புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எத்தனை காலம் தான்! Poll_c10எத்தனை காலம் தான்! Poll_m10எத்தனை காலம் தான்! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
எத்தனை காலம் தான்! Poll_c10எத்தனை காலம் தான்! Poll_m10எத்தனை காலம் தான்! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எத்தனை காலம் தான்! Poll_c10எத்தனை காலம் தான்! Poll_m10எத்தனை காலம் தான்! Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
எத்தனை காலம் தான்! Poll_c10எத்தனை காலம் தான்! Poll_m10எத்தனை காலம் தான்! Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எத்தனை காலம் தான்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 28, 2014 7:41 pm

தெருவில் ஆங்காங்கு கூட்டம் கூடி நின்று குசுகுசுத்தவாறு இருந்தனர்.

என்னவாய் இருக்கக்கூடும்? தெருவில் எந்த வீட்டிலாவது யாராவது! ஊஹூம்.. அப்படியிருக்கவும் வாய்ப்பில்லையே! ஏன் எனில் அப்படிப்பட்ட வீட்டு வாசலில் ஷாமியானா பந்தல் எல்லாம் தெருவை அடைத்துப் போட்டு, போக்குவரத்தைத் தடை செய்து ஏதோ தேசத்தலைவர்கள் மண்டையைப் போட்டு விட்டார் போல அமர்க்களம் பண்ணி, 21 கன் சல்யுட் முழங்காத குறையாக, தாரை, தப்பட்டை முழங்க ஊம் நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்!

இல்லையெனில் எவனாவது பட்டப்பகலில் வீடு நுழைந்து எல்லாம் லவட்டிக் கொண்டு போய் விட்டானோ? அதுவும் சாத்தியமில்லை. ஏன் எனில், களவு போன வீட்டு முன்தான் கூட்டம் நின்று வருத்தம் தெரிவிப்பார்கள். இப்படி ஆங்காங்கு கூடி நின்று பேசமாட்டார்கள்.

ஒருக்கால் இப்படி இருக்குமோ? எப்படி? எதிர்வீட்டில் 6 மாதங்களுக்கு முன் ஒரு விதவை தாயாரும், அவரது டீனேஜ் கல்லூரிக்குப் போகும் பெண்ணும் குடித்தனம் வந்திருந்தனர். காலை, மாலை வேளைகளில் அப்பெண் கல்லூரிக்குப் போகும், வீடு திரும்பும் போதும் பாக்கியராஜ் போல ஒருவன் அந்த வீட்டையே வட்டமிடுவதும், அவள் எங்கேயாவது போனால் பின்னாலேயே போவதும், ஆனால் அந்தப் பெண் அவனைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் மருண்ட பார்வையுடனும் விடுவிடுவென வேகமாய் ஓடி விடுவதையும் பார்த்திருக்கிறேன். அவன், தன் காதலை அவளிடம் சொல்லி, அவள் மறுத்து, ஆசிட் வீசி.. நினைக்கவே பதைபதைப்பாய் இருக்கிறது... சே.. ஏன் என் மனம் என்னவோ எண்ணுகிறது? இப்படிப்பட்ட குழப்பங்களுடன் என் வீட்டுக்குள் நுழைய என் வருகைக்காகவே காத்திருந்தாற் போலக் காணப்பட்ட என் பார்யாள் படபடப்புடன் என் அருகில் வந்து,

"சீக்கிரமாய் கிளம்புங்க. காபி குடிச்சிட்டு, உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டிருக்கோம் காலனி வாசிகள் எல்லாரும்' என்றாள்.
"அப்படி என்ன தலை போற அவசரம்' என்ற போது,
"கேள்வியெல்லாம் கேட்காம உடனே கிளம்புங்க. படுபாவி இப்படிச் செய்வான்னு யார் கண்டாங்க' என்ற போது

"என்னாச்சு? என்னாச்சு உனக்கு இன்னைக்கு இவ்வளவு ஆத்திரப்படற அளவுக்கு' என்ற போது
"பின்ன.. ஆத்தரப்படாம என்ன செய்யச் சொல்றீங்க' என்றவள் சற்றுப் பொறுத்து என் முகம் பார்த்து,.
"என்னை மன்னிச்சிருங்க' என்றாள்.

"எதுக்கு உன்னை நான் மன்னிக்கணும்? விலாவாரியாய் சொல்லும்மா' என்ற போது,
"இப்ப அதுக்கெல்லாம் டைம் இல்லைனு சொல்றேன்ல, தொண தொணனு கேள்வி மேல் கேள்வி கேட்டுகிட்டு. ஒரு ஆயிரம் ரூபாய் எடுத்துக்குங்க கைல, சில்லறையாய் இருக்கட்டும். மத்தவங்களோட சேர்ந்து கமிஷனர் ஆபீஸ் வரை போய் வரணும்ல. எனக்கு ஒரே படபடப்பாய் இருக்கு. போச்சு போச்சு எல்லாம் போச்சு. எந்தப் பிறவியில் யாரையெல்லாம் ஏமாத்தினமோ இப்ப எல்லாம், எல்லாம் பேச்சு. ஐயோ யார் கிட்ட போய் சொல்லி அழுவேன்?'

"நீ என்ன சொல்றேன்னு புரியலைம்மா. என்னைப் பொறுத்தவரை ஒரு சாதாரண ஈவ் டீஸிங் கேசுக்கெல்லாம் கமிஷனர் வரைப்போகணுமா என்ன? அவங்களும் என்ன சொல்வாங்க? லோகல் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுங்கனுதானே சொல்லப் போறங்க?' என்ற என்னைப் பார்த்து.

"என்ன பினாத்திறீங்க? யார், யாரை டீஸிங் பண்ணினாங்க? இது என்ன புதுக்கதை, நான் சொல்ல வந்ததை யு பர்ஸ்ட் லிஸன்.ஓகே. அப்புறம் நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க. ஆனாலும் நான் பண்ணினது தப்புதாங்க. உங்களுக்குத் தெரியும். எனக்கென்ன இப்படியாகும்னு தெரியுமா? ஊம் படுபாவிப்பய. உருப்புடுவானா இப்படி எல்லார் வயத்தெரிச்சலயும் கொட்டிகிட்டா. எப்படியெல்லாம் வாயைக்கட்டி, வயிற்றைக் கட்டி நீங்க வீட்டு செலவுக்குனு கொடுக்கிற பணம் பத்தலைனு பொய் சொல்லி, இப்படியெல்லாம் ஏன் சொன்னேன்... ஒரு சமயத்துக்கு சேவிங்க்ஸ்ல இருந்தா உதவுமேனுதானே? நான் பண்ணினது தப்புதான். இப்ப நினைச்சாலும் என் வயிறு எரியுது.

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கிட்டத்தட்ட முப்பதாயிரம் ரூபாயை அந்த நிதி நிறுவனத்தில் இங்கே இந்த காலனி வாசிகள் எல்லாரும் போடறாங்களேனு, பேராசை பெரு நஷ்டம்னு அப்ப புரியலை. இப்ப அடிச்சுகிட்டு என்ன பண்றது? என்னமா பேசினாங்க அந்த நிதி நிறுவனங்களில் உள்ள அத்தனை பேர்களும், பார்த்தா மெத்தப்படிச்சவங்களா, டைகட்டி, ஷர்ட் இன் பண்ணி, ஷூ போட்டுகிட்டு, நுனி நாக்கு ஆங்கிலம் பேசி, கூல் ட்ரிங்க் எல்லாம் வரவழைச்சுக் கொடுத்து, ஆளை மயக்கி, வட்டி 20 சதம். முன் தேதியிட்ட காசோலைகள், 2 கிராம் தங்க காசு. அப்புறம் தீபாவளிக்க பட்டாசு, இனிப்பு பாக்ஸ், பட்டுப்புடவைனுலாம் ஆசை காட்டி... இப்ப? அந்த கம்பெனியை ராவோட ராவா இழுத்து மூடிட்டு தலை மறைவாயிட்டாங்க ஒட்டு மொத்த பேர்களும்னு தெரிய வரப்ப எப்படிங்க, எப்படிங்க நிம்மதியாய் இருக்க முடியும்?

இந்தக் காலனில எத்தனை வீடுகள்? அத்தனை வீட்டுக்காரர்களும்ல அந்த நிதி நிறுவனத்தில் பணத்தை கையில் இருந்ததை மட்டும் இல்லை... வெளியிலயும் கடன் வாங்கி அதிக வட்டிக்க ஆசைப்பட்டு டெபாசிட் பண்ணி இப்ப விழி பிதுங்கி நிற்கிறாங்கள்ள? அதான் ஒட்டு மொத்த நம்ம காலனிவாசிகளும் போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்குப் போய் புகார் மனு கொடுத்துட்டு வரலாம்னு கிளம்பிக்கிட்டிருக்கோம்' என்று ஜாலு சொல்லிக் கொண்டிருக்கையில் பக்கத்து வீட்டுச் சிறுமி ஒருத்தி ஓடோடி வந்து,

"அக்கா, அம்மா சொல்லச் சொன்னாங்க உங்க கிட்ட... அதாவது அந்த கம்பெனில போட்ட பணத்துக்கான எஃப்... டி ரசீது ஜெராக்ஸ் காப்பி, அவங்க கொடுத்த எல்லா செக்கோட ஜெராக்ஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு, வெள்ளை பேப்பர்ல ஒரு புகார் மனு ஒண்ணும் பிரிபேர் பண்ணி, எடுத்துக்கிட்டு வரச் சொன்னாங்க கமிஷனர் ஆபீசில கொடுக்க' என்றாள்.

உடனடியாய் நாங்களும் அப்படியே செய்து, டீடைலாக, எவ்வளவு பணம், எந்தெந்தத் தேதிகளில் அந்தப் போலீ நிதி நிறுவனத்தில் போட்டோம் என்ற விவரங்களுடன் காலனிவாசிகள் அத்தனை பேர்களும் ஏகப்பட்ட ஆட்டோக்களை அமர்த்திக் கொண்டு ஊர்வலம் போல கமிஷனர் ஆபீஸுக்குப் போவதற்குள் அங்க எங்கள் காலனிவாசிகளைத் தவிர நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளம் போல காணப்பட்ட அந்த ஏரியாவே ஸ்தம்பித்துப் போக, ஊடகங்களுக்குச் செய்தி போய், காமிராவும் கையுமாக, பேட்டி எடுத்துச் சேனலில் தொடர்ந்து ஒளிபரப்பத் தொடங்கினர்.

இதுப்போலப் போலி நிதி நிறுவனங்களில் எதையும் தீர விசாரிக்காமல் பணத்தைப் போட்டு உயர் அதிகாரிகளும் மைக் பிடித்து ஊடகங்களுக்கு உருக்கமாக பேட்டி கொடுத்தனர்.

பிறகு எல்லோருது மனுக்களும் வரிசையாய் வாங்கிக் கொள்ளப்பட்டு இன்னொரு காப்பியில் போலீசாபீஸ் ரவுண்ட் சீலும், புகார் மனுவைப் பெற்றுக்கொண்டதாக ஒரு சிப்பந்தி கையெழுத்திடனும் வீடு திரும்புகையில் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் துக்கம் விசாரித்துக் கொண்டு ஆறுதல் அடைந்தனர். அதாவது நான் மட்டும் ஏமாளி இல்லை இங்கே. என்னைப் போல எண்ணற்றவர்கள் இருக்கிறார்களே என்ற ஆறுதலுடன்.
ஒருவர் ஒரு முதியவரைப் பார்த்து நீங்கள் எவ்வளவு டெபாசிட் பண்ணி ஏமாந்தீங்க? என்ற போது அந்த முதியவர் கேட்டவர் கையைப்பிடித்துக் கொண்டு அழுகையூடே, போச்சு, எல்லாம் பேச்சு, என்று மயங்கிக் கீழே விழக்போக, கேள்வி கேட்டவர் அந்த முதியவரை ஆசுவாசப்படுத்தி, குடிக்கத் தண்ணீர் கொடுத்த பின், பெரியவர் சொன்னார்.

"நான் ஒரு நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்தேன். ஒரு பெண், ஒரு பையன், இங்கே கை நிறைய சம்பாதிக்கிறான். ஆனாலும் மாச சாப்பாட்டுக்கு இங்கே டெபாசிட் பண்ணியிருந்த பணத்திலிருந்து வர வட்டியைத் தான் கொடுத்து பையன் வீட்டில் சாப்பிட்டுக்கிட்டிருந்தேன். டெபாசிட் மெச்சூர் ஆனதும் அவன் அந்தப் பணத்தை எடுத்து எங்கிட்ட கொடுத்துடுங்கப்பா. என் வீட்டுக் கடனை அடைச்சுட்டு நிம்மதியாய் இருக்கலாம்னு சொன்னப்ப மாட்டேன். அந்தப் பணத்தில் உன் தங்கைக்கும் பங்கு கொடுக்கணும்னு சொன்னதை அவனும் மருமகளும் ரசிக்கலை.

ஆனாலும் இது பற்றி எங்கிட்ட எதிர்வாதம் எதுவும் பண்ணலை. கணிசமாய் மாச வட்டி வந்துகிட்டிருந்ததால, இப்ப? என் மருமக எனக்கு எப்படி சாப்பாடு போடுவா? என்கு மாதாந்திர பென்ஷனும் கிடையாது. தெருவுக்குப் போற நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்களே இந்த படுபாவிப்பசங்க. எனக்கு நெஞ்சை அடைக்குதே' என்றவர் மயங்கிக் கீழே விழப்போக அவரை அவசரமாய்ப் பக்கத்தில் இருந்த அரசினர் மருத்துவமனையில் சேர்த்து, அவர் பிள்ளைக்கு செய்தி சொல்லி, வந்தவன்,

"நல்லா வேணும் கிழத்துக்கு, பெத்த பசங்களை நம்பி பணத்தை கொடுக்கமாட்டேன்னுது. இப்ப?' என்று ஆஸ்பத்தியில் இருந்த அவர் மேல் வெறுப்பு உமிழ்ந்தான்.
பிறகு என்னவாயிற்று அவர் நிலை என்று தெரியவிலலை. இதுபோல எத்தனை, எத்தனை பேர்கள் பணம் பறி போய், வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஹார்ட் அட்டாக் வந்து உயிரை விட்டனரோ? எவ்வளவு பேர்கள் மன நிலை பாதிப்புக்குள்ளாகி.. நினைக்க, நினைக்க நெஞ்சு குழிக்குள் பந்து போல் ஒன்று அடைக்கிறது என்பதுதான் உண்மை.

இதைவிடப் பெரிய விஷயம். அவமானகரமான விஷயம் என்ன தெரியுமா?
மெத்தப்படித்துப் போலீசில் உயர் பதவி வகித்தவர் ஒருவர் இந்தப் போலி நிதி நிறுவனத்தில் எக்கச்சக்க தொகையை டெபாசிட் பண்ணி, திருடனுக்குத் தேள் கொட்டினாற்போல என்பார்களே, அப்படி வெளியில் சொல்லி அழவும் முடியாமல் கப் சிப் வாய் முடிக் கொண்டிருந்ததாக.. எப்படியெல்லாம் நாடகமாடுகிறார்கள் பிறரை எத்திப்பிழைக்க..

பெரிய கட்டிடமாய்ப் பார்த்து வாடகைக்கு எடுத்துக் கொண்டு கட்டிடம் பூரா ஏசி செய்து, பளா, பர்னிச்சர், கணினிகள், ஏகப்பட்ட இளம் பெண்களை வேலைக்கு அமர்த்தி, உள்ளே நுழைபவர்களை ஙிடச்t ஞிச்ண ஐ ஞீணி ஞூணிணூ தூணித குடிணூ என்ற நுனி நாக்கு ஆங்கிலத்தில் கவர்ந்திழுத்து, காபி, கூல்ட்ரிங்க் கொடுத்து, ஒரு சில நிமிடங்களில் பிரெயின்வாஷ் பண்ணி அப்பப்பா.

இது மட்டுமா? தேக்கு மரம் வளர்த்துப் பணம் கொழிக்கச் செய்வோம்... மாமரம் வளர்த்துக் கொடுப்போம். கோழி வளர்த்துப் பணம் கொட்டச் செய்வோம் என்றெல்லாம் சொல்லி திறப்பு விழாவுக்குப் பிரபலமானவர்களை வரவழைத்து, ஊடகங்களிலும் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து, ஒரு சில மாதங்கள் வரை எல்லாமே ஒழுங்காய் இருப்பது போன்ற பிரமையை ஏற்படத்தி அதாவது பாவ்லா காட்டி, பிறகு ஒரு சுபயோக சுபதினத்தில் ராவோடு, ராவாகப் பெரிய பூட்டாய்ப் பூட்டிக்கொண்டு தலைமறைவாகிவிடறதும் பணத்தைப் போட்டவர்கள் குய்யோ, முய்யோ என வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்வதும் ஒரு ரொடீன் அஃபைர் ஆகிவிட்டிருக்கிறது என்பதே நிதர்சனம்.

தொடரும்...................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 28, 2014 7:42 pm

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்து ஓர் அசோசியேஷன் தொடங்கி, ஒரு சில மாதங்கள் வரை ஒரு சண்டேயில் யாராவதொருவர் வீட்டில் கூடி விவாதிப்பதும், பிறகு அடுத்த மாதம் இதே போல ஒரு கூட்டம்.
சில மாதங்களுக்குப் பிறகு அந்த அஸோஸியேஷனே நீர்த்துப் போவதும், எப்போதாவது யாராவது ஓர் எதிர் கட்சி உறுப்பினர் சட்ட சபையில் இந்தப் பிரச்னை பற்றிப் பேச, அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் அங்காங்க சட்டச் சிக்கல்கள் காரணமாய்க் கால தாமதம் தவிர்க்க முடியவில்லை என்று விளக்கம் கொடுப்பதும்,
"இன்னம் எத்தனை காலமாகும் இந்த வழக்கு முடிய' என்று எதிர்கட்சி உறுப்பினர் கேட்க, "அதான் சொன்னேனே... சட்டச் சிக்கல்கள்னு.'

அதாவது நிதி நிறுவனம் நடத்தியவர்கள் வசூல் பண்ணின பணத்தையெல்லாம் பினாமி பேர்கள் மேல எழுதிவச்சதோட பிராப்பர்டியாயும் மாத்தி எழுதி வச்சிட்டாங்க. மக்களவையிலோ, சட்டசபையிலோ, சட்ட திருத்தம் கொண்டு வந்து, பினாமிகள் பேர்ல இருக்கிற சொத்துக்களையும் அட்டாச் பண்ண அரசின் எண்ணத்தில் இருக்கு. கனம் எதிர்கட்சி உறுப்பினர்கள் இதுக்கு ஒத்துழைச்சா தான் இது சாத்தியமாகும்னு ஆப்டா ஒரு பதில் சொல்லிட்டாங்க.

இவ்வளவு களேபரங்கள் தினத்துக்கும் நடக்குது. ஊடகங்களில் செய்தியாகுது. அப்படியும் கூட, மறுபடி ஒரு ஊரில் ஒரு நிதி நிறுவனம் படு ஜோராய் அட்டகாசமாய்த் தொடங்கி, பிரபலங்களை வரவழைத்து, அப்பாவி பொது மக்கள்கிட்ட லட்சங்கள் பணத்தை டெபாசிட்ன்ற பேர்ல, அதிக வட்டி தரதா சொல்லி கணிசமான பணம் வசூலானதும் தலைமறைவாயிடறதும், மறுபடி அடியைப்பிடிடா, பாரதப்பட்டானு ஆரம்பத்திலிருந்து எல்லாம் தொடங்கி, போலீசில் கம்ப்ளைன்ட், மீடியாக்களுக்குப் பேட்டி, அஸோஸிடேஷன் தொடங்கறது.

பிறகு, இன்னம் சில மாத இடைவெளியில், இதே போல் இன்னொரு இடம். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.. என்ன அதி அற்புதமான வைர வரிகள். இப்படித்தன் நானும் அன்று என் மனைவி சகிதம் போய் புகார் மனு கொடுத்துச் சில நாள்கள் வரை அல்லும், பகலும் அனவரதமும் இதைப்பற்றியே பேசிப்பேசியே பொழுதும் சாய்ந்தது என்ற மக்கள் திலகம் படப்பாடல்களுக்கொப்ப, பிறகு அதை நாங்கள் அனைவருமே கன்வீனியண்டாக மறந்து, மனதைத் தேற்றிக் கொண்டிருந்ததொரு வேளையில், பல வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் காலையில் பேப்பர் படித்துக் கொண்டிருக்கையில் வாயிற்பக்கம் நிழலாட, அப்போது பார்த்து என் மனைவி வந்து,

"வாங்க, வாங்க, உங்களைத்தான் எதிர்ப்பார்த்திட்டிருக்கேன்' என்றவள் என் பக்கம் திரும்பி...
"என்னங்க.. என்னங்க.. இவங்க யார்னு தெரியுமோ உங்களுக்கு' என்ற போது ஊஹும் என்று தலையாட்டினேன். தொடர்ந்து அவள் சொன்னாள்.

"இவங்க நம்ம காலினிலதான் குடியிருக்காங்க. அதுவும் நம்ம தொரை இருக்காரே, அவர் இருக்கிற தெருவிலேயே, அவங்க வீட்டுக்கு எதிர் வீடாம்,' என்ற போது வந்திருந்தவர்கள் மீது எனக்கு மரியாதை அதிகமாயிற்று. ஏன் எனில், தொரை என் ரிலேடிவ் மட்டுமல்ல. அரசில் உயர் பதவி வகிப்பவர். அவர் வசிப்பது ஒரு போஷ் லொகாலிடியில். பல பிரபலங்கள் வசிக்கும், எப்போதும் பிசியான போலீஸ் பந்தோபஸ்துடன், யாரும் சுலபமாய் நுழைந்து விட முடியாத லொகாலிடியில் வசிப்பவர்கள் என்பதாலும் தான்.

வந்திருந்தவர் கோட்டார் என் மனைவியிடம் "சார் கிட்ட சொல்லிட்டீங்களா மேடம்' என்று.
"இல்லை' என்ற என் மனைவி ஜானு என் பக்கம் திரும்பி, "சார் ஒரு பொறுப்பான அரசு வேலையில் கை நிறைய சம்பளம் வாங்கறார். இவங்க மிஸ்ஸஸும் நல்ல வேலையில் இருக்காங்க. குழந்தை, குட்டிங்கனு பாவம் இல்லைங்க. ஆனால் ஏகப்பட்ட சொத்து பத்துங்க இருக்குதாம். கிராமத்தில 2000 ஏக்கர் போல நன்செய், புன்செய், நாலு வீடுகள் எல்லாம் இருக்கு. இதைத்தவிர எக்கச்சக்க காஷா வேற இருக்காம். படிச்ச வசதியில்லாத பசங்களை தத்தெடுத்து படிக்க வைக்கிறாங்களாம்.

ஒரு முதியோர் இல்லம் வேற தொடங்க உத்தேசமாம். லைஃப்ல நாலு பேர்களுக்கு தங்களால ஆன உதவி செய்ய நினைக்கிறாங்களாம். அது மட்டும் இல்லைங்க. இவங்க நம்ம தொரைக்கு நல்ல ப்ரெண்ட்ஸாம். இவங்க இங்கேயே இனி தங்கி நாலு பேர்களுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறாங்க. ஸாரி, ஸாரி, நான் உங்ககிட்ட சொல்ல வந்ததை சொல்லாம என்ன, என்னவோ பேசிக்கிட்டிருக்கிருன்ல.

இவங்க சீட்டு பிடிக்கப்போறங்களாம். சீட்டுனா, தீபாவளி ஃபண்டும்பாங்களே, அது. நம்மைப்போல ஏழை, நடுத்தர மக்கள் ஒரு நாள் கிழமை, பண்டிகைம்போது செலவை சமாளிச்சு முடியாம திண்டாடறாங்கள்ள, என்ன தான் போனஸ்னு வந்தாலம் பண்டிகைம்போது பத்தாமப்போகுதுல்ல, எல்லா ஆபீஸ்லயும் இப்படி தீபாவளி ஃபண்ட் அதாவது மாசா மாசம் ஒரு தொகையை பிடிச்சம் பண்ணி, தீபாவளியின்போது மொத்தமா சேர்ந்த தொகையோட, கொஞ்சம் வட்டி, 2 கிராம்ல ஒரு தங்கக்காசு, தீபாவளிப் பண்டிகைக்கு ஒரு ஸ்வீட் பாக்ஸ், பட்டாசு எல்லாம் கொடுப்பாங்களாம்ல. அது போலத்தான் இதுவும்.

என்னங்க நாமும் இந்த தீபாவளி ஃபண்டில சேர்ந்துக்கலாங்க. மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க, மாசா மாசம் ரூபாய் இரண்டாயிரம்தாங்க. இது டிசம்பர் மாசம். இப்ப ஆரம்பிச்சு, அக்டோபர் வரை 11 மாதங்கள், சேரப் போர மொத்தத் தொகை 22000/- தவிர, 2 கிராம்ல தங்கக் காசு, கொஞ்சமே கொஞ்சம் வட்டி, பட்டாசு பாக்கெட், அப்புறம் ஸ்வீட் பாக்ஸ். உங்களுக்கு வரப்போற போனஸ்ல மார்வாடிக்கிட்ட வச்சிருக்கிற நகைகளுக்குக் கொஞ்சம் வட்டி மட்டுமாவது கட்டிட்டு, எனக்கொரு பட்டுப் புடவை வாங்க் கொடுத்துடுங்க. அப்புறம் இப்போதைக்கு உங்ககிட்ட பட்டெல்லாம் கேட்கவே மாட்டேங்க.. பிளீஸ்ங்க நம்ம தொரையும் இந்த ஃப்ண்டில சேர்ந்திருக்காராம்' என்ற போது தட்ட முடியவில்லை என்னால். நான் யோசிப்பதை பார்த்த வந்திருப்பவர்கள்,

"சார் உங்களால் முடியலைனா, வேண்டாம். இன்னொரு சமயம் பார்த்துக்கலாம். அப்ப நாங்க வரட்டுமா சார், வரட்டுமா மேடம்' என்ற போது என் மனைவி முகம் சுண்டிப்போயிற்று, அதானல், அவர்களிடம்,
"அதெல்லாம் எதுவம் இல்லைங்க. நோ ப்ராப்ளம் என்று சொல்லி உடனடியாய் உள்ளே போய் இரண்டாயிரம் கொண்டு வந்து கொடுத்தேன்.'

"மாசா, மாசம் நாங்க பர்ஸ்ட் வீக்ல நேரில் வந்து பணத்தை கலக்ட் பண்ணிக்கிறோம்' என்றவர்கள் "நீங்கள் கட்டாயம் ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு சாப்பாட்டுக்கு வரணும்' என்ற போது மாட்டேன் என்று எப்படிச் சொல்வது? கூச்ச சுபாவம் உள்ளவன் நான், என்பதால் இப்படி பூரா பணத்தையும் கட்டி முடித்தாயிற்று. இன்னம் 15 நாள்களில் தீபாவளி பண்டிகை எப்படியோ சிறுகச் சிறுக இருபதாயிரம் சேர்த்தாயிற்று. என் மனைவியின் தொணதொணப்பால். இல்லாவிட்டால் இது நடக்கிற காரியமா என்ன? அதுவும் என்னைப்போல ஸாடே ஸத்ரா துட்டை சம்பளமாய் மாதாமாதம் கையில் கொண்டு வரும் ஒரு லோயர் மிடில் கிளாஸ் வகுப்பினருக்குப் பூரிப்பாய் இருந்தது.

என்னைப்போல ஒரு மிடில் கிளாஸ் மாதவனுக்கு எது மகிழ்ச்சியைக் கொடுக்கும்? இது போலப் பண்டிகைகள், மனைவி, குழந்தைகளுடன் கொண்டாடும் போதுதானே!
"என்னைக்கு அவங்க பணத்தையும், கிஃப்டையும் கொண்டு வந்து கொடுப்பாங்களா?' என்று என் மனைவியைக் கேட்டேன் ஒருநாள்.

"இன்னம் பத்துநாட்கள் இருக்காமே, நேத்துக்கூட தொரை வீட்டுப்பக்கமாய் போனப்ப விசாரிச்சேன் அக்கம் பக்கம் உள்ளவங்களை. பெட்டி, பெட்டியாய் என்னவோ வந்து இறங்கிச்சாம். அவங்க வீட்ல அனேகமா, கோல்ட் காயின்ஸ், பட்டாஸ், ஸ்வீட் பாக்ஸ் இருக்கலாம்னு சொன்னாங்க. இப்படி ஒரு நல்ல தாராள மனம் படைச்ச தம்பதியினரைப் பார்க்க முடியுமாங்க இந்தக் காலத்தில' என்றவளுக்கு நாளா வட்டத்தில் ஸ்வரம் கொஞ்சம், கொஞ்சமாய் இறங்கத் தொடங்கிற்று.

பண்டிகை முதல் நாள் வரை அவர்கள் வீடு தேடி வராததால்!! உடனே போய்ப் பார்க்க, அவர்கள் வீட்டு முன் கூட்டம் கூடி நின்று வழக்கம் போல வசைமாறிகள் பொழிந்து கொண்டும், சபித்துக் கொண்டும்.
"இப்படி செய்வான்னு நாங்க நினைச்சுக்கூட பார்க்கலையே. பாவி, படுபாவி, இவன் நல்லாயிருப்பானா? என் பணம் எல்லாம் போச்சே... இதில இரண்டு சீட்டுல வேற நான் சேர்ந்திருந்தேனே. இப்ப எல்லாமே போச்சே' என்று புலம்பியவாறு இருந்தவனை நெருங்கி விவரம் கேட்க,
"போச்சு, எல்லாம் போச்சு. தீபாவளி ஃபண்ட்னு ஏராளமான பணத்தை அப்பாவி ஏழை மற்றும் நடுத்தர மக்களை நம்ப வச்சு கழுத்தை அறுத்து... இவன் விளங்குவானா? இவன் குடும்பம். குழந்தை குட்டிங்களாம், நல்லாயிருக்குமா' என்று சபித்து.

"அப்புறம் என்ன பண்ணலாம்?' என்று ஆலோசனை கேட்க. எல்லாரும் கோரஸாய்ச் சொன்னோம். "வேற என்ன செய்ய? போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்குப் போய் கம்ப்ளைன்ட் கொடுப்போம்' என்று சொன்னதால் நானும் என் மனைவியுடனும், மற்ற பாதிக்கப்பட்டவர்களுடனும் புகார் கொடுக்கப்போய்க் கொண்டிருக்கிறோம். வாழ்க பாரதம்!

- கௌசல்யா ரங்கநாதன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக