புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_c10வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_m10வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_c10 
336 Posts - 79%
heezulia
வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_c10வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_m10வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_c10வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_m10வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_c10வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_m10வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_c10வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_m10வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_c10வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_m10வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_c10வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_m10வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_c10வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_m10வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_c10வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_m10வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_c10வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_m10வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Oct 09, 2014 7:03 am

வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Tamak-dr
வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Tamak06

சென்னை, அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையின், நான்காம் தளத்தில் இருக்கிறது குடல் இரைப்பை சிகிச்சைத் துறை. இதன் துறைத் தலைவர் பேராசிரியர் சந்திரமோகனும், அவருடைய மருத்துவக் குழுவினரும் கடந்த 5 வருடங்களாக, வயிற்றுக்குள் போடப்படும் தேவையற்றக் ‘குப்பைகள்’ பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.

64 நோயாளிகளிடம் ஆய்வு செய்ததில், வயிற்றுக்குள் இருந்து பல், பல் செட், ஸ்டேப்ளர் பின், ஹேர் கிளிப், பேனா மூடி, தையல் ஊசி, நாணயம், எலும்பு, மாங்கொட்டை, பிளேடு, பட்டன், சின்ன பேட்டரி போன்ற பல பொருட்களை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து எடுத்துள்ளனர் என்ற தகவலைக் கேட்டு நமக்கு வயிற்றைக் கலக்கியது.
வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Tamak05
வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Tamak04
வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Tamak03
வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Tamak02
வயிற்றுக்குள் போடப்படும் குப்பைகள்! Tamak01

‘‘பல் செட்டைக் கூடவா விட்டு வைக்கவில்லை...” என்று நாம் வாய்ப் பிளக்க, புன்னகைத்தபடியே பேசினார் டாக்டர் சந்திரமோகன்.

‘‘பல்செட்டைக் கழட்டாமலேயே, வாயைத் திறந்து வெச்சுக்கிட்டுத் தூங்கும்போது, அது தானாகவே கழண்டு, உள்ளே போயிடும்! இருக்கிறதுலேயே அதிகமா வயித்துக்குள்ள போற பொருள் பல்செட் தான்!’’ என்ற டாக்டர் சந்திரமோகன், இது குறித்த ஆய்வறிக்கைகளை, தன் குழுவினருடன் அண்மையில் கனடாவில், வான்கூவர் நகரில் நடந்த சர்வதேச குடல் இரைப்பை மருத்துவ மாநாட்டில் சமர்ப்பித்துத் திரும்பி இருக்கிறார்.

‘‘நாம் உண்ணும் உணவை இரைப்பைக்குக் கொண்டு சேர்ப்பது உணவுக் குழாய். உணவுக்குழாய் 25 செ.மீ. நீளம் உள்ளது. இதன் ஆரம்பத்தில் ஒரு சிறிய பகுதி கழுத்திலும், முடிவில் ஒரு சிறிய பகுதி வயிற்றிலும் இருக்கிறது. ஆனால், முக்கால்வாசிப் பகுதி மார்பில்தான் இருக்கிறது.

நாம் சாப்பிடும் சாப்பாடு இதன் வழியே செல்லும்போது, பாம்பு இரையை முழுங்கும்போது ஏற்படும் அசைவு போன்ற (பெரிஸ்டால்ஸிக் மூவ்மென்ட்) இயக்கத்தின் மூலம்தான் செல்கிறது. இயற்கையாகவே இந்தக் குழாய் சில இடங்களில் சுருக்கமானது. கழுத்துப் பகுதியில் இருந்து மார்புப் பகுதிக்குச் செல்லும் இடமும், உணவுக்குழாய் முடிந்து இரைப்பைக்குச் செல்லும் இடமும் சுருக்கமானது.

மேலும், ரத்தக் குழாய் மற்றும் சுவாசக் குழாய் இந்த உணவுக்குழாயைக் கடக்கும் இடங்களிலும் சுருக்கமாக இருக்கும். உணவுக்குழாய் சுருங்கி இருக்கும் இந்த இடங்களில் எல்லாம், பொருட்கள் மாட்டிக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம்.

தெரிந்தோ, தெரியாமலோ எதையாவது விழுங்கி, உணவுக்குழாய்க்குள் சென்றுவிட்டால், அதை நாங்கள் ‘ஃபாரின் பாடீஸ்’ என்று அழைப்போம். இவற்றுள் அதிகமாக விழுங்கப்படுவது, பொதுவாக பல்செட்டும், நாணயமும் தான். இதைத் தவிர, கொண்டை ஊசி, ஊக்கு என்ற அது திறந்தபடி, மூடியபடி... இதோ இப்போது ஒரு பையன், பாட்டில் மூடியை முழுங்கி இருக்கிறான்...! இப்படி மொத்தம் மொத்தம் 64 பொருட்களை எடுத்திருக்கிறோம், இந்த ஐந்து வருடங்களில்! இந்த மாதிரியாக, ‘மலை முழுங்கி மகாதேவன்கள்’ இரண்டு வயதில் இருந்து 70 வயது வரை இருக்கிறார்கள்.

முக்கால்வாசி நேரத்தில், தெரியாமல்தான் இந்தப் பொருட்கள் விழுங்கப்படுகின்றன... ஆக்ஸிடென்டல்தான்! சில சமயங்களில் குழந்தைகள் அல்லது சிறப்புக் குழந்தைகள் தெரியாமல் விழுங்கி விடுவார்கள். பல்செட்டை விழுங்கியவர்கள் எல்லாம், விழுங்கியது தெரியாமல், காலையில் எழுந்து, ‘காணோம்’ என்று தேடுவார்கள். பெரும்பாலும் எல்லோருமே உடனே வந்துவிடுவார்கள்... அதில் சிலர் மட்டும் விழுங்கியது தெரியாமலேயே, பழைய பல்செட் ‘உள்ளே’ இருக்க, புது பல்செட் வாங்கி மாட்டிவிடுவார்கள்! அப்படி ஒரு சிலருக்கு நாங்கள் அறுவை சிகிச்சை செய்திருக்கிறோம்.

ஒருவர், தன் பல்செட்டைக் காணோம் என்று புது பல்செட் வங்கிப் போட்டுவிட்டு, 23 நாட்கள் கழித்து, ‘‘டாக்டர் எனக்கு சாப்பாடு, தன்ணி எதையுமே முழுங்க முடியல.. கஷ்டமாக இருக்கு’’ என்று வருகிறார். பர்த்தால், உணவுக்குழலில் பல்செட்! இன்னொருத்தர், சொன்னால் நம்ப மாட்டீர்கள்...! ஏழரை வருடங்களாகப் பல்செட்டை வயிற்றுக்குள்ளேயே வைத்திருந்து, பின்னர் வந்தார். அந்தப் பல்செட், சுவாசக் குழாயிலும் போய் அதிலும் உணவுக்குழாயிலும் குத்தியபடி இருந்தது. ஏழரை வருஷங்கள் அப்படியே இருந்திருக்கிறது. மிகவும் சிக்கலான அறுவைசிகிச்சை அது!’’ - வேகமாக தன் மொபைலில் விரலை ஓடவிட்டபடியே பேசினர் சந்திரமோகன்.

‘‘ஏழரை வருஷமா அவருக்கு எதுவுமே தெரியலையா டாக்டர்?’’

‘‘முதல் ஐந்து வருடங்கள் எதுவும் அவருக்குத் தெரியவில்லை. அதன் பிறகு சாப்பிடவே முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார். ஆனாலும் அட்ஜஸ்ட் செய்து சாப்பிட்டு வந்திருக்கிறார். மனிதர் அதற்கும் பிறகுதான், ‘என்னமோ கோளாறு’ என்று பயந்துபோய் இங்கே வந்தார்’’.

‘‘விழுங்கும் பொருட்கள் தாமாகவே வெளியே வந்துவிடாதா?’’

‘‘சாதாரணமாக காசு மாதிரியான எந்தச் சிறிய பொருளுமே, உணவுப்பையைத் தாண்டிவிட்டால், அது தானாகவே ஆசனவாய் வழியாக, இயற்கையான பாதையில் வெளியே வந்துவிடும் வாய்ப்பு மிக அதிகம். 100க்கு 80 சதவிகிதம், இப்படித் தானாகவே வெளியே வந்துவிடும். மருத்துவரைப் பார்த்தால், அவர்களே அந்தப் பொருள் தானாக வெளியே வர சிகிச்சை அளிப்பார்கள்.

உள்ளே போகும் பொருட்களில் இரண்டு வகை உள்ளது. ஒன்று, எக்ஸ்ரேயில் தெரியக் கூடியது. இன்னொரு வகை, தெரியாது. உதாரணத்துக்கு மாங்கொட்டை, பெரிய காய்கறித் துண்டு போன்றவை எக்ஸ்ரேயில் தெரியாது. அதுவே பல்செட், ஊசி, ஊக்கு போன்றவை உலோகம் என்பதால் எக்ஸ்ரேயில் தெரியும். எக்ஸ்ரேயில் தெரியக்கூடிய பொருட்களை, அது நகர்வதை எளிதாக ‘அப்ஸர்வ்’ செய்து எடுத்துவிடலாம். நகராமல் ஒரே இடத்தில் மாட்டிக்கொண்டிருப்பதை ‘இம்பாக்ட்’ என்போம். அதை எப்படியாவது எடுத்தாகவேண்டும்.

இந்த ஐந்து வருடங்களில், ‘ஃபாரின் பாடீஸ்’-ஐ வெளியே எடுப்பதற்கு நாங்கள் மெடிக்கல், சர்ஜிகல் என இரண்டு முறைகளிலும் சிகிச்சை அளித்திருக்கிறோம். மெடிக்கல் என்றால், ‘எண்டாஸ்கோப்பி’ மூலமாக எடுத்துவிடுவது. ‘சர்ஜிகல்’ என்பது அறுவைசிகிச்சை மூலம் எடுப்பது. கூடுமான வரையில் ‘எண்டாஸ்கோப்பி’ மூலமாகத்தான் எடுக்க முயற்சி செய்வோம்.

எங்களுடைய முதல் முயற்சி எண்டாஸ்கோப்பி. ஏனெனில், உணவுக்குழாய், இரைப்பை, முன்குடல் எல்லாவற்றையுமே எண்டாஸ்கோப்பியில் பார்த்துவிட முடியும். அந்தப் பொருள் எங்கே மாட்டி இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியும் என்பதுடன், எண்டாஸ்கோப்பி மூலம் எடுப்பதற்குப் பலவிதமான உபகரகணங்கள் உள்ளன.

சாதாரணமாகப் பிடிப்பது போன்ற கிளிப், பல்செட் மாதிரியான கிழித்துவிடக் கூடிய கூரிய முனை உள்ள பொருட்களைச் சேர்த்து எடுப்பதற்கான ‘பாஸ்கட்’, பலூன் என்று பலவகையான சாதனங்களை உபயோகப்படுத்தி, எடுத்து விட முயற்சி செய்வோம்.

விழுங்கி வெகு நாட்கள் கழித்து வருபவர்களுக்கு, எங்காவது ஓரிடத்தில் அந்தப் பொருள் குத்திக்கொண்டிருக்கும் சமயத்தில்தான், எடுப்பது சிரமமாக இருக்கும். எண்டாஸ்கோப்பியில் எடுத்தால் கிழித்துவிடும் அபாயம் உண்டு என்பதால், அறுவைசிகிச்சை செய்து எடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறோம்.

உணவுக்குழாய் செல்லும்வழியில், மார்பில் இருப்பதுதான் கொஞ்சம் ஆபத்தான இடம். ஏனெனில், அதன் இரண்டு புறமும் நெருக்கமாக நுரையீரல் இருக்கிறது. முன்புறம் இதயம்... பின்புறம், உடலுக்கே ரத்தம் கொண்டுசெல்லும் பெரிய ரத்தக்குழாய்! இவை எல்லாம் உணவுக்குழலைச் சுற்றி அணைத்திருப்பது போல இருப்பதால், இங்கே இருக்கும் ஒரு ஊசியோ அல்லது பல்செட்டின் ஹூக்கோ அந்த உறுப்புகளில் ஏதேனும் ஒன்றைக் குத்திவிட்டாலும் பெரிய ஆபத்துதான். அது உயிருக்கே கூட ஆபத்தாக முடிய வாய்ப்பு இருக்கிறது.

இந்த மாதிரி சமயங்களில், எண்டாஸ்கோப்பி செய்யும்போது, எந்த உறுப்பையும் கிழித்துவிடாமல் எடுப்பதற்காக, மாட்டியிருக்கும் பொருளைப் பிடித்து இழுக்கும் கிளிப்பைச் சுற்றி ஓவர் டியூப் என்னும் அமைப்புடன் செலுத்தி எடுக்க முயற்சிப்போம். அதன் மூலமாகப் பிடித்து இழுக்கும்போது, எந்த ஆபத்தும் இன்றி வர வாய்ப்பு இருக்கிறது.

எங்களுக்குத் தினசரி வருவது ‘குழந்தைங்க காசை முழுங்கிட்டாங்க’ என்ற கம்ப்ளெயின்ட்தான்! அது மாதிரியான நேரங்களில் சுலபமாக எடுத்துவிடுவோம். ‘டாக்டர்...மாங்கொட்டையை முழுங்கிட்டார்’-னு ஓடி வருவார்கள். ‘ஹேர் பின்’ போன்ற மற்ற பொருட்கள் அப்படியே இருக்கும். ஆனால் மாங்கொட்டை நீரில் ஊறி அதன் வடிவம், பெரிதாகிவிடும்போது அதிகம் ஆபத்து! எடுப்பது மிகவும் கஷ்டம்!

அதே போல, தலை முடிக்கு போடும் கிளிப்பை ஒரு சின்னப் பையன் விழுங்கிவைக்க, அந்த கிளிப் உள்ளே போய் உணவு குழாயில் எசகுபிசகாகச் சிக்கிக்கொள்ள, மிகுந்த பிரயத்தனத்துக்கு பிறகு, சிரமப்பட்டு அந்த அறுவை சிகிச்சை செய்தோம். இப்போது, அந்தப் பையன் ஆரோக்கியமாக இருக்கிறார். சாப்பிடுவதில் கூட எந்தப் பிரச்னையும் இல்லை’’ என்கிறார் டாக்டர் சந்திரமோகன்.

யப்பா... பார்த்து, சாப்பாட்டை மட்டும் முழுங்குங்கப்பா!


கடைபிடிக்க வேண்டியவை


கிராமப்புறங்களில், எதையாவது விழுங்கிவிட்டால் அதை வெளியே கொண்டுவரும் முயற்சியில், வாந்தி எடுக்கவைப்பதற்காக உப்புக் கரைசல் போன்றவற்றைக் கொடுப்பார்கள்.

அது கூடாது. உள்ளே மாட்டியிருக்கும் பொருள் எக்குத்தப்பாக எங்காவது போய் சிக்கிக்கொள்ளக் கூடும். அது பிரச்னையை இன்னும் சிக்கலாக்கிவிடும். எனவே, கண்டிப்பாக சுயவைத்தியம் கூடாது.

விழுங்கிவிட்டது தெரிந்தாலோ, பொருளைக் காணவில்லை என்று சந்தேகம் வந்தாலோ மருத்துவரை அணுகி, உணவுக்குழாய் அல்லது இரைப்பையில் இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்வதே நல்லது. திறந்திருக்கும் ஊக்கு, ஊசி, பிளேடு போன்ற கூரிய முனை கொண்ட பொருட்களால்தான் ஆபத்து அதிகம்.

-பிரேமா நாரயணன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக