புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:13

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:36

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 09:17

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 09:15

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 09:14

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 09:13

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 09:12

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 09:11

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 08:59

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 08:45

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 08:45

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 06:53

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 06:48

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 22:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 18:31

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 17:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:07

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:51

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 13:45

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:42

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 13:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 13:35

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:33

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 13:31

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 13:29

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:24

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 08:16

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun 30 Jun 2024, 23:28

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun 30 Jun 2024, 23:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024, 21:26

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024, 20:36

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024, 19:20

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024, 18:52

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024, 12:45

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024, 04:07

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024, 16:58

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024, 11:16

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024, 11:11

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri 28 Jun 2024, 23:08

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024, 17:42

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி! by கிருஷ்ணாம்மா ! Poll_c10நன்றி! by கிருஷ்ணாம்மா ! Poll_m10நன்றி! by கிருஷ்ணாம்மா ! Poll_c10 
32 Posts - 49%
heezulia
நன்றி! by கிருஷ்ணாம்மா ! Poll_c10நன்றி! by கிருஷ்ணாம்மா ! Poll_m10நன்றி! by கிருஷ்ணாம்மா ! Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
நன்றி! by கிருஷ்ணாம்மா ! Poll_c10நன்றி! by கிருஷ்ணாம்மா ! Poll_m10நன்றி! by கிருஷ்ணாம்மா ! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
நன்றி! by கிருஷ்ணாம்மா ! Poll_c10நன்றி! by கிருஷ்ணாம்மா ! Poll_m10நன்றி! by கிருஷ்ணாம்மா ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி! by கிருஷ்ணாம்மா ! Poll_c10நன்றி! by கிருஷ்ணாம்மா ! Poll_m10நன்றி! by கிருஷ்ணாம்மா ! Poll_c10 
32 Posts - 49%
heezulia
நன்றி! by கிருஷ்ணாம்மா ! Poll_c10நன்றி! by கிருஷ்ணாம்மா ! Poll_m10நன்றி! by கிருஷ்ணாம்மா ! Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
நன்றி! by கிருஷ்ணாம்மா ! Poll_c10நன்றி! by கிருஷ்ணாம்மா ! Poll_m10நன்றி! by கிருஷ்ணாம்மா ! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
நன்றி! by கிருஷ்ணாம்மா ! Poll_c10நன்றி! by கிருஷ்ணாம்மா ! Poll_m10நன்றி! by கிருஷ்ணாம்மா ! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி! by கிருஷ்ணாம்மா !


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 26 Jan 2015, 20:07

நீங்கள் அனைவரும் கொடுத்த உற்சாகத்தில் இதோ மற்றும் ஒன்று எழுதிவிட்டேன் ....படித்து கருத்து சொல்லுங்கள் Guest புன்னகை

தூங்கிக்கொண்டிருந்த ஊர்மிளாவிற்கு இடுப்பை வலிப்பது போல இருந்தது, மணி பார்த்தால் இரவு 2. சரி விடியும் வரை பொறுக்கலாம் என்று எண்ணியவாறே படுக்கை இல் கிடந்தாள். வீட்டிலிருந்து 5 கிலோமிட்டர் தான் ஹாஸ்பிடல்..............போவது ஒன்றும் சிரமம் இல்லை. பிள்ளைப்பேறுக்காக   இந்தியா போகாமல் கணவனும் மனைவியும் சௌதிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டார்கள்.  

இங்கு உதவிக்கு யாரும் இல்லை என்றாலும் இந்தியாவிலும் இவர்களுக்கு இதே கதி தான். காதலித்து மணம் புரிந்தாலே இப்படித்தானே? என்று எண்ணி பெருமுச்சு ஒன்றை விட்டாள். வலி அதிகரிப்பது போல இருந்தது. தாள முடியாமல் 'அம்மா' என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்லிவிட்டாள் போல இருக்கிறது. பக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஆனந்த், விழித்துக்கொண்டான்.

"என்ன ஆச்சு ஊர்மி?" என்றான்.

"வலிக்குதுங்க, என்றாலும் இந்த நேரத்தில் வேண்டாம், விடியட்டும் பார்க்கலாம்"....என்று சொல்வதற்குள்ளே மீண்டும் 'பளீர்' என்று ஒரு வலி.

" இல்லை இல்லை ..உன் முகம் சரியாக இல்லை, இந்த ஊரில் என்ன பயம்? வா கிளம்பலாம்" என்று சொல்லி, முகம் கழுவி, ஏற்கனவே தயாராய் வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு, இவளையும் கைத்தாங்கலாய் பிடித்துக்கொண்டு காரை நோக்கி சென்றான்.  

அவளை பத்திரமாய் உட்காரவைத்து விட்டு, தானும் ஏறி காரை ஸ்டார்ட் செய்தான். அந்த இருளில் வெளிச்சத்தை உமிழ்ந்துகொண்டு கார் மெயின் ரோடு இல் சீறிப்பாய்ந்தது. ஏசி இலும், வலியால் வியர்த்து இருந்த மனைவி இன் பக்கம் திரும்பி, " கொஞ்சம் பொறுத்துக்கோ, 5 கிலோ மீட்டர் தான்" என்றான்.

அவளும் கஷ்டத்துடன் புன்னகைக்க முயன்றாள். அந்த விடியற்காலை இல் நிறைய வண்டிகள் கடப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டர்கள். இவ்வளவு காலை இல் என்ன இப்படி என்று. 'உம்ரா' வுக்கு போகிறவர்களுடைய வண்டிகள் இந்த ரோடு இல் செல்வது வழக்கம் தான் என்றாலும், 'இத்தனை காலை இல்' என்று கொஞ்சம் நெருடலாகவே எண்ணினான் ஆனந்த்.

ஒரு 2 கிலோமீட்டர் கூட தாண்டி இருக்க மாட்டார்கள், ஒரு பெரிய குலுக்கலுடன் வண்டி  நின்றுவிட்டது. " அடாடா.... என்ன அச்சு? " என்று சொல்லிக்கொண்டே, ஸ்டார்ட் செய்தான், ஸ்டார்ட் ஆகலை...............கொஞ்சம் பதட்டத்துடன், மீண்டும் ஸ்டார்ட் செய்து பார்த்தான், ஸ்டார்ட் ஆகவில்லை.

அதற்குள் ஊர்மிளா கேட்டாள், " என்னங்க ஆச்சு? " என்று...." தெரியலை, கொஞ்சம் இரு பார்க்கிறேன்".என்று சொல்லி , ஹசாட் போட்டுவிட்டு, வண்டியை விட்டு கீழே இறங்கி பானட்டை திறந்து பார்த்தான்....இவனுக்கு ஒன்றும் பிடிபடலை.

இப்போது என்ன செய்வது? ஊர்மிக்கோ வலி அதிகமாகி விட்டது, தாங்க முடியவில்லை அவளால். அப்போது, சாலைகளில் சென்றுகொண்டிருந்த வண்டிகளில் ஒன்று இவர்கள் வண்டியைத்தாண்டி ஒரு 10 அடி சென்று நின்றது. அதிலிருந்து வெள்ளை நிற 'தோப்' அணிந்த சில இளைஞர்கள் இறங்கினார்கள்; இவர்கள் வண்டியை நோக்கி வந்தார்கள்.

அதைப்பார்த்ததும் ஆனந்த் அவர்களை நெருங்கினான், விவரத்தை அவர்களிடம் விளக்கினான், அவர்கள் சொன்ன விஷயத்தை கேட்டதும், ஊர்மிளாவுக்கு தலை சுற்றியது; அவ்வளவுதான் தான், தன்கணவன் மற்றும் தன் குழந்தை எல்லாம் இன்றோடு முடிந்தோம் என்று நினைத்து மனம் நடுங்கினாள்.

அவர்கள் சொன்னது இது தான், "மன்னர் அப்துல்லா மறைந்துவிட்டார்" ...நாங்கள் என்று
அவர்கள் மேலே சொன்னது எதுவுமே கேட்கலை...இந்த செய்தியே காதுகளில் ரீங்காரம் இட்டது, நம் நாட்டில் தலைவர்கள் மறைவின் போது, மற்றும் கலவர நேரங்களில் நடக்கும் அட்டுழியங்களை அவள் பத்திரிகைகளில் படித்தும் டிவி இல் பார்த்தும் இருக்கிறாள் ........அப்படி ஏதாவது நடந்தால் ..........????? காருடன் தன்னையும் கணவரையும் கொளுத்திவிடுவார்களோ ?............குஜராத் சம்பவம் போல கத்தியால் வயிற்றை கிழித்து நடு ரோட்டில் போட்டுவிடுவார்களோ?.............என்றெல்லாம் எண்ணி மிகவும் பயந்து போனாள்.

செய்வது அறியாது திகைத்தாள்.............இறங்கியவர்கள் தங்கள் காரை நோக்கி வருவதையும் பார்த்தாள். கணவரும் அவர்களுடன் வந்தாலும் இவளுக்கு பயத்தில் எதுவுமே மனதில் மூளை இல் உறைக்கவே இல்லை...........வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அருகில் வந்த ஆனந்த், " ஊர்மி, இறங்கு"........என்றான்.

இவள் உடனே " மாட்டேன்....பயமாய் இருக்கு..என்று திக்கியவாறே சொன்னாள்."

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை ............" என்ன ஆச்சு உனக்கு?  நம் வண்டி நின்று விட்டது, இவர்கள் நம்மை ஹாஸ்பிடலில் கொண்டு விடுவதாக சொல்கிறார்கள்...இறங்குமா" என்றான்.

அவளுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. ஒருவாறாக சுதாதரித்துக்கொண்டு ஏதோ கேட்க வாயை திறந்தாள், ஆனால் அதற்குள் ஒரு இளைஞன் அவர்கள் காரை அருகில் கொண்டு வந்து விடவே, பேசாமல் மெல்ல இறங்கி அதில் ஏறினாள். அவர்களே இவர்களின் பொருட்களை  கொண்டுவந்து அந்த வண்டி இல் வைத்து தந்தார்கள்.  

ஒருவன் மட்டும் காரை  எடுத்தான், மற்றவர்கள் அங்கேயே நின்றுகொண்டார்கள். வண்டி இல் போகும் போதும் ஆனந்த்தும் அந்த இளைஞனும் ஏதோ பேசிய படியே வந்தார்கள்...ஆனால் இவளால் தன் பிரமிப்பிலிருந்து விடுபட முடியலை. 2 நிமிடத்தில் ஹாஸ்பிடல் வந்து விட்டது. இவர்கள் பத்திரமாய் இறங்கியதும், தான் காரை 'பார்க்' செய்து விட்டு வருவதாக சொல்லி சென்றான் அந்த இளைஞன்.

இறங்கியதும் ஊர்மிளா அவனுக்கு கைகளை கூப்பியபடி நன்றி சொன்னாள், கண்களில் நீர் வழிய சரியாக பேசக் கூட முடியலை அவளால். அதற்கு அந்த இளைஞன், புன்னகைத்த வாறே  
"நோ ப்ரோப்ளேம், இன்ஷா அல்லா, எல்லாம் நல்லபடி நடக்கும், கவலை வேண்டாம்" என்றான் ஆங்கிலத்தில்.

இவள்,"உங்கள் பெயர்? "....என்றதும், Sarfaraz  ஸர்பராஸ் என்றான்.

ஊர்மிளா அட்மிட் ஆகும் வரை காத்திருந்து விடை பெற்றான்.

சிறிது நேரத்தில் அழகான ஆண் குழந்தையை பெற்றேடுத்தாள் ஊர்மிளா. நர்ஸ் வந்து குழந்தை இன் பேர் கேட்டதும் ஏதோ சொல்ல வாய் எடுத்த கணவனை தடுத்து Sarfaraz என்றாள். நர்ஸ் சென்றதும், "என்ன ஊர்மி இது? எவ்வளவு நாள் நெட் எல்லாம் தேடி எடுத்த பேரை வெக்காமல்? " என்று ஆச்சர்யத்துடன் கேட்டான் ஆனந்த்.

"ஆமாங்க, தன்னுடைய அரசர், மாமன்னர் மரணத்துக்காக வழிபாடு நடத்த மக்கா போகும் அவர்கள், இடை இல் நமக்காக அதைக்கூட விட்டுக்கொடுத்து, உதவினார்கள் என்றல் அந்த மனித நேயத்துக்கு என்ன கைம்மாறு செய்வது என்று தெரியலை எனக்கு, அது தான் இப்படி செய்தேன். நான் ரொம்ப பயந்து போனேன், நாம் அனைவரும் அவ்வளவுதான் ...முடிந்தோம் .. என்று நினைத்தேன். எவ்வளவு பொறுப்பாக நம்மை இங்கு கொண்டு வந்து சேர்த்தான் அந்த பையன்"...மேலும்  சொன்னாள் " Sarfaraz " என்றால் 'அரசன் ' என்று அர்த்தம், அதனால் தான் அவனுக்குள்ளாகவே அந்த 'காக்கும்' எண்ணம் இருந்திருக்கு .... என்று மனம்  நெகிழ்ந்து சொன்னாள்.

மேலும் தொடர்ந்தாள் " ஒரு காலத்தில் நம் இந்தியாவில், இந்திய மண்ணில் பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வெளி நாட்டிலிருந்து வருவார்களாம். அந்த அளவு புனிதம் நிறைந்ததாக இருந்த நம் நாடு, இப்போது எப்படி ஆகிவிட்டது??? இன்று அந்த புனிதம் எங்கே போனது ?........அந்த புனிதம் கேள்விக்குறி ஆனது போல உணர்கிறேன்.....இந்த மண்ணில் பிள்ளை பெற்றதை நினைத்து ரொம்ப பெருமைப்படுகிறேன்" என்றாள்.

இது எதுவுமே தெரியாத Sarfaraz நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். தன்னுடைய நன்றியை தெரிவித்து விட்ட திருப்தி இல் ஊர்மிளாவும் கண் அயர்ந்தாள்.

கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 26 Jan 2015, 22:14

பெற்றெடுத்த ரெண்டாவதும் முத்தே !அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 26 Jan 2015, 22:24

T.N.Balasubramanian wrote:பெற்றெடுத்த ரெண்டாவதும் முத்தே !அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1117302

மிக்க நன்றி ஐயா, எல்லாம் உங்க ஆசீர்வாதம் புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 26 Jan 2015, 22:50

நன்றி! by கிருஷ்ணாம்மா ! 3838410834 நன்றி! by கிருஷ்ணாம்மா ! 3838410834 நன்றி! by கிருஷ்ணாம்மா ! 3838410834
-
கதை மாந்தரின் போக்கில் மனிதம் போற்றப்படுகிறது...
-
ஆனால் நம் நாட்டில் இன்னும் புனிதம் போய்விடவில்லை....
உடல் உறுப்புகள் தானத்தில் முன்னிலையில் இருப்பது தமிழ்நாடு
-
சௌதியில் வீட்டுவேலைக்கு சென்ற மகளிரின் கதி இதுதான்
பல்வேறு நிகழ்வுகளில்...
-
நன்றி! by கிருஷ்ணாம்மா ! K6mfpAFySa6CgAzgkZe2+index

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 26 Jan 2015, 23:00

நன்றி அண்ணா, என்ன இருந்தாலும் நாட்டின் தலைவர் மாமன்னர்.................மரணித்தபோது, அவர்கள் கடைபிடித்த ஒழுங்கு முறை எங்களை ரொம்பவும் ஆச்சரியப்படுத்தியது, அதன் தாக்கம் தான் இந்த கதை..................எந்த இடத்திலும் ஒரு சிறு அசம்பாவிதமும் நடக்கலை , தெரியுமா ? புன்னகை ......1 நாள் லீவு கூட கிடையாது....................கிரேட்! நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 26 Jan 2015, 23:11

சவுதி அரேபியாவின் மன்னர் ஃபஹத் இப்னு அப்துல் அஜீஸ் அல்-சவூத்
2005ல் காலமான போதும் இதே நடைமுறைதான் கடைப்பிடிக்கப்படிருப்பதாக
அறிய முடிகிறது...
-
அன்றாட வாழ்வில் உண்பது போல்..
உறங்குவது போல்.. உழைப்பதுபோல்..
மரணமும் இயல்பான ஒன்றுதான்
என்னும் இஸ்லாமிய வழிமுறையை
அந்த நாட்டு அரசும் மக்களும் பின்பற்றி
உலகிற்கே ஒரு முன்மாதிரியை
ஏற்படுத்தியுள்ளனர்.

-

இந்திய மக்களுக்கு இதில் ஏராளமான படிப்பினைகள் உண்டு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 26 Jan 2015, 23:18

ayyasamy ram wrote:சவுதி அரேபியாவின் மன்னர் ஃபஹத் இப்னு அப்துல் அஜீஸ் அல்-சவூத்
2005ல் காலமான போதும் இதே நடைமுறைதான் கடைப்பிடிக்கப்படிருப்பதாக
அறிய முடிகிறது...
-
அன்றாட வாழ்வில் உண்பது போல்..
உறங்குவது போல்.. உழைப்பதுபோல்..
மரணமும் இயல்பான ஒன்றுதான்
என்னும் இஸ்லாமிய வழிமுறையை
அந்த நாட்டு அரசும் மக்களும் பின்பற்றி
உலகிற்கே ஒரு முன்மாதிரியை
ஏற்படுத்தியுள்ளனர்.

-

இந்திய மக்களுக்கு இதில் ஏராளமான படிப்பினைகள் உண்டு.
மேற்கோள் செய்த பதிவு: 1117314

ரொம்ப சரி ராம் அண்ணா புன்னகை...............நாங்கள் அப்போதும் இங்கு தான் இருந்தோம் என்றாலும், லீவில் இந்தியா வந்திருந்ததால் தெரியலை புன்னகை .இந்த தாக்கம் அப்போ தெரியலை..............!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon 26 Jan 2015, 23:52

அதெப்படி?
இத்தனை திறமை உங்களுக்குள்ளே இருந்திருக்கிறது.
கதை படிக்கும்போதே கண்கள் பனிக்கிறது.
அத்தனை தத்ருபமாக இருக்கிறது.
கருத்தும் சந்தர்ப்பத்தித்கேற்றதாகவும் சிந்திக்கவும் வைக்கிறது.
சௌதி மன்னரின் மறைவையும்,அந்த நாட்டு மக்களின் மனப்பான்மையும் பதிவு செய்து இருக்கிறீர்கள்.

பாராட்டுக்கள். அம்மா
நன்றி! by கிருஷ்ணாம்மா ! 3838410834 நன்றி! by கிருஷ்ணாம்மா ! 3838410834 நன்றி! by கிருஷ்ணாம்மா ! 3838410834
அடுத்த சிறுகதை எப்போது வெளிவரும்?



நேர்மையே பலம்
நன்றி! by கிருஷ்ணாம்மா ! 5no
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 27 Jan 2015, 00:05

அகிலன் wrote:அதெப்படி?
இத்தனை திறமை உங்களுக்குள்ளே இருந்திருக்கிறது.
கதை படிக்கும்போதே கண்கள் பனிக்கிறது.
அத்தனை தத்ருபமாக இருக்கிறது.
கருத்தும் சந்தர்ப்பத்தித்கேற்றதாகவும் சிந்திக்கவும் வைக்கிறது.
சௌதி மன்னரின் மறைவையும்,அந்த நாட்டு மக்களின் மனப்பான்மையும் பதிவு செய்து இருக்கிறீர்கள்.

பாராட்டுக்கள். அம்மா
நன்றி! by கிருஷ்ணாம்மா ! 3838410834  நன்றி! by கிருஷ்ணாம்மா ! 3838410834  நன்றி! by கிருஷ்ணாம்மா ! 3838410834
அடுத்த சிறுகதை எப்போது வெளிவரும்?

ஹா...ஹா..ஹா.... உங்க பாராட்டுகளுக்கு நன்றி அகிலன் புன்னகை.........மிக்க நன்றி புன்னகை  நன்றி  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்


.....................நிஜமாகவே அன்று காலை நாங்கள் கறிகாய் வாங்க வெளியே சென்று வந்தோம், வந்த பின் தான் நெட் இல் பேப்பர் படிக்கும்போது பார்த்தேன், Arab  news  இல் போட்டிருக்காங்க  ............ரொம்ப ஷாக் ஆகி விட்டது எனக்கு......மன்னர் 1 மாதமாகவே உடல்நலமில்லாமல் இருந்தார், விடியற்காலை  1 மணிக்கே உயிர் பிரிந்து விட்டதாம்...............ஆனால் அப்படி ஒரு அமைதி, சலா நேரம் கூட மாறலை, ஒத்தி வைக்கலை.........ஒரு கடை கூட மூடலை...யாரும் ரோடில் 'கிசு கிசுக்கலை  ' மகா ஆச்சரியம்...............'மக்கா' விற்கு போனார்கள் பிரார்த்தனை செய்ய ....................அந்த தாக்கம் தான் இந்த கதை புன்னகை
.
.
.
அடுத்த  கதையா?.........முயலுகிறேன் நாளை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue 27 Jan 2015, 07:17

சும்மா சொல்லக்கூடாது அக்கா, கற்பனையை நிகழ்காலத்தோடு இணைத்து இப்படி ஒரு கதையை வடித்தெடுத்து எங்களுக்கு தந்துள்ளீர்கள். நன்றியை எப்படி சொல்லுவதென்று தெரியாத இக்காலத்தில் மற்றவர்கள் மண்டையில் நன்றி என்னும் நன்மலர் நிலைக்க வேண்டும் என்பதை உணர்த்திவிட்டீர்கள்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக