புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 24/11/2024
by mohamed nizamudeen Today at 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_c10ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_m10ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_c10 
5 Posts - 71%
mohamed nizamudeen
ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_c10ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_m10ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_c10 
2 Posts - 29%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_c10ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_m10ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_c10 
423 Posts - 73%
heezulia
ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_c10ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_m10ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_c10 
91 Posts - 16%
mohamed nizamudeen
ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_c10ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_m10ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_c10 
21 Posts - 4%
E KUMARAN
ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_c10ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_m10ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_c10ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_m10ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_c10 
8 Posts - 1%
prajai
ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_c10ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_m10ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_c10ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_m10ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_c10 
6 Posts - 1%
kaysudha
ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_c10ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_m10ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_c10ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_m10ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_c10 
4 Posts - 1%
sram_1977
ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_c10ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_m10ஸ்ரீ ராகவேந்திரர்  சென்ற யாத்திரைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ ராகவேந்திரர் சென்ற யாத்திரைகள்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Sep 24, 2008 3:03 am

ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் தமது ஆச்சாரியரின் எல்லா நூல்களையும் மாணவர்களுக்குக் கற்பிக்கத் துவங்கினார். அவர் சரியான அறிவை மக்களிடம் பரப்பத் துவங்கினார். தர்ம மார்க்கத்திற்கு எதிரானவர்களைத் தோற்கடித்தார். அறிவுப் பிரச்சாரம், மாணவர்களுக்கு வழி காட்டுதல் இவற்றுடன் பின் வரும் சந்ததிகளுக்காக அநேக நூல்களையும் இயற்றினார்.


பீடாதிபதியாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதும் ஸ்ரீ சுவாமிகள் வெவ்வேறு ஊர்களுக்குத் தலயாத்திரையை மேற்கொண்டார். ‘த்யுபுரி’க்கும்,’பரிபூரணதேவநகர’ என்ற இடங்களுக்கும் சென்ற பின்னர் 'மணிஸ்ருங்க’ என்ற இடத்தில் பொது மக்களின் நலன் கருதிப் ‘பிரமாண பத்ததி’ போன்ற நூல்களைக் கற்பித்தார். இப்பெரும் நூல்களுக்குத் துணை விளக்க உரைகள் எழுதினால் மக்கள் எளிதாகப் புரிந்து கொள்வார்கள் என்று நினைத்து இங்கு பிரமாண பத்ததி, பிரமாண லஷண, வாதாவளி போன்ற நூல்களுக்கு ‘பவதீபங்கள்’ என்று அழைக்கப்படும் சிறு விளக்கங்களை எழுதினார்.

சுவாமிகள் ராமேஸ்வரத்திற்கும், மதுரைக்கும் தல யாத்திரை மேற்கொண்டார். அந்நாளில் மதுரை கல்வியின் கேந்திரப் பிந்துவாக விளங்கிற்று. அங்கு நீலகண்ட தீக்ஷ¢தர் என்ற பேரறிஞர் இருந்தார். ஸ்ரீ சுவாமிகள் தெளிவாகவும், வலுவாகவும் வாதித்த முறையைக் கேட்டு சுவாமிகளின் ஆசிரியர் உண்மையிலேயே பிரம்ம ஞானி என்று செவ்வனே உணர்ந்து கொண்டார். நீலகண்ட தீக்ஷ¢தர் ஸ்ரீ சுவாமிகளைப் பல்வேறு சூத்திரங்களைக் குறித்து வினவிய பொழுது ஸ்ரீ சுவாமிகள் தான் அப்பொழுதே முடித்திருந்த ‘பட்ட சங்கிரஹா’ என்ற நூலைக் காண்பித்தார். ஸ்ரீ மத்வாச்சாரியாரின் வேதாந்தத்தை மிகத் தெளிவாக விளக்கும் அந்த நூலின் ஆழத்தைக் கண்டு மிகவும் வியந்த அவர் அந்த நூலை யானையின் மீது வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்று சிறப்பித்தார். ஸ்ரீ ரங்கத்தில் உபநிஷத்துகளைப் பற்றி, குறிப்பாக ‘ஈசாவாஸ்ய உபநிஷத்’தைப் பற்றி சிறப்பான விரிவுரைகளை ஆற்றினார். அவருடைய சீடர்கள் அவரிடம் எல்லா உபநிஷத்துக்களின் (மந்திரங்களின் பொருள்) பொருளுடன், விளக்கவுரையையும், சிறப்புரையையும் எழுதுமாறு கேட்டுக் கொண்டனர். அவர் ஈசாவாஸ்ய, தலவாகார, காடகா, ஷட்ப்ரஷ்ண, முண்டக, தைத்ரிய பிருஹதாரண்யக, சாண்டோக்ய உபநிஷத்துகளின் மீது விசேஷ உரைகளை எழுதினார். அயித்ரேய உபநிஷத்தின் மீதும் விசேஷ உரையை எழுத நினைத்திருந்தார். அவருடைய சீடர் ’ஸ்மிருதி முக்தாவலி கிருஷ்ணாசார்யா’ என்பவர் அயித்ரேய உபநிஷத்தின் உரையை எழுதி முடித்து விட்ட படியால் அவரைக் கௌரவிக்கும் பொருட்டு சுவாமிகள் அவ்வுரையை எழுதும் எண்ணத்தைக் கை விட்டு விட்டார். ஆனால் ராகவேந்திர சுவாமிகள் எல்லா உபநிஷத்துகளின் மீதும் விசேஷ உரையை எழுதுவதாகத் தான் சொன்ன வாக்கை நிலை நிறுத்தும் பொருட்டு’அயித்ரேய உபநிஷத் சங்க்ரஹா’ என்னும் விசேஷ உரையை (அயித்ரேய உபந்நிஷத்தின் மந்திரப்பகுதியை மட்டும் கொண்டது) எழுதினார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Sep 24, 2008 3:04 am

சுவாமிகள் விஷ்ணு மங்களா என்ற ஊருக்குச் சென்றார். அங்கு திரிவிக்ரம பண்டிதாசாரியார் என்பவர் பதினைந்து நாட்கள் ஸ்ரீ மத்வாச்சாரியாருடன் வாதித்து இறுதியில் அவருடைய அபிமான சீடரானார். பின்னர் அவர் சுப்ரமண்யாவிற்கும், உடுப்பிக்கும் சென்றார். அங்கு ‘ஸர்வ மூல கிரந்தத்தின்’ மீது உபன்யாசம் நிகழ்த்தினார். அவர் ‘வியாசராய தாத்பர்ய சந்திரிகா’ என்னும் நூலுக்குச் ‘சந்திரிகா பிரகாஷா’ என்னும் விசேஷ உரையை எழுதினார். தன் மாணவர்கள் அந்த நூலின் கடினமான உரையைப் புரிந்துக் கொள்ளச் சிரமப்படுவதைக் கண்டு சூத்திரங்களின் பொருளைத் ‘தந்திர தீபிகா’ என்னும் நூலாகவும், அதிகரணங்களின் பொருளை ‘நியாய முக்தாவலி’ என்னும் நூலாகவும் எழுதினார். உடுப்பியில் ஸ்ரீ கிருஷ்ணரின் மீது ‘இந்து எனகே கோவிந்தா’ என்னும் புகழ் பெற்ற பாடலை இயற்றிப் பாடினார்.
பிடாரஹள்ளி என்ற ஊரில் இல்லறத்தில் இருந்து கொண்டே மிகச் சிறந்த கல்விமானாக விளங்கிய ஸ்ரீனிவாசாசார்யா என்னும் பேரறிஞரைச் சந்தித்தார். அவர் எழுதிய விசேஷ உரைகள் ஏற்கனவே மிகவும் சிறப்பானவை. ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் அவருடைய படைப்புகளைப் பர்¢சோதனை செய்து பார்த்து மகிழ்ந்தார். இல்லறத்தில் இருந்தவாறு பேரறிவைப் பெருக்கிக் கொண்டும், வேண்டி வருவோருக்கு பகிர்ந்தளித்துக் கொண்டும் சிறப்பாகப் பணியாற்றிய அவரைப் பாராட்டி ஸ்ரீனிவாச தீர்த்தர் என்ற பெயரைச் சூட்டினார்.
பிடாரஹள்ளிக்குப் பிறகு சுவாமிகள் பண்டரிபுர், கோல்ஹாபுர், பீஜாப்புர் சென்று மாயாவாதிகளைத் தோற்கடித்துக் கொண்டும், தத்வ வாதத்தைப் பரப்பிக் கொண்டும், தேடி வரும் மக்களுக்குத் ‘தப்த முத்ரா தாரணம்’ என்னும் வைஷ்ணவ சம்பிரதாய தீஷை கொடுத்துக் கொண்டும் தல யாத்திரை மேற்கொண்டார். கிருஷ்ணா நதிக்கரையில் அவர் தங்கியிருந்த பொழுது ‘பவதிபா’ என்ற பெயரில் ‘தத்வ பிரகாஷிகா’ என்னும் நூலுக்கு விளக்க உரை எழுதினார். அவர் ‘அனுபாஷ்ய’த்திற்குத் ‘தத்வ மஞ்சரி ‘ என்னும் நேர்முக விளக்கவுரை எழுதினார்.

‘காகினி’ நதிக்கரையில் அமைந்துள்ள ‘மால்கேட்’ என்ற ஊரில் சுவாமி ஸ்ரீ ஜெய தீர்த்தரின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. இங்கு சுவாமிகள் தான் கற்பித்தவற்றிற்கும், தன்னுடைய சொற்பொழிவுகளுக்கென்றுமாகச் ‘சுத்த மங்களா’ என்ற விழாவைக் கொண்டாடச் செய்தார். ஸ்ரீ ராகவேந்திரர் எவ்வாறு காகினி நதியானது முதலில் பீமா நதியை அடைந்து, பிறகு கிருஷ்ணா நதியை அடைந்து, பின்னர் இறுதியாகச் சமுத்திரத்தை அடைகிறதோ, அதே போன்று ஜெயதீர்த்தரின் எழுத்துக்கள் மத்வாச்சாரியரின் ‘பாஷ்யங்களை’ விளக்குவதாகவும், அவருடைய பாஷ்யங்கள் சுத்த சத்வ குணக்கடலான ஸ்ரீ கிருஷ்ணரை வருணிப்பதாகவும் கூறுகிறார்.

சாலைகள் சிறப்பாக அமையாத, பயண வசதிகள் செவ்வனே இல்லாத அந்தக் கால கட்டத்திலும் திருப்பதி, கும்பகோணம், ஸ்ரீ சைலம் என்று அவருடைய பயணம் தொடர்ந்த பொழுதும், சாதகருக்குக் கற்பிப்பதையும், தாம் எழுதுவதையும் ஸ்ரீ சுவாமிகள் விடாது தொடர்ந்தார். ஸ்ரீ ஜெயதீர்த்தரின் 18 நூல்களுக்கும் விளக்கவுரை எழுதுவேன் என்று சபதம் செய்து கொண்ட அவர் பதினேழு நூல்களுக்கும் விளக்க உரையை எழுதி முடித்தார். அவர் தந்திர சாஸ்திரத்தின் மந்திரங்களுக்குப் பொருள் விளக்கமாக ‘மந்திரோத்தாரா’ என்னும் நூலை எழுதினார். தந்திர சாஸ்திரத்தின் படி ஸ்ரீ ஹரியின் கிருபைக்குப் பாத்திரமான தூய வாழ்க்கை வாழ்பவர்கள் மந்திரங்களின் பொருளை அறிந்து பல செயற்கரிய செயல்களைச் செய்யலாம். தத்வ வாதத்திற்குப் புத்துணர்வூட்ட அவர் ஆற்றிய பங்கு மகத்தானது. ஸ்ரீ லஷ்மி நாராயணனின்’ அருளால் அநேக அத்வைத பண்டிதர்களை அனைவரும் சிலாகிக்கும் முறையில் தோற்கடித்தார்.

http://ஈகரைகுரு.blogspot.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக