புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_c10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_m10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_c10 
29 Posts - 62%
heezulia
ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_c10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_m10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_c10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_m10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_c10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_m10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_c10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_m10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_c10 
194 Posts - 73%
heezulia
ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_c10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_m10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_c10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_m10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_c10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_m10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_c10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_m10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_c10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_m10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_c10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_m10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_c10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_m10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_c10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_m10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_c10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_m10ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்பிள் போன் அதிர்ச்சி!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 24, 2014 7:46 pm

First topic message reminder :

ஆப்பிள் போன் அதிர்ச்சி!
அண்டன் பிரகாஷ்


நியூட்டன்’... இந்தப் பெயரை வாசித்ததும் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த சர் ஐசக் நியூட்டன் மட்டுமே உங்கள் நினைவுக்கு வந்தால், 'ஆப்பிள்’ நிறுவனத்தின் மெகா தோல்வி பற்றி அறியாதவர் நீங்கள்! 90-களின் ஆரம்பத்தில் ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட மொபைல் சாதனம் 'நியூட்டன்’. அலைபேசி, டிஜிட்டல் இசைப் பேழை என்பது எல்லாம் என்னவென்றே அறியாத அந்த நாட்களில் Personal Digital Assistant, சுருக்கமாக 'PDA’ என்ற வகையறாவை அறிமுகப்படுத்தியதே ஆப்பிள்தான். 20 வருடங்களுக்கு முன் இருந்த கணினி தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடும்போது அற்புதமான சாதனம் நியூட்டன். பிரத்யேகத் தகவல்களைச் சேகரிக்கும் பேழையாக மட்டும் இல்லாமல், திரை மீது எழுதப்படும் கையெழுத்தைப் புரிந்துகொள்ளும் மென்பொருள், ஃபேக்ஸ் அனுப்பும் வசதி என அப்போது அது அதிநவீனம். அந்த நாட்களில் கவர்ச்சிகரமான தனது மேக்கிண்டோஸ் கணினிகளால் மதிக்கப்பட்டிருந்த ஆப்பிள், சந்தையின் கவனத்தையும் நியூட்டனுக்கு ஈர்த்தது. ஆனால், சாதனத் தயாரிப்பில் இருந்து, என்ன வகையான மென்பொருட்கள் இருக்க வேண்டும் என்பது வரை நியூட்டன் சம்பந்தப்பட்ட அனைத்திலும் ஆரம்பத்தில் இருந்தே சொதப்பியது ஆப்பிள்.

90-களின் கடைசியில் ஆப்பிளின் தலைமைப் பொறுப்பை ஸ்டீவ் ஜாப்ஸ் மீண்டும் ஏற்றுக்கொண்டதும் செய்த முதல் வேலை நியூட்டனை இழுத்து மூடியதுதான். 'நியூட்டன்’ அனுபவத்தில் இருந்து தெளிவான பாடங்கள் கற்றுக்கொண்டு, 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஆப்பிள் வெளியிட்ட ஐ-பாட், அதைத் தொடர்ந்து தீர்க்கமான திட்டங்களுடன் சீரான இடைவேளையில் ஒன்றன் பின் ஒன்றாக ஆப்பிள் வெளியிட்ட மொபைல் சாதனங்கள், மனித இயந்திர இடையீடு (human machine interaction) என்பதில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கிவைத்தது.

முன்னோட்டம் முடிந்தது. இனி நிகழ்காலம்...


ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 P32

கடந்த வாரம் ஆப்பிளின் புதிய 'ஐபோன் மாடல் 6’ இந்தியா, சீனா மற்றும் பல ஆசிய நாடுகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆப்பிளின் வாழ்க்கையை 'ஸ்டீவ் ஜாப்ஸுக்கு முன்’, 'ஸ்டீவ் ஜாப்ஸுக்குப் பின்’ என எண்ணிப்பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. காரணம், ஜாப்ஸ் தலைமையில் இருந்தவரை குறிப்பிடத்தக்க புதுமையாக்கங்களை, சிலிர்க்கவைக்கும் பயனீட்டு அனுபவங்களை ஆப்பிள் சாதனங்களில் நிரப்பிக்கொடுக்கும் வித்தகராக இருந்தார்.

ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக ஆப்பிளின் மொபைல் சாதன வெளியீடுகளைப் பார்க்கும்போது விரக்தியே மிஞ்சுகிறது. ஏற்கெனவே இருக்கும் சாதனங்களில், மிகச் சிறிய மேம்பாடுகளைக் கொண்டுவந்து, அவற்றைச் சந்தைப்படுத்தி, பணம் ஈட்டுவதில் மட்டுமே ஆப்பிள் லயிப்புடன் இருக்கிறதோ என்ற சலிப்பு தோன்றுகிறது.

மிகப் பெரிய அளவில் இருக்கும் இந்த 'iPhone 6 Plus’ சாதனத்தை பாக்கெட்டில் வைத்து அமர்ந்தால் வளைந்துவிடுகிறது என எழுந்த பயனீட்டாளர் புகார்களுக்குப் பல நாட்களுக்குப் பின்னரும் எந்தப் பதிலும் கொடுக்கவில்லை ஆப்பிள். சென்ற வாரத்தில், 'அப்படியெல்லாம் வளைவது அரிதிலும் அரிது’ எனத் தட்டையான ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறது ஆப்பிள். இந்த நேரத்தில் 'ஐபோன் 4’ வெளியான சமயம் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.

'ஐபோன் 4’ சாதனத்தைப் பயன்படுத்தி பேசும்போது சிக்னல் துண்டிக்கப்பட்டுவிடுகிறது என்ற புகார், அந்த அலைபேசி வெளியான அடுத்த சில நாட்களில் முணுமுணுக்கப்பட்டது. குடும்பத்துடன் விடுமுறையில் சென்றிருந்த ஜாப்ஸ், உடனடியாக கலிஃபோர்னியா வந்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தார். அதில், 'எல்லா போன்களையும் போலவே ஐபோனிலும் சிக்னல் ட்ராப் ஆகலாம்’ என்பதை செய்முறை விளக்கமாகப் புரியவைத்ததுடன், 'அலைபேசியின் மீது அணிந்துகொள்ளும் வகையில் ஆன்டனா ஒன்றை ஆப்பிள் இலவசமாகக் கொடுக்கும்’ எனவும் அறிவித்தார். ஆப்பிளின் அந்த 'ஆட்டிட்யூட்’ இப்போது எங்கே?

இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஆப்பிள் ஐபோன்கள் தொடர்பான மிக முக்கியமான சர்ச்சை இது.

முதல் தலைமுறை ஐபோன் வெளியாகி ஏழு வருடங்கள் ஆகின்றன. ஆப்பிள் சாதனங்கள் வலுவாகக் கட்டமைக்கப்படுவதால் பல வருடங்களுக்கு முன்பு இருந்த சாதனங்கள் உடைந்துவிடாமல் உறுதியான வடிவிலேயே இருக்கின்றன. ஆனால், ஆப்பிள் தொடர்ந்து வெளியிடும் iOS இயங்கு மென்பொருள் பழைய சாதனங்களின் இயக்கத்தை வெகுவாகப் பாதித்து, முயல் வேகத்தில் இருக்கும் அலைபேசி செயல்பாட்டை ஆமை வேகத்துக்குக் கொண்டுவந்துவிடுகிறது. புதுமையாக்கலில் பெரிய மாற்றங்களை புதிய சாதனங்களில் கொண்டுவந்தபடி இருந்தால், பயனீட்டாளர்கள் இயல்பாகவே புதிய சாதனங்களுக்குச் செல்வார்கள். மிகச் சில மேம்பாடுகள் மட்டுமே இருந்தால், அவர்கள் தங்களது பழைய சாதனங்களைத்தானே தொடர்ந்து பயன்படுத்துவார்கள்? ஆனால், பழைய சாதனங்களை மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் ஆப்பிள், அதை 'எக்ஸ்சேஞ்ச்’ முறையில் பெற்றுக்கொண்டு புது சாதனங்களை விற்பதிலேயே முனைப்பாக இருக்கிறது.

இந்த மனப்பான்மை ஆப்பிள் நிறுவனத்தை எங்கே கொண்டுசென்று நிறுத்தும்?


ஆப்பிள் தனது கணக்கில் பில்லியன்களை இடுக்கிவைத்திருக்கிறது. அதன் பொருட்கள் இன்றும் விரும்பியே வாங்கப்படுகின்றன. ஆனால், புதுமையாக்கலில் அடுத்தபடிக்குச் செல்ல முடியவில்லை என்றால், 'ஆப்பிள் என்று ஒரு நிறுவனம் இருந்தது’ என இன்றைய சந்ததியினர், இனி வரும் சந்ததியினருக்கு சொல்லும் நிலையை நோக்கியே செல்லும்!

என்ன பிரச்னை ஆப்பிள் போன்களில்?


ஆப்பிள் ஐபோன் வாங்கி என்னதான் முறையாகப் பராமரித்தாலும், ஒன்று இரண்டு வருடங்களில் காரணமே இல்லாமல் பிரச்னை செய்ய ஆரம்பிக்கும். அலைபேசி அடிக்கடி ஹேங் ஆகும். ஆரம்பத்தில் கில்லியாகத் துள்ளிய அப்ளிகேஷன்கள், நாளடைவில் மிக மெதுவாகத் திறக்கும். சில அப்ளிகேஷன்கள் வேலையே செய்யாது. ஆப்பிள் போன்களை சர்வீஸ் செய்ய முடியாது. புதிய போன்தான் வாங்க வேண்டும். காரணம், ஆப்பிளின் லேட்டஸ்ட் மென்பொருட்கள் பழைய போன்களுக்கு செட் ஆகாது.

ஆப்பிளின் லேட்டஸ்ட் இயங்குமென்பொருள் ஐ.ஓ.எஸ்-8. இதை ஆப்பிள் 3 மற்றும் ஆப்பிள் 4 மாடல் போன் வைத்திருப்பவர்கள் அப்டேட் செய்ய முடியாது. ஆப்பிள் 4-எஸ் மற்றும் அதற்கு மேற்பட்ட மாடல்களை வைத்திருப்பவர்கள்தான் அப்டேட் செய்ய முடியும். அதனால், ஆப்பிள் 3 மற்றும் ஆப்பிள் 4 மாடல் போன் வைத்திருப்பவர்கள் வேறு வழியே இல்லாமல், ஆப்பிள் 4-எஸ் மற்றும் அதற்கு மேற்பட்ட மாடல்களைத்தான் வாங்க வேண்டும். ஆக, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆப்பிள் வாடிக்கையாளர்கள் புதிய ஐபோன்களுக்கு மாற வேண்டிய கட்டாயத்தை ஆப்பிள் உண்டாக்குகிறது.

ஆப்பிள் ஐபோன்கள் புதிதாக விலைக்கு வரும்போது குறைந்தபட்ச விலை ரூபாய் 40 ஆயிரம். இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த போனின் விலை 15 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் குறைந்துவிடும். ஆனால், ஐ.ஓ.எஸ்-8 இயங்கு மென்பொருளே அலைபேசியில் 5 ஜி.பி-க்கு மேற்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கும் என்பதால், நீங்கள் குறைந்தபட்சம் 16 ஜி.பி நினைவுத்திறன்கொண்ட போன்களைத்தான் வாங்க வேண்டி வரும். அதற்கு மீண்டும் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டியிருக்கும்!

விகடன்


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 25, 2014 7:15 am

SajeevJino wrote:
தமிழ்நேசன்1981 wrote:ஆப்பிள் பெயருக்கேற்ற போன்..ஆப்பிள் பழமும் ஆப்பிள் போனும் பணம் வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாதவர்கள்தாம் வாங்கமுடியும் போல...நமக்கெல்லாம் ச்சீ..சீ...இந்த பழம் புளிக்கும் கதைதான்..ஆனால் இப்போது ஆப்பிள் வாங்குபவர்களுக்கே புளித்துவிடும் போலிருக்கிறது...

எல்லாம் வியாபார அரசியல்... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099166

ஆப்பிள் நிறுவனத்தின் பல ரகசியங்களை திருடி பணம் சம்பாதித்தது சாம்சுங் இதை யாரும் மறுக்க முடியாது .அதற்க்கு நஷ்ட ஈடாக பெருந்தொகையை சாம்சுங் ஆப்பிள் நிறுவனத்திற்கு அளித்தது இது கூட நினைவிருக்கலாம்.

ஆப்பிள் போன் வாங்குபவர்கள் யாரும் அதை பயன் படுத்த தெரியாதவர்கள் அல்ல ..அதை வாங்குவபர்கள் எல்லோருமே வாலிப வயது உடையவர்கள் தான்.

ஆப்பிள் போன் வாங்கி புளித்து போய் விட்டது என்று யாரும் சொல்லி நான் கேட்டது இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1099223
ஒன்னும் புரியல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 25, 2014 1:19 pm

தமிழ்நேசன்1981 wrote:அந்த வரிகளை நீக்கிவிட்டேன் அண்ணா...தேவை இல்லை என்றே தோன்றுகிறது.. புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099214நன்றி தம்பி ... நீங்க நீக்கிய பிறகு எனது பின்னூட்டமும் தேவையில்லை என்று அதையும் நீக்கிவிட்டேன் புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 25, 2014 1:32 pm

சாம்சுங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு கொடுத்த தண்டனை பணம் எவ்வளவு தெரியுமா சுமார் $1 பில்லியன் ...


தவிர நோக்கியா அழிந்த கதை , சாம்சுங்/HTC /LG / இவர்களை தவிர பல சீன தயாரிப்பு கைப்பெசிகளும் வளர்ந்த கதை என்ன தெரியுமா?!!

"நவீன மாற்றங்களையும் தொழில்நுட்பங்களையும் ஏற்றுகொள்ள தெரியாத அல்லது முடியாத நிலையால் தான்."

google android மென்பொருளை இலவச மென்பொருள் யார் வேண்டுமானாலும் தங்களுக்கேற்ற முறையில் custamize பண்ணிக்கொள்ளலாம் என்று அறிவித்த பிறகு Blackberry , நோக்கியா தவிர மற்ற பெட்டிக்கடைகாரர்கள் புன்னகை புன்னகை எல்லாம் அதை பயன்படுத்தி கொண்டனர். இவர்கள் இருவருக்கும் தாங்கள் இத்தனை நாட்களாக கோலோச்சிவந்த கைப்பேசி உலகில் இன்னொரு மென்பொருளை பயன்படுத்துவதா என்ற கவுர குறைச்சலும் ஒரு காரணமாக இருக்கும்.

அதன் விளைவு தான் ,
இந்தியா உட்பட உலகில் பல நாடுகளில் photocopy என்பதையே இன்றும் Xerox என்று அழைக்கிறார்கள். அதுபோல Cellular Phone என்றாலே Nokia என்று இருந்த நோக்கியா நிறுவனமும் , Blackberry என்ற ஒரு சிறந்த கைப்பேசி தயாரிப்பு நிறுவனத்தின் அழிவும்,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84709
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 25, 2014 3:49 pm

ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 103459460

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Oct 25, 2014 3:49 pm

.


^^^^சரியாகக் கூறினீர்கள்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 25, 2014 4:00 pm

நன்றி சஜீவ்

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Sat Oct 25, 2014 5:06 pm

ஆப்பிள் போன் வாங்க நினைத்தேன் நல்லது நண்பா சுட்டுத்தள்ளூ!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 25, 2014 6:21 pm

ChitraGanesan wrote:ஆப்பிள் போன் வாங்க நினைத்தேன் நல்லது நண்பா சுட்டுத்தள்ளூ!
ஆமாம் ஆமாம் , நல்லவேளை ஆப்பிள் போன் தப்பிச்சுது சிரி அய்யோ, நான் இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 30, 2014 1:35 am

ராஜா wrote:
ChitraGanesan wrote:ஆப்பிள் போன் வாங்க நினைத்தேன் நல்லது நண்பா சுட்டுத்தள்ளூ!
ஆமாம் ஆமாம் , நல்லவேளை ஆப்பிள் போன் தப்பிச்சுது சிரி அய்யோ, நான் இல்லை

ஹா ஹா ஹா...! ஏன் தல இப்படி பண்றீங்க.,..!!!



ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 30, 2014 3:29 am

ஐபோன் பயன்படுத்தியவர்கள் வேறு போனைப் பயன்படுத்த மாட்டர்கள்.

நானும் சாம்சங்கில் நிறைய போன்களைப் பயன்படுத்திவிட்டேன், ஆனால் ஐபோனுக்கு ஈடாக முடியாது.

சாம்சங்கின் 16எம்பி கேமரா, ஐபோனின் 8எம்பி கேமராவுக்கு இணையாக துல்லியமான படத்தை பிடிக்க முடியாது.

நீங்கள் குறைந்தபட்சம் 16 ஜி.பி நினைவுத்திறன்கொண்ட போன்களைத்தான் வாங்க வேண்டி வரும். .

அனைத்து வகை போன்களுமே இப்படித்தான் உள்ளது, சாம்சங் இன்னும் மோசம்!
ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 2-Mobile-storage-space-01

புதிதாக வந்துள்ள iOS 8 பயன்படுத்திப் பாருங்கள்! பிறகு ஐபோன் பற்றிய குறைகளைக் கூறுங்கள்~!

சாம்சங்கின் வெற்றிக்குக் காரணம் அதன் பலதரப்பட்ட மாடல்கள். 5000 ரூபாய் முதல் 50000 ரூபாய் வரை தங்களது தரத்திற்கேற்றவாறு மக்கள் வாங்கிப் பயன்படுத்தலாம்.




ஆப்பிள் போன் அதிர்ச்சி!  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக