புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_m10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10 
6 Posts - 46%
heezulia
காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_m10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_m10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_m10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_m10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_m10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10 
372 Posts - 49%
heezulia
காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_m10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_m10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_m10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_m10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10 
25 Posts - 3%
prajai
காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_m10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10 
6 Posts - 1%
sugumaran
காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_m10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_m10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_m10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_m10காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Oct 09, 2014 5:53 pm

காதல் நிற ஓவியங்கள் - சிறுகதை
போகன் சங்கர், ஓவியங்கள்: ஸ்யாம்


''I feel lousy'' என்றான் அவன்.

மஞ்சுளா, ஆபீஸ் முடிந்து மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிக்கொண்டு பஸ் ஏறக் காத்திருக்கையில், ஒரு கடை வாசலில் தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் நபர் யார் எனப் பார்த்தாள்... அட, ஹரி.

''ஹரி, ஏன் இங்க உட்கார்ந்திருக்கீங்க? உடம்பு சரியில்லையா?''

அவன் நிமிர்ந்து பார்த்து, ''மஞ்சு மேடம்'' என்றான் பலவீனமாக.

ஆட்டோக்காரரைக் கூப்பிடுவதற்குள் ஹரி ஏறத்தாழ மயங்கியிருக்க, ''கொஞ்சம் ஹெல்ப் பண்ணுப்பா'' என்றாள் ஆட்டோக்காரரைப் பார்த்து மஞ்சுளா.

''என்னம்மா குடிச்சிருக்காரா?'' என்றார்.

''சேச்சே...''

யாரோ ஹரியின் சூட்கேஸ் மற்றும் சாமான்களை எடுத்துத் தந்தார்கள். நீளமாகச் சுருட்டிவைத்திருந்த கான்வாஸ்களை ஏற்ற ஆட்டோக்காரர் சிரமப்பட்டார்.

''எங்கம்மா போணும்?''

தெரிந்த டாக்டரிடம் போனாள்.

''வைரல் ஃபீவர். உங்க பக்கத்து வீட்டுல வாடகைக்கு இருக்கிற பையன்தானே? சாப்பாட்டில கவனமா இருக்கணும். இது மூணு நாளைக்கு!'' என்றார் மாத்திரைகள் தந்து.

100 ரூபாய் வாங்கிக்கொண்டு ஊசியும் போட்டார். வீடு வரும்போது இரவு 9 மணி. அதற்குள் ஹரி லேசாகத் தெளிந்திருக்க, ''நானே இறங்கிக்கிறேன்'' என்றவனை, ''சும்மா இரு சார்...'' என்று ஆட்டோக்காரர் ஏறக்குறைய தூக்கிச்சென்று வீட்டுக்குள் போட்டார்.

அதற்குள் ராஜகோபால் வீட்டுக்குள் இருந்து ஓடிவந்து, ''என்னடி... என்ன ஆச்சு?'' என்றார்.

''ஒண்ணும் இல்லை... ஹரிக்கு உடம்பு சரியில்லாம ரோட்டில மயங்கிக்கிடந்தார். டாக்டர்கிட்டே காமிச்சுட்டு வர்றேன். ஆட்டோ... எவ்வளவுப்பா?''

''கொடேன் ஒரு நூறு.''

ராஜகோபால், ''நூறு ரூபாயா?'' என்று பார்த்தார்.

மஞ்சுளா... ''ப்ச்... குடுங்க'' என்றாள்.

சுரேஷ், மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருந்தவன் அவளைக் கண்டதும் அதை சரேல் என மறைத்து, ''ஹாய் மம்மி'' என்றான். அதைக்கூடக் கவனிக்காமல் நேராக அடுக்களைக்குப் போனாள்.

ராஜகோபால் பின்னாலேயே வந்து ''என்னன்னு சொல்லேன்டி.''

''காய்ச்சல், 105 டிகிரி இருக்கு. எங்கேயோ திருநெல்வேலி பக்கம் பழங்கோயில்ல படம் எழுதப் போயிருக்கார். சாப்பாடும் தண்ணியும் செட் ஆகலை போல!''

''சரி இப்ப என்ன சமையல் பண்ணப் போறே... ரொம்பப் பசிக்குது. இது என்ன?''

''கஞ்சி, அவருக்கு!''

''குடு... நான் எடுத்துட்டுப் போறேன்.''

''வேணாம். மாத்திரை குடுக்கணும்.எனக்குத்தான் தெரியும்'' என்று அவரைக் கடந்துபோனாள்.

மறுநாள் காலை. ராஜகோபால் அவன் வீட்டுக்குப் போய் பேருக்கு ஒரு தடவை பார்த்தார். அறை முழுவதும் புத்தகங்களும் கான்வாஸ்களும் நிரம்பி இருக்க, கட்டிலுக்கு அடியில் இரண்டு ஷீவாஸ்ரீகல் புட்டிகள் இருந்தன. கான்வாஸ்களில் மிக அழகான பெண்கள், மிருக நிர்வாணமாக நின்றிருந்தார்கள். அறையில் லேசான சிகரெட் மணம். 'இந்தக் காய்ச்சல்லகூட சிகரெட் குடிக்கிறானே... முட்டாள்’ என நினைத்தார். அவர் போகையில், வாய் பிளந்து விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தான்.

''மிஸ்டர் ஹரி, உடம்பு எப்படி இருக்கு?'' என்றதற்கு விரோதமாகப் பார்த்தான்.

மறுநாளும் அவனுக்கு வீட்டில் இருந்து கஞ்சி, பால் எல்லாம் போயின.

''இன்னைக்குமா?'' என்றான் ராஜகோபால்.

''அசட்டுத்தனமாப் பேசாதீங்க. போறப்போ அவர் அப்பா உங்ககிட்டேயும்தானே சொன்னார்...''

''அதுக்காக நீ பார்க்கிற மாதிரி அவன் சம்சாரம்கூடப் பார்த்துக்க மாட்டா. தவிரவும், அவன் சரியில்லை.''

மஞ்சுளா அவரை விழித்துப் பார்த்து, ''என்ன சரியில்ல?'' என்றாள்.

''வந்து... குடிக்கிறான்போல இருக்கு. இந்தக் காய்ச்சல்லகூட சிகரெட் பிடிக்கிறான். ரூம் முழுக்க பொம்பளைங்க படத்தை அசிங்கமா வரைஞ்சுவெச்சிருக்கான்.''

''ச்சும்மா உளறாதீங்க... அது ஆர்ட்.''

''என்ன பெரிய ஆர்ட். சினிமாவா எடுத்தா அது போர்னோ; வரைஞ்சா ஆர்ட்டா? எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இரு. திடீர்னு கையைப் பிடிச்சு இழுத்துருவான்.''

''போதும். வாயை மூடுங்க'' என்றாள் மஞ்சுளா.

இரண்டாம் நாள் ஹரி கொஞ்சம் எழுந்து அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருக்க, ''இப்பவும் புத்தகம் படிக்கணுமா?'' என்றாள் மஞ்சுளா.

அவன் மூடிவைத்துவிட்டு, ''வாங்க மேடம்'' என்றான். கையில் இருந்த பாத்திரத்தைப் பார்த்துவிட்டு, ''ஐயோ... ரொம்பச் சிரமம் உங்களுக்கு.''

''என்ன சிரமம்... வெறும் ரசம் சாதம்.'' என்றவள், ''எங்க போயிருந்தீங்க பத்து நாளா? அப்ப உங்களுக்கு ரெண்டு லெட்டர் வந்தது.''

''தேங்க்ஸ். நெல்லை பக்கம் பிரம்மதேசம்னு ஒரு ஊர்ல, சோழர்கள் கட்டின பழைய கோயில் இருக்கு. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய சிற்பங்கள். வரையப் போயிருந்தேன்.''

''எப்பவும் கோயிலைத்தான் வரைவீங்களா?'' என்றாள். லேசாக வியர்த்தது. கான்வாஸ்களில் இருந்த பெண்கள் படங்கள் நினைவுக்கு வந்தன.

''இல்லீங்க. சில சமயம் இயற்கைக் காட்சி, அழகான முகங்கள்... வரையிறது உண்டு.''

''சாப்பிடுங்க... உங்களுக்குப் பிடிச்ச ஓவியர் யார்?''

''ருகேண்டாஸ். கேள்விப்பட்டிருக்கீங்களா?''

''இல்லை. எனக்கு ரெம்ப்ராண்ட்தான் பிடிக்கும்'' என்றாள்.

அவன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, ''மை காட்!'' என்றான்.

''ஓவியர் மதி, எனக்குப் பெரியப்பா'' என்று மஞ்சுளா புன்னகைத்தாள்.

அவன் மறுபடியும், ''மை காட்!'' என்றான். ''எனக்குத் தெரியவே தெரியாது மேடம். என்ன ஒரு மேதை அவர்!'' என்றான். இப்போது அவன் பார்வையே மாறிவிட்டது.

''நான் சந்திக்க விரும்பிய ஆளுமைகளில் அவரும் ஒருவர்'' என்றவன் தயங்கி, ''நீங்க வரைவீங்களா?'' என்றான்.

''இல்லை... எங்கே அதுக்கெல்லாம்விட மாட்டாங்க. பெரியப்பாவையே கொஞ்சம் தள்ளித்தான் வெச்சிருந்தாங்க... ரசிக்கிறதோடு சரி.''

''அதுக்கே ஞானம் வேணுங்க. உங்க பெரியப்பான்னா... சொந்தப் பெரியப்பாவா?' என்று நம்ப முடியாததுபோல கேட்டவன், ''உங்க பெரியப்பா உங்களை வரைஞ்சிருக்காரா?' என்று கேட்டான்.

''இல்லை. ஏன்?'

''உங்க முகத்தை அவர் படங்களில் பார்த்த நினைவு'' என்றான்.

அவள் பேசவில்லை. பெரியப்பா, மஞ்சுளாவின் அம்மாவை வரைந்திருக்கிறார். 'உன் அம்மாவோடது அபூர்வமான முகம்’ எனச் சொல்லியிருக்கிறார். அவர் பெரும்பாலும் தமிழ்ப் பெண்களை வரைந்தது இல்லை. அவருக்கு இங்கேவிட வங்காளத்தில்தான் பெரிய வரவேற்பு. குறிப்பாக, சக்தியின் பத்து வடிவங்களான தசமகா வித்யாக்களை மையமாக வைத்து, அவர் வரைந்த வரிசை பெரிய புகழையும் எதிர்ப்பையும் பெற்றது. எதிர்ப்பின் காரணம், அவை ஆபாசமாக இருக்கின்றன என ஒரு குழுவுக்குத் தோன்றிவிட்டதுதான். 'பத்து வித்யாக்களில் கமலா என்ற தாமரைக் கடவுளுக்கு மட்டும், உன் அம்மாவை மாடலாக நினைத்துக்கொண்டேன்’ என அவளிடம் பெரியப்பா சொல்லியிருக்கிறார்.

''நீங்க எப்பவும் நிலக் காட்சிகள், உடல்கள்தான் வரைவீங்களா? நவீன வடிவங்களில் உங்களுக்கு ஆர்வம் இல்லையா?'' என்று ஹரியிடம் கேட்டாள் மஞ்சுளா.

அவன் சற்று கோபமுற்று, ''அவையெல்லாம் நீர்க்குமிழிகள்; காலாவஸ்தை அல்லது பாசிங் ஷோ'' என்றான்.

''பாசிங் ஷோ என்ற ஒரு சிகரெட் இருந்தது. பெரியப்பா அதைத்தான் பிடிப்பார். அவரது இடது கையில் இன்னொரு தூரிகைபோல அது எப்போதும் புகையும். அந்தப் புகை வாசம், எப்போதும் அவரது அறையில், உடைகளில், ஓவியங்களில் இருந்தது. அவருடைய ஓவியங்களில் தெரிந்த புகைமூட்டம் அவரது சிகரெட்டில் இருந்து வந்ததுதான்'' என்றவள், '' 'குழந்தை இது ஒரு பாணி; அபநீந்திரநாத் தாகூர் பாணி’ என வங்காளத்தில் சிலர் சொல்வார்கள்’ எனக் கேலியாகச் சொல்லியது உண்டு. ஆனால், எவ்வளவு புகை மூடி எழுதினாலும், அப்பா கண்டுபிடித்துவிடுவார். அம்மாவை அடிக்கவே செய்தார். 'உன்னை யாருடி மாடிக்குப் போகச் சொன்னா? அங்கே போகக் கூடாதுனு சொன்னேன் இல்லையா?’ என்பார் பல்லைக் கடித்துக்கொண்டே. அவள் 'நான் போகவே இல்லை’ எனச் சாதித்தாள். 'பிறகு எப்படி உன் முகம் அவர் படங்களில் வருது? நான் என்ன முட்டாள்னு நினைச்சுட்டீங்களா ரெண்டு பேரும்?’ எனக் கத்தினார். 'இன்னைக்கே நான் அவரை வேற எங்கயாவது போகச் சொல்றேன். இது குடும்பம் நடத்துற இடம்’ எனக் குதித்தார். ஆனால், அது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. வீடு முழுக்க பெரியப்பாவின் பெயரில் இருந்தது. அவர் மீதான அப்பாவின் வெறுப்புக்கு அதுவும் ஒரு காரணம். அந்தக் கோபத்தை எல்லாம் அவர் அம்மா மீது காட்டினார். அவள் வீட்டில் இருந்து பணம் வாங்கி வரச் சொன்னார். அதைவைத்து வேறு எங்கேயாவது போய்விடலாம் என்பது அவர் எண்ணம்.

இதைக் கேள்விப்பட்டபோது பெரியப்பா ஒருகணம் முகம் சுருங்கி, 'ஓர் ஓவியன் கண்களால் அல்ல... மனதால் பார்க்கிறான். உண்மையில் உன் அப்பன் அஞ்சுவது என்னிடம் அல்ல; உன் அம்மாவிடம். வங்காளத்தில், கீழே கிடக்கும் சிவனை, சக்தி மிதித்துக்கொண்டு நிற்பதுபோல ஒரு படம் உண்டு. பார்த்திருக்கிறாயா?’ என்றார். இதுமாதிரியான சந்தர்ப்பங்களில் அம்மா ஒரு நாள், 'உன் அப்பா மிகச் சிறிய மனிதர். உன் பெரியப்பா எவ்வளவு பெரிய மனிதரோ, அவ்வளவு சிறிய மனிதர் இவர். அவர் பெரிதாக பெரிதாக, உன் அப்பா சிறிதாகிக்கொண்டே இருக்கிறார்’ என்றாள்'' என மஞ்சுளா சொல்லிக்கொண்டிருந்தாள்.

அப்போது கணத்துக்குக் கணம் மாறிக்கொண்டேயிருந்த மஞ்சுளா முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு, ''நான் ஒருநாள் உங்களை வரையலாமா? உங்களுடையது அபூர்வமான முகம்'' என்று அவள் கண்களைப் பார்த்தான் ஹரி.

மஞ்சுளா அந்தக் கேள்வியால் தாக்கப்பட்டு மிகவும் நாணி, ''நான் வர்றேன்'' என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டாள்.

அன்றைக்கு ராத்திரி மஞ்சுளாவுக்கு அபத்தமாக ஒரு கனவு வந்தது. ரெம்ப்ராண்டின் போர்வீரன் மாதிரி சிவப்பு ஆடையில் யாரோ குதிரையில் அவளைத் தூக்கிப்போவதுபோல். அப்போது அவன், குதிரை, அவள்... என யாருமே ஆடை அணிந்திருக்கவில்லை. நெஞ்சு படபடக்க எழுந்து அமர்ந்துகொண்டாள். உடல் முழுக்க சுரந்து ஒரு வியர்வைக் குளமாக மாறிவிட்டது. பாத்ரூம் போய்வந்த பிறகும், இரவு வெகுநேரம் தூங்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள். என்ன ஒரு கனவு!

பக்கத்தில் ராஜகோபால், அவர் கன்னத்தில் கோழை எச்சில் வடிய குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார்.

''மஞ்சுளா மேடம், சினிமாவுக்கு வர்றீங்களா. துல்கர் சல்மான் படம்'' என்றாள் சுசீலா. மஞ்சுளாவோடு அலுவலகத்தில் ஆபீஸில் வேலைபார்ப்பவள்.

மஞ்சுளாவுக்கு, துல்கர் சல்மான் யார் எனத் தெரியவில்லை. இருந்தாலும், ''எனக்கு அவனைப் பிடிக்காது'' என்றாள் பொதுவாக.

''சல்மான் பிடிக்காதா?'' என்று கேட்டுவிட்டுச் சிரித்த லலிதா, ''மாமிக்கு வயசு ஆச்சு இல்லியோ...'' என்றாள் கிண்டலாக.

''என்னடி வயசாச்சு..? 35 ஒரு வயசா? (கொஞ்சம் வயதை மறந்துவிட்டாள்.. 39) ''இன்னொண்ணு தெரியுமா... எனக்கு இந்தியே பிடிக்காது'' என்றாள் மஞ்சுளா.

''ஐயோ மாமி, இது இந்தி இல்லை... மலையாளம்'' என்று கேலியாக வாய்விட்டுச் சிரித்தாள் சுசீலா.

மஞ்சுளாவுக்குத் திக்கென்றது. அவமானமாக உணர்ந்தாள். அவளிடம் மஞ்சுளா ஏதோ சொல்ல முயன்றபோது, ''சுசீலா மேடம்... உங்களை ஏ.ஓ கூப்பிடுறார்'' என்றார் அலுவலக உதவியாளர். சுசீலா உள்ளே போய் அரை மணி நேரம் கழித்து, முகம் எல்லாம் மந்தகாசமாக வெளிவந்தாள்.

''என்னடி சிரிச்சுட்டே வர்ற. அந்தாள் என்ன சொன்னார்?''

''ஒண்ணும் இல்லே. இயர் எண்டு ஸ்டேட்மென்ட் பத்தி கேட்டுட்டு இருந்தார்'' என்றாள் சுசீலா.

'வருடம் முடிவதற்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிறதே. தவிரவும் இதற்கு இவ்வளவு நேரமா? புதிதாக வந்திருக்கிற அதிகாரி நாகர்கோவில்காரர் என்பது நினைவுக்கு வந்தது. ஆனால், மலையாளிபோல. அதனால்தான் இந்தப் பெண்களும், திடீரென மலையாளப் படங்கள் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், நாகர்கோவில் தமிழ்நாட்டில்தானே இருக்கிறது?’ என நினைத்துக்கொண்டாள் மஞ்சுளா.

பிறகு, இரு சிநேகிதிகளும் ரகசியமாக ஏதோ பேசிச் சிரித்துக்கொள்ள மகா எரிச்சலாக வந்தது. 'வேலையைப் பாருங்கடி மேனா மினுக்கிங்களா’ எனக் கத்த விரும்பினாள். பிற்பகல் இருவரும் கொஞ்ச நஞ்ச வேலைசெய்யும் பாசாங்குகளையும் விட்டுவிட்டு, வாராந்தரிகளைப் படித்துக் கொண்டிருந்தார்கள். ஆபீஸில் ஏறக்குறைய எல்லோருமே இப்படித்தான் என்றாலும், இவர்கள் கொஞ்சம் ஓவர்.

''மேடம், இதைப் பாருங்க. என்னம்மா படம் போட்டிருக்கான்'' என்றாள் லலிதா.

மஞ்சுளா அதைப் பார்க்காமலே ''இதெல்லாம் என்ன படம்?!'' என்றாள் கேலியாக.

ஆபீஸ் விட்டுக் கிளம்பி வெளியே வந்ததும், வழிநெடுக சுசீலா அவளது பாய் ஃப்ரெண்டு பற்றி, அளந்துகொண்டே வந்தாள். ''He is totally mad மேடம். சரியான அசடு'' என்றாள். 'அசடைக் காதலிக்கிறவள் முட்டாள்’ எனச் சொல்ல விரும்பினாள் மஞ்சுளா. ஆனால், ''நான் கிளாசிக்குகளை மட்டும்தான் பார்ப்பது சுசீலா. எல்லாவற்றையும் பார்ப்பது இல்லை; சாப்பிடுவது இல்லை; படிப்பது இல்லை'' என்றாள்.

''அதான் சொன்னேனே... உங்களுக்கு வயதாகிவிட்டது'' -சொல்லிவிட்டு சத்தமாகச் சிரித்தாள் சுசீலா.

மஞ்சுளா மிகக் கோபமுற்று ''கிளாசிக்குகளைப் பார்ப்பது ரசனையோட ஆழத்தின் அடையாளம். வயதாகிவிட்டதின் அடையாளம் இல்லை.''

ஆனால், சுசீலா சொன்னதுபோல மஞ்சுளா நிர்மலிடம் சொல்லியிருக்கிறாள். பெரியப்பாவைத் தேடிவந்த எத்தனையோ மனிதர்களில் ஒருவன் நிர்மல்; வங்காளி. அவன் ஒருநாள் படி இறங்கும்போது கல்லூரியில் இருந்து வந்த மஞ்சுளாவிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்து, ''இதைப் படித்துப் பார்'' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

அது வங்காளத்தில் மைத்ரேயி தேவி என்பவர் எழுதிய நாவலின் மொழிபெயர்ப்பு. எதிர்பார்த்ததுபோல அது ஒரு காதல் கதை. 'கொல்லப்படுவது இல்லை’ என்பது அதன் தலைப்பு. உலகப் புகழ்பெற்ற ஓர் இந்தியத் தத்துவவாதியைப் பார்க்க வருகிற வெளிநாட்டு சீடன் ஒருவன், அவரது பதின்வயது மகளிடம் காதல்கொள்கிறான்; பூஜிக்க ஆரம்பிக்கிறான்.

'அது ஓர் உண்மைக் கதை. இந்தக் கதையில் வருகிற நபர்கள் உயிரோடு இருக்கிறார்கள்’ என நிர்மல் பின்னாளில் சொன்னான். மஞ்சுளாவுக்கு அந்தக் கதை அபாரமான மனக் கிளர்ச்சியைத் தந்தது.

''இதை ஏன் என்னிடம் கொடுத்தீர்கள்? இந்தக் காதல் துக்ககரமாக முடிந்துவிடுகிறதே. இதில் பெண்ணின் தந்தையார் காதலுக்கு ஒப்புக்கொள்வது இல்லையே...'' என்று அவனிடம் கேட்டாள்.

அவன் தளர்ந்துபோய் ''ஆமாம்'' என்றான்.

''உன் தந்தையும் இதற்கு ஒப்புக்கொள்ளப்போவது இல்லை. எந்தப் பெண்ணின் தந்தைதான் என்னைப் போன்ற பரதேசிகளை ஏற்றுக்கொள்வார்?''

''இவையெல்லாம் தெரிந்தும் என்ன காரணத்தால், பரதேசிகள் பெண்களுடன் காதலில் விழுகிறார்கள்?'

''பரதேசிகளுடன் பெண்கள் ஏன் காதலில் விழுகிறார்களோ, அதே காரணத்தால்தான்.''

மஞ்சுளா, அவனை ஆழமாகப் பார்த்து, ''நீங்கள் காதலைச் சொல்லும் முறை இதுதானா?'' என்றாள்.

அவன் சிரித்துக்கொண்டே, ''வேறு எப்படிச் சொல்லவேண்டும்?'' என்று கேட்டான்.

''ஆங்கிலப் படங்களில் சொல்வதுபோல நேரிடையாக அல்லது இந்திப் படங்களைப்போல சற்றே நாடகத்தனமாக, சஞ்சய் தத்தின் புதிய படத்தைப் பார்த்தீர்களா?''

''நான் வங்காளி. வங்காளப் படங்களில் சொல்வது போலத்தான் சொல்வேன்.''

''அதுவும் பழைய வங்காளப் படங்கள்.''

''ஆம்... ஆனால் அவை கிளாசிக்குகள்.''

''அவற்றை வயதானவர்கள்தான் பார்ப்பார்கள்.''

அவன் மறுத்து, ''இல்லை... ஆழமானவர்கள், ரசனை உடையவர்கள் கிளாசிக்குகளைத்தான் பார்ப்பார்கள். அவைதாம் படங்கள். மற்றவை எல்லாம், காலாவஸ்தை அல்லது பாசிங் ஷோ.''

மஞ்சுளா சட்டென உறைந்து நின்றாள். நிர்மலை ஹரிக்குத் தெரியுமா? பிறகு எப்படி அதே வார்த்தைகளைப் பயன்படுத்தினான். நிர்மல், பின்னாளில் பெரிய எழுத்தாளர் ஆனான். ஒருவேளை ஹரி அவனது எழுத்துக்களைப் படித்திருப்பானா? அல்லது இவர்களைப் போன்றவர்கள் ஒரே மாதிரிதான் பேசுவார்களா?

''மாமி ஏன் நின்னுட்டீங்க? நடக்க முடியலியா?' என்றாள் சுசீலா.

''டோன்ட் கால் மீ மாமி.''

சுசீலா சிரித்துக்கொண்டே ''மாமி ராக்ஸ்'' என்றவள், ''மாமி நீங்க கொஞ்சம் தொப்பையைக் குறைக்கணும். மூச்சு வாங்குது உங்களுக்கு. ஜிம்முக்குப் போங்க.''

''ஜிம்... எவ்வளவு காசு ஆகும் சுசீலா?''

''அதிகம் ஆகாது மாமி. மாசம் சுமார் 2,000 ரூபாய் வரும்.''

2,000 ரூபாயா? ராஜகோபாலுக்கு மார்பு அடைத்துவிடும். மஞ்சுளா பக்கவாட்டுக் கடைக் கண்ணாடிகளில் ஒருமுறை, தன் வயிற்றை கடைக்கண்ணால் பார்த்தாள். 'ஐயோ... இறங்கிய இந்த வயிறையா ஹரி வரைகிறேன்’ எனச் சொன்னான்? ச்சே... முகத்தைத்தானே வரைகிறேன் எனச் சொன்னான். அதற்கு எதற்கு ஜிம்முக்குப் போக வேண்டும்? எனக்கு என் அம்மாவைப்போல தாமரைக் கடவுள் முகம் என்றல்லவா சொன்னான்? ச்சே... அவன் எங்கே அப்படிச் சொன்னான். பெரியப்பா, அம்மாவின் முகத்தை அல்லவா அப்படிச் சொன்னார்? இல்லை நிர்மலா? அவளுக்குக் குழம்பியது.

நிர்மல் சொன்னதுபோலவேதான் அப்பா நடந்துகொண்டார். தன்னைப்போல ஒரு நபரைத் தேடிப்பிடித்துக் கொண்டுவந்தார்.ராஜகோபாலைப் பார்த்ததுமே அம்மா சொல்லிவிட்டாள்... 'இந்தாள் உங்கப்பாவின் நகல்.’

'சும்மா இரு. நீ என்ன நினைத்துக்கொண்டு, இப்படியெல்லாம் பேசுகிறாய் என எனக்குத் தெரியும்’ - அப்பா கத்தினார். ஆனால், இவற்றையெல்லாம் தடுக்கக்கூடிய பெரியப்பாவும் அப்போது இல்லை. சுந்தரவனக் காடுகளுக்குப் படம் எழுதுகிறேன் எனப் போனவர், பாம்பு தீண்டி இறந்துவிட்டார். அப்பா போகவே இல்லை. அம்மாதான் ரொம்ப அழுதாள். 'தேவி, இறுதியில் தண்டித்துவிட்டாள்’ என ஒருநாள் அம்மாவிடம் சொன்னார். 'கலை என்கிற பெயரில் இவர் பண்ணின சேட்டைகளை, அசிங்கங்களை எத்தனை நாள்தான் அவளும் பொறுத்துக்கொண்டிருப்பாள்?’ இறுதியில் அப்பாவே வென்றார். படம் வரையத் தெரியாத, ரசிக்கத் தெரியாத, அவற்றைப் பார்க்கவே விரும்பாத அப்பா!

இந்தச் சம்பவம் மஞ்சுளாவிடம் மிகப் பெரிய அச்சத்தை உருவாக்கிவிட்டது. நிர்மல் திரும்ப வந்து அவனுடன் அழைத்தபோது, அவள் போகவில்லை.

''நான் எதை நம்பி உன்னுடன் வருவது?

நீ எங்கேயாவது போய் பாம்பு கடித்து அநாதையாக இறந்துகிடந்தால், பிறகு என் கதி என்ன?'' என்று அவனிடம் கேட்டாள்.

''வங்காளத்தின் அந்தப் பகுதிகளில் பாம்பு தீண்டி இறப்பது சகஜம்தான். இன்றும் அங்கே பாம்புக் கடியால் இறப்பவர்கள் அதிகம்.பெரியப்பா சற்று அஜாக்கிரதையாக இருந்துவிட்டார்'' என்றான் நிர்மல்.

''அந்த அஜாக்கிரதை என் வாழ்வில் நிகழ வேண்டாம். நீ படம் எழுதுவது, ஊர் ஊராகச் சுற்றுவது எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தால், நாம் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம்.''

அவன் ஆச்சர்யம் அடைந்து அவளையே பார்த்தவண்ணம் சற்றுநேரம் நின்றிருந்தான்.பிறகு ஒரு பெருமூச்சுடன், ''சட்டென ஏன் உன்னைச் சக்தியற்றவளாக மாற்றிக்கொண் டாய்? நான் உன்னை உன் அம்மாவின் மகள் என நினைத்திருந்தேன். ஆனால் இப்போது... நிச்சயமாக நீ உன் அப்பாவின் மகள்தான்'' என்றான்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை. உதடுகள் துடிக்கப் பேசாது நின்றிருந்தாள். பிறகு, அவன் அவளைச் சந்திக்க வரவேயில்லை.

ஒரு கார் சர்ரென்று அவர்கள் அருகில் வந்து நின்றது. அந்த அரை மலையாளி அதிகாரிதான். அவர் உள்ளிருந்து தலையை நீட்டி, ''மிஸ் சுசீலா, உங்க ஏரியா பக்கம்தான் போறேன்... வர்றீங்களா?'' என்றார்.

அவள் காத்திருந்தவள்போல் ஏறிக்கொண்டு ''மேடம் நீங்க...''

அவர் அப்போதுதான் அவளைக் கவனிப்பதுபோல, ''ஓ மஞ்சுளாவா? நீங்களும் வாங்களேன்...'' என்றார்.

''நோ சார். எனக்குக் கொஞ்சம் பர்ச்சேஸ் இருக்கு'' என்றாள் கடுப்புடன்.

கார் விலகிப் போனபோது ஏனோ கண்கள் துளிர்த்தன. தன்னை உலுக்கிக்கொண்டாள்... ச்சே. நிர்மல் சொன்னது நினைவுக்கு வந்தது 'ஏன் சட்டென உன்னை சக்தியற்றவளாக மாற்றிக்கொண்டுவிட்டாய்?’

நடைபாதைக் கடைகளில் தேவை இல்லாத பொருட்களாகத் தேடிப் பிடித்து வாங்கினாள்.காய்கறிகள், பழங்கள், ஹரிக்கு ஜூஸ் போட்டுக்கொடுக்கலாம். புத்தகக் கடை ஜன்னலில் 'Outline of art’ என்ற ஒரு புத்தகத்தைப் பார்த்தாள். 1,300 ரூபாய். யோசித்து நீளமாக முழுகோதுமை ரஸ்க் பாக்கெட் வாங்கினாள். ஹரிக்கு இன்னமும் உடல் சரியாகவில்லைதானே? இன்னொரு முறை கடைக் கண்ணாடியில் வயிற்றை இழுத்துப் பார்த்துக்கொண்டாள். ராஜகோபால் சத்தம் போட்டாலும் பரவாயில்லை என, ஒரு மாதம் ஜிம் போய்ப் பார்த்துவிட வேண்டும். அவள் வீட்டுக்குப் போவதற்குள் ராஜகோபால் வந்திருந்தார்.

''மஞ்சு, சப்பாத்திக்கு மாவு போட்டு வெச்சிருக்கேன். கல்லுலே இட்டு எடுத்துடு.''

''இருங்க... முதல்ல ஹரிக்கு ஏதாவது குடுத்திட்டு வர்றேன்'' என்றவளை ராஜகோபால் விநோதமாகப் பார்த்து, ''அவனைப் பார்த்துக்க ஆள் வந்தாச்சு'' என்றார்.

''யார்... அவர் அப்பாவா?''

''இல்ல... அவன் ஃப்ரெண்டாம். இங்கே எங்கேயோ பக்கத்திலே இருக்கா. அவளுக்கு இவனே பரவாயில்லை. மத்தியானமே வந்துட்டா. ரெண்டு பேரும் அரைகுறையா டிரெஸ் பண்ணிட்டு, ஏதோ களிமண் சிலை பண்றேன்னு கொட்டம் அடிச்சிட்டு இருக்குதுங்க. 'இனி மாமியைச் சிரமப்பட வேண்டாம்னு சொல்லுங்க’னு ஹரி சொன்னான்'' என்றார் ராஜகோபால்.

மஞ்சுளா உறைந்துபோய் கொஞ்ச நேரம் அறை நடுவிலேயே சிலைபோல நின்றிருந்தாள். பிறகு கைப்பையை வீசிவிட்டு சோபாவில் தொப்பென அமர்ந்தாள்.

பிறகு, ''எனக்கு ஒரே தலைவலி. சப்பாத்தி எல்லாம் போட முடியாது'' என்று அலறினாள்!

ஆனந்தவிகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 09, 2014 7:08 pm

சாரி நேசன்......எனக்கு சுத்தமாய் புரியலை இந்த கதை சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக