புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_c10எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_m10எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_c10 
48 Posts - 51%
heezulia
எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_c10எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_m10எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_c10எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_m10எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_c10எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_m10எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_c10எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_m10எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_c10எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_m10எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_c10 
48 Posts - 51%
heezulia
எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_c10எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_m10எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_c10எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_m10எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_c10எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_m10எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_c10எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_m10எதையுமே வாங்கமாட்டேன்...! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதையுமே வாங்கமாட்டேன்...!


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 7:17 pm

ஒரேநாளில் பில்லியன் கணக்கில் வணிகம் நடத்தி வருகின்றன இணைய சந்தைகள். ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டு சலுகைகளை அள்ளி அள்ளி தந்து கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் நமக்குத்தானே லாபம் என நினைத்தால், அதுதான் இல்லை. குளிர்காய்வது வழக்கம் போல வணிக நிறுவனங்களே..!

ஆளாளுக்கு போட்டி போட்டிக்கொண்டு தீபாவளிக்கு பர்சேஸ் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், உலகில் 65 நாடுகளுக்கும் மேலாக இந்த நுகர்வோர் கலாசாரத்திற்கு எதிராக 'Buy Nothing Day' என்னும் ஒரு நாளை கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக கொண்டாடி வருகின்றன. இதன் நோக்கம் ஒன்றே ஒன்றுதான், அன்று ஒரு நாள் மட்டும் உங்கள் ஷாப்பிங் கனவை மூட்டை கட்டுங்கள் என்பதுதான் அது..! வருடந்தோறும் நவம்பரின் கடைசி வெள்ளிக்கிழமை அமெரிக்கா சார்ந்த பெரும்பாலான நாடுகளிலும், கடைசி சனிக்கிழமைகளில் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த நோ ஷாப்பிங் டே கொண்டாடப்படுகிறது.

1992ல் கனடாவில் இருந்து வெளிவரும் அட்பஸ்டர் என்னும் நாளிதழ் தனது வாசகர்களிடம் அதிகரிக்கும் நுகர்வோர் கலாசாரம் பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த அமெரிக்காவின் ரங்கநாதன் தெருவான 'வால்ஸ்ட்ரீட்'ஐ ஆக்கிரமிக்க அழைப்பு விடுத்தது. மக்களும் அங்கு குவியவே அது வணிகர்களுக்கு கருப்பு வெள்ளியாக அன்றைய நாள் மாறியது. அடுத்த ஆண்டு முதல் போராட்டத்தை அமைதியாக நடத்த எண்ணி தொடங்கியதுதான் இந்த தினம்.

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு டிசம்பர் என்றாலே கொண்டாட்டம்தான். கிறிஸ்துமஸ் கேளிக்கைகள், கொண்டாட்டங்கள் என நம்மூர் தீபாவளி போன்று பரபரப்பு இருக்கும். அப்போதுதான் இங்கு தள்ளுபடி சமாச்சாரம் போல அங்கும் கடைகள் போட்டி போட்டு வாடிக்கையாளர்களை இழுக்கும். அந்த சமயத்தில் மக்கள் தேவையற்ற பொருளாக இருந்தாலும் கூட, விலை குறைத்து காண்பிக்கும் உத்தியினாலும், ஆசையிலும் வாங்கி குவிப்பார்கள். அதை தடுக்கவே இந்த நவம்பர் கடைசி ஏற்பாடு. 'shop less, live more' என்பதுதான் இந்த இயக்கத்தின் நோக்கமே.

மேற்கத்திய நாடுகளில் மக்களுக்கு தேவைப்படும் பொருட்கள் 20 சதவிகிதம்தான். ஆனால் வாங்கி குவிப்பதோ 80% .இந்த தேவையில்லாத பொருள் குவிப்பின் விளைவு என்ன? நாம் வாங்கும் பொருட்கள் அனைத்துமே இயற்கையின் கொடை. ஒவ்வொன்றுமே இயற்கை வளம். அதை நாம் பணமாக கொடுத்து ஈடு செய்கிறோமே தவிர, மாறாக அந்த வளத்தை புதுப்பிப்பது இல்லை. நாம் பொருட்களை வாங்க வாங்க தேவை அதிகரிக்கும். தேவை அதிகமானால் இயற்கை இன்னும் சுரண்டப்படும். பூமியின் வளம் குறையும்.

ஒரு வாரத்திற்கான மொத்த உணவையும், ஒரே நாள் 'பிரேக் பாஸ்ட்'டில் முடிப்பது போன்றுதான், நமது மூன்று எதிர்கால தலைமுறையினர் அனுபவிக்க வேண்டியதை நாம் ஒரு தலைமுறையினரே எடுத்து கொள்கிறோம். அதுவும் தேவையினால் அல்ல, ஆசையினால். இந்த அதிநுகர்வு கலாச்சாரம் உலகமயமாதலுக்கு பின் இன்னும் தலை விரித்தாடுகின்றது. இரவு ரிலீஸ் ஆன ஐபோனை அடுத்த நாளே நாம் இங்கு பெற முடிகிறது. இந்த வசதி எளிமையாக இருப்பது, வாங்குபவர் எளிமையாக பயன்படுத்த மட்டுமல்ல, இன்று இரவு ஐபோன் வாங்க முடிவெடுத்து நாளை காலை முடிவை மாற்றி விட்டால்? அல்லது வேறு ஒரு மாடல் வாங்கி விட்டால்? இப்படி உங்களை யோசிக்கவே விடாமல் வலைக்குள் அமிழ்த்தவும் இந்த முறையே பயன்படுகிறது. இந்த தினத்தில் என்ன செய்கிறார்கள்?
எதையுமே வாங்கமாட்டேன்...! Buy%20nothing%20day1
அன்று ஒரு நாள் இந்த தினம் கொண்டாடும் நாடுகளின் பெரும்பாலான மீடியாக்கள், வணிக விளம்பரங்களை வெளியிடாது. மக்கள் இணையம் மூலம் திட்டமிட்டு ஆங்காங்கே கூட்டமாக ஷாப்பிங் மால்களில் 'buy nothing day' போஸ்டர்களோடு உள்ளே நுழைவார்கள். அமைதியாக அனைவரின் கண்ணில் படும்படி அமர்ந்துவிட்டு ஷாப்பிங் கார்டுகளை எடுத்து கொண்டு கடை முழுக்க எதுவும் வாங்காமல் சுற்றி வந்து காலி கார்டுடன் பில் போட செல்வார்கள். ஏதேனும் நிறுவன தள்ளுபடி போஸ்டர்கள் சிக்கினால் அது டார் டார். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என அத்தனை ஷாப்பிங் சமாச்சாரமும் வெட்டி, கிழித்து குப்பையில் வீசப்படும். எதுவுமே வாங்க கூடாதெனில் அன்றாட தேவைகளுக்கு என்ன செய்வது? கார் ஓட்டினால்தானே டீசல் வேண்டும். அன்று மட்டும் சைக்கிள் உலா. டி.வி., கணினி, இணையம், செல்போன் என அனைத்தையும் தூங்க வைத்து இந்த தினத்தை கொண்டாடினார்கள் சென்ற வருடம்.

இது, பெரும்முதலாளிகளுக்கு வேண்டுமானால் சரியான எதிர்ப்பாக இருக்கும். சிறிய அளவில் பெட்டிக்கடை வைத்திருக்கும் அண்ணாச்சிகளை என்ன செய்ய? இது அவர்களுக்கு எதிரானது கிடையாது. நீங்கள் உள்ளூர் கடையில் பொருள் வாங்கினால் அதன் நியாய விலை தவிர மீத லாபம் அந்த நாட்டு அரசுக்கும், அந்த கடைக்காரருக்கும் செல்கிறது. அது நாட்டிற்கும் சரி, அந்த நாட்டு குடிமக்களுக்கும் நல்லது. ஆனால் எங்கோ ஒரு மூலையில் இருந்து வணிகம் என்ற பெயரில் நம்மீது திணிக்கப்படும் பொருட்களை நாம் ஏன் வாங்க வேண்டும்? என சுதேசி கொள்கையும் இதன் நோக்கம்தான். ஆற்றலை அழிக்கவோ, ஆக்கவோ முடியாது என்ற ஆற்றல் அழிவின்மை விதி போலதான் இதுவும். உங்கள் உழைப்பை பணமாக மாற்றுகிறீர்கள். அந்த உழைப்பை உங்கள் தேவைகளுக்கு தருகிறீர்கள் என்றால் அது சரி. அதை திருடினால், தவறு நம் மீதே. வாழ்க்கை முழுதும் நீங்கள் இதை சேமித்தால் அந்த உழைப்பை நீங்கள் வேறு வழிகளில் பயன்படுத்த முடியுமல்லவா? அந்த ஒரு நாள் அவர்களுக்கு எந்தவொரு பெருத்த நஷ்டத்தையும் தர போவதில்லை. ஆனால் அன்று மட்டுமாவது உங்கள் உழைப்பை நீங்கள் காப்பாற்றிக் கொள்கிறீர்கள்.

முதலில் ஆங்காங்கே நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிகள் தற்போது சூடாகி நாடு விட்டு நாடாக பரவி கொண்டு இருக்கிறது. இந்த வருடமும் நவம்பர் 28, 29 ஆகிய தினங்களை நோ ஷாப்பிங் தினங்களாகக் கொண்டாட எல்லா ஏற்பாடும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. நம்மூரிலும் தீபாவளி கொண்டாட்டங்கள், ஷாப்பிங்குகள் ஆரம்பித்து விட்டது. நீங்கள் சுதாரிக்கும் முன்பே இணையம், நிஜ உலகம் என உங்களை சுற்றி வலை பின்னப்பட்டு விட்டது. நீங்கள் எந்தவொரு பொருளை வாங்க நினைக்கும் முன்பு உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.. ''இது இன்றி நமது பண்டிகை அமைய முடியாதா?'' என.

- ஞா.சுதாகர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 13, 2014 7:29 pm

சூப்பர் பதிவு நேசன்...............நானும் கேள்விப்பட்டிருக்கேன்.............no slat day , NO shopping day ..........புன்னகை எதையுமே வாங்கமாட்டேன்...! 3838410834
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Oct 13, 2014 10:35 pm

எதையுமே வாங்கமாட்டேன்...! 103459460 எதையுமே வாங்கமாட்டேன்...! 3838410834 எதையுமே வாங்கமாட்டேன்...! 1571444738



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 14, 2014 1:30 pm

கேள்வி பட்டது இல்லை .
இதனால் அரசுக்கு விற்பனை வரி மூலம் வரவேண்டிய ,வருமானம் வராதே .
பொதுவாக வியாபாரிகள் கடைஅடப்பு செய்தாலே கோடிக்கணக்கில்
அரசுக்கு வருமானம் போகிறதே .
சரியான முறையா/ வரவேற்கதக்கதா --சர்ச்சைக்கு உரிய விஷயம் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 1:42 pm

T.N.Balasubramanian wrote:கேள்வி பட்டது இல்லை .
இதனால் அரசுக்கு விற்பனை வரி மூலம் வரவேண்டிய ,வருமானம் வராதே .
பொதுவாக வியாபாரிகள் கடைஅடப்பு செய்தாலே கோடிக்கணக்கில்
அரசுக்கு வருமானம் போகிறதே .
சரியான முறையா/ வரவேற்கதக்கதா --சர்ச்சைக்கு உரிய விஷயம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1096250

எனக்கு வேறு ஒரு சந்தேகம் வந்தது ஐயா, அன்று ஒருநாள் எதுவும் வாங்காமல் இருந்து விட்டு மறுநாள் வாங்கினால் போகிறது.............எப்படி கடை க்கு விடுமுறை இருக்கும் நாளில் வாங்காமல் இருக்கோமோ அப்படித்தான் இதுவும்............என்ன வித்தியாசம் என்று எனக்கு புரியலை............. புரிந்தவர்கள் விளக்குங்களேன் .........ப்ளீஸ் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 14, 2014 4:45 pm

நான் already வாரத்திற்கு 1 நாள் தான் shopping பண்ணுறேன் புன்னகை

So ... 52 X 6 = 312 நாட்கள் எனக்கு No Shopping Day தான்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 14, 2014 4:49 pm

பணம் உள்ளவர்களுக்குத்தானே தினமும் ஷாப்பிங் டே, நமக்கு மாதம் ஓரிரு நாள் தான் ஷாப்பிங் டே! அதுவும் என்ன ஷாப்பிங்? சிரி சிரி சிரி



எதையுமே வாங்கமாட்டேன்...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Tue Oct 14, 2014 4:56 pm

என்னது நோ ஷாப்பிங் டே வா ?
நான் கேள்விப்பட்டதே இல்லையே ..... அநியாயம் அநியாயம் அநியாயம்



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

எதையுமே வாங்கமாட்டேன்...! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Oct 14, 2014 5:27 pm

சிவா wrote:பணம் உள்ளவர்களுக்குத்தானே தினமும் ஷாப்பிங் டே, நமக்கு மாதம் ஓரிரு நாள் தான் ஷாப்பிங் டே! அதுவும் என்ன ஷாப்பிங்? சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1096314

என்ன ஷாப்பிங்? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல அநியாயம் அநியாயம் அநியாயம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 14, 2014 5:30 pm

எதையுமே வாங்கமாட்டேன்...! 3838410834 எதையுமே வாங்கமாட்டேன்...! 103459460



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக