புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்கழி மாத பலன்கள் ! Poll_c10மார்கழி மாத பலன்கள் ! Poll_m10மார்கழி மாத பலன்கள் ! Poll_c10 
32 Posts - 42%
heezulia
மார்கழி மாத பலன்கள் ! Poll_c10மார்கழி மாத பலன்கள் ! Poll_m10மார்கழி மாத பலன்கள் ! Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
மார்கழி மாத பலன்கள் ! Poll_c10மார்கழி மாத பலன்கள் ! Poll_m10மார்கழி மாத பலன்கள் ! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
மார்கழி மாத பலன்கள் ! Poll_c10மார்கழி மாத பலன்கள் ! Poll_m10மார்கழி மாத பலன்கள் ! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
மார்கழி மாத பலன்கள் ! Poll_c10மார்கழி மாத பலன்கள் ! Poll_m10மார்கழி மாத பலன்கள் ! Poll_c10 
2 Posts - 3%
prajai
மார்கழி மாத பலன்கள் ! Poll_c10மார்கழி மாத பலன்கள் ! Poll_m10மார்கழி மாத பலன்கள் ! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
மார்கழி மாத பலன்கள் ! Poll_c10மார்கழி மாத பலன்கள் ! Poll_m10மார்கழி மாத பலன்கள் ! Poll_c10 
2 Posts - 3%
Saravananj
மார்கழி மாத பலன்கள் ! Poll_c10மார்கழி மாத பலன்கள் ! Poll_m10மார்கழி மாத பலன்கள் ! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
மார்கழி மாத பலன்கள் ! Poll_c10மார்கழி மாத பலன்கள் ! Poll_m10மார்கழி மாத பலன்கள் ! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மார்கழி மாத பலன்கள் ! Poll_c10மார்கழி மாத பலன்கள் ! Poll_m10மார்கழி மாத பலன்கள் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்கழி மாத பலன்கள் ! Poll_c10மார்கழி மாத பலன்கள் ! Poll_m10மார்கழி மாத பலன்கள் ! Poll_c10 
398 Posts - 49%
heezulia
மார்கழி மாத பலன்கள் ! Poll_c10மார்கழி மாத பலன்கள் ! Poll_m10மார்கழி மாத பலன்கள் ! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
மார்கழி மாத பலன்கள் ! Poll_c10மார்கழி மாத பலன்கள் ! Poll_m10மார்கழி மாத பலன்கள் ! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
மார்கழி மாத பலன்கள் ! Poll_c10மார்கழி மாத பலன்கள் ! Poll_m10மார்கழி மாத பலன்கள் ! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மார்கழி மாத பலன்கள் ! Poll_c10மார்கழி மாத பலன்கள் ! Poll_m10மார்கழி மாத பலன்கள் ! Poll_c10 
26 Posts - 3%
prajai
மார்கழி மாத பலன்கள் ! Poll_c10மார்கழி மாத பலன்கள் ! Poll_m10மார்கழி மாத பலன்கள் ! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மார்கழி மாத பலன்கள் ! Poll_c10மார்கழி மாத பலன்கள் ! Poll_m10மார்கழி மாத பலன்கள் ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மார்கழி மாத பலன்கள் ! Poll_c10மார்கழி மாத பலன்கள் ! Poll_m10மார்கழி மாத பலன்கள் ! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மார்கழி மாத பலன்கள் ! Poll_c10மார்கழி மாத பலன்கள் ! Poll_m10மார்கழி மாத பலன்கள் ! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மார்கழி மாத பலன்கள் ! Poll_c10மார்கழி மாத பலன்கள் ! Poll_m10மார்கழி மாத பலன்கள் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்கழி மாத பலன்கள் !


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 16, 2014 8:48 pm

மார்கழி மாத பலன்கள் கணித்தவர்....ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

மேஷம்

பள்ளிப் பருவத்திலேயே வைராக்கியத்துடன் எதையும் செய்து முடிக்கும் நீங்கள், மனதில் பட்டதை பளிச்சென பேசு பழக்கம் உடையவர்கள். இந்த மாதத்தின் மத்தியப்பகுதி வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்றுக் காணப்படுவதால் தைரியம் பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்து ஏமார்ந்து போன உதவிகள் கிடைக்கும். பிரபலங்கள் பக்கபலமாக இருப்பார்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டாகும். கௌரவப் பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகர மாக முடிவடையும். ஷேர் மூலமாக பணம் வரும். எதிர்த்தவர்களெல்லாம் அடங்குவார்கள்.

வழக்குகள் சாதகமாகும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் நட்பு வட்டம் விரிவடையும். பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழிவகை பிறக்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட வகையில் யோசித்து தீர்வு காண்பீர்கள். உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் சனி நுழைந்திருப்பதால் மறதி அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும். அஷ்டமத்துச் சனி என்பதால் திருட்டு பயம் வந்து நீங்கும். தங்க ஆபரணங் களை வங்கி லாக்கரில் வைத்து பாதுகாப்பது நல்லது. குரு 4ல் நீடிப்பதால் அடுத்தடுத்து வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும்.

சிலர் உங்களை பயன்படுத்திக் கொண்டு தூக்கியெறிவார்கள். அதற்காக கலங்கிக் கொண்டிருக்காதீர்கள். தாயாரின் ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. அக்கம்-பக்கம் வீட்டாரை அனுசரித்துப் போங்கள். பிரச்னைகள் என்றால் பேசித் தீர்ப்பது நல்லது. வழக்கு என்றெல்லாம் அலைய வேண்டாம்.

மாணவ- மாணவிகளே! விடைகளை எழுதிப் பாருங்கள். மொழிப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வேதியியல் சமன்பாடுகளை எழுதிப் பார்ப்பது நல்லது. எல்லாம் தெரிந்ததுதானே என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்களைச் சுற்றியிருக்கும் நண்பர்களில் நல்லவர்கள் யார் என்பதனை இனம் கண்டறிய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மனஇறுக்கங்கள் குறையும். தாழ்வுமனப்பான்மையும் விலகும்.

அரசியல்வாதிகளே! வீண் பழி, சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள். வழக்குகள் சாதகமாகும். உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் ராகு நிற்பதால் வியாபாரம் சூடுபிடிக்கும். விற்பனை உயரும். பாக்கிகளும் வசூலாகும். வாடிக்கையாளர்களும் அதிகரிப்பார்கள். பங்குதாரர்கள் உங்களுடைய புதிய திட்டங்களை வரவேற்பார்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யும் அமைப்பு உருவாகும். அஷ்டமத்துச் சனி தொடங்கியிருப்பதால் வேலையாட்களிடம் வியாபார ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். உத்யோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். கோபப்பட்ட அதிகாரி உங்களிடம் சாந்தமாக நடந்து கொள்வார். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சிலருக்கு கன்னடம், ஹிந்தி மாநிலத்தில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

கலைத்துறையினரே! புதிய வாய்ப்புகள் கூடி வரும்.

விவசாயிகளே! பூச்சித் தொல்லை, எலித் தொல்லை குறையும். மகசூல் பெருகும். மாற்றுப் பயிர் மூலமாக ஆதாயமடைவீர்கள். யதார்த்தமான முடிவுகளும், சகிப்புத் தன்மையும் தேவைப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்: டிசம்பர் 16, 17, 25, 26, 27, ஜனவரி 2, 3, 4, 5, 11, 12, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 19ந் தேதி மாலை 3 மணி முதல் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: பழனி முருகனை வணங்குங்கள். தந்தையிழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 16, 2014 8:49 pm

உடுத்தும் உடையையும், உள்ளிருக்கும் மனசையும் வெள்ளையாக வைத்துக் கொள்ளும் நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். தன்மானத்தை விட்டுக் கொடுக்காதவர்கள். ஏறக்குறைய கடந்த இரண்டரை ஆண்டுகளாக உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் அமர்ந்திருந்த சனிபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 7ம் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார். பிரபல யோகாதிபதியான சனிபகவான் திக்பலம் பெறக்கூடிய வீடான ஏழாம் வீட்டிற்குள் நுழைந்திருப்பது உங்களுக்கு ஒருவகையில் ஆதாயம் உண்டாகும். கண்டகச் சனி தொடங்கியிருப்பதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும்.

உங்களுடைய ராசிக்கு 3ம் வீட்டில் குரு தொடர்வதால் புதிய முயற்சிகள் தடைபட்டு முடியும். அவசரப்பட்டு உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை கொட்ட வேண்டாம். உங்களைப் போலவே எல்லோரும் உண்மையானவர்களாகவும், சுயநலமில்லாதவர்களாகவும் இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள். உங்களுடைய ராசிக்கு 9ம் வீட்டில் செவ்வாய் உச்சம் பெற்று நிற்பதால் சகோதர வகையில் உதவிகள் உண்டு. புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மனைவிக்கு சேர வேண்டிய சொத்துகள், பாகப் பிரிவினைகள் நல்ல விதத்தில் முடிவடையும்.

உங்களின் சுகாதிபதியான சூரியன் 8ல் மறைந்திருப்பதால் வேலைச்சுமை அதிகமாகும். சூரியனுடன், சுக்கிரனும் சேர்ந்து நிற்பதால் வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். உங்கள் தன-பூர்வ புண்யாதிபதியான புதன் 28ந்தேதி முதல் 9ம் வீட்டில் நுழைவதால் ஓரளவு பணவரவு உண்டு. ஷேர் மூலமாகவும் பணம் வரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அவர்களால் கௌரவம் ஒருபடி உயரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 30ந் தேதி முதல் 9ல் நுழைவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். ராகு 5ல் நிற்பதால் கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் உங்களிடம் உரிமையாகப் பேசுவார்கள் அதை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

மாணவ-மாணவிகளே! கணிதப் பாடத்தில் அக்கறை காட்டுங்கள். விளையாடும்போது சின்னச் சின்ன காயங்கள் ஏற்படக்கூடும். வகுப்பறையில் வீண் அரட்டைப் பேச்சை தவிர்ப்பது நல்லது.

கன்னிப் பெண்களே! காதலும் கனியும், கல்வியிலும் அதிக மதிப்பெண் வரும். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! தலைமையைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். புது ஏஜென்சி எடுத்து நடத்தும் அமைப்பும் கூடி வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். மூத்த அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். சக ஊழியர்களின் விடுப்பாலும் உங்களுக்கு வேலைச்சுமை அதிகமாக இருக்கும். புதுவேலை மாறுவதில் அவசர முடிவுகள் வேண்டாம்.

விவசாயிகளே! வாய்க்கால், வரப்பு தகராறை பெரிதாக்க வேண்டாம். அக்கம்-பக்கம் நிலத்துக்காரருடன் நிதானமாக பேசுவது, பழகுவது நல்லது.

கலைத்துறையினரே! சின்னச் சின்ன வாய்ப்புகளாக இருந்தாலும் நழுவவிட வேண்டாம். அனுபவ அறிவை பயன்படுத்தி அமைதியாக காய் நகர்த்த வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்: டிசம்பர் 17, 18, 20, 24, 25, 27, 28, 29, 30, ஜனவரி 5, 6, 7, 8, 10, 14.  

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் எதிலும் நிதானித்து செயல்படப் பாருங்கள்.

பரிகாரம்: கும்பகோணம் - மயிலாடுதுறை மார்க்கத்திலுள்ள க்ஷேத்ரபாலபுரம் பைரவரை தரிசியுங்கள். அன்னதானம் செய்யுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 16, 2014 8:50 pm

மற்றவர்களின் தயவை எதிர்பார்க்காமல் தானே முயன்று முதலிடத்தை பிடிக்கும் வல்லமை கொண்ட நீங்கள், தான-தர்மம் செய்து கொண்டே இருப்பீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதிகளான சுக்கிரனும், புதனும் உங்கள் ராசிக்கு சாதகமான வீடுகளில் இந்த மாதம் முழுக்க பயணம் செய்வதால் இழுபறியாக இருந்த வேலைகள் நல்ல விதத்தில் முடியும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் விலகும்.

ஷேர் மூலம் பணம் வரும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வதற்கு வழி பிறக்கும். தள்ளிப்போன திருமணம் கூடி வரும். நட்பு வட்டம் விரிவடையும். பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். வழக்குகள் சாதகமாக முடியும். ஆனால், டிசம்பர் மாதம் வரை 8ம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் அலைச்சலும், செலவினங்களும் ஒருபக்கம் உங்களை அலைகழிக்கும். 1ந்தேதி முதல் செவ்வாய் 9ம் வீட்டில் நுழைவதால் மனஅமைதி உண்டாகும்.

எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். ஏறக்குறைய கடந்த இரண்டரை வருடங்களாக உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்து உங்களை பாடாய்ப்படுத்திய சனிபகவான் இப்போது 6ம் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார். எனவே குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். உங்களுடைய ராசிக்கு 4ம் வீட்டில் ராகு நிற்பதால் வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீட்டில் கூடுதல் அறை அமைப்பது, தளம் கட்டுவது நல்ல விதத்தில் முடிவடையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வேலையும் கிடைக்கும்.

மாணவ-மாணவிகளே! சமூக அறிவியல் பாடத்தில் கவனம் செலுத்துங்கள். கூடாப்பழக்க வழக்க முள்ளவர்களின் நட்பை தவிர்க்கப் பாருங்கள். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி உண்டு.

கன்னிப் பெண்களே! நட்பு வட்டம் விரிவடையும். நீங்கள் நினைத்தது போல நல்ல வரன் அமையும். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! மாதத்தின் பிற்பகுதியில் கோஷ்டி பூசல்கள் விலகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குரு 2ல் தொடர்வதால் வாடிக்கையாளர்கள், பங்குதாரர்களிடம் இங்கிதமாகவும், இதமாகவும் பேசி கவருவீர்கள். பற்று வரவு உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிக்கு கடையை மாற்றுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். மருந்து, கெமிக்கல், ஸ்டேஷனரி தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

தெலுங்கு, கன்னடம் பேசுபவர்கள் பங்குதாரர்களாக அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களுடைய ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் மூத்த அதிகாரிகள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், 10ல் கேது நிற்பதால் உங்கள் உழைப்பிற்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார். சிலர் உங்களுடைய சாதனை களை குறுக்கு வழியில் சென்று பறிக்க முயல்வார்கள். சூழ்ச்சிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.

கலைத்துறையினரே! முடங்கிக் கிடந்த உங்களுடைய படம் ரிலீசாகும்.

விவசாயிகளே! எண்ணெய் வித்துக்கள், பயிர் வகைகளால் லாபமடைவீர்கள். நெருக்கடியிலிருந்து நீந்தி, அதிரடி முன்னேற்றங்களை சந்திக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: டிசம்பர் 20, 21, 22, 23, 27, 28, 29, 30, 31, ஜனவரி 1, 6, 7, 8, 9.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் வீண் அலைச்சல் அதிகரிக்கும்.

பரிகாரம்: திருச்சி மலைக்கோட்டையில் குடிகொண்டிருக்கும் உச்சிப் பிள்ளையாரை தரிசியுங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்யுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 16, 2014 8:50 pm

புரட்சிகரமான சிந்தனையுடைய நீங்கள், தனக்கென துன்பம் வந்தாலும் கூட அடுத்தவர்களிடம் உதவி கேட்கத் தயங்குவீர்கள். ஏறக்குறைய கடந்த இரண்டரை ஆண்டுகளாக உங்களுடைய ராசிக்கு 4ம் வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களை நாலாவிதத்திலும் பாடாய்ப்படுத்திய சனிபகவான் இப்போது 5ம் வீட்டில் நுழைந்திருப்பதால் உங்களின் கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். அர்த்தாஷ்டமச் சனி விலகுவதால் தாயாரின் உடல்நிலை சீராகும். ஆனால், 5ம் வீட்டில் சனி நுழைந்திருப்பதால் பிள்ளைகளுடன் சின்னச் சின்ன மோதல்கள் வரும்.

சுக்கிரன் 29ந் தேதி வரை 6ல் மறைந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல் வரும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வாகனம் பழுதாகும். ஆனால், 30ந் தேதி முதல் சுக்கிரன் 7ல் அமர்வதால் அது முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகனப் பழுது சரியாகும். 28ந் தேதி முதல் புதன் சாதகமாவதால் நண்பர்களுடன் இருந்த மோதல்கள் விலகும்.

உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் 31ந் தேதி வரை 7ம் வீட்டில் உச்சம் பெற்று நிற்பதால் வீடு, மனை வாங்கும் அமைப்பு உருவாகும். பெற்றோருடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். கோபத்தை விட்டு விட்டு காரியத்தில் கவனம் செலுத்துவீர்கள். ஆனால், 1ந் தேதி முதல் செவ்வாய் 8ல் நுழைவதால் அலைச்சல், செலவினங்கள், திடீர் பயணங்களால் திணறுவீர்கள். உங்கள் ராசியிலேயே குரு அமர்ந்து ஜென்ம குருவாக தொடர்வதால் உங்களை நீங்களே சில நேரங்களில் குறைத்து மதிப்பிடுவீர்கள்.

மாணவ-மாணவிகளே! சந்தேகங் களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

கன்னிப் பெண்களே! மாதத்தின் பிற்பகுதியில் காதல் இனிக்கும். பெற்றோருடன் இருந்த மோதல் நீங்கும். உடல் உஷ்ணத்தால் தலைமுடி உதிரும். உணவில் காய், கனிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

அரசியல்வாதிகளே! எதிர்ப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும். ஆனால், கோஷ்டிப் பூசலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உங்கள் ராசிக்கு 3ல் ராகு நிற்பதால் தைரியமாக, தன்னிச்சையாக வியாபார சம்பந்தப்பட்ட முடிவுகள் எடுப்பீர்கள். பங்குதாரர்களுடன் மனத்தாங்கல் வரும். ஆனால், சாதுர்யமாகப் பேசி உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு அவர்களை ஒத்துக் கொள்ள வைப்பீர்கள்.

கமிஷன், புரோக்கரேஜ், ரியல் எஸ்டேட் மற்றும் மருந்து வகைகளால் லாபம் அதிகரிக்கும். மாதத்தின் பிற்பகுதியில் வேலையாட்களால் பிரச்னைகள் வந்து நீங்கும். உத்யோகத்தில் மாதத்தின் மையப்பகுதி வரை நிம்மதி உண்டு. வேலைச்சுமை குறையும். ஆனால், பிற்பகுதியில் மூத்த அதிகாரிகளுடன் பிணக்குகள் வரும். சக ஊழியர்களாலும் சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். புது வேலையில் சேருவது குறித்து அவசர முடிவுகள் வேண்டாம். வெளிநாட்டில் வேலை தேடுபவர்கள் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

கலைத்துறையினரே! மாதத்தின் பிற்பகுதியில் உங்களது படைப்புகள் பரவலாக பாராட்டிப் பேசப்படும். புது வாய்ப்புகளும் வரும்.

விவசாயிகளே! மரப்பயிர்கள், மூலிகைப் பயிர்களால் ஆதாயமடைவீர்கள். திட்டமிட்டு எதையும் செய்ய வேண்டிய மாதமிது.

ராசியான தேதிகள்: டிசம்பர் 16, 17, 18, 22, 23, 25, 31, ஜனவரி 2, 4, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம்.

பரிகாரம்: சென்னை-மயிலாப்பூர் கபாலீஸ்வரரையும் கற்பகாம்பாளையும் தரிசியுங்கள். ஏழை மாணவனின் கல்விச் செலவுக்கு உதவுங்கள்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 16, 2014 8:51 pm

வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்த நீங்கள், சின்னச் சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள தயங்க மாட்டீர்கள். உங்களின் ராசிநாதனான சூரியன் குருபகவான் வீட்டிற்குள் வந்து அமர்ந்திருப்பதால் நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். அரசு அதிகாரிகள் அறிமுகமாவார்கள். வீடு கட்டுவதற்கான கட்டிட வரைப்படத்திற்கு அனுமதி கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புதனும், சுக்கிரனும் மாதத்தின் முற்பகுதிவரை சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள்.

ஆனால், 28ந் தேதி முதல் புதனும், 30ந் தேதி முதல் சுக்கிரனும் 6ல் சென்று மறைவதால் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரும். உங்களுக்குச் சாதகமான வீடுகளில் யோகாதிபதியான செவ்வாய் சென்று கொண்டிருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் சக்தி கிடைக்கும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான குரு 12ல் மறைந்து கிடப்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். மகளுக்கும் அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிட்டும்.

புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்களுடைய ராசிக்கு 2ல் ராகு நிற்ப தால் கண்ணை பரிசோதித்துக் கொள்வது நல்லது. தொண்டை வலி, கழுத்து வலி வந்து நீங்கும். கேது 8ல் நிற்பதால் பிறர் உங்களை விமர்சித்து, குறைகூறிப் பேசினாலும் பொருட்படுத்த வேண்டாம். அமைதியாக இருப்பது நல்லது.

மாணவ-மாணவிகளே! கணிதப் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விடைகளை எழுதிப்பாருங்கள். வேதியியல் ஆய்வு கூடத்தில் பரிசோதனையின் போது அமிலங்கள் கை, காலில் விழுந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வைத்து விட்டு. உயர்கல்வியில் உங்களது கவனத்தை திருப்புங்கள். வேலைவாய்ப்பு மாதத்தின் இறுதிப் பகுதியில் கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! சட்டத்திற்கு புறம்பான வகையில் எதையும் செய்ய வேண்டாம். தொகுதி மக்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். மரியாதை கூடும். வியாபாரத்தில் சின்னச் சின்ன நஷ்டங்கள் வந்துபோகும். எதிர்பார்த்த ஆர்டர் தாமதமாக வரும். உங்கள் ராசிக்கு 4ல் சனி நுழைந்திருப்பதால் வேலையாட்களால் நிம்மதி குறையும். அதிக வேலையிருக்கும் நாட்களில் பணியாட்கள் விடுப்பில் செல்வார்கள். பல நேரங்களில் நீங்களே முதலாளி, நீங்களே தொழிலாளி என்ற வகையில் வேலை பார்க்க வேண்டி வரும். கட்டுமானப் பொருட்கள், உணவு, கெமிக்கல் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகஸ்தானத்தை சனி பார்க்கத் தொடங்கியிருப்பதால் வேலைச்சுமை அதிகமாகும். உங்களுக்கு நெருக்கமாக இருந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். சக ஊழியர்களிடம் அந்தரங்க விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். சிலர் கட்டாய விடுப்பில் செல்ல வேண்டியிருக்கும்.

கலைத்துறையினரே! ஏமாற்றங்களும், வீண் பழியும் வந்து நீங்கும்.

விவசாயிகளே! அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். எலித் தொல்லை குறையும். சிக்கனமும், பொறுமையும் தேவைப்படும் மாதமிது.

ராசியான தேதிகள்: டிசம்பர் 17, 18, 19, 24, 25, 26, ஜனவரி 2, 3, 12, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 28, 29 மற்றும் 30ந் தேதி காலை 9 மணி வரை பொறுமையாக இருப்பது நல்லது.

பரிகாரம்: கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருபுவனத்தில் அருளும் சரபேஸ்வரரை தரிசிப்பது நல்லது. கோயிலில் உழவாரப் பணிகளை மேற்கொள்ளுங்கள்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 16, 2014 8:52 pm


யதார்த்தமாகப் பேசும் நீங்கள், அவ்வப்போது கற்பனையில் மூழ்குவதுண்டு. தாராளமாக தர்மம் செய்யும் நீங்கள், பழைய கலைப்பொருட்களை பாதுகாப்பவர்கள். ஏறக்குறைய கடந்த எட்டு ஆண்டுகளாக உங்களை வாட்டி வதைத்த சனிபகவான் இப்போது உங்களது ராசிக்கு 3ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். தடைகளெல்லாம் நீங்கும். எதற்கெடுத்தாலும் மனதில் இருந்து வந்த பயஉணர்வு நீங்கும். கடைசி வரிசையில் அமர்ந்திருந்த நீங்கள், இனி முதல் வரிசைக்கு முன்னேறுவீர்கள். உங்களைப்பற்றி நீங்களே தரக்குறைவாக நினைத்துக் கொண்டீர்களே!

உங்கள் யோகாதிபதிகளான புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் இந்த மாதத்தில் வீடு, மனை வாங்குவது, தங்க ஆபரணங்கள் வாங்குவது போன்ற அமைப்புகள் உண்டாகும். 1ந் தேதி முதல் செவ்வாய் ராசிக்கு 6ல் நுழைவதால் பிள்ளைகளின் ஆரோக்யம் நன்றாக இருக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். சூரியன் உங்கள் ராசிக்கு 4ல் நுழைந்திருப்பதால் குலதெய்வப் பிரார்த்தனைகளை முடிப்பீர்கள். உங்களுடைய ராசிக்குள்ளேயே ராகு நிற்பதால் அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். 7ல் கேது நிற்பதால் மனைவியின் உடல் நிலை, ஆரோக்யம் பாதிக்கும். சில நேரங்களில் விரக்தியாகவும், வெறுப்பாகவும் பேசுவார்.

மாணவ-மாணவிகளே! மறதி நீங்கும். நினைவாற்றல் கூடும். வகுப்பாசிரியர் பாராட்டும்படி அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். விளையாட்டிலும் ஆர்வம் உண்டு.

கன்னிப் பெண்களே! போலியானவர்களை நம்பி ஏமாந்தீர்கள். உணர்ச்சி வேகத்தில் வந்த காதல் நீங்கி இனி உண்மை காதல் அரும்பும். பெற்றோரை பகைத்துக்
கொண்டீர்களே! இந்த மாதத்தில் அவர்களின் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றும் பணி நியமன உத்தரவு பெறாமல் இருந்தீர்களே! இப்போது அழைப்பு வரும்.

அரசியல்வாதிகளே! இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். மாநில அளவில் புதிய பொறுப்பில் அமர்த்தப்படுவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உற்சாகமாக இனி வியாபாரத்தை கவனிப்பீர்கள். சோர்வு, களைப்பு நீங்கும். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். பங்குதாரர்கள் பணிவார்கள். சிலர் ஒட்டுமொத்தமாக பங்குதாரர்களை மாற்றிவிட்டு புதுப் பங்குதாரரை சேர்ப்பீர்கள். நல்ல அனுபவமிக்க வேலையாள் மீண்டும் உங்களுடன் வந்து சேருவார். புதிதாக சேர்த்த வேலையாட்களை வெளியேற்றுவீர்கள்.

உணவு, வாகனங்கள், பெட்ரோ-கெமிக்கல், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் அதிகரிக்கும். பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். அரசாங்கத்தாலும் மறைமுக ஆதாயம் உண்டு. குரு லாப வீட்டில் நிற்பதால் புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்களை பழி வாங்கிய அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். புது அதிகாரி உங்களுக்கு சாதகமாக இருப்பார். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். அதே சம்பளத்துடன் கூடிய புது வேலையும் வரும். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டை நீங்கும். பூச்சித் தொல்லை விலகும். மகசூல் பெருகும். வருமானம் உயரும். கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புகள் தேடி வரும். நினைத்ததை முடிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: டிசம்பர் 18, 20, 21, 26, 28, ஜனவரி 4, 5, 6, 7, 8, 14.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 30ந் தேதி காலை 9 மணி முதல் 31 ஜனவரி 1ந் தேதி மதியம் 1.30 மணி வரை கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.

பரிகாரம்: திண்டிவனம் திந்திரீணீஸ்வரரை தரிசித்து வணங்கி வாருங்கள். ரத்த தானம் செய்யுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 16, 2014 8:53 pm

உள்ளம் அழுதாலும் உதட்டில் புன்னகையை தவழவிடும் நீங்கள், சூழ்ச்சிகளால் புறக்கணிக்கப்பட்டாலும் முடங்கி விடாமல் முயற்சி யால் முன்னுக்கு வருவீர்கள். கடந்த ஒருமாத காலமாக உங்களது ராசிக்கு 2ம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய சேமிப்புகளையெல்லாம் கரைத்த சூரியன் இப்போது உங்களுடைய ராசிக்கு 3ம் வீட்டில் நுழைந்திருப்பதால் வீண் செலவுகள் குறையும். திட்டமிட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாகும். எதிரிகள் அடங்குவார்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக உங்களுடைய ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்மச் சனியாக இருந்த சனிபகவான் இப்போது உங்களுடைய ராசியை விட்டு விலகியிருப்பதால் பெரிய நோய்கள் இருப்பதைப் போன்ற பிரமை வந்து நீங்கும். பாதச் சனி தொடங்கியிருப்பதால் சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். உங்கள் ராசிக்கு 10ல் குரு நீடிப்பதால் அவ்வப்போது தோற்றுவிடுவோமோ என்ற ஒரு பயம் வந்துபோகும். உங்களுடைய தகுதி, திறமை குறைந்துவிட்டதாக சில நேரங்களில் நினைத்துக் கொள்வீர்கள்.

செவ்வாய் மாதத்தின் மையப்பகுதி வரை சாதகமாக இருப்பதால் சொத்துப் பிரச்னை தீரும். உங்களுடைய ரசனைக்கேற்ப வீடு, மனை அமையும். சகோதர, சகோதரிகள் பக்கபலமாக இருப்பார்கள். மாமனார், மாமியார் வகையில் உதவிகள் கிடைக்கும்.

மாணவ-மாணவிகளே! சோம்பல், சலிப்பு, அலுப்பு நீங்கும். இனி விடியற்காலையில் எழுந்துப் படிப்பீர்கள். டி.வி., இ-மெயிலில் அதிக நேரம் போக வேண்டாம்.

கன்னிப் பெண்களே! ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். வேலை கிடைக்கும். உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு வரும். அலர்ஜி, மாதவிடாய்க் கோளாறு, அடிவயிறு வலியிலிருந்து விடுபடுவீர்கள்.

அரசியல்வாதிகளே! தொகுதி மக்களிடையே செல்வாக்குப் பெறுவீர்கள். ஆதாரப்பூர்வமாகவும், ஆணித்தரமாகவும் எதிர்க்கட்சியினர் மீது குற்றம்சாட்டி புகழடைவீர்கள். பேச்சுத் திறன் இனி அதிகரிக்கும். தலைமை உங்களை பாராட்டும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். கேது 6ல் தொடர்வதால் அயல்நாட்டிலிருப்பவர்கள், அண்டை மாநிலத்தில் இருப்பவர்களால் பண உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். சிலர் புது கிளைகள் தொடங்குவீர்கள்.

மின்னணு, மின்சாரம், பூ, கட்டுமானப் பொருள் விற்பனையால் லாபமடைவீர்கள். பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலையாட்களால் இருந்து வந்த பிரச்னைகள் ஓயும். விளம்பர யுக்திகளை கையாண்டு பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்ப்புகள் விலகும். வேலைச்சுமை குறையும். உயரதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் மதிக்கத் தொடங்குவார்கள். உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளால் புகழடைவீர்கள். பணமும் கைக்கு வரும்.

விவசாயிகளே! தண்ணீர் பஞ்சம் தீரும். தோட்டப் பயிர், மூலிகைப் பயிர்களால் ஆதாயமடைவீர்கள். தடைகள் பல வந்தாலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கரையேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: டிசம்பர் 20, 21, 25, 28, 29, 30, 31, ஜனவரி 7, 8, 9, 10.

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 1ந் தேதி மதியம் 1.30 மணி முதல் 2 மற்றும் 3ந் தேதி இரவு 8 மணி வரை வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: சிதம்பரத்தில் அருளும் தில்லைகாளியை தரிசித்து வணங்குங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 16, 2014 8:53 pm

பொதுவாக சட்ட திட்டங்களை மதிக்கும் நீங்கள் நியாய வாதிகளைக் காப்பாற்ற குறுக்கு வழியில் சில நேரங்களில் யோசிப்பீர்கள். உங்கள் ராசிநாதனான செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களுடைய ஆளுமைத்திறன் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். எதிர்பார்த்து ஏமார்ந்து போன தொகையும் கைக்கு வரும். குடும்ப வருமானத்தை உயர்த்துவதற்கான முயற்சி யில் ஈடுபடுவீர்கள். கடந்த இரண்டரை ஆண்டுகளாக உங்களுடைய ராசிக்கு 12ல் மறைந்திருந்த சனிபகவான் இப்போது உங்கள் ராசிக்குள் நுழைந்திருப்பதால் கோபம் அதிகமாகும்.

மறதியால் விலை உயர்ந்த ஆபரணங்களை இழக்காதீர்கள். உங்கள் ராசியை விட்டு விலகி சூரியன் 2ல் நிற்பதால் யதார்த்தமாகப் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வ தால் செல்வாக்கு கூடும். உங்களுடைய ராசிக்கு 5ல் கேது நிற்பதால் ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். அறிஞர்கள், ஆன்மிகவாதிகள் உதவிகரமாக இருப்பார்கள்.

பூர்வீகச் சொத்தை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சலும், செலவுகளும் இருக்கும். ஆனால், அவர்களால் அந்தஸ்து உயரும். குரு உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதாலும், முக்கிய கிரகங்களை பார்வையிடுவதாலும் சவாலான காரியங்களைக்கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். புதிய முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். தந்தைவழி சொத்து வந்து சேரும். பெற்றோருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

மாணவ-மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். நினைவாற்றல் அதிகரிக்கும். ஆனால், ஏழரைச் சனி நடைபெறுவதால் விடை களை எழுதிப் பார்ப்பது நல்லது. வகுப்பறையில் கடைசி வரிசையில் அமராதீர்கள்.

கன்னிப் பெண்களே! உங்களுக்கு இருந்து வந்த சோர்வு, களைப்பு நீங்கும். நல்ல வரன் அமையும். எதிர்ப்புகள் நீங்கும். நல்லவர்களின் நட்பும் கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். புதிய பதவிகள், பொறுப்புகள் கூடி வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும். பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். எலெக்ட்ரிக்கல், வீட்டு உபயோகப் பொருட்கள், கெமிக்கல், கட்டுமானப் பொருட்களால் லாபம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்களால் மகிழ்ச்சியடைவீர்கள். ஜென்மச் சனி தொடங்கியிருப்பதால் வேலையாட்களின் ஒத்துழைப்பு மந்தமாகத்தான் இருக்கும். இருந்தாலும் அன்பாகப் பேசி வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் இந்த மாதத்தில் நிம்மதி உண்டு. கடந்த மாதத்தில் இருந்த வேலைச்சுமை குறையும். சிறுசிறு அவமானங்கள் நீங்கும். அதிகாரிகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். சிலருக்கு புது வேலை கிடைக்கும். கன்னடம், மலையாளம் பேசுபவர்களால் நல்லது நடக்கும்.

கலைத்துறையினரே! புதிய வாய்ப்புகள் கூடி வரும். உங்கள் படைப்புகள் பரவலாக பாராட்டிப் பேசப்படும்.

விவசாயிகளே! விளைச்சல் அதிகமாகும். புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பீர்கள். சிலர் புது நிலம் கிரயம் செய்வீர்கள். தளராத மனசுடன் போராடி சாதிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: டிசம்பர் 16, 24, 25, 30, 31, ஜனவரி 1, 2, 9, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 3ந் தேதி இரவு 8 மணி முதல் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சகிப்புத் தன்மையுடன் செயல்படப் பாருங்கள்.

பரிகாரம்: சென்னை-திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை தரிசியுங்கள். கட்டிடத் தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 16, 2014 8:54 pm

எப்போதும் தியாகம் செய்து கொண்டிருக்கும் நீங்கள் முடியாது என்பதையும் கடின உழைப்பால் முடித்துக் காட்டுபவர்கள். கடந்த ஒருமாதமாக உங்கள் ராசிக்கு 12ல் அமர்ந்து உங்களுக்கு ஏகப்பட்ட செலவுகளையும், பிரச்னைகளையும் ஏற்படுத்திய சூரியன் இப்போது உங்கள் ராசிக்குள் நுழைந்திருப்பதால் வீண் செலவுகள், அலைச்சல்கள் குறையும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் விரைந்து முடியும். ஆனால், சூரியன் ராசிக்குள் நுழைந்திருப்பதால் உடல் உஷ்ணம் அதிகமாகும். கண் எரிச்சல், வயிற்றுவலி வந்து நீங்கும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும்.

உங்களின் பூர்வ புண்யாதி பதி செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் எல்லாவகையிலும் உங்களுக்கு முன்னேற்றம் உண்டு. குழந்தை பாக்யம் கிடைக்கும். வீடு மாற வேண்டுமென்று நினைத்தீர்களே! தெரு நன்றாக இருந்தால் வீடு நன்றாக இல்லை. வீடு நன்றாக இருந்தால் சுற்றுப்புறம் சரியாக இல்லையே என்ற நிலை மாறி இப்போது நல்ல வீடு அமையும். கடந்த இரண்டரை ஆண்டுகளாக உங்களுக்கு லாப ஸ்தானத்தில் அமர்ந்து உங்களுக்கு ஓரளவு நன்மையையும், யோகத்தையும் கொடுத்த சனிபகவான் இப்போது ராசிக்கு 12ல் மறைந்திருப்பதால் அடுத்தடுத்த செலவுகள், மனஇறுக்கம் அதிகமாகும்.

யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவர்களுக்கு பணம் தர வேண்டாம். உங்கள் ராசிநாதன் குரு உச்சம் பெற்று காணப்படுவதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். ஆனால் 8ல் மறைந்திருப்பதால் அடுத்தடுத்த செலவுகளும், பயணங்களும் இருக்கும். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் உறவினர், நண்பர்களுடன் கருத்து மோதல்கள் வரும். சின்னச் சின்ன பிரச்னைகள் பெரிதாக வாய்ப்பிருக்கிறது.

மாணவ-மாணவிகளே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அலட்சியம் வேண்டாம். அன்றைய பாடங்களை அன்றே முடிப்பது நல்லது.

கன்னிப் பெண்களே! நல்ல வரன் அமையும். வேலை கிடைக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கட்சி மேல்மட்டம் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைக்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். கமிஷன், புரோக்கரேஜ், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் உண்டு. பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் செல்வாக்குக் கூடும். ஆனால், 10ல் ராகு நிற்பதால் அவ்வப்போது வேலைச்சுமை இருக்கும். சக ஊழியர்களின் விடுப்பாலும் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். எதிர்ப்புகளும் இருக்கும்.

கலைத்துறையினரே! எதிர்பார்த்த நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் வரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

விவசாயிகளே! மஞ்சள், கரும்பு, எண்ணெய் வித்துக்களால் ஆதாயமடைவீர்கள். வாய்க்கால், வரப்புச்சண்டை வந்துபோகும். தொலை நோக்குச் சிந்தனையால் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: டிசம்பர் 16, 17, 18, 25, 26, 27, ஜனவரி 2, 3, 4, 5, 12, 13, 14.

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 6, 7 மற்றும் 8ந் தேதி மாலை 4 மணி வரை எதிலும் முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள்.

பரிகாரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளை தரிசித்து வாருங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு இயன்ற அளவு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 16, 2014 8:55 pm

எல்லாம் தெரிந்திருந்தாலும் அடக்கமாக இருக்கும் நீங்கள், சண்டை சச்சரவு என வந்துவிட்டால் பதுங்கமாட்டீர்கள். அடுத்தவர் சொத்திற்கு ஆசைபட மாட்டீர்கள். உங்கள் ராசிநாதன் சனிபகவான் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது லாப வீட்டில் நுழைந்திருப்பதால் உங்களுடைய அந்தஸ்து, தகுதி உயரும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு உண்டு. சிலருக்கு ஷேர் மூலமாகவும் பணம் வரும். உங்களுடைய ராசிக்குள்ளேயே செவ்வாய் நிற்பதால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள்.

1ந் தேதி முதல் செவ்வாய் உங்கள் ராசியை விட்டு விலகுவதால் கோபம் குறையும். எதிர்ப்புகள் நீங்கும். சச்சரவுகளும் குறையும். வழக்குகள் சாதகமாகும். சூரியன் ராசிக்கு 12ல் நுழைந்திருப்பதால் தவிர்க்க முடியாத செலவுகளும், சிக்கல்களும் இருந்து கொண்டிருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையையும் முடிப்பீர்கள். கோபம் குறையும். பூர்வீக சொத்தை சீர்திருத்தம் செய்வீர்கள். உங்களுக்கு சாதகமான வீடுகளில் சுக்கிரனும் சென்று கொண்டிருப்பதால் தடைபட்ட திருமணம் கூடி வரும்.

விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் உதவிகள் உண்டு. மனைவி வழியில் சொத்துகள் வரவும் வாய்ப்பிருக்கிறது. அரசு காரியங்கள் இழுபறியாகி முடியும். உங்கள் யோகாதிபதியான புதனும், சுக்கிரனும் மாதத்தின் மையப்பகுதியிலிருந்து வலுவடைவதால் வருமானம் உயரும். வசதி, வாய்ப்புகள் கூடும். புது வாகனம் வாங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்த சச்சரவுகள் விலகும். வழக்கு சாதகமாகும்.

மாணவ-மாணவிகளே! படிப்பில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.

கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். எதிர்பார்த்தது போல் நல்ல வரன் அமையும். உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பிறமொழிக்காரர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள்.

அரசியல்வாதிகளே! சகாக்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். கட்சி மேல்மட்டத்தைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அவர்களால் இந்த பிரச்னைகள் விலகும். புது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இரும்பு, உணவு, போர்டிங், லாட்ஜிங், பெட்ரோ-கெமிக்கல் மூலமாகவும் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் தொல்லை தந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். புது அதிகாரி உங்களை மதிப்பார். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.

விவசாயிகளே! தண்ணீர் பற்றாக்குறை தீரும். ஊரில் மதிப்பு, மரியாதைக் கூடும். புது யுக்திகளை கையாண்டு விளைச்சலை அதிகப்படுத்துவீர்கள்.

கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புத் திறன் வளரும். மக்கள் மத்தியில் பிரபலமாவீர்கள். எதிர்பாராத திடீர் திருப்பங்களும், பணவரவும் அதிகரிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: டிசம்பர் 20, 21, 27, 28, 29, 30, 31, ஜனவரி 4, 5, 6, 7, 14.

சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 8ந் தேதி மாலை 4 மணி முதல் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

பரிகாரம்: பட்டீஸ்வரம் துர்க்கையை தரிசித்து வாருங்கள். கட்டிடத் தொழிலாளர்களுக்கு இயன்றவரை உதவுங்கள்.





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக