புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் 10  - Page 2 Poll_c10விண்டோஸ் 10  - Page 2 Poll_m10விண்டோஸ் 10  - Page 2 Poll_c10 
90 Posts - 71%
heezulia
விண்டோஸ் 10  - Page 2 Poll_c10விண்டோஸ் 10  - Page 2 Poll_m10விண்டோஸ் 10  - Page 2 Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் 10  - Page 2 Poll_c10விண்டோஸ் 10  - Page 2 Poll_m10விண்டோஸ் 10  - Page 2 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
விண்டோஸ் 10  - Page 2 Poll_c10விண்டோஸ் 10  - Page 2 Poll_m10விண்டோஸ் 10  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
விண்டோஸ் 10  - Page 2 Poll_c10விண்டோஸ் 10  - Page 2 Poll_m10விண்டோஸ் 10  - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விண்டோஸ் 10  - Page 2 Poll_c10விண்டோஸ் 10  - Page 2 Poll_m10விண்டோஸ் 10  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் 10  - Page 2 Poll_c10விண்டோஸ் 10  - Page 2 Poll_m10விண்டோஸ் 10  - Page 2 Poll_c10 
255 Posts - 75%
heezulia
விண்டோஸ் 10  - Page 2 Poll_c10விண்டோஸ் 10  - Page 2 Poll_m10விண்டோஸ் 10  - Page 2 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
விண்டோஸ் 10  - Page 2 Poll_c10விண்டோஸ் 10  - Page 2 Poll_m10விண்டோஸ் 10  - Page 2 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் 10  - Page 2 Poll_c10விண்டோஸ் 10  - Page 2 Poll_m10விண்டோஸ் 10  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
விண்டோஸ் 10  - Page 2 Poll_c10விண்டோஸ் 10  - Page 2 Poll_m10விண்டோஸ் 10  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
விண்டோஸ் 10  - Page 2 Poll_c10விண்டோஸ் 10  - Page 2 Poll_m10விண்டோஸ் 10  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விண்டோஸ் 10  - Page 2 Poll_c10விண்டோஸ் 10  - Page 2 Poll_m10விண்டோஸ் 10  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
விண்டோஸ் 10  - Page 2 Poll_c10விண்டோஸ் 10  - Page 2 Poll_m10விண்டோஸ் 10  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
விண்டோஸ் 10  - Page 2 Poll_c10விண்டோஸ் 10  - Page 2 Poll_m10விண்டோஸ் 10  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விண்டோஸ் 10  - Page 2 Poll_c10விண்டோஸ் 10  - Page 2 Poll_m10விண்டோஸ் 10  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 10


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2014 2:48 am

First topic message reminder :

விண்டோஸ் 10  - Page 2 E_1413102776ஒரு வழியாக, மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் அடுத்த விண்டோஸ் இயக்க முறைமையை அளித்து, நம்மை திடீர் மகிழ்ச்சியில் தள்ளியுள்ளது. பல மாதங்களாகவே, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாற்றாக, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றைத் தர வேண்டிய கட்டாயத்திற்கு மைக்ரோசாப்ட் தள்ளப்பட்டது. என்னதான், சின்ன சின்ன மாற்றங்களைத் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் அறிவித்தாலும், மக்கள் முழுமையாக அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். எனவே, தாங்கள் தொடர்ந்து விரும்பும் சில வசதிகளுடன், நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் புதிய விண்டோஸ் சிஸ்டம் கிடைக்கும் என எதிர்பார்த்தனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனமும் "Windows Threshold" என்ற குறியீட்டுப் பெயரில், வாடிக்கையாளர்களின் அனைத்து எதிர்ப்பார்ப்புகளையும் உள்ளடக்கிய புதிய விண்டோஸ் சிஸ்டத்தினை வடிவமைப்பதில் இறங்கியது. இது குறித்து பல புதிய தகவல்கள் கசிந்தன. அனைவரும் இது விண்டோஸ் 9 அல்லது வேறு ஒரு பெயரில் (WindowsTH ("Windows Threshold"), Windows X, Windows One) என வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், சென்ற மாத இறுதியில், மைக்ரோசாப்ட் தன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை ''விண்டோஸ் 10'' என்ற பெயருடன் வெளியிட்டது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு, அங்கு தரப்படும் வை பி இணைப்பைப் பயன்படுத்தத் தேவையான பாஸ்வேர்ட் “Windows2015” என அறிவிக்கப்பட்டது. அதனால், அனைவரும், வர இருக்கும் விண்டோஸ் சிஸ்டம் பெயர் விண்டோஸ் 2015 எனவே எண்ணி இருந்தனர். ஆனால், ''விண்டோஸ் 10'' என எதிர்பாராத பெயர் அறிவிக்கப்பட்டது. இதில், விண்டோஸ் 7 மற்றும் 8 சிஸ்டங்களில் உள்ள, வாடிக்கையாளர்களால் சிறந்தது என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்து வசதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இந்த அறிமுக விழா, இதுவரை, கடந்த 20 ஆண்டுகளில், விண்டோஸ் அறிமுகப்படுத்தப்பட்ட விழாக்களுக்கு மாறான முறையில் இருந்தது. இந்த விழாவில் நமக்குக் கிடைத்த புதிய தகவல்களை இங்கு பார்க்கலாம்.

ஏன் விண்டோஸ் 10?

இந்த புதிய வெளியீட்டிற்கு, இயற்கையான தொடர் எண்ணாக 9 தான் இருந்திருக்க வேண்டும். இதனை வடிவமைத்த குழுவின் தலைவரான டெர்ரி மையர்சன் பேசுகையில், இது கடந்த கால விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களின் தொடர்ச்சி அல்ல. முற்றிலும், முற்றிலும், புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். எனவே தான், தொடர் எண்ணாக இல்லாமல் விண்டோஸ் 10 என இது பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று அறிவித்தார். இது பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்கள் மட்டுமின்றி, இணையத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய அனைத்து சாதனங்களிலும் (வீட்டு பொருட்கள் உட்பட), பெர்சனல் கம்ப்யூட்டர், டேப்ளட் பி.சி., எக்ஸ் பாக்ஸ், க்ளவ்ட் இயக்க சாதனங்கள் என அனைத்திலும் இயங்கக் கூடியதாக இருக்கும். எனவே தான், முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களிலிருந்து வேறுபட்டதாக இதற்கு விண்டோஸ் 10 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஒரே மேடையும் வேறுபாடான அனுபவமும்

வெவ்வேறு தன்மையுள்ள, இயக்கம் கொண்ட அனைத்து சாதனங்களிலும் விண்டோஸ் 10 இயங்கினாலும், பயனாளர்களைப் பொறுத்த வரை வேறுபட்ட அனுபவத்தினையே இந்த சிஸ்டம் தரும். மொபைல் போன், டேப்ளட் பி.சி.க்கள் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கென வெவ்வேறு இடைமுகங்களை (Interfaces) இந்த சிஸ்டத்திற்கென, தனி குழு வடிவமைத்து வருகிறது. ஒரே ஸ்டோர் தரும் ஒரே கட்டமைப்பு இயக்கமாக இருந்தாலும், வாடிக்கையாளர்கள் தங்கள் சாதனங்களுக்கேற்ப அனுபவத்தினைப் பெறுவார்கள். இதுவரை மைக்ரோசாப்ட் தந்ததில் இதுவே, அனைத்தையும் அரவணைத்து இயங்கும் சிஸ்டமாக இருக்கும்.

நிறுவனங்களின் எதிர்பார்ப்பு

விண்டோஸ் 10 மூலம், தன் நிறுவன வாடிக்கையாளர்களை, குறிப்பாக பெரிய அளவில் தங்கள் நிறுவன நிர்வாக நடவடிக்கைகளில் விண்டோஸ் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மைக்ரோசாப்ட் நிறைவேற்றியுள்ளது. விண்டோஸ் 8 மூலம் பலத்த ஏமாற்றத்தைச் சந்தித்தவர்கள் இந்த நிறுவனங்கள் தான். இது மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அதிர்ச்சியையும், இழப்பையும் கொடுத்தது. எனவே தான், விண்டோஸ் 10 மூலம் இவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் மைக்ரோசாப்ட் அதிக முயற்சிகளை எடுத்து, புதிய சிஸ்டத்தினை வடிவமைத்துள்ளது. இந்த பெரிய நிறுவனங்களுக்கான தேவைகளை நான்கு பிரிவுகளில் நிறைவேற்றியுள்ளது. தங்கள் கம்ப்யூட்டர்களின் இயக்க முறைமையினை மேம்படுத்துகையில், நிறுவனங்கள், புதிய முறைமை தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு, நன்றாகப் பழகிய ஒன்றாகவே இருக்க வேண்டும்; ஏற்கனவே இயங்கிய முறைமைக்கு எந்த விதத்திலும் இணைவாக, இசைவாக இல்லாமல் இருக்கக் கூடாது. புதிய முறைமையினால், கூடுதல் திறன் கிடைக்க வேண்டும். உற்பத்தி திறன் அதிகரிக்க வேண்டும். மேலும், நிர்வாகத்தில் புதியதாக உருவாகி வரும் திறன்களை வளர்ப்பதாக இருக்க வேண்டும். மொபைல் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பி.சி.க்கள் வழியாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதில், புதிய சிஸ்டம் துணையாக இருக்க வேண்டும். புதிய சாதனங்களோடு, பழைய சர்வர்கள் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்களுடனும் இது இணைவாகச் செயல்பட வேண்டும்.

விண் 7 மற்றும் 8 மேம்பாடு

இந்த புதிய விண்டோஸ் 10 சிஸ்டம், விண்டோஸ் 7 மற்றும் 8 பயன்படுத்துவோர் எளிதாக அப்கிரேட் செய்திடும் வகையில் தரப்படுகிறது. இந்த இரண்டு சிஸ்டம் பயன்படுத்துவோர் என்ன என்ன எதிர்பார்க்கின்றனரோ, அவை அனைத்தையும் தருவதில் விண்டோஸ் 10 முயற்சி செய்துள்ளது. விண்டோஸ் 7 பயன்படுத்துவோர், ஸ்டார்ட் மெனு, டாஸ்க்பார் மற்றும் டெஸ்க்டாப் வசதிகளைப் பெறுவார்கள். விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்கள், அது தொடு உணர் திரையாகவோ, அது இல்லாமலோ இருந்தாலும், ஸ்டார்ட் ஸ்கிரீன் பெறுவார்கள். டச் இண்டர்பேஸ் மேம்படுத்தப்பட்டு, வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிதாக்கப்படும். விண்டோஸ் 10ல், உலகளாவிய தேடலை இணையம் வழி மேற்கொள்ள தேடல் கட்டம் தரப்படுகிறது.

வழக்கமாக புதிய சிஸ்டங்கள் உருவாக்கப்படுகையில் பில்ட் எண் (Build number) ஒன்று அதற்கு வழங்கப்படும். விண் 10 சிஸ்டம் காட்டப்படுகையில் அது 9841 ஆக இருந்தது. முழுமையாக வெளிவரும்போது இதுவாக இருக்கலாம்; அல்லது வேறாக இருக்கலாம்.

சில சிறிய புதிய வசதிகள்

அப்ளிகேஷன்களை அப்படியே தள்ளி வைத்திட Snap என்னும் டூல் தரப்பட்டது. இது மேம்படுத்தப்பட்டு, Snap Assist UI என்ற பெயரில், அப்ளிகேஷன்களை அடுத்த திரைக்குத் தள்ளிவைக்கும் எளிய வேலையை மேற்கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ளது. கட்டளைப் புள்ளி (command prompt) வழியேயும், நாம் இதுவரை பரவலாகப் பயன்படுத்தும் ஷிப்ட் கட்டளைகள் மற்றும் CTRL + C போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

கைவிடப்படும் டூல்கள்

Charms டூல் நீக்கப்பட்டு, அதன் இடத்தில் புதிய யூசர் இண்டர்பேஸ் வழங்கப்பட்டுள்ளது. இதே போல Switcher டூல் இல்லாமல் போனாலும், விண் 8ல், இடது புறத்திலிருந்து ஸ்வைப் செய்கையில், ALT + TAB க்கான செயல்பாட்டினைப் பெறலாம்.

புதிய டூல்

விண்டோஸ் 8ல், மெட்ரோ மற்றும் வழக்கமான டெஸ்க்டாப் இடைமுகத்திற்கும் நம்மால் எளிதாக மாற்றிக் கொள்ள முடிந்தது. இதனை Continuum என்ற டூல் மூலம், அனைத்து வகை சாதனங்களிலும் இந்த மாற்றத்தினை எளிதாக மேற்கொள்ளும் வகையில் மைக்ரோசாப்ட் தந்துள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப்

ஒரே நேரத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப்பினை அமைத்து இயக்க, விண்டோஸ் 10 சிஸ்டம் வழி தருகிறது. ஒவ்வொரு டெஸ்க்டாப்பிலும், நமக்குத் தேவைப்படும் பல அப்ளிகேஷன் புரோகிராம்களை, ஒரே நேரத்தில் இயக்கலாம். இதனால் வேலை விரைவில் முடியும்.

விண்டோஸ் 10 சிஸ்டத்தின் தொழில் நுட்ப முன் சோதனைக்கான பதிப்பினை மைக்ரோசாப்ட் பொதுமக்களுக்காக வெளியிட்டுள்ளது. இதனை http://preview.windows.com/ என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். பெற்று, இன்ஸ்டால் செய்து, பயன்படுத்திப் பார்க்கலாம். பன்னாடுகளில் இருந்து கிடைக்கும், பின்னூட்டங்களின் அடிப்படையில், விண்டோஸ் 10 இயக்க முறைமை சீர் செய்யப்பட்டு, பொதுமக்களுக்குக் கிடைக்கும்.

அநேகமாக, அடுத்த ஆண்டின் நடுவில், இது பொதுமக்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விண்டோஸ் 8 பயன்படுத்துவோருக்கு, விண்டோஸ் 10 இலவசமாகக் கிடைக்குமா என்பதற்கான விடையை, மைக்ரோசாப்ட் நிறுவன நிர்வாகிகள் எவரும் கூறவில்லை. ஆனால், விண்டோஸ் வாடிக்கையாளர்கள் இதனை எதிர்பார்க்கின்றனர். ஆப்பிள் நிறுவனம் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இலவசமாகத் தந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதே போல, விண்டோஸ் 10 க்கான விலை குறித்தும், இன்னும் எந்த அறிவிப்பும் வரவில்லை.



விண்டோஸ் 10  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

avatar
gilmakvp
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 20/12/2008

Postgilmakvp Mon Nov 24, 2014 10:42 pm

விண்டோஸ் 8 அக்டிவேட் செய்வது எப்படி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 25, 2014 10:52 am

gilmakvp wrote:விண்டோஸ் 8 அக்டிவேட் செய்வது எப்படி
உங்கள் கணினியில் internet இணைப்பு கொடுங்கள் தாமாக activate ஆகிவிடும்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக