புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிள்ளு கிள்ளு’ப்பான கதை!
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
‘கிள்ளு கிள்ளு’ப்பான கதை!
ஜ்வாலாமாலினி
அ வள் கிள்ளிவிட்டாள்... ரொம்பவே அழுத்தமாக ‘நறுக்’ என்று தோள்பட்டையில் - புஜம் புஜம் என்பார்களே - அங்கே! கொஞ்சும்போது செல்லமாகக் கன்னத்தில் கின்னத்தில்... தொலைகிறது என மூக்கில்கூடக் கிள்ளிக்கொள்வது உண்டுதான்.
அவன் மேல்தான் தப்பு. அவள் எதிர்பாராத சமயம், அவளுடைய இடுப்பில் கிள்ளியிருக்கக் கூடாது. அவள் கையில் தயிர் வைத்திருக்கிறாளா, கொதிக்கிற பாயசமா... எதையாவது அவன் முந்தாநாள் வரை கவனித்துக் கிள்ளியிருக்கிறானா?
‘தங்கப் பட்டை’, ‘பசு வெண்ணெய்ப் பாலம்’ என எப்போதெல்லாம் அவன் மனசு வர்ணிக்கிறதோ, அப்போது விரல் எட்டும் தூரத்தில் அவள் இடுப்பு இருந்துவிட்டால் போச்சு!
கையிலிருந்த தயிரைப் பொதே லென்று கீழே போட்டுவிட்டாள். அசிங்கமாக அவள் பட்டுப் புடவை மீதும் மேடை பூராவும் கொட்டி... அவளுக்கு மகா ஆத்திரம். ‘‘உங்களுக்கு...’’ என்று மகாமகாக் கோபமாக அவன் புஜத்தில் கிள்ளிவிட்டாள். அந்தக் கிள்ளில் ஆழம் இருந்தது. ஆவேசம் இருந்தது. அழுத்தம் இருந்தது. முக்கியமாக, வலி இருந்தது.
ஆபீஸில் சாயந்திரம் வரை சிஸ்டத் திடம் கையைக் கொண்டுபோகவே முடியவில்லை. வலது கை சுவாதீனமற்றுப் போய்விட்டதா என்ன? சனியன்... இப்படியா ஒருத்தி கிள்ளுவாள்?
ஆபீஸ் டாய்லெட்டில், சட்டை பனியனைக் கழற்றி புஜத்தைப் பார்த்தான். கிள்ளிய இடம் பழுத்த சீமை இலந்தைப் பழம் போலக் கன்னித் தடித்திருந்தது. கடன்காரியின் நகம் கிகம் பட்டிருக்குமா? ‘அவளுக்கு இத்தனை ஆத்திரம் கூடாது. பலமும் அதிகம்தான்’ என்று மனசு ஜால்ரா போட்டது. சிலர் காதை, மூக்கை, உதட்டை, கன்னச் சதையைக்கூடக் கடித்துவிடுவார்கள் என்று நாராயண ரெட்டி எழுதிய கட்டுரை ஞாபகத்துக்கு வந்தது. அவள் முகத்தில் தெளித்த ரௌத்திரம், கண் முன்னே நின்றது. சரியாகப் பாடினானய்யா... ‘அழகான ராட்சஸியே!’
சட்டையை மாட்டிக்கொண்டவன் சிரித்தான். மனசில் ஒரு சின்ன பிளான். ஆபீஸ் முடிந்து வேண்டு மென்றே லேட்டாக ஏழே கால் மணிக்கு வீட்டுக்குள் நுழைந்தான். அவள் டி.வி-யில் ‘ஒரு பவுடருடன் மூணு லிட்டர் தண்ணி கலந்தால்’ விளம்பரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அவனைப் பார்த்ததும் டப்பென்று ரிமோட்டை அழுத்திவிட்டு, ‘‘ஏன் இவ்வளவு லேட்? போன்கூட இல்லே...’’ என்றவாறு வேகமாக அவன் கையில் இருந்த பையை வாங்கிக்கொண்டாள். சிரித்தவாறு மெத்தென்று ஒரு செல்ல இடிகூட தோளில் இடித்தாள். ‘‘ஸ்ஸ்...’’ என்று உதட்டை உறிஞ்சியபடி அவளை ஒதுக்கி னான்.
‘‘என்னாச்சு?’’
‘‘ஊசி போட்டு வந்தேன்!’’
‘‘ஊசியா? என்ன ஊசி? எதுக்கு?’’ - பரபரத்தாள்.
‘‘கையிலதான். பெரிசா வீங்கிருச்சு. நகம் கிகம் பட்டிருக்குமோன்னு ஒரு ஏ.டி.எஸ்... நம்ம டாக்டர் வெங்கடேஷ் கிட்டே போட்டு வந்தேன். அவரோட அசிஸ்டென்ட்டுதான் போட்டாள். நறுக்குனு குத்திட்டாள்!’’
‘‘என்ன சொல்றீங்க?’’ - பதறினாள்.
‘‘பதறாதே! சாதாரண ஊசிதான். இப்ப என்னடான்னா, கிள்ளின வலியை விட ஊசி வலிதான் பெரிசா இருக்கு. டைப்கூடப் பண்ண முடியலை.’’
அவள் கலங்கிவிட்டாள். ‘‘சே! நான் ஒரு முட்டாள். எங்கே, எங்கே... காட்டுங்க’’ என்றாள் பதற்றமாக.
மெதுவாக சட்டையைக் கழற்றினான். பனியனைக் களைவதற்குள்ளேயே, புஜத்தில் சிவப்பாக, சீமை இலந்தை தெரிந்தது.
‘‘ஸாரி... ஸாரி! ரொம்ப ரொம்ப ஸாரி! சே! நான் ஒரு ராட்சஸி! என்னை எதால அடிச்சுக்கறது! ப்ளீஸ்... ப்ளீஸ்! இப்படி வெளிச்சத்துக்கு வாங்களேன்’’ என்று துடித்துப் போய்விட்டாள்.
‘‘சரி, விடு! அடுத்த தடவை லேசா கிள்ளு. ப்ளட் கிளட் ஒண்ணும் தெரி யலே. ஆனா, சுருக் சுருக்னு வலி. சாயந்திரம் மூணு மணிக்கு பெரிசா வீங்கியிருந்தது. ஊசி போட்டதுக்கப்புறம் வீக்கம் வடிஞ்சிருக்கு!’’
‘‘நான் ஒரு முண்டம்... செருப் பைக் கழற்றி என்னை நாலு அடி அடிங்க!’’ -துக்கமும் அழுகையும் குமுறிக்கொண்டு வந்தது.
‘‘சரி, நீ என்ன வேணும்னா செய்தே?’’
‘‘என்னை அந்த விளக்குமாத்தை எடுத்து நாலு போடு போடுங்க. எவ்வளவு பெரிய காயம்!’’ என்று அவன் கையை எடுத்துத் தன் கன்னத்தில் அறைந்துகொள்ள முயன்றாள். அழுகை யும் கேவலுமாக அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கேவினாள். அவன் அவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டு, ‘‘ஐயே! என்ன இது, சின்ன குழந்தை மாதிரி அழுதுட்டு...’’ என்றான்.
வீட்டிலிருந்த பலவித ஆயின்மென்ட் டுகள், ஸ்னோ, தேங்காய் எண்ணெய், வெண்ணெய்... எது எதையோ தோளில் தடவிவிட்டாள். பத்தாயிரமாவது தடவை, ‘வலிக்கிறதா, வலிக்கிறதா?’ என்று கேட்டாள். ஃபிரிஜ்ஜில் ஐஸ் க்யூப் இல்லாததால் மாடி வீட்டில் வாங்கி வந்து, கைக்குட்டையில் சுற்றி ஒத்தடம் கொடுத்தாள். அவன் கையைத் தன் மார்பு மீது பத்திரமாக வைத்துக் கொண்டே, அவன் தூங்கும் வரை தோளைப் பிடித்து, காலைப் பிடித்து, வெந்நீரில் அவ்வப்போது ஒத்தி... அவன் தூங்கிவிட்டான். அவள் தூங்கவே இல்லை.
தன் கையை, விரல்களை நெயில் பாலிஷில் பளபளத்த நகங்களைப் பார்க்கவே அவளுக்கு அருவருப்பாக இருந்தது. பிரியமாகக் கொஞ்சினவரை இப்படியா குரூரமாகக் கிள்ளிவைப்பது?
தனக்கு என்ன தண்டனை கொடுத் துக்கொள்வது என்று பட்டியலிட்டாள். இது புதன்கிழமை. இனி ஓரொரு புதன் கிழமையும், பச்சைத் தண்ணி குடிக் காமல் பட்டினி கிடப்பது, தினமும் ஆயிரத்தெட்டு தடவை ராமஜெயம் எழுதுவது, கோயிலுக்குப் போய் நவக்கிரகம் சுற்றுவது, தினமும் சுந்தர காண்டம் பாராயணம் பண்ணுவது...
பவுடர் என்ன வேண்டிக்கிடக்கு? லிப்ஸ்டிக் ஒரு கேடா? நெயில் பாலிஷா? பாலிஷ் பாட்டிலைத் தூக்கிக் குப்பைக் கூடையில் எறிந்தாள். நகம் பட்டிருந்தால் விஷமாச்சே என்பது மனசை உறுத்திக் கொண்டு இருந்தது. இடுப்பில் ஒரு சூடு இழுத்துக்கொள்ள வேண்டும் என்றுகூட ஆத்திரமாக வந்தது.
‘அழகாக இருக்கிறோம் என்பதால் மனசில் என்னை அறியாத அகங்காரம் ஒளிந்திருக்கிறது. அந்த அகங்காரத்தில் விளைந்த கொழுப்புதான் என்னை அப்படி நடந்துகொள்ள வைத்திருக்கிறது’ என்று திரிசூலம் சிவாஜி மாதிரி சவுக்கால் அடித்துக்கொள்ளாத குறையாக தன்னைச் சாடிக்கொண்டாள்.
மறுநாள் ஆபீஸ் போய்விட்டு அவன் வீடு திரும்பியபோது, அவளைப் பார்த்துத் திடுக்கிட்டான். வலது கையில் கட்டை விரலிலும் ஆள்காட்டி விரலிலும் பயங்கரமான கட்டு. வெள்ளை பாண்டேஜின் விளிம்பிலும் அங்கங்கே நடுவிலும் லேசான சிவப்புக் கசிவு. ‘‘என்ன சரள், என்ன ஆச்சு..?’ என்று பதறினான்.
நிதானமாகச் சொன்னாள்... ‘‘அக்கிரமம் பண்ணின விரல்களுக்குத் தண்டனை வழங்கிட்டேன்!’’
‘‘என்ன சொல்றே சரள்?’’
‘‘வலி மரப்பு ஊசி போட்டு, பிடுங்கித் தள்ளிட்டார் டாக்டர்.’’
அவன் பதறி அலறினான். ‘‘பிடுங்கித் தள்ளிட்டாரா? ஐயோ... என்ன சொல்றே சரள்?’’
‘‘உங்களைக் கிள்ளின ரெண்டு கை விரல் நகங்களையும் வேரோடு சுத்தமாகப் பிடுங்கியாச்சு. எனக்கு வேண்டியதுதான் இந்தத் தண்டனை!’’
‘‘ஐயோ! என்னம்மா இது குரூரம்? என் விளையாட்டு வினையாயிடுச்சே!’’
‘‘என்ன விளையாட்டு?’’
‘‘நான் ஊசியெல்லாம் எதுவும் போடலை. சும்மா உன்னைக் கலக்கி யடிக்க அப்படி ஒரு நாடகம் ஆடி னேன். என் செல்லமே, அதுக்காக உன் அழகான விரல் நகங்களைப் பிடுங்கிக்கிறதா?’’ - அவன் தலையில் அடித்துக்கொண்டான். ‘‘நான் ஒரு முட்டாள்... மிருகம்..! சரள்... சரள்!’’ என்று அவளைக் கட்டிக்கொண்டு கதறினான். சரள் சிரித்தவாறு அவனை ஒதுக்கினாள்.
‘‘இதான் சாக்குன்னு இறுக்கிக் கட்டிக்கிறீங்க!’’ என்றாள்.
‘‘உன்னால இந்த நிலையிலேயும் எப்படி சரள் சிரிக்க முடியுது? இந்த இடியட் போட்ட நாடகம் இப்படி ஆயிடுச்சே!’’
‘‘எப்படி ஆயிடுச்சு? நகம் பிடுங்கின விரலும் அழகாத்தான் இருக்கு... ஆனா, நீங்க பார்த்தா கதறிடுவீங்க!’’ என்றபடி, நசநசவென்றிருந்த கட்டை அவள் பிரிக்கத் தொடங்கினாள்.
‘‘வேண்டாம்... வேண்டாம். ஐயோ! அந்த குரூரத்தை என்னால தாங்க முடியாது சரள்! பிரிக்காதே!’’
அவள் கட்டைப் பிரித்து, பஞ்சைச் சுருட்டி எறிந்தாள். அவளது அழகிய விரல்களில் நகங்கள் பரம சௌக்கிய மாக, பத்திரமாக இருந்தன.
சிரித்தாள். ‘‘ஸாரி! நீங்க ஆடின நாடகத்துக்கு நானும் ஒரு எதிர் நாடகம் ஆடிட்டேன். கணக்கு சரியாப் போச்சு. நீங்க ஆபீஸ் போனதுமே, டாக்டர் வெங்கடேஷ§க்கு போன் பண்ணி, மாத்திரை ஒண்ணும் எழுதித் தரலையே, ஊசி மட்டும் போதுமான்னு கேட்டேன்! ‘மாத்திரையா? ஊசியா? உன் ஹஸ்பெண்ட் இங்கே வரலை யேம்மா! அவனை நான் பார்த்தே ரொம்ப நாளாச்சே!’ன்னார். என்னை ஏமாத்தின உங்களைப் பதிலுக்கு ஏதா வது பண்ணாட்டா, எப்படி? அதான்...’’
‘‘அடிப் பிசாசு!’’ என்று செல்லமாகப் பற்களைக் கடித்துக்கொண்டான். ‘‘சரி, அட்வான்ஸா சொல்லிட்டே செய்யறேன். இப்போ உன் இடுப்பில் நான் கிள்ளப்போறேன். ரெடியா..? ஒன் டூ த்ரீ...’’ என்றபடி, அவள் இடுப்பில் லேசாக விரல்களை வைத்தான்.
‘‘ஒரு கிள்ளுதானா?’’ என்றவள், ‘‘சன்டேன்னா ரெண்டு!’’ என்றாள் கொஞ்சலாக!
[b]விகடன்.காம்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விகடனிலா இதுபோல் படங்கள் போடுகிறார்கள்???
படத்தை நீக்கிவிட்டேன் தமிழ்நேசன்.
படத்தை நீக்கிவிட்டேன் தமிழ்நேசன்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாருங்க இந்த பொண்ணு பேனாவால ஒரு கண்ண குத்திட்டு இப்ப வாயில குத்துது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கதை நல்லா இருக்கு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1095399யினியவன் wrote:பாருங்க இந்த பொண்ணு பேனாவால ஒரு கண்ண குத்திட்டு இப்ப வாயில குத்துது
இல்லை யினியவரெ,
இடது கண் வழியாக உள்நுழைத்து ,
வாய் வழியாக வரவழைத்துக்கொண்டு இருக்கிறார் .
எதற்கும் ராம் அண்ணாவை கேட்டுவிடலாம் .
அவருக்கு தெரியாததா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1095399யினியவன் wrote:பாருங்க இந்த பொண்ணு பேனாவால ஒரு கண்ண குத்திட்டு இப்ப வாயில குத்துது
இல்லை யினியவரெ,
இடது கண் வழியாக உள்நுழைத்து ,
வாய் வழியாக வரவழைத்துக்கொண்டு இருக்கிறார் .
எதற்கும் ராம் அண்ணாவை கேட்டுவிடலாம் .
அவருக்கு தெரியாததா ?
ரமணியன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|