புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_c10துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_m10துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_c10 
56 Posts - 73%
heezulia
துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_c10துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_m10துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_c10துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_m10துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_c10துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_m10துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_c10துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_m10துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_c10 
221 Posts - 75%
heezulia
துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_c10துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_m10துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_c10துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_m10துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_c10 
12 Posts - 4%

8 Posts - 3%
prajai
துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_c10துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_m10துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_c10துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_m10துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_c10துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_m10துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_c10 
3 Posts - 1%
Barushree
துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_c10துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_m10துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_c10துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_m10துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_c10துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_m10துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Dec 25, 2014 11:30 am

அழகு நிலையங்களிலும் அழகைப் பராமரிக்கும் பொருட்கள் சார்ந்த விளம்பரங்களிலும் சர்வசாதாரணமாக பயன்படுத்தும் வார்த்தை ’anti aging’.

சருமத்தைப் பராமரிக்கவும் சுருக்கங்களை நீக்கவும் பலவகை கிரீம்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. முதுமையைத் தள்ளிப்போட, இவை மட்டுமே போதுமா?

தோலின் சுருக்கம் மட்டுமே முதுமைக்கான அறிகுறியா? முதுமையைத் தள்ளிப்போட்டு இளமையைத் தக்கவைப்பது சாத்தியமா? அதற்கான வழிமுறைகள் என்னென்ன?

சென்னை அப்பல்லோவின் சரும நோய் நிபுணர் டாக்டர் கே.பிரியாவைச் சந்தித்தோம்.

சிலருக்கு இளம் வயதிலேயே சருமம் பாதிக்கப்படுவது ஏன்?

''நம் உடலின் முக்கிய உறுப்பு தோல். சிலருக்கு பரம்பரையாகவே, மாசு மருவற்ற பொலிவான சருமம் இருக்கும். வயதானாலும் தோலில் சுருக்கம், தலைமுடி நரைக்காது. ஆனால், சிலருக்கு இளம் வயதிலேயே தோல் வறண்டு, சுருக்கங்கள் ஏற்பட்டுவிடும். இதற்கு சருமத்தில் ஏற்படும் வறட்சிதான் காரணம்.''

எதனால் இந்தப் பாதிப்பு?

''சூரிய ஒளி மற்றும் செயற்கை விளக்குகளில் நீண்ட நேரம் இருப்பது, கம்ப்யூட்டர், ஐ-பேட் அதிகம் பயன்படுத்துவது, டிவியை அருகில் உட்கார்ந்து பார்ப்பது போன்ற காரணங்களால் புற ஊதாக் கதிர் பாதிப்பு ஏற்படுகிறது.

அதிக அளவில் அழகு நிலைய சிகிச்சைகள் மேற்கொள்வதும் இளமை சருமத்துக்கு ஆபத்துதான். உதாரணத்துக்கு... நம் நகத்தைச் சுற்றி, நகத்தையும் தோலையும் இணைக்கும் 'க்யூட்டிகிள்’ என்ற இயற்கையான பாதுகாப்பு, பாக்டீரியா மற்றும் பூஞ்சைக் காளான் கிருமிகளிலிருந்து காப்பாற்றும். பெடிக்யூர், மேனிக்யூர் செய்துகொள்ளும்போது கை, கால்களில் உள்ள அழுக்குடன் சேர்த்து 'க்யூட்டிகிள்’ பகுதியையும் எடுத்துவிடுவார்கள். இதனால், நோய்த்தொற்று நகத்துக்குள் எளிதாகப் புகுந்து, நகச்சுத்தி, நிறமாற்றம், சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நாம் பயன்படுத்தும், சில சரும சிகிச்சை சாதனங்களில் மஞ்சள், சந்தனம், கிளிசரின் மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரெஸ் பழங்களின் செயற்கை ரசாயனம் கலந்திருக்கலாம். அதில் தயாரிக்கப்பட்ட சோப், க்ரீம், பவுடரைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, அவை வெயிலை அதிகம் உறிஞ்சும் தன்மையை ஏற்படுத்தும். இதனால், முகத்தில் கரும்புள்ளிகள், மங்கு, தடிப்புகள் வரும். உதடு வறண்டு வெடித்துப் போகலாம்.

கேசத்துக்குப் பயன்படுத்தும் ஹேர் டையில் இருக்கும் 'பாராபினலீன் டையமின்’ (PPD) என்ற ரசாயனத்தால், முகத்தில், மங்கு, கரும்புள்ளிகள், சிவப்புத் தடிப்புகள், வெயிலால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் நொறுக்குத் தீனிகளை அடிக்கடி சாப்பிடுவதாலும், சீக்கிரமே வயோதிகத் தோற்றம் வந்துவிடும். அதிக மன அழுத்தமும் இளமையிலேயே முதுமைத் தோற்றம் வர ஒரு காரணம்.''

இந்தப் பாதிப்புகளிலிருந்து சருமத்தை எப்படிப் பாதுகாப்பது?

''தோல் சுருங்கி, பொலிவை இழப்பதற்கு தைராய்டு, ரத்தசோகை, சர்க்கரை நோய், சத்துக் குறைபாடு, நீர்ச்சத்துக் குறைபாடு, மன அழுத்தம் மற்றும் தவறான அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துதல் போன்றவற்றுள் ஏதேனும் ஒரு காரணம் என்றால், அவற்றுக்கு முதலில் தீர்வுகாண வேண்டும்.

புற ஊதாக் கதிர்களின் தாக்கத்திலிருந்து மீள, பருத்தி ஆடைகள் அணியலாம். சருமத்தை மறைக்கக்கூடிய க்ளோஸ் நெக், முழுக்கை ஆடைகளையும் பயன்படுத்தலாம்.

தினமும் மூன்று அல்லது நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். மோர், பழச்சாறு அல்லது இளநீர் குடிக்கலாம்.

'ஆன்டி ஆக்ஸிடன்ட்’ நிறைந்த மஞ்சள், ஆரஞ்சு, வெள்ளை, சிவப்பு, பச்சை நிறக் காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதன் மூலம் தோலின் இளமையைத் தக்கவைக்கலாம்.

வெண்ணெய், சீஸ், சாக்லேட், கேக், இனிப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

ரசாயனம் அதிகம் இல்லாத சோப், ஷாம்பூக்களை பயன்படுத்தவேண்டும். பகல்வேளையில், நம் உடலில் வெளியே தெரியும் பகுதிகளில், எஸ்.பி.எஃப்.25 (Sun Protection Factor 25) உள்ள 'சன் ஸ்கிரீன்’ லோஷனை நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை தடவிக்கொள்ளலாம்.

கடுமையான ரசாயனப் பொருட்கள் கலந்த டிடெர்ஜென்ட், சோப்களைப் பயன்படுத்தக்கூடாது. தவிர்க்க முடியாதபட்சத்தில், கையுறை அணிவது நல்லது.

தினமும் இரண்டு வேளை குளிக்கவேண்டும். அதில் ஒருமுறையாவது தலைக்குக் குளிக்க வேண்டும். வியர்வையினால், உடலில் துர்நாற்றம், பொடுகு, பூஞ்சைக் காளான் போன்ற நோய்த்தொற்று ஏற்படும்.

வறண்ட சருமத்தினர் குளித்ததும் கட்டாயம் நல்ல தரமான மாய்ச்சரைசர் பயன்படுத்த வேண்டும்.

தினமும் ஆறு முதல் ஏழு மணி நேரத் தூக்கம் கட்டாயம் தேவை. சீரான கால அளவு தூங்கும்போது, உடலிலுள்ள ஹார்மோன் சுரப்பும் சரியாக இருக்கும். முக்கியமாக, தோல் வளமாக இருக்கத் தேவையான 'குரோத் ஹார்மோன்’, அதிலிருந்து சுரக்கும் கொலாஜன், ஹையலூரானிக் ஆசிட் (Collagen & Hyaluronic acid) போன்றவற்றின் சுரப்பு நன்றாக இருக்கும். அதனால் தோல் சுருக்கம் அடையாது.

சத்தான உணவு, போதிய தூக்கம், 'போதும்’ என்ற மனம்... இவையே சுருக்கங்கள் அற்ற, இளமையான சருமத்தின் எளிய ஃபார்முலா!''

சிகிச்சை முறைகள்:

மைக்ரோடெர்மாப்ரேஷன் (Microdermabrasion): தோலில் உள்ள அழுக்கை உறிஞ்சி எடுத்து, கிறிஸ்டல் பாலீஷ் மற்றும் டயமண்ட் பாலீஷ் முறையால் சுருக்கங்கள், மாசு, பருக்கள் மற்றும் தழும்புகளை அகற்றலாம்.

'பீல்ஸ்’ (Peels): இந்த 'கெமிக்கல் பீலிங்’ முறையில், தோலின் பொலிவு, நிறத்தைக் கூட்டி, பருக்களைக் குறைக்கலாம்.

லேசர்: தேவையற்ற ரோமத்தை அகற்றி, தழும்புகளை நீக்கலாம்.

போடாக்ஸ்: முகத்திலுள்ள சுருக்கங்களை முற்றிலுமாக நீக்குவது. இதன் மூலம் முகத்தின் வடிவத்தையே மாற்றி அமைக்கலாம். தாடை, கழுத்து போன்ற இடங்களில் தளர்ந்த தோலை இறுக்கி, மாற்றி அமைக்கலாம். இது 6 மாத காலம் வரை மட்டுமே நீடிக்கும்.

ஃபில்லர்ஸ்: நம் தோலில் இருக்கும் சில பொருட்களைச் செயற்கையான முறையில் தயாரித்து, ஊசி மூலம் நிரப்புவதன் மூலம் ஒட்டிப்போன, தொங்கிப்போன கன்னங்களை சீராக்கலாம். மெல்லிய உதடுகளைப் பெரிதாகவும் அழகாகவும் வடிவமைக்கலாம்.

இவை எல்லாமே 5 - 10 நிமிடங்களில் செய்யக் கூடியவை. மேலும், இந்த சிகிச்சை முறையில் மருத்துவரிடம் இவற்றைச் செய்துகொள்ளும்போது, பக்க விளைவுகள் ஏதும் இருக்காது.

டாக்டர்விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 25, 2014 9:13 pm

யாருக்குதான் ஆசை இல்லை ,இளமையாக இருக்க .
ஆனாலும் செய்ய நினைக்கும் சில நற்காரியங்கள் ,
சோம்பலாலும் , நிதி நிலமையாலும் தள்ளித்..த....ள்...ளி....
போகின்றன . ஒரு காலகட்டத்தில் , இளமையாய் இருக்க வேண்டிய
அவசியம் இல்லாமல் போய் விடுகிறது .

ரமணியன் .

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 26, 2014 8:48 pm

இளமையைக் காட்டிலும் முதுமை அழகு. !
இளமையின் அழகு இருக்கும் வரை;
முதுமையின் அழகு இறக்கும் வரை .

-

-------------------
துரத்தும் முதுமை... காப்போம் இளமை! முதுமையில் இளமை! HsGH3PvnQtSwl21yRI2G+images(1)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 26, 2014 9:21 pm

நிறைய தண்ணீர் குடித்து வந்தாலே தோல் மினு மினுப்பாய் இளமையாய் இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 26, 2014 9:34 pm

அதான் நிறைய பேர் தண்ணி லே மிதக்கிறார்களோ !!
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக