புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_m10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_m10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_m10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_m10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_m10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_m10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_m10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_m10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_m10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_m10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_m10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10 
432 Posts - 48%
heezulia
மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_m10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_m10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_m10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_m10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10 
29 Posts - 3%
prajai
மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_m10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_m10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_m10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_m10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_m10மூலிகை வனம்-தொடர் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூலிகை வனம்-தொடர்


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 12:13 pm

First topic message reminder :

அருகம்புல்

மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்துவிட்டனர்... கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்! அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்... அவை பற்றிய புரிதலை உண்டாக்கவுமே.... 'மூலிகை வனம்’ எனும் இப்பகுதி இங்கே விரிகிறது.


அனைத்து நோய்க்கும் தீர்வான அருகம்புல் பற்றி அறிந்துகொள்வோம்...

'மூர்த்தி சிறிது... கீர்த்தி பெரிது’ என்பார்களே, அது அருகம்புல்லுக்குத்தான் நூற்றுக்கு நூறு பொருந்தும். சிறிய புல்லில், புதைந்து கிடக்கும் மருத்துவ குணங்கள்தான் எத்தனை... எத்தனை? மனிதனின் பிணி நீக்கும் அத்தனை மூலக்கூறுகளும் அருகம்புல்லுக்குள் இருப்பதால்தான் அனைத்து இடங்களிலும் இதை உற்பத்தி செய்து கொண்டேயிருக்கிறது, இயற்கை. எல்லாவிதமான மண்ணிலும் வளரும் அருகு, சல்லிவேர் முடிச்சுகள் மூலமாகவும், விதைகள் மூலமாகவும் இனவிருத்தி செய்கிறது. நீரில்லாமல் அருகம்புல் காய்ந்து போனாலும் போகும். ஆனால், பல ஆண்டுகள் கழித்து அந்த இடத்தில் நீர் பட்டால், பட்டென்று செழித்து வளரத் தொடங்கிவிடும் தன்மை அருகுக்கு உண்டு. இந்தப் புல் உள்ள நிலம், மண் அரிப்பில் இருந்தும், வெப்பத்திலிருந்தும் காக்கப்படுகிறது. அதனால்தான் அருகம்புல்லால் வரப்பு அமைத்து நெல் சாகுபடி செய்கின்றனர்.

புல் வகைகளின் அரசன்!


அருகம்புல்லின் அற்புதத்தை எளிதாகப் புரிந்துகொள்ள ஓர் எடுத்துக்காட்டு. மங்கள நிகழ்வுகளின்போது சாணத்தில் பிள்ளையார் பிடித்து, அதில் அருகம்புல் செருகி வைப்பதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி புல் செருகப்பட்ட சாணம் காயும் வரை அதில் புழு, பூச்சிகள் உருவாவதில்லை. ஆனால், சாணத்தில் சாதாரணமாக இரண்டு நாட்களிலேயே புழுக்கள் உருவாகிவிடும். புல் வகைகளில் அரசு போன்றது அருகு. அதனால்தான், அந்தக் காலத்தில் மன்னர்கள் பட்டாபிஷேகம் செய்யும்போது, அருகம்புல்லை வைத்து மந்திரம் ஜெபிப்பார்கள்.
'அருகே... புல்களில் நீ எப்படி சிறந்து விளங்குகிறாயோ, அதேபோல் மன்னர்களில் நானும் சிறந்தோன் ஆகுக’ என்று முடிசூடும்போது மன்னர்கள் கூற வேண்டும் என்பதை மரபாகவே வைத்திருந்தார்கள். கிரகண நேரத்தில் குடிக்கும் நீரில் அருகம்புல்லைப் போட்டு வைக்கும் பழக்கம் இன்றைக்கும் நம்மிடம் இருக்கிறது. அது மூட நம்பிக்கையல்ல. கிரகண நேரங்களில் ஊதாக்கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். அதனால், ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவே அருகை நீரில் போட்டு வைக்கிறார்கள்.
அபார சக்தி கொடுக்கும் அருகு!

'அருகன்' என்றால் சூரியன் என்று பொருள். ஒலிம்பிக் வீரர்களுக்கெல்லாம் முன்னோடிகளாகத் திகழும் ஓட்டக்காரர்களான மான் மற்றும் முயல் இரண்டுக்குமான உந்துசக்தி, அவை தினமும் உண்ணும் அருகம்புல்தான். மிருகங்களில் பலமானவையும், வேகமானவையும் பெரும்பாலும் சைவம் உண்ணும் விலங்குகள்தான். யானை, குதிரை, காண்டாமிருகம் அனைத்தும் அருகம்புல் உண்பவை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். விலங்குகளில் நாய், பூனை, கோழிகள்கூட நோய் வந்தால், அருகம்புல்லைக் கடித்துத் துப்புவதைப் பார்க்கலாம்.

இப்படி கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் நிவாரணியை நிராகரித்துவிட்டு, மருத்துவமனைகளின் நீண்ட வரிசையில் காத்திருப்பதை வழக்கமாகவே வைத்திருக்கிறோம். 'அருகைப் பருகினால் ஆரோக்கியம் கூடும்’ என்கிறது, சித்த மருத்துவம். அதனால்தான் இதை 'விஷ்ணு மூலிகை’ என்று அழைத்தார்கள், சித்தர்கள். இதன் மருத்துவத் தன்மைகளை 'பால வாகடம்' என்ற நூலில் விளக்கியுள்ளார், அகத்தியர். பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் ஏற்ற மருந்து என்பதால், இதை 'குருமருந்து' எனவும் அழைக்கிறார்கள்.

அருகம்புல் சாறு குடித்தால், அண்டாது நோய்!

மூலிகை வனம்-தொடர் - Page 2 Pv48b
காணும் இடமெல்லாம் காட்சி தரும் அருகம்புல்லை எடுத்து, நீரில் அலசி சுத்தப்படுத்தி... தண்ணீர் சேர்த்து இடித்தோ, அரைத்தோ சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இது, நீரிழிவு, உடல் பருமன், ரத்த அழுத்தம் ஆகிய நோய் களுக்கு மிகச்சிறந்த மருந்து. அருகு சாறு குடித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும். இதுமட்டுமா, அருகம்புல் குணப்படுத்தும் நோய்களின் பட்டியல், அதன் வேர்களைப் போலவே நீளமானது. அருகம்புல் சாறு குடித்தால் சோர்வே தெரியாது. வயிற்றுப்புண் குணமாகும். சளி, சைனஸ், ஆஸ்துமா, தோல் வியாதி, மலச்சிக்கல், பல் ஈறு கோளாறுகள், கர்ப்பப்பைக் கோளாறுகள், மூட்டுவலி ஆகியவை நீங்கும் என நீள்கிறது, பட்டியல். புற்றுநோய்க்கும் நல்ல மருந்தாக உள்ளது.

இதன் அருமையை நம்மைவிட வெளிநாட்டினர்தான் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஜெர்மனியில், அருகம்புல் சாறு கலந்து ரொட்டி தயாரித்து உண்கிறார்கள். நாமும், தோசை, சப்பாத்தி, ரொட்டி ஆகியவைகளில் அருகம்புல் சாறை சேர்த்து தயாரித்து உண்ணலாம். இலங்கையில் குழந்தைகள் முதன்முதலில் பள்ளிக்குப் போகும்போது, பாலில் அருகம்புல்லை தோய்த்து வாயில் விடுவர். 'பால் அரிசி வைத்தல்’ என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது.
இலவசமாக கிடைக்கும் ஊட்டச்சத்து!

தினமும் காலையில் குழந்தைகளுக்கு சத்து வேண்டும் என்பதற்காக ஊட்டச்சத்து பானங்களைக் கொடுக்கிறோமே. அதை விட அதிக ஊட்டசத்து மிக்க பானம் அருகம்புல் சாறு. தளிர் அருகம்புல்லைச் சேகரித்து, நீரில் கழுவி, விழுது போல் அரைத்து பசும்பாலில் விட்டு சுண்டக் காய்ச்சி, இரவு படுக்கைக்குப் போகும் முன்பாக உட்கொண்டு வந்தால், எவ்வளவு பலவீனமான உடலும் விரைவில் தேறிவிடும்.

கிரீன் பிளட்..!

அருகம்புல்லை நீரில் இட்டுக் காய்ச்சி, பதமான சூட்டில் குடித்து வந்தால் இதய நோய்க்கு இதமளிக்கும். அனைத்தையும்விட முக்கியமானது அருகம்புல் சாறு... மிகச்சிறந்த ரத்த சுத்திகரிப்பான். இதற்கு இணையாக ரத்தத்தைச் சுத்திகரிக்கும் மருந்து ஆங்கில மருத்துவத்தில்கூட இல்லை எனலாம். அதனால்தான் அருகை, 'கிரீன் பிளட்’ என அழைக்கிறார்கள், வெளிநாட்டினர். ரத்த மூலம் உள்ளவர்கள், ஒரு கைப்பிடி அருகை அரைத்து, 200 மில்லி காய்ச்சாத ஆட்டுப் பாலில் கலந்து காலைவேளையில் மட்டும் குடித்து வந்தால், மூன்றே வாரங்களில் கட்டுப்படும். இதைத் தொடர்ந்து ஓரிரு மாதங்கள் குடித்து வந்தால், நரம்புத்தளர்ச்சி குணமாவதுடன், ஆண்மைக் குறைபாடு நீங்கும்.
'ஆல்போல் தழைத்து... அருகு போல் வேரூன்றி... ஆரோக்கியமாய் வாழ்வோம்.
மூலிகை வனம்-தொடர் - Page 2 Pv48c



avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 5:47 pm

நோய்களை விரட்டும் நொச்சி!

மூலிகை வனம்-தொடர் - Page 2 Pv42a
மருத்துவமனைகளே இல்லாத அந்தக் காலம் முதல், அதிநவீன மருத்துவ வசதிகள் கிடைக்கும் இந்தக் காலம் வரை... மனிதனின் பிணிகளைக் களைவதில் முக்கிய இடம் வகிக்கும் மூலிகைகளில் ஒன்று நொச்சி. அனைத்துப் பகுதிகளிலும் தானாகவே விளைந்து கிடக்கும் நொச்சி... காய்ச்சல், தலை வலி உள்ளிட்ட பல நோய்களுக்கு மிகச்சிறந்த நிவாரணி.

நொச்சி, சிறு மரவகையைச் சேர்ந்தத் தாவரம். வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது. மூன்று முதல் 5 கூட்டு இலைகளைக் கொண்டது. வெண்நொச்சி, கருநொச்சி, நீர்நொச்சி எனப் பல ரகங்கள் இருந்தாலும் வெண்நொச்சிதான் பெரும்பாலான இடங்களில் வளர்கிறது. கருநொச்சி அதிக மருத்துவ குணம் வாய்ந்தது. 'விடெக்ஸ் நெகுண்டோ’ (Vitex Negundo) என்ற தாவரவியல் பெயர் கொண்ட நொச்சியின் இலை, பட்டை, வேர் என அனைத்தும் மருத்துவக் குணம் வாய்ந்தவை. இவை, வயிற்றில் உள்ள புழுவை வெளியேற்றும், கோழையை அகற்றும், உடலைத் தேற்றும், வலிகளைப் போக்கும், வியர்வையை உண்டாக்கி, காய்ச்சலைக் குணமாக்கும். இதனாலேய இதை 'தெய்வீக மூலிகை’ என கொண்டாடுகிறார்கள், சித்த மருத்துவர்கள்.

கொசுவை ஒழிக்கும்!

உலகின் முதல் பூச்சிக்கொல்லி கண்டுபிடிக்கப்பட்டதே, கொசுக்களை ஒழிப்பதற்காகத்தான். ஆனால், கடந்த 70 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள், கோடிக்கணக்கான பணத்தைச் செலவழித்து, இரவு, பகலாக உழைத்து புதுப்புது மருந்து களைக் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அத்தனைக்கும் 'அல்வா’ கொடுத்துவிட்டு முன்னைவிட வீரியமாக வலம் வருகின்றன, கொசுக்கள். ஆனால், கொசுக்களை ஒழிப்பதற்கான தீர்வை தன்னுள் வைத்திருக்கும் நொச்சியின் மீது இப்போதுதான் பலரின் கவனம் திரும்பியிருக்கிறது. நொச்சி இலையின் புகைக்கு கொசுக்கள் வராது, தற்போது, 'கொசுக்களை விரட்டியடிக்க நொச்சிச் செடிகளை வளருங்கள்' என்றபடி மாநகர மக்களுக்கு, சென்னை மாநகராட்சி நொச்சிச் செடிகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது!

போலியோ குணமாகும்!

'நொச்சி இலை ஒரு கைப்பிடி, மூக்கிரட்டை வேர் அரை கைப்பிடி, காக்கரட்டான் வேர் அரை கைப்பிடி ஆகியவற்றை ஒன்றாக இடித்து, ஒரு லிட்டர் நீர்விட்டு, ஒரு சுக்கு, தலா ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம் ஆகியவற்றைப் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி, வடிகட்டி காலை, மாலை இரண்டுவேளை என ஒரு வாரம் கொடுத்து வந்தால், ஆரம்ப நிலையில் உள்ள இளம்பிள்ளைவாதம் (போலியோ) குணமாகும். ஆஸ்துமா, மூச்சுத்திணறலால் அவதிப்படுபவர்கள், இரண்டு நொச்சி இலையுடன் நாலு மிளகு, ஒரு லவங்கம், 4 வெள்ளைப்பூண்டுப் பல் ஆகியவற்றை வாயில் போட்டு மென்று விழுங்கினால், சரியாகும். இடுப்புவலி, மூட்டுவலி, வீக்கம் போன்றவற்றுக்கு... ஒரு ஸ்பூன் நொச்சி இலைச் சாறுடன், ஒரு கிராம் மிளகுத்தூள் இட்டு, சிறிது நெய் சேர்த்து காலை, மாலை இருவேளைகள் உண்டு, வேலிப்பருத்தி இலையை வதக்கி ஒத்தடம் கொடுத்தால் குணமாகும்' என்கிறது, சித்த மருத்துவம்.

கழுத்து வாதம் போக்கும்!

''தலைபாரம், தலையில் நீர்கோத்தல், சளி, காய்ச்சல் போன்ற நோய்களுக்கு, நொச்சி இலையில் ஆவி பிடிக்கும் பழக்கம் இன்றைக்கும் கிராமங்களில் நடைமுறையில் இருக்கிறது. நொச்சி இலையை பானையில் நன்றாக வேகவிட்டு இறக்கி, அந்த பானையில் சூடான செங்கல் துண்டுகள் அல்லது வெங்கிச்சான் கல்லைப் போட்டு, உடல் முழுவதும் கனமான போர்வையால் மூடி, ஆவி பிடித்தால், இரண்டு நிமிடங்களில் உடலில் உள்ள துர்நீர் அனைத்தும் வியர்வை யாக வெளியேறும். நொச்சி இலையைப் பறித்து, பருத்தித் துணியில் கட்டி தலையணை யாகப் பயன்படுத்தினால் மண்டையிடி, கழுத்து வீக்கம், கழுத்து வாதம், ஜன்னி, நரம்பு வலி, மூக்கடைப்பு குணமாகும். உடலில் தோன்றும் கட்டிகள் மீது நொச்சி இலைச் சாறை பற்று போட்டால், கட்டிகள் கரைந்துவிடும். நொச்சி இலைகளை அரைத்து மூட்டுவீக்கத்தின் மீது கட்டினால் வீக்கம் குறையும்'' என்கிறார்கள், சித்த மருத்துவர்கள்.

தானியங்களைப் பாதுகாக்கும்!


நொச்சி வேரை தண்ணீரில் இட்டு காய்ச்சி, காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும். வேர் பட்டையைக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி... ஒரு சிட்டிகைப் பொடியை தேனில் குழைத்து, வாரம் இரு முறை காலையில் உட்கொண்டால், நரம்பு வலி, வாதப்பிடிப்பு குணமாகும். தானியங்களைச் சேமித்து வைக்கும் பாத்திரங் களில் நொச்சி இலையைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது. அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டிய அற்புத மூலிகையான நொச்சியை, நெஞ்சில் இருத்துவோம்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 10, 2014 5:51 pm

நோய்களை எட்ட விரட்டும் எருக்கு..!

மூலிகை வனம்-தொடர் - Page 2 Pv18b
மூலிகை வனம்-தொடர் - Page 2 Pv18c
12 ஆண்டுகள் நீரில்லாமல் வாழும்!

'தெய்வீக மூலிகை’ எனப் போற்றப்படும் எருக்கு, வளமற்ற நிலங்கள், பராமரிக்கப்படாத வயல்கள், சாலையோரங்கள், சுடுகாடு... என எங்கும் விளையும். பன்னிரண்டு ஆண்டுகள் வரை மழையே இல்லாவிட்டாலும்கூட உயிர்வாழும் ஆற்றல் கொண்டது. அகன்ற எதிரடுக்கில் அமைந்த இலைகளைக் கொண்ட, நேராக வளரும் பாலுள்ள குத்துச்செடி. ஒழுங்கற்ற அரைக்கோள வடிவில் உள்ள இதன் காய்க்குள் உள்ள பஞ்சில் விதைகள் இருக்கும். முற்றிய காய்கள் வெடித்து காற்றில் பறக்கும்போது, பஞ்சுகள் ஆங்காங்கு விழுந்து மட்கி... அதனுள் உள்ள விதைகள் மண்ணில் பதிந்து முளைத்து செடியாகும். மனிதர்கள், பறவைகள், விலங்குகள் என யாருடைய தயவும் இல்லாமல் தன் இனத்தை தானே உற்பத்தி செய்து கொள்கிறது, எருக்கு.

இத்தனை சிறப்பு வாய்ந்த எருக்கை நாம் கொண்டாட தவறிவிட்டோம். விநாயகர் சதுர்த்தி தினத்தைத் தவிர, மற்ற நாட்களில் எருக்கின் அருகேகூட செல்லத் தயங்குகிறோம். உண்மையில் நம்முடைய பலவிதமான நோய்களுக்கான தீர்வை தன்னுள் வைத்துக் கொண்டிருக்கும் இந்த எளிய செடியின் மருத்துவ குணங்களைத் தெரிந்துக் கொண்டால், ஆச்சரியத்தில் விழிகளை விரிப்பீர்கள்.

''எருக்கம்பால் கட்டிகளையே கரைக்கும்
வாயுவைத் திறக்கறவே கொன்றுவிடும் தீர செருக்கான
சந்நிவலி தீர்க்கும் சார்ந்த பல செந்தூரம்
உண்ணமுடியுமென ஓது''
என்கிறது, சித்தர்பாடல்.

ஆதிமனிதனின் கயிறு!

எருக்கின் இலை, பூ, பட்டை, வேர் என அனைத்திலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆடு, மாடு மேய்ப்பவர்கள் காலில் முள் தைத்தால், எருக்கு இலையை உடைத்து அதன் பாலை முள் தைத்த இடத்தில் பூசிக்கொள்வார்கள். இதனால் வலி குறைவதுடன், அந்த இடம் பழுத்து, முள் வெளியே வந்துவிடும். இதை இன்றைக்கும் கிராமங்களில் பார்க்கலாம். அதனால்தான் 'ஏழைக்கு வைத்தியம் எருக்கு’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். தென்னைநார்க் கயிறு, ட்வைய்ன் நூல், நைலான் கயிறு, இரும்பு ரோப் என கயிறுகளின் பல பரிமாணங்களை இன்றைக்குப் பயன்படுத்துகிறோம். ஆனால், ஆதிமனிதனுக்கு கயிறாகப் பயன்பட்டவை, எருக்கு நார்களும், சில கொடி வகைகளும்தான். எருக்கு நார் மிகவும் வலுவானது. வில்லின் நாண், மீன் வலை, முருக்கு நூல் என எருக்கு நாரை பலவிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள், பண்டைத் தமிழர்கள். இலவம்பஞ்சு தலையணை கிடைக்காதவர்களுக்கு, எருக்குக் காயிலுள்ள பஞ்சுதான் தலையணையாக இருந்திருக்கிறது.
மூலிகை வனம்-தொடர் - Page 2 Pv18a

விஷக்கடிக்கு மருந்து!


இதன் இலை, விஷமுறிவுக்குப் பயன்படுகிறது. பாம்பு கடித்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாக எருக்கு இலையை அரைத்து... புன்னைக் காய் அளவு (கோலிகுண்டு அளவு) உள்ளுக்குக் கொடுத்தால், விஷம் இறங்கும். அடுத்து, மருத்துவரிடம் கொண்டு செல்லலாம். தேள் கடித்தால், இதே இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு கொடுத்து, கடிவாயிலும் வைத்து கட்டினால் விஷம் இறங்கும். மூன்று துளி எருக்கன் இலைச் சாறு, பத்து துளி தேன் கலந்து கொடுத்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியே வந்துவிடும். குதிகால் வலி இருந்தால், சூடான செங்கல் மீது, பழுத்த எருக்கு இலையை வைத்து அதன்மீது குதிகாலை வைத்து வைத்து எடுத்தால், வலி குறையும். எருக்கு இலையை நெருப்பில் வாட்டி பொறுக்கும் சூட்டில், உடம்பில் உள்ள கட்டிகள் மீது வைத்து கட்டினால், கட்டிகள் உடையும். இலையை எரித்து, புகையை வாய்வழியாக சுவாசித்தால், மார்பு சளி வெளியேறும்.

ஆஸ்துமாவை விரட்டும் வெள்ளெருக்கு!


எருக்கன் பூவைக் காய வைத்துப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியில் 200 கிராம் எடுத்து, சிறிது சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை சாப் பிட்டு வந்தால், பால்வினை நோய், தொழு நோய் குணமாகும். வேரை கரியாக்கி, விளக்கெண்ணெய் கலந்து மேற்பூச்சாகப் பயன்படுத்தினால் கரப்பான், பால்வினை நோய்ப் புண்கள், ஆறாத காயங்கள் ஆறும். இதன் பால்... பொடுகு, படை, மூட்டுவலி, மூட்டுவீக்கம், மூலநோய்க்கு சிறந்த நிவாரணி என்கிறது சித்த மருத்துவம்.

கத்திரிப்பூ நிறப் பூக்களைக் கொண்ட எருக்குதான் பெரும்பாலான இடங்களில் இருக்கும். ஆனால், வெள்ளை நிறப் பூக்களை உடைய எருக்கு அரிதாக காணப்படும். இதை வெள்ளெருக்கு என்பார்கள். இதுதான் பிள்ளையாருக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இந்த எருக்கின் வேர்களில் பிள்ளையார் உருவங்களைச் செதுக்கி வழிபடுவார்கள். இந்த வெள்ளை எருக்கின் பூக்கள் ஆஸ்துமாவை விரட்டும் அருமருந்து. வெள்ளெருக்குப் பூக்களின் நடுநரம்பை நீக்கிவிட்டு, இதழ்களை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும். இதற்கு சம அளவு மிளகு, கிராம்பு சேர்த்து மை போல அரைத்து, மிளகு அளவுக்கான மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். மூச்சிரைப்பு அதிகமாகும்போது, இதில் ஒரு உருண்டையை வாயில் போட்டு நீர் அருந்தினால், உடனே இரைப்பு தணியும். '10கிராம் இஞ்சி,

3 வெள்ளெருக்குப் பூக்கள், 6 மிளகு ஆகியவற்றை நசுக்கி, அரை லிட்டர் தண்ணீரில் போட்டு, கால் லிட்டராகும் வரை சுண்டக் காய்ச்சி தினமும் இரண்டுவேளை குடித்து வந்தால், இரைப்பு குறையும்’ என்கிறார்கள், சித்த மருத்துவர்கள்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 11, 2014 6:03 pm

நல்ல பதிவு அன்பரே....... நன்றி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 21, 2014 8:43 pm

நல்ல தொடர் நேசன்..........தொடருங்கள் ! சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Vijiya Raj Kumar
Vijiya Raj Kumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 16/08/2016

PostVijiya Raj Kumar Wed Oct 12, 2016 8:31 am

தேவையான பதிவு நன்றி

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Mar 22, 2018 2:52 pm

அருமையான தொடர் பதிவுகள் அண்ணா ... மீண்டும் தொடருங்கள் ... மூலிகை வனம்-தொடர் - Page 2 3838410834 மூலிகை வனம்-தொடர் - Page 2 3838410834



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக