புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை விமர்சனம் » கத்தி Poll_c10திரை விமர்சனம் » கத்தி Poll_m10திரை விமர்சனம் » கத்தி Poll_c10 
101 Posts - 69%
heezulia
திரை விமர்சனம் » கத்தி Poll_c10திரை விமர்சனம் » கத்தி Poll_m10திரை விமர்சனம் » கத்தி Poll_c10 
27 Posts - 18%
mohamed nizamudeen
திரை விமர்சனம் » கத்தி Poll_c10திரை விமர்சனம் » கத்தி Poll_m10திரை விமர்சனம் » கத்தி Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
திரை விமர்சனம் » கத்தி Poll_c10திரை விமர்சனம் » கத்தி Poll_m10திரை விமர்சனம் » கத்தி Poll_c10 
3 Posts - 2%
prajai
திரை விமர்சனம் » கத்தி Poll_c10திரை விமர்சனம் » கத்தி Poll_m10திரை விமர்சனம் » கத்தி Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
திரை விமர்சனம் » கத்தி Poll_c10திரை விமர்சனம் » கத்தி Poll_m10திரை விமர்சனம் » கத்தி Poll_c10 
2 Posts - 1%
Barushree
திரை விமர்சனம் » கத்தி Poll_c10திரை விமர்சனம் » கத்தி Poll_m10திரை விமர்சனம் » கத்தி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
திரை விமர்சனம் » கத்தி Poll_c10திரை விமர்சனம் » கத்தி Poll_m10திரை விமர்சனம் » கத்தி Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
திரை விமர்சனம் » கத்தி Poll_c10திரை விமர்சனம் » கத்தி Poll_m10திரை விமர்சனம் » கத்தி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
திரை விமர்சனம் » கத்தி Poll_c10திரை விமர்சனம் » கத்தி Poll_m10திரை விமர்சனம் » கத்தி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை விமர்சனம் » கத்தி Poll_c10திரை விமர்சனம் » கத்தி Poll_m10திரை விமர்சனம் » கத்தி Poll_c10 
155 Posts - 75%
heezulia
திரை விமர்சனம் » கத்தி Poll_c10திரை விமர்சனம் » கத்தி Poll_m10திரை விமர்சனம் » கத்தி Poll_c10 
27 Posts - 13%
mohamed nizamudeen
திரை விமர்சனம் » கத்தி Poll_c10திரை விமர்சனம் » கத்தி Poll_m10திரை விமர்சனம் » கத்தி Poll_c10 
9 Posts - 4%
prajai
திரை விமர்சனம் » கத்தி Poll_c10திரை விமர்சனம் » கத்தி Poll_m10திரை விமர்சனம் » கத்தி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
திரை விமர்சனம் » கத்தி Poll_c10திரை விமர்சனம் » கத்தி Poll_m10திரை விமர்சனம் » கத்தி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திரை விமர்சனம் » கத்தி Poll_c10திரை விமர்சனம் » கத்தி Poll_m10திரை விமர்சனம் » கத்தி Poll_c10 
3 Posts - 1%
Barushree
திரை விமர்சனம் » கத்தி Poll_c10திரை விமர்சனம் » கத்தி Poll_m10திரை விமர்சனம் » கத்தி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
திரை விமர்சனம் » கத்தி Poll_c10திரை விமர்சனம் » கத்தி Poll_m10திரை விமர்சனம் » கத்தி Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
திரை விமர்சனம் » கத்தி Poll_c10திரை விமர்சனம் » கத்தி Poll_m10திரை விமர்சனம் » கத்தி Poll_c10 
1 Post - 0%
Karthikakulanthaivel
திரை விமர்சனம் » கத்தி Poll_c10திரை விமர்சனம் » கத்தி Poll_m10திரை விமர்சனம் » கத்தி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை விமர்சனம் » கத்தி


   
   

Page 1 of 2 1, 2  Next

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Oct 23, 2014 1:40 pm

படம் : கத்தி
நடிகர் : விஜய்
நடிகை : சமந்தா
இயக்குனர் :ஏ.ஆர்.முருகதாஸ்

திரை

''குறையொன்றுமில்லை'', ''வெண்ணிலா வீடு'' என... தமிழ் சினிமாக்காரர்களுக்கு விவசாயிகள் மீதும், விவசாயத்தின் மீதும் சமீபகாலமாக பெருகிவரும் அக்கறையின் தொடர்ச்சியாக விஜய்(டூயல் ரோலில்...) - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ''கத்தி''! விஜய்யின் முந்தைய படங்களான ''காவலன்'', ''துப்பாக்கி'', ''தலைவா'' படங்களை போலவே கத்தி படமும், பல பிரச்னைகளை சந்தித்து, படம் வெளியாகும் முதல்நாள் வரை படம் வெளிவருமா, வெளிவராத என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவிட்டு ஒருவழியாக வெளிவந்திருக்கிறது கத்தி!!

வட இந்தியாவில் உள்ள பிரமாண்ட சிறையிலிருந்து அசால்ட்டாக தப்பிக்கும் ஒரு விஜய், நண்பன் காமெடி சதீஷின் அறைக்குள் அடியெடுத்து வைக்கிறார். அதன்பின் விஜய்க்கு நல்லநேரமும், சதீஷ்க்கு கெட்டநேரமும் ஆரம்பிக்கிறது. போலீசிடமிருந்து எஸ்கேப் ஆவதற்காக உடனடியாக தாய்லாந்து - பாங்காக் கிளம்புவதாக சொல்லி விமானநிலையம் செல்லும் விஜய், தாய்க்குலம் - அதாங்க., நாயகி சமந்தாவை ஏர்போர்ட்டில் பார்த்ததும் தன் முடிவை மாற்றிக்கொண்டு இந்தியாவிலேயே இருந்துவிடும் முடிவுக்கு வருகிறார்.

அதற்குபின் எதிர்பாராத தருணத்தில், வில்லன்களால் சுடப்பட்டு உயிருக்கு போராடும் இன்னொரு விஜய்யான ஜீவானந்தத்தை சந்திக்கும், கத்தி விஜய்க்கு ஆச்சர்யம். கூடவே ரசிகர்களுக்கும் தான்! ஜீவானந்தம் விஜய் எதற்காக சுடப்பட்டார்.? கத்தி விஜய், ஜீவானந்தம் விஜய்யாக உருமாறி செய்யும் செயற்கரிய காரியங்கள், விவசாய புரட்சிகள், வில்லன்கள்... பழிவாங்கல்கள் தான் சுத்தி சுத்தி, ''கத்தி'' மொத்தமும். கூடவே கதாநாயகி சமந்தாவுடனான கொஞ்சலையும், மிஞ்சலையும் கலந்துகட்டி கத்தியை புத்தியாக கூர்த்தீட்டி இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

விஜய்., ஜீவானந்தமும், ஆனந்தமுமாக(கத்தி எனும் கதிரேசன்) இருவேறு பாத்திரங்களில் பக்காவாக பொருந்தி நடித்தியிருக்கிறார். ஜீவானந்தமாக விஜய் செய்யும் விவசாய புரட்சிகளை காட்டிலும், அவருக்காக போராடும் 'கத்தி' கதிரேசன் விஜய் செய்யும் புரட்சிகளும், போராட்டங்களும், வில்லன்கள் உடனான முட்டல் மோதல்களும் தான் கத்தின் ஹைலைட். விஜய் வழக்கம்போலவே லவ், ஆக்ஷ்ன் காமெடி என ஜனரஞ்சமாக வெளுத்து வாங்கியிருக்கிறார். பலே, பலே!

கதாநாயகியாக சமந்தா, என்ட்ரியாவதில் தொடங்கி, எக்குதப்பாக ரசிகர்களின் பல்சை எகிற வைப்பது வரை, ஒரு ஆக்ஷ்ன் படத்தில், இந்திய சினிமாக்களில் ஹீரோயின்களில் வேலை என்னவோ அதை சரியாக செய்திருக்கிறார். சமந்தாவின் 'நான் ஈ' பிளாஷ்பேக் சூப்பர். கத்தி விஜய்யிடம் சிக்கி சின்னாபின்னமாகும் சதீஷூம் காமெடியில் பொளுந்து கட்டியிருக்கிறார்.

தமிழ், தமிழ் என குரல் கொடுக்கும் விஜய் படத்தில் வர வர லோக்கேஷன்களும் சரி, வில்லன்களும் சரி வட இந்தியாவாகவே இருப்பதின் மர்மம் என்ன.? விஜய்க்கும், முருகதாஸூக்குமே வெளிச்சம். ஆனாலும் வில்லனாக வரும் பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் தனது கேரக்டருக்கான பங்கை சரியாக செய்திருக்கிறார்.

பத்திரிகை மற்றும் மீடியாக்களின் மீது நடிகர் விஜய்க்கும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்க்கும் அப்படி என்ன கோபமோ.? ஒட்டுமொத்த மீடியாக்களையும், கிடைத்த கேப்பில் எல்லாம் இஷ்டத்திற்கும் போட்டு தாக்கியிருக்கிறார்கள் இருவரும்! ஏன் இந்த கொலவெறி.?

குளிர்பாண கம்பெனிகளின் தண்ணீர் திருட்டு, விவசாய நில திருட்டு, புரட்டு என ஏகப்பட்ட திருட்டுகளையும், புரட்டுகளையும் சொல்லி நியாயம் பேசி இருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இனியாவது கதைதிருட்டு குற்றச்சாட்டுகளில் அடிக்கடி சிக்காது இருக்க வேண்டுமென்று, ஆங்காங்கே ஒரே கருத்தை திரும்ப திரும்ப வலியுறுத்தும் கத்தி படக்காட்சிகள் போரடிக்கும்போது நம்மையும் அறியாமல் தோன்றுகிறது. படம் சில இடங்களில் அநியாயத்திற்கு ஸ்லோவாக தெரிவது கத்தியின் பலமா.? பலவீனமா தெரியவில்லை.!

ஜார்ஜ்.சி. வில்லியம்ஸின் ஒளிப்பதிவு அழகு ஓவியம். உள்ளூர் லோக்கேஷன்களிலும் சரி, பாடல் காட்சிகளிலும் வரும் அயல்நாட்டு லோகேசன்களிலும் சரி பியித்து பெடலெடுத்திருக்கிறார் மனிதர். ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் பக்கா.

அனிருத்தின் இசையில் பாடல்களும், பின்னணியும் அபாரம். குறிப்பாக விஜய் பாடியிருக்கும் செல்பிபுள்ள பாடல் செம கிளாஸ். முதன்முறையாக விஜய் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். அதனால் தனது இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பது போன்று தெரிந்தாலும் விஜய் படங்களில் வழக்கமாக இருக்கும் கொண்டாட்டம் கத்தியில் சற்றே மிஸ்ஸிங்!

''ரமணா'', ''7ம் அறிவு'', ''துப்பாக்கி...'' என ஒவ்வொரு படங்களிலும் ஒருவித கருத்துக்களை சொன்ன இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ''கத்தி'' படத்திலும், விவசாயம் சார்ந்த புரட்சி கருத்துக்களை சொல்லி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இப்படத்திற்கு விவசாய புரட்சி கருத்துக்களும், டபுள் ஆக்ட்டு விஜய்யின் நடிப்பும் பெரும்பலம்.

ஆகமொத்தத்தில், ''கத்தி'' - காலத்திற்கேற்ற ''''புத்தி!'' - கலெக்ஷ்ன் ''உத்தி''யும் கூட...!!

-- தினமலர்

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Oct 23, 2014 1:50 pm

கொல்கத்தா சிறையில் கைதியாக இருக்கும் கதிரேசன் (விஜய்) அங்கிருந்து தப்பித்து சென்னைக்கு வருகிறார். சென்னையிலுள்ள தனது நண்பன் சதீஷை உதவியுடன் பாங்காக் தப்பித்து செல்ல முயற்சி செய்கிறார். சதீஷின் உதவியுடன் பாங்காக் செல்ல விமான நிலையம் வரும் கதிரேசன், அங்கு நாயகி சமந்தாவை பார்க்கிறார். பார்த்ததுமே அவள் மீது காதல் வயப்படுகிறார். அவரிடம் பேசி செல்போன் நம்பரை வாங்கி கொள்கிறார். அத்துடன் பாங்காக் செல்லும் முடிவையும் தள்ளி வைக்கிறார்.

சமந்தா கொடுத்த செல்போன் நம்பருக்கு போன் செய்து பார்க்கும் கதிரேசன் ஏமாற்றம் அடைகிறார். அந்த அழைப்பு வேறு யாருக்கோ செல்கிறது. அவரை தேடி கண்டுபிடிக்க நண்பனுடன் சேர்ந்து அலைகிறார் கதிரேசன். மறுமுனையில் சிறையில் இருந்து தப்பித்து சென்ற கதிரேசன் சென்னையில் தான் இருக்கிறார் என்று அறிந்த கொல்கத்தா போலீஸ் அவரை பிடிக்க சென்னை வருகிறது.

இந்நிலையில் ஒரு நாள் மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கியால் ஒருவரை சுடுகிறது. துப்பாக்கியால் தாக்கப்பட்ட அவரை அருகில் சென்று பார்க்கிறார் கதிரேசன். அவர் பார்ப்பதற்கு தன்னை போல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார். உடனே மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்று சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்கிறார். கொல்கத்தா போலீஸ் கதிரேசனை தேடி மருத்துவமனைக்கு வருகிறது. அடிபட்டவன் தன்னைப்போல் இருப்பதை பயன்படுத்தி கொண்டு, தன்னுடைய அடையாளங்களை அடிபட்டவன் மீது வைத்துவிட்டு தான் தான் அடிப்பட்டவன் என்று காண்பித்து விட்டு அங்கிருந்து கதிரேசன் தப்பித்து விடுகிறார்.

அப்போது மாவட்ட கலெக்டர் கதிரேசனை பார்த்து ஜீவானந்தம் என்று அழைக்கிறார். அப்போது தான் அடிபட்டவன் பெயர் ஜீவானந்தம் என்று தெரிகிறது. கலெக்டர் கதிரேசனை ஒரு முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்குள்ள முதியோர்கள் கதிரேசனை ஜீவானந்தம் என்று நினைத்துக் கொண்டு அவரை வரவேற்கிறார்கள். அப்போது 25 லட்சம் மதிப்புள்ள டி.டி.யை கதிரேசனிடம் கொடுக்கிறார் கலெக்டர்.

அதை வைத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு சென்று விடலாம் என்று யோசிக்கிறார் கதிரேசன். அப்போது முதியவர் ஒருவர் அந்த டி.டி.யை கிழித்தெரிகிறார். எதற்காக இப்படி செய்கிறார் என்று தெரியாமல் முழிக்கும் கதிரேசனிடம், மீண்டும் ஒரு வாரத்தில் இந்த தொகையை தருகிறேன் என்று கூறிவிட்டு செல்கிறார் கலெக்டர். இந்தப் பணம் கையில் கிடைக்கும் வரை முதியோர் இல்லத்திலேயே தங்குகிறார் கதிரேசன்.

இந்நிலையில் பெரிய தொழில் நிறுவனம் நடத்தும் நீல் நிதின் முகேசின் ஆட்கள் முதியோர் இல்லத்தில் தங்கும் கதிரேசனை அழைத்துக் கொண்டு போய் மிரட்டுகிறார்கள். தன் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை எல்லாம் வாபஸ் பெற வேண்டும் என்றும் அதற்காக ஒரு தொகை தருவதாகவும் கூறுகிறார்கள். இல்லையென்றால் முதியோர்களை கொன்று விடுவதாகவும் மிரட்டுகிறார்கள். இதெல்லாம் எதற்கு நடக்கிறது என்று புரியாத கதிரேசன், பணம் வருவதால் பெரியோர்களை எல்லாம் கொல்ல வேண்டாம், இதற்கெல்லாம் சம்மதிக்கிறேன் என்று கூறி 5 கோடி ரூபாயை முன்பணமாக வாங்கி செல்கிறார்.

பணத்தை வைத்து வெளிநாட்டு செல்ல முடிவெடுக்கும் கதிரேசனுக்கு முதியோர் இல்லத்தில் இருந்து போன் வருகிறது. ஜீவானந்தத்திற்கு ஒரு விருதும் பணமும் தருவதாக கூறுகிறார்கள். விருதும் பணமும் வருவதால் அதற்கும் ஆசைப்பட்டு அங்கு செல்கிறார். அங்கு ஜீவானந்தம் யார் என்பதைப் பற்றிய வீடியோ ஒன்றை காண்பிக்கிறார்கள். அந்த வீடியோவை பார்க்கும் கதிரேசன், திருநெல்வேலி மாவட்ட விவசாயிகளுக்காக பாடுபட்டவர் என்றும், அங்குள்ள மக்கள் விவசாய பூமியை காப்பாற்ற தங்களது உயிரை விட்டார்கள் என்றும் தெரிந்துக் கொள்கிறார்.

ஜீவானந்தம் பற்றி செய்திகள் தெரிந்த பின் மனம் மாறும் கதிரேசன், பணத்தையெல்லாம் வெறுத்து, ஜீவானந்தமாக மக்களுக்காக போராடி நீல் நிதினிடம் இருந்து விவசாய நிலத்தை பெற்று விவசாய மக்களுக்கு கொடுத்தாரா? உண்மையான ஜீவானந்தம் என்ன ஆனார்? என்பதே மீதிக்கதை.

படத்தில் கதிரேசன் கதாபாத்திரத்தில் யதார்த்தமான நகைச்சுவை நடிப்பில் அனைவரையும் கவர்கிறார் விஜய். பிற்பாதியில் விவசாயிகளின் வலிகளையும், வேதனைகளையும் அறிந்து செண்டிமெண்ட் கலந்து விவசாயியாகவே வாழ்ந்திருக்கிறார். ஜீவானந்தம் கதாபாத்திரத்தில் பொறுப்பான பட்டதாரியாகவும், தன் மண்ணை காப்பாற்ற வேண்டும் என்னும் விவசாயியாகவும் அழுத்தமாக மனதில் பதிகிறார். பாடல் காட்சிகளில் அழகாகவும், சிறந்த நடனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக அவர் பாடிய செல்பிபுள்ள பாடலில் திறமையாக செய்திருக்கிறார்.

கதாநாயகனுக்கு அதிகம் உள்ள கதையில் சமந்தாவிற்கு வாய்ப்பு குறைவாக அமைந்துள்ளது. இருந்தாலும் பாடல் காட்சிகளில் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறார். நண்பனாக வரும் சதீஷ், நகைச்சுவைக்கு வாய்ப்பு குறைவாக இருந்தாலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் படம் முழுக்க வருகிறார். கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். வில்லனாக வரும் நீல் நிதின் பார்ப்பதற்கு அழகாகவும், தொழில் அதிபர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகவும் பொருந்தியிருக்கிறார்.

அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்சின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. பாடல் காட்சிகளையும், சண்டைக் காட்சிகளையும் நம் கண்களுக்கு விருந்தாக அளித்திருக்கிறார்.

விவசாயிகளுக்கும், அவர்களை அழிக்க நினைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கத்தியை வைத்து குத்தி காட்டியிருக்கிறார் இயக்குனர் முருகதாஸ். நாட்டிற்கு விவசாயம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதையும், நாட்டின் முதுகெலும்பே விவசாயம் தான் என்பதையும் மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக படத்தை இயக்கிய முருகதாசை வெகுவாக பாராட்டலாம். படத்தில் சில லாஜிக் மீறல்களையும், குறைகூறுவதையும் தவிர்த்திருக்கலாம்.

மொத்தத்தில் ‘கத்தி’ கூர்மை.

மதிப்பெண் : 85/100

-- மாலைமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 23, 2014 1:59 pm

ஸோ, தைரியமாய் படம் பார்க்கலாம் என்று சொல்லறீங்களா?......................சரி......லிங்க் எங்கே? ஜாலி ஜாலி ஜாலி ..................................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 23, 2014 3:01 pm

http://www.rajtamil.com/2014/10/watch-kaththi-movie-online/

இங்கு தரவிறக்கம் கிடைக்கிறது! நான் தரவிறக்கம் செய்து விட்டேன்! இன்று வேலை முடிந்துதான் பார்க்க வேண்டும்!



திரை விமர்சனம் » கத்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 23, 2014 3:09 pm

பாஸ் நானும் முந்தா நாள் இறக்கினேன் - ஆனா வெறும் ப்ரிவ்யூ மற்றும் பைரசி விளம்பரம் தான் முழுவதும் - 700 எம்பியும் புன்னகை

செமையா கத்தி வெச்சுட்டாங்க புன்னகை இதெப்படி?




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 23, 2014 6:19 pm

சிவா wrote:http://www.rajtamil.com/2014/10/watch-kaththi-movie-online/

இங்கு தரவிறக்கம் கிடைக்கிறது! நான் தரவிறக்கம் செய்து விட்டேன்! இன்று வேலை முடிந்துதான் பார்க்க வேண்டும்!
மேற்கோள் செய்த பதிவு: 1098764

நன்றி சிவா, நான் tamilgun இல் டவுன்லோட் போட்டிருக்கேன்.............மறந்து ஆப் செய்துவிட்டு படுத்துவிட்டேன்....இல்லாவிட்டால் இத்தனை நேரத்துக்கு டவுன்லோட் ஆகி இருக்கும் .....பிறகு தான் தெரியும் படமா, இல்லை இனியவன் சொல்வது போல advt . என்று புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Oct 23, 2014 8:17 pm

திரை விமர்சனம் » கத்தி 3NCaGdBSyytq4IcG22Gg+10647169_4721372487506_7035568042077722999_n

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 24, 2014 1:11 am

ஓகே வாக இருக்கு படம்.....................புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Oct 25, 2014 11:21 am

விஜய வச்சு முருகதாஸ் நல்லா காமெடி பண்ணி இருக்கிறார். சொல்லி இருக்கும் கருத்து நல்ல கருத்து ஆனா சரியான முறையில் சொல்லலை. கடைசி சீனில் வில்லன் விஜய வயிற்றில் கத்தி வச்சு குத்துவார். ஆனா அடுத்த நாள் கோர்ட்டுக்கு சாதரணமா தலையில் கட்டு போட்டுகிட்டு நடந்து வரார் ஹீரோ. ஒரு ஆள் 50 பேரை அடிக்கிற மாதிரி இன்னும் எத்தனை நாளைக்கு தான் காமிப்பாங்களொ. 90 திர்ஹாம்ஸ் லாஸ். இனி விஜய் படத்துக்கு போவியா போவியான்னு என் கண்ணை நானெ குத்திக்கணும்.



திரை விமர்சனம் » கத்தி Uதிரை விமர்சனம் » கத்தி Dதிரை விமர்சனம் » கத்தி Aதிரை விமர்சனம் » கத்தி Yதிரை விமர்சனம் » கத்தி Aதிரை விமர்சனம் » கத்தி Sதிரை விமர்சனம் » கத்தி Uதிரை விமர்சனம் » கத்தி Dதிரை விமர்சனம் » கத்தி Hதிரை விமர்சனம் » கத்தி A
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 25, 2014 11:53 am

படம் சுமார் - டாகுமென்ட்ரி பார்ப்பது போல் இருந்தது - டாரன்டினால் செலவு மிச்சம் புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக