புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
’ அ ழை ப் பு ‘
Page 1 of 1 •
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
இந்த காலத்தில் பணம் மட்டும் கையில் இருந்தால், கல்யாணம் செய்வது அவ்வளவு ஒன்றும் கஷ்டமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
பெண்ணைப் பெற்றவரோ, பிள்ளையைப் பெற்றவரோ, யாராக இருந்தாலும் எல்லாவற்றிற்குமே காண்ட்ராக்ட்காரர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு விடுவதால், யாருக்கும் அந்தக்காலம் போல அதிக சிரமம் இல்லாமல் எல்லாம் நல்லபடியாகவே முடிந்து விடுகிறது.
இருப்பினும் கல்யாண அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அவற்றை விநியோகிப்பது என்பது மட்டும், இன்றும் சற்று சிரமமான காரியமாகவே இருப்பதாகத் தெரிகிறது. இது சம்பந்தமாக என் நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவக் கதையை இப்போது பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
என்னுடைய அருமை நண்பரான அவர் அறுபதைத் தாண்டியவர். சமீபத்தில் பணி ஓய்வு பெற்றவர். எதையுமே அழகாக திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் என்று விரும்புபவர். சமீபத்திய உடல் உபாதைகளால், உட்கார்ந்த நிலையில் திட்டமிட மட்டுமே முடிகிறதே தவிர, முன்பு போல சுறுசுறுப்பாக செயலாற்ற முடிவதில்லை, என்று கோயிலில் தினமும் என்னை சந்திக்கும் போது கூறுவார்.
பணம் செலவழிப்பதைப்பற்றி அதிகம் கவலையில்லையாம் அவருக்கு. எதுவும் நிறைவாக, விரைவாக, மனதில் கற்பனை செய்தபடி, நல்லமுறையில் நிறைவேற வேண்டுமாம்.
அவர் மகனுக்கு இன்னும் நான்கே மாதங்களில் திருமணம் என்று நிச்சயமாகி விட்டதாம். அவரால் அழகாக அழைப்பிதழ்கள் எழுதப்பட்டு, மாதிரி அச்சாகி வந்து, அவரால் அது பலமுறை சரிபார்க்கப்பட்டு, ஒருசில பிழைகள் திருத்தப்பட்டு, ஓரிரு மாதங்கள் முன்பாகவே வெகு அழகாகத் தயாராகி, ஓரங்களில் ஈர மஞ்சள்தூள் தீட்டப்பட்ட உறைகளில் திணிக்கப்பட்டு, அவரால் தயார் நிலையில் பூஜை அறையில் வைக்கப்பட்டு விட்டனவாம்.
வெளியூரிலுள்ள உறவினர் மற்றும் நண்பர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களின் தபால் விலாசங்கள் சேகரிக்கப்பட்டு, அவற்றை உறையின் மீது அழகாக எழுதி, நேரில் வந்து அழைத்ததாக பாவித்துக் கொள்ளுமாறு அச்சிடப்பட்ட ஒரு துண்டுக்கடிதம் இணைத்து, தபால் தலைகள் ஒட்டி, தபால் பெட்டியில் அவ்வப்போது சேர்த்துவிட்டு, அனுப்பிய தேதியை, தன் பட்டியலில் சிவப்பு மையால் குறித்தும் வருவதாகச் சொன்னார்.
வெளியூர்காரர்களுக்கு மட்டும் சரியாக ஒண்ணரை மாதம் முன்பே தபாலில் அவரால் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டனவாம். அப்போது தான் அவர்கள் கல்யாணத்திற்கு வந்து போக திட்டமிடவும், ரயில் பயண முன்பதிவுகள் செய்து கொள்ளவும், செளகர்யமாக இருக்கும் என்பதையும், நன்கு திட்டமிட்டே என்னிடம் விளக்கமாக எடுத்துக்கூறினார்.
உள்ளூர்காரர்களுக்கு நேரில் சென்று அழைக்க வேண்டிய அழைப்பிதழ்களை எட்டு திசைகள் வாரியாக தனித்தனியே பட்டியலிட்டு தயார் நிலையில் வைத்துக்கொண்டாராம். தினமும் ஓர் திசையில் ஆட்டோவில் சென்று முடிந்தவரை ஒரு பத்து பேர்களுக்காவது அழைப்பிதழ் கொடுத்து, நேரில் அழைத்து விட்டு வரணும் என்பது அவரின் விருப்பமாம்.
பளபளக்கும் பட்டுப்புடவையுடன், கைகளிலும் கழுத்திலும் நிறைய நகைகள் அணிந்து, சீவி முடித்து சிங்காரித்து, கொண்டையைச்சுற்றி பூச்சூடி,வெள்ளிக் குங்குமச்சிமிழைக் கையிலேந்தி, தன்னுடன் தன் மனைவியையும், பல உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சூறாவளிச் சுற்றுப்பயணமாக அழைத்துப்போகணும் என்பது தான் அவரின் ஆசை என்று சொன்னார்.
ஆனால் அடிக்கும் வெய்யில், அசந்து போயிருக்கும் தன் மனைவியின் உடல்நிலை, அவள் உள்ளத்தில் அவ்வப்போது ஏற்பட்டு மறையும் உற்சாகம் மற்றும் அலுப்பு, அன்றைய தொலைக் காட்சித்தொடர் நாடகங்களின் விறுவிறுப்பான போக்கு முதலியவற்றை ஆராய்ந்து, அன்றைய சிற்றுண்டி, சாப்பாடு, காஃபி, முதலியவற்றை ஓரளவு முடித்துக்கொண்டு, *’அத்திப்பூக்கள்’* முடிந்த கையோடு இவர் தார்க்குச்சி போட ஆரம்பித்தால், எப்படியும் ஒரு வழியாகப்புறப்பட மூணு மணிக்கு மேல் நாலு மணி கூட ஆகிவிடுகிறது, என்று சொல்லி அலுத்துக்கொண்டார்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஆட்டோவில் ஏறி அமர்ந்து, ஒரு நாலு வீடுகள் அழைப்பதற்குள் நாக்குத் தள்ளிப் போய்விடுகிறதாம். ஆட்டோக்காரரின் அவசரம், போக்குவரத்து நெரிசலில் ஆமை அல்லது நத்தை வேகத்தில் நகரும் வண்டிகள், டிராஃபிக் ஜாம் ஆகி சுத்தமாக நகரவே முடியாத வண்டிகள், ஒன்வே ட்ராஃபிக், சிக்னலில் நிற்பது என்னும் பல தொல்லைகள் மட்டுமல்ல. போகும் இடத்திலெல்லாம் அடுக்கு மாடிக்குடியிருப்புக்கள். முதல் மாடி, இரண்டாவது மாடி, மூன்றாவது மாடி என்ற படுத்தல்கள். லிஃப்ட் உள்ள இடங்கள், லிஃப்ட் இல்லாத இடங்கள், லிஃப்ட் இருந்தாலும் மின்வெட்டு மற்றும் இதர ரிப்பேர்களால் இயங்காது என்ற அறிவிப்பு போன்ற நிலைமைகள், பற்றி மிகவும் நகைச்சுவையாகத் தெரிவிப்பார்.
”ஒரே பெயரில் பல அடுக்கு மாடிக்குடியிருப்புக்கள். உதாரணமாக “பாரத் வில்லா”, ”பாரத் எம்பயர்”, ”பாரத் வெஸ்ட் அவென்யூ”, ”பாரத் ஈஸ்ட் அவென்யூ”, “பாரத் கார்டன்ஸ்” என்று பலவிதமான கட்டடப் பெயர்களால் வந்திடும் குழப்பங்கள்;
சுப்ரமணியன் என்றாலோ பாலசுப்ரமணியன் என்றாலோ எல்லா அடுக்கு மாடிகளிலும் யாராவது ஒருத்தர் அதே பெயரில் ஆனால் ஆள் மாறாட்டமாக இருந்து வரும் துரதிஷ்டம்;
ஆங்காங்கே உள்ள வாட்ச்மேன்களின் கெடுபிடிகள், நாய்த்தொல்லைகள், பூட்டியிருக்கும் வீடுகள், திறந்திருந்தாலும் உள்ளே தாளிட்டு லேசில் வந்து கதவைத் திறக்காத நபர்கள், கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்றோ அல்லது ஷாப்பிங் போயோ வீடு திரும்பாமல் இருத்தல் என பல்வேறு சோதனைகள்;
முட்டிக்கால் வலியுடன், ஆயிண்மெண்ட் தடவியபடியே, மகன் கல்யாணம் என்ற மன மகிழ்ச்சியிலும், உடலுக்கு ஒரு தேகப்பயிற்சி தானே என்ற சமாதானத்துடனும், மூச்சு வாங்கியபடி, மாடி மாடியாக ஏறி இறங்கியதில் தினமும் முட்டி வலியும் முழங்கால் வலியும் அதிகமாகி, வீக்கம் கண்டது தான் மிச்சம்” என்றும் நேற்று என்னிடம் கூறினார்.
”வேலை மெனக்கட்டு, பத்திரிக்கை அடித்து, வீடு தேடி வந்து அதை உரியவரிடம் சேர்த்தாலும், மங்கள அக்ஷதைகள் தரையில் சிந்தி யார் கால்களிலாவது குத்தி விடக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையில், முதல் வேலையாக நமக்குத்தெரியாமல் அதனை, நேராகச்சென்று, டஸ்ட் பின்னில் போட்டுவிட்டு, பத்திரிக்கையை கவரிலிருந்து வெளியே எடுக்காமலேயே, ஓர் ஓரமாக அலட்சியமாக வைத்து விட்டு, யாருக்குக் கல்யாணம்? தங்கள் பெண்ணுக்கா அல்லது பிள்ளைக்கா? எந்த இடத்தில் கல்யாணம்? எத்தனாம் தேதி? என்ன கிழமை? எந்த மண்டபம்? எத்தனை மணிக்கு முஹூர்த்தம்? சம்பந்தி யாரு? எந்த ஊரு? எப்படி இந்த இடம் அமைந்தது? எனக்கேள்வி மேல் கேள்வி கேட்டு வறுத்தெடுப்பவர்களும் உண்டு;
பிறகு வீட்டில் வைத்த பத்திரிகையை பல இடங்களில் தேடியும் அது கிடைத்தால் அதைப்படிக்க மூக்குக்கண்ணாடி கிடைக்காமலும், மூக்குக்கண்ணாடி கிடைத்தால் பத்திரிகை கிடைக்காமலும், அலுத்துப்போய், முஹூர்த்த தேதியையும் மறந்து விட்டு, பேசாமல் விட்டு விடுபவர்களும் உண்டு;
’தன் திருமணமாகாத பெண் அல்லது பிள்ளைக்கு பொருத்தமான இடமாக ஏதாவது இருந்தால் சொல்லுங்கோ’ என ஜாதகத்தை ஒரு பிரதி எடுத்துத் தருபவர்களும் உண்டு. ஆட்டோ வெயிட்டிங் என்று சொன்ன பிறகு தான், அரை மனதுடன் ஆளை விடுபவர்கள், இந்த மகானுபாவர்கள்;
வீடு தேடி வந்தவரை இன்முகத்துடன் வரவேற்று, “வாங்க! உட்காருங்க!! ஜில்லுனு தண்ணீர் குடியுங்க!!! என்று சொல்லி மின்விசிறியை சுழலவிட்டு, டிபன், காஃபி, டீ, ஹார்லிக்ஸ், பூஸ்ட், பால், ஜூஸ் எல்லாமே உள்ளது, எது சாப்பிடுவீங்க? என்ன கொண்டு வரலாம்? என்று அன்புடன் கேட்டு உபசரிப்பவர்கள், ஒரு ஐந்து சதவீதம் மட்டுமே;
வெகு சுவாரஸ்யமாக தொலைகாட்சிப் பெட்டியிலேயே தங்கள் கவனத்தை முழுவதுமாக வைத்துக்கொண்டு, ஏதாவது சீரியல்களிலோ, வேறு ஏதாவது நிகழ்ச்சிகளிலோ அல்லது கிரிக்கெட் மேட்ச்சிலோ மூழ்கி இருப்பவர்கள் தான் பலரும் உண்டு;
இடையே வரும் வர்த்தக விளம்பர நேரத்திற்குள் நம்முடன் சுருக்கமாகப்பேசி நம்மை அனுப்பிவிட அவர்கள் துடிப்பதை நாமும் நன்றாகவே உணர முடியும்” என்று இன்று அவர் ஒரு பெரிய பிரசங்கமே நிகழ்த்தியது எனக்கு மிகுந்த சுவாரஸ்யமாக இருந்தது.

”நல்ல தூக்கத்திலிருந்து எழுந்து வந்து, தூக்கமும் கலையாமல், போதை ஏற்றியவர் போல, அரைத்தூக்கத்தில் தள்ளாடியவாறே, நம்மைப்பார்த்து தலையை மட்டும் ஆட்டி வரவேற்பவர்களும் உண்டு. இவர்களின் இந்தச் செயல் எதற்காக இங்கு அனாவஸ்யமாக இப்போது, வேகாத வெய்யிலில் நீங்களும் தூங்காமல், எங்களையும் தூங்க விடாமல், வந்துள்ளீர்கள்? என்று நம்மிடம் கேட்காமல் கேட்பது போல நமக்குத் தோன்றும்;
காலிங் பெல்லை அழுத்தியும், கதவிடுக்கு வழியே வந்து எட்டிப்பார்த்து கதவைத் திறக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கவே கால் மணி நேரமாவது ஆக்குபவர்களே அதிகம். என்ன செய்வது? அவரவருக்கு ஆயிரம் பிரச்சனைகள்; கசப்பான அனுபவங்கள்; கொலை, கொள்ளை, தீவிரவாதம் என பல்வேறு தினசரி பத்திரிக்கைச் செய்திகள் வேறு;
அப்படித்தான் நேற்று ஒருவர் வீட்டுக்குச்சென்றிருந்தேன். நான் பார்க்க வேண்டிய நபரே நல்லவேளையாக வீட்டில் சும்மாத்தான் அமர்ந்திருந்தார். ”வாங்க சார்! ஏது இவ்வளவு தூரம்” என்று சொல்லி சிரித்தபடியே அமரச்சொன்னார். எனக்கு ஒரே மகிழ்ச்சி;
அவர் ஒரு காலத்தில் என்னிடம் கடைநிலை ஊழியராகச் சேர்ந்தவர் தான். பிறகு பல சைடு பிஸினஸ்களில் இறங்கி, அதிர்ஷ்டக்காற்று அவர் பக்கம் தொடர்ந்து அடித்ததில், அந்த எங்கள் அலுவலக வேலையையே ராஜிநாமா செய்துவிட்டு, இன்று பெரிய தொழிலதிபராகி பலருக்கும் தானே வேலைவாய்ப்பு அளிக்கும் பாக்யம் பெற்றவராகவும், ஊரில் முக்கியப்புள்ளியாகவும், அரிமா சங்கத்தில் ஓர் சிங்கமாகவும் உள்ளார்;
சந்தோஷமாக பேச ஆரம்பித்தேன். ஒரிரு வார்த்தைகள் நான் பேசுவதற்குள், அவர் மேஜை மேல் இருந்த 4 கைபேசிகளும், 2 லேண்ட்லைன் போன்களும் மாற்றி மாற்றி அடிக்க ஆரம்பிக்க, அவரும் யார் யாருடனோ என்னென்னவோ பிஸினஸ் விஷயமாகப் பேச ஆரம்பித்து விட்டார்.
நான் ஒருவன் அவரைப்பார்த்துப் பேச நேரில் வந்திருக்கிறேன் என்பதையே அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஏதோ கோவில் கும்பாபிஷேகத்திற்கு டொனேஷன் கேட்க வந்திருக்கிறேன் என்று நினைத்து விட்டாரோ என்ற சந்தேகம் எனக்கு எழுந்தது;
பொறுமை இழந்த நான், கடைசியில் பத்திரிகையை அவர் கையில் ஒருவழியாகத் திணித்து விட்டு புறப்படத்தயாரானேன். அவரும் போனில் பேசுவதை சற்றும் நிறுத்தாமல், தலையை மட்டும் ஒரே ஆட்டாக ஆட்டி டாட்டா சொல்லி அனுப்பி விட்டார்;
நான் கொடுத்த பத்திரிகையின் மேல், சூட்டோடு சூடாக அவர், ஏதேதோ போனில் வரும் தகவல்களைக் கிறுக்கவும் ஆரம்பித்தது தான், என்னை என்னவோ மிகவும் சங்கடப்படுத்தியது;
அன்று அப்படித்தான், ஒரு பத்து பேர்களை சந்திக்கச் சென்றதில் நான்கு வீடுகள் பூட்டியிருந்தன. ஒருவர் வீட்டில் வேலைக்காரர்கள் மட்டுமே. மற்றொருவர் வீட்டில் தோட்டக்காரர் மட்டுமே. வேறொருவர் வீட்டில் முன்பின் பார்த்த ஞாபகமே இல்லாத யாரோ ஒருத்தி மட்டும், சற்றே மாநிறமாகத் தென் பட்டாள்;
அந்த வீட்டில் இருக்க வேண்டிய, நான் தேடி வந்த நபர் ஒரு முருக பக்தர். சற்றே வில்லங்கமான ஆசாமி தான். அவருக்கு வள்ளி தெய்வானை போல இரண்டு மனைவிகள்; அதுவும் ஒரே வீட்டில் ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர். மூத்த சம்சாரம் சற்று குண்டாகவும் கருப்பாகவும், இளைய சம்சாரம் நல்ல ஒல்லியாகவும் சிகப்பாகவும் இருப்பார்கள்;
ஒரே வீட்டில் அதுவும் இரண்டு சம்சாரங்களுடன் என்பதில் எனக்குப் பல நாட்களாக ஒரே வியப்பாகவே இருந்து வந்தது. அவரிடமே இதுபற்றி ஒருமுறை கேட்டு விட்டேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே “எல்லாம் அந்த முருகன் செயல், சாமி; அவன் ஆட்டுவித்தலுக்கு தகுந்தபடி நாம் ஆடுகிறோம்” என்று சொல்லி மழுப்பி விட்டார். நன்கு அறிமுகம் உள்ள அந்த வீட்டுக்காரர் எங்கே? என்று நான் கேட்டதும் வெளியூர் பயணம் சென்றிருப்பதாகச் சொல்லி, இந்த மாநிறமாக உள்ள புதிய பெண்மணி என்னிடம் ஏதோ சமாளிப்பதை என்னால் நன்கு உணர முடிந்தது;
வீட்டில் உள்ள இவள் அவரின் மூத்த சம்சாரமோ அல்லது இளைய சம்சாரமோ இல்லை என்பது எனக்கு நன்றாகவே புரிகிறது. அப்படியென்றால் புதுமுகமான இவள் யார்? ஆசை நாயகியா, கொழுந்தியாளா, அல்லது வீட்டுக்கு விருந்தாளியாக வந்துள்ள ஏதாவது உறவினரா என ஒன்றுமே புரியாமல், கேட்கவும் முடியாமல், நான் விடை பெற்று வரவேண்டியதானது;
நான்கு மணி நேரம் செலவழித்து, ஆட்டோவுக்கு சுளையாக ஐநூறு ரூபாய் தந்தது தான் மிச்சம். வெட்டி அலைச்சல். பேசாமல் தொலைபேசி மூலம் பேசி, விலாசம் வாங்கி, அஞ்சலில் அனுப்பியிருந்தால் கூட நூறு ரூபாய் செலவுடன் முடிந்திருக்கும்;
என்ன செய்வது, மகன் கல்யாணம் என்பது, நீண்ட நாட்களுக்குப்பின் எனக்கு ஏற்படும் சந்தோஷமான ’முதல் அனுபவம்’ அல்லவா” என்று சொல்லி அவரின் ’அழைப்பு’ அனுபவங்கள் அத்தனையும், என்னுடன் கோயிலில் அன்றாடம் பகிர்ந்து கொண்டு மிகவும் ஜாலியாக உற்சாகமாகவே இருந்து வந்தார்.
கடந்த ஒரு மாதமாக இதுபோல அவரின் சுவையுடன் கூடிய அன்றாட அனுபவச் சொற்பொழிவுகளைக் கேட்க வேண்டியே, நான் அந்தக் கோயிலின், தனிமைப் பகுதியில் உள்ள சிறிய திண்ணைக்கு முன்கூட்டியே சென்று அவருக்கும் சேர்த்து இடம் போட்டு விடுவதுண்டு.
அழைப்பிதழ் கொடுப்பதில் இவ்வளவு தொல்லைகள் இருப்பினும் நேரில் சென்று பலரையும் சந்தித்து, நேரில் அழைப்பிதழ் கொடுப்பது போல வருமா? என்று நினைத்துக் கொண்டவர், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனாக தொடர்ந்து பயணப்பட்டு, பலருக்கும் அழைப்பிதழ்கள் வைக்க ஆவலுடன் சென்று வரலானார்.
தன்னுடன் வேலை பார்த்து தன்னைப்போலவே பணி ஓய்வு பெற்ற சக வயது நண்பர்களைச் சந்திப்பதிலும், அவர்களின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்வதிலும், அவருக்கு ஒரு தனி மகிழ்ச்சி இருக்கும் தானே!
திருமண நாளும் வந்தது. என்னை முதல் நாள் சாயங்காலமே நிச்சயதார்த்தம், மாப்பிள்ளை அழைப்பு முதலியவற்றிற்கே வந்து விடச் சொல்லியிருந்தார். முதல் நாள், வேறு ஒரு திருமண வைபவத்தில் நான் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், மறுநாள் காலையில், இவர் அழைத்தத் திருமண மண்டபத்தில் ஆஜராகி விட்டேன்.

திருமண மண்டபத்தில் ஒரே கூட்டம். அழைப்பிதழ் கிடைக்கப்பெற்ற அனைவரும் வந்திருந்தனர். வரவேற்பாளர்கள் நீட்டிய கல்கண்டு, சந்தனம், சர்க்கரை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர். நானும் நுழைந்தேன். உள்ளே நுழையுமிடத்தில் பன்னீர் தெளித்ததோடு அல்லாமல், அருமையான ரோஜாப்பூக்கள் நறுமணத்துடன் கூடிய, சுகந்தமான காற்று நம் மீது சுழன்று அடிப்பதுபோல, செண்ட் ஸ்ப்ரேயர் அமைந்திருந்தது என் மனதை மயக்கியது.
உள்ளே மண்டபம் முழுவதுமே குளிர் சாதன வசதிகள் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் அங்கு கூடியுள்ள கும்பலால் மின்விசிறிகளின் காற்றும் தேவைபட்டது. என்னுடன் மண்டபத்துக்குள் நுழைந்தவர்கள் பலரும் சற்று நேரம் சுழலும் மின் விசிறிகளுக்குக் கீழே போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்தனர். நானும் அமர்ந்தேன்.
பிறகு பலரும் விருந்து [டிஃபன்] பரிமாறப்படுவது எங்கே எனக்கேட்டு அங்கு போய் வந்து கொண்டிருந்தனர். டிஃபன் சாப்பிட்டவர்களில் சிலர், தாங்கள் வந்த காரியம் அத்துடன் முடிந்து விட்டதாக நினைத்து, அவர்களுக்குள்ள அடுத்த அவசரக் காரியங்கள் காரணமாக மேடை ஏறினர். போட்டோ வீடியோக்களில் தங்களின் வரவைப் பதிவு செய்து கொண்டனர். ஏதேதோ அன்பளிப்புகள், மொய்ப்பணங்கள் என்று சிலர், புதுமண ஜோடியை சந்தித்து வாழ்த்திக் கொடுத்தால் நேரமாகிவிடும் என்று கணக்குப்போட்டு, வேறு யாரிடமோ பொறுப்பாக ஒப்படைத்துக் கொண்டிருந்தனர்.
புதுமணத் தம்பதியையோ, மற்ற உறவினர்களையோ வந்தவர்களுக்கு அதிக அறிமுகம் இல்லை. அதனால் அவர்களுக்குள்ளேயே சிறுசிறு கும்பலாக அமர்ந்துகொண்டு, ஏதேதோ சிரித்துக்கொண்டும், ஊர் வம்புகள், அரசியல் முதலியன பேசிக்கொண்டும் ஒரே மகிழ்ச்சியாக இருந்தனர்.
பெரும்பாலான பெண்களின் பேச்சுக்கள் பொதுவாக அவர்களின் பட்டுப்புடவைகள், மேட்ச் ப்ளெளஸ், மின்னும் வைரத்தோடு மூக்குத்திகள், மற்ற நகைகள், நெக்லஸ், மற்றும் டி.வி. சீரியல்கள் பற்றியே இருந்து வந்தன.
என்னை ஏதோ மிகவும் தெரிந்தது போல புதிதாக வருகை புரியும் ஒருசிலர், வணக்கம் கூறிச்சென்று கொண்டிருந்தனர். நானும் பதில் வணக்கம் தெரிவித்துக் கொண்டிருந்தேன்.
இருப்பினும், ஒரு மரியாதை நிமித்தமாக, பத்திரிகை அளித்து அழைத்த, அந்தப்பெரியவரை சந்திக்கவும், கை குலுக்கவும், “கல்யாணம் நல்லபடியாக முடிந்ததா? புதுமருமகள் வந்தாளா?” என விசாரித்து விட்டுக் கிளம்பவும் பெரும்பாலான ஆண்களின் கண்கள் அந்தப் பெரியவரையே தேடிக்கொண்டிருந்தன.
நானும் வந்ததிலிருந்து அவரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆளைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. மேடையில் இருப்பார் என்று பார்த்தேன். சம்பந்திகள் அறைகளில் இருப்பார் என்று பார்த்தேன். விருந்து உபசாரம் செய்யும் இடத்தில் இருப்பார் என்று பார்த்தேன். பாத்ரூம் பக்கம் எங்காவது போய் இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் இதுவரை அவர் என் கண்ணிலேயே படாதது எனக்கும் ஆச்சர்யமாக இருந்தது.
பொறுமை இழந்த நான் மெதுவாக மேடைக்குச்சென்று, என் நண்பரின் மனைவியிடம் போய், ”சார் எங்கே” என்றேன்.
”வாங்கோ, வாங்கோ, நல்ல நேரத்தில் தான் வந்திருக்கிறீங்க! இங்கே மேடைக்குப்பின்னால் உள்ள மணமகன் அறையில் தான் இருக்கிறார். எங்க பிறந்தாத்து மனுஷ்யாளைக் கண்டாலே, உங்க சாருக்கு ரொம்பவும் இளக்காரமாகத்தான் உள்ளது;
எனக்கு பிறந்தாத்து (பிறந்தாத்து = பிறந்தவீட்டு) மனுஷான்னு இன்னித்தேதியிலே இருப்பது கருவேப்பிலை கொத்து போல ஒரே ஒரு அண்ணா, மன்னி (மன்னி = அண்ணி). இருவருமே எங்க ஆத்துக்காரரை விட வயதில் பெரியவர்கள். ஊர் பூராவும் போய் அழைத்தாரே மனுஷன் ... எங்க அண்ணா மன்னியை நேரில் போய் அழைக்கணும்னு தோனலையே, இந்த மனுஷனுக்கு;
’எட்டாக்கையிலே இருக்கா, அதுனாலே தபாலிலே அழைப்பிதழ் அனுப்பி வைக்கிறேன், நீயும் நானும் போன் செய்து பேசிவிடுவோம்னு’ சொன்னார்;
எங்க அண்ணாவுக்கும் இவருக்கும் எப்போதுமே, எதிலேயுமே ஒத்துப்போகாது என்பதனால் நானும் சரியென்று தலையை ஆட்டிவிட்டேன். இப்போ எங்க அண்ணா நேரில் புறப்பட்டு வந்து கத்தோ கத்துன்னு கத்தறான்.
இரண்டு பேருக்கும் விடியற்காலையிலிருந்து ஒரே வாக்கு வாதம். தயவுசெய்து நீங்க போய் கொஞ்சம் சமாதானப்படுத்திக் கூட்டிண்டு வாங்கோ சீக்கரமா. எனக்கு இங்கே மேடையிலே பல காரியங்கள் அடுத்தடுத்து இருக்கு. சாஸ்திரிகள் வேறு காசி யாத்திரைக்கு நேரம் ஆச்சுன்னு பறக்க அடிக்கிறார், ஊஞ்சலுக்கு பச்சப்பொடி சுத்தணும், பாலும் பழமும் கொடுக்கணும், அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை நான் பார்க்கணும். எனக்கு இப்போக் கையும் ஓடலே காலும் ஓடலே” என்றாள் அந்த அம்மா.
நேராக நான் மணமகன் வீட்டாருக்கென்று ஒதுக்கப்பட்ட அந்த மேடை அருகே இருந்த ரூமுக்குள் போனேன்.
”என்ன ஸ்வாமி உம்மை எங்கேயுமே காணுமேன்னு தேடிண்டு இருக்கேன். இங்க என்ன பண்றேள்? ஆமாம் இந்த ஸார் யாரு?” என்றேன்.
”இந்த ஸார் தான், என் மச்சினர். மும்பையிலிருந்து என்னுடன் சண்டை போட மட்டுமே, ப்ளேன் பிடித்து வந்திருக்கிறார்;
நீரே நியாயத்தைச் சொல்லும்; நானும், இவர் தங்கையும் இப்போது இருக்கும் உடம்பு நிலையில், மும்பைக்கு நேரில் இவர் வீட்டுக்குப்போய் பத்திரிக்கை கொடுத்து அழைத்து வர முடியுமா?
சொன்னால் புரிந்து கொள்ளாமல் மிகவும் கோபமாக இருக்கிறார். சுபகார்யங்கள் நல்லபடியாக அடுத்தடுத்து நடக்கணுமேன்னு எனக்கு ஒரே கவலையா இருக்கு” என்றார்.
அவரின் மச்சினர் வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டு சுவற்றைப் பார்த்தபடி, எங்கள் பக்கம் முதுகைக் காட்டியபடி அமர்ந்திருந்தார். கோபத்தின் உச்சக்கட்டம் போலிருக்கு. அதுவும் நன்மைக்கே என்று நினைத்த நான், என் நண்பரைப் பார்த்து, கண்ணடித்து விட்டு பேசலானேன்.
“என்ன இருந்தாலும் சொந்த மச்சினர். மனைவியோடு கூடப்பிறந்த ஒரே அண்ணா. உம்ம பையனுக்கு, ஊஞ்சலுக்கு மாலை எடுத்துத் தரவேண்டிய சொந்தத் தாய் மாமா; அவர் சொல்வதில் என்ன தப்பு இருக்கு?
இங்கே இருக்கிற மும்பைக்குப் போய் நேரில் அழைக்காமல் விட்டது நீர் செய்த மிகப்பெரிய தப்பு ஸ்வாமி ...... சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீரும் ...... நீர் செய்தது மிகவும் அயோக்யத்தனம்;
மனசு இருந்தால் நீங்களும் மாமியும் ப்ளேன் பிடித்துப்போய் ஒரே நாளில் அழைத்து விட்டுத் திரும்பியிருக்கலாம். மும்பை என்ன, வெளிநாடா! பாஸ்போர்ட் விசா எல்லாம் வாங்கணுமேன்னு கவலைப்படுவதற்கு. ப்ளேன் ஏறினால் இங்கிருந்து ஒரு மணி நேரப்பயணம். என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நானே உங்களுடன் மும்பை வரை துணைக்கு கூட வந்திருப்பேன்;
நான் மட்டும் உங்கள் மச்சினராக, இந்த ஸாரோட நிலைமையில் இருந்திருந்தால், நடக்கிறதே வேறு; நேரில் வந்து அழைக்காத இந்தக் கல்யாணத்திற்கு வந்திருக்கவே மாட்டேன்;
ஏதோ இருந்து இருந்து இருப்பதே ஒரே ஒரு மறுமான் (மறுமான்=சகோதரியின் பிள்ளை) அவனுக்குக் கல்யாணம்; நாம் போய் கலந்து கொள்ளாவிட்டால் நன்றாக இருக்காது, என்று பெரிய மனசு பண்ணி, ஸார் வந்திருக்கிறார், தெரியுமா?” என்று சற்றே உரத்த குரலில் கூறினேன்.

இதைக்கேட்டதும், சுவற்றைப்பார்த்து உட்கார்ந்திருந்தவர் எழுந்து என்னை நோக்கினார். என்னிடம் வந்து என் கையைப் பிடித்துக் குலுக்கினார்.
உடனே நான் அவரிடம் “ஸார், உங்கள் தங்கைக்கும், இவருக்கும் முன்பு போல உடல்நிலை தெம்பாக இல்லை. டாக்டர் ஃபுல் ரெஸ்ட் எடுத்துக்கச் சொல்லியிருக்கிறார். மற்றபடி நேரில் வந்து “அழைப்பு” தரக்கூடாது என்ற எண்ணமெல்லாம் இவர்களுக்கு இல்லை. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். அவர்களை எனக்காகவாவது மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்து விட்டேன்.
இதுபோன்ற நெருக்கடிகளில், டோட்டல் சரணாகதி ஒன்றுதான் கைகொடுக்கும் என்பது என்னுடைய அனுபவம்.
மனிதன் உடனே கோபம் தணிந்து, மனமிறங்கிப் போய், காலில் விழுந்து நமஸ்கரித்த என்னை அப்படியே தூக்கி நிறுத்தி கட்டித் தழுவிக் கொண்டார்.
சரணாகதி அடைந்த விபீஷணனை ஸ்ரீராமர் கட்டித்தழுவிக்கொண்டார் என்பார்களே, அது போலத்தான் இதுவும்.
“போயும் போயும் இந்த என் தங்கை வீட்டுக்காரருக்கு நீங்கள் நண்பராக இருப்பினும், நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க! எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சுருக்கு ஸார்; அவருக்காக இல்லாவிட்டாலும், உங்களுக்காக மட்டுமே, நான் என்னை நேரில் வந்து அழைக்காததை, இந்த நிமிஷத்திலிருந்து பெரிதாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை. நான் இப்போது என்ன செய்யணும்னு சொல்லுங்கோ?” என்றார்.
”காசியாத்திரைக்கு கிளம்பப் பையனுக்கு பஞ்சக்கச்சம் கட்டிக்கொண்டு இருக்கார் சாஸ்திரிகள். சீக்கரம் வாங்கோ, தாய்மாமாவாகிய நீங்கள் தான் மாப்பிள்ளைப் பையனுக்கு, உங்கள் கையால் முதல் மாலைபோட்டு ஜம்முனு அலங்காரமெல்லாம் செய்து, குடை, தடி, விசிறி, புஸ்தக ஸஹிதம் அவனைக் கிளப்பிக் கூட்டிண்டு போய், அவன் நேராக காசிக்கே போய் விடாமல் தடுத்துக் கூட்டிவந்து, மாப்பிள்ளையும் பெண்ணும் மாலை மாற்றிக்கொள்ள மாலை எடுத்துக்கொடுத்து, பிறகு உங்கள் தோள் மேல் அவனை உட்கார வைத்துக் கொண்டு, குதித்து கும்மாளம் அடிக்கணும் ஸ்வாமி, உடனே என்னுடன் புறப்பட்டு வாரும்” என்றேன்.
இதைக்கேட்ட, என் நண்பரும், அவர் மச்சினரும் சிரித்த முகத்துடன், பசுவும் கன்றும் போல துள்ளிக்குதித்து, ரூமை விட்டு, என்னுடன் உடனே வெளியேறினர். இதைப்பார்த்த என் நண்பரின் மனைவிக்கு ஒரே சந்தோஷம். எனக்கு கைகூப்பி நன்றி தெரிவித்தார்கள்.
கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது. தன் மறுமானையும், அவன் பொண்டாட்டியையும், தேன் நிலவுக்கு மும்பைக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்தார், என் நண்பரின் மைத்துனர்.
”அவர்கள் மட்டுமா நாங்களும் வருவோம்” என்றார் என் நண்பர்.
”அவசியம் வாங்கோ, ஆனா இப்போ வேண்டாம்; சின்னச்சிறுசுகள் தனியே தேன் நிலவுக்கு இப்போது வந்துட்டுப் போகட்டும்;
நீங்க ரெண்டு பேரும் ஒரு ஆறு மாதம் கழித்து வளைகாப்பு - ஸீமந்தம்ன்னு அழைப்பு கொடுக்க பத்திரிகையுடன் நேரிலே வாங்கோ, வரும்போது மறக்காம உங்க நண்பரையும் கூட்டிக்கொண்டு வாங்கோ” என்றார்.
எது எப்படியோ மீண்டும் என் நண்பருக்கு “அழைப்பு” என்ற பிரச்சனை தொடரத்தான் போகிறது என்று நினைத்து என் மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். அவரின் ‘அழைப்பு’ தொடர்ந்தால் தானே எனக்கும் சுவாரஸ்யமான அனுபவக்கதைகள் கேட்க முடியும்.
நான் ஏதோ நடுவில் புகுந்து பஞ்சாயத்து பண்ணப்போய், மனஸ்தாபங்களை வளர்த்துக்கொண்டிருந்த இரு குடும்பங்களை சேர்த்து வைக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
By வை. கோபாலகிருஷ்ணன்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாட்ஸ் அப், வைபர், முகநூல் இவற்றை அறிமுகப்படுத்துங்கள் நண்பருக்கு - 60 லும் ஆசை வந்துடப் போவுது ஜாக்கிரதை
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1116259யினியவன் wrote:வாட்ஸ் அப், வைபர், முகநூல் இவற்றை அறிமுகப்படுத்துங்கள் நண்பருக்கு - 60 லும் ஆசை வந்துடப் போவுது ஜாக்கிரதை
பாட்டே பாடிட்டாங்க தல அறுபதிலும் ஆசை வரும்னு
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1