புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசத்தும் விசாலினி... Poll_c10அசத்தும் விசாலினி... Poll_m10அசத்தும் விசாலினி... Poll_c10 
56 Posts - 74%
heezulia
அசத்தும் விசாலினி... Poll_c10அசத்தும் விசாலினி... Poll_m10அசத்தும் விசாலினி... Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
அசத்தும் விசாலினி... Poll_c10அசத்தும் விசாலினி... Poll_m10அசத்தும் விசாலினி... Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
அசத்தும் விசாலினி... Poll_c10அசத்தும் விசாலினி... Poll_m10அசத்தும் விசாலினி... Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசத்தும் விசாலினி... Poll_c10அசத்தும் விசாலினி... Poll_m10அசத்தும் விசாலினி... Poll_c10 
221 Posts - 75%
heezulia
அசத்தும் விசாலினி... Poll_c10அசத்தும் விசாலினி... Poll_m10அசத்தும் விசாலினி... Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
அசத்தும் விசாலினி... Poll_c10அசத்தும் விசாலினி... Poll_m10அசத்தும் விசாலினி... Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
அசத்தும் விசாலினி... Poll_c10அசத்தும் விசாலினி... Poll_m10அசத்தும் விசாலினி... Poll_c10 
8 Posts - 3%
prajai
அசத்தும் விசாலினி... Poll_c10அசத்தும் விசாலினி... Poll_m10அசத்தும் விசாலினி... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அசத்தும் விசாலினி... Poll_c10அசத்தும் விசாலினி... Poll_m10அசத்தும் விசாலினி... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அசத்தும் விசாலினி... Poll_c10அசத்தும் விசாலினி... Poll_m10அசத்தும் விசாலினி... Poll_c10 
3 Posts - 1%
Barushree
அசத்தும் விசாலினி... Poll_c10அசத்தும் விசாலினி... Poll_m10அசத்தும் விசாலினி... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அசத்தும் விசாலினி... Poll_c10அசத்தும் விசாலினி... Poll_m10அசத்தும் விசாலினி... Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அசத்தும் விசாலினி... Poll_c10அசத்தும் விசாலினி... Poll_m10அசத்தும் விசாலினி... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசத்தும் விசாலினி...


   
   

Page 1 of 2 1, 2  Next

pv.rajsekar
pv.rajsekar
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 30/09/2014

Postpv.rajsekar Sun Jan 11, 2015 8:20 pm

பாளையங்கோட்டையை சேர்ந்த, 11 வயது மாணவி, இன்ஜினியரிங் படிப்பு முடித்தவர்கள் எழுத வேண்டிய எம்.சி.பி., மற்றும் சி.சி.என்.ஏ., தேர்வுகள் உட்பட, ஏழு தேர்வுகளை எழுதி, சாதனை படைத்துள்ளார். படிப்பில் மேலும் பல சாதனைகள் படைப்பதற்கு, மத்திய, மாநில அரசுகளின் உதவி கிடைத்தால், ஏதுவாக இருக்கும் என்றும் கூறுகிறார்.திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, சங்கர் காலனி செண்பகம் நகரை சேர்ந்த, கல்யாண குமாரசாமி - சேது ராகமாலிகா தம்பதியின் மகள் விசாலினி, 11. இவர், பாளையங்கோட்டையில் உள்ள, ஐ.ஐ.பி.இ., லட்சுமி ராமன் மெட்ரிக் குலேஷன் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

ஐ.க்யூ., அதிகம்:-
சாதாரண மனிதர்களை விட நுண்ணறிவுத் திறன் (ஐ.க்யூ.,) அதிகம் உள்ளதால், நான்கு வகுப்புகளை, இரண்டு ஆண்டுகளில் படித்து தேர்ச்சி பெற்றதன் மூலம், 11 வயதில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு, இரண்டரை வயதாகும் போதே, இவரை பரிசோதித்த டாக்டர், மற்றவர்களை விட நுண்ணறிவுத் திறன் அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். சாதாரண மனிதர்களுக்கு நுண்ணறிவுத் திறன் அளவு, 90லிருந்து 110 வரை இருக்கும். விசாலினியின் ஐ.க்யூ., அளவு, 225 வரை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். புனேயில் உள்ள நிறுவனம் ஒன்றும், விசாலினியின் ஐ.க்யூ., அளவு, 225 ஆக இருப்பதை, உறுதி செய்துள்ளது. விசாலியின் இந்த உலக சாதனை, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கு, 14 வயது பூர்தியாகியிருக்க வேண்டும் என்பதாலும், இவருக்கு தற்போது, 11 வயது தான் ஆகிறது என்பதாலும், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிப்பதற்கு, இன்னும் மூன்றுஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது.

உலக அளவில் சாதனை:-
அமெரிக்காவின் சிஸ்கோ நிறுவனம், உலக அளவில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு, வேலை வாய்ப்பிற்காக, சி.சி.என்.ஏ., - சி.சி.என்.பி.,தேர்வுகளை நடத்தி வருகிறது.இத்தேர்வுகளை, விசாலினி, பத்து வயதிலேயே எழுதி, மிகவும் இள வயதில் இத்தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றதற்கான உலக சாதனை விருதும் பெற்றுள்ளார். இதன் மூலம், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த, 12 வயது மாணவன், இரிட்ஷா ஹைதரின் சாதனையை, தனது, 11 வயதில் விசாலினி முறியடித்துள்ளார்.பிரிட்டிஷ் கவுன்சில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஐ.டி.பி., ஆஸ்திரேலியா மற்றும் இ.எஸ்.ஓ.பி., தேர்வு மையங்கள் இணைந்து உலக அளவில் நடத்தும், ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வை, 11 வயதில் எழுதி, வெற்றி பெற்றதன் மூலம், உலகில் மிகவும் இளம் வயதில் ஐ.இ.எல்.டி.எஸ்., முடித்த சாதனையாளர் என்ற விருதையும் பெற்றுள்ளார். இப்படிப்பில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த, 12 வயது மாணவி சிடாரா பிரைஅக்பரின் சாதனையை, 11 வயதில், விசாலினி முறியடித்துள்ளார்.நெதர்லாந்து நாட்டின் இ.எக்ஸ்.ஐ.என் - கிளவுடு கம்ப்யூட்டிங் தேர்வை, 11 வயதில் எழுதி, 1,000க்கு 1,000 மதிப்பெண் பெற்று, விசாலினி உலக சாதனை படைத்துள்ளார்.

பாடமும் நடத்துகிறார்:-
உலக சாதனைகள் மட்டுமின்றி எம்.சி.பி., சி.சி.என்.ஏ., சி.சி.என்.ஏ. செக்யூரிட்டி, ஒ.சி.ஜெ.பி., ஐ.இ.எல்.டி.எஸ்., சி.சி.என்.பி.,-ரூட், மற்றும் இ.எக்ஸ். ஐ.என்.,-கிளவுடு கம்பெனி தேர்வுகளிலும் வெற்றி பெற்று சர்வதேச சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். தற்போது, சி.சி.என்.பி., சுவிட்ஸ், எம்.சி.டி.எஸ்., எம்.சி.பி.டி., ஐ.எஸ்.இ.பி., தேர்வுகளுக்கு படித்து வருகிறார்.இத்துடன் பல்வேறு இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு சென்று, பி.இ., மற்றும் பி.டெக் மாணவர்களுக்கு கருத்தரங்கில், "நெட் ஒர்க்கிங்' சம்பந்தமாக பாடமும் நடத்தி வருகிறார். பல்கலைக் கழகங்களில் நடத்தப்படும், சர்வதேச கருத்தரங்குகளில், தலைமை விருந்தினராகவும் உரையாற்றி வருகிறார்.

அரசு உதவுமா?
விசாலினி, சென்னையில் நேற்று நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பாகிஸ்தான் நாட்டில் சிறிய வயதில் சாதனை படைத்த குழந்தைகள் இருவருக்கும் அந்நாட்டு அரசு, "பாகிஸ்தானின் பெருமை' என்று விருது வழங்கி கவுரவித்ததுடன், அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. என் குடும்பம், நடுத்தர குடும்பம் என்பதால், நான் மேலும், மேலும் படித்து சாதனை படைப்பதற்கு போதிய உதவியை, உரிய நேரத்தில் செய்யமுடியாமல் சிரமப்படும் நிலை உள்ளது. நான் அடுத்து படிக்க உள்ள சி.சி.ஐ.இ., படிப்புக்கு கட்டணம், ஐந்து லட்சம் ரூபாயும், தேர்வுகளுக்கு 2 லட்சம் ரூபாய் வரையும் செலவாகும். மத்திய, மாநில அரசுகள் நான் மேலும் படித்து சாதனை படைக்க உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். எதிர்காலத்தில் சொந்தமாக நெட் ஒர்க்கிங் கம்பெனி ஒன்று துவங்கி மேலதிகாரியாகவும் செயல்பட விருப்பம் உள்ளது. இவ்வாறு விசாலினி தெரிவித்தார்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 11, 2015 11:20 pm

விசாலினிக்கு வாழ்த்துகள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 12, 2015 9:24 am

விசாலினிக்கு வாழ்த்துகள்
-


pv.rajsekar
pv.rajsekar
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 30/09/2014

Postpv.rajsekar Mon Jan 12, 2015 9:25 am

புகைபடம் அப்லோடு செய்ய முடியவில்லை,?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 12, 2015 9:29 am

அசத்தும் விசாலினி... UlYJuz97QACyFIdOEfdr+sathanai
-
ஜூன் 2011 ல் வந்த செய்தி...
-
இப்போது இந்த மாணவி என்ன செய்கிறார்..?
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 12, 2015 9:30 am

pv.rajsekar wrote:புகைபடம் அப்லோடு செய்ய முடியவில்லை,?
மேற்கோள் செய்த பதிவு: 1114834
-
இணைய இணைப்பு ஸ்லோவாக இருந்தால்
சில நேரங்களில் படங்களை இணைக்க இயலாது...
-
மீண்டும் முயற்சி செய்யுங்கள்...

pv.rajsekar
pv.rajsekar
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 30/09/2014

Postpv.rajsekar Mon Jan 12, 2015 9:39 am

2014ல் ...
பதினான்கு வயதே நிரம்பிய விசாலினி, தன் வயதுக்கே உரிய உற்சாகத்துடன் தோழிகளோடு தெருவில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்ட் எனச் சொல்லப்படும் பாளையங்கோட்டையில் உள்ள சங்கர் நகரில் இருக்கிறது விசாலினியின் வீடு. இந்தச் சிறுமியின் சாதனைகளை அறிந்தால் ஆச்சரியத்தில் வாய்பிளந்து நிற்பீர்கள்.

இவர் ஐந்து சாதனைகள் செய்திருக்கிறார். அதில் ஒன்று உலக சாதனை. அதென்ன? ஐ.க்யூ எனும் (IQ- Intelligent Quotient) நுண்ணறிவுத் திறன் சோதனையில் உலகிலேயே அதிக ஐ.க்யூ அளவாக 225 புள்ளிகள் பெற்று விசாலினி சாதித்துக் காட்டியிருக்கிறார்.

உலக அளவிலான ஐ.க்யூ வில் கின்னஸ் சாதனை படைத்திருப்பவர் கிம் யுங் யோங் (Kim Ung-Yong) என்ற சீனர். இவரது ஐ.க்யூ அளவு 210. அதைக் கடந்த ஆண்டு, ஐ.க்யூ. நிபுணர்கள் மத்தியில் நடத்தப்பட்ட பல கட்ட பரிசோதனைத் தேர்வுகளில் முறியடித்து, 225 என்ற அளவை எட்டிப்பிடித்திருக்கிறார்.

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் விசாலினியின் பெயர் இடம்பெற வில்லை. பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவரது சாதனை இடம்பெற முடியும். இதனால் தற்போது கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்துவிட்டுக் காத்திருக்கிறார்.

போதிய ஊடக கவனம் கிடைக்காமல் இருக்கிறார் இந்த அறிவுச்சுடர். மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை உருவாக்கிய பில் கேட்ஸின் ஐ.க்யூ. திறன் 160தான், உலக செஸ் சாம்பியன் பாலி பிஸ்சரின் ஐ.க்யூ திறன் 180தான் எனில் விசாலினியின் 225ஐ ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

விசாலினியின் சாதனைகள் பத்து வயதிலேயே தொடங்கி விட்டன. பாகிஸ்தானில் உள்ள பன்னிரண்டு வயது மாணவர் இரிடிசா ஹைதரின் சாதனையைப் பத்து வயதில் முறியடித்து THE YOUNGEST CCNA WORLD RECORD HOLDER என்ற உலக சாதனை படைத்துள்ளார்.

பதினான்கு வயதிற்குள் பள்ளிப் படிப்பிலும் இருமுறை டபுள் புரமோஷன் வாங்கியிருக்கும் இவள் படிப்பது பாளையங்கோட்டையில் உள்ள லட்சுமி ராமன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்.

கடந்த ஆண்டு மங்களூரில் நடைபெற்ற NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு, பன்னாட்டு அறிஞர்களோடு கணினியில் நெட் ஒர்க்கிங் தொழில்நுட்பம் குறித்து உரையாடினாள்.

விசாலினியின் அறிவுத்திறன் கண்டு வியப்புற்ற அவர்கள், நெட் ஒர்க்கிங் தொழில்நுட்பத்தில் இவளுக்கு முனைவர் பட்டம் வழங்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளனர். இதுவரை இதேபோன்ற ஏழு உலக தகவல் தொழில்நுட்ப மாநாடுகளுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு ‘கீ ஸ்பீச்’ கொடுத்திருக்கிறாள்.

சமீபத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அழைப்பை ஏற்று, அந்த வங்கியின் தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் ’ கவுரவப் பேரா சிரியராகக் கலந்து கொண்டு ‘கான்செப்ட் ஆஃப் நெட் ஒர்க்கிங் அண்ட் க்ளவுட் கம்ப் யூட்டிங்’ என்ற தலைப்பில் 2 மணி நேர விரிவுரையாற்றி வியக்க வைத்திருக்கிறார்.

இத்தனை சாதனைகள் படைத்துள்ள இவர் ஒருவயது வரை ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் சிரமப்பட்டி ருக்கிறாள். விசாலினியின் தாய் திருமதி.

சேதுராகமாலிகா, குழந்தை மருத்துவர் அளித்த ஆலோசனையின்படி, அவளுடன் இடைவிடாமல் பேசி, கதைகள் சொல்லி, ஸ்லோகங்கள் பாடிக் காட்டி விசாலினியின் பேசும் திறனை வளர்த்திருக்கிறார்.

இன்று விசாலினியின் நுண்ணறிவுத் திறனைக் கண்டு அறிஞர்கள் உலகம் வியந்துகொண்டிருக்கிறது. இந்தச் சாதனைச் சிறுமியின் தந்தை கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிஷியன்.

இதுவரை விசாலினி MCP (Microsoft Certified Professional) CCNA (Cisco Certified Network Associate), CCNA Security(Cisco Certified Network Associate Security), OCJP (Oracle Certified Java Professional) ஆகிய தேர்வுகளில் 90 சதவிகித மதிப்பெண்கள் பெற்று ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

தனக்கான இணைய தளத்தை யும் தனது மடிக்கணினி கொண்டு தானே வடிவமைத்திருக்கிறார். இவர் சாதனைகள் இப்போதைக்கு நிற்காது என்பது மட்டும் நிச்சயம்.

pv.rajsekar
pv.rajsekar
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 30/09/2014

Postpv.rajsekar Mon Jan 12, 2015 9:46 am

திரு. Ayyasamy ram இந்த தளத்தில் எவ்வாறு photos Upload செய்வது தெரியவில்லை. சொல்ல முடியுமா. கேள்வி பதில் பகுதியில் உள்ளது புரியவில்லை. மேலும் நான் Mobile ல் தான் இந்த தளத்திற்க்கு வருகிறேன். Please.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 12, 2015 1:16 pm


CCIE கணினி நெட்வொர்கிங் துறையில் பல வருடங்கள் பழம் தின்று கோட்டை போட்டவர்களுக்கே எட்டாக்கனியாக இருக்கிறது. சென்னையில் எனக்கு CCNA சொல்லிகொடுத்த ஆசிரியர் அப்பவே Networking துறையில் பல வருடங்கள் அனுபவம் வாய்ந்த ஒருவர் , அவரால் நான் சென்னையில் இருந்து வெளிநாட்டுக்கு வரும் வரைக்கும் பாஸ் பண்ண முடியவில்லை என கேள்விபட்டேன்.


Code:
நான் அடுத்து படிக்க உள்ள சி.சி.ஐ.இ., படிப்புக்கு கட்டணம், ஐந்து லட்சம் ரூபாயும், தேர்வுகளுக்கு 2 லட்சம் ரூபாய் வரையும் செலவாகும். மத்திய, மாநில அரசுகள் நான் மேலும் படித்து சாதனை படைக்க உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். எதிர்காலத்தில் சொந்தமாக நெட் ஒர்க்கிங் கம்பெனி ஒன்று துவங்கி மேலதிகாரியாகவும் செயல்பட விருப்பம் உள்ளது. இவ்வாறு விசாலினி தெரிவித்தார்.
விசாலினி இந்த தேர்வையும் வெற்றி பெற்று உலக அளவில் உள்ள CCIE க்களில் தானும் ஒருவர் என்ற பெயர் பெற வாழ்த்துகள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 12, 2015 2:02 pm

வாழ்த்துகள் விசாலினி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக