புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லஞ்சம்... வஞ்சம்!
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
லஞ்சம்... வஞ்சம்!
வரலொட்டி ரெங்கசாமி
சா ரதா தனது ஆடிட் டரின் முன்னால் கையைப் பிசைந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஆடிட்டரும், அவளது தந்தையின் ஆப்த நண்பருமான வாசுதேவன் பாசம் தொனிக்கப் பேசினார்...
‘‘சொல்லும்மா, என்ன பிரச்னை?’’
‘‘அங்கிள்! யாரோ ஜெய்கிஷன்னு ஒரு இன்கம்டாக்ஸ் ஆபீஸர் நேத்து என்னை செல்லுல கூப்பிட்டார். ஏறக்குறைய அஞ்சு லட்ச ரூபாய் பெறுமானமுள்ள நகைகளை லஞ்சமா கேக்கறாரு அந்தாளு. அப்படிக் கொடுக்கலேன்னா பயங்கரமான விளைவுகளைச் சந்திக்கவேண்டி வரும்னு மிரட்டினாரு. கூடிய சீக்கிரம் கடையை ரெய்டு பண்ணு வேன்னு கோடி காமிச்சாரு. யோசிக்க எனக்கு ஒரு நாள்டயம் கொடுங்கன்னு சொல்லிட்டு, உங்க கிட்ட வந்திருக்கேன்.’’
‘‘சாரதா, அந்தாளு எங்கேயோ வடக்குலேர்ந்து டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருக்கான். சரியான லஞ்ச நாதன்னு கேள்வி.’’
‘‘அங்கிள்! எனக்குச் சில விஷயங்கள் தெரிஞ்சாகணும். அப்பா மறைவுக்குப் பிறகு, இந்த ஆறு மாசமாதான் நான் இந்தக் கடையை நிர்வாகம் பண்ணிட்டு வரேன். எங்க கடையோட கணக்கை நீங்கதான் பல வருஷங்களா பார்த்துட்டு வரீங்க. உங்களுக்குத்தான் தெரியும். சொல்லுங்க... கணக்கெல்லாம் சுத்தமா இருக்கா, இல்லே உள்ளே ஏதாவது மூடி மறைச்சு...’’
‘‘சாரதா, உங்கப்பாவைப் பத்தி என்ன நினைச்சே? அப்பழுக்கு இல்லாதவர். கடையோட கணக்கை கண்ணாடி மாதிரி பளிச்சுனு வெச்சுட்டுப் போயிருக்கார். கணக்குல வராத பணம்னு ஒத்த ரூபாய்கூடக் கிடையாது.’’
‘‘எனக்கு அது போதும் அங்கிள்! அந்த ஜெய்கிஷனுக்கு நான் யாருன்னு காட்டறேன்!’’
ஒரு திங்கட்கிழமை காலையில், பஜாரின் மத்தியில் இருந்த சாரதாவின் நகைக் கடையை ஆணும் பெண்ணுமாக வருமான வரித்துறை அதிகாரிகள் முற்றுகையிட்டனர். ஜெய்கிஷன்தான் ரெய்டுக்குத் தலைமை.
ஒவ்வொருவரும் புகைப்படம் ஒட்டிய தங்கள் அடையாள அட்டையைசாரதா விடம் காட்டிவிட்டுத் தங்கள் வேலையை ஆரம்பித்தார்கள். ஒரு அதிகாரி விற்பனை பில்களைப் பரிசோதிக்க ஆரம்பித்தார். மற்றொருவர் ஒவ்வொரு நகையாகக் காட்டி, அது ஸ்டாக் ரெஜிஸ்டரில் எங்கு பதிவாகி இருக்கிறது என்று கேட்டுக்கொண்டு இருந்தார். இருவர் செலவுக் கணக்கு வவுச்சர்களைச் சரிபார்த்துக்கொண்டு இருந்தார்கள். தலைமை அதிகாரி ஜெய்கிஷன், சாரதாவிடம் விசாரணை நடத்திக் கொண்டு இருந்தான்.
இரவு பதினோரு மணி வரை முழு வீச்சில் நடந்த சோதனையில் ஒன்றும் தேறவில்லை.
‘‘ஓ.கே! இன்னும் கால் மணிநேரம்தான் டயம்!’’- சாரதாவை ஓரக்கண்ணால் பார்த்த படியே தனது அதிகாரிகளுக்கு உரக்கக் கட்டளையிட்டான் ஜெய்கிஷன்.
இதுவரை நூற்றுக்கணக்கில் ரெய்டு கள் நடத்தியிருந்த அவனுக்கு, ரெய்டு செய்யப்படுபவர்களின் சைக்காலஜி அத்துப்படி. ரெய்டு முடியப் போகிறது என்று தெரிந்தால், தன்னிச்சையாக அவர்கள் பார்வை, விலையுயர்ந்த பொருட்களை ஒளித்து வைத்திருக்கும் இடத்தின் மீது விழும். அவன் எதிர்பார்த்தது போலவே, சாரதா கடை நடுவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனது பார்வையை ஓடவிட்டாள். இதற்காகவே காத்திருந்த ஜெய்கிஷன் விருட் டென எழுந்து, அந்த இடத்தை நோக்கி ஓடி னான். அங்கு இருந்த கிரானைட் கற்கள் சமீபத்தில் அப்புறப்படுத்தப்பட்டு, மீண்டும் பொருத்தப்பட்டு இருப்பது தெரிந்தது. ஜெய்கிஷனின் கண்கள் வெற்றிக் களிப்பில் மின்னின.
சில நிமிடங்களில், அதிகாரிகள் அந்தக் கற்களை லாகவமாகப் பேர்த்து எடுக்க, உள்ளே வேலைப்பாடு அமைந்த மரத்தாலான ஒரு சிறிய நகைப்பெட்டி! அதைப் பத்திரமாக வெளியே எடுத்துத் திறந்து பார்த்தபோது, கண்ணைப் பறிக்கும் பளபளப்பில் பாதி கோழிமுட்டை அளவில் ஒரு வைரக்கல்!
சாரதா இப்போது நடுக்கத்துடன் தலையைக் குனிந்துகொண்டு இருக்க, ஜெய்கிஷன் கொக்கரித்துக்கொண்டு இருந்தான்...
‘‘மேடம், எனக்கு நகையைப் பத்தி அதிகம் தெரியாதுன்னாலும், இது மிக விலை உயர்ந்த வைரம் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். இதை உங்கள் ஸ்டாக் ரெஜிஸ்டரில் எங்கே பதிவு செய்திருக்கிறீர்கள் என்று காட்ட முடியுமா? இதை யாரிடம், எவ்வளவு விலை கொடுத்து வாங்கினீர்கள் என்று விவரம் சொல்ல முடியுமா? வாங்கியதற்கான பில்லைக் காண்பிக்க முடியுமா?’’
சாரதா தொண்டையைக் கனைத்துக் கொண்டு, ஈனஸ்வரத்தில் பேசத் தொடங் கினாள்... ‘‘சார், ப்ளீஸ்... இதுக்கும் கடைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது முழுக்க முழுக்க என்னோட பெர்சனல் மேட்டர்.’’
‘‘புரியலை?’’
‘‘அதாவது, இதை எனக்கு கிஃப்டா கொடுத்தது என்னோட பாய் ஃப்ரெண்ட்!’’
இப்போது ஜெய்கிஷனின் குரலில் எகத் தாளமும் சேர்ந்து ஒலித்தது. ‘‘நல்லதாப் போச்சு! அவரோட பேரு, அட்ரஸ், போன் நம்பர் கொடுங்க. அவரை உங்க முன்னாலேயே விசாரணை பண்றோம். சுந்தர், மேடம் சொல்றதை நோட் பண்ணிக்குங்க.’’
‘‘இல்ல சார், அதுல வேற ஒரு பிரச்னை இருக்கு’’ என்று பதறினாள் சாரதா. ‘‘எங்க காதல் அவரோட அப்பாவுக்குத் தெரிஞ்சா வம்பாயிடும். அதனால தயவுசெய்து, இந்த மேட்டரை இதோட விட்ருங்க. அந்தக் கல்லை என்கிட்ட கொடுத்துருங்க, ப்ளீஸ்!’’
ஜெய்கிஷன் அசைந்து கொடுக்கவில்லை. சாரதாவைப் பார்த்துக் கம்பீரமாக முழங் கினான்... ‘‘வருமான வரிச் சட்டத்தின் கீழ் எனக்கிருக்கும் அதிகாரத்தைப் பிரயோகித்து, இந்த விலைமதிப்புள்ள வைரக்கல்லை இந்திய அரசாங்கத்தின் சார்பில் நான் கையகப்படுத்துகிறேன். உங்களுக்கு ஆட்சேபனை ஏதாவது இருந்தால் சொல்லலாம்!’’
சாரதாவுக்குப் பேச்சே வரவில்லை.
‘‘ஓ.கே. சுந்தர், இந்தக் கல்லைஎடை போட்டு ஒரு ரசீது தயார் பண்ணுங்க.’’
‘‘சார்... ட்ரேட் விட்னஸ் வேணுமே? அதாவது, இதே தொழில்ல இருக்கிற சில சாட்சிகள் முன்னாடிதான் நாம இதை மதிப்பீடு பண்ண முடியும். அதானே ரூல்ஸ்?’’
‘‘என்னய்யா பொல்லாத ரூல்ஸ்? மணி பார்த்தியா, பன்னிரண்டு! இந்த நடுராத்திரியில சாட்சியைக் கொண்டான்னா நான் எங்கே போவேன்? சீஃப் கமிஷனர்கிட்ட பேசி ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கிடறேன். நீங்க மார்க்கெட் ரேட்டுக்கு மதிப்பு போடுங்க. வைரம் ஒரு கேரட் என்ன விலைனு தெரியும்ல? தெரியலேன்னா மிஸ். சாரதாகிட்ட கேட்டுக்கங்க.’’
‘95 கிராம் எடையுள்ள ஒரு வைரக் கல்லை இந்திய அரசாங்கத்தின் சார்பாக தான் கையகப்படுத்தியிருப்பதாக’ தயாரிக்கப்பட்ட ரசீதில், பச்சை மையில் கையெழுத்துப் போட்டு, சாரதாவிடம் நீட்டினான் ஜெய்கிஷன். ‘லஞ்சம் தரமாட்டேன். செய்யறதைச் செய்துக்கோ’ன்னு திமிரா சொன்னே யில்லே... இப்ப தெரியுதா, யார் இந்த ஜெய்கிஷன்னு?’ என்கிற கோப வெறி அவன் கண்களில் மின்னியது.
இது நடந்த பதினைந்தாவது நாள்...
சாரதாவின் தனியறையில் அவள் முன் உட்கார்ந்திருந்தான் ஜெய்கிஷன். அவனுக்குப் பயங்கரமாக வியர்த் திருந்தது. பலவீனமான குரலில் பேச ஆரம்பித்தான்...
‘‘என்னை மன்னிச்சிடுங்க மேடம்! உங்ககிட்டேர்ந்து கையகப்படுத்தின அந்தக் கல்லை எங்க டிபார்ட்மென்ட் அப்ரைசரை வெச்சு மதிப்பீடு பண்ணிப் பார்த்தேன். அது ஆயிரம் ரூபாய்கூடப் பெறாத போலிக் கல்லுனு சொல்லிட்டாரு. அதான், அதை உங்ககிட்ட கொடுத்துட்டு, ரசீதைத் திரும்பக் கேட்டு வாங்கிட்டுப் போகலாம்னு...’’
சாரதா கர்ஜித்தாள்... ‘‘மிஸ்டர் ஆபீஸர், என்ன... விளையாடறீங்களா? நீங்க கையகப்படுத்தின வைரக் கல்லோட மார்க்கெட் மதிப்பு முப்பது லட்சம் ரூபாய். அது கணக்குல வராத வைரம்னே வச்சுக்கங்க... அதுக்கான வருமானவரியைக் கட்டிடறேன். அந்த வைரத்தைத் திருப்பித் தர வேண்டியது உங்க டிபார்ட்மென்ட்டோட பொறுப்பு. இல்லேன்னா நான் உங்க மேல கேஸ் போட வேண்டி வரும். எனக்கும் கொஞ்சம் சட்டம் தெரியும், மிஸ்டர் ஜெய்கிஷன். நீங்க போகலாம்!’’
ஜெய்கிஷன் வியர்த்துப் போய், செய் வதறியாமல் எழுந்து போக, இல்லாத காதலனை எண்ணி சாரதாவின் இதழ்களில் ஒரு வெற்றிப் புன்னகை மின்னியது.
விகடன்.காம்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'போட்டாளே ஒரு போடு' என்று தான் சொல்லணும் .................சூப்பர் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|