புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படுகை மண் மாஃபியாக்கள்! Poll_c10படுகை மண் மாஃபியாக்கள்! Poll_m10படுகை மண் மாஃபியாக்கள்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
படுகை மண் மாஃபியாக்கள்! Poll_c10படுகை மண் மாஃபியாக்கள்! Poll_m10படுகை மண் மாஃபியாக்கள்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
படுகை மண் மாஃபியாக்கள்! Poll_c10படுகை மண் மாஃபியாக்கள்! Poll_m10படுகை மண் மாஃபியாக்கள்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
படுகை மண் மாஃபியாக்கள்! Poll_c10படுகை மண் மாஃபியாக்கள்! Poll_m10படுகை மண் மாஃபியாக்கள்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
படுகை மண் மாஃபியாக்கள்! Poll_c10படுகை மண் மாஃபியாக்கள்! Poll_m10படுகை மண் மாஃபியாக்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படுகை மண் மாஃபியாக்கள்! Poll_c10படுகை மண் மாஃபியாக்கள்! Poll_m10படுகை மண் மாஃபியாக்கள்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
படுகை மண் மாஃபியாக்கள்! Poll_c10படுகை மண் மாஃபியாக்கள்! Poll_m10படுகை மண் மாஃபியாக்கள்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
படுகை மண் மாஃபியாக்கள்! Poll_c10படுகை மண் மாஃபியாக்கள்! Poll_m10படுகை மண் மாஃபியாக்கள்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
படுகை மண் மாஃபியாக்கள்! Poll_c10படுகை மண் மாஃபியாக்கள்! Poll_m10படுகை மண் மாஃபியாக்கள்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
படுகை மண் மாஃபியாக்கள்! Poll_c10படுகை மண் மாஃபியாக்கள்! Poll_m10படுகை மண் மாஃபியாக்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படுகை மண் மாஃபியாக்கள்!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 7:29 pm

தாதுமணல், ஆற்றுமணல், கிராணைட் கொள்ளைகள் பற்றிய பரபரப்பான தகவல்கள், சமீபகாலமா சுடச்சுட வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதுவரையிலும் வெளிச்சத்திற்கு வராமலே இருள் சூழ்ந்த புகைக்குள்ளேயே புதைந்து கிடக்கிறது படுகை மண் கொள்ளை.

இதன் மூலம், மிக குறுகிய காலத்திலேயே, கோடிக்கணக்கில் பணம் பார்க்கிறார்கள், படுகை மண் மாஃபியாக்கள். இது முழுக்க முழுக்க நூறு சதவீதம் சட்டவிரோதமாகவே நடைபெறுகிறது என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம். இது சட்டத்திற்கு புறம்பான செயல் மட்டுமல்ல... இயற்கைக்கும் எதிரானது. இதனால் ஏற்படும் பாதகங்களின் பட்டியல், படு நீளமானது. நம் நெஞ்சில் பதைபதைப்பை உண்டாக்கக்கூடியது.
படுகை மண் மாஃபியாக்கள்! Bricks%201
அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என நாளுக்கு நாள் ஏராளமான கட்டிடங்கள் பெருகிக் கொண்டே வரும் இக்கால கட்டத்தில்...செங்கல் உற்பத்தி தொழிலானது, மிக பெரும் உயரத்தில் உள்ளது. உத்தரவாதமான, உறுதியான லாபத்தை எக்கச்சக்கமாக இது அள்ளிக் கொடுப்பதால், பெரும் பண முதலைகள் ஆர்வத்தோடு இத்தொழிலில் படையெடுக்கிறார்கள். செங்கல் தயாரிக்க...முழுமையான, முதன்மையான மூலப்பொருள் மண். இதை குறுக்கு வழியில், அளவுக்கு அதிகமாக அபகரித்து ஆதாயம்
அடைந்து வருகிறார்கள், செங்கல் சூளை அதிபர்கள். ஆற்றுப்படுகைகளில் கிடைக்கக்கூடிய மண்ணில் செய்யப்படும் செங்கல், தரமானதாக இருப்பதால், இதற்கு சந்தையில் விற்பனை வாய்ப்புகள் அதிகம். மற்ற வகையான மண்ணில் செய்யப்படும் செங்கல்லை விட, இதற்கு விலையும் கூடுதலாக கிடைக்கும்.
படுகை மண் மாஃபியாக்கள்! Bricks%205
இதனால்தான் ஆற்றுப்படுகையை குறிபார்த்து சூறையாடி வருகிறார்கள், செங்கல் சூளை அதிபர்கள். காவிரி, குடமுருட்டி, வீரசோழன், அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, திருமலைராஜன், சோழ சூடாமணி உள்ளிட்ட ஆறுகளின் ஓரங்களில் ஆயிரக்கணக்கான செங்கல் சூளைகள் அணி வகுத்து நிற்கின்றன. பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, இந்து சமய அறநிலைய துறைகளுக்கு சொந்தமான படுகை புறம்போக்கு பகுதிகளை சட்டவிரோதமாக வளைத்து, இங்குள்ள மரங்களை எல்லாம் அழித்து, 10, 15 அடி ஆழத்திற்கு நீண்ட தூரம் வரை மண்ணை வெட்டி எடுத்து சூளைகளை அமைக்கிறார்கள்.
படுகை மண் மாஃபியாக்கள்! Bricks%203
ஆனாலும் இதனை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. ஆற்றுப்படுகைகளை, பள்ளத்தாக்கு போல் மாற்றினால், ஆற்றின் கரைகள் பலம் இழந்து, உடைப்பெடுக்கும். செங்கல் சூளைக்கு அருகில் உள்ள விளைநிலங்களில் மழை காலங்களில் மண் அரிமானம் ஏற்பட்டு சரிந்து போகும். இதற்கு சமீபகால உதாரணம், கும்பகோணம் அருகே உள்ள ஆதனூர். இங்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, செங்கல் சூளைக்கு அருகில் இருந்த விளைநிலங்கள் சரிந்து போனது.

''விளைநிலங்களின் மேல்மட்டத்தில் சுமார் 2-3 உயரத்திற்குதான் சத்துக்கள் நிறைந்திருக்கும். இத்தகைய மேல் மண், மழைநீரில் அடித்து சென்றுவிட்டால், அந்த விளைநிலம், வெறும் மலடாக மாறிப்போகும்" என்கிறார்கள் விவசாய வல்லுநர்கள்.. இதுமட்டுமா? செங்கல் சூளைகளால், பல அடி ஆழத்திற்கு படுகை மண் பறிபோனதால், தங்கள் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் பல ஆழத்திற்கு கீழே போய்விட்டது என்கிறார்கள், தஞ்சை மாவட்டம் திருவையாறை சுற்றியுள்ள திருப்பந்துருத்தி, கண்டியூர், திருவலாம்பொழில், வளப்பக்குடி, நடுக்காவேரி, திருச்சோற்றுதுறை, வீரசிங்கம்பேட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்து பொதுமக்கள். இந்த கிராமங்கள் ஒவ்வொன்றிலும் 10-15 செங்கல் சூளைகள் உள்ளன. நிலத்தடிநீரை, மேல்மட்ட மண்தான் பாதுகாக்கிறது. இதனை வெட்டி எடுப்பதால், அடியில் மணலில் சேகரமாகியிருக்கும் மழைநீர் ஆவியாகிவிடுகிறது.

விவசாயிகள் தங்களது சொந்த நிலத்தில் உள்ள மண்ணை, அரை ஆழத்திற்கு வெட்டி எடுத்து, தங்களுடைய இன்னொரு வயலில் போடுவதாக இருந்தால் கூட, கனிம மற்றும் சுரங்கத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டியுள்ளது. அதிகபட்சம் 3 அடி ஆழத்திற்குதான் மண்ணை வெட்டி எடுக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் செங்கல் சூளை அதிபர்கள் தங்கள் விருப்பம்போல் பத்து பதினைந்து ஆழத்திற்கு படுகை மண்ணை வெட்டி எடுக்கிறார்கள். அதுவும் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் பட்டப்பகலில் வெளிப்படையாக இந்த கொள்ளை நடக்கிறது, என கொந்தளிக்கிறார்கள் இப்பகுதி மக்கள்.



புறம்போக்கு நிலம் மட்டுமல்ல... படுகை கிராமங்களில் உள்ள வளமான விளைநிலங்களையும் கூட சூறையாடுகிறார்கள், செங்கல் சூளை அதிபர்கள். ஒரு லட்சம் கல்லுக்கு, 40 ஆயிரம் ரூபாய் வீதம் பணம் கொடுத்து, விவசாய நிலங்களில் உள்ள மண்ணை எடுத்து, அங்கேயே சூளை அமைத்து, செங்கல் உற்பத்தி செய்து 5 லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் பார்த்துவிடுகிறார்கள். சூளை அமைக்கப்பட்ட நிலம் அடுத்த சில ஆண்டுகளுக்கு பயனற்று கிடைக்கும். அந்த நிலத்தின் மற்ற பகுதிகளில் உள்ள வளமான மண்ணை கொண்டு பள்ளமான பகுதிகளை மூடிவிடுவதால், ஒட்டுமொத்த நிலமும் வளமிழந்து போகிறது.

செங்கல் சூளைக்காக அமைக்கப்பட்ட பள்ளங்களால் தங்கள் பகுதிகளில் பாசனம் பாதிக்கப்பட்டதாக சொல்கிறார்கள், வலங்கைமான், பாபுராஜபுரம், திருப்புறம்பியம், இன்னாம்பூர், அண்டக்குடி, அலவந்திபுரம், உமையால்புரம் உள்ளீட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள். மழைநீர் எல்லா வயல்களிலும் பரவலாக, நிற்காமல், செங்கல் சூளைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை நோக்கி ஓடி விடுகிறது.

ஆற்றுநீரை எங்கள் வயல்களுக்கு பாய்ச்சும்போது, இதே நிலைதான் ஏற்படுகிறது. சூளை அமைக்கப்படும் பகுதிகளில் உள்ள மரங்களை வெட்டி விடுவதாலும், சூளைக்கு அதிகளவில் தீ மூட்டுவதாலும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.’’ என ஆதங்கப்படுகிறார்கள். தமிழக அரசு உடனடியாக இப்பிரசனையில் கவனம் செலுத்தி, காவிரி படுகையை பாதுகாக்க வேண்டும்.

-கு. ராமகிருஷ்ணன்
படங்கள்: க. சதீஸ்குமார்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக