புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடைமாற்றம் உருமாற்றம்! Poll_c10உடைமாற்றம் உருமாற்றம்! Poll_m10உடைமாற்றம் உருமாற்றம்! Poll_c10 
15 Posts - 83%
Barushree
உடைமாற்றம் உருமாற்றம்! Poll_c10உடைமாற்றம் உருமாற்றம்! Poll_m10உடைமாற்றம் உருமாற்றம்! Poll_c10 
1 Post - 6%
kavithasankar
உடைமாற்றம் உருமாற்றம்! Poll_c10உடைமாற்றம் உருமாற்றம்! Poll_m10உடைமாற்றம் உருமாற்றம்! Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
உடைமாற்றம் உருமாற்றம்! Poll_c10உடைமாற்றம் உருமாற்றம்! Poll_m10உடைமாற்றம் உருமாற்றம்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடைமாற்றம் உருமாற்றம்! Poll_c10உடைமாற்றம் உருமாற்றம்! Poll_m10உடைமாற்றம் உருமாற்றம்! Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
உடைமாற்றம் உருமாற்றம்! Poll_c10உடைமாற்றம் உருமாற்றம்! Poll_m10உடைமாற்றம் உருமாற்றம்! Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
உடைமாற்றம் உருமாற்றம்! Poll_c10உடைமாற்றம் உருமாற்றம்! Poll_m10உடைமாற்றம் உருமாற்றம்! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
உடைமாற்றம் உருமாற்றம்! Poll_c10உடைமாற்றம் உருமாற்றம்! Poll_m10உடைமாற்றம் உருமாற்றம்! Poll_c10 
2 Posts - 2%
prajai
உடைமாற்றம் உருமாற்றம்! Poll_c10உடைமாற்றம் உருமாற்றம்! Poll_m10உடைமாற்றம் உருமாற்றம்! Poll_c10 
2 Posts - 2%
Shivanya
உடைமாற்றம் உருமாற்றம்! Poll_c10உடைமாற்றம் உருமாற்றம்! Poll_m10உடைமாற்றம் உருமாற்றம்! Poll_c10 
1 Post - 1%
Barushree
உடைமாற்றம் உருமாற்றம்! Poll_c10உடைமாற்றம் உருமாற்றம்! Poll_m10உடைமாற்றம் உருமாற்றம்! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
உடைமாற்றம் உருமாற்றம்! Poll_c10உடைமாற்றம் உருமாற்றம்! Poll_m10உடைமாற்றம் உருமாற்றம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடைமாற்றம் உருமாற்றம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 1:53 pm

சூரியோதயத்திற்கு முன்னே விழிப்பு தட்டிவிட, தூக்கத்தை உதறி, மெதுவாக எழுந்த தாமரை, சம்மணமிட்டு அமர்ந்து இறைவனை தியானித்தாள். பின், தன் இருபுறமும் படுத்துறங்கும் குழந்தையையும், கணவனையும் பார்த்தவள், அறையை விட்டு வெளியே வந்தாள்.

கல்லூரியில் புரபசராக பணிபுரியும் அவள், அன்று செய்ய வேண்டிய வேலைகளை நினைவுக்கு கொண்டு வந்து, அடுத்த நிமிடமே அமைதியை தொலைத்தாள். 'எப்படி முடியும்! தவறு செய்தால் தானே மன்னிப்பு கேட்க... நான் தான் தவறு செய்யவில்லையே...' என்று நினைத்தபடியே, பின்பக்க கதவை திறந்து, படி இறங்கியவள், ஏதோ நினைத்தவாறே படியில் அமர்ந்தாள்.

'ஒருமுறை தஞ்சாவூருக்கு போய் அப்பாவை பாத்து, இந்த பிரச்னைக்கு தீர்வு கேட்கலாமா...' என்ற நினைப்பு மேலிட, அடுத்த நிமிடமே தீர்வு கிடைத்தது போல, மனதில் அமைதி ஏற்பட்டது.

அப்பா ஆசிரியர்; பூர்வீகம் திருவையாறை ஒட்டி திருப்பூந்துருத்தி. கிராமத்திலுள்ள நில, புலன்களை குத்தகைக்கு விட்டு, தஞ்சாவூரில் வீடு வாங்கினார். அம்மா தடுத்த போது, காதில் போட்டு கொள்ளவில்லை.
'வெறும் விவசாயியா இருந்த வரைக்கும் இந்த வீடும், நிலமும் போதும்; இப்போ நான் ஆசிரியர். என் வேலையை முழுசா செய்யணும். அதுக்கு நான் உண்மையானவனா இருக்கணும்.

என்கிட்ட படிக்கிற புள்ளைங்களுக்கு, நல்லவிதமா வழி காட்டணும். நீ சொல்ற மாதிரி, திருப்பூந்துருத்தியிலிருந்து நான் வேலைக்கு போனா, எனக்கு சொல்லிக் கொடுக்க மனசு வராது; வயல் நினைப்பிலேயே இருப்பேன். அப்புறம் ஆசிரிய பணி, பகுதி நேர பணியாகி, விவசாய பணி, முழு நேர பணியாகிடும். சொல்லு, நீ சொல்ற மாதிரி நான் இருக்கட்டுமா இல்ல நான் சொல்றதை நீ கேட்கிறியா?'
என்றார்.

அப்பாவின் பேச்சில் இருந்த உண்மையை உணர்ந்த அம்மா, அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அப்பாவும், ஒருமுன் மாதிரி ஆசிரியராக பணியாற்றியதுடன், நல்லாசிரியர் விருதையும் பெற்றார். அவரிடம் தங்கள் பிரச்னைகளுக்கு ஆலோசனை கேட்டு, பலரும் வருவர். 'அவர்களுக்கு வழிகாட்டிய அப்பா, என் பிரச்னைக்கு தீர்வு சொல்லாமலா போய் விடுவார்...' என்ற நினைப்புடன், மொபைல் போனை எடுக்க எழுந்த போது, மொபைல் போன் முந்திக் கொண்டு அழைத்தது.

போன் சத்தத்தில், குழந்தைகள் விழித்து விடுவரோ என்ற பரபரப்பில் யாருடைய அழைப்பு என்பதை பார்க்காமல், ''ஹலோ...'' என்றாள்.
''நான் காலேஜ் பிரின்சிபால் பேசறேன்... காலையிலே தொந்தரவு கொடுக்கறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க; முடிவு செஞ்சுட்டீங்களா?''
''இன்னும் இல்லங்க சார்...''

''சம்பவம் நடந்து எட்டு நாளாயிடுச்சு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமா, பிரச்னை தடம் மாறிப் போயிட்டுருக்கு. மாணவர் தலைவன், சீக்கிரம் பிரச்னைய முடிச்சிக்கிறது நல்லது; பக்கத்துல இருக்கற கலைக்கல்லூரி மாணவர்களும், பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்திலே பங்கெடுத்துக்க முடிவு செய்துருக்கிறதாவும் சொன்னான். அப்படி பெரிசா எதுவும் நடந்துடக் கூடாது; அதனாலே தான் சொல்றேன்.
''நீங்க செஞ்சதில தப்பில்லன்னு எங்களுக் கும், நிர்வாகத்துக்கும் தெரியும்.

நிர்வாகி, 'தாமரை கோபப்பட மாட்டாங்க; அதையும் மீறி கோபப்பட்டிருக்காங்கன்னா, அந்தப் பொண்ணு செஞ்ச செயல், அவங்கள ரொம்பவும் பாதிச்சுருக்கு. இந்த சமயத்துல, நாம தாமரைக்கு ஆதரவா இருக்கணும். அவங்க நம்மை விட்டுப் போகக் கூடாது; தாமரையோட கணவர் என்னோட கிளாஸ்மேட். அவனுக்காக தான் அவங்கள வேலைக்கு சேத்தேன். அதனால பிரச்னைய சுமுகமாக முடிக்க பாருங்க'ன்னாரு.

''எனக்கு, உங்க வயசுல ஒரு மக இருக்கா. அந்த விதத்துல நான் சொல்றத கேளுங்க. இந்த கல்லூரியில வேலை பாக்கறவங்கள்ல நீங்க எல்லாவிதத்திலும் வித்யாசமானவங்க. உங்களோட பேச்சு, நடை, செயல்பாடு, அணுகுமுறை, பாடம் நடத்துற விதம் அதுக்கு மேல தொழில் மீது நீங்க வைச்சுருக்கிற ஈடுபாடு. இதையெல்லாம் பாக்கும் போது, உங்களுக்கு ஈடா யாரையும் சொல்ல முடியாது.

அப்படிப்பட்ட நீங்க, கல்லூரி முதல்வரான என்னோட நிலையையும் கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. விளக்கத்த ஏத்துக்கணுங்கற நிலைய தாண்டி, மன்னிப்பு கேட்கணுங்கற நிலைக்கு பசங்களும் இதை கொண்டாந்துட்டாங்க. அதனாலே, மன்னிப்பு கேட்டு, இதை, சுமூகமா முடிச்சு வைச்சுடுங்க. இப்படி சொல்றதாலே, உங்கள கட்டாயப்படுத்தறதா நினைக்க வேண்டாம்,'' என்றவர் அவள் விளக்கத்தை கேட்காமல் மொபைல் இணைப்பை துண்டித்தார்.
சோர்ந்து போய் அப்படியே படியில் அமர்ந்தவளுக்கு, இத்தனைக்கும் காரணமான சம்பவம் நினைவுக்கு வந்தது.

கடந்த வாரம் ஒருநாள் வகுப்பறைக்கு போகும் வழியில், இளங்கலை அறிவியல் மூன்றாமாண்டு படிக்கும் ரம்யா என்ற மாணவி, இறுக்கமான டாப்பும், லெக்கின்சும் அணிந்து நின்றிருந்தாள். அந்த உடையில் அவளது தோற்றம் அனைவரையும் சுண்டி இழுக்கும் விதமாக கவர்ச்சியாக இருந்தது. அந்த வழியே சென்ற மாணவர்கள் அவளை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே சென்றனர்.

அவள் பணக்கார வீட்டுப் பெண். அவளுடைய அண்ணன் ஒரு அரசியல்வாதியும் கூட. அந்த நிலையும், நினைப்பும் அவளை துணிச்சல் மிக்கவளாக்கி, அவள் விருப்படியே நடக்கச் செய்தது. இரண்டொரு முறை கல்லூரி நிர்வாகத்தின் கண்டிப்புக்கும் ஆளானாள்.

இருந்தும், அவள் செயலில் எந்த மாற்றமுமில்லை. அப்படிப்பட்ட பெண், இப்படி அலங்கோலமாக உடையணிந்து வந்தது தாமரையை கோபப்படுத்த, ஆத்திரத்துடன் அவளை அணுகி, ஓங்கி ஒரு அறை விட்டாள்.

பலருக்கு முன், ஒரு புரபசர் தன்னை அறைந்ததை ஏற்க முடியாத ரம்யா, அவமானத்தால் முகம் சிவந்தாள். அழுது கொண்டே ஓட்டமும், நடையுமாக கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறினாள். இக்காட்சியை பார்த்த மாணவர்கள் திடுக்கிட்டனர். அந்த மாணவி வெளியேறிய பின், மாணவர்கள் சிலர் தாமரை அருகில் வந்து, அவளது செயலை பாராட்டினாலும், பயமுறுத்தவும் செய்தனர்.

தன் செயலின் தாக்கத்தை உணர்ந்த தாமரை, சுற்றி நின்று தன்னை பார்க்கும் மாணவர்களின் பார்வையை தவிர்த்து, ஓய்வறைக்குள் சென்றாள். அன்று மதியம் வரை எந்தவித பிரச்னையும் ஏற்படவில்லை. மாலை கல்லூரி விட்ட பின், முதல்வர் அழைத்தார். உள்ளே சென்றவளை, 'என்னம்மா இப்படி செய்துட்டீங்க...' என்று கேட்க, விஷயம் விபரீதமானதை, புரிந்து கொண்டாள் தாமரை.

'அந்த பெண் கவர்ச்சியா டிரஸ் செய்துட்டுருக்கலாம்; அதுக்காக நீங்க மத்த பசங்க மத்தியில, அவளை அறையலாமா... தனியா கூப்பிட்டு புரிய வச்சிருக்கலாம்; வீட்டுக்கு போய் வேற உடை உடுத்திட்டு வான்னு அனுப்பி வச்சிருக்கலாம். அதை விட்டு அடிச்சிருக்கீங்க. அவ சாதாரண வீட்டு பெண் இல்ல; அரசியல்வாதி வீட்டு பெண். நீங்க செஞ்ச செயல் பசங்க மத்தியில பரவி பிரச்னையாகிடுச்சு; கூப்பிட்டு சமாதானம் செய்யுங்க...' என்றார்.

தொடரும்..................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 1:55 pm

ஒரு அக்கறையில் செய்தது, இப்படி தவறாக போய்விட்டதே என நினைத்தபடி வெளியே வந்த போது, நிர்வாகத்தின் அழைப்பை அடுத்து, கணவன் நின்றிருந்ததை பார்த்ததும் பயந்தாள். அவளது நிலைமையை புரிந்து கொண்ட அவன், அவளது கைகளை, ஆதூரத்துடன் பற்றிக் கொண்டான்.
'பேசி சரி செய்துடலாம்... அமைதியா இரு...' என்றான்.

ஆனால், எந்த பேச்சு வார்த்தையும் எடுபடாமல் போய், வகுப்பு புறக்கணிப்பாக துவங்கி, வேலைநிறுத்தமாக மாறியது. சமீபத்தில் வெள்ளையடிக்கப்பட்ட கல்லூரி கட்டடங்களில், அவளது கார்ட்டூன், மாணவர்கள் விருப்பப்படி வரையப்பட்டு, அதற்கான வசனமும் எழுதப்பட, படித்தவர்கள் எல்லாம் சிரித்தனர்.
ஒரு முடிவிற்கு வந்தவள் போல, அப்பாவிற்கு போன் செய்தாள்.
''எப்படிப்பா இருக்கீங்க... அம்மா எப்படி இருக்காங்க.''

''ரெண்டு பேரும் நல்லாயிருக்கோம்; என்னடா இவ்ளோ காலையில போன்...''
''இப்போ வீட்டிலே இருக்கீங்களா இல்ல நடைபயிற்சி கிளம்பிட்டீங்களா?''
''ஏம்மா... உன்னோட கல்லூரி விஷயத்த பத்தி பேசணுமா?''
அப்பாவிடமிருந்து இப்படியொரு கேள்வி வர அயர்ந்தாள்.
''உங்களுக்கு எல்லாம் தெரியுமாப்பா?''
''மாப்பிள்ளை சொன்னாரும்மா.''
''அப்பா... நான் செஞ்சது தப்பா?''

''ஒரு வாத்தியாரா அதை தப்புன்னு சொல்லல. ஆனா, இன்னிக்கு உள்ள நிலையை நினைச்சுப் பாக்காம, உரிமை எடுத்துக்கிட்டது தப்பு. பசங்களை அடிக்கக் கூடாது எட்டாம் வகுப்பு வரை பெயில் போடக்கூடாது அப்படி, இப்படின்னு அரசு சலுகை காட்ட காட்ட, அது எதற்கு என்று புரிந்து கொள்ளாத சில மாணவர்கள் கெட்டு சீரழிஞ்சு போறாங்க.வாத்தியாருங்க சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம தவிக்கிறாங்க. இது தான், இன்னிக்கு வாத்தியாருங்க நிலை.

''நீ என்னடான்னா அரை குறையா உடை அணிஞ்சிட்டு வந்துட்டான்னு அடிச்சுருக்கே... பேசாம மன்னிப்பு கேட்டுடும்மா. என்னடா அப்பா இப்படி சொல்றாரேன்னு நினைக்காதே... நீ செஞ்சது தப்பில்லம்மா. ஆனா, இந்த விஷயம் சென்சிட்டீவா ஆக்கப்பட்டிருக்கு. இதை தீர்த்து வைக்க ஒரே வழி, மன்னிப்பு கேட்குறது தான். இதை, சாதாரண விஷயமா எடுத்துகிட்டு, நீ விட்டு கொடுக்கலன்னா உனக்கும், நிர்வாகத்துக்கும் மட்டுமல்ல, உனக்கும், மாப்பிள்ளைக்கும் கூட பிரச்னை வரலாம் புரியுதா... பேசாம மன்னிப்பு கேட்டுட்டு, நாலுநாள் லீவு போட்டு, தஞ்சாவூருக்கு வந்து தங்கிட்டு போ,''என்றார்.

அன்று மாலை மன்னிப்பு கேட்கும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்லூரி முதல்வர், ''தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் நடந்ததற்காக, நிர்வாகம் மிகுந்த வருத்தம் கொள்கிறது. கல்லூரி கட்டுப்பாட்டை மீறி உடை அணிந்து வந்ததும், அதை கண்டித்த முறையும், மாணவர்கள் தலையிட்டு வேலை நிறுத்தம் வரை கொண்டு சென்றதும், நடக்கக் கூடாத நிகழ்வுகள். இதில், மூன்று தரப்பிலும் தவறுகள் உள்ளன. ஆனால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சொல்வது ஒரு தலைபட்சமான செயல்.

ஆனாலும், மாணவர்களின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து, அவர் வருத்தம் தெரிவிக்க இசைந்துள்ளார். அமைதி காத்து ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்,''என்றார்.
அவர் பேசி முடித்த பின், மேடையேறினாள் தாமரை. எல்லாரையும் வணங்கி, கணீர் குரலில் பேசத் துவங்கினாள். அவள் பேச்சில் எந்த விதமான வேதனையோ, வருத்தமோ இருக்கவில்லை.
''வணக்கம்... இப்படிபட்டதொரு தர்மசங்கடமான நிகழ்வு நடக்கவும், அதனடிப்படையில் இப்படியொரு கூட்டம் ஏற்பாடு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டமைக்காகவும், மன்னிப்பு கோருகிறேன்,''என்றாள்.

அவள் பேச்சால் அதிருப்தியுற்ற மாணவர்கள், விசில் அடித்து எதிர்ப்பை தெரிவித்தனர்.
'இதை நாங்க ஒத்துக்க மாட்டோம்; அந்த பெண்ணை மேடைல நிக்க வெச்சு மன்னிப்பு கேட்கணும்...' என்றனர்.
''கேக்கறம்பா... நீங்க எப்படியெல்லாம் விரும்புறீங்களோ... அப்படியெல்லாம் கேட்கிறேன். அதுக்காகத்தானே இந்த கூட்டம் கூட்டியிருக்கீங்க. இப்போது நான் மன்னிப்பு கேட்டது ரம்யாகிட்ட இல்ல, நிர்வாகத்துக்கிட்ட. நிர்வாகத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்திட்டோமேன்னு வருத்தம் தெரிவிச்சேன். இனிமே தான் ரம்யா கிட்ட மன்னிப்பு கேட்கப் போறேன். எங்க ரம்யா... மேடைக்கு வர சொல்லுங்க,'' என்றாள்.

மேடைக்கு வந்தாள் ரம்யா.''என் அன்புக்குரிய மாணவர்களே... உங்க விருப்பப்படி என்னால பாதிக்கப்பட்ட ரம்யாகிட்ட, நான் எப்படி மன்னிப்பு கேட்கணும்ன்னு அந்த பொண்ணு விரும்புதோ அப்படியெல்லாம் கேட்பேன். அவ காலில் விழுந்து கேட்கணும்ன்னு சொன்னாக் கூட அதன்படி செய்ய தயாராயிருக்கேன். அதனால, இனிமேல் இந்த விஷயத்தில, நீங்க, அதாவது, மற்ற மாணவர்கள் தலையிடக்கூடாது. தெரிஞ்சுதா...'' என்ற தாமரை, ரம்யாவை நோக்கி, ''ஏம்மா... உனக்கும், எனக்கும் தனிப்பட்ட முறையிலே ஏதும் பிரச்னை உண்டா?''

''இல்ல.''
''உன்னை எந்தவிதத்திலாவது நான் குறைச்சு மதிப்பிட்டிருக்கேனா?''
''இல்ல.''
''இதையும் மீறி உன்னை அறைஞ்சேன்னா, அது எதுக்காக இருக்கும்ன்னு, நீ யோசிச்சுருக்கியா?''
''இல்ல.''
''யோசிக்கத் தெரியாத உன்னால எதையும் புரிஞ்சிக்க முடியாது. சரி... நீ போய் கீழே உட்காரு. நான் ஏன் அறைஞ்சேங்கறதுக்கு ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்துட்டு, உன்னை கூப்பிட்டு, நீ எப்படி விரும்புறியோ, அப்படியே மன்னிப்பு கேட்கிறேன்,''என்றாள்.

மாணவர்கள் கோஷம் எழுப்ப, நிர்வாகி எழுந்து, ''மாணவர்கள் அமைதியா இருக்கணும்; அவங்கதான் மன்னிப்பு கேட்கிறேன்னு உறுதி கொடுத்திருக்காங்கள்ள... அப்புறம் எதுக்கு கோஷம் போடறீங்க... கொஞ்சம் நேரம் அமைதியா இருங்க. அவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்போம்,''என்றார்.
எதற்கும் பேசாத நிர்வாகி பேசியதால், மாணவர்கள் அமைதி காத்தனர்.

தொடரும்.....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 1:57 pm

''என் அன்பு மாணவர்களே... கற்கால மனிதர்கள், உடை உடுத்திக்காமத்தான் வாழ்ந்தனர். உடை உடுத்திக்கணுங்கற எண்ணம் அவங்களுக்கு ஏற்படலே. காலப் போக்கில் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிச்சு, அவங்க தேவையின் இலக்குகள் மாற, தவறுகள் உருவாகத் தொடங்கியது. மறைக்க வேண்டியதை மறைச்சாத்தான், பாதுகாப்பா வாழ முடியுங்கற எண்ணம், மனிதர்களுக்குள் குறிப்பாக, பெண்களுக்குள் ஏற்பட்டது.

நாடோடிகளா திரிஞ்ச காலத்திலே இலைகளையும், மரப்பட்டைகளையும் உடையா உடுத்திக்கிட்டவங்க, ஓரிடத்தில் தங்கி, வேளாண்மை செஞ்சு வாழ துவங்கிய பின், உணவைப்போல, இருப்பிடம் போல, உடையும் ஒவ்வொருவருக்கும் அவசியமானதுன்னு நினைச்சாங்க. அது மட்டுமல்லாது, எதை, எதையெல்லாம் உடுத்தலாம்ன்னு யோசிச்சு, அதை உருவாக்கவும் துவங்கினாங்க. இந்த யோசனை அன்னைக்கு உருவாகலன்னா, நாமெல்லாம் இன்னைக்கும் மிருகமாத்தான் இருப்போம்.

''இப்படி கண்டுபிடிக்கப்பட்ட உடைகள், அன்னைக்கு வெறும் பாதுகாப்பு கவசமாகத்தான் இருந்தது. இன்னைக்கு அழகு தருவதா மாறியிருக்கு. இதனடிப்படையில்தான், 'ஆள்பாதி ஆடை பாதிங்கற' பழமொழியே உருவாச்சு. வெளிநாட்டில இது செய்யற உதவிக்கு கைமாறா, 'ஆடைகள் திருவிழா'ன்னு நடத்துறாங்க. ஆனா, நம்ம நாட்டில அப்படிப்பட்ட எதுவும் நடக்கறதில்லே.

''பலதரப்பட்ட மொழி, கலாசாரங்களைக் கொண்ட நம்ம நாட்டில, அவங்க அணியும் உடைகளை வச்சுதான் அடையாளப்படுத்துறோம். அந்தளவுக்கு கலாசாரத்தின் பிரதிபலிப்பாகவும், அடையாளமாகவும் ஆடைகள் இருப்பது, உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச விஷயம். அந்த ஆடைகளை, நம் பாதுகாப்புக்காக சின்ன சின்ன மாற்றங்கள் செய்து போட்டுக்கலாம்; முழுசா மாற்றக்கூடாது.

''இலக்கியங்களும், புராணங்களும் ஆண்களைவிட பெண்களையே உயர்வா பேசுது. தெய்வங்களில் கூட ஆண் தெய்வங்களை விட, பெண் தெய்வங்களையே அதிகமா கொண்டாடுறாங்க. ஆண் - பெண் இருவரை ஒப்பிடும்போது, ஆணை விட பெண்ணே அதிக மனோபலமும், மனமுதிர்ச்சியும் கொண்டவளா இருக்கா.
''இப்படி எல்லா நிலையிலும் ஆணைவிட, பெண்ணுக்கு முக்கியத்துவம் தர காரணம், தாய்மைக்கு தன்னை பலி கொடுக்க தயாரா இருக்கறாளே... அந்த தியாகத்துக்குத்தான்.

தன்னலம் கருதாது, உயிரைப்பணயம் வெச்சு, அவ செய்யறதுக்கு எதை கொடுத்தாலும் ஈடாகாது; இதற்கேற்ப அவளோட உடலமைப்பும் சில மாற்றங்களோட படைக்கப்பட்டிருக்கு. இந்த உண்மையை புரிஞ்சிக்காம, அதை, ஒரு கவர்ச்சிப் பொருளா பாக்குற நிலைதான் இன்னைக்கும் நிலவுது. மூடி மறைக்க வேண்டியதை, திறந்து காட்டினா யாருக்கு பாதிப்புன்னு கொஞ்சம் யோசித்துப் பாருங்க.

''திறந்து கிடக்கிற வீட்டில தான் திருடன் திருட வருவான். அதுபோல உள்ளாடை தெரியற மாதிரி மேலாடை அணியறவங்களையும், உள்ளே இருக்கிறத வெளியே காட்டற மாதிரி, இறுக்கமா உடை உடுத்துறவங்களையும், பாக்குற ஆணுக்கு திருடத்தான் தோணும். பூட்டு மேலே பூட்டுப்போட்டு வீட்டை பூட்டி வைக்கிற மாதிரி, உடம்பை மூடி மறைச்சு வெச்சா, திருடவே தோன்றாது. இப்படி சொல்றது பெண்களோட சுதந்திரத்தையும், உரிமையும் மறுக்கிற மாதிரின்னு கூப்பாடு போடலாம்.

அப்படி நினைக்கறவங்க, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிகழ்ந்ததை நினைச்சுப் பார்த்தா உண்மையை உணரலாம்.''பெண்களுக்கு கிடைச்ச அழகான உடலமைப்பு பெற்றோர்களிடமிருந்து கிடைச்ச பெரும் சொத்து. அதை மத்தவங்க ரசிக்கிறதை நம்மாலே தடுக்கமுடியாது. ஆனா, அந்த ரசிப்புத்தன்மைக்கு ஒரு எல்லை போடலாம். அதுக்காக பாரம்பரிய ஆடைகளைத்தான் அணியணும்ன்னு சொல்ல வரல்லே. நம்ம உடலுக்கு அழகும், பாதுகாப்பும் தரும், மாடர்ன் டிரஸ்களையும் அணியலாம். ஆனா, அது மற்றவர்களை உறுத்தாத அழகா இருக்கணும்.

''உடைகள் உடம்பை மறைக்கத்தானே தவிர, திறந்து காட்ட இல்லே. உடலை எடுப்பா காட்டற உடையை விட, உடலை பாதுகாக்கிற பொருத்தமான உடைகள் தான் நல்லது. படிப்பு என்கிற பண்பை விதைக்கிற இந்த இடத்திலே அலங்கோலமா உடுத்திக்கிட்டு வரணுமா... ரம்யாவ அன்னைக்கு அந்த உடையிலே பார்த்தபோது அதிர்ச்சியாயிட்டேன்.

''இந்த        பொண்ணு       அதோட பாதுகாப்ப பத்தி கவலைப் படலயேன்னு கலவரப்பட்டேன். அதன் தாக்கத்துல தான் அறைஞ்சுட்டேன். மத்தப்படி இதிலே எந்த உள்நோக்கமும் இல்ல,''என்றாள்.
அவள் பேச்சால் அரங்கமே அமைதியானது.

''ரம்யா... இப்போ நீ மேலே வரலாம்,'' என்றதும், மேடை ஏறி வந்த ரம்யா, யாரும் எதிர்பாராத விதமாய் தாமரையின் கால்களில் விழ, மாணவியர் எழுந்து கை தட்டினர். இதை எதிர்பாராத தாமரை, சங்கோஜத்துடன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட ரம்யாவை தூக்கி நிறுத்தினாள்.

''என்னை மன்னிச்சிடுங்க மேடம். எனக்கு அம்மா இல்ல; அதனால, அப்பா செல்லமா வளர்ந்தேன். சின்ன வயசிலிருந்தே எதையும் என் இஷ்டத்துக்கு செஞ்சு பழக்கப்பட்டதாலே, நான் செய்றது எல்லாம் சரின்னு நினைப்பேன். பிடிச்சதை செய்யணும்ன்னு நினைப்பேனே ஒழிய, அதனோட பிளஸ் - மைனஸ் பத்தியெல்லாம் கவலைப்படமாட்டேன். டிரஸ் போட்டுக்கறதை பற்றிய என் பார்வை, எத்தனை தப்புன்னு நீங்க பேசினதுக்கப்பறம் தான் புரிஞ்சிக்கிட்டேன். என்னை மன்னிச்சிருங்க,'' என்றாள்.

மறுநாள் வழக்கம் போல கல்லூரி பஸ்கள் மாணவியரை அழைத்து வந்து கல்லூரியில் இறக்கி விட்டது. பஸ்சிலிருந்து இறங்கும் மாணவியரை, 'சைட்' அடிப்பதற்காக காத்திருந்த மாணவர்கள், கீழே இறங்கிய மாணவியரை பார்த்து முகம் வெளிறினர்.பெரும்பாலான மாணவியர் உடையால், உருமாறியிருந்தனர்.

நெடுஞ்செழியன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 3:22 pm

நல்ல கதை...நன்றிகள் அம்மா... உடைமாற்றம் உருமாற்றம்! 3838410834 உடைமாற்றம் உருமாற்றம்! 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 6:53 pm

தமிழ்நேசன்1981 wrote:நல்ல கதை...நன்றிகள் அம்மா... உடைமாற்றம் உருமாற்றம்! 3838410834 உடைமாற்றம் உருமாற்றம்! 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1096287

ஆமாம் நேசன்..............அதில் வரும் ஆசிரியர் ரொம்ப உயர்ந்தவர்............இப்படிப்பட்ட ஆசிரிய பெருமக்கள் நமக்கு இப்போ நிறைய தேவை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2014 11:07 pm

சூரியோதயத்திற்கு முன்னே விழிப்பு தட்டிவிட, தூக்கத்தை உதறி, மெதுவாக எழுந்த

முதல் வரியே எங்கள் கட்சிக்கு விரோதமாக உள்ளதே அக்கா!

சிறந்த கதைப் பகிர்வுக்கு நன்றி~ !



உடைமாற்றம் உருமாற்றம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Oct 15, 2014 1:16 pm

அற்புதமான கதை அம்மா...
நீங்கள் கூறிய கதையில் ஆசிரியர் விளக்கம் அளித்ததும் ரம்யா மாறிவிட்டாள்.
ஆனால் நிஜத்தில் எத்தனை விளக்கம் கொடுத்தாலும் மாறாத சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

உடைமாற்றம் உருமாற்றம்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 15, 2014 3:23 pm

நல்ல கதை பகிர்வுக்கு நன்றிமா புன்னகைபுன்னகைபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 16, 2014 6:57 pm

சிவா wrote:
சூரியோதயத்திற்கு முன்னே விழிப்பு தட்டிவிட, தூக்கத்தை உதறி, மெதுவாக எழுந்த

முதல் வரியே எங்கள் கட்சிக்கு விரோதமாக உள்ளதே அக்கா!

சிறந்த கதைப் பகிர்வுக்கு நன்றி~ !

அது டீச்சருக்கு சிவா..நமக்கில்லை குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்
.
.
.
இப்போதெலாம் நானும் உங்கள் கட்சி தான் சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 16, 2014 6:58 pm

நன்றி சரண்யா, நன்றி பானு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக