புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_m10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10 
87 Posts - 65%
heezulia
சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_m10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_m10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_m10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_m10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10 
3 Posts - 2%
sram_1977
சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_m10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_m10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10 
1 Post - 1%
Shivanya
சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_m10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_m10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10 
423 Posts - 76%
heezulia
சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_m10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_m10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_m10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_m10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10 
8 Posts - 1%
prajai
சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_m10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_m10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_m10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10 
3 Posts - 1%
sram_1977
சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_m10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_m10சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 23, 2015 1:13 am

சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. C9krBTKnTrax7tGN86e7+adithan1

உலகுக்கு ஒளி தரும் பகலவனைப் பொங்கல் வைத்து வழிபட்டத்தைத் தொடர்ந்து மற்றுமொரு வழிபாடும் தை மாதத்தில் வருகிறது. அதுதான் ரத சப்தமி. சூரியன் தெற்கு நோக்கிய தன் பயணத்தை முடித்துக்கொண்டு ரத சப்தமியன்று வடக்கு நோக்கிப் பயணப்படுகிறார்.

அன்று முதல் கதிரோன் தன் ஒளிக்கற்றையின் அளவைச் சிறுகச் சிறுக அதிகரித்து, பூமியின் வெம்மையைக் கூட்டுகிறான். அதைக் குறிக்கும்விதமாகவும் அன்று சூரியனுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. உத்திராயண தை அமாவாசைக்குப் பிறகு வரும் ஏழாவது நாள் ரத சப்தமியாகக் கடைபிடிக்கப்படுகிறது.

ரத சப்தமியன்றுதான் சூரியன் உதித்தார், அவரது ஜெயந்திநாளே ரத சப்தமி என்றும் சொல்லப்படுகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலா வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

சூரியன் உதயம்

சூரியன் அவதரித்தது குறித்து ஒரு கதை உண்டு. காஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி, கர்ப்பம் தரித்திருந்த நேரம் அது. அதிதி தன் கணவனுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள். அப்போது அந்தணர் ஒருவர் யாசகம் கேட்டு வந்தார். நிறைமாத கர்ப்பிணியான அதிதி, தன் கணவனுக்கு உணவு பரிமாறிய பிறகு, தளர் நடையுடன் வந்து அந்தணருக்கு உணவு அளித்தாள்.

அதிதியின் இந்தச் செயலால் அந்தணர் கோபம் கொண்டார். தர்மத்தைப் புறக்கணித்துவிட்டு கர்ப்பத்தைக் காப்பதற்காக அதிதி மெதுவாக நடந்து வந்ததால், அந்தக் கர்ப்பம் கலைந்து போகட்டும் என்று சாபம் இட்டார். அந்தணரின் சாபம் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி, தன் கணவரிடம் நடந்தவற்றைச் சொன்னாள். காஷ்யப முனிவர், அமிர்தம் நிறைந்த உலகில் இருந்து என்றைக்கும் அழிவில்லாத மகன் பிறப்பான் என்று வாக்களித்தார். காஷ்யபரின் வாக்குப்படி ஒளி பொருந்தியவனாக, உலகைக் காக்கும் சூரியன் பிறந்தான்.

விரதமிருக்கும் முறை

ரத சப்தமியன்று நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி சூரிய பகவானை வழிபடுவர். அன்று சூரிய உதயத்துக்கு முன் துயிலெழ வேண்டும். ஏழு எருக்க இலைகளை எடுத்துத் தலை மீது வைத்துக் கொண்டு, ஆண்கள் அதன் மீது சிறிது அட்சதையையும் விபூதியையும் வைத்து கிழக்கு திசை நோக்கி நீராட வேண்டும். பெண்கள் அட்சதையும் மஞ்சளும் வைத்து நீராட வேண்டும்.

இப்படி நீராடுவதன் மூலம் நம் பாவங்கள் அனைத்தும் கரைந்துபோகும் என்பது நம்பிக்கை. பொதுவாகச் சூரிய உதயத்துக்கு முன் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுவது உகந்தது. இயலாதவர்கள் வீட்டிலேயே புனித நீராடலாம். எருக்க இலைகளைத் தலை மீது வைத்து நீராடுவதால் உடல் நலம் காக்கும் என்பது நம்பிக்கை.

நீராடிய பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். தெரிந்த சூரிய துதிகளைச் சொல்லலாம். சூரியனுக்கு அர்க்ய மந்திரம் சொல்லி, நீர்விட வேண்டும். தெரியாதவர்கள், வேதம் படித்தவர்களிடம் உபதேசம் பெற்றுச் செய்யலாம். சூரியனுக்கு உகந்த நிவேதனம் சர்க்கரைப் பொங்கல். வழிபாடு முடிந்த பிறகு சூரிய பகவானுக்குப் படையலிட்ட பொங்கலை அனைவருக்கும் பிரசாதமாக வழங்கலாம்.

பெருமாளின் அம்சமே சூரியன். அதனால் ரத சப்தமியன்று கோயில்களில் பெருமாள் சூரிய பிரபையில் எழுந்தருள்வார். ரத சப்தமியன்று விரதமிருப்பது சிறந்தது.

சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. VrWKiyztSSqwVZoysVZN+suryaprabha-vahanam

அன்றைய தினம் விரதமிருந்தால் நீடித்த ஆயுளும், உடல் நலமும் பெறலாம். ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்துக்குப் பல மடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொழில் தொடங்கினால், விருத்தியடையும். பெண்கள் உயர்நிலையை அடைவர்.

இந்த விரதம் பெண்களின் சுமங்கலித்துவத்தை நீடிக்கச் செய்யும் என்றும் நம்பிக்கை உண்டு.

எருக்க இலையின் மகத்துவம் பீஷ்ம புராணம் மூலம் வியாசரால் மகாபாரதத்தில் விளக்கப்பட்டுள்ளது. ரத சப்தமி, தஞ்சை மாவட்டம் சூரியனார் கோயில், திருமலை ஸ்ரீ நிவாசப் பெருமாள் உள்பட பல ஆலயங்களில் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருமலையின் ஏழு மலைகளை ஏழு குதிரைகளாகப் பாவித்து, ரத சப்தமி விழா கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் ரத சப்தமி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

உலகின் இருள் நீக்கும் பகலவனை வணங்கி, வாழ்வில் ஒளி பெறுவோம். :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தினமணி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 23, 2015 10:26 am

நிறைந்த தகவல்
பங்களிப்புக்கு நன்றி ,கிருஷ்ணம்மா !

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Jan 23, 2015 10:44 am

அம்மா நன்றி இப்படி ஒன்று இருப்பதே நீங்கள் சொல்லி தான் தெரிகிறது நானும் செய்கிறேன் ஆனால் ஒரு சந்தேகம் எருக்க இலை , வெள்ளை எருக்க இலையா அல்லது எந்த எருக்க இலையானாலும் உபயோகிக்கலாமா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 23, 2015 9:13 pm

T.N.Balasubramanian wrote:நிறைந்த தகவல்
பங்களிப்புக்கு நன்றி ,கிருஷ்ணம்மா !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1116768

நன்றி ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 23, 2015 9:15 pm

mbalasaravanan wrote:அம்மா நன்றி இப்படி ஒன்று இருப்பதே நீங்கள் சொல்லி தான் தெரிகிறது நானும் செய்கிறேன் ஆனால் ஒரு சந்தேகம் எருக்க இலை , வெள்ளை எருக்க இலையா  அல்லது எந்த  எருக்க இலையானாலும் உபயோகிக்கலாமா  

வெள்ளெருக்கு தான்  சரவணன்....வரும் 26 ஜனவரி 'ரத சப்தமி' புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
pv.rajsekar
pv.rajsekar
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 30/09/2014

Postpv.rajsekar Sat Jan 24, 2015 3:41 pm

நன்றி கிருஷ்ணாம்மா.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 24, 2015 4:01 pm

சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 25, 2015 1:16 am

நன்றி ராஜ், நன்றி ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 25, 2015 1:17 am

சூரியனுக்கு உகந்த ரத சப்தமி! 26th Jan. EZmKy5GJSz2mTAq88RqT+E_1421828726

'சூரியன் உதிப்பதை பார்ப்பவன் பாக்கியசாலி; பார்க்காதவன் துரதிர்ஷ்டசாலி...' என்பது கிராமத்து சொலவடை. சூரியன் உதிக்கும் முன் எழுந்து, சூரியதோயத்தை தரிசித்து, வணங்கி, தன் கடமையைச் செய்பவனின் வாழ்வில் வெற்றி குவியும். அதனால், அவன் வாழ்வு செழித்து பாக்கியசாலி ஆகிறான்.

11:00 மணி வரை இழுத்துப் போர்த்தி தூங்கி, உழைக்கும் கடமையை மறப்பவன், வாழ்வில், உடலில் பல்வேறு நோய்களும் மற்றும் பணக் கஷ்டங்களும் ஏற்பட்டு துன்பங்களை அனுபவிக்கும் துரதிர்ஷ்டசாலி ஆகிறான்.
இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானோர் இரவு, 11:00 மணிக்கு தூங்கச் செல்வதும், காலை, 8:00 மணிக்கு எழுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அதிலும், சூரியனுக்கே உரித்தான ஞாயிற்றுக்கிழமைகளில், காலையில் எழுவதே இல்லை. இதனால், உடல் மட்டுமல்ல, மனதும் கெட்டுப்போகிறது என்பதை இவர்கள் உணர்வதில்லை.

ராவணனை வெல்வதற்குரிய உத்தியை ராமனுக்கு உபதேசித்த அகத்தியர், 'ராமா... சூரிய குலத்தவனான நீ, சூரிய வழிபாட்டின் மூலமே, ராவணனை எளிதில் வெல்ல முடியும்...' என்று கூறி, சூரியனை வழிபடுவதற்குரிய, 'ஆதித்ய ஹ்ருதயம்' ஸ்லோகங்களை உபதேசித்தார்.

வாழ்வில் வெற்றி வாகை சூட, சூரியனின் தயவு அவசியம். இதனால் தான், நம் முன்னோர் காலை, 4:30 மணிக்கு எழுந்தனர். இதை பிரம்ம முகூர்த்த வேளை என்பர்.

தன் தோழிகளை அதிகாலையிலேயே துயில் எழுப்பி, நீராட செல்வோம் என, அழைக்கிறாள் ஆண்டாள். அதில் ஒரு பாடலில், 'கீழ் வானம் வெள்ளென்று...' என்ற வரிகள் உள்ளது. 'கிழக்கு வெளுத்து விட்டது; புறப்படலாம்...' என்பது இதன் பொருள். இதில், ஒரு மறைபொருள் புதைந்துள்ளது. 'கீழ்வானம்' என்ற ஒன்று இருந்தால், 'மேல் வானம்' என்ற ஒன்றும் இருக்க வேண்டுமல்லவா!

இதிலே, கீழ்வானம் என்பது மனிதர்கள் வசிக்கும் பகுதி; மேல்வானம் என்பது கடவுளின் இடம். கீழே இருப்பவர்களின் மனம் வெளுத்தால் தான், மேலே இருக்கும் கடவுளை அடைய முடியும் என்பதை நமக்கு உணர்த்துகிறாள் ஆண்டாள். சூரிய உதயத்தை கருப்பொருளாக வைத்து, எவ்வளவு பெரிய தத்துவத்தை உதிர்த்திருக்கிறாள் பாருங்கள்.

மனம் வெளுத்திருக்க வேண்டும் என்றால் எப்படி?

ராமனின் பட்டாபிஷேக நாள்... தாய் கவுசல்யா, மகன் பட்டம் சூட்டி மகுடத்துடனும், சகல பரிவாரங்களுடனும் வருவான் என, ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஆனால், மகன் அமைதியாக வந்து தாய் முன் நிற்கிறான்.

'என்னப்பா... முடிசூட்டு விழா நடக்கவில்லையா?' என்று கேட்கிறாள் கவுசல்யா.
'நடந்தது தாயே... எனக்கில்லை, என் தம்பி பரதனுக்கு...' என்கிறான் ராமன்.

'மூத்தவனுக்கு பட்டம் சூட்டுவது தான் வழக்கம். இருப்பினும், முடிசூட்டிக் கொண்டிருக்கிறானே பரதன்... அவன் உன்னை விட மூன்று மடங்கு நற்குணங்கள் பொருந்தியவன், மகா உத்தமன்...' என்று பதிலளித்தாள் அந்தத் தாய்.

எவ்வளவு உயர்ந்த மனது பாருங்கள்! மனமானது இவ்வாறு தான் வெளுத்திருக்க வேண்டும்.
ரதசப்தமி என்றால், சூரியனுக்குரிய திதி. இந்நாளில், சூரியன் தன் பாதையில் மாற்றத்தை உருவாக்கிக் கொள்வார். அன்று, விரதமிருந்து பொங்கல் வைத்தால், நல்ல பலன் கிடைக்கும் என்பதுடன் நின்றுவிடாமல். அதிகாலையில் எழும், நல்ல பழக்கத்தை துவங்கவும், நல்ல மனதுடன் திகழவும் உறுதியெடுக்க வேண்டும். செய்வோமா!

தி.செல்லப்பா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக