புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_c10போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_m10போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_c10 
56 Posts - 73%
heezulia
போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_c10போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_m10போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_c10போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_m10போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_c10போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_m10போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_c10போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_m10போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_c10 
221 Posts - 75%
heezulia
போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_c10போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_m10போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_c10போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_m10போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_c10போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_m10போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_c10 
8 Posts - 3%
prajai
போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_c10போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_m10போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_c10போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_m10போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_c10போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_m10போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_c10போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_m10போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_c10போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_m10போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_c10போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_m10போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Fri Nov 14, 2014 9:43 pm

கலாச்சாரம் என்பதை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குட்பட்ட மனிதர்களின் வாழ்வியல் முறை என்று சுருக்கமாக சொல்லலாம் . தனித்த உணவு ,உடை ,இருப்பிடம் ,மொழி ,சமய நம்பிக்கைகள் உள்ளிட்டவை வாழ்வியல் முறைக்குள் அடங்கும் . உலகெங்கிலும் உள்ள இனக்குழுக்களால் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வந்த விதவிதமான கலாச்சாரங்கள் உலகமயமாக்கலின் விளைவாக கரையத் தொடங்கி நெடுநாட்களாகி விட்டன . அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்த கலாச்சார வாழ்வியல் முறை இன்று உலகமயமாக்கல் தடம் பதித்துள்ள எந்த இடத்திலும் இல்லை . நாகரிகத்தின் பெயரால் ,வளர்ச்சியின் பெயரால் பாரம்பரிய விழுமியங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன . வளர்ச்சியின் வாடை படாத பழங்குடி மக்களின் வாழ்வியல் முறை மட்டும் மாறாமல் இருக்கிறது . காடுகளில் பயணம் செய்கிறோம் என்ற பெயரில் நகரத்து மக்கள் காடுகளில் நுழைவதால் அவர்களின் வாழ்வியல் முறையும் மாறி வருகிறது .

கலாச்சாரம் மாறி வருவதை ஒரு பிரச்சனையாக கருத முடியாது .பூமியின் சுழற்சியில் எல்லாமும் ஒரு நாள் மாறித் தான் ஆக வேண்டும் . மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத எதுவும் இங்கே நிலை ( கொஞ்ச காலத்திற்காகவாவது ) பெற முடியாது . கலாச்சாரமும் இதற்கு விதிவிலக்கல்ல . உணவு ,உடை ,இருப்பிடம் ,மொழி ,சமயநம்பிக்கைகள் என எல்லாமும் மாற்றத்தைச் சந்தித்தே வருகின்றன.

20 ஆண்டுகளுக்கு முன்பு உண்ணப்பட்ட எந்த உணவும் இன்று பரவலாக உண்ணப்படவில்லை. அப்படியே உண்ணப்பட்டாலும் பயன்படுத்தும் பொருட்கள் முதற்கொண்டு சமைக்கும் முறை, உண்ணும் முறை என அனைத்திலும் பலவிதமான மாற்றங்கள். நாம் வாழும் பகுதியில் என்ன விளைகிறதோ ,எந்தக் காலநிலையில் என்ன கிடைக்கிறதோ அதை மட்டுமே உண்டு வாழ்ந்த சூழியலுக்கும் உடலுக்கும் உகந்த வாழ்வியல் முறை எங்கும் இல்லை. உடலைப்பற்றி எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் வணிக விளம்பரங்களில் மயங்கி கண்டதையும் உண்கிறோம். அன்று ,என்ன சாப்பிடுகிறோம் என தெரிந்து உணவே மருந்து என்றெண்ணி உண்டோம் இன்று,நாம் சாப்பிடும் ஒரு வாய் உணவில் என்னென்ன கலந்திருக்கிறது என்பதைத் தெரியாமலே உண்கிறோம். உலகவணிகமயமாக்கத்தால் நம் உணவுக் கலாச்சாரத்தில் நிகழ்ந்த இத்தகைய மாற்றங்களையும்,பாதிப்புகளையும் எந்தக் கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டது நம் கலாச்சாரம்.

நமது வாழிடங்களுக்கு அருகில் கிடைத்த பொருட்களை வைத்து வீடு கட்டி இயற்கையின் நண்பனாக வாழ்ந்த வாழ்வியல் முறை இன்று இல்லை. விதவிதமான கட்டம் கட்டமான எலிக்கூண்டுகளைக் காற்று புகாதவாறு கட்டிக்கொண்டு அதை வீடுகள் என்று சொல்கிறோம். செங்கல் , மணல்,ஜல்லி,கம்பி,கண்ணாடி,மரச்சாமான்கள் என வீடு கட்டப் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் இயற்கையின் அழிவிலிருந்து தான் பிறக்கிறது. முன்பு கட்டுமான பொருட்களை இயற்கையில் மிஞ்சியவையிலிருந்து எடுத்தோம்;எடுத்ததை மீண்டும் உருவாக்கினோம் .நமது வீடுகளின் கலாச்சாரக் கூறுகளாக இருந்த திண்ணையும் ,முற்றமும் இன்றைய வீடுகளில் இல்லை . இன்றைய சூழலில் வீடு குறித்த அதிக முக்கியத்துவமும்,அதிக கவனமும் தேவையற்றது என்றே நினைக்கிறேன். இநத மாற்றங்கள் குறித்து நம் கலாச்சாரம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

ஒரு நூற்றாண்டிற்கு முன்பிருந்த எழுத்து முறையும் ,பேச்சு வழக்கும் இன்றைய தமிழ் மொழிக்கு இல்லை. காலத்திற்கு ஏற்ற மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைப் புதிப்பித்துக் கொண்டதாலேயே தமிழ் மொழி இன்று வரை இருக்கிறது. இந்த மாற்றம் குறித்தும் கலாச்சாரம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

ஒரே மாதிரியான சமயநம்பிக்கைகள் நம் கலாச்சாரத்தில் இல்லை. அன்றே குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை என ஐந்திணைகளுக்கும் ஐந்துவிதமான சமயநம்பிக்கைகள் இருந்துள்ளன. கால மாற்றத்தாலும் பல்வேறுவிதமான நாடுகளின் படையெடுப்புகளாலும் பல்வேறுவிதமான சமயநம்பிக்கைகள் இன்று பின்பற்றப்படுகின்றன. இதற்கும் நமது கலாச்சாரம் ஒன்றும் சொல்லவில்லை.

ஆங்கிலேயர் இந்தியாவை ஆளாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக இன்றைய நிலை எதிலும் இருக்காது.கலாச்சாரத்தின் அனைத்து கூறுகளையும் ஆங்கிலேய ஆட்சி முறை வெகுவாக பாதித்தது. உடையும் பலவிதமான மாற்றங்களை அடைந்தது. தொழில் ரீதியாகவும் மதரீதியாகவும் தனித்த அடையாளத்துடன் அணியபட்ட உடைகள் மாற்றம் அடைந்து ஒரு பொதுவான முறையில் அணியப்படுவது நல்ல விசயம். ஆனால் அதிலும் சூழலுக்குப் பொருந்தாத இறுக்கமாண உடைகளையே பெரிதும் விரும்புகிறோம்.ஆண்களைப் பொருத்தவரை ஒரே வேட்டியை தாங்கள் செய்யும் வேலைகளுக்கு ஏற்ப மாற்றிக் கட்டியவர்கள் ,பட்டாப்பட்டி டவுசர் போட்டவர்கள் ,இன்று விதவிதமான பேண்ட்களையும் ,ஜாக்கியும் ,சார்ட்ஸும் அணிகிறார்கள். இதற்கும் கலாச்சாரம் மூச்சே விடவில்லை.

உணவு ,உடை,இருப்பிடம் ,சமயநம்பிக்கைகள் ,மொழி உள்ளிட்ட கலாச்சாரக் கூறுகளில் நிகழ்ந்த ,நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்களை நாம் தவறென்றே சொல்ல முடியாது. சில இழப்புகள் இருக்கலாம். 'அன்று இருந்தது ,இன்று இல்லை ' என்ற மனநிலை எல்லா காலகட்டங்களிலும் இருக்கிறது. ஒரு குற்ப்பிட்ட காலகட்டத்தில் எல்லாமுமே மாற்றத்தைச் சந்தித்தே தீருகின்றன. ஒரு தலைமுறை என மதிப்பிடப்படும் 33ஆண்டுகளில் அதிகபட்ச விசயங்கள்,பொருட்கள் மாற்றத்தைச் சந்திக்கின்றன. உலகவணிகமயமாக்கல் கால்பதித்த எந்த இடத்திலும் முன்பிருந்த தனித்த கலாச்சாரம் இன்றில்லை. பணம் ஒரே இடத்தில் குவிய அனுமதிக்கும் சுயநலமிக்க நுகர்வு கலாச்சாரம் தான் உலகமயமாக்கலின் சாதனை.

நிகழ்ந்த இவ்வளவு மாற்றங்களையும் எந்தவித தயக்கமும் இல்லாமல் ஏற்றுக்கொண்ட நமது சமூகம் பெண்களின் உடை என்று வரும் போது மட்டும் பிந்தைய கலாச்சாரத்தை வலுக்கட்டயாக உள்ளே இழுப்பதன் பின்ணணியில் எவ்வளவு படித்திருந்தாலும் நாங்கள் ஆணாதிக்கத்தின் பிரதிநிதிகளே என்று ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் நிருபிக்கிறார்கள்.

ஆண்பிள்ளைகள் செய்யும் எவ்வளவு பெரிய தப்பையும் சிறிதும் தயக்கமே இல்லாமல் மூடி மறைக்கவே நமது பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அதேசமயம் பெண்பிள்ளைகள் செய்யாத தப்பிற்கும் கேள்வி கேட்கப்படுகிறார்கள். பெண்கள் சம்பந்தபட்ட எல்லாக் குற்றங்களிலும் பெண்களையே குற்றவாளிகளாக்கி அழகு பார்ப்பது தான் கலாச்சாராமா ?

பொதுஇடத்தில் கண்ணியமாக உடை அணிய வேண்டியது ஆண்கள் மற்றும் பெண்களின் பொதுக்கடமை . இதைக் கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு .ஆனால் ,யாருக்கும் முக்கியமாக பெண்களுக்கு இந்த உடை தான் அணியவேண்டும் என்ற எந்தக்கட்டுபாடும் விதிக்க வேண்டியதில்லை. ஆண்கள் எந்த உடை அணிந்தாலும் எப்படி அணிந்தாலும் உடையே அணியாவிட்டாலும் யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்பதும் , ஆண்கள் ஆபாசமாக உடை அணிந்தால் பெண்கள் கண்ணை மூடிக்கொண்டு போக வேண்டும் என்பதும் எழுதப்படாத விதி .அதே சமயம் ,பெண்கள் என்று வரும் போது மட்டும் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறார்கள் .

ஏன் பெண்களின் உடையை மட்டும் எதிர்க்கிறார்கள் ?

உணவில் என்ன மாற்றம் நிகழ்ந்தாலும் இன்றும் வீடுகளில் பெண்களே சமைக்கிறார்கள் , இருப்பிடம் மாறினாலும் பெண்களை இருப்பிடங்களை நிர்வகிக்கிறார்கள் , சமய நம்பிக்கைகள் மாறினாலும் பெண்கள் தான் முக்கிய பங்குவகிக்கிறார்கள் இவை அனைத்தும் பெண்கள் வேலைகள் என்று முத்திரையுடன் இன்றுவரை பெண்களாலேயே செய்யப்படுகிறது . ஆனால் ,பெண்கள் பொதுவெளியில் தங்களுக்குச் சரிசமமாக உடை அணிவதை மட்டும் ஆணாதிக்கச் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .

அன்று பெண்கள் வீட்டிற்குள் முடங்கிக்கிடந்த வரை உடை ஒரு பெரிய விசயமாக தெரியவில்லை. இன்று நிலமை அப்படியில்லை, பல்வேறு விதமான வேலைகளின் நிமித்தமாக பெண்கள் பொதுவெளியில் அதிக நேரத்தைச் செலவிட வேண்டிய இன்றைய சூழலில் அணிய சவுகரியமில்லாத உடைகளை அணியச்சொல்வதில் எந்தவித நியாயமும் இல்லை . இது அடிப்படை உரிமை சார்ந்த விசயம் .நாகரிக சமூகத்தில் அவரவருக்கு பிடித்தமான உடைகளை அணிவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு .நாம் நாகரிக சமூகமா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். பெண்கள் எப்படி உடை அணிந்தாலும் வெறிக்க வெறிக்க பார்ப்பது தான் ஆண்களின் பொதுக்குணம். அப்படிப் பார்ப்பதன் பின்னாலும் ஒரு நெடிய வரலாறு இருக்கிறது . இப்போது அதுவல்ல பிரச்சனை . சரி , பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் ? எல்லாப் பெண்களையும் சேலை மட்டும் அணியச் சொல்லலாமா ? சேலை சவுகரியமான உடை என்று யாராவது ஒருவர் நிருபித்து விட முடியுமா ? முடியாது .

சேலையை எப்படி அணிந்தாலும் உடல் பகுதி வெளியே தெரியவே செய்யும் . யார் முதலில் இந்த உடையை கண்டுபிடித்தாரோ தெரியவில்லை. " அணிந்துகொண்டிருக்கும் நேரம் முழுவதும் கவனத்தைக் கோரும் ஓர் உடை, புடைவை. இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை இழுத்து இழுத்துவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். 'இடுப்பு தெரிகிறதா, உள்ளாடை வெளியே தெரிகிறதா?’ எனச் செய்யும் வேலைகளில் இருந்து கவனம் பிசகிக்கொண்டே இருக்கும். இயல்பாகக் குனியவோ, வேகமாக நடக்கவோ, விரைவாக மாடி ஏறவோ, வண்டி ஓட்டவோ, பேருந்தில் ஏறவோ எதுவும் முடியாது. செல்போன், பர்ஸ் என எதையும் வைத்துக்கொள்ள முடியாது. இறுக்கமான உள்ளாடைகள், அதற்கு மேல் இறுக்கமான பாவாடை, ஜாக்கெட், அதற்கு மேல் வெயிட்டான புடைவை... என நம் காலநிலைக்கு கொஞ்சமும் தொடர்பு இல்லாத இந்த உடையை முதலில் உடுத்தியது யார்? 45 டிகிரி வெயிலில் பேருந்திலும் சமையலறையிலும் சேலை கட்டிக் கொண்டிருப்பது... அனுபவித்தால்தான் தெரியும். " என்று சேலை அணிவதில் இருக்கும் அசவுரியங்களை பட்டியலிடுகிறார், பிரியா தம்பி .உண்மையிலேயே பெண்களுக்கு மிகவும் அவஸ்தையை தரும் ,நம் சூழலுக்கு பொருந்தாத உடை தான், சேலை.இன்னும் எத்தனை நாளைக்குத் தான் கலாச்சார உடை என்று சொல்லியே அவஸ்தையை தரும் சேலையை பெண்களை அணியவைக்கப் போகிறோமோ தெரியவில்லை . வேட்டி எல்லா இடங்களிலும் அணியச் சவுகரியமாக இல்லாததாலேயே ஆண்கள் வேறு உடைகளை அணிகிறார்கள் . ஆண்களின் இந்த உடைக் கலாச்சாரத்தை மீறும் உரிமை பெண்களுக்கு மறுக்கப்படுகிறது . எனக்கெல்லாம் அதிகாரம் இருந்தால் சேலை என்ற உடையையே முற்றிலுமாக தடை செய்து விடுவேன் . அடுத்த நூற்றாண்டில் இந்தியாவில் சேலை இருக்குமா என்பதே சந்தேகம் தான்.

சேலையை விட சுடிதார் , ஜீன்ஸ் போன்றவை சவுகரியமானதாகவும் ,தன்னம்பிக்கை தருவதாகவும் இருப்பதாலேயே பெண்கள் இன்று அவற்றை அதிகம் அணிய ஆரம்பித்து இருக்கிறார்கள் . லெக்கிங்ஸ் அணியும் போது மட்டும் பெண்கள் கண்டிப்பாக கவனம் செலுத்தியே ஆக வேண்டும் . மற்ற உடைகளை விட லெக்கிங்ஸ் நிறைய பெண்களுக்கு பொருந்தாத உடையாகவே இருக்கிறது . இதை ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும் . அதே சமயம், பெண்கள் லெக்கிங்ஸ் அணியவே கூடாது என்று கட்டளையிட முடியாது .

இயல்பாகவே எப்போதும் எந்த வயதிலும் பெண்கள் ஆண்களால் ரசிக்கப்படுவதையும் , ஆண்கள் பெண்களால் ரசிக்கப்படுவதையும் பெரிதும் விரும்புகிறார்கள் . விதவிதமான ஆடைகளைத் தேடி அணிவதிலும் ,விதவிதமான அலங்காரங்களைச் செய்து கொள்வதற்குப் பின்பும் இந்த ரசிக்கப்படுதல் தான் இருக்கிறது . ஏன் ஒரு பெண் பெண்களால் ரசிக்கப்படுவதையும் , ஒரு ஆண் ஆண்களால் ரசிகப்படுவதையுமே விரும்புகிறார்கள் தானே . மற்றவர்களின் கவனத்தைக் கவர எந்த உடை அணிந்தாலும், ஏன் சேலையே அணிந்தாலும் மற்றவர்களைக் கவர தங்கள் உடல்பகுதி வெளியே தெரியும்படி உடையணியும் பெண்கள் இருக்கிறார்கள் .இவர்கள் மொத்த சதவீதத்தில் எண்ணிக்கையில் மிகவும் குறைவு . ஆண்களிலும் இப்படி நடந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள் தானே .

ஆண்களின் மன வக்கிரம் உச்சத்தை அடையும்போது, அருகே பெண் என்ற உருவில் யார் இருந்தாலும், எந்த உடை அணிந்திருந்தாலும் தங்களின் ஆதிக்கத்தைச் செலுத்துகிறார்கள் . இந்த மாதிரி உடை அணிந்ததால் தான் இந்த வன்முறை நிகழ்ந்தது என்று யாராலும் நிரூபிக்க முடியாது .

கலாச்சாரத்தில் நிகழும் தங்களுக்குத் தோதான மாற்றங்கள் குறித்தும் யாரும் கேள்வி கேட்கவில்லை . தனது அதிகாரத்தைத் தக்க வைக்க கலாச்சாரத்தைக் ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள் . ஜாதி , மதம் , பெண் அடிமை போன்ற கூறுகளைத் தக்கவைக்கவே கலாச்சாரத்தை மீண்டும் மீண்டும் கையிலெடுக்கிறார்கள் . ஆண்களே , பெண்களை நோக்கி எந்தக் கேள்வி கேட்பதற்கு முன்பும் உங்களைப் பார்த்து அதே கேள்வியை கேளுங்கள் . பிறகு பெண்களைப் பார்த்துக் கேளுங்கள் . சுதந்திர காற்றை அனுபவிக்கத் தொடங்கியிருக்கும் பெண்கள் , அந்தச் சுதந்திரத்தை அதிகமாக அனுபவிக்கவே விரும்புவார்கள் . அதிலும் கூடுதல் வாய்ப்பு பெற்றுள்ள பெண்ணியவாதிகள் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே அலட்டிக் கொள்வார்கள் . இது இயல்பு தான் .

நண்பர்களே , கலாச்சாரக் காவலர்களே ,ஆணாதிக்கவாதிகளே பெண்கள் அணியும் உடைக்கும் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கும் துளியும் சம்பந்தமில்லை . ஈரான் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட 26 வயது ரேஹானே ஜபாரி (Reyhaneh Jabbari ) என்ன ஆபாசமான உடையா அணிந்திருந்தார் . உடலை முழுதுமாக மறைத்து தானே உடை அணிந்திருந்தார் , அப்புறம் எதற்கு அவரை வன்புணர்ச்சி செய்ய ஒருத்தன் முயன்றான் . அவனை சுய பாதுக்காப்பின் பொருட்டு கொன்றதற்காக ரேஹானேவை கொலைகாரி ஆக்கி தூக்கிலிட்டு கொன்று விட்டோம் . இனியும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு பெண்களையும், அவர்களின் உடைகளையும் காரணமாக்க கலாச்சாரத்த இழுத்தீங்கனா " போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் " என்று தான் சொல்ல வேண்டிவருகிறது .

வரலாறை வைத்துப் பார்க்கும்போது , ஆணாதிக்க தந்தைவழிச் சமூகத்தின் ( பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுதல் ) கூறுகளாகவே பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளை குறிப்பிட முடிகிறது .அடுத்து வரும் பெண்ணாதிக்க தாய்வழிச் சமூகத்தில் ( ஆண்கள் அடிமைகளாக நடத்தப்படுதல் ) ஆண்கள் மீது வன்முறைகள் நிகழ்த்தப்படலாம் . இன்றைய காலகட்டம் இரண்டிற்கும் இடைப்பட்டதாக இருக்கிறது .


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Nov 14, 2014 9:47 pm

கோபமான தலைப்பை தாங்கி வந்தாலும், இதில் சில முரண்பாடான கருத்துகள் உள்ளன... இருப்பினும் இதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை.. அவருக்கு ஒரு நன்றி சொல்லிக் கொள்ளுங்கள்..




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Nov 14, 2014 9:50 pm

புடவை கட்டுவது தவறா????? இதை சொன்ன புண்ணியவதியை நான் புகைப்படதிலேனும் காண வேண்டும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Nov 14, 2014 9:53 pm

seltoday wrote:
வரலாறை வைத்துப் பார்க்கும்போது , ஆணாதிக்க தந்தைவழிச் சமூகத்தின் ( பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுதல் ) கூறுகளாகவே பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளை குறிப்பிட முடிகிறது .அடுத்து வரும் பெண்ணாதிக்க தாய்வழிச் சமூகத்தில் ( ஆண்கள் அடிமைகளாக நடத்தப்படுதல் ) ஆண்கள் மீது வன்முறைகள் நிகழ்த்தப்படலாம் . இன்றைய காலகட்டம் இரண்டிற்கும் இடைப்பட்டதாக இருக்கிறது .
மேற்கோள் செய்த பதிவு: 1103524

சோகம் சோகம் சோகம்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Fri Nov 14, 2014 10:07 pm

செந்தில் , ஆண்கள் எல்லோரும் இப்போது வேட்டி மட்டுமா கட்டுகிறோம்.இல்லையே. பெண்களை மட்டும் கலாச்சாரம் கலாச்சாரம் னு சொல்லி லட்சணமா புடவை அணியச் சொல்கிறோம். புடவை கண்டிப்பாக அசௌரிகமான உடை தான். புடவையைக் கட்டிக் கொண்டு இயல்பாக எந்த வேலையையும் செய்ய முடியாது. காலத்திற்கு ஏற்ற மாற்றத்தை அனுபவிக்க பெண்களுக்கும் உரிமை உண்டு .

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Nov 14, 2014 10:14 pm

seltoday wrote:செந்தில் , ஆண்கள் எல்லோரும் இப்போது வேட்டி மட்டுமா கட்டுகிறோம்.இல்லையே. பெண்களை மட்டும் கலாச்சாரம் கலாச்சாரம் னு சொல்லி லட்சணமா புடவை அணியச் சொல்கிறோம். புடவை கண்டிப்பாக அசௌரிகமான உடை தான். புடவையைக் கட்டிக் கொண்டு இயல்பாக எந்த வேலையையும் செய்ய முடியாது. காலத்திற்கு ஏற்ற மாற்றத்தை அனுபவிக்க பெண்களுக்கும் உரிமை உண்டு .
மேற்கோள் செய்த பதிவு: 1103534

எம் பாட்டியும் அவள் அம்மாவும்
கட்டியது புடவையே,
எம் அம்மாவும் என் தங்கையும்
கட்டுவது புடவையே
ஆக, இன்று மிக சமிப காலமாய்
வந்ததிங்கு மற்ற எல்லாம்,

என் பாட்டனும் அவன் அப்பனும்
கட்டியது கோவணம்,
என் அப்பனும் நானும்
கட்டுவது வேட்டி,
காலப் போக்கில்
வந்திருக்கலாம் பேண்டு..

இருப்பினும் கலாச்சாரம் என்ற ஒன்றை ஆண்கள் எப்போதும் அவமதித்ததாக தெரியவில்லை..

பண்பாட்டின் சின்னம் சேலை என்பதை விட, அதில் அசௌகரியங்கள் உள்ளதென்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை....

நான், வெள்ளை வேட்டியும் கட்டுவேன், லுங்கி வேட்டியும் கட்டுவேன், மாடர்ன் துணியும் அணிவேன் இருப்பினும் நான் ஆண் என்று கர்வம் கொள்வது அந்த வெள்ளை வெட்டி அணியும் போதுதான்...



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Nov 14, 2014 10:19 pm

பெண்ணின் பெருமையையும் மதிப்பையும் உயர்த்தும் ஆடைகளில் புடவைக்கு தனி இடம் உண்டு. நவநாகரீகமாய் இருக்கும் பெண்கள் கூட புடவை கட்டும் போது சபையில் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான்.

பெண்களின் அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டுவது மட்டுமின்றி, சிறப்பானதொரு தோற்றபொலிவையும் புடவை தருகிறது. இந்தியாவில் மட்டுமே சேலை உடுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாகத் தென்இந்தியாவில் சேலைகளின் பயன்பாடு மிக அதிகம். பெரும்பாலும் திருமணமான பெண்களே சேலைகளை விரும்பி அணிகின்றனர். கைக்குழந்தை உள்ள பெண்களுக்கு சேலை மிகச்சிறந்த வரப்பிரசாதமாகும்.

புடவையில் தெரியும் அழகு

நாகரீக உடையை அணிவது போல புடவை கட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல. ஐந்தரை மீட்டர் நீளமுள்ள புடவையை கட்டும் போது சற்றே கவனம் பிசகினாலும் அவிழ்ந்து விழுந்து மானத்தை வாங்கிவிடும். எனவே புடவை கட்டும் போது சில விசயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
பெட்டிகோட்டும், ரவிக்கையும் புடவையுடன் இணைந்து அணியக்கூடிய ஆடைகள் ஆகும். அவை மேட்சாக இல்லாவிட்டால் என்னதான் விலை உயர்ந்த புடவை அணிந்தாலும் பாந்தமாக இருக்காது. எனவே அவற்றிலும் கவனம் தேவை.

பெண்ணுக்கு தனி வாசம்

வட இந்தியாவில் குறிப்பாக குஜராத்தில் புடவையின் முந்தானை முன்பக்கமாக வருமாறு அணிவார்கள். ஆனால் தென்னிந்தியாவில் புடவை முந்தானை பின்பக்கம் வருமாறு பார்த்து அணிகின்றனர்.
புடவை கட்டுவதில் முக்கியமானது மடிப்பு எடுத்து கொசுவம் சொருகுவதுதான். முன்பெல்லாம் கிராமத்தில் உள்ளவர்கள் கெண்டைக்கால் தெரிய புடவையை உயர்த்தி கட்டி பின் கொசுவம் வைத்து கட்டியிருப்பார்கள். இப்போது கால மாற்றத்திற்கு ஏற்ப அனைவருமே முன்கொசுவம் வைத்து தளர கட்டத் தொடங்கிவிட்டனர். புடவையின் நீளத்திற்கு ஏற்பவே கொசுவ மடிப்பு எடுத்து இடுப்பில் சொருகவேண்டும். சேப்டி பின் பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானது. மீதமுள்ள புடவையை அழகாக மடிப்பு எடுத்தோ அல்லது ஒற்றைத் தலைப்பிலோ இடது தோல் மேல் போட்டு பின் குத்தி விட வேண்டும். முதன் முதலாக புடவை கட்டும் போது அரைமணி நேரமாவது ஆகும். பின்னர் பழகப் பழக ஐந்து நிமிடத்தில் புடவை கட்டிவிடலாம்.

ஊர் பெருமையை கூறும் புடவைகள்

பல லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள பட்டுசேலைகள் முதல் சிலநூறு ரூபாய் உள்ள காட்டன் சேலைகள் வரை இந்தியாவில் தயாராகின்றன. பட்டு என்றாலே சட்டென்று அனைவருக்கும் நினைவில் வருவது வாரணாசியும், காஞ்சிபுரமும்தான். பனாரஸ் சில்க் என்று அழைக்கப்படும் வாரணாசி பட்டு உயர்தரமான பட்டு நூலால் தயாரிக்கப்படுகிறது. இவைகளை திருமணம், விழாக்கள் போன்றவற்றிற்கு அணிந்து சென்றால் சிறப்பான தோற்றத்தைத் தரும். காஞ்சிபுரம் பட்டுச்சேலைகளின் முந்தானை டிசைன் உலக அளவில் புகழ் பெற்றது. தமிழகத்தில் பழங்காலத்தில் இருந்தே தயாரிக்கப்பட்டு வரும் இந்த புடவைகள் கையால் நெய்யப்படுவதால் நல்ல தரமாக இருக்கும்.

ஒரிசாவின் இக்கத்" சேலைகளில் அதிக கைவேலைபாடுகள் காணப்படுகின்றன. எம்ராய்டரி செய்யப்பட்ட இத்தகைய சேலைகள் பிரபலமானவை. இதில் ஆரஞ்சு, மஞ்சள் வண்ணங்கள் அதிகமாக பயன்படுத்தபட்டிருக்கும். காஷ்மீரின் மொஷிதாபாத் சேலைகள், சைனா சில்க்கை போன்று இருக்கும். இதை பெங்காலி சில்க் என்றும் கூறுவர். காஷ்மீரின் பாரம்பரிய உடையான இதில் காஷ்மீர் டிசைன்கள் நிறைந்திருக்கும்.

ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் பந்த்னி" சேலைகள் தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலும் வெள்ளை நிற சேலைகளே அதிகமாக இருக்கும். அதில் நூல் வேலைபாடு செய்யபட்டிருக்கும். பாத்திக் வகை சேலைகளில் மெழுகு பயன்படுத்தபட்டிருக்கும். இந்த சேலைகளை அணிந்தால் வடஇந்தியத் தோற்றத்தைக் கொடுக்கும். குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் புடவைகளுக்கு பெயர்பெற்ற நகரமாகும். இங்கு கிடைக்கும் புடவைகள் சிறப்பு வாய்ந்தவை.

தென்மாநில புடவைகள்

கர்நாடகாவின் பன்கடி சேலைகள் விலை குறைவானவை. தினமும் பயன்படுத்தும் விதத்தில் இவை இருக்கும். ஆந்திராவின் போச்சம்பள்ளி சேலைகள் அதிக எடை கொண்டதாய் இருக்கும். அந்த அளவுக்கு கைவேலைப்பாடுகள் மிகுந்திருக்கும். மங்கல்கிரி சேலைகளும் அங்கு தயாரிக்கப்படுகின்றன. இந்த வகை சேலைகளில் பார்டர் டிசைனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.
தமிழ்நாட்டில் கிடைக்கும் காஞ்சிபுரம் பட்டு போல கோயம்புத்தூர் காட்டன் சேலைகளும் பிரசித்தி பெற்றது. பினிஷிங் நன்றாக இருக்கும் சின்னாளபட்டி சுங்குடி புடவைகள் பெண்களின் தோற்றத்திற்கு தனி மதிப்பினை தரும். ஆயிரம் ஆடைகள் அணிந்தாலும் சேலை கட்டும் பெண்ணுக்கு என்று தனிவாசம் இருப்பதை புடவையை கட்டி பார்த்தால்தான் தெரியும்

நன்றி: http://tamil.oneindia.com/




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Nov 14, 2014 10:19 pm

கொஞ்சம் முரண்பட்ட விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது. மாற்றம் என்ற வார்த்தையை தவிர மாறிக்கொண்டே இருக்கும் கலாச்சாரத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதும், கலாச்சாரமே.



போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபோங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Nov 14, 2014 10:25 pm

செந்தில் wrote:பண்பாட்டின் சின்னம் சேலை என்பதை விட, அதில் அசௌகரியங்கள் உள்ளதென்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை....
சூப்பருங்க நானும் இதனை ஆமோதிக்கிறேன் செந்தில். கலாச்சாரம் என்ற பெயரில் எவ்வளவு தான் மாறினாலும், என் ஒட்டு,  நான் மிகவும் நேசிக்கும் புடவைக்கே!



போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபோங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Nov 14, 2014 10:33 pm

விமந்தனி wrote:கொஞ்சம் முரண்பட்ட விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது. மாற்றம் என்ற வார்த்தையை தவிர மாறிக்கொண்டே இருக்கும் கலாச்சாரத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதும், கலாச்சாரமே.
மேற்கோள் செய்த பதிவு: 1103539

கண்டு கொள்ளாமல் இருக்கும் கலாச்சாரம் வேறு, ஆனாலும் புடவை என்ற ஒன்றை கலாச்சாரத்தின் எதிரி போல் பாவித்திருப்பதில் எனக்கு உடன்பாடில்லை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக