புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுத்தேடல் I_vote_lcapஅறிவுத்தேடல் I_voting_barஅறிவுத்தேடல் I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
அறிவுத்தேடல் I_vote_lcapஅறிவுத்தேடல் I_voting_barஅறிவுத்தேடல் I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
அறிவுத்தேடல் I_vote_lcapஅறிவுத்தேடல் I_voting_barஅறிவுத்தேடல் I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
அறிவுத்தேடல் I_vote_lcapஅறிவுத்தேடல் I_voting_barஅறிவுத்தேடல் I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிவுத்தேடல் I_vote_lcapஅறிவுத்தேடல் I_voting_barஅறிவுத்தேடல் I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
அறிவுத்தேடல் I_vote_lcapஅறிவுத்தேடல் I_voting_barஅறிவுத்தேடல் I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
அறிவுத்தேடல் I_vote_lcapஅறிவுத்தேடல் I_voting_barஅறிவுத்தேடல் I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
அறிவுத்தேடல் I_vote_lcapஅறிவுத்தேடல் I_voting_barஅறிவுத்தேடல் I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
அறிவுத்தேடல் I_vote_lcapஅறிவுத்தேடல் I_voting_barஅறிவுத்தேடல் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அறிவுத்தேடல் I_vote_lcapஅறிவுத்தேடல் I_voting_barஅறிவுத்தேடல் I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
அறிவுத்தேடல் I_vote_lcapஅறிவுத்தேடல் I_voting_barஅறிவுத்தேடல் I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிவுத்தேடல் I_vote_lcapஅறிவுத்தேடல் I_voting_barஅறிவுத்தேடல் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
அறிவுத்தேடல் I_vote_lcapஅறிவுத்தேடல் I_voting_barஅறிவுத்தேடல் I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
அறிவுத்தேடல் I_vote_lcapஅறிவுத்தேடல் I_voting_barஅறிவுத்தேடல் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுத்தேடல்


   
   
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Sun Nov 08, 2009 7:45 am






அறிவுத்தேடல்




இன்றும் என்றும் எந்தக் கொடுமையான
சூழ்நிலையிலும் கொண்டு போய் தன்னை பொருத்திக்கொண்டாலும் தமிழன் என்பவனால்
மற்றவர்களைக் காட்டிலும் பல மடங்கு தன்னுடைய ஆளுமை தன்மையை நிலை நாட்டி
விட முடியும்.



முட்டி மோதி உள்ளே நுழைந்து வெளிக்காட்டிக் கொள்ள முடியும்.



முடியாத போதும் கூட முயற்சியில்
சாதிக்க அத்தனை விசயங்களையும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்வதும் உண்டு.
கலக்கம் என்பது தமிழன் வாழ்வில் அடுத்தவர் உருவாக்குவது தானே
அவனுக்கு அவனால் உருவாவது இல்லை.



கடல் கடந்து போய் தட்டு கழுவுவது முதல் கணிணி ஆளுமை வரைக்கும்.



உழைக்காமல் ஊடகத்தின் முன்
ஊத்தப்பல் நாற்றத்தோடு பத்து மணி நேரம் அமர்ந்து இருக்கவும் முடியும்.
உடனே முடிக்க வேண்டிய காரியம் இது என்றவுடன் ஓடிப்போய்
ஒன்றிவிடுவதும் உண்டு. உழைக்க தயங்காத இனம் தமிழினம்.



கடல் கடந்து சென்றவர்கள் இன்று
வரைக்கும் எதற்கும் கண்கலங்குவது இல்லை. காரணம் அவர்களே தெரியாத
அத்தனை உழைப்பும் , ஆளுமையும் அங்கு தான் இனம் கண்டு கொள்கிறார்கள்.



வெள்ளிக்கிழமை மதியம் என்றால்
அடுத்த நாற்பது மணி நேரமும் உழைத்தோம் என்று ஓய்வு எடுக்க கும்மாளம் போட
கிளம்புவர்கள் மத்தியில் அந்த நாற்பது மணி நேரத்தையும் தனது
குடும்பத்துக்காக உழைப்பின் மூலம் தூக்கம் மறந்து குடும்பத்து தொல்லைகளை
தூர விரட்டுபவர்களை எவ்வாறு சொல்வீர்கள்?



ஆனால் தொடக்கத்தில் தமிழனத்தின்
முன்னோர்கள் வீரத்தின் மூலம் தன்னுடைய ஆளுமையை, ஆண்மையை
நிலைநாட்டினார்கள். இன்று தமிழனம் தன்னுடைய தனி மனித உழைப்பின்
மூலம் நிலை நாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.



இன்று திடீர் தலைவர்களின்
அக்கப்போர் அறிக்கைகளும், திடுக்கிடக்கூடிய வார்த்தை அலங்காரங்களும்
எதை உணர்த்திக்கொண்டு இருக்கிறது?



அன்று மன்னர்களும், ஆளுமை
புரிந்தவர்களின் மேதா விலாசங்கள் எதையும் இன்று வரையிலும் சரியாக புரிந்து
கொள்ளப் படாவிட்டாலும் தமிழன் என்பவன் தன்னுடைய தகுதியை புரிந்தவன்.
தலையில் உள்ள அறிவை உண்ர்ந்தவன்.



காலம் போட்ட அவசர கோலத்தில்
இன்று வீரமென்ற சொல்லை விவேகம் என்ற சொல்லுக்குள் அடக்கி
சகிப்புத்தன்மையாக மாற்றிவிட்டுள்ளது. கத்தி, வாளை தூக்க
முடியாதவர்கள் இன்று புத்தியை மட்டும் சுமந்து கொண்டு கடல் கடந்து சென்று
கொண்டுருக்கிறார்கள்.



சோழ அரசன் (கிமு 5ம் நூற்றாண்டு)
கரிகாற்பெருவளத்தான் வட இந்திய மன்னர்கள் அத்தனை பேரையும் வென்று வரிசையாக
வென்ற நாடுகளையும் தன்னுடைய ஆளுமைகக்குள் கொண்டு வந்தவன். இறுதியாக
இமயத்தில் தமிழர் சின்னத்தை பொறித்து கண்ட வெற்றிகளை சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, கலிங்கத்துப்பரணி போன்ற இலக்கியங்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன. இவர் தான் உலகத்தின் முதல் அணையை உருவாக்கி கல்லணையை காவிரிக்குக் குறுக்கே கட்டியவர்.



பூலித்தேவன் (18ம் நூற்றாண்டு)
வெள்ளையருக்கு கப்பம் கட்ட மறுத்து எதிர்த்து நின்ற போது அவனை அழித்தே
தீருவதென்று வெள்ளை அதிகாரி ஹெரான், பெரும்படைகளுடன் வந்தான்.
அவனுடன் மற்ற தளபதிகள், கும்பனி படைகள் (நம்மவர்கள்), தளபதி
கான்சாகிப் என்கிற மருதநாயகம், நவாப் முகமதலியின் படைகள், தலைவன்
மகபூல்கான் போன்ற கூட்டணி படைகளும் ஒன்று சேர்ந்து முற்றுகையிட்டது.



ஒற்றுமை என்பது மற்ற இனத்தை விட
நம்மவர்களின் பெரிய குறைபாடு என்பதை அன்று முதல் இன்று வரையிலும் நாம்
உணர்ந்து கொண்டு தானே இருக்கிறோம்?



ஆனால் இவர்கள் அத்தனை
வைத்திருந்த அத்தனை நவீன ரக ஆயுதங்கள், பெரும்படை பலம் என அத்தனையும்
தன்னுடைய மன உறுதியால் தன்னுடைய சுத்தமான வீரத்தால் விரட்டி அடித்தான்.
கடைசியில் வெள்ளையர் நீ கப்பம் தரவேண்டாம். தருவதாக மட்டும்
ஒத்துக்கொள். காரணம் நீ மறுப்பதாக தெரிந்தால் மற்ற அனைவரும்
அதேபோல் மறுப்பார்கள் என்றார்.



இது வரலாற்று உண்மை. இப்போது புரியுமே குறைந்த வீரர்கள். நிறைந்த வீரம். கதறடித்த கட்டுறுதி.



காரணம் தமிழனின் வீரம் என்பது
எவருடனும் ஓப்பிட முடியாது. எதையும் சாதிக்கும் மன உறுதி உடையது.
மற்ற எந்த இனத்தையும் விட அதிகமாக இருந்தது தமிழினத்தில் மட்டுமே.
வரலாற்று சான்றுகள் அத்தனையும் இவ்வாறு தான் நமக்கு இன்று வரையிலும்
பாடமாக பட்டயமாக காட்சியளித்துக்கொண்டு இருக்கிறது.

அறிவுத்தேடல் 2009101645830227360_8

ஒவ்வொரு காலத்திலும், ஒரு ராஜாவோ, ஒரு நாயகனோ நம் இனத்தை அந்த அளவிற்கு ஆளுமை செய்து இருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப்போரில் சிதறடிக்கப்பட் ஜப்பான் இன்று ஒரு வணிக வல்லரசாக உருவானது. இதை நாம் இன்று பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்?

கிரேக்கம், ரோமானியத்தை முன்னோடியாக வைத்து முன்னேறினார்கள்.
ஐரோப்பியர்கள் ஜப்பானியரை காட்டியே சீன இனம் உயர்ந்தது.
அரேபியரைக் காட்டியே யூத இனம் உயர்ந்தது. ஆங்கிலேயர்களின்
வளர்ச்சியைக் காட்டியயே ஜெர்மானிய இனம் வளர்ச்சி அடைந்தது.

ஆனால் இன்று தமிழனுக்கு என்று நாடும் இல்லை. தமிழனை டெல்லியில் நாடுவாரும் இல்லை.



நடுக்கடலில் உணவு ஏற்றிச் சென்ற
கப்பலைப் போல, இலங்கையைத் தவிர வேறு எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும்
நாங்கள் போகத்தயார் என்று நடுக்கடலில் அபயம் கேட்டுக்கொண்டுருப்பவர்களைப்
போல நம் தமிழினத்தில் ஒலியும் காற்றில் தான் கரைந்து மறைந்து கொண்டு இருக்கிறது.



நாடு நல்ல சூழ்நிலையில்
இருந்தாலும் நயவஞ்சகத்தால் நல்லதைத் தவிர அத்தனையும் செய்ய முடிகின்ற
தலைவர்களால் தமிழினத்தின் வெற்றிடத்தை எதைக்கொண்டு நிரப்ப முடியும்?

அறிவுத்தேடல் _..
இன்று பெரிய வெற்றிடம்.
காரணம் இன உணர்வும் இல்லை. உணர்வு ஊட்ட வந்தவர்களும் உண்மையானவர்களாக இல்லை.

இனத்தின் பெயரால், மொழியின் பெயரால் இன்று வரையிலும் நமக்கு
ஊட்டிக்கொண்டுருப்பவர்கள் ஒன்று ஊட்டியில் ஓய்வெடுக்கிறார்கள்.
இல்லையேல் குத்தீட்டி வரிகளால் குத்திக்கிழிக்கிறார்கள்.
ஒவ்வொரு தலைவரின் பங்களிப்பும் உண்மையாக இருக்கும்பட்சத்தில்
உலகத்தில் இருக்கும் தமிழர்களின் பாதிப்பு இன்று வரையிலும் ஏன் ஓலமாய் நம்
காதில் வந்து ஒலிக்கின்றது?
முன்னோர்களான மன்னராக இருக்கட்டும்.
ராஜாவா,நாயகனாக, குறுநில மன்னராக, பாளையக்காரராக, பட்டத்து ஜமீனாக
இருக்கட்டும். அவர்களின் அத்தனை வீரமும் சுத்தமானது. தன்னுடைய
ஆளுமையில் இருந்த மக்களுக்காக தன்னையே அர்பணித்தவர்கள்.



வீரம் என்பது அவர்களின் முரட்டுத்தனத்தின் குறியீட அல்ல. முட்டாள்காளாக வாழ்ந்து விவேகமற்ற செய்ல்களும் செய்தவர்கள் அல்ல. அவர்களின் ஆளுமை சுருங்கி இருந்ததே தவிர அவர்களின் எண்ணங்களில் இன்றைய தலைவர்கள் போல் எந்த சுருக்கமும் இல்லை.



அன்று வனத்தில் வாழ்க்கை அமைந்த
முன்னோர்கள் நறுமணங்களையும் சுவாசித்து சுகமாகவும் வாழ்ந்தார்கள்.
சுகாதாரமாகவும் வாழ்ந்தார்கள்.

இன்று வனமும் அழிந்து கொண்டே வருகின்றது. மனமும் இருண்டு கொண்டே தொடர்கின்றது.



வனத்தை,தேயிலைத் தோட்டத்தை
உருவாக்கியவர்கள் தேம்பி அழக்கூட தெம்பில்லாமல் முள் கம்பிகளுக்கு
பின்னால் முகவரி இழந்து வாழ்க்கை எனபதை வாழ முடியாமல் இறப்பு வராதா? என்று ஏங்குகிறார்கள்.



ஆனால் முன்னோர்களாக வாழ்ந்த
மூதாதையர்கள் விவேகம் என்று கருத்தில் கொண்டு நம் இனத்தை கதற விட்டது
இல்லை. இனம் முக்கியம். அதைவிட வளர்த்து உணர வைக்க வேண்டிய இனமான உணர்வு முக்கியம்.



உணர்ந்து இருந்தால் உணர்த்திக்
காட்டியவர்கள் இன்று இருந்து இருந்தால் ஐந்து லிட்டர் தண்ணீர்
கிடைக்காமல் விக்கிக்கொண்டு ராணுவ வீரர்களிடம் தன்னை தொலைக்க வேண்டியதும்
இல்லை.



அறிவைத்
தேடு. அது தான் உன் நம்பிக்கை. வேண்டாம் இந்த மூட நம்பிக்கை
என்றவர் தந்தையாய் மறைந்து விட்டார். படிடா. அது தான்டா
சொத்து. உன் கர்மத்தை போக்கக்கூடியது அதுமட்டும் தான் என்றவர்
கர்மவீரராக காட்சியாக சிலையாக நிற்கிறார்.


அறிவுத்தேடல் Photo_verybig_103518
இதயத்தில் இடம் பெற்றவர்களும்,
இன்னலை தீர்க்க வந்து விட்டேன் என்றவர்களும் நடத்தும் ஊடகப்போரில்
உங்களையும் என்னையும் எங்கே போய் தேடப்போகிறார்கள்?



அவர்கள் தொலைந்து போயே நாளாகிவிட்டது.



தமிழனின் வாழ்வியல் தடங்கள். தொடக்கம் முதல் இன்றைய முடக்கம் வரைக்கும்.



சிந்தனையோட்டம் சரியென்றால் ஓட்டுப்பட்டையின் மூலம் முன்னெடுத்து உணர்வை உள்வாங்குவோம்.



தவறென்றால் விமர்சித்து விரும்பாதவைகள் இல்லாமை ஆக்குவோம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக