புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_m10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10 
91 Posts - 63%
heezulia
சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_m10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_m10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_m10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10 
6 Posts - 4%
eraeravi
சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_m10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_m10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10 
1 Post - 1%
viyasan
சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_m10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_m10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10 
283 Posts - 45%
heezulia
சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_m10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_m10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_m10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_m10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10 
19 Posts - 3%
prajai
சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_m10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_m10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_m10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_m10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_m10சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 19, 2015 12:11 am

சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 220px-Sirkali_Govid

பெயர் : சி. கோவிந்தராசன்

பிறப்பு: 19 ஜனவரி 1933

இறப்பு: 24 மார்ச் 1988.

பெற்றோர்: சிவசிதம்பரம், அவையாம்பாள்

பிறப்பிடம்: சீர்காழி

சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 19, 2015 10:03 am

:வணக்கம்: பிறந்தநாள்

சீர்காழி ஐயா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 19, 2015 10:07 am

ராஜா wrote::வணக்கம்: பிறந்தநாள்

சீர்காழி ஐயா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

'போனவாளுக்கு' பிறந்த நாள் வாழ்த்து சொல்வாளா என்ன? ........................... அநியாயம் அநியாயம் அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 19, 2015 10:17 am

சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் தமிழ் கர்நாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார்.

சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 S1K4w28iT1HTKCaFrt1A+4b317693-e101-4139-8fe4-d5b54e2dc5ea_S_secvpf

பெயர் : சி. கோவிந்தராசன்

பிறப்பு: 19 ஜனவரி 1933; இறப்பு:24 மார்ச் 1988.

பெற்றோர்: சிவசிதம்பரம், அவையாம்பாள்

ஆரம்ப கல்வி: வாணிவிலாஸ் பாடசாலை, சீர்காழி

இளமைப் பருவத்தில் விரும்பிப் பாடிய பாடல்கள் சில:

தியானமே எனது - தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்

வதனமே சந்திர பிம்பமோ - தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்

செந்தாமரை முகமே - பி. யூ. சின்னப்பா பாடிய பாடல்

கோடையிலே இளைப்பாறி- எல். ஜி. கிட்டப்பா பாடிய பாடல்

இளம் வயதில் நடிகராக பணியாற்றிய நிறுவனங்கள்: தேவி நாடக சபா, பாய்ஸ் கம்பெனி

இசைக்கல்வி: சென்னை இசைக்கல்லூரி

இசை வாழ்வின் ஆரம்பத்தில் பெற்ற பட்டங்கள்: இசைமணி, சங்கித வித்வான்

பிடித்த ராகங்கள்: லதாங்கி, கல்யாணி, சங்கராபரணம் சீர்காழியில் பிறந்த கோவிந்தராசன் தனது ஆரம்பக்கல்வியை சீர்காழி வாணிவிலாஸ் பாடசாலையில் பயின்றார்.

திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்: 1953-ல் பொன்வயல் என்ற படத்துக்காக சிரிப்புத் தான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல்,ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த ஔவையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.

திரைப்படத்திற்காக பாடிய பிரபல பாடல்கள்

பட்டணந்தான் போகலாமடி- படம்: எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை: எம்.வேணு

அமுதும் தேனும் எதற்கு - படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்,இசை: கே.வி.மகாதேவன்

மாட்டுக்கார வேலா - படம்: வண்ணக்கிளி, இசை : கே.வி.மகாதேவன்

வில் எங்கே கணை இங்கே - படம்: மாலையிட்ட மங்கை, இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்,

இராமமூர்த்தி வானமிதில் நீந்தியோடும் வெண்ணிலாவே - படம்: கோமதியின் காதலன், இசை: ஜி.இராமநாதன்

கொங்கு நாட்டுச் செங்கரும்பே - படம்: கோமதியின் காதலன், இசை :ஜி. இராமநாதன்

மலையே என் நிலையே - வணங்காமுடி, இசை: ஜி. இராமநாதன்

ஜக்கம்மா - வீரபாண்டிய கட்டபொம்மன், இசை: ஜி.இராமநாதன்

பட்டணந்தான் போகலாமடி - படம்: எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை: எம்.வேணு

ஒற்றுமையாய் வாழ்வதாலே (பாகப்பிரிவினை 1959)

எங்கிருந்தோ வந்தான் (படிக்காத மேதை 1960) பாரதியார் பாடல், இசை: கே. வி. மகாதேவன்

ஓடம் நதியினிலே (காத்திருந்த கண்கள்) கோட்டையிலே ஒரு ஆலமரம் (முரடன் முத்து) நல்ல மனைவி நல்ல பிள்ளை (நம்ம வீட்டு லட்சுமி 1966) பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா (அக்கா தங்கை 1969) கண்ணான கண்மணிக்கு அவசரமா(ஆலயமணி 1962) கண்ணன் வந்தான் (ராமு)

மாலைமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 19, 2015 10:30 am

இவரின் பக்த்திப்படல்களுக்கு எஙக அப்பா அடிமை, அந்த காலத்தில் பெரிய பெரிய இசைத்தட்டுகள் இருக்கும், அதில் வரும் இவரின் பாடல்களை அப்பா எப்பவும் கேட்பார்..............எங்கள் எல்லோருக்கும் 'விநாயகர் அகவல்' 'கந்தர் அலங்காரம்' 'அபிராமி அந்தாதி 100பாடல்கள் ' எல்லாம் அக்ஷர சுத்தமாய் மனப்பாடம் ஆனது  இவரின் பாடல்கள் கேட்டுத்தான்.........அவ்வளவு சுத்தமாக பாடுவார்.........'வெண்கலக்குரல் உடையோன்' என்று பேர் பெற்றவர்...................சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 JhsnmOXSoagSnBPErG3E+0

'மோர்ஸிங்' என்று வாய் இல் வைத்து வாசிக்கப்படும் வாத்தியத்தை பக்க வாத்தியமாய் இவர் மட்டும் தான் வைத்திருப்பார்...................அந்த வாத்தியத்தை அவர் ரொம்ப ஊக்குவித்தார் என்று அப்பா சொல்வார் புன்னகை ................

பாட்டுடன் நிறுத்தாமல்  நடிப்பிலும் ஆற்றல் பெற்றவராகத் திகழ்ந்தவர் சீர்காழி எஸ். கோவிந்தராஜன். அகத்தியர் திரைப்படத்தில் அகத்தியராகவும் , கந்தன் கருணை, தசாவதாரத்தில் நாரதராகவும் , ‘வா ராஜா வா’வில் போலீஸ்காரராகவும் , திருமலை தென்குமரியில் பாகவதாராகவும் நடித்திருக்கார்.

அவர் பாடிய பக்தி பாடல்களை அவரின் மைத்துனர் தான் எழுதுவார் என்று அப்பா சொல்லி இருக்கார், அவரின் பெயர் மறந்து விட்டது சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 19, 2015 10:34 am

சீர்காழி கோவிந்தராஜன்

சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 FPeFWv98SOu4LSuGTdRR+govindarajan

சீர்காழி கோவிந்தராஜன் பெற்ற
விருதுகளை அணிந்திருக்கும் காட்சி

தமிழிசை உலகில் தன் வெண்கலக் குரலினால் முத்திரைப் பதித்தவர் சீர்காழி கோவிந்தராஜர் ஆவார். அயராத உழைப்பால் இசை உலகில் தடம் பதித்தவர் ஆவார்.

பிறப்பு:

திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழியில் 19.01.1933 ஆம் ஆண்டு சிவசிதம்பரத்திற்கும் அவயாம்பாளுக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவருடன் உடன் பிறந்தவர் மூன்று சகோதரர், ஒரு சகோதரியும் ஆவார்.

இளமைப்பருவம்:

கோவிந்தராஜன் அவர்கள் சீகாழியில் வாணிவிலாஸ் பாடசாலையில் ஆரம்பக்கல்வி பயின்றார். இவரது வீடு பிரம்மபுரீச்வரர் கோவிலுக்கு அருகாமையில் இருந்ததால், காலை நான்கு மணிக்கு ஒலிக்கும் நாதசுவர இசைக்கும், ஓதுவார்கள் பாடும் தேவார இசைக்காகவும் செல்வார்.
இவர் சிறுவயதில் தேவி நாடக சபையில் குழந்தை நாடிகராக இடம்பெற்று தன் பாட்டுத் திறத்தால் அனைவரையும் கவர்ந்தார். பின்னர் சேலம் மாடர்ன் நாடக சபையிலும் சிறிது காலம் பணியாற்றிய பிறகு, கர்நாடக இசைபயிலும் நோக்குடன் சென்னை வந்தார்.

சென்னைப் பயணம்:

சென்னையில் பண்டிதர் பி.எஸ்.செட்டியாரின் அறிவுரையின் பேரில் சென்னை தமிழ் இசைக் கல்லூரியில் சேர்ந்து இசை பயின்று 1949 ஆம் ஆண்டு “இசைமாமணி” பட்டம் பெற்றார். அப்பொழுது நடைபெற்ற கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல் இசைப்போட்டில் வெற்றி பெற்றார். மேலும், அங்கு இரண்டு ஆண்டுகள் பயின்று 1951 ஆம் ஆண்டு “சங்கீத வித்வான்” என்ற பட்டம் பெற்றார்.

திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளையிடம் இசைப் பயிற்சி:

கோவிந்தராஜன் அவர்கள் மிகச் சிறந்த புல்லாங்குழல் வித்வான் திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளையிடம் இசையில் மேற்பயிற்சி பெற்றார். இவர் இசையில் உள்ள பல நுணுக்கங்களையும், கச்சேரிகளில் பாடும் முறையைச் சிறப்பாகக் கற்பித்தார். இவர் தன் கச்சேரிக்கு கோவிந்தராஜனை அழைத்துச்செல்லும் தன் மகன் என்றே கூறுவார். இவரிடம் கோவிந்தராஜன் அவர்கள் சமஸ்கிருதம், தெலுங்கு போன்ற பிறமொழிக் கீர்த்தனைகளையும், மேளராகமாலிகை தாள இராகமாலிகையையும் பயிற்சி பெற்றார்.
சுவாமிநாத பிள்ளையின் அறுபது வயது நிறைவு விழாவை வெகுசிறப்பாக கோவிந்தராஜன் அவர்கள் நடத்தி வைத்தார்.

தமிழிசை முக்கியத்துவம்:

தமிழ் மக்கள் வாழக்கூடிய தமிழ்நாட்டில் தமிழ்ப் பாடல்களையே அரங்கினில் பாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். பொருள் விளங்காத பிறமொழிப் பாடல்களைப் பாடுவதைக் காட்டிலும், பொருளை நன்கு அறிந்து பாடல் வெளிப்படுத்தும், பக்தியை இவரது பாடலால் உணரமுடிந்தது. செவ்விசை அரங்கில் தமிழ்ப் பாடல்களைப் பாடிய விரல் விட்டு எண்ணக்கூடிய இசைக் கலைஞர்களில் சீர்காழியும் ஒருவராகத் திகழ்ந்தார்.

சீர்காழி இசையின் சிறப்பு

சீர்காழியின் இசையில் சுருதி சுத்தம், சாரீர வளம், பாவம், ஈடுபாடு, உற்சாகம் போன்ற இசையின் அனைத்து அம்சங்களும் நிறைந்து காணப்பட்டது. பாடலைப் பாடும் போது வல்லினம், மெல்லினம் அறிந்து பாடுதல், பக்கவாத்தியங்களுக்கு மேல் அவரின் குரல் ரீங்காரம் செய்த முறைமை போன்றவை சிறப்பாக இருக்கும். சீர்காழி வெண்கலச் சாரீரமுடையவர். அவருடைய குரலுக்கு ஒலிப்பெருக்கியே தேவையில்லை. நினைத்தது பேசும் நாதசுவர சாரீரம் உடையவர்.
சீர்காழி தன் கச்சேரிகளுக்கு நான்கு தாள வாத்தியங்கள் வைத்துக்கொள்வர். ஏனெனில் தாள இசைக்கலைஞர்கள் பிழைப்புக்கு வழிக்கொடுப்பார்.
சீர்காழி பத்மஸ்ரீ போன்ற பல விருதுகளைப் பெற்றிருந்தாலும், சிறந்த பண்பாட்டோடு வாழ்ந்து வந்தார். பட்டமும் பதவியும் தேடி வந்த நிலையிலும் அடக்கத்துடன் காணப்பட்டார். இவரின் குரல் சிறப்பால் மட்டும் புகழ்பெறாமல் அவரின் அயராத சாதகத்தின் மூலமாகவும் இசையுலகில் நிலைத்து நின்றார்.

பெற்ற பட்டங்களும், பரிசுகளும்:

இவர் 1949 ஆம் ஆண்டு கவர்னர் ஜெனரல் இராஜாஜி இவருக்கு தம்புராவையும், சென்னை சங்கீத வித்வத் சடையில் தங்கப் பதக்கத்தையும், கலைமாமணி, இசைப் பேரறிஞர், பத்மஸ்ரீ போன்ற பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றார்.

ஆசிரியப்பணி:

இவர் 1978 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அதில் வழங்கப் பெற்ற சன்மானத்தை அப்பல்கலைக்கழகத்தில் தன் குருவின் பெயரால் அறக்கட்டளை நிறுவி அங்கு அளித்தார். மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் இசைத்துறை கலைப்புல முதன்மையராகப் பணியாற்றி பல மாணவர்களுக்கு இசையைக் கற்பித்தார். 1983 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. மேலும், இவர் சென்னைத் தமிழிசைக் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார்.

திரைப்படத் துறையில் பங்களிப்பு:

திரைப்படத் துறையில் சீர்காழி அவர்கள் நடிகராகவும், பின்னணி இசைப் பாடகராகவும் செயல்பட்டுள்ளார். “திருச்செந்தூரில் கடலோரத்தில்”. “தேவன் கோவில் மணியோசை”, “உள்ளத்தில் நல்ல உள்ளம்”, “திருப்பதி மலை வாழும் வெங்கடேசா” போன்ற பல பாடல்கள் அவரின் குரலில் வெளியான மிகச் சிறந்த பாடலாகும். தெய்வத்திருமணங்கள் படத்தில் அகத்தியர் வேடமிட்டு மிகவும் சிறப்பாக நடித்தார். மேலும், இராஜராஜ சோழன் படத்தில் நம்பியாண்டார் நம்பியாகவும் நடித்தார்.

இவர் முருகன் மீதும், திருப்பதி வெங்கடேசப் பெருமாள், அபிராமியின் மீது அந்தாதியும் பாடியுள்ளார். இப்பாடல் பக்தி சுவையை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
அரசாங்கத்தின் சார்பில் நடைபெறும் பொழுது நிகழ்ச்சிகளில் சீர்காழி தான் இறைவணக்கம் மற்றும் வாழ்த்துப் பாடல் பாடுவது வழக்கமாக இருந்தது.

பாடல் தொகுப்பு:

சீர்காழி பாடிய பாடல்கள் “இசைமணியின் பக்தி மாமாலை” இரண்டு பாகத்தை அவரது மகன் டாக்டர்.சீர்காழி சிவசிதம்பரம் வெளியிட்டுள்ளார். இதில் பக்திப் பாடல்களும், திருக்குறள் பாடல்களும், தமிழ் மூவரின் பாடல்களும் இடம் பெற்றுள்ளன.
இவர் இலங்கை, புங்குடுதீவு, இலண்டன், மலேசியா, பினாங்கு, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று பல பல்கலைக்கழகங்களிலும் பொது இடங்களிலும் இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.

மறைவு:

சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் கடும் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு 24.03.1988 ஆம் ஆண்டு தனது 55வது வயதில் உயிரிழந்தார். இவர் இறக்கும் போது “உலகம் வாழ்க” என்று முருகன் கோயிலைப் பார்த்து சொல்லியவாறே உயிரிழந்தார். பக்திப்பாடல்களையும் தேசப் பாடல்களையும் தன் வெண்கலக் குரலில் மூலம் ஒலித்த சீர்காழி கோவிந்தராசனின் இசைப் பணியினை அவர் தம் மகன் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் பறைச்சாற்றிக் கொண்டிருக்கின்றார்.

முனைவர் செ.கற்பகம்
உதவிப் பேராசிரியர்
இசைத்துறை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 19, 2015 7:19 pm

முனைவர் செ.கற்பகம் அவர்களுக்கு நன்றி !

சொல்லைச் சுத்தமாக உச்சரித்துப்பாட எம்.கே.டி.க்குப் பிறகு தேறிய ஆட்களில் சீர்காழி குறிப்பிடத் தக்கவர் !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 20, 2015 12:06 pm

Dr.S.Soundarapandian wrote:முனைவர் செ.கற்பகம் அவர்களுக்கு நன்றி !

சொல்லைச் சுத்தமாக உச்சரித்துப்பாட எம்.கே.டி.க்குப் பிறகு தேறிய ஆட்களில் சீர்காழி குறிப்பிடத் தக்கவர் !

மேற்கோள் செய்த பதிவு: 1116313

ஆமாம் ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 20, 2015 12:48 pm

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே ஸ்ரீ துர்கை சிரித்திருப்பாள் (சின்னஞ்சிறு)

பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது (சின்னஞ்சிறு)

மின்னலைப்  போல் மேனி அன்னை சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்

பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள் (சின்னஞ்சிறு)

அவர் பாடிய பாடல்களில் எனக்கு மிக, மி........க பிடித்த பாடல் இது.

சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 20, 2015 12:51 pm

எனக்கு அவர் பாடின எல்லா பாடல்களுமே ரொம்ப பிடிக்கும்....அவர் எதுபாடினாலும் அப்பா உடனே, அதன் 'ரெகார்ட்' வாங்கிடுவா புன்னகை....என்காத்தில் சீர்காழி இன் full collection இருந்தது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக