புதிய பதிவுகள்
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_m10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10 
73 Posts - 60%
heezulia
"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_m10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_m10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_m10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_m10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_m10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_m10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_m10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_m10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_m10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_m10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10 
73 Posts - 62%
heezulia
"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_m10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10 
29 Posts - 25%
mohamed nizamudeen
"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_m10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_m10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_m10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_m10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_m10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_m10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_m10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_m10"யதார்த்தம் " by Krishnaamma ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"யதார்த்தம் " by Krishnaamma !


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 28 Jan 2015 - 18:04

கொஞ்சம் விசாலமான எண்ணங்கள் கொண்ட பெண் ஜெயஸ்ரீ. தன் அண்ணன் ராகவனுக்கு  கல்யாணம் ஆகி மன்னி வந்து கொஞ்சநாள் அவளுடன் சந்தோஷமாக இருந்துவிட்டுத்தான், தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடித்து அதில் வெற்றியும் கண்டுவிட்டாள். ஆச்சு இதோ கல்யாணமும் நல்லபடி முடிந்து  விட்டது...............மணமகள் கோலத்தில் ராஜி ரொம்பவே அழகாய்  இருந்தாள்.... அன்று பெண் பார்க்க போனபோது முதல் பார்வைலேயே ராஜியை  அனைவருக்கும் ரொம்ப பிடித்து விட்டது.

மேற்கொண்டு பேசலாமா என்று அவள் அப்பா கேட்டதும், ராகவனின் அப்பா கோபால், "என் மாட்டுப்பெண்ணுக்கு   என்ன தேவையோ அது என்னிடம் இருக்கு, உங்க மகளுக்கு நீங்க ஆசையாய் ஏதாவது செய்ய விரும்பினால் செய்யுங்கள்.............கல்யாண சாப்பாடு மட்டும் நன்றாக போடுங்கள் அது தான் உறவுகள் மனங்களில் நெடுநாள் நிற்கும்...வேறு ஒன்றும் வேண்டாம், நிச்சயத்துக்கு நாள் குறியுங்கள்" என்று பட்டு கத்தரித்தது போல சொல்லிவிட்டார்.

பிறகு என்ன, உடனே நிச்சய தார்த்தம் அடுத்ததே கல்யாணம் என்று 'கட கட' வென ஆகிவிட்டது. ராஜியும் புக்ககம் வந்துவிட்டாள். அன்பான கணவன், அருமையான நாத்தனார், பொறுப்பான மாமனார் மாமியார் என்று ரொம்ப சந்தோஷமாக வாழ்கையை துவங்கினாள். எல்லாமே சுகமாய் இருந்தால் நல்லா இருக்காது இல்லையா?

சிம்லாவுக்கு தேன்நிலவு கொண்டாட சென்றவர்கள் திரும்பி வந்தார்கள், அங்கு எடுத்த போடோக்கள் மற்றும் கல்யாணத்தின் போது எடுத்த 2 ரோல்களை பிரிண்ட் போட வேண்டும் என்று எடுத்துக்கொண்டு , நான்  நாளை ஆபீஸ் join  பண்ணனும்,   20 நாட்கள் போனதே தெரியலை என்று சொன்னவாறே கிளம்பினான். அவனுடன் ராஜியும் கிளம்பினாள்,

" இப்படி எல்லாத்துக்கும் கூட கூட கிளம்புகிற வழக்கம் வெச்சுக்காதே".....என்று மாமியார் சொல்லவும், ஒரு நிமிடம் ஆடிப்போனாள் ராஜி..............ராகவனும் சற்று நிதானித்தான்......என்ன ஆச்சு அம்மாவுக்கு ? என்று...ஒரு அசாதாரண அமைதி நிலவியது அங்கு.

அதை கலைத்தாள் ஜெயஸ்ரீ ...." அம்மா நீ கொஞ்சம் சும்மா இரேன், ஆச்சு நாளை முதல் அண்ணா ஆபீஸ் போய்டுவான், அப்புறம் மன்னி இங்கே தானே இருக்க போறா?............நீ போ மன்னி ............." என்றாள்..............

ராஜிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் கணவன் முகத்தையும் மாமியார் முகத்தையும் மாறி மாறி பார்த்தாள்................அதற்குள் அங்கு வந்த கோபாலன்,

" நீ போய்ட்டு  வாம்மா, அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டா, ....ராகவா, கூடிண்டு போ" என்றார்.

அவர்களும் கிளம்பினார்கள்.....அனால் ஒரு சின்ன மன நெருடலுடன்....ராஜிக்கு கொஞ்சம் பயமாய் இருந்தது ஆனால் ராகவன் " அதெல்லாம் ஒன்றுமில்லை கவலைப்படாதே , அம்மா வேற ஏதாவது டென்ஷன் இல் இருந்திருப்பா" என்று சொல்லி, அவளை  சமாதானப்படுத்தினான்.

ராஜியும் யோசித்துப் பார்த்தாள்  , மாமியார்  ஒன்றும் அப்படி 'கெடு பிடி' ஆள் அல்ல ..ஆசை ஆசையாய் தனக்கு எத்தனை நகைகளும் புடவைகளும் வாங்கி போட்டு பார்த்து மகிழ்ந்தவள் தான் ............எனவே ராகவன் சொன்னது போல ஏதோ டென்ஷன் என்று விட்டு விட்டாள்.

அடுத்து வந்த 1 வாரமும் எந்த ப்ரோப்ளேமும் இல்லாமல் போனது, அன்று இவர்கள் கொடுத்த போடோக்களை வாங்கி வருவதாக சொல்லி விட்டு சென்றான் ராகவன். அவன் வரும்போது ரொம்ப சந்தோஷமாய் வந்தான், கை இல் ஒரு மிகப்பெரிய பார்சல். ராஜியும் ஸ்ரீ யும்  ரொம்ப ஆர்வமாய் பிரித்தார்கள். அது  ராகவனும் ராஜியும் சிம்லாவில் , அந்த மலை வாசிகளின் உடைகளை போட்டுக்கொண்டு, இயற்கை பின்னணி இல் எடுத்துக்கொண்ட புகைப்படம்.  

ரொம்ப அழகாக இருந்தது, அதுவும் இவ்வளவு பெரிய படம் 2 feet  by 3 feet ........பார்த்ததும் ராஜி தன்னை மறந்து 'வாவ்' ..ரொம்ப அழகாய் இருக்கு இல்ல"..என்று கை தட்டி குதூகலித்தாள். ஜெயஸ்ரீ யும் அவளுடன் சேர்ந்து கொண்டு, "ஆமாம் இதை அப்படியே ஹாலில் மாட்டிடலாம் " என்று சொல்லி  ஆரவாரம் செய்தாள். சத்தம் கேட்டு வந்த மாமியார் படத்தை பார்த்து விட்டு ஏதோ 'முணு முணு'த்துக்கொண்டே சென்றாள்.....என்றாலும்

" என்னவோ, ஊர்ல உலகத்துல இல்லாத   பொண்டாட்டி இவனுக்குத்தான் இருக்காப்புல  என்ன ஒரு ஆட்டம்? "
என்று லக்ஷ்மி சொன்னது, இவர்கள் காதில்  விழவே செய்தது............ராகவனுக்கும் ராஜிக்கும் முகம் வாடிவிட்டது. இப்போ இதை ஹாலில் மாட்டுவதா வேண்டாமா என்று குழம்பினார்கள்.

பிறகு எதற்கும் அப்பா வரட்டும் என்று நினைத்து, அந்த blow  up  ஐ  அமைதியாக தங்கள் அறையில் வைத்துவிட்டார்கள். இந்த முறை ராகவனுக்கு என்ன சொல்வது எப்படி ராஜி யை சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் திகைத்தான். ஆனால், ஆபத்பாந்தவியாக, மீண்டும் ஜெயஸ்ரீ வந்தாள். அவள் அம்மாவிடம் ஏதோ உரத்த குரலில் பேசியது கேட்டது,

அடுத்து  இங்கும் வந்தாள்..வந்தவள் ராஜி இன் கைகளை பிடித்துக்கொண்டு, " மன்னி, நீ ஒண்ணும் கவலைப்படாதே, அம்மா ஒன்றும் கொடுமைக்காரி   இல்லை, சிலசமையம் இப்படி ஆகிவிடுகிறது.............சரியான சமையம் பார்த்து நான் 'வேப்பிலை' அடிக்கிறேன்..........அப்புறம் மொத்தம் சரியாகிவிடும்...........அது வரை நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ" ........என்றாள் அன்புடன். இருவரும் சம வயது உடையவர்கள் ஆனாலும் ஜெயஸ்ரீ இன் அணுகுமுறை கண்டு பலமுறை ராஜி வியந்திருக்கிறாள்.

அதனால் அவளும் புன்னகைத்தவாறே, " சரி ஸ்ரீ" என்றாள். அதற்குள் அழைப்பு மணி ஒலிக்கவே இருவரும் வாசல் நோக்கி விரைந்தனர். அங்கு ஒரு வாலிபன் நின்று இருந்தான்................ராஜி அவனை பார்த்து, "கிஷோர் வா வா என்று சந்தோஷமாய் "அழைத்தாள்.

கிஷோர் அவளுக்கு தூரத்து சொந்தம் என்றாலும் பக்கத்து வீடு பையன், மேலும் இருவரும் சிறிய வயதிலிருந்து  ஒரே பள்ளிக் கூடம்  . இவளின் கல்யாணத்தின் போது அவன் வெளி  நாட்டில் இருந்தால் வரமுடியாமல் போனது. அது தான் ஊரிலிருந்து வந்ததும்  உடனே இங்கு வந்து விட்டான், இவளை......இவர்களை வாழ்த்த.

அவனுடைய வாய் மட்டுமே இவர்களுடன் பேசிக் கொண்டிருந்து, கண்கள் என்னவோ ஜெயஸ்ரீ யை தேடியது. இதை ராஜியும் கவனித்தாள். அவன் போனதும் கணவனிடமும் சொன்னாள். அவனும் கிஷோர் குறித்து மேலும் விவரங்கள்  கேட்டுக்கொண்டான், ஒருவேளை கிஷோர் விரும்பினால் ஜெயஸ்ரீ யையும் கேட்கலாம் என்று நினைத்து தூங்கி போனான் .

............................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed 28 Jan 2015 - 18:39

அம்மா சூப்பர்
mbalasaravanan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் mbalasaravanan

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 28 Jan 2015 - 19:18

மறுநாளே கிஷோர்  தன் அப்பா அம்மாவுடன் வீடுதேடி பெண் கேட்டு வந்து விட்டனர் . ஜெயஸ்ரீ  யும் சம்மதித்தாள்.  பிறகு என்ன, எல்லோருக்கும் பிடித்து விட்டதால் அடுத்த முஹுர்த்ததிலேயே கல்யாணம் அமைந்தது.  

கல்யாணத்துக்கு வந்த எல்லோரும் லக்ஷ்மி இடம் "மாட்டுப்பெண் வந்த முஹுர்த்தம் தான் இப்படி 'சட்' என்று நல்ல இடம் பொருந்தி வந்திருக்கு" என்று தவறாமல் புகழ்ந்து, சொன்னதை அவள் அவ்வளவாக ரசிக்கவில்லை. இதை ராஜி மற்றும் ஜெயஸ்ரீ கவனித்தனர். ராஜிக்கு கொஞ்சம் கலக்கமாகவே இருந்தது, இத்தனை நாள் ஸ்ரீ கூட ஆதரவாக இருந்தாள்..இனி ????என்று  யோசித்தாள். என்றாலும் கல்யாண
வேலைகளில் மும்முரமானாள்.

ஆச்சு கல்யாணம் முடிந்து 10 நாள் ஆகிவிட்டது, இன்று அவங்க விட்டில் சம்பந்தி விருந்து, நாளை ஸ்ரீ க்கு பிறந்தநாள், எனவே, எல்லோரும் அவர்கள் வீட்டுக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தர்கள். லக்ஷ்மியும்  கோபாலும் தேவையானவைகளை எடுத்துக்கொண்டோமா என்று ஒருமுறை சரி பார்த்துக்கொண்டார்கள்.

மாப்பிள்ளை வீட்டில் விருந்து படு அமர்க்களம், அவர்கள் ஸ்ரீ , ஸ்ரீ என்று மகளை ரொம்ப தாங்கினார்கள். மாமியார் ரொம்ப அனுசரணையாக இருந்ததை பார்த்து லக்ஷ்மிக்கு மஹா திருப்தி. ஏதோ வெளி வேலையாய் மாப்பிள்ளை  கிளம்பினதும்  , " ஸ்ரீ, அவன் வெளியே போறான் பாரு, கூட போ... இங்க வீட்டில் நான் பார்த்துக்கறேன், நீ அவனுக்கு ஹெல்ப் பண்ணு   " என்றாள் சம்பந்தி மாமி மைதிலி.  

" ஒன்றும் இல்லை, அவன் ஆபீஸ் காராளுக்கு ஸ்வீட் காரம் கொடுத்து அனுப்பினேன், இன்னும் 10 - 12 நாள் லீவு இருக்கு, அதுவரை இங்கு பாதுகாத்து  வைத்திருப்பதை விட, இப்போவே கொடுத்து அனுப்பிட்டா நல்லது பாருங்கோ. இவா கல்யாண ஸ்வீட் ஐ எல்லோரும் பொழுதோட சாப்பிடுவா..............ஸ்ரீ யையும் எல்லோரும் பார்த்தாப்புல இருக்கும்..............மொத்தத்தையும் நாமே என் சாப்பிடணும்? 4 பேருக்கு கொடுத்து அவாளும் சாப்பிடட்டுமே என்று தான் அனுப்பி இருக்கேன்" என்றவாறே வந்து அருகில் அமர்ந்தாள் மைதிலி  மாமி.

தவிர்க்க முடியாமல் ராஜிக்கும் லக்ஷ்மிக்கும் அவர்கள் வீடு கலாட்டா நினைவுக்கு வந்தது. மேலும் தொடர்ந்து சொன்னாள், " நாளைக்கு ஸ்ரீ க்கு பிறந்த நாள் போல இருக்கே , அதுதான் பிள்ளையாண்டான் ஏதோ கேக் வெட்டி கொண்டாடணும் என்று சொல்லி இருக்கான், அதுவும் ஸ்ரீ க்கு தெரியாமல் ஏற்பாடு செய்திருக்கான், நீங்க எல்லோரும் இருந்து கேக் வெட்டி கொண்டாடிவிட்டு நாளை போனால் போறும் மாமி "  என்றாள்.

" இது போல சின்ன சின்ன சந்தோஷங்கள் தான் வாழ்கையை சுலபமாக நகர்த்திக்கொண்டு போகும், கல்யாணம் ஆன புதிதில் இப்படி இருப்பது தான் 'charm '............நாளைக்கே குழந்தை என்று வந்து விட்டால், அதுகளுக்காக நாம் நிறைய தியாகங்கள் செய்ய வேண்டி வரும், எனவே, இப்போவே எத்தனை முடியுமோ அத்தனையை செய்துகொள்ள வேண்டியதுதான்".... என்ன நான் சொல்றது என்றாள் மைதிலி மாமி.

லக்ஷ்மிக்கு தலை  கால் புரியலை , என் பெண்ணை என்னைவிட நல்லா பார்த்துப்பா இவா, என்கிற நம்பிக்கை மிகவும் சந்தோஷத்தை தந்தது. இது தானே வேண்டும் ஒரு பெண்ணுக்கு  என்று நினைத்து மனமார பெருமாளுக்கு நன்றி சொன்னாள்.

இரவு விருந்தும் களை கட்டியது, எல்லோரும் தூங்க போனார்கள், மாப்பிள்ளை சொன்னார் கொஞ்சம் இருங்கள் ஒரு புது படம் வாங்கி வந்திருக்கேன் பார்க்கலாம் என்று. கேக் வெட்ட 12 வரை நேரம் கடத்தணுமே? இரவு மணி 11.45 ஆனதும் இதோ வரேன் என்று சொல்லி எழுந்து போனவன் 10 நிமிடத்தில் வந்தான், " ஸ்ரீ என்னுடன் கொஞ்சம் வாயேன்" என்று மனைவியை அழைத்தான், மற்றவர்களையும் சைகையாலேயே கூப்பிட்டான் . அவள் கண்களை பொத்தி நான், உடனே அவள் " என்ன இது? எல்லோரும் இருக்கா"........என்றதும், " இல்லை ஒரே நிமிடம் தான் என்று அவளை மொட்டை மாடிக்கு அழைத்து சென்றான்.....

அங்கு, கேக் தயாராய் இருந்தது, கண்களை  திறந்து பார்த்ததும் ரொம்ப சந்தோஷமாகி "வாவ்! என்று கத்தி விட்டாள் ஸ்ரீ.   எல்லோரும் கைகளை தட்டி ஹாப்பி பர்த்டே பாட அவள் சந்தோஷத்தில் திக்கு முக்காடிப்போனாள் . ஒரு 1/2 மணி அந்த கொண்டாட்டம் நீடித்தது. மாமியார் மாமனார் அம்மா அப்பா அண்ணா மன்னி என்று எல்லோரையும் வணங்கி வாழ்த்துகளையும் அன்பு பரிசுகளையும் பெற்றுக்கொண்டாள் ஸ்ரீ.

கீழே  இறங்க முற்படுகை இல் லக்ஷ்மி தன் பெண்ணை தனியே அழைத்து, பனித்திருந்த தன் கண்களை துடைத்துக்கொண்டே, "ஸ்ரீ, நீ ரொம்ப அதிருஷ்டம் பண்ணி இருக்கே நல்ல கணவன் கிடைக்க , நாங்க ரொம்ப அதிருஷ்டம் பண்ணி இருக்கோம் இப்படிப்பட்ட சம்பந்தி கிடைக்க" என்றாள்...............

இதற்காகவே காத்திருந்த ஸ்ரீ, " இப்படித்தானே மன்னி இன் அப்பா அம்மாவும் சொல்லணும், ஆனால்முடியதே அம்மா" என்றாள்.

துணுக்குற்ற லக்ஷ்மி,' என்னடி சொல்லற? .....நாம நல்லாத்தானே பாத்துக்கறோம் ராஜியை?" என்றாள்.

" பார்த்துக்கறோம் ......இல்லை என்று சொல்லலை.........இன்று என் surprise birthday  partiyai  பார்த்து நீ இவ்வளவு சந்தோஷப்பட்டியே , அன்னைக்கு கடைக்காரன் ஒரு blow  up  free  யா போட்டுக்கொடுத்தான் என்று அண்ணா   வாங்கி வரும்போது என்ன பேசின "?.................என்றாள்.

லக்ஷ்மி யோசித்தாள்.................."மன்னிக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா அம்மா?...............யோசி, மகளை அவ மாமியார் மாப்பிளையுடன் அனுப்பும்போது மகிழ்ந்த மனம், மகன் மருமகளை கூடிக்கொண்டு போகும்போது வருந்துவது  ஏன் ..என்று யோசி என் செல்ல அம்மா" என்றாள்.

லக்ஷ்மிக்கு நிஜமாகவே புரியலை......" அட ஆமாம் இல்ல "?............." ஏண்டி அப்படி செய்தேன்" ? என்றாள் தன் தவறை உணர்ந்து.............தொடர்ந்து " நான் கெட்டவள்ஆடி.... பாவம் அந்த பொண்ணை மனசு நோக அடிச்சுட்டேனோ ?"...." இப்போ என்ன பண்ணறது"?  என்றாள் மகளைப்பார்த்து.

" அம்மா , அம்மா, ஒண்ணும் ஆகிவிடலை மா , இது சின்ன mind  set  தான், நான் விளக்கினால் உ ங்களுக்கு புரிஞ்சுடும்..கேளு..... மகளுக்கு நடக்கும்போது ஒரு தாயாக உங்கள் மனம் அந்த விஷயத்தை பார்க்கிறது, "ஒ...இவர்கள் என்னைவிட என் மகளை நல்லா பார்த்துப்பாங்க " என்று ஆறுதல் கொள்கிறது..............

அதுவே மருமகளுக்கு நடக்கும்போது, தன்னை 'compare ' செய்கிறது........ஆஹா, எனக்கு இதெல்லாம் நடக்கலையே, நான் தலைவலி என்று துடித்தபோது என் கணவர் கண்டுக்கவே இல்லை, இப்போ பார் என் பிள்ளை அவ துளி  என்பதற்குள் ஓடறான்" என்று நினைத்து பொறாமை கொள்கிறது............ அவ்வளவு தான்...................

" நீ compare பண்ணு ஆனால் மன்னி யையும் அண்ணாவையும் , என்னுடனும் இவருடனும் பண்ணு, இதை தன் மகளுக்காக மாப்பிள்ளை  செய்யும்போது, நான் என்ன சொல்வேன் என்று ஒரு நிமிடம் யோசி போறும்....ப்ரோப்ளேம் solved ............என்று கூறி சிரித்தாள் ஸ்ரீ.

லக்ஷ்மிக்கு நன்கு புரிந்தது............சந்தோஷமாய் மகளை  கட்டிக்கொண்டாள். " ஆமாம் ஸ்ரீ, நீ சொல்வது ரொம்ப சரி...பாவம் ராஜி அப்பப்போ மாமியாருக்கு ஏதோ ஆய்டுது என்று பயந்து போய் இருப்பாள்".....என்றாள்.

ஸ்ரீ மேலும் தொடர்ந்து சொன்னாள், "ஆமாம் அம்மா, பாவம் மன்னி ரொம்ப நல்லவள், ....நீ இன்னும் ஒன்றும் புரிந்து கொள்ளணும், மனைவி வந்ததால் தன்னை பிள்ளை ஒதுக்கரானோ என்று நினைக்க கூடாது, நம்மை நம்பி, அம்மா அப்பா சொந்தம் வீடு வாசல் எல்லாம் விட்டு விட்டு நம் வீட்டுக்கு வரும் பெண்ணுக்கு கணவன் தான் முதலில் பழக்கம் ஆவான், அவனைக்கொண்டு தான் அவள் வீட்டில் இருக்கும் மற்றவர்களை புரிந்து கொள்ள முயலணும். அவன் தான் மனைவிக்கும் தன் குடும்பத்துக்குமான பாலம்.

என்னை பொருத்தவரை, honey  moon  அதுக்குத்தான் என்றே சொல்வேன். அந்த நாட்களை பயன்படுத்திக்கொண்டு இருவரும் நிறைய பேசி, எனக்கு இது பிடிக்கும், இது பிடிக்காது துவங்கி, எங்க அம்மா அது சொல்வா, இது சொல்வா, இப்படி நடந்தால் பிடிக்கும்  இது பிடிக்காது, எங்க வீட்டில் இப்படி வழக்கம், வீட்டில் இருக்கும் மற்றவர்களைப்பற்றியும் கொஞ்சம் சொல்லி அவளை தயார் படுத்தணும். honey  moon  முடிந்து அவன் ஆபீஸ் போய்விடுவான், இவள் தானே புது மனிதர்களை எதிர் கொள்ளணும். அதற்கு இந்த பேச்சு ரொம்ப உதவும். ஈஸியாக அவள் இந்த வீட்டுடன் பொருந்த உதவும்.

வேலைக்கு போகும் பெண் ஆனால், வீட்டில் பழகி அவர்களை தெரிந்து கொள்ள நேரம் எடுக்கும். அப்படி இல்லாமல் இப்படி பேசி புரிந்து கொண்டால் , அவளுக்கும் புக்ககம்  சுலபமாய் இருக்கும். கணவன் சொல்லி புக்ககத்து மனிதர்களை பற்றி தெரிந்து அதற்கு ஏற்றார் போல நடப்பது என்பது, ஒற்றைஅடி பாதை இல் நடப்பது போல சுகம் அல்லவா? நாமே பாதை தேடுவதற்கு பதில் இது நல்லதாச்சே? அதே போல அந்த பெண்ணும் தனக்கு படித்தது, பிடிக்காதது என்று ஓபன் ஆக பேசணும்.

இப்படி பரஸ்பரம் புரிந்து கொண்டால் வாழ்க்கை ரொம்ப சந்தொஷமாகிவிடுமே அம்மா .......இன்னும் ஒன்றும் சொல்கிறேன் அம்மா, ஒரு அம்மா தான் எல்லாமுமாகி தன் பிள்ளையை வளர்ப்பாள், அவனின் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்வாள், அவனுடைய பருவ வயது தேவையை பூர்த்தி செய்யவும் தன் வம்சம் வளரவும் 'தானே', வேறு ஒரு பெண்ணை அவனுக்காக கொண்டு வருகிறாள்....அப்படி கொண்டு வந்து விட்டு அவன் ஆவலுடன் இழைகிறான் என்று கோபப்பட்டால் எப்படி அம்மா? "...........என்றாள்.

" நீ என்ன தான் அண்ணாக்கு முக்கியம் என்றாலும் நம் வம்ச வாரிசை கொண்டு வரப்போவது மன்னி தானே அம்மா?...அப்போ நீ கொஞ்சம் விட்டுக்கொடுக்கணும் இல்லையா?..............நீயே பார்த்து கல்யாணம் பண்ணிவைத்துவிட்டு, அவள் முக்கியமா நான் முக்கியமா என்று கேட்டால் பாவம் அவன் என்ன சொல்வான்? :.........என்றாள்.

லக்ஷ்மிக்கு மந்தரித்து விட்டது போல இருந்தது......இத்துனூண்டு இருந்துண்டு என்ன பேச்சு பேசறது? என்று வியந்தாள்.  இனி மகளையும் மருமகளையும் ஒரே மாதிரி நினைக்கணும்.............மகளை பார்த்து பூரிப்பதை போலவே மருமகளைப்பர்த்து பூரிக்கணும்.அதுக்குத்தான் மறு மகள் என்று சொன்னார்களோ என்று நினைத்தவாறே 'புரிந்து விட்டது ஸ்ரீ.... இனி பாரேன்" என்று சொல்லி, " ரொம்ப நேரம் ஆகிவிட்டது, காலை இல் கோவிலில் அபிஷேகத்துக்கு சொல்லி இருக்கு, தூங்கப் போகலாம் " என்ற சொல்லியவாறே கீழே இறங்க முற்பட்டாள் .  

அங்கே அரை இருட்டில் யாரோ பேசி சிரிப்பது  போல இருக்கவே சற்று நிதானித்தாள்...............பார்த்தால், அது ராஜியும் ராகவனும்..............இவர்களை  பார்த்ததும், அவர்கள்  இவர்களை நோக்கி வந்தார்கள்.................அவர்களிடமும் " நாளை கோவிலுக்கு போகணும் அதனால் இன்னும் ரொம்ப நேரம் பேசாமல் சீக்கிரம் கீழே  வாங்கோ........அப்புறம்  அம்மா ராஜி, வீட்டுக்கு போனதும் உங்களுடைய அந்த பெரிய போட்டோ வை எடுத்து ஹாலில் மாட்டிவிடு..ரொம்ப அழகாய் மாறிடும் நம்ப ஹாலே "என்று சொல்லி விட்டு போனால் லக்ஷ்மி.

இதைக்கேட்ட தம்பதிகளுக்கு ஆச்சர்யம் , என்ன ஆச்சு அம்மாக்கு என்று.................ஓடி வந்த ஸ்ரீ சொன்னாள்
" மன்னி அம்மாக்கு வேப்பிலை அடிச்சாச்சு.........விவரமாக அப்புறம் சொல்கிறேன்"...என்று கண்சிமிட்டினாள்.............ராகவனுக்கும் ராஜிக்கும் ரொம்ப சந்தோஷமாய் இருந்தது, ராகவன் ராஜியை அப்படியே தூக்கி சுற்றினான்.............அந்த மொட்டைமாடியே சொர்க்கம் போல தோன்றியது.

கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 28 Jan 2015 - 19:20

mbalasaravanan wrote:அம்மா சூப்பர்

பாக்கியையும் படிச்சுடுங்கோ சரவணன்...மேலும் என்னுடைய 3 கதைகளும் படியுங்கோ புன்னகை
.
.
.
நன்றி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed 28 Jan 2015 - 20:21

யதார்த்தம் - ஒரு நல்ல பதார்த்தம்.. அருமை அம்மா....



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 28 Jan 2015 - 20:25

M.M.SENTHIL wrote:யதார்த்தம் - ஒரு நல்ல பதார்த்தம்.. அருமை அம்மா....
மேற்கோள் செய்த பதிவு: 1117631

ஹா....ஹா....ஹா....இனியவன் போல நீங்களும் 'பதார்த்தம்' என்று சொல்லரீங்க செந்தில் புன்னகை.....................நன்றி செந்தில் ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu 29 Jan 2015 - 5:30

தவறு செய்பவர்கள் பலர் தாங்கள் செய்வது தவறு என்று தெரியாமல் செய்துகொண்டு இருப்பார்கள்.

அருமை
அம்மா கிருஷ்ணம்மா
"யதார்த்தம் " by Krishnaamma ! 3838410834



நேர்மையே பலம்
"யதார்த்தம் " by Krishnaamma ! 5no
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 29 Jan 2015 - 11:29

அகிலன் wrote:தவறு செய்பவர்கள் பலர் தாங்கள் செய்வது தவறு என்று தெரியாமல் செய்துகொண்டு இருப்பார்கள்.

அருமை
அம்மா கிருஷ்ணம்மா
"யதார்த்தம் " by Krishnaamma ! 3838410834

ரொம்ப சரி அகிலன்,...................மிக்க நன்றி ! நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84212
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 29 Jan 2015 - 13:26

"யதார்த்தம் " by Krishnaamma ! 3838410834 "யதார்த்தம் " by Krishnaamma ! 3838410834 "யதார்த்தம் " by Krishnaamma ! 3838410834

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu 29 Jan 2015 - 13:44

தான் பெற்ற பெண்ணையும் மருமகளையும் ஒன்றாக நினைப்பவர்கள் என்னை பொருத்தவரை வணங்கத்தக்கவர்கள்...

அதேபோல் நாத்தனார் அமைவதும் ஒரு மருமகளுக்கு வரமே...

கணவன்,மாமியார்,நாத்தனார் இவர்கள் மூவரும் நல்லவர்களாக அமைந்துவிட்டால் அந்த புதுபெண்ணிற்கு வாழ்க்கையே சொர்க்கம் தான் ....

ஆனால் இதுபோல் சிலருக்கே அமைகிறது...கதை படிக்கும் போது என் பழைய நினைவுகள் என் மனதில் தோன்றுகிறது .....

தான் செய்வது தவறு என்று தெரிந்தும் அதை திருத்திக்கொள்ள மனம் வராது இவர்களுக்கு...என்ன செய்வது...பெண்களுக்கு பிரசவ வேதனையை விட இந்த வேதனை தான் பெரிய மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது...

ஆனால் இன்னொன்றும் தோன்றுகிறது இக்கதையை படிக்கும் போது அம்மா.. நான் மாமியார் என்ற பொறுப்பிற்கு வரும் போது என் மருமகளை என் மகளை போல பாவித்து பார்த்து கொள்ள வேண்டும். அவளும் என்னை தாயாக ஏற்று கொள்ளும் படி நான் நடந்து கொள்ள வேண்டும்...

இதை தினமும் நான் கடவுளிடம் வேண்டுகிறேன்...என் கடினத்தை எல்லாம் நான் என் மகன்கள், மருமகள்கள், பேரன்,பேத்திகளோடு அனுபவிக்கப்போகும் மகிழ்ச்சியில் மறக்க வேண்டும்....

அதற்கு கடவுள் எனக்கு திட மனதை தர வேண்டும் அவ்வளவு காலம் வாழ....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

"யதார்த்தம் " by Krishnaamma ! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக