புதிய பதிவுகள்
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_m10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10 
113 Posts - 75%
heezulia
விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_m10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_m10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_m10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_m10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_m10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10 
1 Post - 1%
Pampu
விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_m10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_m10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10 
278 Posts - 76%
heezulia
விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_m10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_m10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_m10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10 
8 Posts - 2%
prajai
விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_m10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_m10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_m10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_m10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10 
3 Posts - 1%
Barushree
விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_m10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_m10விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 3 Mar 2009 - 13:18

விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ் Cmalarnews_24084109068


விண்டோஸ் ஸ்பெஷல் டிப்ஸ்


விண்டோஸ் இயக்கத் தொகுப்பு (எக்ஸ்பி மற்றும் விஸ்டா) பயன்படுத்துபவர்களுக்கு உதவியாகப் பல சுருக்கு வழிகள் உள்ளன. இவற்றை அறியாமல் பலர் தங்கள் நேரத்தைச் செலவழித்துச் சுற்றி வளைத்துப் பணியாற்றுவார்கள். எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சில சுருக்கு வழிகளை இங்கு பார்க்கலாம்.

1. டாஸ்க் பாரிலிருந்து மை டாகுமென்ட்ஸ்:


டாஸ்க்பாரில் காலியாக உள்ள இடத்தில் மவுஸைக் கொண்டு ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் டூல்பார்ஸ் என்பதிலிருந்து நியூ டூல்பார் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் மை டாகுமெண்ட்ஸ் போல்டர் கிடைக்கும். விஸ்டா என்றால் டாகுமெண்ட்ஸ் கிடைக்கும். ஓகே கிளிக் செய்து போல்டர் பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். இனி மேல் டாஸ்க் பாரில் வலது மூலையில் மை டாகுமெண்ட்ஸ் போல்டர் உங்களின் உடனடி செயல்பாட்டிற்காகக் கிடைக்கும். விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று மை டாகுமெண்ட்ஸ் போல்டரைத் தேடி அலைய வேண்டியதில்லை.


2. கிராஷ் – போல்டர்களைக் காப்பாற்றலாம்:


விண்டோஸ் சிஸ்டத்தில் பணியாற்றுகையில் பல போல்டர்களைத் திறந்து வைத்துச் செயல்பட்டுக் கொண்டிருப்பீர்கள். ஏதேனும் ஒரு போல்டர் கிராஷ் ஆனால் அனைத்தும் உங்களின் விருப்பத்திற்குக் காத்திராமல் மூடப்பட்டுவிடும். இது உங்களுக்கு எரிச்சலைத் தரும். மற்றவை ஏன் மூடப்பட வேண்டும்? என்ற கேள்வி மனதில் எழும். இதனை ஒரு ஆப்ஷன் தேர்வு செய்வதன் மூலம் தவிர்க்கலாம். கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுக்கவும். அதில் போல்டர் ஆப்ஷன்ஸ் என்பதற்குச் செல்லவும். கிடைக்கும் விண்டோவில் போல்டர் ஆப்ஷன்ஸ் என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு வியூ டேப் கிளிக் செய்து பின் அதில் கிடைக்கும் ஆப்ஷன்ஸ்களைப் பார்க்கவும். இங்கு ‘Launch Folder Windows in a separate Process’ என்ற பிரிவினைக் காணவும். இதன் அருகே ஒரு டிக் அடையாளம் ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி ஒரு போல்டர் கிராஷ் ஆகும் போது மற்றவை கிராஷ் ஆகாமல் உங்களுக்குக் கிடைக்கும்.

3. மெமரியைக் காப்பாற்றுங்கள்:


விண்டோஸ் இயக்கத்தில் பல புரோகிராம்களை இயக்குகையில் விண்டோஸ் அவற்றின் டி.எல்.எல். பைல்களை மெமரியில் வைத்துக் கொள்கிறது. ஆனால் புரோகிராம்கள் மூடப்படுகையில் இந்த டி.எல்.எல். பைல்கள் அப்படியே மெமரியில் அமர்ந்து கொள்கின்றன. அவை நீக்கப்படுவதில்லை. ராம் மெமரியில் இவை அமர்ந்து கொள்வதனால் அடுத்து வரும் புரோகிராம்கள் இயங்க சற்று கால தாமதம் ஆகிறது. இதற்கான தீர்வு உள்ளது. ஆனால் நீங்கள் தைரியமாக விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியை எடிட் செய்திட வேண்டும். இதில் பழக்கம் இல்லாதவர்கள் இந்த டிப்ஸைத் தயவு செய்து விட்டுவிடவும்.


ஸ்டார்ட் கிளிக் செய்து அதில் ரன் விண்டோவினைப் பெறவும். அதில் regedit என டைப் செய்து என்டர் தட்டவும். அடுத்து சிறிது கவனமாகச் செயல்படவும். HKEY_LOCAL_MACHINE என உள்ள இடத்திற்கு அருகே உள்ள + அடையாளத்தில் கிளிக் செய்திடவும். அதன் பின் SOFTWARE, Microsoft, Windows, Current Version ஆகியவற்றில் வரிசையாகக் கிளிக் செய்திடவும். பின்னர் இதில் Explorer போல்டரைத் தேர்ந்தெடுக்கவும். பின் Edit, New DWORD Value கிளிக் செய்து செல்லவும்.புதிய என்ட்ரியாக Always Unload Dll என்பதைக் கிளிக் செய்து என்டர் தட்டவும். பின் அதில் டபுள் கிளிக் செய்து அதற்கு வேல்யூவாக 1 தரவும். இனி டி.எல்.எல். பைல்கள் புரோகிராம் முடித்தவுடன் மெமரியில் தங்காது.

4. ஸ்டார்ட் மெனுவில் கூடுதல் புரோகிராம்கள்:

நாம் அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களை ஸ்டார்ட் மெனுவில் வைத்து அவற்றில் எளிதாகக் கிளிக் செய்து தொடங்குகிறோம். வழக்கமாக இதில் ஆறு புரோகிராம்களுக்கு இடம் உள்ளது. இதில் கூடுதல் எண்ணிக்கையில் புரோகிராம்களை வைக்க வேண்டுமானால் என்ன செய்கிறீர்கள்? ஸ்டார்ட் பட்டனில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். அதில் Customize பட்டனில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் டயலாக் பாக்ஸில் புரோகிராம் செக்ஷனில் மேல் நோக்கி இருக்கும் அம்புக் குறியைப் பயன்படுத்தி புரோகிராம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். எண்ணிக்கைக்கான எண்ணை செட் செய்த பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

5. தானாகவே லாக் இன் செய்திட:


உங்கள் கம்ப்யூட்டர் உங்களால் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக இருந்தால் ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்ட் டைப் செய்வது வீணான செயலாக இருக்கும். பாஸ்வேர்ட் இல்லாமலேயே உங்கள் கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆனால் பரவாயில்லை என்று நீங்கள் எண்ணினால் பாஸ்வேர்ட் கேட்கும் அந்த திரையை வரவிடாமல் செய்திடலாம். ஸ்டார்ட் கிளிக் செய்து ரன் விண்டோவில் control passwords2 என டைப் செய்திடவும். பின் உங்கள் அக்கவுண்ட்டைத் தேர்ந்தெடுத்து ‘Users must enter a user name and password to use this computer’ என்று இருக்கும் பெட்டியின் முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து அப்போது கேட்கும் பாஸ்வேர்ட் கொடுத்து மீண்டும் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் அடுத்த முறை பாஸ்வேர்ட் இல்லாமலேயே கம்ப்யூட்டரை பூட் செய்திடலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 3 Mar 2009 - 13:20

6. ரீசண்ட் டாகுமெண்ட்ஸ் மறைக்க:


விண்டோஸ் ஸ்டார்ட் மெனு பொதுவாக அண்மையில் பயன்படுத்தப்பட்ட பைல்களைக் காட்டும். இந்த பைல்கள் மற்றவர்கள் பார்வையில் படக்கூடாது என்று எண்ணினால் இந்த வசதியையே முழுமையாக எடுத்துவிடலாம். ஸ்டார்ட் பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும். பின் ப்ராபர்ட்டீஸ் தேர்ந்தெடுத்து அட்வான்ஸ்டு டேப் செல்லவும். டயலாக் பாக்ஸின் கீழாக ‘List my most recently opened documents’ என்று இருக்கும் இடத்தில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிட்டு ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

7. வேண்டாமே டிஸ்க் இன்டெக்ஸிங்:


விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பைல் இன்டெக்ஸிங் என்ற ஒரு பணி பின்புலத்தில் ஓடிக் கொண்டு இருக்கும். நீங்கள் அடிக்கடி பைல் பைண்ட் என்ற வசதியைப் பயன்படுத்தவில்லை என்றால் இந்த வசதி உங்களுக்குத் தேவையில்லை. இந்த வசதியை முடக்குவது மூலம் உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கும் வாய்ப்பினைப் பெறுகிறது. எனவே இந்த செயல்பாட்டினை முடக்கி கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு ஒரு பூஸ்ட் கொடுக்கலாம். இதற்கு மை கம்ப்யூட்டர் சென்று அதில் ஹார்ட் டிஸ்க் மீது ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் ப்ராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். ‘Allow Indexing Service to index this drive for fast file searching’ என்று இருப்பதன் முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி கம்ப்யூட்டர் செயல்பாட்டில் சிறிது வேகம் கூடுவதனைப் பார்க்கலாம்.

8. டாஸ்க் பார் பட்டன்ஸ் குரூப்பிங்:


விண்டோஸ் இயக்கத்தில் ஒரு புரோகிராமில் ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களைத் திறக்கையில் டாஸ்க் பாரில் ஒவ்வொன்றுக்கும் ஒரு பட்டன் திறக்கப்படும். இப்படியே பிரவுசர்கள், அப்ளிகேஷன் புரோகிராம்களில் பைல்கள் என நிறைய திறந்தால் டாஸ்க்பாரில் இடம் இல்லாத அளவிற்கு பட்டன்களாக இருக்கும். இதற்குப் பதிலாக ஒரு புரோகிராமில் திறக்கப்படும் அனைத்து புரோகிராம்களையும் குரூப் செய்து ஒரு குரூப்பாக அமைக்கலாம். இதனால் டாஸ்க் பாரில் பிற புரோகிராம்களுக்கு இடம் கிடைக்கும். இதற்கு டாஸ்க் பாரில் காலியாக இருக்கும் இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். ப்ராபர்ட்டீஸ் செலக்ட் செய்து அதில் Group Similar Taskbar buttons என்ற பாக்ஸ் இடத்தில் டிக் அமைக்கவும்.

9.விரைவில் இன்டர்நெட் சைட்ஸ்:


இன்டர்நெட்டில் உள்ள வெப் சைட் தளங்களைப் பார்ப்பது என்பது இரு நிலை செயல்பாடாகும். முதலில் பிரவுசர் திறக்கப்பட வேண்டும். பின் தளத்தின் முகவரியினை டைப் செய்து என்டர் தட்டவேண்டும். ஒரு குறிப்பிட்ட தளம் சென்றுதான் உங்கள் பணியைத் தொடங்குவீர்கள் என்றால் அதனை டாஸ்க் பாரில் இருந்து நேரடியாக இயக்கலாம்.


டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடதில் ரைட் கிளிக் செய்திடவும். Lock the Taskbar என்று உள்ள இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டு இருந்தால் அதனை நீக்கவும். அடுத்து டூல்பார்ஸ் என்று உள்ள இடத்தில் உங்கள் மவுஸைக் கொண்டு சென்று அசைத்து அட்ரஸ் என்று உள்ள இடத்தில் கிளிக் செய்திடவும். சிறிய அட்ரஸ் பார் ஒன்று காட்டப்படும். இதில் நீங்கள் பார்க்க விரும்பும் தளத்தின் முகவரியினை டைப் செய்தால் பிரவுசர் தானாக இயக்கப்பட்டு தளம் உங்களுக்குக் கிடைக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 3 Mar 2009 - 13:20

நன்றி: கம்ப்யூட்டர் மலர்

avatar
Guest
Guest

PostGuest Sat 20 Jun 2009 - 21:17

சூப்பர் டிப்ஸ் மகிழ்ச்சி

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat 20 Jun 2009 - 21:24

2,3,9 எனக்கு மிகுந்த பயன் உள்ளது ஆனா 3 வ்து செய்யப் பயமா இருக்கு

avatar
Guest
Guest

PostGuest Sat 20 Jun 2009 - 21:25

ruban1 wrote:2,3,9 எனக்கு மிகுந்த பயன் உள்ளது ஆனா 3 வ்து செய்யப் பயமா இருக்கு
நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக