புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளி உறவு! I_vote_lcapவெளி உறவு! I_voting_barவெளி உறவு! I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
வெளி உறவு! I_vote_lcapவெளி உறவு! I_voting_barவெளி உறவு! I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
வெளி உறவு! I_vote_lcapவெளி உறவு! I_voting_barவெளி உறவு! I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெளி உறவு! I_vote_lcapவெளி உறவு! I_voting_barவெளி உறவு! I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
வெளி உறவு! I_vote_lcapவெளி உறவு! I_voting_barவெளி உறவு! I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
வெளி உறவு! I_vote_lcapவெளி உறவு! I_voting_barவெளி உறவு! I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
வெளி உறவு! I_vote_lcapவெளி உறவு! I_voting_barவெளி உறவு! I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
வெளி உறவு! I_vote_lcapவெளி உறவு! I_voting_barவெளி உறவு! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வெளி உறவு! I_vote_lcapவெளி உறவு! I_voting_barவெளி உறவு! I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வெளி உறவு! I_vote_lcapவெளி உறவு! I_voting_barவெளி உறவு! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
வெளி உறவு! I_vote_lcapவெளி உறவு! I_voting_barவெளி உறவு! I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
வெளி உறவு! I_vote_lcapவெளி உறவு! I_voting_barவெளி உறவு! I_vote_rcap 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
வெளி உறவு! I_vote_lcapவெளி உறவு! I_voting_barவெளி உறவு! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளி உறவு!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 2:06 pm

தன் அப்பாவிற்கு, மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அரசல், புரசலாக கேள்விபட்டிருக்கிறாள் உமா. ஆனால், மகளுக்கு தன் கணவனின் விஷயம் தெரிந்தால், அவமானம் என்ற எண்ணத்தில், அம்மா பல தருணங்களில் அதை மூடி, மறைத்து கஷ்டப்படுவதையும் பார்த்திருக்கிறாள். ஒரு விஷயத்தை வெளிப்படையாக பேசுவதை விட, அதை மூடி மறைப்பதற்குத் தான் அதிக சிரமப்பட வேண்டும் என்பது, அம்மாவின் அவஸ்தைகளிலிருந்து புரிந்தது.

இரவு நேரங்களில், மகள் தூங்கி விட்டதாக நினைத்து, அம்மா, அப்பாவிடம் விசும்பல்களுக்கு இடையில் மெல்லிய குரலில் போட்ட சண்டைகள், அவள் காதில் விழாமலில்லை. அம்மாவின் அழு குரல் கேட்டு, அவள் தூக்கத்திலிருந்து பலமுறை விழித்திருக்கிறாள்.

'உடல், பொருள், மனம் சம்பந்தப்பட்ட எந்த பிரச்னையையும், ஒரு பெண் மற்றவர்களோடு பகிர்ந்து உதவியும், மன சாந்தியும் பெறலாம். ஆனால், தன் கணவனை மற்றொரு பெணணோடு பகிர்ந்து கொள்ள எந்த பெண்ணும் விரும்ப மாட்டாள். கணவனின் வெளி உறவை அறிந்த கணம் முதல், அவள் ஒரு போராளியாக மாறி விடுகிறாள்.

தன் முழு பலத்தை பயன்படுத்தி, எதிர்ப்பை வெளிப்படுத்தி, அந்த விரும்பப்படாத உறவை, வேரோடு வெட்டி எறிய தன் சக்தி முழுவதையும் பயன்படுத்துகிறாள். ஆனால், அம்மாதிரி எதிர்ப்புகள், ஆணின் மனதை கடினமாக்கி, வெளி உறவின் வேரை பலப்படுத்தி விடுகிறது என்பது தான் நடைமுறை...' என, தன் அபிமான எழுத்தாளர், ஒரு புத்தகத்தில் எழுதியதை படித்திருக்கிறாள்.அந்த கஷ்டத்தை, தன் அம்மா அனுபவிக்கிறாள் என்பதை அறிந்தபோது, உமாவுக்கு அம்மா மீது பரிவும், பாசமும் பன்மடங்காகியது.

அப்பாவின் வெளி உறவு தனக்கு தெரியும் என்பதை காட்டிக்கொள்ளாமல் இருப்பது, அம்மாவிற்கு மன சாந்தியளிக்கும் என்று நினைத்து, அது பற்றி தெரியாதவள் போல் இருந்தாள்.

சிறுநீரக கோளாறுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அப்பா, ஆபரேஷன் முடிந்து படுக்கையில் ஓய்வில் இருந்த போது, உறவினர்களும், நண்பர்களும் வந்து பார்த்து, ஆறுதல் வார்த்தை கூறியது அம்மாவுக்கு தெம்பு அளித்தது. ஆனால், எட்டு வயது சிறுமியுடன், திடீரென்று அங்கு வந்த அந்த நடுத்தர வயது பெண், அப்பாவின் கையைப் பிடித்து ஆறுதல் சொல்லி அழ ஆரம்பித்ததும், அம்மா எரிமலையானாள்.

''என் வாழ்க்கைய பங்கு போட்டு நாசமாக்கிட்டு, இங்கேயும் சீராட வந்துட்டியா... என் வாழ்க்கையைத் தான் கெடுத்தே... கல்யாண வயசுல இருக்கிற, என் பெண்ணோட எதிர்காலத்தையும் கெடுத்துடாதே!
''உங்களுக்குள இருக்கிற உறவு, வெளியில தெரிஞ்சுடக் கூடாதேன்னு நான் பயந்துக்கிட்டு இருக்கேன். நீ என்னடான்னா நாலு பேர் முன்னால, என்னை அவமானப் படுத்துறதுக்காவே இங்கே வந்திருக்கே. போதாதுக்கு, உன் குட்டி பிசாசையும் கூட்டிட்டு வந்து அவர் மனச கரைக்கப் பாக்கிறே.

உன் ஜாலமெல்லாம் இங்கே நடக்காது; மருந்துகளால், ஏற்கனவே பாதி மயக்கத்தில இருக்கிற அந்த நல்ல மனுஷன, உன் பசப்பல் வார்த்தைகளால் முழுசா மயக்கப் பாக்காதே... நல்ல வேளை இங்க யாரும் இல்ல; உடனே இங்கிருந்து போயிடு. இல்லன்னா நடக்கிறதே வேற,'' வெளியில் போயிருந்த மகள், அறைக்கதவை ஓசைப்படாமல் திறந்து, உள்ளே வந்து பின்னால் நிற்பதை உணராமலேயே, உணர்ச்சி வயப்பட்டு கத்தினாள் அம்மா.

வார்த்தைகள் வெளியே வராமல், அப்பாவின் கண்களில் கண்ணீர் மட்டும் வழிந்தோடியது. அம்மாவை சமாதானப்படுத்த, ஊசிகள் மூலம் ரப்பர் குழாயில் இணைக்கப்பட்டிருந்த தன் இரு கைகளையும் சிரமப்பட்டு ஒன்று சேர்த்து வணங்க முயற்சித்தார். அவருடைய மன வருத்தம், புருவ மடிப்புகளின் இடம் மாறுதல்கள் மூலம் வெளிப்பட்டது.

குட்டி பிசாசு என்று அம்மா அழைத்த அந்த சிறுமியை, சைகை காட்டி அழைத்தார் அப்பா. ஆனால், அம்மா அதற்கு துளியும் அனுமதிக்கவில்லை. ஏமாற்றமும், ஏக்கமும் நிறைந்த பார்வையால், திரும்பி பார்த்துக் கொண்டே அந்த இருவரும் அங்கிருந்து நகர மனமின்றி சென்றனர்.

''நான் ரொம்ப துர்பாக்கியசாலி; இந்த கண்றாவி உனக்கு தெரியக் கூடாதுன்னு தான் இத்தனை காலமாக, மறைச்சு வச்சிருந்தேன். இப்ப, உனக்கு தெரிய வந்திடுச்சு,'' அம்மா, மகளின் தோளில் முகம் புதைத்து அழத் துவங்கினாள்.

அம்மாவை சமாதானப்படுத்தாமல், அவள் அழுது தீர்க்கட்டும் என்று காத்திருந்தாள்.
''நடந்தது நடந்து போச்சு; தப்பு பண்ணவர் உன்னோட கணவர்; என்னோட அப்பா. எதனால, எந்த சந்தர்ப்பத்தில, அந்த பெண்ணோடு இவருக்கு உறவு துளிர்த்ததுன்னு கேட்டு, பழசக் கிளறி, உன் மனக் காயத்த அதிகப்படுத்த விரும்பல. இதில பாதிக்கப்பட்ட உனக்கு என்னுடைய முழு ஆதரவும் உண்டும்மா,'' அம்மாவுக்கு ஆறுதல் சொல்லி தேற்றினாள் உமா.

''உங்க அப்பா ரொம்ப நல்லவர்டி; அவர் மேல் எந்த தப்பும் இல்ல. அவரோட அலுவலகத்தில கொஞ்ச நாள் தற்காலிகமா வேலை பார்த்த இவ தான், அவரை மயக்கிட்டா... அவளோட குலம், கோத்திரம் தெரியாம அப்பாவியான இவர், அவள் விரிச்ச வலையில விழுந்துட்டார். எல்லாம் என் தலையெழுத்து; தற்செயலா, இந்த விஷயம் தெரிய வந்ததும், வெட்டி விட்டுட்டேன். ஆனா, திடீர்னு இங்கே வருவான்னு எதிர்பாக்கல. மறுபடியும் இந்த ஊருக்கே வந்துட்டா போலிருக்கு,'' என்றாள் அம்மா.

ஆபரேஷனுக்குப் பின், பிழைத்து விடுவார் என்று நினைத்த அப்பா பிழைக்கவில்லை. அப்பா மீது அம்மா வைத்திருந்த அன்பு, பாசம், மரியாதை அனைத்தும், அவர் காரியங்களின்போது அம்மா புலம்பி அழுததிலிருந்து வெளிப்பட்டது.

''உமா, அவர் சம்பாத்தியத்தில கட்டிய இந்த வீட்டை வித்துட்டு, நாம வேற ஊருக்கும் போயிடலாம்; அப்பத்தான், அவரோட வெளி உறவு வந்து போவத தவிர்க்க முடியும். உனக்கும் கல்யாணத்திற்கு வரன் பாக்க ஆரம்பிக்கணும்,''என்றாள்.

விளம்பரம் கொடுத்ததும், வீடு, விரைவில் விலை போனது. அம்மாவிடம் வங்கி வரவு, செலவு புத்தகத்தை காட்டினாள் உமா.

''முப்பது லட்சம் விலைன்னு பேசினேயே... 15 லட்சம் தான், பேங்க் இருப்பு காட்டுது. மீதி பணம் அப்புறம் கொடுப்பாங்களா?'' அம்மா தன் சந்தேகத்தை தயக்கத்துடன் வெளிப்படுத்தினாள்.
''பாக்கி பணம் சேர வேண்டியவங்களுக்குப் போய் சேர்ந்துடுச்சு,''என்றாள் உமா.
''என்னடி சொல்றே?''என்றாள் புரியாமல் அம்மா.

தொடரும்.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 2:07 pm

வார்த்தைகள் வெளியே வராமல், அப்பாவின் கண்களில் கண்ணீர் மட்டும் வழிந்தோடியது. அம்மாவை சமாதானப்படுத்த, ஊசிகள் மூலம் ரப்பர் குழாயில் இணைக்கப்பட்டிருந்த தன் இரு கைகளையும் சிரமப்பட்டு ஒன்று சேர்த்து வணங்க முயற்சித்தார். அவருடைய மன வருத்தம், புருவ மடிப்புகளின் இடம் மாறுதல்கள் மூலம் வெளிப்பட்டது.

குட்டி பிசாசு என்று அம்மா அழைத்த அந்த சிறுமியை, சைகை காட்டி அழைத்தார் அப்பா. ஆனால், அம்மா அதற்கு துளியும் அனுமதிக்கவில்லை. ஏமாற்றமும், ஏக்கமும் நிறைந்த பார்வையால், திரும்பி பார்த்துக் கொண்டே அந்த இருவரும் அங்கிருந்து நகர மனமின்றி சென்றனர்.

''நான் ரொம்ப துர்பாக்கியசாலி; இந்த கண்றாவி உனக்கு தெரியக் கூடாதுன்னு தான் இத்தனை காலமாக, மறைச்சு வச்சிருந்தேன். இப்ப, உனக்கு தெரிய வந்திடுச்சு,'' அம்மா, மகளின் தோளில் முகம் புதைத்து அழத் துவங்கினாள்.

அம்மாவை சமாதானப்படுத்தாமல், அவள் அழுது தீர்க்கட்டும் என்று காத்திருந்தாள்.
''நடந்தது நடந்து போச்சு; தப்பு பண்ணவர் உன்னோட கணவர்; என்னோட அப்பா. எதனால, எந்த சந்தர்ப்பத்தில, அந்த பெண்ணோடு இவருக்கு உறவு துளிர்த்ததுன்னு கேட்டு, பழசக் கிளறி, உன் மனக் காயத்த அதிகப்படுத்த விரும்பல. இதில பாதிக்கப்பட்ட உனக்கு என்னுடைய முழு ஆதரவும் உண்டும்மா,'' அம்மாவுக்கு ஆறுதல் சொல்லி தேற்றினாள் உமா.

''உங்க அப்பா ரொம்ப நல்லவர்டி; அவர் மேல் எந்த தப்பும் இல்ல. அவரோட அலுவலகத்தில கொஞ்ச நாள் தற்காலிகமா வேலை பார்த்த இவ தான், அவரை மயக்கிட்டா... அவளோட குலம், கோத்திரம் தெரியாம அப்பாவியான இவர், அவள் விரிச்ச வலையில விழுந்துட்டார். எல்லாம் என் தலையெழுத்து; தற்செயலா, இந்த விஷயம் தெரிய வந்ததும், வெட்டி விட்டுட்டேன். ஆனா, திடீர்னு இங்கே வருவான்னு எதிர்பாக்கல. மறுபடியும் இந்த ஊருக்கே வந்துட்டா போலிருக்கு,'' என்றாள் அம்மா.
ஆபரேஷனுக்குப் பின், பிழைத்து விடுவார் என்று நினைத்த அப்பா பிழைக்கவில்லை. அப்பா மீது அம்மா வைத்திருந்த அன்பு, பாசம், மரியாதை அனைத்தும், அவர் காரியங்களின்போது அம்மா புலம்பி அழுததிலிருந்து வெளிப்பட்டது.

''உமா, அவர் சம்பாத்தியத்தில கட்டிய இந்த வீட்டை வித்துட்டு, நாம வேற ஊருக்கும் போயிடலாம்; அப்பத்தான், அவரோட வெளி உறவு வந்து போவத தவிர்க்க முடியும். உனக்கும் கல்யாணத்திற்கு வரன் பாக்க ஆரம்பிக்கணும்,''என்றாள்.விளம்பரம் கொடுத்ததும், வீடு, விரைவில் விலை போனது. அம்மாவிடம் வங்கி வரவு, செலவு புத்தகத்தை காட்டினாள் உமா.

''முப்பது லட்சம் விலைன்னு பேசினேயே... 15 லட்சம் தான், பேங்க் இருப்பு காட்டுது. மீதி பணம் அப்புறம் கொடுப்பாங்களா?'' அம்மா தன் சந்தேகத்தை தயக்கத்துடன் வெளிப்படுத்தினாள்.
''பாக்கி பணம் சேர வேண்டியவங்களுக்குப் போய் சேர்ந்துடுச்சு,''என்றாள் உமா.
''என்னடி சொல்றே?''என்றாள் புரியாமல் அம்மா.

''அப்பாவோட மரணத்தால் பாதிக்கப்பட்டது நீ மட்டும் இல்லம்மா; அந்த பட்டியலில் இன்னும் இரண்டு ஜீவன்களை சேக்கணும். அப்பாவின் வெளிஉறவான, அந்த பெண்ணை வில்லியாக சித்தரிப்பது நியாயம்ன்னு எனக்கு தோணல. அதற்கான பொறுப்பு அப்பாவையும் சாரும். அவர் செய்த தவறுக்கு, நாமும் பொறுப்பு ஏற்றுக் கொள்வது தான் தார்மீகம். என்னோட எதிர்காலத்தப் பத்தி கவலைப்படுகிற நீ, அப்பாவின் வெளி உறவில் உதித்த, அந்த எட்டு வயது பொண்ணப் பத்தியும் சிந்திச்சுப் பாக்கணும்.
''அந்தப் பொண்ணுக்கு, குட்டிப் பிசாசுன்னு பெயர் சூட்டினால், நான் பெரிய பிசாசு. அவள் எனக்கு தங்கை. அவளுடைய எதிர்காலத்தப் பத்தி கவலைப்பட வேண்டியது நம்மோட கடமை.

''அவங்க ரெண்டு பேருக்கும் ஆதரவு காட்ட யாருமில்லன்னு தெரிஞ்சது. அதனால் தான், வீடு விற்று வந்த பணத்தில் பாதிய, அவ பெயருக்கு கணக்கு துவங்கி, அதில் செலுத்திட்டேன். ஒரு பெண்ணிற்கு இன்னொரு பெண்தான்ம்மா ஆதரவாக இருக்கணும்; அந்த ஆதரவு எண்ணம் இருந்தால், துரோக சிந்தனைகள் தள்ளிப் போகும். துரோக சிந்தனைகள் துளிர் விடுவதற்கு முன், அவங்களுக்கு நியாயமாக சேர வேண்டியத, நான் கொடுத்துட்டேன். உடனடியாக இல்லையென்றாலும், நாளடைவில், நீயும் இதுக்கு சம்மதிப்பேங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு,''என்று கூறிய உமா, தான் சொல்ல நினைத்ததை சொல்லி முடித்துவிட்ட திருப்தியில், அம்மாவின் தோளில் சாய்ந்தாள். அவள் தேக்கி வைத்திருந்த கண்ணீர், அம்மாவின் தோளை நனைத்தது.

கணவனின் வெளி உறவால் பாதிக்கப்பட்ட அம்மா, இறக்கும் தருவாயில் வெளி உறவால் பிறந்த மகளை கட்டி அணைத்து, தன் அன்பை வெளிப்படுத்த முடியாமல், வெதும்பி தவித்த அப்பா, 'அப்பாவின் வைப்பாட்டி' என்று அவப்பெயரை தாங்கி நிற்கும் பெண், தந்தை உறவு அறுந்து வளர்ந்த சிறுமி ஆகிய அனைவருக்கும், அந்த அழுகை சமர்ப்பணம் செய்யப்பட்டது.

எஸ்.ராமன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 3:16 pm

நல்லை சிறுகதை...பகிர்வுக்கு நன்றிகள்...அம்மா.... புன்னகை
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தமிழ்நேசன்1981

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக