புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடம்பும், மனதும்! Poll_c10உடம்பும், மனதும்! Poll_m10உடம்பும், மனதும்! Poll_c10 
60 Posts - 48%
heezulia
உடம்பும், மனதும்! Poll_c10உடம்பும், மனதும்! Poll_m10உடம்பும், மனதும்! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
உடம்பும், மனதும்! Poll_c10உடம்பும், மனதும்! Poll_m10உடம்பும், மனதும்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உடம்பும், மனதும்! Poll_c10உடம்பும், மனதும்! Poll_m10உடம்பும், மனதும்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
உடம்பும், மனதும்! Poll_c10உடம்பும், மனதும்! Poll_m10உடம்பும், மனதும்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உடம்பும், மனதும்! Poll_c10உடம்பும், மனதும்! Poll_m10உடம்பும், மனதும்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உடம்பும், மனதும்! Poll_c10உடம்பும், மனதும்! Poll_m10உடம்பும், மனதும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடம்பும், மனதும்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 20, 2014 9:18 pm

செந்தில்நாதனுக்கு தன் மனைவியைப் பற்றி நினைக்கையில், கோபம் கோபமாக வந்தது. 'எல்லாம் அவளால தான்! இத்தனை நாள் என்னிடம் முகம் கொடுத்து பேசாத ஹெட்கிளார்க் நாராயணமூர்த்தி, 'என்ன செந்தில் சார்... 'டல்'லா இருக்கிற மாதிரி தெரியுது... ஏதாவது பிரச்சனையா'ன்னு நலம் விசாரிக்கிறார்ன்னா, இதுக்கு மூல காரணமே மனைவி தான்...' என்று நினைத்தான்.

விஷயம் இது தான்... செந்தில்நாதனின் மனைவி உமாவிற்கு, கடந்த ஒரு மாதமாக உடம்பிற்கு முடியவில்லை. ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்கி, பல டெஸ்ட்டுகள் செய்தும், பூரண குணம் அடைந்தபாடில்லை.

வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் உமா தான் கவனித்து வந்தாள். இந்த இருபது நாட்களாக அவளால், எந்த வேலையும் செய்ய முடியவில்லை; படுக்கையிலேயே சுருண்டு கிடந்தாள்.
அதனால், சமையல் வேலை முதல், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது வரை, சகலத்தையும் செந்தில்நாதனே செய்ய வேண்டிய நிர்பந்தம். வீடு, அலுவலகம் என, இரண்டு இடங்களிலும் வேலைப் பளு அதிகமானதால், உடல் சோர்வும், மருத்துவமனைக்கு அலைந்ததில் மனச்சோர்வும் ஏற்பட்டிருந்தது.

மேலும், 'முதலிலேயே மனைவி தன் உடல் நலனை கவனித்திருந்தால், நோய் இவ்வளவு முற்றியிருக்காது. வீட்டில் இருப்பவளுக்கு இதெல்லாம் சொல்லியா தர வேண்டும்?' என்பது அவன் எண்ணம்.

இந்த சமயத்தில், ஹெட்கிளார்க் நாராயணமூர்த்தியின் விசாரிப்பு, செந்தில்நாதனுக்குள் எரிச்சலை ஏற்படுத்தியது.

ஏற்கனவே, நாராயணமூர்த்தி மீது ஒரு இனம் புரியாத வெறுப்பு, செந்தில்நாதனின் மனதில் வேரூன்றி இருந்தது. அதற்கு காரணம், செந்தில்நாதன், இந்த அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தவுடனே செய்த முதல் காரியம், அலுவலக ஊழியர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமைகளில் ஏதாவது ஒரு இடத்திற்கு, 'மினி டூர்' சென்று வர, ஏற்பாடு செய்தது தான்.

சிலர் சொன்ன மாத்திரத்திலேயே, டூருக்கு வர ஒத்துக் கொண்டனர்; சிலர் யோசித்து சொல்வதாக கூறினர்.

யோசித்து சொல்வதாக கூறியவர்கள் ஒவ்வொருவரையும், தனித்தனியாக சந்தித்து, 'நாம எதுக்காக உழைக்கிறோம்... வாழ்க்கைய ரசித்து அனுபவிக்கத் தானே? கை நிறைய சம்பளம் வாங்குற நாம, அதில, ஒரு சிறுதொகைய நம்ம விருப்பங்களுக்காக செலவிடுவதில் என்ன தவறு... இப்படி சின்னதா ஒரு டூர் போயிட்டு வந்தா, நம்மோட உடலும், மனசும் உற்சாகமா இருக்கும்; வேலையிலயும் கவனம் செலுத்த முடியும்...' என்று பலவாறாக எடுத்துக் கூறினான்.

அவனது பேச்சு அனைவருக்கும் திருப்தியை அளித்ததால், பெரும்பாலானோர், 'மினி டூர்' விஷயத்திற்கு ஒத்துக் கொண்டனர். இதில், பெண் ஊழியைகளும் சேர்த்தி!
ஆனால், நாராயணமூர்த்தி மட்டும் இவ்விஷயத்தில் ஒத்துப் போகவில்லை. 'நாம மட்டும் தனியா போறத விட, குடும்பத்துடன் போனா குடும்பமே குதூகலிக்கும்ல்ல...' என்றார். இதில் தான் செந்தில்நாதனுக்கும், நாராயணமூர்த்திக்கும் வாய் வார்த்தை தடித்தது.

'தினமும் நம்ம குடும்பத்தோட தான் இருக்கோம்; அவங்க கூட சேர்ந்து போறதுல என்ன ஜாலி இருக்கு... நாம மட்டும் தனியா, நண்பர்களுடன் சேர்ந்து போனா அதோட சுகமே தனி. ஒரு தடவை வந்து, 'என்ஜாய்' செய்து பாருங்க சார்...' என்றான்.

'நீங்க போறதை நான் எதிர்க்கல; ஆனா, எனக்கு இதில இஷ்டமில்ல. விட்டுருங்க...' என்று முகத்திலறைந்தார் போல் கூறினார்.

'சரியான பொண்டாட்டிதாசனாய் இருப்பார் போலிருக்கு; மனுஷனுக்கு மீசை நரைத்தாலும், ஆசை நரைக்கல...' என்று நினைத்துக் கொண்டான் செந்தில்நாதன்.அதிலிருந்து, நாராயணமூர்த்தியுடன் பேசுவதை தவிர்த்து விட்டான்.ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக அவன் துவக்கி வைத்த மினிடூர், தொய்வில்லாமல் மாதாமாதம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

ஜென்ம விரோதியாகவே தன்னுள் உருமாறி போயிருந்த நாராயணமூர்த்தி, தானாகவே வலிய வந்து பேசியது, செந்தில்நாதன் மனதில், ஒருவித அவமான உணர்வை ஏற்படுத்தியது.

தொடரும்....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 20, 2014 9:19 pm

மீண்டும் நாராயணமூர்த்தி வந்து கேட்டால் என்ன சொல்வது?' சிந்தனையில் மூழ்கினான்.
செந்தில்நாதன் நினைத்தது போலவே, அவர் வந்து, ''செந்தில்... நான், உங்களோட கொஞ்சம் தனியா பேசணும்; கேன்டீன் வரைக்கும் வர முடியுமா?'' எனக் கேட்டார்.

'வேலையிருக்கு; முடியாது...' என சொல்ல நினைத்தான். ஆனால், 'இவர் மீண்டும் மீண்டும் வந்து பேசினால் என்ன செய்வது... அதனால், இப்பொழுதே இவருடன் சென்று பேசிவிட்டு, இத்துடன் அவர் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும்...' என, தீர்மானித்தவனாக அவருடன் கிளம்பினான்.கேன்டீன் சென்றவுடன், ''சொல்லுங்க சார்... என்ன விஷயம்?'' என்று அவனே பேச்சைத் துவக்கினான்.

''இல்ல செந்தில்... நான் ரெண்டு, மூணு வாரமாகவே உங்கள கவனிக்கிறேன்; ஆள் பழைய மாதிரி கலகலப்பா இல்லையே... ஏன் வீட்ல ஏதாவது பிரச்னையா?'' என்று கேட்டார் நாராயணமூர்த்தி.
'என் வீட்டில பிரச்னையென்றால் உங்களுக்கு என்ன?' என கேட்க தோன்றியது. ஆனாலும், ஆத்திரத்தை அடக்கி, ''அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சார்,'' என்றான்.

''செந்தில்... என்னை நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது. என் அனுபவத்துல சொல்றேன்... உங்களுக்கு ஏதோ பிரச்னைன்னு மட்டும் தெரியுது. என்னை, உங்க அப்பா ஸ்தானத்துல வச்சு சொல்லுங்க. என்னால முடிஞ்சத செய்ய பாக்றேன்,'' என்றார்.

இந்தப் பேச்சு, செந்தில்நாதனின் மனதைத் தொட்டது. இனிமேலும் இவரிடம் மூடி மறைக்க முடியாது என நினைத்தவனாய், ''சொல்லக் கூடாதுன்னு இல்ல சார்... மனைவிக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல, அதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு,'' என்றான்.

சிறிது நேரம் மனைவி உமாவின் நோய் பற்றியும், சிகிச்சை பற்றியும் பேச்சு தொடர்ந்தது.
''செந்தில்... எனக்கென்னமோ இந்த விஷயத்தில உங்க மேல தான் தப்பு இருக்கிற மாதிரி தோணுது,'' என்றார்.

இதைக் கேட்டதும், செந்தில்நாதனுக்கு திகைப்பு. ''நான் என்ன சார் தப்பு செஞ்சேன்... வீட்டில இருக்கிறவ, உடம்புக்கு முடியலன்னா ஆஸ்பத்திரிக்கு போய், என்ன ஏதுன்னு பாத்திருக்க வேண்டாமா... நான் ஆபீசுக்கு அலையிறவன். அவ என்ன சின்னப் பிள்ளையா... எல்லா விஷயத்துக்கும் அவ பின்னாடியே நானும் சேர்ந்து போயிட்டு வர,'' என்றான் சற்று கடுமையாக.
''இங்க தான் நீங்க தப்பு செய்றீங்க... இந்த பெண்கள் இருக்காங்களே... அவங்க நமக்கோ, பிள்ளைகளுக்கோ ஏதாவது உடம்புக்கு வந்தா, ராத்திரி, பகல்ன்னு பாக்காம கவனிப்பாங்க. அதுவே, அவங்களுக்கு ஏதாவதுன்னா, கஷாயத்தோட நின்னிடுவாங்க.

''நமக்கு வர்ற மருத்துவ செலவுகளை, ஏதாவது ஒரு செலவுல ஈடுகட்டிருவாங்க. ஆனா, அவங்களுக்கு மருத்துவம் பாக்கணும்ன்னா, இந்த மாசம் பிள்ளைக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும், அடுத்த மாசம் எல்.ஐ.சி., டியூ கட்டணும், அது இதுன்னு கணக்கு பார்த்தே நாட்களை தள்ளிப் போட்டு, உடம்பை கவனிக்காம விட்டுருவாங்க!

''இதில, உங்க வீட்ல உங்க ஒருத்தரோட வருமானம் மட்டும் தான். நீங்களும் மாசா மாசம், 'டூர்' அது இதுன்னு செலவழிக்கிறீங்க; அதனால, நீங்க வாங்குற சம்பளம் குடும்பச் செலவுக்கே சரியா போயிடும்; அதனால தான் உங்க மனைவி அப்படி நடந்திருப்பாங்க.''அதோட வேலைக்குப் போற பொண்ணாயிருந்தா, கூட வேலை செய்யறவங்களோட, 'அட்வைஸ்' கேட்டாவது, தன் உடம்பை கவனிச்சிருப்பாங்க.

''நீங்களும் உங்க வேலையிலேயே கவனமா இருந்திட்டீங்க. அதனால, அவங்களோட உடம்புக்கு என்ன, ஏதுன்னு பாக்காமலே இருந்துட்டீங்க!

''இப்பவும் பெரிசா பிரச்னை இருக்காதுன்னு தான் நினைக்கிறேன். உங்களோட ஆறுதலான வார்த்தையும், அன்பான கவனிப்பும் இருந்தாலே உங்க மனைவி சீக்கிரமா தேறிடுவாங்க.
''அதுவும் இல்லாம, எப்பவுமே சுறுசுறுப்பா இருந்து பழக்கப்பட்டவங்களுக்கு, படுக்கையில சோர்ந்து படுக்கிறது பிடிக்காது. அதில இருந்து மீண்டு வெளியில வரணும்ன்னு தான் நினைப்பாங்க.

அதனால, உங்க மனைவி சீக்கிரமாவே பழைய நிலைக்கு வந்திடுவாங்க; கவலைப்படாதீங்க. வேணும்ன்னா நீங்க ஒரு பத்து நாள் மெடிக்கல் லீவு போட்டு, வீட்டுல இருந்து மனைவியை கவனிச்சுக்குங்க; உங்க பைல்களை நான் பாத்துக்கிறேன்.

''குடும்பத்தில பிரச்னை இல்லாம இருந்தாலே, நம்ம உடம்பும், மனசும், 'பிரெஷ்' ஆயிடும். இல்லன்னா காஷ்மீர் போனாக் கூட கண்ணீர் தான் வரும். இது என்னோட அனுபவம்,'' என்றார் நாராயணமூர்த்தி.

அவரது பேச்சைக் கேட்ட செந்தில்நாதனுக்கு, சற்று ஆறுதலாய் இருந்தது. அதேநேரத்தில், 'இவ்வளவு நல்ல மனிதரைப் போய், நாம தவறாக நினைத்தோமே...' என, நினைத்தான்.

'இவர் அன்றைக்கு கூறியது போல, நம் குடும்பத்தினருடன் பணத்தையும், நேரத்தையும் செலவழிச்சிருந்தா உமாவுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காதோ... நண்பர்களோடு மாதாமாதம் போவதை விட, ஆண்டுக்கு ஒருமுறையோ, இருமுறையோ குடும்பத்தினருடன் டூர் போயிருக்கலாமோ...' எனத் தோன்றியது.இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போதே, சக அலுவலக நண்பரிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது.

''மாப்ள... எங்க இருக்க? இந்த மாசம் எல்லாரும் கொடைக்கானல் போலாமா... நீ வந்தா தான் பைனல் செய்ய முடியும்; சீக்கிரம் வா,'' என்றார் நண்பர்.

''மச்சான்... இந்த மாசம் நான் டூர் வரல. என் மனைவிக்கு உடம்பு சரியில்ல; அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும். அவ நல்லா ஆன பிறகு பேமிலியோட டூருக்கு வர்றேன். நம்ம, 'மினி டூர்' பிளானை, 'பேமிலி டூரா' மாத்தலாமான்னு மத்தவங்களையும் கேட்டு வை,'' என்றான் தெளிந்த மனதுடன்!

எஸ்.ஆர்.சாந்தி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 21, 2014 1:51 pm

உடம்பும், மனதும்! 3838410834

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri Nov 21, 2014 5:08 pm

அருமையான முடிவு...




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

உடம்பும், மனதும்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக