புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_m10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10 
48 Posts - 51%
heezulia
'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_m10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_m10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_m10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_m10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_m10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10 
48 Posts - 51%
heezulia
'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_m10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_m10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_m10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_m10'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!'


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 11, 2014 8:27 pm

'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!'
விபரீத விஜயபிரதாப் சிங்...


மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்) வீரர் ஒருவர், சக வீரர்கள் மூன்று பேரை சுட்டுக்கொன்ற சம்பவத்தால் கல்பாக்கமே கலங்கிப் போயிருக்கிறது.

'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' P8
'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' P8
'பார்த்தாங்க... சிரிச்சாங்க... சுட்டுட்டேன்!' P11

மத்திய அணுசக்தித் துறையின் கீழ் அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாவினி ஆகியவை கல்பாக்கத்தில் செயல்பட்டு வருகின்றன. சென்சிட்டிவ் ஏரியா என்பதால், சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்பு வளையத்தில் கல்பாக்கம் நகரியம் இயங்கி வருகிறது.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சி.ஐ.எஸ்.எஃப் படை வீரர்கள் இங்கு பணியாற்றுகின்றனர். கடந்த 8-ம் தேதி காலை 4.30 மணியளவில், வழக்கமாக நடைபெறும் அணிவகுப்புக்காக வீரர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். உ.பி மாநிலத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் விஜயபிரதாப் சிங், பதிவேட்டில் கையெழுத்திட்டு, தனக்கான 9 எம்எம் கார்பைன் ரக துப்பாக்கியைப் பெற்றுக்கொண்டார். அப்போது அங்கிருந்த அதிகாரிகளுக்கும் இவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு உள்ளது.

கோபத்துடன் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த விஜயபிரதாப் சிங், மீண்டும் வேகமாக மாடிக்குச் சென்றார். அங்கு ஓர் அறையில், ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த தலைமைக் காவலர் மோகன் சிங்கை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு கூடுதல் உதவி ஆய்வாளர் கணேசன் மற்றும் கோவர்தனன் பிரசாத், பிரதாப் சிங், சுப்புராஜ் ஆகியோர் ஓடி வந்தனர். விஜய பிரதாப் சிங்கை மடக்க முயற்சி செய்தனர். அவர்களை நோக்கியும் விஜயபிரதாப் துப்பாக்கியால் சுட்டார். கணேசனும், சுப்புராஜும் அதே இடத்தில் துடிதுடிக்க இறந்தனர்.

வயிற்றில் குண்டுகள் பாய்ந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பிரதாப் சிங் மற்றும் காலில் காயமடைந்த கோவர்தன் பிரசாத் ஆகியோர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

யார் இந்த விஜயபிரதாப் சிங்?

உ.பி மாநிலம் அலகாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயபிரதாப் சிங். 52 வயதான இவர், 1990-ல் தொழில் பாதுகாப்பு படை வீரராகப் பணியில் சேர்ந்தார். வேறு மாநிலத்தில், காவலராகப் பணியாற்றிய அவர், கடந்த ஜூலையில் பதவி உயர்வு பெற்று கல்பாக்கம் வந்தார்.

விஜயபிரதாப் சிங் பின்னணி குறித்து, அவரிடம் விசாரணை நடத்திய காஞ்சிபுரம் மாவட்ட போலீஸாரிடம் கேட்டோம்.

''விஜயபிரதாப் சிங், ராஜஸ்தானில் உள்ள அணுமின் நிலையத்தில் பணியாற்றியபோது, ஏதோ பிரச்னை காரணமாக கல்பாக்கத்துக்கு மாற்றப்பட்டார். நல்ல கட்டுமஸ்தான உடல்வாகு கொண்டவர். துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகு மிகவும் அமைதியாக இருக்கிறார். அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினோம்.

அவருக்கு மன ரீதியாக பிரச்னை இருந்துள்ளது. அதற்காக மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்திருக்கிறார். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபுவின் தீவிர பக்தர். அந்த சாமியாரின் படத்தை எப்போதும் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருப்பாராம். நடக்காத ஒன்றை நடந்ததாகக் கற்பனை செய்துகொண்டு, விபரீதமாக நடந்துகொள்வது இவரிடம் உள்ள பிரச்னை. சக வீரர்களைப் பற்றி தலைமைக் காவலர் மோகன் சிங்கிடம் அடிக்கடி புகார் சொல்வாராம்.

'என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். சிரிக்கிறார்கள்.. கேலி செய்கிறார்கள்..' என்பதுதான் அவரது புகார்கள். முதலில் சீரியஸாக எடுத்துக்கொண்டு மோகன் சிங் விசாரித்து இருக்கிறார். பிரதாப் சிங் சொல்வது பொய் என்பது தெரிந்ததும், அவரைக் கூப்பிட்டு மோகன் சிங் கண்டித்தாராம். ஆனாலும், சக வீரர்களைப் பற்றி விஜயபிரதாப் தொடர்ந்து புகார் சொல்லியிருக்கிறார். மோகன்ராஜ் மௌனமாக இருந்திருக்கிறார். இது பிரதாப் சிங்குக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதாப் சிங், சம்பவத்தன்று இரவு முழுவதும் தூங்காமல் நடந்ததை அசைபோட்டிருக்கிறார். அதனால் கோபம் அதிகரித்து, நேராக மோகன் சிங்கை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். பிறகு, மற்ற இருவரையும் சுட்டிருக்கிறார்.

நாங்கள் விசாரித்த வரையில், கடந்த ஆறு வருடங்களாக சொந்த மாநிலத்தில் இல்லாமல், வெளி மாநிலங்களில் பணியின் நிமித்தம் விஜயபிரதாப் தங்கிவருகிறாராம். அவருக்கு இரு மகன்கள் உள்ளனர். ஒருவர், 11-ம் வகுப்பும், இன்னொருவர் 9-ம் வகுப்பும் படிக்கிறார்கள். குடும்பத்தினருடன் வசிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை மற்றவர்களிடம் அடிக்கடி வெளிப்படுத்துவாராம். பிரதாப் சிங்குக்கு ஹோம் சிக் இருந்திருக்கிறது. அதுதான் அவரை இந்த விபரீத முடிவுக்கு இட்டுச்சென்றுள்ளது'' என்று போலீஸார் கூறினர்.

போலீஸார் மேலும் கூறுகையில், ''கல்பாக்கத்தில் நடந்திருப்பது மூன்றாவது சம்பவம். இதற்கு முன்பாக, நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த படைவீரர் ஒருவர், தொழிலாளி ஒருவரை சாதாரண விஷயத்துக்காகப் கோபப்பட்டு சுட்டுக் கொன்றார். அடுத்து, ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவகத்தில் பணியில் இருந்த ஒரு படைவீரர், திடீரென தனக்குத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்தார். இவர்கள் மூவருமே உ.பி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மனரீதியில் பாதிக்கப்பட்டவர்கள்.

தமிழகத்தில் பணியாற்றும் வேறு மாநில படைவீரர்களின் பட்டியலை எடுத்து, அவர்களில் யாராவது மனஅழுத்தத்தில் இருக்கிறார்களா என்பது குறித்து ஆய்வு நடத்தி, உளவியல் பிரச்னை உள்ள நபர்களுக்கு உரிய மனநல சிகிச்சை அளிக்க வேண்டும். விடுமுறை, ஓய்வு போன்ற விஷயங்களில் கொஞ்சம் தாராளப் போக்கை அதிகாரிகள் காண்பித்தால், இதுமாதிரியான சம்பவங்களைத் தடுக்கலாம்'' என்றனர்.

ஆயுதம் கையாள்பவர்களை இப்படி மன அழுத்தத்தோடு விட்டு வைத்திருப்பது ஆபத்தானது.

- கனிஷ்கா, பா.ஜெயவேல்
விகடன்.காம்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக