புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10 
40 Posts - 63%
heezulia
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10 
19 Posts - 30%
வேல்முருகன் காசி
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
viyasan
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10 
232 Posts - 42%
heezulia
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_m10சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24 அம்பிகா சிவம்


   
   

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Tue Feb 03, 2015 9:26 pm

First topic message reminder :

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் -1


ஆப்ரஹாம் லிங்கன்

ஒரு மனிதனால் எத்தனை தோல்விகளைத் தாங்க முடியும். ஒன்று இரண்டு அதற்குள்ளாகவே மனமொடிந்து விடுவார்கள். தங்கள் பாதையை மாற்றிக் கொள்வார்கள்.

ஆனால் தோல்விகளை தடைக்கற்களாகக் கருதாமல் அவற்றைப் படிக்கற்களாகக் கருதி தோல்விகளிலிருந்து பெற்ற  அனுபவங்களையே தன் வாழ்க்கையின் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்பவர்கள் புத்திசாலிகள்.

தோல்விகள் ஏற்பட்டால் துவண்டு விடுவார்கள் சாதாரண மனிதர்கள். அந்தத் தோல்வியையே துவண்டு போகச் செய்வார்கள் வெற்றிவீரர்கள்.

அப்படித் தோல்விக்கே தோல்வியைக் கொடுத்தவர்தான் ஆப்ரஹாம் லிங்கன்.

ஆம் அவர் காணாத தோல்விகள் இல்லை, ஆனால் அத்தனை தோல்விகளிலிருந்தும் மீண்டு வந்தார்.

தோல்விகளின் குழந்தை என்றுகூட அவரை செல்லமாக அழைத்தார்கள்.

அவரின் தோல்விகளிலிருந்து அவர் மட்டும் பாடம் கற்கவில்லை நாமும் கற்றுக் கொள்ளலாம்.

அவருடைய 22 வயதிலிருந்து 51 வயது வரை அவர் கண்ட தோல்விகள் ஏராளம்.

வியாபாரத்தில் தோல்வி, சட்டம் படிப்பதில் தோல்வி, தேர்தலில் தோல்வி, காதலில் தோல்வி, செனட் தேர்தலில் தோல்வி, துணை அதிபர் தேர்தலில் தோல்வி என்று அவர் தோல்வியின் அத்தனை பரிமாணங்களையும் கண்டார்.
ஆனால் அவர் அதற்காகவெல்லாம் அலட்டிக் கொள்ளவேயில்லை.

தன் கடமையை நேரம் தவறாமல் செய்துகொண்டே வந்தார். தினந்தோறும் அவரின் வேலைகளைச் செய்வதில் அவர் அயரவில்லை.

அவர் தோல்வியுற்றபோதெல்லாம் அவரைக் கேலிசெய்தவர்களைக் கண்டு அவர் மனம் நோகவில்லை. அவர்களின் எண்ணம் அப்படி, எனது எண்ணம் வெற்றியை அடைவதுதான் என்று அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருந்தார்.
கடைசியாக அவர் அத்தனை தோல்விகளுக்கு அப்புறமாக  அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார்.

ஆனால் அப்போதும் பலர் குறை சொன்னார்கள். நம்மைச்சுற்றி எப்போதும் குறைசொல்லவும், கிண்டலடிக்கவும் ஆட்கள் இருப்பார்கள்.

அதைத்தாண்டி வருவது மட்டுமே வெற்றியாளனாக நினைப்பவரின் வேலை.

நாம் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றிபெறுவது என்பது சாத்தியமல்ல. அதற்காக வேலை ஒன்றும் பார்க்காமல் இருப்பதும் புத்திசாலித்தனமல்ல.

இறங்கி வேலை பார்க்க வேண்டும், வழியில் முட்களும் இருக்கும், ரோஜாக்களும் இருக்கும். ரோஜாக்களை நினைத்துக் கொண்டே முட்களைக் கடக்க வேண்டும்.

லிங்கனின் கடைசி லட்சியமான அதிபர் பதவியை அவர் அடைவதற்கு முன் அவர் பட்ட தோல்விகளை நினைத்துப் பார்த்தால் சாதாரணக் காரியங்களுக்கு நாம் படும் துயரங்கள் எல்லாம் துச்சமாகத் தெரியும்.

வாழ்க்கையில் வீழ்வது என்பது பெரிய விஷயமல்ல, அந்த வீழ்ச்சியை நினைத்துக்கொண்டு வீழ்ந்தே கிடப்பதுதான்  முட்டாள்தனம்.

வீழ்ந்ததே தெரியாமல் உடனே எழுபவன்தான் வெற்றிக்கோட்டைத் தொடுகின்றான்.

தோல்வி என்பது நாம் துயரப்பட வருவதல்ல, நம்மை பலப்படுத்த வருவது. நம் மனதை மேலும் மேலும் வெற்றியை நோக்கிச் செலுத்த வருவது.

தோல்விகளைத் தட்டிவிட்டு விரைபவன் வெற்றிக்கனியை சுவைப்பான்.

தோல்வி தந்த சோகத்தில் ஆழ்பவன் , புதைகுழியில் வீழ்வான்.

தோல்வி வரும்போதெல்லாம் லிங்கனை நினைத்துக் கொள்ளுங்கள். எழுந்து வெற்றியை நோக்கிச் செல்லுங்கள்.

தோல்விகள் என்பவை தடைக்கற்கள் அல்ல, அவையே வெற்றிக்குப் படிக்கற்கள். தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் அந்தப் பாடத்தை உங்கள் வெற்றிக்குப் பயன்படுத்துங்கள்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 04, 2015 12:50 pm

//அவரின் வெற்றி தொடர்ந்துகொண்டே உள்ளது. உங்கள் மனதில் ஒரு லட்சியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நோக்கியே உங்கள் பயணம் அமையட்டும். வெற்றி தேவதை உங்களை ஆசிர்வதிப்பாள்.//

ரொம்ப சரி புன்னகை ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Wed Feb 04, 2015 9:32 pm

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 11

ஆல்பிரட் நோபல்

உலகில் எல்லோரும்தான் சம்பாதிக்கிறார்கள், பல பேர் நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள். ஆனால் தாங்கள் செய்த தவறுக்காக வருந்தி மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் மிகவும் அரிதாகத்தான் காணப்படுகிறார்கள்.

ஆல்பிரட் நோபல் செய்ததைத் தவறு என்றும் கூறிவிட முடியாது. ஆனால் அவரின் கண்டுபிடிப்பு பெரும் அழிவுக்குக் காரணமாகிப் போனதை எண்ணியெண்ணி மனம் வருந்திய அவர் அதற்கு இணையாக மக்களுக்கு நல்லது செய்யவேண்டுமென்று நினைத்ததால் உருவானதுதான் நோபல் பரிசு.

ஸ்வீடனில் ஸ்டாக் ஹோம் என்ற நகரில் இமானுவேல் நோபல், ஆண்ட்ரியெட்டா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் நோபல்.

நோபலின் தந்தை வெடிமருந்தும் வெடிகளும் தயாரித்து விற்பனை செய்து வந்தார். நோபல் பிறந்தபோது அவரின் குடும்பம் எளிய நிலையிலேயே வாழ்ந்து வந்தது.

சிறு வயதில் படிப்பில் படு சுட்டியாக விளங்கினார் நோபல். முதல் மதிப்பெண்களைப் பெற்று ஆசிரியரையும் பெற்றோர்களையும் மகிழ்வித்தார்.

ஆல்பிரட் பொறியியல் கற்பதற்காக அமெரிக்காவிற்குச் சென்றார். அவருக்கு அதில் கவனம் செல்லவில்லை, தன் தந்தையைப்போல் தானும் வெடிமருந்து தயாரிப்பில் ஈடுபடவே அவர் விரும்பினார்.

1862ம் ஆண்டு தன்னுடைய சகோதரர்களின் முன்னிலையில் நைட்ரோ கிளிசரின் அமைந்த ஒரு வெடியை வெடித்துக் காட்டினார். அதுபற்றி அவரின் தந்தையிடமும் தெரிவித்தார்.

மேலும் சிறிது காலத்திற்குப் பிறகு புகையில்லாமல் வெடிக்கும் வெடியைக் கண்டுபிடித்தார். சுரங்கத் தொழில் செய்து வந்தவர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.

1864ம் ஆண்டு நைட்ரோ கிளிசரின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை செல்வந்தர் ஒருவரின் உதவியோடு தொடங்கினார். மிகவும் பாதுகாப்பான டைனமைட்டையும் கண்டுபிடித்தார்.

அந்தக் கண்டுபிடிப்பின்மூலம் ஏரளாமாகச் சம்பாதித்தபோதும் மனித குல அழிவிற்குக் காரணமான ஒன்றைக் கண்டுபிடித்து விட்டோமே என்று அவர் மனம் வருந்தினார்.

1895ம் ஆண்டு அவர் உயில் எழுதிவைத்தார். தன்னுடைய இறப்பிற்குப் பிறகு தன்னுடைய சொத்துகளை வங்கிகளில் முதலீடு செய்து அதில் வரும் வட்டியைக் கொண்டு ஐந்து பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யும்படி அதில் கூறியிருந்தார்.

சமாதானம், இலக்கியம், ரசாயனம், பௌதிகம், மருத்துவம் ஆகிய துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிவோருக்குத் தக்க பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்க வேண்டுமென்று அவர் கூறியிருந்தபடியே 1900ம் ஆண்டு அதற்காக ஒரு நிர்வாகக் குழு ஏற்படுத்தப்பட்டு 1901ம் ஆண்டிலிருந்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

உலகில் உள்ள விஞ்ஞானிகள், அறிஞர்கள் ஆகியோர் இந்தப் பரிசைப் பெறுவதைத் தங்களுக்குக் கிடைத்த பெரும் கௌரவமாகக் கருதுகிறார்கள்.

நோபல் சிறிதும் ஓய்வின்றி கடைசிவரை உழைத்தவர். மனிதகுலத்தின் நன்மைக்காக கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவோருக்குப் பரிசு வழங்கி கௌரவிக்க ஏற்பாடு செய்தவர். வாழ்க்கையில் அவர் மிகச்சிறந்த வெற்றியைப் பெற்றவர்.

உலக சமாதானத்திற்காகவும் ஒரு பரிசை ஏற்படுத்தி உலக மக்களின் அமைதியில் விருப்பம் உள்ளவர் என்பதை நிரூபித்தார்.

மனிதர்கள் மேல் அன்பாகவும் நேசத்துடனும் இருப்பது வெற்றியாளரின் குணங்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது இவரின் வாழ்க்கை நமக்குக் கூறும் பாடம்.
எவ்வளவு செல்வம் சேர்த்தாலும் நமக்கு மட்டுமே வைத்துக்கொள்ளாமல் மற்றவருக்கு உதவும் விதத்தில் அதைப் பயன்படுத்தினால்தான் அந்தச் செல்வத்திற்கே பெருமை என்பதைக் கூறும் வகையில் வாழ்ந்து காட்டியவர்.

உலகத்தில் உள்ள அனைத்துப் பரிசுகளிலும் தலைசிறந்த நோபல் பரிசை வழங்க ஏற்பாடுகள் செய்த அவர் பெயர் உலகம் உள்ளளவும் மறையாது என்பது நிச்சயம்.


subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Wed Feb 04, 2015 9:33 pm

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 12

டேவிட் காப்பர் ஃபீல்டு

மனிதர்களை மகிழ்விப்பதன் மூலமும் வியப்படையச் செய்வதன்மூலமும் அவர்கள் கவனத்தைத் தன் பக்கம் கவரமுடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவர் காப்பர் ஃபீல்டு.
அவர் ஒரு யூதராகப் பிறந்தார், ரஷ்யாவிலிருந்து இஸ்ரேலுக்குக் குடியேறி, பின்னர் மீண்டும் அமெரிக்காவிற்குச் சென்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்.

அவரின் தந்தை துணிக்கடை வைத்திருந்தார், தாய் இன்ஷுரன்ஸ் ஏஜெண்டாகப் பணியாற்றினார்.

நடுத்தரமான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவருக்கு சாதனைகள் படைத்து உலகின் கவனத்தைத் தன் பக்கம் திருப்ப வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

சிறு வயதிலேயே சிறுசிறு மேஜிக்குகளைச் செய்து தன் குடும்பத்தாரையும் நண்பர்களையும் மகிழ்வித்தவர்.

உலகின் தலைசிறந்த மேஜிக் நிபுணர்களில் அவரும் ஒருவராகத் திகழ்கிறார்.

மேஜிக் என்பது டிரிக்குகள்தான் என்பதை அவர் சிறு வயதிலேயே புரிந்து வைத்திருந்தார்.

பள்ளியில் படிக்கும் காலத்தில் அவருக்கு போரடித்த ஓவியப் பாடத்தை நடத்த வந்த ஆசிரியரை தன் மேஜிக் திறமையால் வகுப்பைவிட்டு வெளியே செல்லும்படி செய்தவர்.

வியப்பூட்டுவது மட்டுமே பெரிய விஷயமல்ல, எப்படி அதைச் செய்கிறோம் என்பதை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்பதும் அவர் கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்று.

பாடங்களின்மீது அவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்ததில்லை. புதிய புதிய டிரிக்குகளைக் கண்டுபிடிப்பது, அதைக்கொண்டு நண்பர்களை மகிழ்விப்பது மட்டுமே அவருக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது.

மேஜிக் சம்பந்தப்பட்ட புத்தகங்களை ஆர்வமாகப் படிப்பதோடு, மேஜிக் நிபுணர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களையும் அவர் ஆர்வமாகப் படிக்கத் தொடங்கினார்.

செய்யும் செயலில் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்வது பலரது வழக்கம். ஆனால் ஆர்வமுள்ள துறையே தங்களுக்கு வாய்க்கப் பெற்றவர்கள் அதை மேலும் மெருகேற்றிக் கொள்வது எளிதாக இருக்கும். அதுதான் அவருக்கும் அமைந்தது.

தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலேயே மேஜிக் நிபுணர்கள் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து கோல்டு மெடல் வாங்கிய பெருமையும் அவருக்குக் கிடைத்தது.

காரணம் அவர் ஈடுபட்டிருந்த துறையில் அவர் காட்டிய ஆர்வம், உழைப்பு, அர்ப்பணிப்பு.

மேஜிக் நிபுணர்கள் பலர் இருந்தபோதும் மக்களை அவர் கவர்தற்கு மிக முக்கியக் காரணம் ஒருமுறை செய்ததை அவர் அடுத்தமுறை செய்ய மாட்டார் என்பதுதான்.

எப்போதும் புதிய சிந்தனை, புதிய ஆற்றல் எளிதாக வெற்றியைத் தரும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் அவர்.

ஒருமுறை அமெரிக்காவின் சுதந்திரதேவி சிலையை அவர் சிறிதுநேரம் கண்களில் படாமல் மறைத்துவிட்டார், மக்களின் மனங்களைக் கவர்ந்துவிட்டார்.

சீனப்பெருஞ்சுவரின்மேல் நடந்து பின்னர் பறவைபோல் பறந்து காட்டினார், இன்னும் இதுபோல் பலப்பல நிகழ்ச்சிகளைக் கூறலாம்.

நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் இடம்பெறும் உலகப்புகழடைந்தவர்கள் பற்றிய ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்ற ஒரே மேஜிக் நிபுணர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறு வயதிலிருந்தே ஒரு செயலில் ஆர்வமாக ஈடுபட்டால் அதில் மாபெரும் வெற்றியடையலாம் என்பதற்கு அவர் ஒரு வாழும் உதாரணம். இன்னும் தாஜ்மஹாலை மறைய வைப்பது, நிலவைக் கண்ணிலிருந்து மறைப்பது போன்றவற்றைச் செயல்படுத்த திட்டங்கள் வைத்திருப்பவர்.

அவர் ஒருமுறை தன்னைப் பேட்டி எடுத்தவரிடம், Òநான் மக்களை மகிழ்விக்கும் பணியில் இருப்பவன். அதற்காக நான் இருபத்து நான்கு மணிநேரமும் உழைத்துக்கொண்டே இருந்தாக வேண்டும்Ó என்று கூறினார்.

உண்மைதான், உழைப்பு கடுமையானதாக இருந்தால் உலகில் நாம் பெறும் பலன்களும் அதிகமாகவே இருக்கும்.


subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Wed Feb 04, 2015 9:34 pm

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 13

ராமன் விளைவு தந்த சர். சி.வி. ராமன்

இந்தியாவிற்கே பெருமை சேர்த்த பல மனிதர்கள் உண்டு, அவர்களில் சர். சி.வி. ராமனும் ஒருவர்.

1930ம் ஆண்டு ராமன் விளைவுக்காக அவர் நோபல் பரிசு பெற்று இந¢தியாவைப் பெருமைப்படுத்தினார்.

1888ம் ஆண்டு நவம்பர் மாதம் 7ம் தேதி வேங்கடராமன் சந்திரசேகர், பார்வதி தம்பதியருக்கு மகனாக தஞ்சாவூருக்கு அருகில் உள்ள பாபநாசத்திற்கு அருகேயுள்ள மாங்குடி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.
சிறு வயதாக இருக்கும்போதே கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார். இயற்பியல் மற்றும் கணிதம் இரண்டும் அவரைக் கவர்ந்தன.

விசாகப்பட்டினத்திலும் சென்னையிலும் படித்தார். அரசுக் கல்லூரியில் பயின்ற அவர் முதல் வகுப்பில் எம்.ஏ. படித்து முடித்தார்.

அவரின் தந்தை ஓர் ஆசிரியர் என்பதால் மகனுக்கு அவ்வப்போது அறிவுரைகள் வழங்குவதும், மகன் கேட்கும் சந்தேகங்களுக்குத் தக்க பதில்களை வழங்குவதுமாக தன்னுடைய ஆசிரியப் பணியை வீட்டிலும் சிறப்பாகச் செய்தார்.

பிரிட்டிஷ் விஞ்ஞானியான ராலிபிரபு என்பவர் ஒலி குறித்துக் கூறிய கருத்துகள் ராமனின் மனதில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. அவரின் கல்லூரிப் பேராசிரியரிடம் கேட்டும் அவருக்குத் தக்க பதில் கிடைக்கவில்லை.

அதனால் அவர் மனம் சோர்ந்து போய்விடவில்லை. நாம் நினைத்தது கிடைக்கவில்லை என்று நினைத்து மனம் வருந்துபவர்கள் சாதாரணமானவர்கள், தாங்கள் நினைத்து நடந்தே ஆகவேண்டும் என்று செயல்படுபவர்கள் சாதனையாளர்கள் என்பதை உணர்த்தும் வகையில் அவர் தன்னுடைய சந்தேகத்திற்கு விடை தேடிக் கொண்டே இருந்தார். ஒரு வழியாக அவரின் சந்தேகம் தீர்ந்தது. அதற்கான பதிலை அவரே கண்டுபிடித்துவிட்டிருந்தார். அவரின் ஆசிரியருக்கும் அதுபற்றிக் கூறினார்.  ஒலி பற்றிய கட்டுரையொன்றையும் எழுதி ஆசிரியரிடம் கொடுத்தார்.  சிறிதுகாலத்திற்குப் பிறகு அந்தக் கட்டுரையை அயல்நாட்டுப் பத்திரிகைக்கு அனுப்பிவைத்தார். அது பிரசுரமானது. அதற்குப் பிறகு ஒளி பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையும் அதே இதழில் பிரசுரமானது.

கொல்கத்தாவில் உதவி கணக்குத் தணிக்கை அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். பணி நேரம் போக மீதி நேரத்தில் தன்னுடைய ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.

பல்வேறு கட்டுரைகளை எழுதினார், அவற்றை அயல்நாட்டுப் பத்திரிகைகள் வெளியிட்டன.

ரங்கூனுக்குச் சென்று சிறிதுகாலம் பணிபுரிந்தார். அங்கேயும் அவருடைய ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. பின்னர் மீண்டும் நாகபுரிக்கு பணியிட மாறுதல் கிடைத்தது.

அப்போது பிளேக் நோய் பரவிய சமயம் என்பதால் ஊழியர்களைப் பாதுகாப்பதற்காக தோட்டத்தில் அமைக்கப்பட்ட கூடாரங்களில் அவர்களைத் தங்கவைத்துவிட்டு தானும் அதிலேயே தங்கினார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற பல்கலைக்கழகக் கூட்டு மாநாட்டில் கலந்துகொள்வதற்காகக் கப்பலில் பயணம் செய்தபோது வானத்தின் நீலநிறம் அவர் மனதைக் கொள்ளை கொண்டது.

கொல்கத்தாவிற்குத் திரும்பியதும் ஒளிக்கதிர்கள் பற்றிய தன்னுடைய ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். ஒளி சாதாரணமான வௌ¢ளை நிறத்தில்தான் காணப்படுகிறது, காற்றின் ஊடே செல்லும்போதுதான் அவை பல நிறங்களாகப் பிரிந்துவிடுகின்றன. அதில் உள்ள நீலநிறக் கதிர்களே வானத்திற்கும் கடலுக்கும் நீலநிறத்தைக் கொடுக்கின்றன என்பதைக் கண்டறிந்தார்.

அவருக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்தனர்.

எந்தப் பொருளின் வழியாக ஒளி ஊடுருவிச் செல்கிறதோ அந்தப் பொருளின் அணுக்களால் ஒளிச்சிதைவு ஏற்பட்டு புதிய நிற ஒளிக்கதிர்கள் தோன்றுகின்றன என்ற ராமன் விளைவைக் கண்டறிந்தார். அதற்காக நோபல் பரிசும் பெற்றார்.

நாடு புகழும் சர். சி.வி. ராமன் ஒரு தமிழர் என்பதில் நாம் பெருமைப்படுவதோடு அவரைப்போல் உழைத்துப் புகழ்பெறுவதற்கும் முயல வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 04, 2015 10:33 pm

தங்களின் இந்தப் பதிவுகள் அனைத்தும் அரிய பொக்கிஷங்கள்! அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டும்.

பகிர்வுக்கு நன்றி, மேலும் இதுபோன்ற ஆக்ககரமான பதிவுகளைத் தாருங்கள்!



சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Wed Feb 04, 2015 10:35 pm

சிவா wrote:தங்களின் இந்தப் பதிவுகள் அனைத்தும் அரிய பொக்கிஷங்கள்! அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டும்.

பகிர்வுக்கு நன்றி, மேலும் இதுபோன்ற ஆக்ககரமான பதிவுகளைத் தாருங்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1119136

நிச்சயமாக. தொடர்ந்து 100 வரை எழுதலாம் என்றுதான் தொடங்கியுள்ளேன். தினமும் இல்லாவிட்டாலும் முடிந்தபோதெல்லாம் மொத்தமாகப் பதிவிட்டு விடுவேன். நன்றி நண்பரே

anirudh
anirudh
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Postanirudh Wed Feb 04, 2015 10:39 pm

நன்றி பள்ளியில்  படிக்கும்  மாணவர்களுக்கு  கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் உதவியளிக்கும்  நல்ல நல்ல தலைப்புகள். சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 1 to 24  அம்பிகா சிவம் - Page 3 103459460

subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Thu Feb 05, 2015 3:22 pm

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 14

இந்திரா நூயி

சிலருக்கு வாய்ப்புகள் தானாகவே வருவதுண்டு, மற்றும் சிலர் வாய்ப்புகளைத் தாங்களாகவே ஏற்படுத்திக்கொள்வதுமுண்டு. வந்த வாய்ப்புக்களை சரியான முறையில் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். அதற்கு உதாரணமாகத் திகழ்பவர் இந்திரா நூயி.

சென்னையில் பிறந்து, வளர்ந்து, படித்து சாதனை படைத்த பெண் அவர்.

அவர் பிறந்த காலத்தில் பெண்களுக்குப் படிப்பேது என்ற நிலைதான் இருந்தது என்றாலும், அவர் படிப்பைத் தீவிரமாகக் காதலித்தார். படிப்பால்தான் பல சாதனைகள் புரியமுடியும் என்று நினைத்தார். உண்மையில் சாதனை படைத்தார்.

உலக அளவில் புகழ்பெற்ற பெப்சி நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றுவது அவருக்கு மட்டுமல்ல நம் எல்லோருக்குமே பெருமையான விஷயம்தான்.

வருஷத்திற்கு சுமார் பதினைந்து லட்சம் டாலர்கள் சம்பளம் என்று கூறுகிறார்கள். அவர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு பெப்சியின் விற்பனை அதிகரித்தது.

சென்னையில் படித்து முடித்தவுடனே இந்திரா நூயி தெளிவான இலக்குடன் இருந்தார். அவருடைய குடும்பத்தினர் சற்றே யோசித்தபோதும் கொல்கத்தாவில் ஐ.ஐ.எம்மில் சேர முடிவெடுத்தார்.

இலக்கு தெளிவாக இருந்ததால் பாதையும் சரிவர அமைந்தது.

அவர் நினைத்தபடியே ஐ.ஐ.எம்மில் படித்து முடித்தபிறகு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அது அப்போதைக்குப் பெரிய வாய்ப்புதான். ஆனாலும் அங்கேயே தேங்கியிருக்க அவர் விரும்பவில்லை.

குளம்தான் ஓரிடத்தில் தேங்கி நிற்கும், ஆறு பாய்ந்து செல்லும் என்பதற்கேற்ப அவர் மீண்டும் படிக்கக் கிளம்பிவிட்டார். இரண்டு வருடங்கள் இடைவிடாத படிப்பு. வகுப்பு நேரம் முடிந்து விடுதிக்கு வந்து மற்ற மாணவர்கள் ஜாலியாகப் பொழுதைக் கழிக்கும்போது இவர் மட்டும் மீண்டும் புத்தகமும் கையுமாக அமர்ந்து விடுவார்.

கற்றுக்கொள்தலை மிகவும் விருப்பத்துடன் செய்தார். அதை ஒரு கடமையாக அவர் ஒருபோதும் நினைத்ததில்லை. படிப்பு என்பது தன்னுடைய வாழ்விற்கு ஒரு கவசம் என்று அவர் நினைத்ததுதான் காரணம்.
அவர் சந்தித்த ஒவ்வொரு மனிதரையும் மற்றவரிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் தனித்தன்மை என்ன என்று ஆராய்வது அவரது பொழுதுபோக்காக இருந்தது.

நிர்வாகவியல் படித்ததாலோ என்னவோ அவருக்கு யாரிடமும் எளிதாகப் பழகிவிடும் பழக்கம் இருந்தது. அது அவருக்கு உபயோகமானதாகவும் இருந்தது. பல்வேறு விஷயங்களை அவர் கற்றுக்கொள்ள முடிந்தது.

பின்னாட்களில் மாபெரும் நிறுவனங்களைக் கட்டியாளும் திறன் அவர் வளர்த்துக்கொண்ட பல பண்புகள் சேர்ந்ததுதான்.

மோட்டரோலா, பெப்சி என்று அவர் எந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும் அங்கிருப்பவர்கள் அவரை விரும்பும் அளவிற்கு அவருடைய உழைப்பும் திட்டமிடுதலும் இலக்கும், அதை அடைவதில் இருந்த நேர்த்தியும் கச்சிதமாக இருக்கும்.

முடியாது என்ற சொல் முட்டாள்களின் அகராதியில்தான் இருக்கும் என்று நெப்போலியன் சொன்னதுபோல் இவரும் முடியாது என்று எந்தப் பிரச்சினைக்கும் பதில் கூறுவது கிடையாது.
எதையும் சாதிக்க முடியும் என்பதுதான் அவருடைய தாரக மந்திரமாக விளங்கியது.

உலக அளவில் பல பெரிய பத்திரிகைகள் பெப்சியில் அவர் சேர்வதற்கு முந்தைய நிலையையும், அவர் சேர்ந்தபிறகு ஏற்பட்ட மாற்றங்களையும் எழுதி எழுதிச் சலித்தன.

பெண்களால் சாதிக்க முடியாத துறை ஏதேனும் உள்ளதா என்ன? நிர்வாகத் துறையில் அவரைப்போல் சாதித்த பெண்கள் யாருமில்லை என்று கூறுமளவிற்கு அவர் சாதித்திருந்தார்.

மனிதர்களுடன் மனம் விட்டுப் பேசினால் போதும். பல சாதனைகளைச் செய்து முடித்துவிடலாம் என்று அவர் கூறுவதுண்டு. உண்மைதான். அவருடைய மற்றொரு மந்திரம், போதும் என்று நினைக்காமல் மேலும் மேலும் ஆசைப்படுங்கள், அடைவீர்கள்.


subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Thu Feb 05, 2015 3:24 pm

சாதிக்கப் பிறந்தவர் நீங்கள் - 15

மகாத்மா காந்தி

மனிதனின் இலக்குகளுக்கு ஏற்பவே அவனுடைய வெற்றிகளும் அமையும். தன் தாய்நாட்டின் விடுதலை ஒன்றையே இலக்காகக் கொண்டு அதுவரை எந்த ஒரு நாட்டிலும் இல்லாத புதிய அணுகுமுறையான அகிம்சை முறையில் இந்தியாவிற்கு விடுதலை வாங்கித் தந்து உலகப்புகழ் பெற்றவர் காந்தி.

அவர் விடுதலைப் போராட்டத்தில் மட்டும் ஈடுபடவில்லை, பல்வேறு சுய பரிசோதனைகளையும் செய்து பார்ப்பதற்காக தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்தார்.

அவருடைய சுயசரிதையான சத்திய சோதனையில் அவர் செய்த சிறுசிறு தவறுகளைக்கூட ஒளிவு மறைவில்லாமல் கூறியதிலும் அவர் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்.

அவர் எந்த அரசியல் கட்சிக்கும் தலைவர் கிடையாது, விடுதலைக்குப் பின்பு எந்த ஒரு பதவியையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் அவரின் சிறப்பம்சங்களாக உள்ளன.

எளிய வாழ்க்கை வாழ்ந்தார், அகிம்சை முறையுடன், உண்ணாவிரதம் என்ற ஒரு ஆயுதத்தையும் அவர் ஏந்தினார். அவர் உண்ணாவிரதம் இருக்கப் போகிறார் என்றால் ஆங்கிலேயர்களே பயந்தார்கள்.
வன்முறையை அவர் ஒருபோதும் விரும்பியதில்லை. சாத்வீகமான முறையிலேயே போராடி வெல்ல முடியும் என்று உலகிற்குக் கற்றுக் கொடுத்தவர் அவர்.

குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர் என்ற ஊரில் 1869, அக்டோபர் 2ம் தேதி பிறந்தார். தந்தை கரம்சந்த் காந¢தி, தாய் புத்திலிபாய். போர்பந்தரில் ஆரம்பக்கல்வி பயின்ற அவர் சிறுவயதில் பார்த்த சிரவணன் பித்ரு பக்தி என்ற நாடகமும், சத்ய அரிச்சந்திரன் என்ற நாடகமும் அவரின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டன.

வாழ்நாளின் இறுதிவரை சத்தியத்தின்மேல் உறுதியான நம்பிக்கை வைத்திருந்தார். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே ஆசிரியரே ஒருமுறை தவறு செய்யும்படி வற்புறுத்தியும் அதைச் செய்யமாட்டேன் என்று துணிச்சலாக மறுத்தவர்.

இங்கிலாந்திற்கு பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காகச் சென்றபோது, தன் தாயிடம் மது, மாது, மாமிசம் ஆகியவற்றைத் தொடமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டுப் புறப்பட்டார். அந்த சத்தியத்தை இறுதிவரை காப்பாற்றினார்.

பாரிஸ்டர் பட்டம் பெற்றுத் திரும்பிய அவர் ராஜ்கோட்டில் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டார். பின்னர் தென்னாப்பிரிக்காவில் இருந்த நிறுவனம் ஒன்றின் வழக்கை நடத்துவதற்காக அங்கே சென்றார்.

அங்கே கறுப்பின மக்கள் ஆங்கிலேயர்களால் அடிமைப்பட்டுக் கிடப்பதையும், அல்லலுறுவதையும் கண்ட அவர் அவர்களுக்காக அகிம்சைப் போராட்டத்தைத் தொடங்கினார்.

அங்கே பல வருடங்கள¢ தொடர் போராட்டம் நடத்திவிட்டு இந்தியாவிற்குத் திரும்பினார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போரில் முழுமூச்சாக ஈடுபட்டார்.

பல்வேறு போராட்டங்கள் அவர் தலைமையில் நடைபெற்றன. இந்தியத் தலைவர்கள் அவர் தலைமையை ஏற்று அவருடன் இணைந்து போராடத் தொடங்கினார்கள்.

ஒத்துழையாமை இயக்கம், வௌ¢ளையனே வெளியேறு இயக்கம் போன்றவைகளின்மூலம் ஆங்கிலேய அரசுக்குக் கடும் நெருக்கடியைத் தந்தார்.

யங் இந்தியா என்ற பத்திரிக்கையைத் தொடங்கி அதில் சுதந¢திரம் பெறவேண்டியதன் அவசியத்தைப் பற்றி பல கட்டுரைகள் எழுதினார்.

நாட்டு மக்கள் அனைவரும் அவரை தேசப்பிதாவாக ஏற்றுக் கொண்டனர். தனக்கென்று எந்தவிதமான தனிப்பட்ட ஆசைகளும் இல்லாமல் நாட்டின் உயர்வே தன் உயர்வு என்று பாடுபட்டார்.

அவரின் அகிம்சைப் போராட்டத்தின் பலனாக இந்திய விடுதலை கிடைத்தது. அதன்பின்னரும் இந்தியப் பிரிவினையைக் கண்டு அவர் மனம் வெதும்பியது.

கடைசிவரை நாட்டு மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட காந்தியைப்போல் ஒரே இலக்கு, ஒரே லட்சியம் கொண்டு தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டால் வெற்றி உறுதி.


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 05, 2015 4:39 pm

நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக