புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014) Poll_c10ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014) Poll_m10ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014) Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014) Poll_c10ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014) Poll_m10ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014) Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014) Poll_c10ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014) Poll_m10ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014) Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014) Poll_c10ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014) Poll_m10ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014) Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014) Poll_c10ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014) Poll_m10ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014) Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014) Poll_c10ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014) Poll_m10ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014) Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐப்பசி - மாத ராசி பலன் (18.10.2014 - 16.11.2014)


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 17, 2014 7:15 pm

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) மங்கல நிகழ்ச்சி!

நட்புக்கு முன்னுரிமை அளிக்கும் மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் புதன் நவ.2 வரை நன்மை தர காத்திருக்கிறார். சுக்கிரன் நவ. 13ல் சாதகமான இடத்துக்கு வருகிறார். ராகு மாதம் முழுவதும் நன்மை அளிக்கிறார். 6 ல் இருக்கும் ராகுவால் முயற்சியில் வெற்றி உண்டாகும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். ஆற்றல் மேம்படும்.குடும்பத்தில் மாதத் தொடக்கத்தில் சுப நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். நவ.2 க்குள் திருமணம் போன்ற சுபவிஷயம் நல்ல முறையில் கைகூடும். அதன்பின் கணவன் மனைவியிடையே கருத்துவேறுபாடு உருவாகலாம்.

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அக். 20 க்குப் பிறகு பெண்கள் வகையில் தொல்லை ஏற்படலாம்.ஒதுங்கி இருக்கவும். நவ. 13க்கு பிறகு நிலைமை சீராகும்.

பணியாளர்களுக்கு சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். புதனால் சிலர் உயர் பதவியை அடைய வாய்ப்புண்டு. நவ. 2 க்கு பிறகு அலைச்சலும். வேலைப்பளுவும் ஏற்படும். விடாமுயற்சி எடுத்தால் கோரிக்கை
நிறைவேறும்.

கலைஞர்கள் தீவிர முயற்சி எடுத்து முன்னேற வேண்டியதிருக்கும். நவ. 3க்குப் பிறகு சுக்கிரன் சாதகமாக காணப்படுவதால் புதிய ஒப்பந்தம் எளிதாக கிடைக்கும். போதிய வருமானம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் ஓரளவே பலனை எதிர்நோக்கலாம். புகழ் கவுரவத்திற்கு பங்கம் உண்டாகாது. மாணவர்கள் புதன் சாதகமாக காணப்படுவதால், நற்பலன் காணலாம். ஆசிரியர்களிடம் நன்மதிப்பு பெறுவர். நவ. 2 க்குப் பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.

விவசாயிகளுக்கு மகசூல் சீராக இருக்கும். அதிகம் உழைக்க வேண்டியிருந்தாலும், அதற்கான வருவாய் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. பெண்கள் சிறப்பான நிலை காண்பர். புத்தாடை அணிகலன் கிடைக்க பெறுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

நல்ல நாள்: அக். 21, 22, 23, 24, 25, 30, 31, நவ. 1, 2, 3, 6, 7, 10, 11, 12

கவன நாள்: அக். 26, 27 சந்திராஷ்டமம் கவனம்

அதிர்ஷ்ட எண்: 7, 8

நிறம்: நீலம், பச்சை

வழிபாடு: வியாழக்கிழமை தட்சணாமூர்த்தியை வழிபடுங்கள். சூரிய வழிபாடு நன்மை தரும். ஏழைகளுக்கு துவரை தானம் செய்வதோடு வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 17, 2014 7:16 pm

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2) பணம் வரும் நேரம்!

திட்டமிட்டு செயலாற்றும் ரிஷப ராசி அன்பர்களே!

சூரியன் சாதக இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். பகைவர்களை வெற்றி காண்பீர்கள். பொருளாதார வலிமை கூடும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். புதன் நவ.2 ல் இருந்தும், சுக்கிரன் அக். 20 வரையும் நன்மை தருவார்கள். கேது,சனி, மாதம் முழுவதும் நற்பலன் தருவர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
நவ. 2 க்கு பிறகு எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும்.

தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த பிற்போக்கான நிலை படிப்படியாக மறையும். நவ.2-க்குப் பிறகு அலைச்சல் குறையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் ஆதாயத்துடன் வீடு திரும்புவர். பொருளாதார வளம் மேம்படும்.

பணியாளர்கள் சீரான நிலை காண்பர். நவ. 2 க்குப் பிறகு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கை நிறைவேறும்.

கலைஞர்களுக்கு வர வேண்டிய புகழ், பாராட்டு கிடைக்கும். அக். 20 க்கு பிறகு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படலாம். அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி காண்பர்.

மாணவர்கள் ஆசிரியர் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது. நவ. 2க்கு பிறகு கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பர்.

விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தாமதமாகும். வழக்கு
விவகாரத்தில் நிதானம் தேவை. புதிய வழக்கு எதிலும் ஈடுபட வேண்டாம்.

பெண்களுக்கு நவ. 2 வரை புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டியதிருக்கும். அதன் பிறகு நன்மை அதிகரிக்கும்.

நல்ல நாள்: அக்டோபர் 18, 24, 25, 26, 27, நவம்பர் 1, 2, 3, 4, 5, 8, 9, 13, 14

கவன நாள்: அக். 28, 29 சந்திராஷ்டமம், கவனம்

அதிர்ஷ்ட எண்: 3, 9

நிறம்: செந்துõரம், பச்சை

வழிபாடு: முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். ஏழைகளுக்கு துவரை தானம் செய்யலாம். நாக தேவதையை வணங்கி வாருங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 17, 2014 7:17 pm

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சாதனை புரியலாம்!

சாமர்த்திய குணம் கொண்ட மிதுன ராசி அன்பர்களே!

இம்மாதம் புதன் நவ. 2 வரையும், சுக்கிரன் நவ. 13 வரையும் நற்பலன் தருவர். குருவின் சஞ்சாரத்தாலும் நன்மை தொடரும். ஆற்றல் மேம்படும். மனதில் துணிச்சல் பிறக்கும். வருமானம் கூடும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பகைவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். குடும்பத்தில் மாதத் தொடக்கத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும்.உறவினர்களிடம் இணக்கம் ஏற்படும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். உறவினர் வருகையால் நன்மை உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை காண்பீர்கள். புதிய வியாபாரத்தில் ஈடுபட்டு முன்னேற்றம் காண்பீர்கள். பெண்கள் வகையில் இருந்து வந்த பிரச்னை அடியோடு மறையும்.அக். 20 க்கு பிறகு நண்பர்களால் உதவி கிடைக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொண்டு ஆதாயத்துடன் திரும்புவீர்கள்.

பணியாளர்கள் குருவின் பக்க பலத்தால் நல்ல பலனைக் காணலாம். வேலைப் பளு குறையும். அதிகாரிகளின் ஆதரவு நல்லமுறையில் இருக்கும். கோரிக்கை அனைத்தும் நிறைவேறும். சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

கலைஞர்கள் வாழ்வில் சிறப்படைவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கவுரவத்திற்கு பங்கம் வராது. அரசியல்வாதிகள் சிறப்பான பலனைக் காண்பர். நவ. 13க்கு பிறகு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படலாம்.

மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி பெறுவர். போட்டி, பந்தயத்தில் ஈடுபட்டு சாதனை புரிவர்.

விவசாயிகள் நெல், கேழ்வரகு, சோளம், காய்கறி, பழவகைகள் போன்ற பயிர்கள் உற்பத்தியில் நல்ல மகசூல் பெறுவர். மாத தொடக்கத்தில் புதிய சொத்து வாங்குவீர்கள். பெண்கள் குடும்பத்தினர் மத்தியில் நற்பெயர் எடுப்பர். புத்தாடை அணிகலன் வாங்கலாம். விருந்து, விழா என சென்று மகிழ்வீர்கள்.

நல்ல நாள்: அக். 19, 20, 26, 27, 28, 29, நவ. 4, 5, 6, 7, 10, 11, 12, 15, 16

கவன நாள்: அக். 30, 31 சந்திராஷ்டமம், கவனம்

அதிர்ஷ்ட எண்: 3, 5

நிறம்: மஞ்சள், வெள்ளை

வழிபாடு: சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். சிவபெருமானை வணங்குங்கள். செவ்வாயன்று முருகனை வழிபட்டு வாருங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 17, 2014 7:17 pm

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) முயற்சியில் வெற்றி!

ஊக்கத்துடன் பணியாற்றும் கடக ராசி அன்பர்களே!

இம்மாதம் புதன் நவ. 2-ந் தேதி முதல் நற்பலன் கொடுப்பார். சுக்கிரன்அக். 20லும், நவ. 13லும் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். அதோடு செவ்வாய், ராகு ஆகியோராலும் நன்மையே. பொருளாதார வளம் சிறக்கும். எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். பகைவர் தொல்லை நீங்கும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அக். 20க்குள் பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதன் பின் செல்வாக்கு அதிகரிக்கும். விருந்து விழா என சென்றுவர வாய்ப்பு உண்டு. பெண்கள் உறுதுணையாகச் செயல்படுவர். நவ. 13 க்கு பிறகு நண்பர்களின் உதவி கிடைக்கும். உடல்நலம் சிறப்படையும்.

தொழில், வியாபாரத்தில் நவ.2 வரை அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். அதன் பின் புதன் சாதகமான இடத்திற்கு செல்வதால் நிலைமை சீராகி லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். புதிய தொழில் தொடங்கவும் யோகமுண்டு.

பணியாளர்கள் மாதத் தொடக்கத்தில் அதிகமாக உழைக்க வேண்டியதுஇருக்கும். ஆனால் நவ. 2க்குப் பிறகு வருமானமும்,பதவி உயர்வும் கிடைக்கும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள்
சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது நல்லது. நவ. 2 க்கு பிறகு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

கலைஞர்கள் புகழ், பாராட்டு பெற்று மகிழ்வர். அரசியல்வாதிகள் திருப்திகரமாகச் செயல்படுவர்.

விவசாயகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கால்நடை வகையில் ஆதாயம் கூடும். புதிய சொத்து வாங்கலாம்.

பெண்கள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறுவர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். மாத இறுதியில் பெரியோர் ஆதரவு கிடைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி கைகூடும்.

நல்ல நாள்: அக். 18, 21, 22, 23, 28, 29, 30, 31, நவ. 6, 7, 8, 9, 13, 14

கவன நாள்: நவ.1, 2, 3 சந்திராஷ்டமம், கவனம்

அதிர்ஷ்ட எண்: 4, 5

நிறம்: வெள்ளை, சிவப்பு

வழிபாடு: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள். ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். சனியன்று விநாயகரை வணங்கி வாருங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 17, 2014 7:18 pm

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) பதவி உயர்வு!

ஆர்வத்துடன் உழைத்திடும் சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம். சூரியன் நன்மைகளை தர உள்ளார். சமூக செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் மேம்படும். லாபம் சிறப்பாக இருக்கும். சனி,சுக்கிரன் மாதம் முழுவதும் நற்பலன் அளிப்பர். நல்ல பொருளதார வளம் சிறக்கும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் வீண் விவாதத்தை தவிர்க்கவும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அக். 20 க்கு பிறகு கணவன், மனைவி இடையே அன்பு கூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உறவினர் வகையில் வீண் விரோதம் உருவாக வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். பொருள் களவு போக நேரிடலாம் கவனம். செவ்வாயால் உடல்நலம் பாதிக்கப்படலாம்.

தொழில், வியாபாரத்தில் சூரியனால் ஏற்பட்ட தடங்கல் அடியோடு விலகும். அக். 20 க்குள் அரசாங்க வகையில் சலுகை கிடைக்கும். எதிர்பாராத வகையில் திடீர் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. தொழில் ரீதியான பயணத்தால் நன்மை காண்பீர்கள்.

பணியாளர்கள் கடினமாக உழைக்க நேரிடும். அதற்கான நன்மையும் காண்பீர்கள். அக். 20க்கு பிறகு செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வும் பெற்று மகிழ்வீர்கள். நவ. 2 க்கு பிறகு அரசு ஊழியர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.

கலைஞர்கள் சிறப்பான புகழோடு காணப்படுவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர்.

அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசியல்வாதிகள் சுமாரான பலனையே காண்பர்.

மாணவர்கள் தொடர்ந்து சிரத்தை எடுத்து முன்னேற வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் வழிகாட்டுதலைக் கேட்டுப் பெறவும்.

விவசாயிகள் வியர்வை சிந்தி உழைக்க வேண்டியிருக்கும். பயறு வகைகள், பழ வகைகள் மூலம் நல்ல வருவாய் காணலாம்.

பெண்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியோடு காணப்படுவர். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும்.

நல்ல நாள்: அக். 19, 20, 24, 25, 30, 31, நவ. 1, 2, 3, 8, 9, 10, 11, 12, 15, 16

கவன நாள்: நவ. 4, 5 சந்திராஷ்டமம், கவனம்

அதிர்ஷ்ட எண்: 1, 7

நிறம்: வெள்ளை, செந்துõரம்

வழிபாடு: புதனன்று ஏழைகளுக்கு பாசி பயறு தானம் கொடுங்கள். பைரவர் கோயிலுக்கு சென்று வாருங்கள். வியாழனன்று தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 17, 2014 7:18 pm

கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) பிள்ளைகளால் பெருமை!

பாச பந்தத்துடன் பழகிடும் கன்னி ராசி அன்பர்களே!

இந்த மாதம் சுக்கிரன், குரு இருவரும் நன்மை தருவர். பொருளாதார வளம் மேம்படும். புதிய பதவி கிடைக்கும். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எதையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியிருக்கும். ஆனால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று மகிழ்வீர்கள். நவ.13க்கு பிறகு பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சூரியனால் கண்நோய் ஏற்படலாம். வயிறு தொடர்பான பிரச்னை உருவாகலாம்.

தொழில், வியாபாரத்தில் குறுக்கிடும் சவால்களை எதிர்கொள்வீர்கள். போட்டியாளரால் பிரச்னை தலைதுõக்கும்.
அக்.20க்கு பிறகு அரசாங்க வகையில் நன்மை கிடைக்கும்.

பணியாளர்கள் குருவால் சிறப்பான நிலை பெறுவர். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. சிலர் பணிமாற்றம் கிடைக்கப் பெறுவர். நவ.13க்கு பிறகு பதவி உயர்வும் கிடைக்கும்.

கலைஞர்கள் புகழோடு வருமானத்தையும் பெறுவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும்.

அரசியல்வாதிகள் வளர்ச்சி காண்பர். புதிய பதவி கிடைக்கப் பெறுவர்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. ஆசிரியர்களின் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள்.

விவசாயிகள் மஞ்சள், கேழ்வரகு, சோளம், பயறு வகைகள் போன்றவை மூலம் நல்ல வருமானம் பெறுவர்.

பெண்கள் கணவரின் ஆதரவு கிடைக்கப் பெறுவர். நவ. 2 க்கு பிறகு உறவினர் வகையில் கருத்து வேறுபாடு உருவாகலாம் கவனம்.பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.

நல்ல நாள்: அக். 18, 21, 22, 23, 26, 27, நவ. 1, 2, 3, 4, 5, 10, 11, 12, 13, 14

கவன நாள்: நவ. 6, 7 சந்திராஷ்டமம், கவனம்

அதிர்ஷ்ட எண்: 3, 8

நிறம்: மஞ்சள், வெள்ளை

வழிபாடு: ஞாயிறன்று ‹ரிய வழிபாடு செய்யுங்கள். பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். இதனால் இடர்பாடுகள் நீங்கி நன்மை அதிகரிக்கும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 17, 2014 7:18 pm

துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) பணியில் கவனம்!

எந்தச் சூழலிலும் மனம் கலங்காததுலாம் ராசி அன்பர்களே!

இந்த மாதம் செவ்வாயால் இறைவனின் அனுக்கிரகம் கிடைப்பதால் மனமகிழ்ச்சியுடன் சிறப்பாக இருப்பீர்கள். மேலும் கேது,சுக்கிரன் நன்மை தரும் நிலையில் உள்ளார்கள். பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். பொருளாதார வளம் சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. அக். 20க்கு பிறகு பெண்களால் பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.நவம்பர் 2க்கு பிறகு வீட்டினுள் சிற்சில பிரச்னை வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போகவும். உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம்.

பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். குரு பகவான் மனசஞ்சலத்தை ஏற்படுத்துவார். கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம். இதனால் வேலையில் வெறுப்புணர்ச்சி ஏற்படும். பொறுமையும், நிதானமும் தேவை. சிலர் இடமாற்றம் காணலாம்.

வியாபாரிகள், தொழிலதிபர்கள் சீரான முன்னேற்றம் கிடைக்கப் பெறுவர். உழைப்புக்கு தகுந்த லாபம் இடைக்கும். போட்டியாளர்களால் தொல்லை வரலாம். கேதுவால் வரும் தைரியமே தொழிலைக் காப்பாற்றும்.

அரசின் சலுகை கிடைக்கும்.கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது கிடைக்கும்.

அரசியல்வாதிகள் சீரான நிலையில் இருப்பர். மாணவர்கள் அதிக சிரத்தை கொண்டு முன்னேற வேண்டியிருக்கும். ஆசிரியர்கள் சொல்படி நடப்பது நல்லது.

விவசாயிகளுக்கு வருமானம் இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். பசு மற்றும் கால் நடைகள் மூலம் பலன் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் உங்கள் கைக்கு கிடைக்கும்.

பெண்களின் கை குடும்பத்தில் ஓங்கி நிற்கும். புத்தாடை, அணிகலன் வாங்கலாம். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.

நல்ல நாள்: அக்.18, 19, 20, 24, 25, 28, 29 நவ. 4, 5, 6, 7, 13, 14, 15, 16.

கவன நாள்: நவ 8, 9 சந்திராஷ்டமம், கவனம்.

அதிர்ஷ்ட எண்: 2, 4

நிறம்: வெள்ளை,சிவப்பு

வழிபாடு: தினமும் விநாயகரை வழிபடுங்கள். சூரியனுக்கு கோதுமை படைத்து வணங்குங்கள். சரபேஸ்வரரை வணங்கினால் அல்லல் தீரும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 17, 2014 7:19 pm

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை ) வசதி பெருகும்!

திருப்தி அடையும் வரை போராடும் விருச்சிக ராசி அன்பர்களே!

இந்த மாதம் புதன் நவ. 4 வரையும், சுக்கிரன் அக். 20 வரையும், நவ. 13க்குப்பிறகும் நற்பலனைக் கொடுப்பார்கள். குரு,ராகுவின் நன்மைகள் தொடரும். இதனால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். சுக்கிரனால் அக், 20 வரை பணவரவு இருக்கும். பெண்களால் வசதி பெருகும். விருந்து விழா என சென்று வருவீர்கள். வேலையில் நிம்மதியும் திருப்தியும் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதில் தடை ஏதும் இல்லை. மேல் அதிகாரிகளின் ஆதரவும் அனுசரணையும் வந்து சேரும். கோரிக்கைகள் நிறைவேறும். சூரியனால் பணியில் இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு.

வியாபாரிகள், தொழிலதிபர்களுக்கு மாதத் தொடக்கத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். நவம்பர் 2க்கு பிறகு போட்டியாளர்களால் தொல்லை வரலாம். நவம்பர் 13க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் அதிக வருவாய் காணும். செவ்வாயால் அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். சூரியனால் வீண் விரயம் ஏற்படலாம். செலவு விஷயத்தில் கவனம் தேவை. கலைஞர்கள் மாத முற்பகுதியில் புகழோடுவருமானத்தையும் பெறுவர். பிற்பகுதியில் புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

அரசியல்வாதிகள் வளர்ச்சி காண்பர். மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர். நவம்பர்13க்கு பிறகுசிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.

விவசாயிகள் சிறப்பான மகசூலை பெறலாம். மஞ்சள், கேழ்வரகு, சோளம் காய்கறி, பழவகை மூலம் நல்ல வருமானம் காணலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போக வாய்ப்புண்டு. கவனம். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். மாத முற்பகுதியில் உடல்நலம் சிறப்பாக இருக்கும். நவம்பர் 2க்கு பிறகு சிறிது அக்கறை காட்டவேண்டி வரும்.

நல்ல நாள்: அக். 19, 20, 21, 22, 23, 26, 27, 30, 31 நவ. 6, 7, 8, 9, 15, 16.

கவன நாள்: நவ. 10, 11, 12 சந்திராஷ்டமம், கவனம்.

அதிர்ஷ்ட எண்: 8, 9

நிறம்: மஞ்சள், நீலம், பச்சை.

வழிபாடு: நரசிம்மர் வழிபாடு வளம் தரும். செவ்வாய் கிழமை முருகன் கோயிலுக்கு சென்று வாருங்கள். புதன் கிழமைகளில் குல தெய்வத்தை வழிபடுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 17, 2014 7:20 pm

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) மனைவியால் லாபம்!

வில்லாய் வளைந்து வேலை செய்யும் தனுசு ராசி அன்பர்களே!

இந்த மாதம் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதன் நவம்பர் 2ல் இடம்மாறினாலும் நன்மைகளை தருவார். சுக்கிரன் அக். 20ல் இருந்து நன்மை தருவார். இதனால் பெண்களால் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். சனி, சூரியன் ஆகிய கிரகங்கள் பக்க பலமாக இருப்பதால் எண்ணிய காரியம் இனிதே நிறைவேறும். பணப்புழக்கம் இருக்கும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். அரசின் உதவி கிட்டும். உடல் உபாதைகள் பூரண குணம் அடையும்.குடும்ப முன்னேற்றத்திற்கு மனைவி மிகவும் உறுதுணையாக இருப்பார். கணவன்-மனைவி இடையே அன்பு ஓங்கும்.

பணியாளர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமைக்கு தகுந்த மரியாதை கிடைக்கும். பெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். அக்டோபர் 21,22,23ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும்.நவ. 6,7ல் சிலர் மன உளைச்சலுடன் காணப்படுவர்.18க்கு பிறகு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும்.

வியாபாரத்தில் தடைகள் விலகும். இதனால் கூடுதல் வளர்ச்சியை காணலாம். எதிரிகளின் இடையூறு அடியோடு மறையும். பொருள் வரவு அதிகரிக்கும். குறிப்பாக நவம்பர் 8,9-ந் தேதிகளில் கூடுதல் லாபம் இடைக்கும். அக்டோபர் 26,27,30,31-ந் தேதிகளில் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம். கலைஞர்களுக்கு போட்டி அதிகம் இருக்கும். எனினும் புகழோடும், பாராட்டோடும் காணப்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிலருக்கு விருது கிடைக்கலாம்.

அரசியல் வாதிகள் முன்னேற்றம் காண்பர்.

மாணவர்கள் அதிக வளர்ச்சியை எதிர்நோக்கலாம். ஆசிரியர்களின் அறிவுரை கிடைக்கும்.

விவசாயிகள் நல்ல மகசூலைப் பெறுவர். கால்நடை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க கடும் போட்டி நிலவும் . பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். புத்தாடை, அணிகலன் வாங்கலாம்.அக். 20க்குபிறகு பண வரவு இருக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடக்கும். உடல்நலம் சுமாராக இருக்கும்.

நல்ல நாள்: அக். 21, 22, 23, 24, 25, 28, 29, நவ. 1, 2, 3, 8, 9, 10, 11, 12.

கவன நாள்: அக். 18, நவம்பர் 13, 14 சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 1, 3, 7

நிறம்: செந்துõரம், பச்சை

வழிபாடு: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 17, 2014 7:20 pm

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) மேன்மை பெறலாம்!

அன்புள்ளம் கொண்ட மகர ராசி அன்பர்களே!

இந்த மாதம் கேது, குரு தொடர்ந்து நன்மை தருவார்கள். சூரியன் மாதம் முழுவதும் நன்மை தருவார் . புதன் நவம்பர் 3க்கு பின்னும், சுக்கிரன் அக்டோபர் 20 வரையும் நவம்பர் 13க்கு பிறகும் நற்பலனை தருவார்கள். நினைத்த காரியம் நிறைவேறும். பொருளாதார வளம் மேம்படும். பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது. குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.குருவின் பலத்தால் வேலையில் இருப்பவர்கள் மேன்மை காண்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு தானாக வந்து சேரும். பெண்களின் ஆதரவு கிடைக்கும்.விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம்.

வியாபாரம், தொழில் வளர்முகமாக அமையும். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அக்டோபர் 20க்கு பிறகு சுக்கிரன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் போட்டியாளர்களின் தொல்லை அதிகரிக்கும். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்களிடமிருந்து விடுபடுவர். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் அதிக வருவாயை காணும். நவம்பர் 10,11,12ல் எதிர்பாராத பணவரவு இருக்கும். அக்டோபர் 28,29,நவம்பர் 1,2,3-ல் பண விரயம் ஆகலாம்.

கலைஞர்கள் சீரான முன்னேற்றம் காண்பர். அக்டோபர் 20க்கு பிறகு சுக்கிரன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் போட்டி அதிகம் இருக்கும். அரசியல் வாதிகள் நவம்பர் 13க்கு பிறகு நல்ல பெயரையும் பொருளாதார வளத்தையும் பெறுவர்.

மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். விவசாயிகளின் வருமானத்திற்கு குறையிருக்காது. கால்நடை மூலம் அவ்வளவாக வருவாய் கிட்டாது. பெண்கள் குதுõகலமாக இருப்பர். கணவரின் அன்பு கிடைக்க பெறுவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நவம்பர் 4,5ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். நவம்பர் 13க்கு பிறகு பண வரவு இருக்கும். உடல் நலம் ஓரளவு நன்றாகவே இருக்கும்.

நல்ல நாட்கள்: அக். 18, 24, 25, 26, 27, 30, 31, நவ. 4, 5, 10, 11, 12.

கவன நாட்கள்: அக்.19, 20, நவ, 15,16. சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 1,3,9.

நிறம்: மஞ்சள், பச்சை

வழிபாடு: சனிக்கிழமை சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பெருமாள், முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். கோதுமை தானம் கொடுக்கலாம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக