புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_m10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_m10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_m10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_m10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_m10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_m10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_m10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_m10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10 
2 Posts - 1%
prajai
மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_m10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_m10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_m10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10 
441 Posts - 47%
heezulia
மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_m10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_m10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_m10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_m10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10 
30 Posts - 3%
prajai
மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_m10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_m10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_m10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_m10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_m10மூலிகை உணவு: தூதுவளை கீரை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூலிகை உணவு: தூதுவளை கீரை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 18, 2015 11:47 pm

மூலிகை உணவு: தூதுவளை கீரை T7RMNlkQR1gGJKWidT4H+201501181630528304_Give-strengthHerbal-FoodsThuthuvalai-greens_SECVPF

தூதுவளை கொடி வகையை சார்ந்த தாவரம். கத்திரி பூ நிறத்தில் பூக்கும். இலைகளிலும், கொடிகளிலும் முட்கள் இருக்கும். வேலிகளில் படர்ந்து வளரும். இதன் இலை, பூ, காய், வேர் என அனைத்துமே மருத்துவகுணம் வாய்ந்தது. மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

காது கேட்கும் திறன் மந்தமாக இருத்தல், காதுவலி, உடல் நமைச்சல், உடல் வலி, விந்து குறைபாடு, சுவாச நோய் போன்றவைகளை குணப்படுத்தும்தன்மை தூதுவளைக்கு இருக்கிறது என்று, பதார்த்த குண சிந்தாமணி பாடல் கூறுகிறது.

சித்த மருத்துவத்தில் தூதுவளை அதிகம் பயன்படுத்தப் படுகிறது. சளி, இருமல், ஆஸ்துமா மற்றும் காது, தொண்டை நோய்களுக்கு தூதுவளை சிறந்த மருந்தாகிறது. தூதுவளை உடலுக்கு உறுதியையும், சக்தியையும் அளிக்கும் காயகற்ப மூலிகை வகையை சார்ந்தது.

இலைகள் முக்கோண வடிவில் முட்களுடன் காணப்படும். முட்களை கவனமாக சிறு கத்திரிகோல் கொண்டு நீக்கிவிட்டு, பயன்படுத்தவேண்டும். இலைகளில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தூது வளையில் உள்ள இயற்கையான தாவர ஊக்கிகள் நோய்க்கு விரைவாக நிவாரணம் தருகிறது. கல்லீரல், மண்ணீரல் மற்றும் நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகளை சிறப்பாக இயங்கச் செய்கிறது. நுண்கிருமிகளால் நோய் ஏற்படுவதையும் தடுக் கும். ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.

தூதுவளை சூரணம், தூதுவளை நெய், தூதுவளை லேகியம் ஆகியவை இதில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது. இவை இருமல், காசநோயை குணமாக்கும். பசியின்மை, காது, தொண்டை நோய்களை போக்கி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

தூதுவளை பழத்தில் உள்ள விதைகளை விதைப்பதன் மூலம் தூதுவளை செடிகள் வளரும். இதை எளிதாக தொட்டிகளில் வளர்க்கலாம். அதிக பராமரிப்பு தேவையில்லை.

தூதுவளை கீரையில் தயார் செய்யக்கூடிய ஆரோக்கிய உணவுகள்:–

துவையல்

தூதுவளை கீரை – 100 கிராம்
சிறிய வெங்காயம் – 50 கிராம்
புளி – சிறிய எலுமிச்சை பழ அளவு
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
பெருங்காய தூள் – ½ தேக்கரண்டி

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு மற்றும் புளியை வறுத்துக்கொள்ளுங்கள். அதில் சிறிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்குங்கள். நன்கு வதங்கிய பின்பு தூதுவளை கீரையை இட்டு கிளறுங்கள். அதில் தேங்காய் துருவல் உப்பு, பெருங்காயதூள் கலந்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.

தூதுவளை துவையல் ருசியானது. இட்லி, தோசைக்கு ஏற்றது. சூடான சாதத்துடன் சிறிது நல்லெண்ணெய் கலந்து, இந்த துவை யலையும் பிசைந்து சாப்பிடலாம். அரிசிக் கஞ்சிக்கும் இது அதிக ருசி சேர்க்கும்.

சளி, இருமல், ஆஸ்துமா, தொண்டை வலி, காதுவலி, காது அடைப்பிற்கு நல்ல மருந்து.

மூலிகை உணவு: தூதுவளை கீரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 18, 2015 11:48 pm

சூப்

தூதுவளை கீரை – 50 கிராம்
புளி – சிறிய எலுமிச்சைப்பழ அளவு
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி – ½ தேக்கரண்டி
பூண்டு – 5 பல்
துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயபொடி – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
கடுகு – 1 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:

பாத்திரத்தில் புளியை கரைத்து நன்கு கொதிக்க வையுங்கள்.

மிக்சியில் சீரகம், மிளகு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை அரைத்து, கொதிக்கும் புளிக் கலவையில் கலந்து சிறு தீயில் கொதிக்க வையுங்கள். அதில் தூதுவளை கீரை மற்றும் பூண்டுவை அரைத்து கலந்து, 2 நிமிடம் கொதிக்கவிடுங்கள். நெய்யில் கடுகு தாளித்து அதில் சேர்க்கவேண்டும்.

இதை சூப்பாக குடிக்கலாம். ரசமாக சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்.

சளி, இருமல், ஆஸ்துமா, மூச்சடைப்பு போன்றவைகளுக்கு இது ஏற்றது. பனி காலத்தில் ஏற்படும் தொண்டை கட்டுக்கு இது சிறந்த நிவாரணியாகும்.

மூலிகை உணவு: தூதுவளை கீரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 18, 2015 11:48 pm

அடை

தூதுவளை கீரை – 100 கிராம்
புழுங்கல் அரிசி – 200 கிராம்
துவரைபருப்பு – 50 கிராம்
கடலை பருப்பு – 50 கிராம்
காய்ந்த மிளகாய் – 3
உப்பு – தேவைக்கு
பெருங்காய பொடி – 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – தேவைக்கு

செய்முறை:

அரிசி மற்றும் பருப்பு வகைகளை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவையுங்கள். தண்ணீரை வடிகட்டி எடுத்து அவைகளோடு காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயபொடி ஆகியவைகளை கலந்து மிக்சியில் நன்றாக அரையுங்கள். மாவை இரண்டு மணி நேரம் புளிக்க வையுங்கள்.

அடை செய்ய தொடங்கும்போது தூதுவளை கீரையை அரைத்து மாவுடன் கலந்து அடையாக தயார் செய்யுங்கள். குழந்தைகள் இதை ருசித்து சாப்பிடுவார்கள். சளி, இருமல் நீங்கும்.

மூலிகை உணவு: தூதுவளை கீரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 18, 2015 11:49 pm

கற்பம்

தூதுவளை கீரை – 500 கிராம்
மிளகு – 20 கிராம்
பனங்கற்கண்டு – 2 தேக்கரண்டி
பால் – 200 மி.லி.

செய்முறை:

தூதுவளை கீரையை நிழலில் உலரவைத்து, மிளகுடன் சேர்த்து அரைத்து தூளாக்கி, ஈரப்பதம் இல்லாத பாட்டிலில் அடைத்துவைத்துக்கொள்ளுங்கள்.

தினமும் காலை, இரவு வேளைகளில் இந்த பொடியை 1 தேக்கரண்டி அளவு எடுத்து சூடான பாலில் கலந்து பனங்கற்கண்டு சேர்த்து பருகவேண்டும்.

இந்த பானம் நுரையீரலுக்கு பலத்தை தரும். உடல் உறுதியை உண்டாக்கும்.

மூலிகை உணவு: தூதுவளை கீரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 18, 2015 11:49 pm

கீரை துவட்டல்

தூதுவளை கீரை – 200 கிராம்
சிறிய வெங்காயம் – 50 கிராம்
(சிறிதாக நறுக்கிக்கொள்ளுங்கள்)
பூண்டு – 5 பல்
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
வேகவைத்த துவரம் பருப்பு – 50 கிராம்
உப்பு – தேவைக்கு
நெய் – 3 தேக்கரண்டி

செய்முறை:

வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் தாளித்து, வெங்காயம் மற்றும் பூண்டுவை வதக்கிக் கொள்ளுங்கள். பின்பு அதில் தூதுவளை கீரையை இட்டு நன்றாக கிளறுங்கள். அத்துடன் வேகவைத்த துவரம்பருப்பு, உப்பு, மிளகுதூள் கலந்து, சிறிதளவு நீரும் விட்டு வேகவையுங்கள்.

இந்த கீரை துவட்டலை சூடான சாதத்தில் கலந்து சாப்பிடலாம். இது நுரையீரலின் நுண்ணிய காற்றறைகளை பலப்படுத்தும். உடல் உள்ளுறுப்புகளை பலப்படுத்தி வலிமையையும், பலத்தையும் தரும்.

டாக்டர் இரா. பத்மப்ரியா (சித்த மருத்துவர்)

மூலிகை உணவு: தூதுவளை கீரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 19, 2015 12:15 am

தூதுவளையின் ரெசிபிகள் அருமை. எப்போதுமே வாரம் ஒரு நாள் கண்டிப்பாய் என் வீட்டில் தூதுவளை மசியல் உண்டு.

மூலிகை உணவு: தூதுவளை கீரை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமூலிகை உணவு: தூதுவளை கீரை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மூலிகை உணவு: தூதுவளை கீரை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 19, 2015 5:42 am

மூலிகை உணவு: தூதுவளை கீரை 103459460

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக