புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றவாளி !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 28, 2014 1:11 pm

"சே...என்ன பிழைப்புடா இது...'' என்று, நான் அங்கலாய்த்துக் கொண்டிருந்த மாலை நேரம். நான் கம்பவுண்ட்ராக இருந்த கிளினிக்கில் ஒரே கூட்டம். ஏற்கனவே நூத்தி சொச்சம் டோக்கன் ஓடி விட்டது. மணி ஆறு. இன்னும் டாக்டர் வந்தபாடில்லை. இப்போது வந்தால் தான் இரவு பதினொரு மணிக்காவது நான் வீட்டுப்பக்கம் தலை காட்ட முடியும். டாக்டர் இப்போது ஹாய்யாக டென்னிஸ் விளையாடிக் கொண்டிருப்பார்.

கிளினிக் வாசலில் ஒரே சத்தம். என்னவென்று பார்க்க ஓடினேன். தான் வந்து இறங்கிய ஆட்டோ டிரைவரைக் காய்ச்சு...காய்ச்சு என்று காய்ச்சிக் கொண்டிருந்தார், ஒரு மகானுபாவர். ஆனால், பாவம் அந்த ஆட்டோ டிரைவர் எதிர்ப் பேச்சு பேசாமல் தலையை குனிந்தபடி, அவரது திட்டுக்களை வாங்கிக் கொண்டிருந்தான். டாக்டருக்காக காத்துக் கொண்டிருந்த பொழுது போகாத நோயாளி ஒருவர் திட்டிக் கொண்டிருந்தவரிடம் போய், ""என்ன சார் ஆச்சு? என்ன செஞ்சான், இந்த ஆட்டோ டிரைவர்?,'' என்று கேட்டு எரிகின்ற தீயில் எண்ணெய் விட்டு வளர்த்து விட்டார்.

""நீங்களே கேளுங்க சார் நியாயத்தை. நான் பாட்டுக்கு தேமேன்னு கோவிலுக்கு போயிட்டு இருந்தேன். இவன் கண் மண் தெரியாம ஆட்டோவ ஓட்டிக்கிட்டு வந்து என் மேலே மோதிட்டான். பாருங்க
எப்படி ரத்தம் கொட்டுதுன்னு,''
""அப்படி என்னப்பா அவசரம் பார்த்து ஓட்டக் கூடாது? பாவம் பெரியவரு... அவருக்கு சுகர், பிரஷர்னு கம்ப்ளெயின்ட் வேற இருக்கும். அதோட சேத்து இது வேறயா?,''

அடிபட்டவர், ஆட்டோ டிரைவர் இருவரையுமே ஒரு சேர எரிச்சல் மூட்டுவதில் வல்லவராக இருந்தார், நியாயம் சொல்ல வந்தவர்.வேறு ஏதும் ரசாபாசம் ஆகுமுன் நான் அங்கே ஓடினேன்.
""பாத்தியா ராமு, இந்த ஆட்டோக்காரன் பண்ண அக்ரமத்தை. அவன் பாட்டுக்கு என்ன இடிச்சித் தள்ளிட்டான். முழங்கால்ல அடி. இங்கே மோவாய்க்கட்டைல காயம். நெத்தியில ஏதோ காயம். உள்காயம் என்ன பட்டுருக்கோ தெரியல. கட்டைல போற பய. நாய்க்கு பொறந்த பய...,'' வாய்க்கு வந்தபடி திட்டிக் கொண்டிருந்தவரைப் பார்த்து திடுக்கிட்டேன். இவர் ராமசாமி தானே? எங்கள் டாக்டரின் நெடுநாளைய பேஷன்ட். பயங்கரமான சண்டைக் கோழி.

வாயைத் திறந்தால் வையும் வார்த்தைகள் சரளமாக வந்து விழும். அதுவரை அடிபட்டவருக்காகப் பரிதாபப்பட்ட நான், அதன்பின் ஆட்டோ டிரைவருக்காகப் பரிதாபப்பட்டேன். பாவம் இந்த ராட்சசனிடம் மாட்டிக் கொண்டானே! எவ்வளவு திட்டுத் திட்டி எவ்வளவு பணம் பிடுங்கிக் கொண்டு விடப் போகிறாரோ தெரியவில்லை. பலியிடுவதற்கு முன் நடுங்கிக் கொண்டு நிற்கும் ஆடு மாதிரி தலையைக் குனிந்து கொண்டு நின்றிருந்தான் அட்டோ டிரைவர்.

""டேய் இங்க வாடா. என்னைக் கைத்தாங்கலாக் கூட்டிக்கிட்டு போய் அந்த பெஞ்சுல உக்கார வை,'' ஆட்டோ டிரைவரை அதட்டிக் கொண்டிருந்தார் ராமசாமி.

""டேய் எனக்கு மயக்கமா வருது. பக்கத்துல ஜூஸ் கடைல நிறைய குளுக்கோஸ் போட்டு சாத்துக்குடி ஜூஸ் வாங்கிட்டு வா. நான் பாட்டுக்கு மயங்கி விழுந்துட்டா, ஆக்சிடெண்ட் கேஸ் இன்னும் சிக்காலப் போயிரும்,'' ராமசாமியின் மிரட்டல்களைக் கேட்கவே வெறுப்பாக இருந்தது. நான் அந்த ஆட்டோ டிரைவராக இருந்தால் ராமசாமியை அடித்துப் போட்டு விட்டு சாகட்டும் என்று அப்படியே போயிருப்பேன். இவன் பாவம் நியாயத்துக்குப் பயந்து கொண்டு அவரை டாக்டரிடம் அழைத்து கொண்டு வந்திருக்கிறான்.

அவனை இப்படிச் சதாய்க்கிறாரே, இந்த மனுஷன் என்று வெறுப்பு ஏற்பட்டது.ஆட்டோ டிரைவரின் பரிதாபமான முகத்தைப் பார்த்தேன். எங்கள் ஏரியாக்காரன்தான். எங்கள் ஏரியா என்றால் இந்த ராட்சசன் ராமசாமியைப் பற்றி அவனுக்குத் தெரிந்திருக்குமே? அப்புறம் ஏன் ஆட்டோவை நிறுத்தி உதவி செய்தான்? சாகட்டும் என்று விட்டு விட்டுப் போயிருக்க வேண்டாமோ?

அடுத்த அரை மணி நேரத்தில் ராமசாமி அவனைச் சித்திரவதை செய்து விட்டார். அவனை அனுப்பித் தன் மகனை வீட்டிலிருந்து அழைத்து வரச் செய்தார். பின் மகனுக்குக் காபி வாங்கி வருமாறு கட்டளையிட்டார்.

எல்லாவற்றையும் பொறுமையாகச் செய்த ஆட்டோ டிரைவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. டாக்டர் வந்தவுடன் எப்படியாவது கெஞ்சிக் கூத்தாடி, இந்த ராமசாமியை முதலில் உள்ளே அனுப்பி விட வேண்டும். அந்த ஆட்டோ டிரைவருக்குச் சீக்கிரம் விடுதலை வாங்கித் தர வேண்டும் என்ற தவிப்பு என்னுள் ஏற்பட்டது.டாக்டர் வந்தவுடன் அவரை வழியிலேயே மடக்கித் தனக்கு அடிபட்ட விவரத்தைச் சொன்னார் ராமசாமி. கூடவே ஆட்டோ டிரைவருக்கு அர்ச்சனை வேறு. இப்போது கிளினிக்கில் காத்திருந்த மொத்த கூட்டத்தின் பார்வையும் ஆட்டோ டிரைவர் பக்கம் தான் இருந்தது.
என்னதான் தப்பு செய்து விட்டான் என்றாலும், ஒரு ஆளை இப்படியா வறுத்து வாயில் போட்டுக் கொள்வது?

டாக்டர் ராமசாமியை முதலில் உள்ளே அனுப்புமாறு சொன்ன போது, முன்னாலேயே டோக்கன் வாங்கிய யாரும் முணுமுணுக்கவில்லை. ஆட்டோ டிரைவரிடம் டாக்டர் பீஸ், மருத்துவ செலவு வாங்கிக் கொண்டு தன்னையும், தன் மகனையும் இலவசமாக வீட்டில் விட்டு விட்டுப் போகுமாறு சொல்லப் போகிறார் அந்த இரக்கமில்லாத மனிதர் என்று ஊகித்தேன்.
ராமசாமியை டாக்டர் உள் அறையில் பரிசோதித்துக் கொண்டிருந்த போது, ஆட்டோ டிரைவர் என்னைத் தனியாக அழைத்துக் கொண்டு போனான்.

""அண்ணே கையில இருக்கற பணம் செலவுக்குப் பத்தாது. நான் பக்கத்துல போய்ப் பணம் வாங்கிட்டு வந்துடறேன். அந்தாளு வெளியே வந்தா சொல்லிருங்க. அப்புறம் நான் விட்டுட்டுப் போயிட்டேன்னு கத்தப் போறான்.

ஆட்டோவ இங்கேயே வச்சிட்டு வாடகை சைக்கிள் எடுத்துட்டுப் போயிட்டு
வந்துடறேன்,''

எனக்கு அழுகையே வந்து விடும் போலிருந்தது.
""வாடகை சைக்கிள் எதுக்குப்பா?
என்னோட சைக்கிள் இருக்கு.
எடுத்துட்டுப் போ. இந்தா சாவி,''
""ரொம்ப தாங்க்ஸ் அண்ணே,''

""ஏம்ப்பா நாயை அடிப்பானேன்... னு ஒரு பழமொழி கேட்டிருக்கியா?''
சரியான ஆளைப் பார்த்து மோதினயா. நீயா இருக்கப் போய் இவ்வளவு பொறுமையா இருக்க. நானா இருந்தா இவன இன்னொரு தரம் ஏத்திக் கொன்னுட்டுப் போயிருப்பேன்,''
""அண்ணே நான், இந்தாள் மேல ஏத்தலண்ணே''

""ஏன்யா உனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு. நீ ஏத்தலைன்னா போடா நாயேன்னு விட்டுட்டுப்போக வேண்டியது தானே. அவன் உன்ன நாய் மாதிரி நடத்தறான். நீ அவன் தாடையைப் பிடிச்சிக் கொஞ்சிக்கிட்டு இருக்க?''

""இல்லைண்ணே இந்தாளு மேல ஆட்டோவ மோதினது என் பிரண்ட் அப்துல். அப்ப நான் அவன் கூட அதே ஆட்டோவுல வந்துக்கிட்டு இருந்தேன். அவன் மேல முழுத் தப்புன்னும் சொல்ல முடியாது. இந்தாள் மேலயும் முழுத் தப்புன்னு சொல்ல முடியாது. எதிர்பாராத ஆக்சிடன்ட். அவ்வளவுதான். அப்துல் இந்த ஏரியா இஸ்லாமிய சங்கத்துல ஏதோ பதவியில இருக்கான். இந்தாளும் ஏதோ இந்து மதம் சம்பந்தப்பட்ட சங்கத்துல இருக்கான்.

அப்துல் தான், இவன் மேல ஏத்தினான்னு தெரிஞ்சா இந்தாளு
அதப் பெரிய கலவரமாக ஊதிவிட்டுருவாண்ணே.

அப்புறம் வெட்டியா நாலஞ்சு உயிரு போகும். நம்ம எல்லோருக்கும் நாலு நாள் பொழைப்பு போகும். அதனால தான் இந்தாளு ஆட்டோல அடிபட்டுக் கீழ விழுந்து கிடக்கும் போது, நான் அப்துல போகச் சொல்லிட்டு, நான்தான் மோதினேன்னு சொல்லி கூட்டியாந்தேன்''

அந்த ஆட்டோ டிரைவரை நோக்கிக் கைகூப்பி வணங்கினேன்.

வரலொட்டி ரங்கசாமி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 28, 2014 1:39 pm

தலைவர்களுக்கு இல்லாத பொறுப்புணர்ச்சி சமுதாயத்தின் மீது ஆட்டோ ஓட்டுனருக்கு - நல்ல பகிர்வும்மா
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 28, 2014 1:45 pm

யினியவன் wrote:தலைவர்களுக்கு இல்லாத பொறுப்புணர்ச்சி சமுதாயத்தின் மீது ஆட்டோ ஓட்டுனருக்கு - நல்ல பகிர்வும்மா
மேற்கோள் செய்த பதிவு: 1111994

உங்களுக்கு தெரியுமா என்றுஎனக்கு தெரியலை..இந்த 'வரலொட்டி ரங்கசாமி' .......தான் 'ஸ்ரீதர்'.......indusladies இல் இருந்தார்........................இப்போவும் இருக்காரா என்று தெரியலை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Dec 28, 2014 1:47 pm

தெரியும்மா




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 28, 2014 2:46 pm

நல்ல கதை
நல்ல பகிர்வு .
நன்றி .
ரமணியன்

indus ladies --யினியவர்க்கு தெரியாமல் இருக்குமா ?

ர ..ன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Dec 28, 2014 10:54 pm

குற்றவாளி ! 3838410834



குற்றவாளி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுற்றவாளி ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குற்றவாளி ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 29, 2014 6:01 pm

நல்ல பொறுப்புணர்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக