று கிடைக்கும்படி செய்கிறோம். அதில் இருந்து தேவையானதை எடுத்துக் கொண்டு நல்லபடியாக வாழ்வான்'' என்றனர்.

போதிசத்துவர் மகிழ்ச்சி அடைந்தார். தேவர்கள் அவன் கண்ணில் படும்படி அட்சய பாத்திரத்தை வைத்தனர். அதைக் கையில் எடுத்தவுடன் போதிசத்துவரின் மகன் அதனுள் கையை விட்டபடியே,"" இந்த பாத்திரம் நிறைய மது இருந்தால் எப்படி இருக்கும்?'' என்று எண்ணினான். என்ன ஆச்சர்யம்! ஒரே நொடியில் பாத்திரம் முழுக்க மது நிறைந்து விட்டது. அவன் சந்தோஷமாக நிறைய குடித்தான். சுவையான உணவுவகைகளை உண்ண நினைத்தான். நல்ல ருசியான உணவுப்பண்டங்கள் அட்சய பாத்திரத்தில் நிரம்பின. இப்படியே, தினமும் நினைத்த நேரத்தில் குடிக்கவும், சாப்பிடவும் செய்தான். ஒரு நாள் குடிவெறியில் தள்ளாடினான். அவன் கையில் இருந்த பாத்திரம் தவறி விழுந்து நொறுங்கிப் போனது. மீண்டும் அவன் பிச்சை எடுக்கத் தொடங்கினான். விதி வலியது என்பதை போதி சத்துவர் உணர்ந்தார். குடிப்பழக்கம் நம் குடும்ப நற்பெயரை அழித்துவிடும் என்பதை மறவாதீர்கள்.



 ஆன்மீகக் கதைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 07, 2015 12:10 am

ஆன்மிக கதைகள் 7 - தனக்கு ஏற்படும் துன்பம் போலத்தானே மற்றவர்களுக்கும்

ஒரு சமயம் பிரம்மதேவர் நாரதரிடம், ""நாரதா! உலகில் நீ பார்த்தவற்றுள் எந்த விஷயத்தை எண்ணி மிகுந்த ஆச்சரியம் கொண்டாய்?''என்று கேட்டார்.

"" தந்தையே! நான் கண்டு ஆச்சரியப்பட்டதென்றால், இறந்துகொண்டிருப்பவர்கள் இறந்து போனவர்களைப் பார்த்து அழுதுவது தான்!'' என்றார் நாரதர். அடுத்து, "" நீ எண்ணி வியந்த வேறொரு விஷயம் இருந்தால் அதையும் சொல்லேன்!'' என்றார் பிரம்மா.

""மனிதமனம் படுத்தும் பாடு இருக்கிறதே'' என்று அதை எண்ணி வியந்திருக்கிறேன். உலகில் உள்ள எல்லோருக்கும் பாவ,புண்ணியம் பற்றிய சிந்தனைகள் எழாமல் இருப்பதில்லை. மக்கள் பாவச்செயல்களைச் செய்கிறார்கள். அதற்கான விளைவுகளையும் பெற்று துன்புறுகிறார்கள். புண்ணியங்களைச் செய்து நன்மைகளை அடைந்தாலும் நல்ல செயல்களைச் செய்யத் தயங்குகிறார்கள். பண்பான பேச்சினை விரும்புகிறார்கள். ஆனால், பிறர் மீது கோபம் கொள்கிறார்கள். தன்னிடம் மற்றவர்கள் உண்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் உண்மையை விட்டு விலகி வெகுதூரத்தில் நிற்கிறார்கள். இப்படி மனித மனத்தின் கோணல்களை நினைத்து வியந்திருக்கிறேன்,''என்றார் நாரதர். ""இதற்கெல்லாம் தீர்வு ஏதாவது சொல்லேன்?''என்றார் பிரம்மா.

""தந்தையே! தனக்கு ஏற்படும் துன்பம் போலத்தானே மற்றவர்களுக்கும் அதன் வலி இருக்கும் என்பதை எல்லா மனிதர்களும் உணர வேண்டும். அதன் பின் அவர்களுக்கு என்பதை எல்லா மனிதர்களும் உணர வேண்டும். அதன் பின் அவர்களுக்கு எந்த தீங்கும் நேராது,'' என்றார்.



 ஆன்மீகக் கதைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 07, 2015 12:11 am

ஆன்மிக கதைகள் 8 - குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள்

பைடணபுரியில் சுலோசனன் என்னும் அந்தணர் இருந்தார். மனைவியை இழந்த இவர், தன் மகள் சுமித்ரையை தாயன்போடு வளர்த்து வந்தார். நாட்டியமாடுவதில் வல்லவளான சுமித்ரையின் அழகில் மயங்கிய ஆதிசேஷனான நாகராஜா, அவள் மீது காதல் கொண்டான். ஒரு சந்தர்ப்பத்தில் சுமித்ரை கருவுற்றாள். இவ்விஷயம் ஊரில் பரவியது. அரண்மனைக்கும் விஷயம் சென்றது. அரசன் சுலோசனனையும், சுமித்ரையையும் ஊரை விட்டு விலக்கி வைக்க உத்தரவிட்டான். தந்தையும், மகளும் செய்வதறியாது திகைத்தனர். சுமித்ரை தன் நிலைக்கு காரணமான ஆதிசேஷனை நினைத்து வணங்கினாள். ஆதிசேஷன் அவள் முன்தோன்றி, ""பெண்ணே! உன் வயிற்றில் இருக்கும் குழந்தை சாதாரண குழந்தை அல்ல! தெய்வீகம் நிறைந்த அப்பிள்ளை அறிவில் ஆற்றலிலும் சிறந்து விளங்குவான். இந் நாட்டை ஆளப்பிறந்தவன் அவன். பெரும் புலவன் என்றும் புகழ் பெறுவான். மன்னனின் ஆணையை ஏற்று வெளியூருக்குச் செல். எல்லாம் நலமாய் நடக்கும்,'' என்று ஆசி அளித்துவிட்டு மறைந்தான். சுலோசனன் சுமித்ரையை அழைத்துக் கொண்டு புரந்தரபுரம் என்னும் ஊருக்குச் சென்று ஒரு குயவர் வீட்டில் தங்கினான். அங்கு சுமித்ரை ஆண்குழந்தை பெற்றெடுத்தாள். பிள்ளைக்கு "சாலிவாஹனன்' என்று பெயரிட்டனர். பிள்ளையிடம் அவனுடைய தந்தை ஆதிசேஷன் என்பதை தெரிவித்து நல்லமுறையில் சுமித்ரை வளர்த்து வந்தாள். சாலிவாஹனன் மண் பொம்மைகளைச் செய்ய கற்றுக் கொண்டான். யானை, குதிரை பொம்மைகளைச் செய்து, தன்னை ஒரு அரசனாகவும், மற்ற குழந்தைகளை சேனாதிபதி மற்றும் அமைச்சராகவும் கற்பனை செய்து விளையாடி மகிழ்ந்தான். கல்வியிலும் சிறந்து திகழ்ந்தான்.

இதனிடையே, புரந்தரபுரத்தில் வசித்த தனஞ்ஜெயன் என்னும் வணிகர், தன் பிள்ளைகள் நால்வருக்கும் ஆளுக்கொரு பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு இறந்து விட்டார். அப்பொட்டலங்களில் முதல் பிள்ளைக்கு மண்ணும், இரண்டாமவனுக்கு உமியும், மூன்றாமவனுக்கு பொன்னும், நான்காம் பிள்ளைக்கு சாணமும் இருந்தது. அவரவருக்குரிய பொட்டலத்தைப் பார்த்துவிட்டு, தந்தையார் ஏன் இந்தப் பொட்டலங்களைத் தந்தார் என்று புரிந்து கொள்ள முடியாமல் விழித்தனர். பலபேரிடம் கேட்டும் அதற்கான விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சாலிவாஹனின் புத்திக் கூர்மையை அறிந்து அவனிடம் வந்தனர். விஷயத்தைக் கேட்ட சாலிவாஹனன் சற்றும் யோசிக்காமல் விடையளித்தான். மண்ணைப் பெற்ற பிள்ளை நிலத்தையும், உமியைப் பெற்றவன் தானியக் களஞ்சியத்தையும், பொன் பெற்றவன் ஆபரணப் பெட்டியையும், சாணம் பெற்றவன் ஆடுமாடுகாளையும் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று விளக்கம் தந்தான். சாலிவாஹனின் விளக்கம் கேட்டு சகோதரர்கள் மகிழ்ந்தனர்.ஒருசமயம் சாலிவாஹனன் மண்குடம் ஒன்றை பொன்குடமாக மாற்றினான். இதைக் கேள்விப்பட்ட விக்கிரமார்க்கன் என்ற மன்னன் அவனை அரண்மனைக்கு வரச்சொன்னான். சாலிவாஹனன் மறுத்துவிட்டான். தன் கட்டøளையை மீறிய அவனைக் கொல்ல நேரில் வந்தான். சாலிவாஹனன் தன் தந்தை ஆதிசேஷனை மனதார வணங்கி மன்னனுடன் சண்டையிட்டு வென்றான். மன்னன் நர்மதை நதியின் வடபகுதிக்கு ஓடிவிட்டான். இதன்பிறகு, நர்மதை நதிக்கு தெற்கே உள்ளவர்கள் சாலிவாஹன சகாப்தத்தையும், வடக்கே உள்ளவர்கள் விக்கிரமார்க்க சகாப்தத்தையும் பின்பற்றினர். சாலிவாஹன சகாப்தம் கி.பி.78ல் தொடங்கியது. பஞ்சாங்கங்களில் சாலிவாஹன ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தகுதியான பொம்மைகளைக் கொடுத்து, அவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் கதைகளையும் சொன்னால் அவர்கள் முன்னேற்றம் பெறுவார்கள் என்பதற்கு சாலிவாஹனின் வாழ்க்கை ஒரு உதாரணம்



 ஆன்மீகக் கதைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 07, 2015 12:12 am

ஆன்மிக கதை 9 - கடவுளும் விதிவிலக்கல்ல

பெருமாளுக்கும் பூமாதேவிக்கும் திருமணம் ஆயிற்று. அவரது முதல் மனைவி பூமா தான். புதிதாக திருமணமானவர்களை விருந்துக்கு அழைப்பது நமது கலாசாரம். தேவலோகத்திலும் இப்படி நடப்பதுண்டு. தம்பதிகளை சிவபார்வதி கைலாயத்துக்கு அழைத்தனர். பூமாதேவி வர மறுத்துவிட்டாள்.

""அன்பரே! தங்களோடு நான் வந்துவிட்டால், இந்த பூலோகத்திலுள்ள பொருட்களெல்லாம் எங்கு போய் இருக்கும்? எனக்கு இன்னொரு பெயர் "அசலா'. அதாவது, இருந்த இடத்தை விட்டு நகராதவள் என்பதை தாங்கள் அறிவீர்கள் அல்லவா! நான் நகர்ந்தால் பூகம்பம் அல்லவா ஏற்படும். நீங்கள் திடீர் திடீரென எங்காவது செல்வீர்கள்? அப்போதெல்லாம் நான் உங்களுடன் வந்து கொண்டிருக்க முடியுமா? நீங்கள் மட்டும் போய் வாருங்கள்,'' என்று அனுப்பி விட்டாள்.

பெருமாளுக்கு வருத்தம். மேலும், போகும் இடங்களில் பெருமாளைப் பார்ப்பவர்கள் எல்லாம், ""ஆத்துக்காரி வரலையா?'' என்று கேட்பார்கள். பெருமாளுக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் சங்கடப்பட்டார். இந்த பூமாதேவி அசையவே மாட்டாள். எனவே, இரண்டாம் திருமணம் செய்வோமே என்று சமுத்திரராஜன் பெண்ணான லட்சுமியை மணந்து கொண்டார்.

அவளோ வீட்டிலேயே இருக்கமாட்டாள். ஒரு வீட்டில் ஒருநாள் இருந்தால், மறுநாள் இன்னொரு வீட்டுக்குப் போய்விடுவாள். செல்வத்தின் அதிபதியல்லவா! நிலையில்லாமல் ஓடிக்கொண்டேயிருந்தாள். பெருமாள் அவளை அழைக்கச் செல்லும் நேரம், "எங்காவது போயிருக்கிறாள்' என்றே பதில் கிடைக்கும்.

அவளோ அசைய மறுக்கிறாள், இவளே ஓடிக்கொண்டே இருக்கிறாள். பெருமாள் லட்சுமியுடன் சேர்ந்து ஓடினார். ஆனால், அவள் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நின்றுவிட்டார்.

பிறகு தன் மகன் மன்மதன் வீட்டுக்குச் சென்று அங்கே தங்கலாம் என்று சென்றார். செல்லும் வழியில் ஒரு முனிவர் பார்த்தார். ""உமது மகன் செய்த வேலையைப் பார்த்தீரா! அந்த பரமசிவனிடம் போய் அவர் மேல் அம்பு விட்டிருக்கிறான். அவர் கோபத்தில் நெற்றிக்கண்ணைத் திறந்திருக்கிறார். பஸ்பமாகி விட்டான்,'' என்று சொன்னதும், மகன் இறந்த துக்கம் தாளாமல் தவித்தார் அவர். மீண்டும் பாற்கடல் வந்த அவர், ஆறுதலாக ஆதிசேஷன் மீது படுத்தார். அவனோ விஷக்காற்றை வெளியிட்டபடியே இருந்தான். சற்று வெளியே போய்வரலாம் என கருடன் மீது ஏறி அமர்ந்தார். பூரி என்ற ஊரின் மேலாக பறக்கும் போது, பூமியில் ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதைப் பார்த்த கருடன், ""சுவாமி! இதோ! என் உணவான பாம்பு செல்கிறது. அதைப் பிடிக்கப் போகிறேன்,'' என நுடுவழியில் அவரை இறக்கிவிட்டுச் சென்றுவிட்டான். தன்னைக் கவனிக்க யாருமே இல்லாததால், பகவான் ஒரு கட்டையாக தன்னை மாற்றிக்கொண்டு அங்கேயே தங்கிவிட்டார். இதனால் தான் பூரி கோயிலில், பெருமாள் கம்பு வடிவில் இருக்கிறார். பார்த்தீர்களா! அனுபவிக்க வேண்டுமென்ற விதியிருந்தால், யாராக இருந்தாலும் அதை அனுபவித்தே ஆக வேண்டும். அதனால் துன்பம் வந்தால் கலங்காதீர்கள். அதையும் ரசித்து அனுபவிக்கும் பக்குவ நிலையைப் பெறுங்கள்.



 ஆன்மீகக் கதைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 07, 2015 12:13 am

ஆன்மிக கதைகள் 10 - பதட்டம் வேண்டாம் சகோதரனே !

சீதையைக் கடத்தி வந்த ராவணனுக்கு, அவனது தம்பி விபீஷணன் புத்திமதி சொன்னான். அடுத்தவன் மனைவியை, அவனுக்குத் தெரியாமல், மறைவாக தூக்கி வந்தது தவறு என்று எடுத்துச் சொல்கிறான். ராவணன் ஒப்புக்கொள்ளவில்லை. தம்பியை தூக்கி எறிந்து பேசினான். "அப்படியானால், நான் நியாயத்தின் பக்கமே நிற்பேன்' என சொல்லிவிட்டு, ஒரே ஒரு கதாயுதத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, ராமனைக் காண கிளம்பிவிட்டான் விபீஷணன். அவனுடன் நான்கு ராட்சதர்களும் வந்தனர்.

இவர்களைத் தூரத்தில் இருந்து கவனித்தான் வானர அரசன் சுக்ரீவன். அவன், இலங்கையிலுள்ள ராட்சஷர்களால் தங்களுக்கு துன்பம் நேருமென்ற அச்சத்தில் இருந்தான். எனவே ராமனிடம்,""பார்த்தாயா ராமா! நம்மை அழிக்க ராவணன் அவனது தம்பி விபீஷணனை ஏவியுள்ளான். அவன் நான்கு ராட்சதர்களையும் சேர்த்துக் கொண்டு வருகிறான். உடல் முழுக்க ஆயுதம் தரித்திருக்கிறான். அவன் நம்மைத் துன்பப்படுத்தவே வருகிறான்,'' என்றான்.

ராமன் அவனிடம், ""ஒரே ஒரு ஆயுதத்துடன் தானே அவன் வருகிறான். நீ இப்படி சொல்கிறாயே,'' என்றான்.

உண்மையில் நடந்தது என்ன தெரியுமா? பயத்தில், ஒரு ஆயுதம் பல ஆயுதமாக சுக்ரீவனுக்கு கண்களுக்கு தெரிந்ததாம். ராமனாகிய பரம்பொருள் அருகில் இருந்தும் கூட, பயத்தினால் தன் பலத்தை அவனால் உணர முடியவில்லையாம்.பயம் வந்தால் பதட்டம் வந்துவிடும். பதட்டப்படுபவரால் எதையும் செய்ய முடியாது.



 ஆன்மீகக் கதைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக