புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகாத்மா முதல் மன்மோகன் வரை!-தேசபக்தன்---தொடர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் எதற்காக இருக்கிறது?
55 கோடி ரூபாய் பணத்துக்காகத்தான் மகாத்மா உயிரைவிட்டார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
''நான் (கோட்சே) ஏன் காந்தியைக் கொலை செய்தேன்? இப்படிப்பட்ட சிந்தனை எனக்கு எதற்காக வந்தது? தாதாபாய் நௌரோஜி, விவேகானந்தர், கோபாலகிருஷ்ண கோகலே, பாலகங்காதர திலக், வீரசாவர்க்கர் ஆகியோரின் படைப்புகளையும், இவற்றுக்கு எல்லாம் மேலாக காந்தியின் எழுத்தோவியங்களையும்தான் அதிகம் படித்தேன். நான் படித்த படிப்பெல்லாம் என் கடமை எது என்பதை உணர்த்தியது.
இந்த நாட்டைப் பிளந்து துண்டாடியவரை தெய்வம் என்று மற்றவர்கள் மதித்தாலும், என் உள்ளம் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. காந்தி மீது எனக்கு கோபம்தான் வருகிறது. காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பது எனக்குத் தெரியும். என் எதிர்காலம் சிதைந்துபோய்விடும் என்பதும் உறுதி. ஆனால், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருந்தும் அட்டூழியத்தில் இருந்தும் இந்தியா விடுதலை அடைய வேண்டும். என்னை நீங்கள் முட்டாள் என்று சொல்லலாம். ஆனால், இந்தியா பலமுள்ள நாடாக ஆகவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். இந்தியா பலமுள்ள வல்லரசாக மாற வேண்டுமானால், காந்தியின் கொள்கைகளை நாம் கைவிட வேண்டும். அவர் உயிரோடு இருந்தால், அவரது விருப்பத்தை மீறி நம்மால் செயல்பட முடியாது. அதனால்தான் அவரைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டேன். தேசத்தந்தை என்று அவர் அழைக்கப்பட்டார். ஆனால், உண்மையான தந்தைக்குரிய கடமையில் இருந்து அவர் தவறிவிட்டார். அதனால்தான் பட்டப்பகலில் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்தியைச் சுட்டேன். இது உண்மை...''
- இந்தியாவின் தலையெழுத்தைத் தீர்மானித்த மகாத்மா காந்தியின் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கோட்சே அளித்த வாக்குமூலத்தின் சாராம்சம் இது!
'இந்தியாவை இரண்டு துண்டாடுவதற்கு காந்தி சம்மதம் தெரிவித்தார். தனது பிரார்த்தனைக் கூட்டங்களில் பகவத் கீதையுடன் குரான் ஓதுவதற்கு அனுமதித்தார். இந்துக்கள் கொல்லப்படும்போது அமைதியாக இருந்தவர், முஸ்லிம்கள் கொலையாகும்போது அதிகமாகக் கவலைப்பட்டார்.’ - என்றெல்லாம் காந்தி மீது கோட்சேவுக்கு கோபம் இருந்தாலும், உடனடியாக காந்தியைக் கொலை செய்தே ஆகவேண்டும் என்று ஜனவரி 30-ம் தேதியை சதி நாளாகத் தீர்மானிக்க வைக்கக் காரணம்... அந்த 55 கோடி ரூபாய் பணம்!
1947 ஆகஸ்ட் முதல் கொந்தளிப்பான காலகட்டம். இந்திய - பாகிஸ்தான் எல்லையில் ரத்தக்களறி தினந்தோறும் நடக்கிறது. அந்தச் செய்திகள் உடனுக்குடன் கோட்சேவுக்கு வருகிறது. 'நம் தாய்நாடு கூறு போடப்பட்டுவிட்டது. கழுகுகள் பாரத தேவியின் சதையைத் துண்டு துண்டாகக் கிழித்துவிட்டன’ என்று தன்னுடைய கொந்தளிப்பை வார்த்தைகளால் வடிக்கிறார் கோட்சே. கொல்கத்தா நவகாளி கலவரப் பகுதிக்குப் போய்விட்டு டெல்லி திரும்பிய காந்தி, ஏழு கோரிக்கைகளை முன்வைத்து சாகும்வரை உண்ணாவிரதம் உட்காருகிறார். இந்தக் கோரிக்கைகளில் ஒன்றுதான், பாகிஸ்தானுக்கு இந்தியா தருவதற்கு ஒப்புக்கொண்ட பணத்தைத் தரவேண்டும் என்பது!
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தானுக்கு இந்தியா 75 கோடி ரூபாய் பணத்தைத் தரவேண்டும். இதில், 20 கோடி ரூபாய் உடனடியாகத் தரப்பட்டது. மீதம் உள்ள 55 கோடியை இந்தியா தரவேண்டும். இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திக்கொண்டு இருப்பதால், அந்தப் பணத்தைக் கொடுத்தால் அதனை நமக்கு எதிரான போருக்குப் பயன்படுத்துவார்கள் என்று இந்தியா நினைத்தது. 55 கோடியைத் தராமல் இழுத்தடித்தனர். ''இந்த 55 கோடி ரூபாயை உடனடியாக பாகிஸ்தானுக்குக் கொடுத்தால்தான் உண்ணாவிரதத்தை நிறுத்துவேன்'' என்று காந்தி சொல்லிவிட்டார். காந்தியை இனியும் உண்ணாவிரதம் இருக்க அனுமதித்தால், அவர் உயிருக்கே அது ஆபத்தாக முடியலாம் என்பதை அவரது உடல் சொல்லியது.
இப்படிப்பட்ட இரண்டு கடினமான நெருக்கடியில் பிரதமர் நேருவும் அமைச்சர் படேலும் சிக்கிக்கொண்டனர். விடுதலை வாங்கிக் கொடுத்த மகாத்மாவை அநாதையாகச் சாகவிடும் அளவுக்கு அவர்களுக்கு மனம் கல்லாக ஆகிவிடவில்லை. உடனடியாக 55 கோடியை அனுப்பிவைக்கிறோம் என்று படேல் வாக்குறுதி கொடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட காந்தி தனது உண்ணாவிரதத்தை ஜனவரி 18-ம் தேதி முடித்துக்கொண்டார்.
''பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுத்தே ஆகவேண்டும் என்று நிபந்தனை விதித்து காந்தி உண்ணாவிரதம் தொடங்கிவிட்டார்'' என்ற தகவல் கோட்சேவுக்குக் கிடைக்கிறது. இதுபற்றி அவருடைய நண்பர் ஆப்தேவிடம் சொல்கிறார். ''இந்துக்களுக்கு எதிராக எதையாவது செய்துகொண்டே இருக்கிறார் காந்தி. இந்துக்கள் மானத்தோடு வாழ வேண்டுமானால், அது காந்தி உயிரோடு இருக்கும்வரை நடக்காத காரியம். அவரைக் கொலை செய்தே ஆகவேண்டும்'' என்று அப்போதுதான் கோட்சே முடிவுக்கு வருகிறார். அதனை அவரது சகாக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஜனவரி 30-ம் தேதி காந்தி, உயிரற்ற உடலாகச் சரிகிறார்.
காந்தியின் மீது பல்லாண்டுகளாக இவர்களுக்கு கோபம் இருந்தாலும்... உடனடிக் கோபம், பாகிஸ்தானுக்கு 55 கோடி கொடுக்கக் கூடாது என்பதுதான்!
55 கோடியை இன்னொரு நாட்டுக்குக் கொடுக்கக் கூடாது என்பதற்காக மகாத்மாவைப் பறிகொடுத்தோம். ஆனால், எத்தனை லட்சம் கோடிப் பணம் இந்தியாவை விட்டு வெளியில் இந்த 60 ஆண்டுகளில் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் போயிருக்கிறது?
உலக அளவில் கறுப்புப் பணம் பதுக்கலில் இந்தியாவுக்கு 8-வது இடம் கிடைத்துள்ளது. சுவிஸ் உள்ளிட்ட பல நாட்டு வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணம் 25 லட்சம் கோடி முதல் 70 லட்சம் கோடி வரை இருக்கலாம் என்று சொல்கின்றன புள்ளி விவரங்கள். இங்கே இருந்து கறுப்பாக வெளியே போய் வெள்ளையாக உள்ளே வருவதை 'முதலீடு’ என்றுகூடப் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
2000 முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்தியாவுக்குள் வந்துள்ள அந்நிய முதலீடுகளில் 41.80 சதவிகிதம் மொரிஷியஸ் நாட்டில் இருந்தும், 9.17 சதவிகிதம் சிங்கப்பூரில் இருந்தும் வந்துள்ளது என்று கடந்த ஆண்டு மத்திய அரசு சொல்லியது. கறுப்புப் பணத்தின் கொல்லைப்புற வழி இதுதான் என்று சி.பி.ஐ. மிகத் தாமதமாகக் கண்டுபிடித்துள்ளது. மொரிஷியஸ், கேமேன் தீவுகள் உள்ளிட்ட வரியில்லாத சொர்க்கங்கள் வழியாகத்தான், இவை மீண்டும் இந்தியாவுக்குள் வருகின்றன.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனையோ லட்சம் கோடி ரூபாய் வரை கணக்கில் வராத கறுப்புப் பணம் உருவாக்கப்படுகிறது என்று வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த கறுப்புப் பணத்தை அரசியல்வாதிகள் மட்டுமே போட்டு வைத்துள்ளார்கள் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். குளோபல் பைனான்சியல் இன்டெக்ரிடி அமைப்பின் இயக்குநர் ரேமண்ட் பேக்கர் சொன்னதாக வெளியான அறிக்கையின்படி, அரசியல்வாதிகள் போட்டுவைத்திருப்பது மொத்தமே மூன்று சதவிகிதம்தான். மற்றவை அனைத்தும் பன்னாட்டு கம்பெனிகள், தொழில் அதிபர்கள், வர்த்தக முதலைகள் பதுக்கிவைத்திருப்பது.
அதைப்பற்றி எல்லாம் கவலைப்படும் பிரதமராக இல்லை மன்மோகன் சிங். ''கறுப்புப் பணம் இருப்பது உண்மைதான். ஆனால், இந்தப் பிரச்னை எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் இருக்கிறது. இந்தியக் கறுப்புப் பணம் குறித்து ஆளாளுக்கு ஒரு தொகை சொல்கிறார்கள். எப்படி இவர்கள் இந்தத் தொகையைக் கணிக்கிறார்கள் என்று தெரியவில்லை?'' என்று எதுவும் தெரியாதவராகக் கேட்கிறார் மன்மோகன்.
ஏழை நாடு, வளரும் நாடு... என்று சொல்லிப் புலம்பியபடி பல லட்சம் கோடி ரூபாயை வெளிநாட்டில் பதுக்குவது, ஆயிரம் கோடி, லட்சம் கோடி ரூபாய் என்று ஊழல் செய்வதும் சர்வசாதாரணமாகப் போய்விட்டது என்றால், வெள்ளையர்களை விரட்டியதே உள்ளூர்க்காரர்கள் கொள்ளையடிப்பதற் காகத்தானா? இதனைத்தானே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் செய்தார்கள். அவர்களை விரட்டியதும் அதற்குத்தானே?
பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்களைப் பற்றி தாதாபாய் நௌரோஜி எழுதினார்...
''பிரிட்டிஷாருக்கு முந்தைய படையெடுப்பாளர்கள் நாட்டைச் சூறையாடி கொள்ளையடித்து திரும்பியபோது, பெரும் காயங்களை ஏற்படுத்தினர். இருப்பினும், தன் விடாமுயற்சியால் இந்தியா மீண்டும் பலம் பெற்றது. காயங்கள் ஆறின. படையெடுப்பாளர்கள் இந்தியாவிலேயே தங்கி ஆட்சியாளர்கள் ஆனபோதுகூட, அவர்களது ஆட்சி அன்றைய சூழலுக்கு ஏற்றார்போல் அமைந்திருந்ததே தவிர, நாட்டின் செல்வங்கள் ஏதும் வெளியேறவில்லை. இந்தியா உற்பத்திசெய்த பொருட்கள் இந்திய நாட்டிலேயே தங்கின.
ஆனால், ஆங்கிலேயரைப் பொறுத்தவரை பிரச்னை நூதனமானதாகும். போர்களின் மூலம் நாட்டின் மீது ஆங்கிலேயர் சுமத்திய கடன், பெரும் காயத்தை ஏற்படுத்தியது. உயிர்காக்கும் ரத்தத்தைத் தொடர்ந்து வெளியேற்றுவதன் மூலம், அடைந்த காயம் ஆறாதவாறு செய்கின்றனர்.
முன்னாள் படையெடுப்பாளர்கள் எல்லாம், இங்கும் அங்கும் வெட்டிய கசாப்புக்காரர்கள் என்றால்... ஆங்கிலேயர், நிபுணத்துவம் மிக்க கத்தியை இதயத்துக்குள் பாய்ச்சுபவர்களாக உள்ளனர். காயம் வெளியே தெரியாத அளவுக்கு நாகரிகம், வளர்ச்சி எனப் பேசி அதை மறைக்கின்றனர். அனைத்துக்கும் சவால் விட்டு இந்தியாவின் நுழைவாயிலில் காவலர்களாக நின்றுகொண்டு எத்தகைய செல்வத்தைக் காப்பாற்றுவதாகச் சொல்கிறார்களோ அவற்றையே பின்கதவு வழியாக அபகரித்து எடுத்துச் செல்கிறார்கள்'' - என்று எழுதினார் தாதாபாய் நௌரோஜி.
இன்றும் இந்த நிலைமைதான் தொடர்கிறது என்றால், இந்தியா பெற்றது சுதந்திரமா... வெறும் தந்திரமா? அல்லது சுரண்டலுக்கான சுதந்திரமா?
நன்றி- விகடன்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
அடுத்த வீட்டுக்குள் புகுந்து அப கரிப்பவர்களுக்குப் பெயர் கொள் ளையன், திருடன் என்றால்... சொந்த வீட்டுக் குள்ளேயே திருடுபவர்களுக்கு என்ன பெயர்? அரசியல்வாதிகளா?!
ஊழல் செய்தார், லஞ்சம் வாங்கினார், முறைகேட்டில் ஈடுபட்டார்... என்பதெல்லாம் இன்று வெட்கித் தலைகுனிய வைக்கும் கீழான செயல்களின் பட்டியலில் இல்லை. மாறாக, அது ஒரு கௌரவமாக மாறிவிட்டது. 'அஞ்சு வருஷம் இருந்தாரு... நல்லா சம்பாதிச்சாரு’ என்று மக்களே நற்சாட்சிப் பத்திரம் கொடுக்கப் பழகிவிட்டனர். 'அஞ்சு வருஷம் பதவியில இருந்தாரு... நல்லா திருடுனாரு’ என்று எவரையும் சொல் வதில்லை. காரணம், எப்படியாவது பணம் வந்தால், அது தகுதி வந்ததாக வரவு வைக்கப்படுகிறது. அதனால்தான், இன்று ஊழல்கள் வெளிப்படையாகவே வக்காலத்து வாங்கப்படுகின்றன.
நிலக்கரி முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தபோது, உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே சொன்னதுதான், இந்திய மனச் சாட்சியின் குரல்.
''நிலக்கரி... நிலக்கரி... என்று பேசுகிறார்கள். சில நாட்களுக்கு அப்படித்தான் பேசுவார்கள். பிறகு மறந்துவிடுவார்கள். இப்படித்தான் ஒரு காலத்தில் போஃபர்ஸ்... போஃபர்ஸ்... என்று பேசினர். அதன் பிறகு மறந்துவிட்டனர் அல்லவா? அப் படித்தான் நிலக்கரியையும் மறந்து போவார்கள்! யாரும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்'' - என்று ஷிண்டே சிரித்துக்கொண்டே சொல்ல... முன்வரிசையில் இருந்தவர்கள் சிலிர்த்தபடி கைதட்டினர். உற்சாகமான ஷிண்டே, தன் முன்னால் இருந்த மேஜையைப் பெருமிதமாகத் தட்டிக்கொண்டார். அந்தக் காட்சியை டி.வி-யில் பார்த்தவர்களுக்குத் தெரியும், எத்தகைய மலை முழுங்கி மகாதேவன்கள் மத்தியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று.
போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் என்பது, காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய தலைகுனிவை இன்றுவரை ஏற்படுத்திவரும் விவகாரம். காங்கிரஸ் கட்சி 1984-க்கு முன்பும் பின்பும் 450 இடங்களை இந்திய நாடாளுமன்றத்தில் பெற முடிந்தது இல் லை. அப்படிப்பட்ட செல்வாக்குடன் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை, 1989 தேர்தலில் அதல பாதாளத்துக்குத் தள்ளியது போஃபர்ஸ். நேரு, இந்திரா, ராஜீவ் என்று 40 ஆண்டுகளாக இந்தியா முழுக்க அறிமுகமான குடும்பத்தை... நான்கு மாதங்களுக்கு முன்பு வரை இன்னார் என்று தெரியாத வி.பி.சிங், அருண் நேரு... போன்றவர்கள் வீழ்த்தக் காரணமானது போஃபர்ஸ். அதைத்தான் மக்கள் மறந்துவிட்டனர் என்றார் ஷிண்டே. மக்கள் மறந்துவிட்டதாக ஷிண்டேக்கள் நினைக்கிறார்கள்.
இப்படிச் சொல்வதன் மூலமாக போஃபர்ஸ் பீரங்கிகளை எளிதாக மறைக்க முடியும் என்று நம்புவதுதான் அரசியல் துரதிருஷ்டம்.
நிலக்கரிக்கு முன்னதாகக் கிளம்பியது ஸ்பெக்ட்ரம். இந்த முறைகேட்டால் லாபம் அடைந்த நிறுவனங்கள் பெற்ற உரிமத்தை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்தது. அப்போது அமைச்சர் சல்மான் குர்ஷித் கொடுத்த வாக்கு மூலம் மொத்த இந்தியர்களையும் தலைகுனிய வைத்தது.
''இப்படியெல்லாம் லைசென்ஸை கேன்சல் செய்தால், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யத் தயங்குவார்கள். இதனால் இந்தியாவுக்குத்தான் நஷ்டம்'' என்று குதித்தார் குர்ஷித்.
இந்திய அரசின் கஜானாவுக்கு வரவேண்டிய பணத்தை தனியார் சிலர் கொழிப்பதற்காக விதிமுறைகளை மீறி வேறுபக்கமாகத் திருப்பி விட்டனர் என்பதுதான் ஸ்பெக்ட்ரம் வழக் கின் மையமான குற்றச்சாட்டு.
சிலரின் சுயநலச் சுரண்டலால் இந்திய அரசு நஷ்டம் அடைந்தது சல்மான் குர்ஷித்தின் கண்ணுக்குத் தெரியவில்லை. 'கொள்ளை லாபம் அடைய முடியாமல் வாசலை அடைத்தால் இந்தியாவுக்கு முதலீடு வராது. அதனால் இந்தியாவுக்கு இழப்பு’ என்று ஊழலுக்கு பச்சையாக உரம் போட்டு வளர்க்கிறார்கள். 'நீ வா... இந்தியாவுக்குள் வா... எந்த விதிமுறைமீறலும் செய்துகொள்’ என்று அழைப்பதற்குப் பெயர் வர்த்தகமா? கூட்டுக் கொள்ளையா?
''சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு வாருங்கள்'' என்று நாடாளுமன்றத்தில் எம்.பி-க்கள் கோரிக்கை வைத்தபோது அன்றைய நிதி அமைச்சரும் இன்றைய குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜிக்கு கோபம் பீறிட்டது. ''மீட்டுக்கொண்டு வாருங்கள்... மீட்டுக்கொண்டு வாருங்கள் என்றால், பணத்தை மீட்டுவர ராணுவத்தையா அனுப்ப முடியும்?'' என்று கேட்டார்.
யார் யார் பணம் போட்டு வைத்துள்ளனர் என்ற பட்டியலையாவது கொடுங்கள் என்றபோது, இன்னொரு பல்டி அடித்தார்.
''கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக வெளி நாடுகளில் இருந்து 36 ஆயிரம் தகவல்களைப் பெற்றுள்ளோம். ஆனால், வெளியிட மாட்டோம் என்று சொல்லித்தான் அந்தத் தகவல்களை வாங் கினோம்.'' -இது பிரணாப் அளித்த பதில்.
யாருக்கும் சொல்லாமல், நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க, அந்தத் தகவலை எதற்காக வாங்க வேண்டும்? அதாவது, அரசியல் நெருக்கடி காரணமாக தகவ லைப் பெற்று, அதை அப்படியே ஊறவைப்பது ஊழலுக்கு உரமாகத்தான் அமையுமே தவிர, உலை வைக்காது.
''எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு போவதோ?'' என்று பாரதி பாடியது, அந்நிய வியாதிகளைப் பார்த்து. ஆனால், அது சுதேசி அரசியல்வாதிகளுக்கும் பொருத்தமாய் இருக்கிறது.
'இதுதான் சுரண்டல் கொள்கை’ என்ற வரையறையை இந்திய மண்ணில் முதலில் பேசியவர் தாதாபாய் நௌரோஜி. இந்தியாவின் வளம் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுதான் இங்கிலாந்தின் சுரண்டல் தத்துவம் என்று வரையறுத்தார்.
'வறுமையும் இந்தியாவில் பிரிட்டிஷ் அல்லாத ஆட்சியும்’ என்ற அவரது புத்தகம் 1901-ம் ஆண்டு வெளியானது. 'இந்தியா தொடர்ந்து வறுமையான நாடாக மாறுவதற்குக் காரணம் இந்தச் சுரண்டல்தான்’ என்று பிரிட்டிஷ் ஆதிக்கத்தை பொருளாதாரப் பார்வை கொண்டு பார்த்தவர் இவர். பிரிட்டிஷ் ஆதிக் கத்தை பொருளாதார நோக்கத்துடன் பார்க்க வேண்டும் என்று காந்தியைத் தூண்டியது இந்தப் புத்தகம். ''நான் இந்தியாவின் ஏழ்மையின் ஆழ, அகலங்களை தாதாபாயின் புத்தகத்தில் இருந்துதான் தெரிந்துகொண்டேன்'' என்று காந்தி எழுதியிருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சியின் இந்தச் சொத்துச் சுரண்டல்தான் இந்தியாவில் வறுமைத் தன்மையை அதிகப்படுத்தியது என்று தாதாபாயும் காந்தியும் சொன்னது உண்மையானால், இன் றைய வறுமைக்கும் ஏழ்மைக்கும், இன்றைய ஊழலும் கறுப்புப் பணமும்தானே காரணமாக இருக்க முடியும்?
சுதந்திரம் மலர்ந்து 60 ஆண்டுகள் ஆன பிறகும், புதிய பொருளாதாரக் கொள்கை பூத்து 23 ஆண்டுகள் ஆனபிறகும், இந்தியாவின் வறுமையும் ஏழ்மையும் குறையவில்லை. அதிகமாகத்தான் ஆகி இருக்கிறது.
கிராமத்தில் 27 ரூபாய் 20 பைசாவுக்கு மேலும், நகரத்தில் 33 ரூபாய் 40 பைசாவுக்கு மேலும் ஒரு நாளைக்கு செலவுசெய்யக் கூடியவர்களை ஏழைகளாகக் கருத முடியாது என்று வரையறுத்துள்ளனர். இந்த அடிப்படையில் பார்த்தால் 2012-ம் ஆண்டு கணக்கின்படி இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 26 கோடியே 90 லட்சம் பேர். இந்த செலவுக் கணக்குக்கு முன்னதாக 2004-ம் ஆண்டு எடுக் கப்பட்ட கணக்கின்படி, இந்தியாவில் ஏழை களின் எண்ணிக்கை 40 கோடியே 70 லட்சம் பேர். ஒரு நாளைக்கு கிராமத்தில் 28 ரூபாயையும், நகரத்தில் 34 ரூபாயையும் வைத்து எதையுமே செய்ய முடியாது என்பது, இந்த வரையறையைச் செய்தவர்களுக்குத் தெரியும். ஆனால், 'ஃபுல் மீல்ஸ் சாப் பிடலாம்’ என்று எகத்தாளம் காட்டியவர் ரசூல் மஷீத். மருத் துவ இடத்தை முறைகேடாக விற்பனை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, இப்போது சிறையில் களி தின்றுகொண்டு இருக்கிறார்.
இந்த ரூபாயை வைத்து ஒரு நாளை ஓட்ட முடியுமா, முடியாதா என்பதல்ல கேள்வி. 'இன்னமும் 28 ரூபாய், 34 ரூபாய் தரத்துடன் இந்திய வாக்காளன் இருக்கிறானே... அவனிடம் வாக்குக் கேட்டுப் போகிறோமே...’ என்ற வெட்கம் அதிகார வர்க்கத்துக்கு இருக்கிறதா? இந்த வறுமைக்குக் காரணம், ஊழலும் கறுப்புப் பணமும்தான். கடந்த 17 ஆண்டுகளில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 940 விவசாயிகள் இறந்துபோயிருக்கிறார்கள். இன்னும் பல லட்சம் பேர் சாவின் விளிம்பில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் லட்சம் கோடி ரூபாய், ஆயிரம் கோடி ரூபாய் என்று வெளிநாடுகளில் பதுக்கும் தகவலும் நமது நாட்டில்தான் என்றால், இதை எப்படி புரிந்துகொள்வது.
இரண்டே வாக்கியத்தில் கார்ல் மார்க்ஸ் சொன்னார்: ''ஒரு முனையில் செல்வம் குவிகிறது. இதன் விளைவாக இன்னொரு முனையில் வறுமைத் துயர் குவிகிறது.''
விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, கட்டாந்தரையான விவசாய நிலங்கள், தற் கொலை செய்துகொள்ளும் விவசாயிகள், தொழில் உற்பத்தியின் வீழ்ச்சி... இவ்வளவுக்கும் மத்தியில் ஊழல் செய்வதற்கு மட்டும் பணம் எங்கிருந்து கிடைக்கிறது? பதுக்குவதற்கு மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது?
இந்தியா வாங்கியுள்ள கடன் 2007-ம் வருட கணக்கின்படி 62.3 பில்லியன் டாலராக இருந் தது. கடந்த ஆண்டு டிசம்பரில் அது 376.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதில், குறுகியகாலக் கடன் 159.6 பில்லியன் டாலர். 2014 மார்ச் மாதத்துக்குள் 172 பில்லியன் டாலரை நாம் செலுத்தியாக வேண்டும். இந்தியாவில் வறுமை தாண்டவம் ஆடுகிறது. தலையை கடன் அமுக்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால், வெளிநாட்டில் கறுப்புப் பணம் குவிந்துகொண்டு இருக்கிறது. இந்த சொத்துச் சுரண்டலை புரிந்துகொள்ளாவிட்டால் வாழ்ந்து பயனில்லை.
எந்த அமெரிக்காவாக நாம் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ... அந்த அமெரிக்காவே பல லட்சம் கோடி கடனில்தான் இருக்கிறது. ''கடன்தான் மிகவும் மோசமான வறுமை'' என்று தாமஸ் ஃபுல்லர் சொன்னார். ''இளையவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில், அவர்கள்தான் தேசியக் கடனை ஏற்றுக்கொள்ளப் போகிறவர்கள்'' என்று அமெரிக்க பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திட்ட அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒருவர் சொன்னார். அப்படி ஆசீர்வதிக்கப்பட்ட இளைஞர்கள் தலையில் ஏராளமான கடனை ஏற்றிவைத்துவிட ஊழலும் முறைகேடும்தான் காரணம்.
இந்தியாவின் மிக முக்கியமான பொரு ளாதார மேதைகளில் ஒருவரான ஜி.வி.ஜோஷி எழுதினார்... ''நாம் வரலாற்றைச் சரியாகப் படித்தால், செல்வத்தை நோக்கித்தான் அதி காரம் ஈர்க்கப்படும்.''
ஆம்! இந்தியா விடுதலை அடைந்தது முதலே பணத்தை நோக்கித்தான் அதிகாரம் ஈர்க்கப்பட்டது!

ராபர்ட் கிளைவ் இறந்து விட் டார். ஆனால், இப்போது இருப்பவர்களுக்கும் ராபர்ட் கிளைவுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்ல முடி யுமா?
''ராபர்ட் கிளைவ் குவித்த செல் வத்துக்கு அளவே இல்லை. வங் காளத்தில் இருந்த பொக்கிஷத்தை எல்லாம் தன்வசப்படுத்தினார். இந்திய மன்னர்கள் குவியல் குவியலாகச் சேகரித்து வைத்திருந்த நாணயம், நகைகள், ரத்தினங்கள் அனைத்தும் கிளைவுக்கு சொந்தம் ஆக்கப்பட்டது. கிளைவ், பொன்குவியல்களுக்கும் வெள்ளிக் குவியல்களுக்கும் இடையே உல்லாசமாக இருந்தார். வைரங்கள், நவரத்தினங்களுக்கு மத்தியில் கிளைவ் மூழ்கிக் கிடந்தார்'' என்று சுதேசித் தலைவர்கள் சொல்லவில்லை. தன்னுடைய குறிப்புகளில் இப்படி எழுதியிருப்பது மெக் காலே.
இன்று நாம் எந்தச் சட்டத்தைக் கடைப்பிடிக்கிறோமோ... எந்தக் கல்வி முறையைப் பின்பற்றுகிறோமோ... அதற்கு அடித்தளம் அமைத்த மெக்காலேதான் இப்படி வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார்!
ராபர்ட் கிளைவ் இறந்து போனார் என்றால் ராபர்ட் வதேரா யார்? கேத்தன் தேசாய் யார்? அமர் சிங் யார்?
இந்தியாவிலேயே உயர்ந்த ரியல் எஸ்டேட் அதிபராக ராபர்ட் வதேரா உயர்ந்திருக்கிறார். 2007-ம் ஆண்டு பித்தளை வியாபாரம் பார்க்க ஆரம்பித்த ராபர்ட் வதேரா, இந்தியாவின் உயர்ந்த குடும்பத்தின் மகளான பிரியங்காவை அதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டவர். ஒரே ஒரு இடத்தை விற்று 42 கோடி ரூபாய் பணம் கிடைத்தது. ஆனால், 2009-ம் ஆண்டுக்குப் பிறகு வாங்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு மற்றும் அவை வந்த பாதைகள் பற்றி பின்னர் விரிவாகப் பார்ப்போம். அவரது சொத்தும் முதலீடும், 20 ஆண்டுகளாக பெருந்தொழிலில் இருப்பவர்களால்கூட அடைய முடியாதது. ஊடகங்களுக்கு முன்னால் தலைதொங்கி ராபர்ட் வதேரா நின்றுகொண்டு இருக்கிறார். சோனி யாவிடம் ராகுல் சொன்னதாக டெல்லியில் ஒரு ஜோக் உண்டு.
''முதலில் 2ஜி, அப்புறம் நிலக்கரிஜி, இப்போது ஜிஜாஜி'' என்றாராம் ராகுல். (ஜியாஜி என்றால் மச்சான்!)
2008-ம் ஆண்டு இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாடு ஏற்பட்டது. இதனால், இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக்கொண்டதால், காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கையில்லா வாக்கு கோரப்பட்டது. பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்களுக்கு மாற்றி வாக்களிக்குமாறு கோரிக்கை வைத்த அமர் சிங், ஒவ்வொரு எம்.பி-க்கும் மூன்று கோடி ரூபாய் தருவதாக வாக்களித்தார். 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ம் தேதி, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்துக்கு வந்த எம்.பி-க்கள் சிலர், தங்களுக்குத் தரப்பட்ட ஒரு கோடி ரூபாயைக் கொண்டுவந்து காட்டினர். கரன்சியால் மிதந்தது நாடாளுமன்றம். ஒரே ஒரு தடவைதான் இப்படி பணத்தைக் கொண்டுவந்து காட்டினர் என்பதால், ஒரே ஒரு தடவைதான் இப்படி நடந்திருக்கும் என்று சொல்ல முடியுமா? அந்தப் பெரிய மனிதர்கள் யாரும் இதுவரை சிக்கவில்லை!
இப்படித்தான் சுதந்திரத்துக்கு முந்தைய இந் தியாவிலும் பணம் பொங்கியது!
''கடல் பொங்குவதுபோல் இந்தியாவின் பணம் இங்கிலாந்துக்குப் பொங்கி வந்தது''- என்று எழுதினார் மெக்காலே. அந்த அளவுக்கு கிழக்கிந்திய கம்பெனி மூலமாக இந்தியாவின் பணம் இங்கிலாந்துக்குப் போனது. கிரீஸ் தேசத்து அலெக்சாண்டர், இந்தியாவுக்குள் நுழைந்ததும் எப்படி நடந்துகொண்டாரோ... கஜினி, வட இந்தியாவின் கானோஜ் சமஸ்தானத்தில் எதைச் செய்தாரோ... அதைத்தான் பிரிட்டிஷ் அரசாங்கமும் செய்தது. இப்படி, வந்தவர்கள் எல்லாம் கொள்ளையடிக்கும் வசதி கொண் டதாகத்தான் இந்தியா இருந்தது.
இந்தியாவுக்கு பிரிட்டிஷார் ஏன் வந்தனர்? வியாபாரம் செய்வதற்கு! இந்தியா ஏழை நாடாக இருந்திருந்தால், யாராவது வியாபாரம் செய்வதற்கு வந்திருப்பார்களா? வளமுள்ள இடத்தில்தானே வியாபாரம் நடக்கும்? எனவே, பிரிட்டிஷார் வருவதற்கு முன்பே இந்தியா வள மாகத்தான் இருந்தது.
''வங்கதேசம் சொத்து உள்ள நாடாக இருந்தது. வழிப்போக்கர்களில் யாராவது சொத்தை வழியில் இழந்து விட்டால், அந்த சொத்தைக் கண்டெடுத்தவர்கள் பக்கத்து மரங்களில் அதைக் கட்டி வைத்து விடுவார்கள். அதன்பிறகு அருகில் உள்ள காவலர்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள்'' என ஹால்வெல் என்ற வெளிநாட்டுப் பயணி எழுதி இருக்கிறார்.
இதே வங்கநாடு, பிரிட்டிஷ் ஆளுகைக்கு வந்த பிறகு, பெரிய மாறுதலை அடைந்தது. இந்தியாவில் இருந்து இங்கிலாந்து போகும் ஒவ்வொரு கப்பலிலும் வங்கநாட்டு நிதிக்குவியல் போய்க்கொண்டே இருந்தது.
இந்த நிலைமை 1850-களில் அப்படியே மாறி விட்டது. இதை, டாக்டர் மார்ஷமன் எழுதினார். ''வங்கநாட்டில் உள்ள மக்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக மாறியிருக்கிறது. நாய் வசிக்கத் தகுதியற்ற பாழடைந்த சிறு குடிசைகளில், கந்தல் துணியுடனும் ஒருவேளை உணவு இல்லாமலும் மக்கள் துன்பப்படுகின்றனர். ஆண்டுக்கு ஆண்டு 40 லட்சம் ரூபாய் வருமானத்தை மட்டும் திரட்டுபவர்களின் காதுகளில், மக்களின் பரிதாபக் கூக்குரல் விழாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?'' என்று கேட்டார்.
நான்கு விதங்களில் பணத்தை கிழக்கிந்திய கம்பெனி திரட்டி, இங்கிலாந்துக்குக் கொண்டுசென்றது. அன்றைக்கு இருந்த மன்னர்களிடம் இனாமாகவும் காணிக்கையாகவும் பெற்ற பணம், மக்களிடம் வசூல் செய்தது, கம்பெனி ஆட்கள் செய்த வர்த்தகத்தின் மூலமாக திரட்டிய பணம், சுதேச சமஸ்தானங்களிடம் இருந்து தட்டிப்பறித்த பணம்... என்று பொன்னும் பொருளும் பணமும் திரட்டப்பட்டது.
இந்தியாவின் உள்நாட்டு வியாபாரம் அனைத்தும் கம்பெனியின் நன்மைக்காக நடந்தது. கம்பெனி அதிகாரிகள் இந்திய தறி நெசவாளர்களைக் கொடுமைப்படுத்தினர். ஒரு விலையைச் சொல்லி, அந்த விலைக்குத்தான் பொருட்களைத் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். தொழிலாளர்களையும் நெசவாளர்களையும் கம்பெனிக்காக மட்டுமே தவிர, மற்றவர்களுக்கு வேலை செய்யக் கூடாது என்று கட்டளையிட்டனர். இதை எழுதி வாங்கினர்.
எழுதித்தர மறுத்தவர்களை, மரத்தில் கட்டிவைத்து அடித்தனர். இந்தக் கொடுமைக்குப் பயந்த பல நெசவாளிகள் தங்களது கையின் கட்டை விரலை வெட்டிக்கொண்டனர். 'விரல் இருந்தால்தானே நெசவு நெய்துதரச் சொல்வாய்?’ என்று நினைத்து கட்டை விரலை வெட்டிக்கொண்டார்களாம். சில இடங்களில் தங்களது பேச்சைக் கேட்காத தொழிலாளர்கள் மற்றும் நெசவாளிகளின் கட்டை விரலை பிரிட்டிஷாரே வெட்டியுள்ளனர்.
1765 முதல் 1771 வரையிலான ஐந்து ஆண்டு காலத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு நான்கு கோடி ரூபாய் கொண்டு செல்லப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் கம் பெனிக்கு வந்த மொத்தப் பணம் 13 கோடி என்றால், மூன்றில் ஒரு பங்கு பணம் இங்கிலாந்துக்குச் சென்றது. படை நடத்த, போர் புரிய, சம்பளம் கொடுக்க, சாப்பிட, உள்கட்டமைப்பு வசதி போக மிஞ்சியது அனைத்தையும் இங்கிலாந்துக்குக் கொண்டுபோனார்கள்.
கம்பெனி வர்த்தகம் செய்தது போக, கம்பெனியின் அதிகாரிகள் தனியாக வர்த்தகம் பார்த்தனர். உப்பு, வெற்றிலை பாக்கு, புகையிலை வியாபாரம் பார்த்தார் கிளைவ். அவர் இதைச் செய்யக் கூடாது என்று கம்பெனியின் வர்த்தகர்களும், கீழே இருந்த அதிகாரிகளும் கோரிக்கை வைத்தனர். ஆனாலும், அவர் கேட்கவில்லை.
புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கான விசாரணை ஆணையத்தை பிரிட்டிஷ் அரசு அமைத்தபோது, அதில் ஜான்ஸவிவன் என்ற நிர்வாகி (1804 முதல் 1841 வரை இந்திய நிர்வாகத்தில் அதிகாரியாக இருந்தவர்) சாட்சியம் அளித்தார். ''தர்மத்தின்படியும் பொருளாதார நிலை மையின்படியும் என்னைக் கேட்டால், அவர்களது பழைய சுதேச மன்னர்களிடமே இந்த ஆட்சியை ஒப்படைத்துவிடுவதே சரியானது என்று கூறுவேன். அவர்களிடம் இருந்து நாம் பணம் பெறுவதை அவர்கள் குறை சொல்லவில்லை. ஆனால், அவர்களிடம் இருந்து பெறும் பணத்தை அவர்களது நாட்டில் செலவழிக்காததையே அவர்கள் குறை சொல்கிறார்கள். இந்தியா சுரண்டப்படுவதாக நினைக்கிறார்கள். எல்லா நல்ல பொருள்களையும் - பஞ்சு, பன்னீரை இழுத்துக்கொள்வதைப் போல - நம் ஆளுகைக்கு இழுத்துக்கொண்டு, கங்கையில் உள்ளதை தேம்ஸ் நதிக்கரையில் கொண்டுபோய் கொட்டிக்கொண்டு இருக்கிறோம்'' என்று அவர் சாட்சியத்தில் சொன்னார்.
அப்போது தேம்ஸில் மட்டுமே கொட்டினார்கள். இன்று எல்லா நாடுகளிலும் கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அதில் பேதம் காட்டுவது இல்லை!
இந்த வருத்தங்கள் மெள்ள எழுந்தபோது, 'உங்களுக்கு என்ன சலுகை எல்லாம் செய்து தருகிறோம்’ என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் பட்டியல் போட ஆரம்பித்தனர். ''தற்கால நாகரிகத்தை ஒட்டிய தொழில்களையும், தொழில் வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சாதகமான ஒரு அரசாங்கத்தை அடைந்த பாக்கியம் ஒன்றே உங்களுக்குப் போதுமே'' என்று, லண்டனில் இருந்த இந்திய ஆலோசனை சபை உறுப்பினர் ஸர்ஜான் ஸ்ட்ராச்சி சொன்னார்.
இதைப் படிக்கும்போது ஆ.ராசா சொன்னது உங்களுக்கு ஞாபகம் வரவேண்டும். ''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் செய்த ஒரே தவறு, சாமான்யர்கள் அனைவர் கையிலும் செல்போன் இருக்க வேண்டும் என்று நினைத்துச் செயல்பட்டேன் அல்லவா... அது ஒன்றுதான் நான் செய்த தவறு'' என்றார் ஆ.ராசா.
பிரிட்டிஷார் எல்லாம் செய்துவிட்டு, தொழில் வளர்ச்சி என்று பேசினர். இன்றைய இந்திய ஆட்சியாளர்கள், மக்கள் நலன் என்கிறார்கள்.
அன்றைக்கு ராபர்ட் கிளைவ் கொள்ளையடித்துச் சென்ற பணத்துக்கு அவரை மட்டுமே குற்றம்சாட்டி தண்டனை வழங்கியது பிரிட்டிஷ் கோர்ட். இன்றும் அதுதானே நடக்கிறது. ஸ்பெக்ட்ரம் வழக்கில், ஆ.ராசா மட்டுமே குற்றவாளி என்று நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை அறிக்கை சொல்கிறது.
''இல்லை! இந்தியாவின் பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் தெரியாமல் எந்த விதிமுறையையும் நான் மாற்றவில்லை. அனைவருக்கும் எனது நடவ டிக்கைகளைச் சொல்லியே வந்தேன்'' என்கிறார் ஆ.ராசா.
இன்னும் ஒருபடி மேலே போன கருணாநிதி, ''தனிப்பட்ட ஒருவரால் இவ்வளவு பெரிய விஷயத்தைச் செய்திருக்க முடியுமா?'' என்று கேட்டார். ராசாவை மட்டும் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. பிரதமரையும் நிதி அமைச் சரையும் ராசா குற்றம் சாட்டுகிறார். இதில் இருந்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதி என்ன?
கற்பரசி கண்ணகியா, சீதையா என்று பட்டிமன்றம் நடந்ததாம். கண்ணகியை கற்பரசி என்று பேசியவர்கள், சீதையைக் கொச்சைப்படுத்தினர். சீதையைக் கற்பரசி என்று பேசியவர்கள், கண்ணகியைக் கொச்சைப்படுத்தினர். விவாதத்தைக் கேட்டவர்கள், கண்ணகியையும் சீதையையும் சந்தேகப்பட ஆரம்பித்தார்களாம். அப்படித்தான் நடந்தது ஸ்பெக்ட்ரம் விவகாரமும்!
''அனைத்து நிலைகளிலும் ஊழல்கள் நமது சமுதாயம் முழுவதும் பெருநோயாக பரவிவருகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஊழல் என்ற நோய்க்கு ஏழைகள்தான் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. அவர்கள்தான் அதன் சுமையைச் சுமக்க வேண்டி இருக்கிறது'' என்று 83-வது காங்கிரஸ் மாநாட்டில் சோனியா சொன்னார். அதையே அவரது அத்தை இந்திராவும் சொன்னார். அதையே நேருவும் சொன்னார். ஆனால், என்றும் மாறாததாக ஊழல் இருந்தது. இருக்கிறது. இருக்கும்!
''கள்ளச் சந்தைக்காரர்களும் கறுப்புப் பணக்காரர்களும் அதிகமாகிவிட்டார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் அருகில் உள்ள மின் கம்பங்களில் அவர்கள் அனைவரும் தூக்கிலிடப்படுவார்கள்'' என்று அடிமை இந்தியாவில் நேரு சொன்னார். ஆனால் அவரால் அதைச் செய்ய முடிந்ததா?

மரத்தை வெட்ட மரக்கோடரியே பயன்படுவதைப்போல, பிரதமர் ஜவஹர்லால் நேரு காலத்திய முறைகேடுகளை அவரது மருமகன் ஃபெரோஸ் காந்தியே வெளிப்படுத்த வேண்டியதாயிற்று!
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, சோனியா காந்தி, மேனகா காந்தி, ராகுல் காந்தி, வருண் காந்தி, பிரியங்கா காந்தி... என்று 'காந்தி’யை ஒட்டாகச் சேர்க்கப்பட்டு இருப்பதற்குக் காரணம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மீதான பாசம், பற்று, நேசத்தால் அல்ல. காந்தி என்பது ஃபெரோஸ் காந்தியின் குடும்பப் பெயர். குஜராத்தைச் சேர்ந்த ஜஹான்கீர் காந்திக்கும் ஹட்டா காந்தி என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர் ஃபெரோஸ் காந்தி. பார்சி வகுப்பைச் சேர்ந்தவர்கள் இவர்கள். குஜராத்தில் பார்சிக்களும் இந்துக்களும் தங்களது குடும்பப் பெயராக காந்தி என்று வைத்துக்கொள்வது உண்டு. அதனால்தான் மகாத்மாவுக்கும் காந்தி என்ற பெயர் வந்தது.
ஃபெரோஸுக்கும் காந்தி என்ற பெயர் வந்து சேர்ந்தது. ஆனால், மகாத்மா காந்தியின் வாரிசுகளாக இவர்கள் அடையாளப்படுத்திக் கொண்டு அரசியல் நடத்தியதுகூடப் பரவாயில்லை. அது தவறுகளை மறைப்பதற்கான முகமூடியாகப் போனதுதான் மகாத்மாவுக்கு அவலம்.
இந்திராவின் கணவர் என்பதற்காகவோ, நேருவின் மருமகன் என்பதற்காகவோ ஃபெரோஸுக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை. சுதந்திர தாகம்கொண்ட இளைஞராகத்தான் இளமைப் பருவம் முதல் அவர் வளர்ந்தார். வர்த்தகக் குடும்பத்துக்கு அரசியல் அலர்ஜி என்பதால், போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றில் கலந்துகொள்ளாமல் பிள்ளையை வளர்க்கவே ஃபெரோஸின் பெற்றோர் விரும்பினார்கள். அலகாபாத் ஈவினிங் கல்லூரியில் மதியநேர உச்சி வெயிலில் பெண்கள் படையோடு ஆர்ப்பாட்டம் செய்யப் போன, நேருவின் மனைவி கமலா மயங்கி விழ... அதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்த ஃபெரோஸ் போய் அவரைத் தாங்கிப்பிடிக்க... அதன் பிறகுதான் ஆனந்த பவனத்துக்குள் அவர் போனார். ஆரோக்கியமற்ற உடல்நிலையைக் கொண்ட கமலா பெரும்பாலும் மருத்துவமனையிலும் படுக்கையிலும் காலம் கழித்தபோது அடிக்கடி போய் பார்த்து வந்தார் ஃபெரோஸ். அதன்பிறகு இவரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அந்தக் காலக்கட்டத்தில்தான் இந்திராவைச் சந்தித்தார். காதல் வயப்பட்டார். இந்திராவுக்கு 16 வயது இருக்கும்போது தன்னுடைய காதலைச் சொன்னார் ஃபெரோஸ். ஆனால், அதனை இந்திரா ஏற்கவில்லை. அம்மாவின் சிகிச்சைக்காக ஜெர்மன் போனார் இந்திரா. ஃபெரோஸும் படிக்க லண்டன் போனார். கமலாவின் உடல்நிலை மோசமானது. கமலாவைப் பார்க்க ஃபெரோஸ் சென்றிருந்த நேரத்தில்தான் அவர் இறந்து போனார். அதற்கு முன்னரே இந்திரா மீதான தனது காதலை ஃபெரோஸ், கமலாவிடம் சொல்ல, 'அவள் சின்னப் பெண்’ என்று சொல்லி மறுத்துவிட்டார்.
தன்னுடைய அம்மாவின் கடைசிக் காலத்தில் கவனித்துக் கொண்டவர் என்ற அடிப்படையில் இந்திராவுக்கும் ஃபெரோஸ் மீது கரிசனம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. அதாவது 1933 ஃபெரோஸ் வெளிப்படுத்திய காதலை, நான்கு ஆண்டுகள் கழித்துத்தான் இந்திரா ஏற்றுக்கொண்டார். அதற்கு நான்கு ஆண்டுகள் கழித்துத்தான் நேருவிடம் இந்திரா சொன்னார். அவரும் இந்தக் காதலை ஏற்கவில்லை. தட்டிக் கழிக்க நினைத்தவர் காந்தி உட்பட தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரது சம்மதத்தையும் இந்திரா வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினார் நேரு. காந்தி ஏற்றுக் கொண்டார். ஆனால் நேரு குடும்பத்தினர் அனைவரும் எதிர்த்தார்கள். ஆனால், இந்திரா தன்னுடைய வைராக்கியத்தால் வென்று, ஃபெரோஸைக் கைப்பிடித்தார்.
தன்னை நேரு, முதலில் இருந்தே ஏற்கவில்லை என்ற கோபம் ஃபெரோஸுக்கு இருந்தது. திருமணம் ஆனதும், இந்திராவை அந்த பெரிய வீட்டில் இருந்து அழைத்துச் சென்று தனிக்குடித்தனம் வைத்தார் ஃபெரோஸ். நேருவின் வெளிச்சத்தில் வாழ விரும்பவில்லை. ஆனால் இந்தியத் தலைவர்கள் அனைவரும் சுற்றிச்சுற்றி கைதான சூழ்நிலையில் ஃபெரோஸும், இந்திராவுமே கைதாகி பல மாதங்கள் சிறையில் இருந்தார்கள். விடுதலை ஆகி வந்தவர்கள், ஆனந்தபவனத்தில் குடியேற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஏனென்றால் அப்போது நேரு, சிறையில் இருந்தார். அதன்பிறகு அப்படியே தங்கிவிட்டார் ஃபெரோஸ்.
முதல் குழந்தை பிறந்தது. ராஜீவ் ரத்னா என்று பெயர் வைக்க ஆசைப்பட்டார் இந்திரா. பிர்ஜிஸ் என்று வைக்க நினைத்தார் நேரு. 'எங்காவது நேரு என்று சேர்க்க முடியுமா?’ என்று தாத்தா மனது துடித்தது. ஃபெரோஸ் தனது குடும்பப் பெயரான காந்தி என்பதைச் சேர்க்க ஆசைப்பட்டார்.
அனைத்தையும் சேர்த்து ராஜீவ் ரத்னா பிர்ஜிஸ் நேரு காந்தி என்று பெயர் வைக்கப்பட்டது. தன்னை மனப்பூர்வமாக நேரு ஏற்றுக் கொள்ளவில்லை என்று நினைத்த ஃபெரோஸ், தனது வாழ்க்கையை லக்னோவை நோக்கி நகர்த்தினார். அடிப்படையில் மார்க்சீய ஆர்வம் கொண்டவர் ஃபெரோஸ். பாசிசத்துக்கு எதிரான குரல்களைப் பதிவு செய்தவர். அடக்குமுறைகளை எதிர்த்தவர். எழுதுவதிலும் அதீத விருப்பம் கொண்டவர். 'நேஷனல் ஹெரால்ட்’ இதழின் நிர்வாக இயக்குநராக ஆனார். இது ஒருகாலத்தில் நேரு நடத்திய பத்திரிகைதான். லக்னோவுக்கும் அலகாபாத்துக்கும் போய் வந்துகொண்டு இருந்தார் இந்திரா. அதன் பிறகு சஞ்சய் பிறந்தார். சஞ்சய் என்று பெயர் வைக்கப் போகிறோம் என்றோ, என்ன பெயர் வைக்கலாம் என்றோ ஃபெரோஸிடம் யாரும் கேட்கவில்லை, இந்திரா உட்பட. அதனையும் சகித்துக்கொண்டார்.
இந்திராவுக்கு இளமைக் காலம் முதல் காச நோய் உண்டு. அதனால், குழந்தைகளை தனியாக வளர்ப்பது சாத்தியம் இல்லை என்பதால் அப்பா வீட்டோடு இருந்தாக வேண்டிய நெருக்கடி அவருக்கு. இந்த நிலையில் ரேபரேலி தொகுதியில் இருந்து ஃபெரோஸ் எம்.பி-யாக தேர்வானார். எம்.பி-களுக்கான பங்களா கிடைத்தது. நேருவின் தீன்மூர்த்தி பவனில் இருந்து படிப்படியாக வெளியேறி எம்.பி. பங்களாவில் தங்க ஆரம்பித்தார்.
நேருவின் தலைமையில் புதிய முகங்கள் அதிகாரம் செலுத்தும் ஆட்சி உட்கார்ந்து இருந்ததை ஃபெரோஸால் ஏக்கத்தோடும் ஏமாற்றத்தோடும் பார்த்துக்கொண்டு இருக்கவே முடிந்தது. அந்த வட்டாரத்துக்குள் அவரால் போகவே முடியவில்லை. அந்த விரக்தியும், தன்னை ஆரம்பத்தில் இருந்தே உதாசீனம் செய்த நேருவின் மீதான கோபமும், தன்னைவிட அப்பா நேருவின் வார்த்தைகளுக்கே மனைவி இந்திரா கட்டுப்படுகிறார் என்ற எரிச்சலும் சேர்ந்தது. அப்போது அவருக்குள் இந்த பத்திரிகையாளன் மெள்ளத் தலைதூக்கினான். நேருவும் நேருவைச் சுற்றி இருப்பவர்களும் என்ன செய்கிறார்கள் என்பதைத் தோண்டித்துருவ ஆரம்பித்தார்.
காங்கிரஸ் கட்சியைத் தாண்டி வேறு கட்சியில் இருந்து வந்த எம்.பி-க்களோடு கைகோத்து அலைய ஆரம்பித்தார். அப்போது அவர் கையில் இன்ஷூரன்ஸ் மோசடி வசமாக மாட்டியது. இன்ஷூரன்ஸ் திட்டத்தில் செய்யவேண்டிய மாறுதல்கள் சம்பந்தமான புதிய மசோதா அமல்படுத்தப்பட்டபோது மைக் பிடித்தார் ஃபெரோஸ். வீட்டுக்குள் இருந்தே வாள் பாய்ந்து வரும் என்று நேரு எதிர்பார்க்காத பேச்சு அது.
இதோ நாடாளுமன்றத்தில் ஃபெரோஸ் பேசுகிறார்...
''காலம் தாழ்ந்து நடந்திருந்தாலும் நல்லதே நடந்திருக்கிறது. இந்தியாவில் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களைப்போல எக்கச்சக்கமான இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் நிறைய முளைத்துவிட்டன. இவற்றில் நடந்துவரும் குளறுபடிகள்தான் இப்போது இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரக் காரணம்.
இவர்கள் பொதுமக்கள் பணத்துடன் விளையாடுவதை அனுமதிக்க முடியுமா?
ஒரு கம்பெனியில் முதலீடு, பின்பு வேறு கம்பெனியில், அதன் பிறகு வேறு ஒரு கம்பெனியில், பின்னர் பேர் இல்லாத பற்பல கம்பெனிகள் என்ற வகையில் பணத்தை பந்தாடிப் பந்தாடி கொள்ளை லாபம் அடித்துள்ளார்கள். இவை அனைத்துமே அவர்கள் உடல் உழைத்து ஈட்டிய பணமா? இல்லவே இல்லை. ஒன்றும் தெரியாத அப்பாவி பொதுமக்கள் பணம்தான். இது நமது நிதித் துறை வசம் உள்ள வருமானவரித் துறைக்குத் தெரியாதா? தெரியாது என்று சொன்னால் நம்பும்படியாக இருக்கிறதா? ஏன் இந்த அரசாங்கம் கண்டும் காணாதது போல இருக்கிறது? யாரைக் காப்பாற்ற இந்த அரசாங்கம் தன் நம்பகத்தன்மையை இழக்க வேண்டும்? நிதி அமைச்சர் எதற்காக காலஅவகாசம் கொடுக்கிறார்? ஏன் ஒட்டு மொத்தமாக இந்தப் பணத்தைத் திரும்பப்பெற முயற்சி எடுக்கவில்லை?
இதற்கெல்லாம் நம்முடைய அரசாங்கமும் நிதி அமைச்சகமும் முழுபொறுப்பேற்று நிலைமையை சீரடையச் செய்ய வேண்டுமா இல்லையா? அங்கும் இங்கும் சிற்சில விசாரணைகள் மட்டுமே நடைபெற்றன. நான் நமது வருவாய்த் துறை அமைச்சரிடம் கேட்டேன். அவர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஜால்ஜாப்பு சொல்கிறார். 'நான் அட்டர்னி ஜெனரலை கன்சல்ட் செய்கிறேன்’ என்பார். சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பார். ஆனால், இரண்டரை வருடங்கள் ஓடிவிட்டன. ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை. நான் இறுதியாக நிதி அமைச்சரைக் கேட்டுக் கொள்வதெல்லாம், எப்படியாவது மோசடி செய்யப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுங்கள். கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் என்பது பொதுமக்கள் வியர்வை சிந்தி உழைத்துச் சம்பாதித்த பணம். இவ்வாறு செய்வது இந்த அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களின் கடமை.'' - ஃபெரோஸின் இந்தப் பேச்சு இன்றுவரை பொருத்தமாகத்தான் இருக்கிறது.
இரண்டரை வருடங்களில் எதுவும் நடக்கவில்லை என்று ஃபெரோஸ் வருந்தினார். 60 ஆண்டுகளாக அதுதான் நடந்துகொண்டு இருக்கிறது. 'சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன்’ என்ற வார்த்தைக்கு வாய் இருந்தால் கதறிக்கதறி அழும். பிரதமர் ஆரம்பித்து, விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர் உட்பட அனைவருமே, 'சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்’ என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்வார்கள். எந்தச் சட்டப்படி என்பதுதான் இன்றுவரை விளங்கவில்லை.
அட்டர்னி ஜெனரல் பற்றியும் ஃபெரோஸ் சொன்னதில் இன்றுவரை மாற்றம் இல்லை. நிலக்கரி வழக்கில் கோப்புகளே மாயம் ஆனது. 'கோப்புகளைக் காணாமல் போனதைக் கண்டுபிடிக்க என்ன முயற்சி எடுத்தீர்கள்? இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்தீர்களா?’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கேட்டபோது, அட்டர்னி ஜெனரல் வாகனவதி, 'சி.பி.ஐ-க்கு நிலக்கரித் துறை அமைச்சகம் ஒத்துழைப்பு அளிக்கும்'' என்று மையமாகச் சொன்னார். இன்னொருநாள் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டார். ''எல்லா விவரங்களையும் மூளையில் பதிவுசெய்து ஒப்பிக்க என்னால் இயலாது. முன்னறிவிப்பு இன்றி என்னிடம் எழுப்பப்படும் கேள்விகள் சங்கடமாக உள்ளது'' என்று மழுப்பினார். மறுநாள் வந்து, ''நான் இப்படி பேசியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்'' என்று சொன்னதும் அவர்தான்.
ஃபெரோஸின் பேரன் பிரதமர் ஆகப் போகும் காலக்கட்டத்திலும் எதுவுமே மாறவில்லை!
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
அடிமடியில் கை வைப்பது என்பார்கள்... அதைத்தான் மாமா நேருவுக்கு எதிராக மருமகன் ஃபெரோஸ் செய்தார்.
1957-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ம் நாள் இந்திய நாடாளுமன்றத்தில் ஃபெரோஸ் பேசிய பேச்சு, சுதந்திர இந்தியாவில் வீசப்பட்ட முதல் ஊழல் வெடிகுண்டாக இருந்தது. அடிமை இந்திய நாடாளுமன்றத்தில் பகத்சிங் வீசிய கந்தக வெடிகுண்டுகளுக்கு இணையான அதிர் வலைகளை இது உருவாக்கியது.
ஃபெரோஸ் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டிய நெருக்கடி அன்றைய நிதி அமைச்சரும் நேருவின் ஆத்மார்த்தமான நண்பருமான டி.டி.கிருஷ்ணமாச்சாரிக்கு ஏற்பட்டது. அதற்கு சில மாதங்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான அளவுக்கு பணத்தைச் செலவு செய்ததாகச் சொல்லப்பட்ட ஹரிதாஸ் முந்த்ரா என்ற பிரபலமான வர்த்தகருக்கு எதிராகத்தான் ஃபெரோஸ் பேசினார்.
சோஷலிசம் பேசிய நேரு, பிரதமர் பதவியில் இருக்கிறார். 'அடுத்த பத்து ஆண்டுகளில் தனியார் துறைகள் அனைத்தும் தேசியமயமாக்கப்படும்’ என்று நெஞ்சை நிமிர்த்தி நேரு அறிவித்துவிட்டார். இதையே அடிப்படையாக வைத்து ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டிக்கொண்டு இருந்தார்கள்.
ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாடு (1955 ஜனவரி) அறிவித்த இரண்டு முக்கியமான தீர்மானங்கள் அந்தக் கட்சியின் அந்தஸ்தை வானளாவ உயர்த்திவிட்டன. ஒருவருக்கு ஒரு பதவிதான் என்ற அடிப்படையில் பிரதமர் நேருவே, தான் இதுவரை வகித்துவந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை யு.என்.தெப்பருக்கு தாரைவார்த்தார். சோஷலிச சமுதாயத்தை உருவாக்க காங்கிரஸ் பாடுபடும் என்று அறிவித்த இந்த மாநாடு, தேசிய சொத்துக்களை பொதுமக்களுக்கு உரிமை ஆக்கியது.
நேருவின் நடவடிக்கைகளைப் பார்த்து கம்யூனிஸ்ட்களே மிரண்டுபோனார்கள். எந்த அளவுக்குப் போனது என்றால், புரட்சியே நடக்காமல் இந்தியாவில் கம்யூனிஸத்தை நேரு உருவாக்கி வருவதாக கம்யூனிஸ்ட் தலைவர்களே பேச ஆரம்பித்துவிட்டார்கள். பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்குவதற்கான திட்டங்களைப் பற்றி மட்டுமே பிரதமரும் நிதி அமைச்சரும் இதர அமைச்சர்களும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அன்றைக்கு இருந்த ஒரே பிரதான எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட்களும் குழப்பமான சூழ்நிலையில் இருக்கும்போது... அத்தனைக்கும் சேர்த்து ஆப்புவைத்தார் ஃபெரோஸ்.
சோஷலிச சமுதாயம், பொதுத் துறைக்கு ஆதரவு, தனியார் துறைக்கு தடங்கல்... என்று பிரதமர் நேரு புகழ் மயக்கத்தில் இருந்தபோது, இன்னொரு பக்கத்தில் இதற்கு எதிரான வேலைகளை காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சில பெரிய மனிதர்கள் பார்த்தார்கள். அதனைத்தான் ஃபெரோஸ் அம்பலப்படுத்தினார். கொல்கத்தாவைச் சேர்ந்த ஹரிதாஸ் முந்த்ராவின் நிறுவனங்களில் ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஏராளமான பணத்தை முதலீடு செய்திருந்தது. அனைத்தும் பொதுத் துறைக்கு மாற வேண்டும் என்று ஒரு அரசாங்கம் கொள்கை வகுத்திருக்கும்போது, ஒரு தனியார் நிறுவனத்தில் பொதுத் துறை நிறுவனம் முதலீடு செய்வது எத்தகைய முரண்பாடு என்பதே ஃபெரோஸின் கேள்வி.
''நொடித்துப்போன நிலையில் இருக்கும் ஒரு நிறுவனத்துக்கு, இனிமேல் இந்த நிறுவனத்தை நடத்த முடியுமா, முடியாதா என்ற கவலையில் இருக்கும் ஒரு மனிதருக்கு, நிதி நெருக்கடியில் இருந்து தன்னைக் காப்பாற்றுவதற்கு யார் இருக்கிறார்கள் என்ற அச்சத்தில் இருக்கும் ஒருவருக்கு, இப்படிப்பட்ட சலுகையை இந்த அரசாங்கம் எப்படிச் செய்யலாம்?'' என்றார் ஃபெரோஸ்.
ஹரிதாஸ் முந்த்ராவின் ஆறு நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் இருந்தன. அந்த நிறுவனங்களை மீட்டெடுக்க முந்த்ராவுக்கு அவசர அவசியம் பணம். ஆனால், வீழ்ந்துகொண்டு இருக்கும் நிறுவனத்தில் யார் முதலீடு செய்வார்கள்... யார் கடன் கொடுப்பார்கள்... யார் அதன் பங்குகளை வாங்குவார்கள்? ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை பலிகடா ஆக்கியது காங்கிரஸ் அரசு. அதன் லட்சக்கணக்கான சந்தாதாரர்களின் கண்ணீரால் சேமிக்கப்பட்ட கரன்சி, சில கையெழுத்துக்களால் முந்திராவின் கஜானாவுக்குப் போனது. காங்கிரஸை காவல் தெய்வமாக நினைத்து வணங்க ஆரம்பித்தார் முந்திரா. இதனால், அவரது நிறுவனத்தின் பங்குகள் சடசடவென ஏற ஆரம்பித்தன. இதனைத்தான், 'இந்த அரசாங்கத்தின் அவமானகரமான செயல்’ என்று ஃபெரோஸ் வர்ணித்தார்.
''சரிய ஆரம்பித்திருந்த முந்த்ரா நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்காகவே, ஆயுள் காப்பீட்டுக் கழகம் அதிகளவிலான பணத்தை முதலீடு செய்துள்ளது. முந்த்ரா நிறுவனத்தில் இருந்து பங்குகளை வாங்கலாமா என்று ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பரிசீலனை நடந்திருந்தால் அவர்கள் இந்த நிறுவனத்தைத் திரும்பிக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் முதலீட்டு கமிட்டியின் எதிர்ப்பையும் மீறி பங்குகளை வாங்கி இருக்கிறார்கள் என்றால், அது யாரோ ஒரு அதிகாரம் பொருந்தியவர் தூண்டுதலின் பேரில் இது நடந்துள்ளது. இந்தப் பணப்பரிமாற்றம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தியாக வேண்டும்'' என்று ஃபெரோஸ் பொங்கினார்.
குற்றச்சாட்டை நேரடியாகவே வைத்தார் ஃபெரோஸ். முதலில் குற்றச்சாட்டை மறுத்த நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி, பின்னர் அதுகுறித்து விளக்கமாகப் பேசியாக வேண்டியதாயிற்று.
''உறுப்பினர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல நான் மறுக்கவில்லை. அந்தப் பொறுப்பில் இருந்து விலகிச்செல்ல நான் விரும்பவில்லை. அதிகாரிகள்தான் அனைத்துக்கும் காரணம் என்று சப்பைக்கட்டு கட்ட முயலவில்லை. முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை மத்திய நிதித் துறை அமைச்சகம் நேரடியாக நிர்வகிக்கவில்லை. எனவே, அதில் நாங்கள் நேரடியாகத் தலையிட்டு எதனையும் செய்ய முடியாது. இது மாதிரித்தான் நீங்கள் செயல்பட வேண்டும் என்றோ, இந்தப் பங்குகளைத்தான் வாங்கவேண்டும் என்றோ நாங்கள் கட்டளையிட முடியாது. அவர்கள் இதுபற்றி எங்களிடம் ஆலோசனை நடத்துவதும் இல்லை'' என்று நிதி அமைச்சர் சொன்னார்.
ஆனாலும், ஃபெரோஸ் விடவில்லை. ''நிதியமைச்சரின் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் இந்த பங்குகள் வாங்கப்பட்டுள்ளன'' என்று நிதியமைச்சரின் முகத்தை நோக்கிச் சொன்னார் ஃபெரோஸ். நண்பரைக் காப்பாற்றுவதா, மருமகன் குற்றச்சாட்டை மறுப்பதா என்பதற்கு மத்தியில் நேரு துடித்தார். அடுத்த அறிவிப்பை நிதியமைச்சர் செய்தார். ''சொல்லப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா என்பதை ஆராய விசாரணை கமிஷன் அமைக்கப்படும்'' என்று நிதியமைச்சர் பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் சொன்னார்.
1958-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி நீதிபதி எம்.சி.சக்லா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. கமிஷன் அமைக்கப்பட்ட மூன்றாவது நாளே தன்னுடைய விசாரணையை நீதிபதி சக்லா தொடங்கினார். பிப்ரவரி 5-ம் தேதி விசாரணையை முடித்தார். பிப்ரவரி 10-ம் தேதி தன்னுடைய அறிக்கையை அரசாங்கத்திடம் கொடுத்தார் நீதிபதி. இந்திய வரலாற்றில் இவ்வளவு துரிதமாக நடந்த முதலும் கடைசியுமான விசாரணை இதுதான்.
ஜனவரி மாதம் 17-ம் தேதி விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் 10-ம் தேதி அறிக்கை தரப்பட்டது. இது ஏதோ கண்துடைப்பு விசாரணையாக இல்லை. இந்த விசாரணைக்கு உத்தரவிட்ட நிதியமைச்சரை நோக்கியே கையை நீட்டியது சக்லா கமிஷன்.
இந்த கமிஷனின் முக்கியப் புள்ளியாக நிதித் துறையின் செயலாளர் ஹெச்.எம்.படேல் குறிக்கப்பட்டார். ''நிதித் துறைச் செயலாளராக இருந்த ஹெச்.எம்.படேலின் அறிவுரையின் பெயரிலேயே முந்த்ராவின் பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. அவரது தூண்டுதலால்தான் இந்தப் பங்குகளை வாங்கவேண்டிய நெருக்கடி ஆயுள் காப்பீட்டுக் கழக அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. பங்குகள் வாங்க தேர்வு செய்யப்பட்ட தேதி உட்பட முந்த்ராவுக்கு முன்கூட்டியே தெரிந்துள்ளது. அந்தத் தேதியில் தனது நிறுவனப் பங்குகளை மார்க்கெட்டில் கூட்டிவைத்து முந்த்ரா விளையாடிவிட்டார். அதாவது, செயற்கையாகத் தனது பங்குகளின் விலையை அதிகப்படுத்திக் கொண்டார்கள். இதனால் தேவையில்லாமல் அநியாய விலைக்கு காப்பீட்டுக் கழகம் இந்தப் பங்குகளை வாங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இவை அனைத்தும் நிதித் துறையின் செயலாளர் ஹெச்.எம்.படேலுக்குத் தெரியும்'' என்ற முடிவுக்கு கமிஷன் வந்தது.
நிதித் துறை அமைச்சர் நேரடியாக சம்பந்தப்படவில்லை என்றாலும்... நீதிபதி சக்லா, தீர்மானமான ஒரு கருத்தைச் சொன்னார். ''நிதித் துறை செயலாளர்தான் இதனைச் செய்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இந்த விவகாரங்கள் நிதித் துறை அமைச்சருக்குத் தெரியாமல் இருக்க முடியாது. தன் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் செய்யும் செயல்களுக்கு, அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு அமைச்சர்தான் முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும். இந்தியாவில் நடப்பது நாடாளுமன்ற ஜனநாயகம். இங்கு தனது அமைச்சகம் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர்தான் முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும்'' என்று சொன்னார். இந்த அறிக்கை நேருவுக்கு நெருக்கடியைக் கொடுத்தது. அறிக்கை தாக்கல் ஆனதுமே, தனது பதவி விலகல் கடிதத்தை நிதியமைச்சர் டி.டி.கே. கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து டி.டி.கே.வும் நேருவும் எழுதிக்கொண்ட கடிதங்கள் முக்கியமானவை.
''அதிகாரி செய்யும் தவறுக்கு அமைச்சர்தான் பொறுப்பு என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால், நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டியவன் நான்தானே'' என்றார் டி.டி.கே.
''இந்த விவகாரத்தை அமைச்சர் நேரடியாக அறியாவிட்டாலும், அவர் முழு பொறுப்பை ஏற்றே தீர வேண்டும்'' என்றார் பிரதமர் நேரு.
இருவருமே அவரவர் அளவில் தங்களது நேர்மையை நிரூபிக்க நினைத்தார்கள். ஆனால் இன்று, எந்தக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும் அதற்கு தார்மீகப் பொறுப்பேற்று விசாரணை கமிஷன்கள் அமைக்கப்படுவது இல்லை. அப்படியே அமைக்கப்பட்டாலும் அதற்குத் தேவையான ஆவணங்களைத் தருவது இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் அதற்கு முன்னால் ஆஜராவது இல்லை. முதல் அறிக்கை, இரண்டாம் அறிக்கை, மூன்றாம் அறிக்கை, அரைக் காலாண்டு அறிக்கை, அரையாண்டு அறிக்கை, வரைவு அறிக்கை, இறுதி அறிக்கைக்கு முந்தைய வரைவு அறிக்கை... என்று இழுத்து, ஆட்சிக் காலக்கட்டமான ஐந்து ஆண்டுகளையே முடித்துவிடுகிறார்கள். உச்ச நீதிமன்றம் போடும் கிடுக்கிப்பிடிகளைக்கூட சாமர்த்தியமாகச் சமாளித்து தப்பிக்கும் தந்திரமும் இன்றைய அரசியல்வாதிகளுக்குத் தெரிந்துள்ளது. ஆனால், 100 ரூபாய் லஞ்சம் வாங்கியவனும் 5,000 கையூட்டு கேட்டவனும் வேலையை இழந்து வாழ்க்கையைத் தொலைத்து ரோட்டில் அலைகிறான். ஆனால், ஆயிரம் கோடிகளில் புரள்பவர்களுக்கு பண மழை பொழிவது எப்போதும் நிற்கவில்லை. அப்படியானால், உண்மையான சுதந்திரம் இவர்களுக்கு மட்டும்தானே கிடைத்துள்ளது?
''சுதந்திரம் என்பது ஆட்சியாளர்களை மாற்றுவது மட்டுமல்ல. சமூகத்தின் அடித்தட்டு மக்களின் பொருளாதார முன்னேற்றமே சுதந்திரத்தின் அளவைத் தீர்மானிக்கும்'' என்று ஃபெரோஸ் பேசினார். இது மாமா, மனைவி, மகன்... ஆட்சி வரை தொடர்ந்தது!

நேருவின் ஷர்வானி கோட்டில் உள்ள ரோஜாவுடன் சேர்த்து சிறு துளி கறையும் இருந்துவிட்டதே எதனால்?
''நாம் ஒரு யுகத்தின் முடிவுக்கு வந்துவிட்டோம். பசப்பு வார்த்தைகள், அரசியல் தந்திரம், மோசடி மற்றும் சராசரி அரசியல்வாதியின் எல்லா வித்தைகளுக்கும் இனி இடமில்லை''- என்று டேராடூன் சிறையில் இருந்த நேரு, காந்திக்கு எழுதிய கடிதத்தில் உள்ள வரிகள். அதனை அவரது ஆட்சியிலேயே கடைப்பிடிக்க முடியவில்லை என்பதுதான் வேதனை.
''நமது அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்னைகள் மிகவும் முக்கியமானவை. அவற்றைத் தீர்க்காமல் நாம் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அரசியல் சுதந்திரம் என்பது முதலும் முடிவும் அல்ல. நாம் நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு அது ஒரு சாதனம். மனித உறவைப் பற்றிய பிரச்னையின் தீர்வுக்கு ஒரு சாதனம். ஆனால் அரசியல் மற்றும் பொருளாதாரத் தடைகளை அகற்றாமல் நாம் முன்னேற முடியாது''- சுதந்திரத்துக்கு 10 ஆண்டுகளுக்கு முன் கல்லூரி மாணவர்களிடம் நேரு பேசினார். அந்த இலக்கை அவரது 16 ஆண்டு கால ஆட்சியில்கூட நிறைவேற்றிக் காட்ட முடியாமல் போனதற்கு என்ன காரணம்?
''உங்களுடைய லட்சியம் எப்படி இருக்க வேண்டும்? எஜமானர்கள் மாறி உங்கள் துன்பங்கள் நீடிக்குமானால் அதனால் உங்களுக்கு அதிகமான பயன் இருக்காது. ஒருசில இந்தியர்கள் அரசாங்கத்தின் உயர்ந்த பதவிகளை வகிப்பதால் அல்லது அதிகமான லாப ஈவுத் தொகைகளை அடைவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைய முடியாது. உங்களுடைய பரிதாபகரமான நிலைமை அப்படியேதான் இருக்கும். நீங்கள் இடைவிடாமல் உழைத்துப் பட்டினியில் ஓடாகத் தேய்வீர்கள். உங்களுடைய நெஞ்சில் எரியும் விளக்கு அணைந்துவிடும்''- என்று சுதந்திரத்துக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு பேசிய நேரு, பிரதமர் பதவிக்கு வந்த பிறகு இப்படிப் பேச முடியவில்லையே... ஏன்?
பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்த ஆரம்ப காலக்கட்டத்தில் இந்தியாவில் வகுப்பு வன்முறை வெறியாட்டம் அதிகமாக நடந்தது. அதனைக் கட்டுப்படுத்தி ரத்தச் சகதியை நிறுத்தியாக வேண்டிய பெரும் பொறுப்பு பிரதமர் நேருவுக்கு இருந்தது. தன்னுடைய மனதளவில் இந்துத்துவா கொள்கையும் மத மேலாண்மைச் சிந்தனையும் இல்லாதவராக மட்டுமல்ல, தன்னை நாத்திகர் என்று அடையாளப்படுத்திக் கொள்வதிலும் பெருமைப்பட்டுக் கொண்டவர் நேரு. துணிச்சலாய் சில நடவடிக்கைகளை அவர் எடுத்தார். நேருவின் பிம்பம் அத்தகைய நடவடிக்கைகளுக்கு தடங்கலற்ற அனுமதியை அளித்தது. இது முதல் சாதனை.
அடுத்த சிக்கல் சமஸ்தானங்கள் வடிவில் வந்தன. பெரிய சமஸ்தானங்கள் தாங்கள் சுதந்திரமான அரசுகளாகச் செயல்பட விரும்பின. 'நாங்கள் சுதந்திரமான அரசுகள்தான்’ என்று சில சமஸ்தானங்களின் அரசர்கள் அறிவித்தார்கள். இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்தனி நாடுகளாகப் பிரிந்திருக்கும் சூழ்நிலை அது. இந்தியாவைச் சுற்றி சின்னச் சின்ன சமஸ்தானங்கள் இருந்தால் இந்தியாவுக்கு தீராத் தலைவலியாக அது அமையும் என்று பிரதமர் நேருவும், அன்றைய உள்துறை அமைச்சரும் நேருவின் சகாவுமான படேலும் நினைத்தார்கள். தன்னுடைய தனித்திறமையால் நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தார் படேல். சிக்கல் ஏற்படுத்தியவர்கள் மூன்று பேர். திருவிதாங்கூர், போபால், ஹைதராபாத் ஆகியவை அவை. ''நாம் உடனடியாக இதனைச் சரி செய்யாவிட்டால் தியாகங்கள் பெற்று அடைந்த சுதந்திரக் காற்று, சமஸ்தானங்களின் வழியாக வெளியே போய்விடும்'' என்று சமஸ்தானங்கள் இணைப்புத் துறைச் செயலாளராக இருந்த வி.பி.மேனன் எச்சரித்தார். முரண்டுபிடித்த சமஸ்தானங்களை இணைப்பதற்கும் ஆரம்பக் காலக்கட்டத்தைச் செலவுசெய்ய வேண்டியதாயிற்று. படையெடுத்தும் பயமுறுத்தியும் இந்த ஐக்கியத்தை படேல் சாதித்தார். சமஸ்தானத்தையும் தங்களது அதிகாரத்தையும் ஒப்படைத்த அரசர்களுக்கும் மன்னர்களுக்கும் ஆயுட்கால மானியம் வழங்கப்பட்டது. அன்றைய மதிப்பில் 4.66 கோடி ரூபாய் மன்னர்களுக்கு மானியமாகத் தரப்பட்டது. இவ்வளவு சலுகை விலையில் வேறு எந்த நாட்டுக்கும் நாடுகள் கிடைத்திருக்காது. இது இரண்டாவது சாதனை.
வலிமையான மத்திய அரசு அமைய வேண்டுமானால், இந்தியாவின் ஒருமைப்பாடு காக்கப்பட வேண்டும் என்று நேரு நினைத்தார். இந்திய வரலாற்றை மிக உன்னிப்பாகப் படித்த முதலும் கடைசியுமான பிரதமர் நேரு. பல்வேறு பட்ட மொழி, இனம், மதம் கொண்ட மக்களின் கூட்டமைப்புதான் இந்தியா என்பதை உணர்ந்தவர். ஒப்புக்கொண்டவர். அதன் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்த்தவர். இந்தி மொழி திணிக்கப்பட்டால் தமிழன் இரண்டாம் தர குடிமகனாக ஆக்கப்படுவான் என்ற கிளர்ச்சி 1938 முதல் தமிழகத்தில் நடந்துவந்தது. ''இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் நீடிக்கும்'' என்று பிரதமர் நேரு செய்த அறிவிப்புதான் (7.8.1959) இன்று வரைக்கும் நடைமுறையில் இருக்கிறது. ''இதை எப்போது மாற்றலாம் என்று என்னிடம் கேட்டால், அதனை இந்தி பேசாத மாநில மக்கள்தான் முடிவு செய்வார்கள்'' என்றும் சொல்லும் பரந்த மனப்பான்மை நேருவுக்கு இருந்தது. மொழிவாரி மாகாணங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற போதும், அது இந்தியாவைச் சிதைத்துவிடும் என்று பலரும் பயமுறுத்தினார்கள். 'இல்லை அது இந்தியாவைப் பலப்படுத்தும்’ என்று சொன்னவர் நேரு. இன்று ஏக இந்தியா காப்பாற்றப்பட்டு இருப்பதற்கு இந்த மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டதும் முக்கியக் காரணம். இது நேருவின் மூன்றாவது சாதனை.
பாசிசம், காலனியம், இனவெறி, ஆக்கிரமிப்பு ஆகியவற்றை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நேரு எதிர்த்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் உலக நாடுகள் சில அமெரிக்காவின் தலைமையிலும் சில நாடுகள் ரஷ்யாவின் தலைமையிலும் பிரிந்தன. வல்லரசு நாடுகளின் கூட்டணிக்குள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அனைத்து நாடுகளும் கட்டாயப்படுத்தப்பட்டன. இந்தியா இதில் எந்தக் கூட்டணிக்குள்ளும் போய் சிக்கிக்கொள்ளக் கூடாது, எந்த அணியிலும் சேராத அணி சேராக் கொள்கைதான் நம்முடைய அடித்தளம் என்று சொன்னவர் நேரு. தன்னுடைய சோசலிசக் கொள்கை காரணமாக நேரு, பின்னர் சோவியத் பக்கம் சாய்ந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. ஆனாலும் அவர் எந்த ஏகாதிபத்திய நலன் சார்ந்தும் முடிவுகள் எடுப்பதற்கு கடைசி வரைக்கும் தயங்கினார். இது அவரது நான்காவது சாதனை.
ஐந்தாவது சாதனையாக அவரது சோசலிச எண்ணம் அமைந்திருக்க வேண்டும். ஆனால், அவருக்கு அது சோதனையைத்தான் கொடுத்தது. அதுவே இந்தியாவுக்கான வேதனையாகவும் மாறியது.
'கிராம ராஜ்ஜியமே ராம ராஜ்ஜியம்’ என்ற கனவுலகில் சஞ்சரிக்கும் மனிதராக காந்தி வலம் வந்தார். ஆனால் நேரு முன்மொழிந்த வார்த்தைகள் கிராமம், நகரம், படித்தவர், பாமரர், பணம் படைத்தவர், ஏழை ஆகிய அனைத்துத் தரப்பையும் கவனிக்க வைத்தது. சமத்துவம், சம வாய்ப்பு, சமூக நீதி, அறிவியல் மூலமாக சமூகத்தின் வளர்ச்சி என்று நேரு சொன்னார். அவராகச் சொல்லிக்கொண்ட சோசலிசத்தின் அடிப்படைகள் இவை. இதற்கும் மார்க்சியத் தத்துவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், அதுதான் வேறு வார்த்தைகளில் வருகிறது என்று வர்த்தகர்கள் பயந்தார்கள். அதுதான் இது என்று சொல்லி பொதுவுடைமைவாதிகள் சிலரும் வழிமொழிய ஆரம்பித்தார்கள். ஏழைகளுக்குச் சாதகமான மாற்றங்களைச் சும்மா செய்ய முடியாது என்று நேருவும் நினைத்தார். அதனால்தான் அதற்கு, 'அறுவைச் சிகிச்சை’ என்று பெயரும் வைத்தார்.
இதனை நாடாளுமன்ற, சட்டசபைகளின் மூலமாகத்தான் செய்ய முடியும் என்று அவர் நினைத்தது முதல் சறுக்கல். பொதுத் துறை நிறுவனங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று முதலில் சொன்னார். தனியார் நிறுவனங்கள் அனைத்தும் ஒரு காலக்கட்டத்தில் பொதுத் துறை நிறுவனம் ஆகிவிடும் என்று அடுத்துச் சொன்னார். 'தேசிய வருமானத்தை அதிகப்படுத்த வேண்டுமானால் பொதுத் துறையும் தனியார் துறையும் இணைந்து செயல்பட வேண்டும்’ என்று கொஞ்சம் இறங்கினார். 'லாபகரமான தொழில்களில் அரசு இறங்கும்’ என்றார். 'நஷ்டம் அடைந்தால் அந்தத் தொழிலைக் கைவிட்டுவிடுவோம்’ என்று சொல்லிக்கொண்டார். அதனைச் செயல்படுத்த ஐந்தாண்டுத் திட்டங்கள் என்ற அஸ்திரத்தை எடுத்தார்.
ஐந்தாண்டுத் திட்டம் என்ற சிந்தனையே சோவியத் இறக்குமதிதான். ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி முதன்முதலாக 1923-28 காலக்கட்டத்தில் தன்னுடைய நாட்டு மக்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டது. அதுதான் ஐந்தாண்டுத் திட்டம் என அழைக்கப்பட்டது. அதன் பிறகு பல்வேறு நாடுகள் இதனைப் பின்பற்றத் தொடங்கின. நேருவும் அதனையே பின்பற்றினார். அவருக்கு அப்படிப்பட்ட சிந்தனைத் தூண்டுதலைச் செய்தவர் வி.எம்.விசுவேஸ்வரய்யா. அவர்தான் 'இந்தி யாவின் திட்டமிட்ட பொருளாதாரம்’ என்ற புத்தகத்தை, அடிமை இந்தியாவில் முதலில் எழுதினார். இது காங்கிரஸ் கட்சியைக் கவர்ந்தது. இதனைப் பற்றி ஆய்வுசெய்ய 'தேசிய திட்ட கமிட்டி’யை நேருவின் தலைமையில் அமைத்தார்கள். அரசியல் கொந்தளிப்பு அதிகம் ஆனதால் இந்த கமிட்டி அப்படியே கிடப்பில் போடப்பட்டது. சுதந்திரம் அடைந்ததும் பிரதமர் ஆன நேருவுக்கு, தான் முன்பு வகித்த கமிட்டி பதவி ஞாபகத்துக்கு வந்தது. அதை வைத்து ஒரு கமிஷனை அமைத்தார். அதுதான் இன்றுவரை நடைமுறையில் இருக்கும் 'திட்ட கமிஷன்’. அதன் தலைவராகவும் நேரு இருந்தார்.
''தேச மக்கள் அனைவரும் சரிநிகர் சமானமாக, வாழ்க்கை நடத்தப் போதிய வசதி பெறுவதற்கு உள்ள உரிமை தேவை. சமூகத்தின் பொருள் வசதிகள் முழுதும் பொதுமக்களின் பொதுநலத்துக்காகப் பயன்படும் விதத்தில் விநியோகிக்கப்படும் முறைகள் இருக்க வேண்டும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட முறைகள் பொதுநலம் பாதிக்கப்படும் முறையில் இருக்கக் கூடாது. ஒரு சிலரிடம் செல்வமும் பொருள் உற்பத்தி வசதிகளும் குவிந்திருக்காமல் செய்வதற்கான நடவடிக்கைகளும் தேவை’- என்று அன்றைய அரசாங்கத்தின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அது மாதிரி நடக்க முடியவில்லையே ஏன்?
டாக்டர் அம்பேத்கர் அடிக்கடி ஒரு உதாரணத்தைச் சொல்வார். ''சீனாவைச் சேர்ந்த புகழ்பெற்ற டெய்லர் ஒருவரிடம், தன்னுடைய கிழிந்த, நைய்ந்துபோன கோட் ஒன்றை எடுத்துக்கொண்டு ஒருவன் வந்தான். 'இதே மாதிரி எனக்கு ஒரு கோட் தைத்துக்கொடு’ என்று கேட்டான். இரண்டு வாரத்தில் அவனுக்கு கோட் தைத்துத் தரப்பட்டது. பழைய கோட்டில் எங்கெல்லாம் கிழிந்திருக்குமோ அங்கெல்லாம் கிழித்து, எங்கெல்லாம் நைய்ந்திருந்ததோ அங்கெல்லாம் அதேமாதிரி செய்து, அந்த புகழ்பெற்ற டெய்லர் கோட் தைத்துக் கொடுத்தார்'' என்று சொல்வார் அம்பேத்கர். பிரிட்டிஷிடம் இருந்து சுதந்திரம் பெறப் போராடியவர்களும், அதே மாதிரியான ஒரு ஆட்சியைத்தானே கொடுத்தார்கள்? நேருவால்கூட அது முடியாமல் போனதற்கு என்ன காரணம்?

போராட்டக் காலத்தில் கொள்கை பொங்கப் பேசுபவர்கள், பதவியை அடைந்ததும் பெரும்பாலும் பதுங்கிப் படுத்துவிடுகிறார்கள் என்பதற்கு நேருவும் விதிவிலக்கு இல்லை. அதற்குக் காரணம், நேருவை எதிர்க்க காங்கிரஸுக்குள்ளேயே தலைவர்கள் இல்லாமல் போனதுதான்!
'ஜவஹர்லால் நேருதான் என்னுடைய வாரிசு’ என்று சொன்ன மகாத்மா காந்தி, சுதந்திரம் அடைந்த சில மாதங்களில் மரணத்தைத் தழுவினார். அடுத்த பிரதமர் யார் என்ற போட்டி வந்தபோது நேருவுக்கு அடுத்த இடத்தில் வைத்துப் பேசப்பட்ட சர்தார் வல்லபபாய் படேல், சில ஆண்டுகளில் மரணம் அடைந்தார். குடியரசுத் தலைவர் ஆகிவிட்டதால் நடைமுறை அரசியல் விவகாரங்களில் இருந்து ஒதுங்கிவிட்டார் பாபு ராஜேந்திர பிரசாத். உடம்பு முழுக்க மூளை கொண்டவர் என்று வர்ணிக்கப்பட்ட ராஜாஜியும், அதேபோல் அரசியல் செய்ய முடியாத கவர்னர் ஜெனரல், மேற்கு வங்க ஆளுநர் என்ற பதவிகளில் போய் உட்கார்ந்தார். காந்தியின் சீடரான ஆச்சார்ய கிருபளாளி, கிசான் மஸ்தூர் பிரஜா என்ற கட்சியை உருவாக்கிவிட்டுப் போய்விட்டார். நேரு தலைமையிலான இடைக்கால அமைச்சரவையில் அங்கம் வகித்த ஸ்யாமா பிரசாத் முகர்ஜி, ஜனசங்கம் தொடங்கி அங்கே போய்விட்டார். கொள்கையும் அஞ்சாமையும் கொண்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், காங்கிரஸில் இருந்து விலகி பிரஜா சோஷலிஸ்ட் கட்சியை உருவாக்கிக் கொண்டார். மௌலானா அபுல்கலாம் ஆசாத் அரசியல் ஆர்வம் இல்லாமல் போனார். இவரது அறிவு நமக்குத் தேவை என்று எந்த அம்பேத்கரை நேரு தனது அமைச்சரவையில் சேர்த்தாரோ... அந்த அம்பேத்கர், பதவி விலகிவிட்டார்.
தனித்திறமை கொண்ட ஒவ்வொரு ஆளுமைகளும் வெவ்வேறு காரணங்களால் காங்கிரஸை விட்டும், தன்னுடைய அமைச்சரவையை விட்டும் வெளியேறியது நேருவுக்கு வசதியாகப் போனது. தன்னைத் தவிர யாருமே இல்லையே என்ற யதார்த்த நிலைமை, தன்னைத் தவிர இனி யார் இருக்கிறார்கள் என்ற கர்வ எண்ணமாக மாறியது. 'காங்கிரஸ்தான் நாடு; நாடுதான் காங்கிரஸ்’ என்று அவர் சொல்லத் தொடங்கினார். இதைத்தான் அவரது மகள் இந்திரா ஆட்சி காலத்தில், 'இந்திராவே இந்தியா; இந்தியாவே இந்திரா’ என்று மாற்றிச் சொல்லப்பட்டது.
சிலர் விலகிப் போனார்கள் என்றால் சிலரை அடக்கியாக வேண்டும் என்று நேரு முடிவெடுத்தார். அதற்குக் காரணம், படேல். 'இன்னொரு படேல் கட்சிக்குள் வந்துவிடக் கூடாது’ என்பதில் நேரு உறுதியாக இருந்தார். எனவே, லேசாகத் தலைதூக்கிய பிரபலங்களை எல்லாம் முடிந்த அளவுக்கு களையெடுக்க நேரு முயற்சித்தார்.
நேர்மையும் சுயசிந்தனையும் கொண்ட தலைவர்களில் ஒருவராக அன்றைய தினம் புருஷோத்தம்தாஸ் டாண்டன் இருந்தார். அவரை காங்கிரஸ் தலைவர் ஆக்குவதற்குத்தான் பலரும் விரும்பினார்கள். அவரும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதால் நேருவுக்கு ஏனோ பிடிக்கவில்லை. எல்லாவற்றிலும் கறாராகக் கருத்துச் சொல்லக்கூடியவர் டாண்டன் என்பதும் நேருவின் கோபத்துக்கு காரணமாக இருக்கலாம். 'டாண்டனுக்கு பதிலாக கிருபளானியை தலைவர் ஆக்கலாம்’ என்றார் நேரு. ஆனால், இதனை படேல் போன்றவர்கள் ஆதரிக்கவில்லை. டாண்டனுக்கு ஆதரவு அதிகமானது. உடனடியாக பிரதமர் பதவியை விட்டும் கட்சிப் பதவியை விட்டும் விலக நேரு திட்டமிட்டார். 'இனி நான் கட்சிக்கும் ஆட்சிக்கும் பயன்பட மாட்டேன்’ என்றார். அவர் ராஜினாமா அஸ்திரத்தை எடுப்பது அது முதல் தடவை அல்ல.
காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னால், 'நான் ராஜினாமா செய்யப் போகிறேன்’ என்று மிரட்டல் விடுத்தவர் நேரு. 'ராஜேந்திர பிரசாத்தை குடியரசுத் தலைவர் ஆக்கக் கூடாது’ என்று சொல்லி அதனை யாரும் ஏற்காதபோதும், 'ராஜினாமா செய்யப் போகிறேன்’ என்றவர் நேரு. அரசியலில், 'ராஜினாமா’ அஸ்திரத்தை அதிகமாகவிட்டு, அதனை வாபஸ் வாங்கியும் சாதனை படைக்கலாம் என்பதைத் தொடங்கிவைத்து அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டியவர் நேரு என்றும் சொல்லலாம்.
அவர்தான் டாண்டன் தலைவர் ஆகக்கூடாது என்பதற்காகவும் ராஜினாமா அஸ்திரத்தை எடுத்தார். 'என்னை எல்லோரும் துணிக் கடை பொம்மைபோல நடத்த நினைக்கிறார்கள்’ என்றும் சொல்லிக் கொண்டார். அவை எதுவும் எடுபடவில்லை. டாண்டன்தான் தேர்தலில் வென்றார். ஆனால், அவரைத் தனது கட்சித் தலைவராகவே நேரு நடத்தவில்லை. டாண்டனுக்கு யாரையெல்லாம் பிடிக்காதோ அவர்களை எல்லாம் நாடாளுமன்றக் கமிட்டியில் இணைத்தார் நேரு. தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களையெல்லாம் சேர்ப்பதைத் தடுத்தார் டாண்டன். 'நான் உபயோகமாக இருந்த காலம் முடிந்துவிட்டது’ என்று நேரு வருந்தி சொல்லிக்கொண்டார். இந்தப் பிரச்னைகள் அனைத்துக்கும் ராஜாஜியை பஞ்சாயத்து செய்பவராக நேரு வைத்திருந்தார்.
ஒருகட்டத்தில் தன்னுடைய வாழ்க்கையே வெறுத்துப்போகும் நிலைமைக்கு ராஜாஜி தள்ளப்பட்டார். ஆனாலும் எந்த முடிவையும் ராஜாஜிக்கு தெரியாமலேயே நேரு எடுத்தார். ஒரு காரியத்தைச் செய்துவிட்டு தகவல் தருவதுதான் நேருவின் வழக்கமாக மாறியது.
'இப்படியெல்லாம் செய்து காங்கிரஸைக் குழப்பி அழிப்பதற்கு முன்னதாக என்னை நீங்கள் விடுவித்துவிட வேண்டும். தயவுசெய்து என்னை பைத்தியக்காரனாக ஆக்கிவிடாதீர்கள்'' என்று நேருவுக்கு கடிதம் எழுதிவிட்டு டெல்லியில் இருந்து தப்பித்தால் போதும் என்று ஓடி வந்துவிட்டார் ராஜாஜி. அவரை எப்படியாவது டெல்லியில் உட்காரவைத்து தன்னுடைய காரியங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நேரு நினைத்தார். அப்போது ராஜாஜி சொன்னது இன்றைய அரசியல் தலைவர்கள் அனைவரும் ஞாபகம்வைக்க வேண்டியது. ''நான் 'ஞாபகசக்தியை இழந்துவிட்ட வயதான முட்டாள்’ என்று அறிவிக்கப்பட்ட பிறகு ஓய்வெடுக்க விரும்பவில்லை'' என்று சொன்னார் ராஜாஜி.
அதாவது தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக நேரு எப்படியெல்லாம் செயல்பட்டார் என்பதற்கு இவை எல்லாம் உதாரணங்கள்!
'அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கும், அதிக அதிகாரம் அதிக ஊழலுக்கு வழிவகுக்கும்’ என்பது புகழ்பெற்ற அரசியல் பொன்மொழிகளில் ஒன்று. தட்டிக் கேட்பதற்கான சகாக்கள் தனக்கு இல்லை என்பதால்தான் செய்வதும், சொல்வதும்தான் சரியானது என்ற நிலைமை நேருவின் ஆட்சி காலத்திலேயே தொடங்கியது. ஆனால், அதனை எல்லாம் பச்சையாக இல்லாமல் சாமர்த்தியமாக நேரு செய்தார். ஏனென்றால் அவர் சாராசரி அரசியல்வாதி அல்ல!
அடிமை இந்தியாவில் ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்தவர். மகாத்மாவை அருகில் இருந்து தரிசித்தவர். தந்தை மோதிலால் நேருவின் தர்க்க நியாயங்களைக் கவனித்தவர். அனைத்துக்கும் மேலாக உலக நாடுகளை நேரில் கண்டவர். பல்வேறு நாடுகளில் அடக்குமுறை ஆட்சியாளர்கள் எப்படி எல்லாம் வீழ்ந்தார்கள் என்பதை எழுத்தெண்ணிப் படித்தவர் நேரு. 'பிரதமர்’ நேருவை, 'தியாகி’ நேரு சிலநேரங்களில் பின்னால் இருந்து இழுத்துக்கொண்டே இருந்தார். அதனால், முதல் வாரம் சோசலிசத்துக்கு ஆதரவாகவும் அடுத்த வாரமே, அதற்கு எதிராகவும் பேச வேண்டியதாயிற்று. ''புதிய தொழில்களை அரசாங்கமே ஆரம்பிக்கும். தொழில் முறைகள் அனைத்தையும் அரசாங்கமே நடத்தும். தனிப்பட்டவர்களிடம் தொழிலைக் கொடுக்காது’ என்று ஒருநாள் நேரு பேசிவிட்டார். அடுத்த நாளே பிர்லா, மோடி, ஷராப் போன்ற தொழிலதிபர்கள் அவரை வந்து சந்தித்தார்கள். 'இப்போதைக்கு எந்தத் தொழிலையும் அரசாங்கம் ஏற்றுச் செயல்படுத்தப் போவதில்லை’ என்று நேரு சொன்னார். இதில் எது ஒரிஜினல் என்ற குழப்பம் அவர் ஆட்சியில் இருந்த 16 ஆண்டுகளும் இருந்தது. இந்த ஊசலாட்டத்தின் காரணமாகச் சிலரை காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டுவர நேரு நினைத்தார்.
பிரஜா சோஷலிஸ்ட் கட்சித் தலைவரான ஜெயப்பிரகாஷ் நாராயணனை அழைத்துப் பேசினார். அவரை காங்கிரஸ் கட்சிக்குள் வர வேண்டும் என்று நேரு கேட்டுக்கொண்டார். அப்படியானால் நேரு என்னென்ன காரியங்களைச் செய்ய வேண்டும் என்று ஜே.பி. பட்டியல் கொடுத்தார். அந்தப்பட்டியல் இன்றுவரை பொருத்தமானதுதான்.
''மத்தியில் அதிகாரங்கள் குவிந்து கிடக்கிறது. அதனைப் பகிர்ந்துகொடுத்து நிர்வாகச் சீர்திருத்தங்கள் செய்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும். வணிகத் துறையை அரசாங்கமே ஏற்று நடத்த வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் வேண்டும்...'' என்று பல்வேறு கோரிக்கைகளை ஜே.பி. அடுக்கினார். ஆறு மாத காலம் பேச்சுவார்த்தையை இழுத்த நேரு இறுதியில், 'இதை எல்லாம் நிறைவேற்றும் அதிகாரம் எனக்கு இல்லை. பிரதமராகவும் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் இருக்கின்ற என்னால் இதையெல்லாம் நிறைவேற்ற இயலாது’ என்றுசொல்லி அமைதியாகிவிட்டார். ''மாஸ்கோவை இந்தியாவுக்கு கொண்டுவந்து காட்டுவேன்'' என்று சொன்ன நேருவே, ''எதனையும் ஒழுங்காக இயக்குவதற்குரிய வழிமுறைகள் வகுக்காமல் நாட்டுடமை ஆக்குதல் ஆபத்தானது'' என்று சொல்லும் அளவுக்கு தன்னை மாற்றிக்கொண்டார். சோஷலிசத்தை திசை திருப்பும் தந்திரம் என்று சோஷலிசத் தலைவர்கள் சொன்னார்கள். அன்று அண்ணா சொன்ன வாசகம்தான், ''காகிதப் பூ மணக்காது, காங்கிரஸின் சோஷலிசம் இனிக்காது!’
அதற்காக நேரு தனது ஆட்சிக்காலத்தின் அனைத்து முறைகேடுகளுக்கும் உடன்பட்டார், அவருக்குத் தெரிந்துதான் அனைத்தும் நடந்தன என்று சொல்ல வரவில்லை. 'எனக்குச் சொத் துடைமை மனப்பான்மை இல்லை. செல்வத்தையும் சொத்துக்களையும் சுமந்துகொண்டு இருப்பது ஒரு பெரிய பாரம் என்பதையும் நான் அறிவேன். தொல்லை என்பதையும் உணர்வேன்’ என்றார். ஆனால், ஊழல் புரிந்தவர்களை அவரால் தடுக்க முடியவில்லை. முறைகேடுகளைத் தட்டிக் கேட்க முடியவில்லை. அதற்கு ஓர் உதாரணம்... அவரது செயலாளர் எம்.ஓ.மத்தாய்.

அதிகாரம் அப்பாவிடம் இருந்து மகளுக்கு!
பிரதமராக நேரு இருந்தபோது அதிக அதிகாரம் பொருந்தியவராக அவரது செயலாளர் மத்தாய்தான் இருந்தார். அமைச்சர்களுக்கே உத்தரவிடும் கட்டளைத் தளபதியாகவும் அவர் இருந்தார். வருமானத்தை மீறிச் சொத்துச் சேர்த்ததாக மத்தாய் மீது புகார் கிளம்பியது. தேயிலைத் தோட்டங்கள் அவருக்கு இருந்ததாகக் கண்டுபிடித்துச் சொன்னார்கள். அதனை முதலில் நேரு நம்பவில்லை. ஆதாரங்கள் தரப்பட்டதும் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இறுதியில் மத்தாய் பதவி விலகவேண்டியது ஆயிற்று. இவையெல்லாம் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்தபோதுதான், நேருவின் மீதான பிம்பம் படிப்படியாக உடைந்தது. அவர் அதிகாரம் பொருந்தியவராக இருந்தார். அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது. அதனால், அவருக்கு ஆலோசனை சொல்வதற்குக்கூட யாருமே இல்லாமல் போனார்கள்.
அதிகாரத்தை தன்னுடைய கொள்கைகளை அமல்படுத்துவதற்காக நேரு செலுத்தவில்லை என்பதுதான் துரதிருஷ்டமான உண்மை. அந்த அதிகாரத்தை மற்றவர்களை அடக்குவதற்குப் பயன்படுத்தினார். இதனால் அவரது நிர்வாகம் தேங்கிக் கிடந்தது. சிறந்த நிர்வாகத்தில் அதிகாரக் குவிப்பு இருக்காது. தான் ஒன்றை எப்படிச் செய்வோமோ அதனை அப்படியே செய்து காட்டக்கூடிய திறமைசாலிகளை தன்னோடு வைத்துக்கொண்டு வேலை வாங்குவதுதான் சிறந்த நிர்வாகத்துக்கு அழகு. 'நானே அனைத்தும் செய்து முடிப்பேன்’ என்பது திறமையைக் காட்டாது. ஆணவத்தையே வெளிப்படுத்தும். இதனால் காலப்போக்கில் திறமைசாலிகள் வெளியேறினார்கள். அதனால் சோஷலிசம் என்ற அலங்காரமான வார்த்தை மட்டும்தான் அவரிடம் மிச்சம் இருந்தது.
'விழாக்களில் நேரு கொஞ்சுவதற்காக கொழுகொழு குழந்தைகளைத் தேடிப் பிடித்தார்களே தவிர, சராசரி இந்தியக் குழந்தை அப்படி இல்லையே’ என்று கிண்டல் செய்யும் அளவுக்குத்தான் நேருவின் ஆட்சி நிலைமை இருந்தது. மூன்று ஐந்தாண்டுத் திட்டங்கள் அவரது ஆட்சியில் போடப்பட்டன. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது, ''எவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் இன்றளவும் இந்தியாவின் பல பாகங்களில் ஒரு பானை குடிநீருக்குக்கூட மக்கள் அலைந்து திரிகின்ற காட்சிகளைப் பார்க்கின்றபோது நான் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்’ என்றுதான் பிரதமர் நேருவால் சொல்ல முடிந்தது. ''ஊழல் என்பது ஜனநாயக முறைகளின் கீழ் இயங்கும் நாட்டின் நடைமுறையில் ஒரு பகுதியாக மாறி வருகிறது. அது ஓரளவு வளர்ந்துள்ளது என்று சொல்வதற்காக நான் பயப்படுகிறேன். ஜனநாயகக் கோட்பாடு தருகின்ற தீமைகளின் பங்கு இது'' என்று வெளிப்படையாகச் சொல்லியாக வேண்டிய நிலைமைக்கு நேருவே தள்ளப்பட்டார்.
காங்கிரஸ் ஆட்சி காலத்து ஊழல்களை ஃபெரோஸ் வெளிப்படுத்தினார் என்றால், இந்த ஆட்சி மீதான மிகத் தெளிவான விமர்சனங்களை வைத்ததில் முதன்மையானவர் ராஜாஜி.
இந்தியா சுதந்திரம் அடைந்து 6 மாதம்கூட ஆகவில்லை. ராஜாஜி என்ன சொன்னார் தெரியுமா?
'50 ஆண்டுகள் போராடிப் பெற்ற இந்திய சுதந்திரம் என்பது வெறும் லஞ்ச ஊழலாக முடியுமானால் அதைவிடச் சோகம் வேறென்ன இருக்க முடியும்?'' என்று ராஜாஜி கேட்டபோது, அவர் காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தார். காங்கிரஸ் அளித்த பதவியில் இருந்தார். பிரதமர் நேருவுக்கு நெருக்கமாக இருந்தார். அவரது அமைச்சரவைக்கு ஆலோசனை சொல்பவராக இருந்தார். இதனாலேயே அதிகார மையத்தில் இருப்பவர்களால் உதாசீனப்படுத்தப்பட்டு ராஜாஜி, காங்கிரஸைவிட்டு வெளியேறினார்.
''நேரு சொல்லும் சோஷலிசம், இந்தியாவுக்குப் பயன்படாது'' என்று சொல்லிவிட்டு சுதந்திராக் கட்சி ஆரம்பித்தாலும், ''இன்றைய காங்கிரஸ் கட்சியும் அதனுடைய ஆட்சியும் நாம் எதிர்பார்க்கும் நேர்மைத் திறத்துடன் இல்லை'' என்பதுதான் ராஜாஜிக்கு அதிகப்படியான கோபத்துக்குக் காரணம். அதனால்தான் நேரு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் அன்றைய காங்கிரஸ் கட்சியின் முறைகேடுகளை அதிர்வேட்டுகளைப்போல ராஜாஜி வெளிப்படுத்தினார்.
''காங்கிரஸ்காரர்கள் ரொம்ப வசதியாக இருப்பதுபோல் காணப்படுகிறார்கள். அவர்கள் ஏதாவது புதிய தொழிலை மேற்கொண்டு பணம் சம்பாதிக்கிறார்களா என்ன? எங்கிருந்து அவர்களுக்கு கிடைத்தது பணம்?''- இந்தக் கேள்வியை 1956-ல் ராஜாஜி கேட்டுள்ளார்.
''முழுநேரக் காங்கிரஸ்காரர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்களுக்கு காங்கிரஸ்காரனாக இருப்பதே உத்தியோகமாகிவிட்டது. இவர்கள் ஆட்சி, அரசியல் மட்டங்களில் தங்களது அதிகாரத்தைச் செலுத்துகிறார்கள். ஒட்டுண்ணி போலிருந்து பணத்தைச் உறிஞ்சிக் கொள்கிறார்கள்'' - என்று 1958-ல் ராஜாஜி சொல்லி இருக்கிறார்.
அன்றைய மத்திய அரசுக்கு அவர் ஒரு பெயரை வைத்தார், 'பட்மிட்-லைசென்ஸ்-கோட்டா ஆட்சி.’ சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் 'பட்மிட் ராஜ்.’
குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே சலுகை கொடுத்தார்கள், லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகைகள் கிடைத்தன என்று ராஜாஜி குற்றம்சாட்டினார். ''பட்மிட் - லைசென்ஸ்-கோட்டா முறையானது காங்கிரஸ் கட்சியின் பணக்கார நண்பர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்கியது. ஏழைகளை மேலும் ஏழைகள் ஆக்கியது'' என்று பகிரங்கமாக ராஜாஜி சொல்ல ஆரம்பித்தார்.
நேருவின் காலமே இத்தகைய விமர்சனத்துக்கு ஆளாகியது என்றால் கல்மாடி காலத்தில் எப்படி இருக்கும்? இதனை இன்று தடுக்க முடியாதவராக மன்மோகன் சிங் இருப்பதைப்போலத்தான் நேருவும் இருந்துள்ளார். அதனால்தான் விமர்சனங்கள் அவர் மீது இவ்வளவு வந்தன.
நேரு எப்படிப்பட்டவர் என்பதை நேதாஜி முன்பு ஒருமுறை சொன்னார்,
''ஒரு நெருக்கடியான நேரத்தில் நீங்கள் வெற்றிபெறும் வகையில் செயல்படுவது இல்லை. ஊசலாடும் மனம் உங்களுடையது'' என்பதே அது. ஆனால் நேரு அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. இந்த விமர்சனங்களை எல்லாம் தூரத் தூக்கி வைத்துவிட்டு, மகள் இந்திராவுக்கு மகுடம் சூட்டும் காரியத்தை நேரு கனகச்சிதமாகப் பார்த்தார். நேருவின் மறைவுக்குப் பிறகு சாஸ்திரி வந்தார், சாஸ்திரி இறந்த பிறகு, 'வேறு வழியில்லாமல் இந்திரா அழைத்துவரப்பட்டார்’ என்று சிலர் புதிய வரலாற்றை உருவாக்கிவிட்டார்கள். உண்மை அது அல்ல. பிரதமர் நாற்காலியில் நேரு உட்கார்ந்து இருக்கும்போதே காங்கிரஸ் தலைவராக இந்திரா உட்கார வைக்கப்பட்டார். அன்றைய இந்திராவுக்கு 'அலங்கார பொம்மை’ என்று பெயர். எமர்ஜென்சியைக் கொண்டுவந்த அடங்காத இந்திரா அல்ல, அவர் அப்போது!
நேரு எங்கே போனாலும் மகளை அழைத்துச் சென்றார். அரசாங்கச் செலவில் வெளிநாடுகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டார். எங்கே நேரு இருந்தாலும் இந்திரா அருகில் இருப்பார். யாரோடும் பேசமாட்டார். லேசாகச் சிரிப்பார் அவ்வளவுதான். ஒரு அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நேருவுக்கு அருகில் புரோட்டக்கால் நெறி முறைகளை மீறி இந்திரா உட்கார வைக்கப்பட்டார். அந்த விழாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக்கூட அழைப்பு இல்லை. ''ஏன் எங்களுக்கு அழைப்பு அனுப்பவில்லை?'' என்று ஃபெரோஸ் காந்தி கேட்டார். ''யாருக்குமே அழைப்பு அனுப்பவில்லையே?'' என்று நேரு பதில் சொன்னார். ''அப்படியானால் உங்கள் மகள் மட்டும் அந்த விழாவில் கலந்துகொண்டது எப்படி?'' என்று கேட்டார் ஃபெரோஸ். நேருவால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. கேள்வி கேட்பது மருமகன். கேட்பது மகளைப் பற்றி. நேருவின் எதிரிகள் அனைவரும் ரசித்த காட்சி அது. ஆனாலும் இந்திராவை அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்வதை நேரு விடவில்லை. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக இந்திரா ஆக்கப்பட்டார். அடுத்து கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு தேர்தல் குழுவில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவே 1959-ல் இந்திரா உட்கார வைக்கப்பட்டார். 'இனி என்ன செய்வீர்கள்?’ என்று கேட்பதைப்போல இருந்தது நேருவின் நடவடிக்கைகள்!
காமராஜர் இருக்கும்போது, லால்பகதூர் சாஸ்திரி இருக்கும்போது, நிஜலிங்கப்பா இருக்கும்போது, கோவிந்த வல்லபந்த் இருக்கும்போது துணிச்சலாக இந்திராவை காங்கிரஸ் தலைவர் நாற்காலியில் கொண்டுவந்து நேரு உட்கார வைக்கிறார் என்றால், இந்தக் கட்சியில் தனக்குப் பிறகு தன்னுடைய மகள் இந்திராதான் இந்தப் பதவிக்கு வரத் தகுதியானவர், இந்திரா மட்டுமே தகுதியானவர் என்று நினைத்ததுதான் காரணம். இன்று ராகுல் காந்தியின் துதிபாட ஒரு திக் விஜய்சிங் இருப்பதைப்போல அன்று இந்திராவுக்கு கோவிந்த வல்லபந்த் கிடைத்தார். 'நான் பிரதமராக இருக்கும்போது என் மகள் காங்கிரஸ் தலைவராக இருப்பது நல்லதல்ல’ என்று நேரு சும்மா சொல்லிப் பார்த்தார். கடைசியில் 'வேறு வழியில்லாமல்’ இந்திரா தலைவர் ஆனார். இன்று ராகுலை அறிமுகப்படுத்துவதற்கு எந்த வார்த்தையைச் சொல்கிறார்களோ அந்த வார்த்தையை நேரு சொன்னார். ''புது முகங்களை வரவேற்க மக்கள் தயாராகிவிட்டார்கள்'' என்று நேரு அன்று சொன்ன வார்த்தைதான் இன்று வரைக்கும் அனைத்து அரசியல் தலைவர்களாலும் தந்திரமாக உச்சரிக்கப்படுகிறது.
'இந்திரா என்னுடைய மகள் என்பதில் முதலில் பெருமைப்பட்டேன். என்னுடைய தோழர் என்பதில் அடுத்ததாகப் பெருமை அடைந்தேன். இப்பொழுது என்னுடைய தலைவர் என்ற பெருமையும் அடைந்துவிட்டேன்'' என்று நேரு சொன்னார்.
ஆனால் நேரு பெருமைப்படுவது மாதிரி எதையும் செய்பவராக இந்திரா இல்லை!

ஜனநாயகக் குழந்தையைக் கொன்ற பொம்மை!
அப்பா நேரு, இந்தியப் பிரதமராக இருக்கும்போது மகள் இந்திரா அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரானால் அதிகாரம் எப்படி தூள் கிளப்பி, துஷ்பிரயோகமாக மாறும் என்பதற்கு மறக்க முடியாத உதாரணம் கேரளா.
இயற்கை எழில் கொஞ்சும் கேரளத்தை, சர்வாதிகாரக் கொடுக்குகள் சிறுகச்சிறுகச் சித்ரவதை செய்து கடைசியில் சிதைத்துப் போடும் காரியத்தை நேருவும் இந்திராவும் செய்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில ஆட்சியை, ஒரு துளி மையால் அழித்தனர். 'எங்கள் பூமியை நாங்கள்தானே ஆளவேண்டும், அந்நியரான ஆங்கிலேயருக்கு ஆள என்ன அருகதை இருக்கிறது?’ என்று கேள்விகேட்டு சுதந்திரப் போராட்டம் நடத்தியவர்கள் 'சுதந்திரத்தின் பலனை’ இப்படிச் சுக்குநூறாக உடைத்துக் கொண்டாடிக் கழித்தனர். சர்வாதிகாரத்தின் பலிபீடத்தில் ஜனநாயகக் குழந்தை யாரும் கேள்விகேட்க முடியாத கும்மிருட்டில் கழுத்தறுக்கப்பட்ட எதேச்சதிகாரத்தின் தொடக்கம் அது. வெறும் பொம்மை என்று சொல்லப்பட்ட இந்திரா, நான் வெறும் பொம்மை அல்ல, ஷாக் அடிக்கும் பொம்மை என்று சொல்லிய ஆண்டு 1959!
ஆம்! கேரள மாநிலத்தை ஆண்டுகொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்தி கலைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் இந்திரா தூண்டினார். ஜனநாயகம் குறித்தும் மக்களாட்சி பற்றியும் பக்கம் பக்கமாக எழுதிய பிரதமர் நேருவும் அதற்கு சம்மதித்தார். 'முதலில் சம்மதிக்கவில்லை. ஆனால், இந்திராவின் பிடிவாதம் காரணமாக இறுதியில் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று’ என்று சொல்வார்கள். வரலாறு எப்போதுமே முடிவுகளையே வரவு வைக்கும். முடிவுக்கு முந்தைய விவாதங்கள், காலங்கள் கடந்ததும் வீணானவையே!
1957-ல் கேரளாவில் நடந்த முதல் சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. மொத்தம் இருந்த 126 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 60 இடங்களில் வென்றது. அதன் ஆதரவு சுயேச்சைகள் 5 இடங்களைப் பிடித்தனர். காங்கிரஸ் படர்ந்த நாடாக இருந்த இந்தியாவில் கம்யூனிஸம் மலர்ந்த மாநிலமாக கேரளா ஆனது. அப்போது கேரள எல்லைக்குள்ளும் அதன் பிறகு இந்திய பொதுவுடைமைத் தலைவர்களில் ஒருவராகவும் உயர்ந்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், அந்த மாநிலத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்த்தப்பட்டார். இந்தியாவில் தொடங்கப்பட்ட கால் நூற்றாண்டு காலத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தது ஒரு கௌரவமாகவும், கம்யூனிஸ சமுதாயம் உருவாவதற்கான ஆரம்பமாகவும் கேரள ஆட்சி உற்சாகம் கொடுத்தது. 'இன்று கேரளா, நாளை இதர மாநிலங்கள், இறுதியில் மத்திய அரசாங்கம்’ என்று கம்யூனிஸ்ட்கள் பேசத் தொடங்கினார்கள். ஆனால், இதனை காங்கிரஸ் கட்சி கசப்பாகவே பார்க்க ஆரம்பித்தது.
''ஐந்து சுயேச்சைகளையும் தனித்தனியாக அழைத்துப் பேசுவேன். அவர்கள் சொல்வது திருப்தியானால்தான் உங்களைப் பதவியேற்க விடுவேன்'' என்று கேரள ஆளுநராக இருந்த ஹைதராபாத் காங்கிரஸ்காரர் கிடுக்கிப்பிடி போட்டுத்தான் ஈ.எம்.எஸ்-ஸை பதவி ஏற்கவே அனுமதித்தார். ஆங்கிலோ இந்திய பிரதிநிதி ஒருவரை சட்டமன்றத்துக்கு நியமித்துக்கொள்ளும் அதிகாரம் ஆட்சியை அமைக்கும் ஆளுங்கட்சிக்கு உண்டு. அது அன்று மட்டுமல்ல... இன்றுவரை இருக்கும் நடைமுறை. ஆனால், காங்கிரஸ்காரரான அந்த ஆளுநர், ஆங்கிலோ இந்திய உறுப்பினரை நான்தான் நியமனம் செய்வேன் என்பதில் பிடிவாதம் காட்டினார். இத்தகைய சூழ்நிலையில் ஆட்சியை அமைத்த ஈ.எம்.எஸ். சில முக்கியமான முடிவுகளை, கொள்கைகளை அமல்படுத்தினார். அமல்படுத்த முயற்சித்தார்.
1. மலபார், கொச்சி, திருவிதாங்கூர் ஆகிய முக்கியமான மூன்று பகுதிகளிலும் வெவ்வேறு விதமான நிலக் குத்தகை முறை இருந்தது. பதவியேற்ற ஒருவார காலத்தில் அனைத்துவகை வெளியேற்றங்களையும் தடைசெய்து ஒரு அவசரச் சட்டத்தை போட்டார்கள். இது விவசாய சீர்திருத்தம் எனப்பட்டது. அதாவது கிராமப்புற சாதாரண மக்களுக்கும் நகர்ப்புறத்தில் இருந்த நடுத்தர மக்களுக்கும் இது மகிழ்ச்சியைக் கொடுத்தது. சமூகத்தின் வசதி படைத்தவர்களுக்கு இது கோபத்தைக் கிளப்பியது.
2. நகர்ப்புறங்களில் நடந்த வேலை நிறுத்தங்களின்போது போலீஸைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டது. போலீஸின் வேலை கிரிமினல்களைப் பிடிப்பதுதானே தவிர தொழில் உறவுகளில் தலையிடக்கூடாது என்று சொல்லப்பட்டது. 'இது சட்டம் ஒழுங்கைக் கெடுக்கும்’ என்று விமர்சனம் செய்யப்பட்டது.
3. மத்திய அரசின் நிதி ஒத்துழைப்பு இல்லாததால், மாநிலத்துக்கு வெளியே இருக்கும் தொழில் அதிபர்களை கேரளா பக்கமாக ஈர்க்க இந்த ஆட்சி முயற்சிகள் எடுத்தது. இது உள்ளூர் தொழில் அதிபர்களை ஆத்திரம் அடைய வைத்தது.
4. புதிய கல்வி மசோதாவைக் கொண்டு வந்தார்கள். தனியார்கள் தங்கள் கட்டுப்பாட்டில் பள்ளிகளை வைத்துக் கொண்டு தங்குதடையற்ற அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு இது முற்றுப்புள்ளி வைத்தது. சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் என்ற பெயரில் மொத்தமாக பள்ளி, கல்லூரிகளை ஆரம்பித்தவர்களுக்கு செக் வைத்தது. மதத்துக்கு ஆபத்து என்று இவர்கள் கிளம்பினார்கள்.
5. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, இதர பின்தங்கியவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்ந்தது. அதில் ஒரு சீர்திருத்தத்தை இந்த ஆட்சி கொண்டுவந்தது. இடஒதுக்கீடு பெறுபவர்களே ஒரு குறிப்பிட்ட அளவு வருட வருமானத்தை அடைய ஆரம்பித்துவிட்டால் அவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று செய்யப்பட்ட அறிவிப்புக்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதன் பிறகு இந்தத் திருத்தத்தை வாபஸ் வாங்கிவிட்டனர்.
-இந்த ஐந்து கொள்கை முடிவுகளுக்கு எதிராகவும் நடந்த அனைத்துப் போராட்டங்களையும் காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. நிலச்சீர்திருத்தம் மற்றும் கல்வி மசோதாவுக்கு அனுமதி வழங்காமல் மத்திய அரசினரும் குடியரசுத் தலைவரும் இழுத்தடித்தனர். இவை அனைத்தையும் 'பரிசோதனை முயற்சிகள்’ என்று கம்யூனிஸ்ட் அரசாங்கம் சொல்லிக்கொண்டது. ஆனால், இந்தப் பரிசோதனைகளை அனுமதிக்க காங்கிரஸ் தயாராக இல்லை. இத்தனைக்கும் அன்றைய பிரதமர் நேரு, சோஷலிசம் பேசிக்கொண்டு இருந்தார். அவர் சொல்லிக்கொண்டு இருந்ததும், இவர்கள் அமல்படுத்த நினைத்ததும் ஏறத்தாழ ஒன்றுபோல் நினைக்கத் தக்கவையே. ஆனால், காங்கிரஸின் ஏகபோகத்துக்கு இந்த மாதிரியான மாற்றுக் கட்சிகளின் பரிசோதனை முயற்சிகள் இடையூறாக இருக்கும் என்று அன்றைய காங்கிரஸ் தலைவர் இந்திரா நினைத்தார். மாநில அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களை, 'வெகுஜன எழுச்சி’ என்று நேருவும் இந்திராவும் பட்டம் கொடுத்தனர். ''கேரளாவில் நடக்கும் எழுச்சி எங்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது'' என்று இவர்கள் சொல்லிக் கொண்டார்கள். 'இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாக உடனடியாக தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்’ என்று சொன்னார்கள். கேரளாவில் அரசாங்கம் அமைந்து இரண்டு ஆண்டுகள்கூட முழுமையாக முடியவில்லை. இந்த யோசனையை முதல்வர் ஈ.எம்.எஸ். கடுமையாக எதிர்த்தார்.
''தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமானது, சட்டமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில், அதனுடைய ஐந்து வருட பதவிக் காலத்துக்குள்ளேயே புதிய தேர்தலுக்கு ஆட்பட வேண்டும் என்று எவரும் கேட்க முடியாது. பிரதமராக இருந்தாலும் அதனைக் கேட்க முடியாது. பெரும்பான்மையே இருந்தாலும் நாங்கள் பதவியை விட்டு விலக வேண்டும் என்பதே இதன் உள் அர்த்தம். நாங்கள் பதவி விலக வேண்டும் என்று சொல்லும் வார்த்தைக்குப் பின்னால் இருக்கும் அர்த்தம் இதுதான்''- என்று ஈ.எம்.எஸ். அறிவித்தார். அதன் பிறகு, ஆட்சியைக் கலைக்க நேரு காலதாமதம் செய்தார். ஆனால், இந்திரா கட்டாயப்படுத்தினார். ஒரு மாநிலத்தில் அமையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைக்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 356-வது சட்டப்பிரிவு குடியரசுத் தலைவருக்கு வழங்கி இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்த இந்திரா வலியுறுத்தினார். நோக்கம் நிறைவேறியது. ஈ.எம்.எஸ். ஆட்சி கலைக்கப்பட்டது. 200 ஆண்டு காலம் போராடிப் பெற்ற சுதந்திரத்தின் பலனை, ஜனநாயகத்தின் அருமையை 28 மாதங்கள்கூட 'அடுத்த கட்சி’ அனுபவிக்க அனுமதியாத சர்வாதிகார வடிவம் கேரளாவில் இருந்து தொடங்கியது. இந்த எடுத்தேன், கவிழ்த்தேன் போக்கு இந்திராவுக்குப் பிடித்திருந்தது.
அன்றைய தேதியில் கேரளா தவிர அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சிதான் இருந்தது. கேரளாவில் ஈ.எம்.எஸ். அரசாங்கம் 59-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. அதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் காங்கிரஸ் தலைவராக உட்கார்ந்தார் இந்திரா. உட்கார்ந்த உடனேயே ஒரு மக்களாட்சிக்கு உலை வைத்தார். இதற்கு இன்னொரு உள்நோக்கம் கற்பிக்கப்படும். 'கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியைக் கலைக்க அமெரிக்க உளவு நிறுவனம் சில முயற்சிகளை மேற்கொண்டது. அதற்கு டெல்லி காங்கிரஸின் அதிகார மட்டத்தில் இருந்த சிலர் பயன்படுத்தப்பட்டார்கள்’ என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டானியல் பேட்ரிக் எழுதியதாகச் சொல்வார்கள். இதைப் பின்பற்றி மலையாளத்திலும் புத்தகங்கள் வெளிவந்தன. அது உண்மையானால் இன்னும் ஆபத்தானது.
'ஐவஹர்லால் நேருவுக்கு பெண் பிறந்ததற்குப் பதிலாக ஒரு மகன் பிறந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? மகன் தந்தைக்கு தோழனாகவும் பின்னர் வாரிசாகவும் ஆகியிருந்தால் அதிக சிரமம் இருந்திருக்காது அல்லவா?’ என்று அமெரிக்கப் பத்திரிகை நிருபர் ஒருவர் இந்திராவிடம் கேட்டார். ''அதெப்படி சொல்ல முடியும்? ஒருவேளை சிரமங்கள் அதிகமாகி இருக்கலாம் அல்லவா?'' என்று இந்திரா பதில் சொன்னார். எந்தப் பொருளில் அப்படிச் சொன்னாரோ, இந்திய ஜனநாயக நெறிமுறைகளுக்கு அதிகப்படியான சிரமங்களை இந்திரா தனது ஆட்சி காலத்தில் செய்தார். அவர் 1966 ஜனவரி 24-ம் தேதி இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்றார். அன்று முதல் 1977 வரையிலான 11 ஆண்டு காலத்தில் 356-வது பிரிவைப் பயன்படுத்தி 29 முறை இந்தியாவின் பல்வேறு மாநில ஆட்சிகளைக் கலைத்தார். அதற்கான ருசியை ஏற்படுத்திக் கொடுத்தது கேரளா. மத்தியில் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி. அப்படி ஆட்சி அமையவில்லையானால் வேறு கட்சி ஆட்சி அமைந்தால் அதனைக் கலைத்துவிட்டால் போகிறது என்ற 'அதிகார உச்சபட்ச குணம்’ கேரளாவில்தான் அரும்பியது. அடுத்த 25 ஆண்டுகள் அதுவே ஆட்டிப் படைத்தது.

மொரார்ஜியை வென்ற இந்திரா!
கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி கலைக்கப்பட்டது இந்திய அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் அதற்கு முன் அப்படி ஒரு காட்சியை இந்தியா பார்த்தது இல்லை. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இந்திரா ஆனதன் அடையாளம்தான் இது என்று அன்றைய தலைவர்கள் சொல்லத் தொடங்கினர்.
இந்திரா, தலைவர் ஆக்கப்பட்டதாகத் தகவல் வந்தபோது ராஜாஜி, பெங்களூரில் இருந்தார். அன்று அவரும் மசானியும் ஒரு கூட்டத்தில் பேசினார்கள். மசானி, நேருவையும் இந்திராவையும் தர்க்கரீதியாக விமர்சித்துப் பேசினார். எப்போதும் தர்க்கரீதியாகப் பேசும் ராஜாஜி அன்று கோபமாகப் பேசினார். ''எனக்கு முன்பு பேசிய மசானி, நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் ஜாக்கிரதையாகப் பேசினார். ஆனால் எனக்கு அந்தக் கட்டுப்பாடு எதுவும் இல்லை'' என்று சொன்ன ராஜாஜி, ''நேருவுக்குத் தன்னைவிட்டால் வேறு ஆள் கிடையாது என்ற பித்தம் தலைக்கேறிவிட்டது. அதனால்தான் இப்படி நடந்துகொள்கிறார்'' என்று குற்றம்சாட்டினார். அந்தக் கூட்டத்தில்தான், ''புதிய கட்சியை அமைத்துவிட வேண்டியதுதான். அதற்கான காலம் நெருங்கிவிட்டது'' என்றும் ராஜாஜி சொன்னார். அதாவது, காங்கிரஸ் கட்சி நேரு, இந்திரா என வாரிசு அடிப்படையில் வலம் வர ஆரம்பித்துவிட்டது என்ற கொந்தளிப்புத்தான் ராஜாஜியை சுதந்திரா கட்சியை தொடங்க வைத்தது.
கேரள ஆட்சி கலைக்கப்பட்டபோதும் ராஜாஜி அந்தக் கொந்தளிப்பை அதிகமாகக் காட்டினார். ராஜாஜிக்கு கம்யூனிஸ்ட்களைக் கண்டாலே பிடிக்காது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடியவதைவிட சுதந்திர இந்தியாவில் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக அதிகம் பேசியவர் ராஜாஜி. அப்படிப்பட்ட ராஜாஜிக்கு கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி கலைக்கப்பட்டது மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும். ஆனால், இது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான சர்வாதிகார நடவடிக்கை என்று ராஜாஜி குற்றம்சாட்டினார்.
''கம்யூனிஸ்ட்கள் இப்போதுதான் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பங்கேற்றார்கள். அவர்களை ஜனநாயக மரபுகள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. அவர்களை இந்த மாதிரி நடத்தினால் அவர்கள் மீண்டும் தலைமறைவாகி சதிச்செயல்களில் ஈடுபட வேண்டிய நிர்ப் பந்தத்துக்கு ஆளாவார்கள். மேலும், சட்டசபையில் அவர்களது பெரும்பான்மை பலம் குறையவில்லை என்பது தெளிவாக இருக்கும்போது ஆட்சியை டிஸ்மிஸ் செய்வது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. எனக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகள் உடன்பாடானவை அல்ல. ஆனால் அவர்களை நடத்தவேண்டிய விதம் இது அல்ல'' என்று தன்னுடைய 'சுயராஜ்யா’ பத்திரிகையில் ராஜாஜி எழுதினார். அந்த அளவுக்கு இந்திராவின் நடவடிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கேரள அரசு கலைக்கப்பட்டதை ஃபெரோஸ் காந்தி கடுமையாகக் கண்டித்தார். நேருவின் நெருங்கிய நண்பராக இருந்த வி.கே.கிருஷ்ண மேனன் இதனை முழுமையாக எதிர்த்தார். ஆனாலும் இந்திரா கேட்கவில்லை. இந்திராவை நேருவால் தடுக்க முடியவில்லை.
பின்பு ஒருமுறை பேட்டி அளித்த இந்திரா, கேரள அரசு கலைக்கப்பட்டதற்கு நான் காரணம் அல்ல என்றார். ''காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் கம்யூனிஸ்ட் அமைச்சரவையை அகற்றிவிட்டு ஜனாதிபதி ஆட்சியைப் பிரகடனப்படுத்தும்படி எந்தக் காரணங்களுக்காக ஆலோசனை கூறினீர்கள்?'' என்று பத்திரிகையாளர் கே.ஏ.அப்பாஸ் கேட்டபோது, ''நான் அப்படி ஆலோசனை சொல்லவில்லை. கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற கிளர்ச்சியின் காரணமாக மாநிலத்தில் ஒரு குழப்பமான நிலைமை இருந்தது. அதனால் மீண்டும் தேர்தல் நடத்தி வாக்காளர்கள் இன்னும் தெளிவான தீர்ப்பு அளிப்பதற்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கருதினோம்'' என்று இந்திரா சொன்னார்.
இதேபோன்ற சூழ்நிலை காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் நடந்திருந்தால் இப்படிச் செய்திருப்பீர்களா என்று அப்பாஸ் திருப்பிக் கேட்கவில்லை. இது சரியா, தவறா என்ற விவாதங்களைத் தாண்டி 'இந்திரா என்றால் நினைத்ததை சாதிக்கக் கூடியவர்’, 'நேருவின் மகள் மன உறுதி படைத்தவர்’ என்ற பிம்பம் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் ஏற்பட இந்த சம்பவம் காரணமாகிவிட்டது.
அதாவது காங்கிரஸ் கட்சிக்குள் இந்திராவின் செல்வாக்கை உணர்த்துவதற்கு இந்த ஆட்சிக் கலைப்புப் பயன்பட்டது. இப்படி ஒரு சூழ்நிலையில் ஓராண்டு காலத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து இந்திரா விலகியது இன்னும் அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியது.
ஒருவர் காங்கிரஸ் கட்சித் தலைவராக ஆனால், இரண்டு ஆண்டுகாலம் அந்தப் பதவியில் இருக்கலாம். அது முடிவதற்கு முன்னதாகப் பதவியைவிட்டு விலகி நேருவுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கினார் இந்திரா. கேரள ஆட்சியைக் கலைக்கும் முடிவுக்கு முழுமையான ஆதரவை காங்கிரஸ் தலைவர்கள் தராததும் பம்பாய் மாநிலத்தை மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கலாம் என்று அவர் எடுத்த முடிவை சில தலைவர்கள் எதிர்த்ததும்தான் அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. நேருவுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.
இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்காவது பெண்மணி என்ற தகுதியை அப்போது அடைந்திருந்தார் இந்திரா. அதற்கு முன் அன்னிபெசன்ட், சரோஜினி தேவி, நெல்லி சென்குப்தா ஆகிய மூவர் தலைவராக இருந்துள்ளார்கள். நேரு குடும்பத்தில் இருந்து காங்கிரஸ் தலைவராக ஆனதில் மூன்றாவது நபர் என்ற தகுதியும் இந்திராவுக்கு இருந்தது. மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு ஆகியோருக்கு அடுத்து இவர் தலைவராகி இருந்தார். இப்படி ஒரு கௌரவத்தை ஒருநாள் இரவில் திரும்பக் கொடுத்துவிட்டார் இந்திரா. அதாவது, தான் நினைத்தது நடக்காவிட்டால் அந்தப் பதவியே தேவையில்லை என்ற மனோபாவம் கொண்டவராக அவர் இருந்தார். அப்படித்தான் வளர்ந்தார்.
நேரு இருந்த காலக்கட்டத்திலேயே இப்படி என்றால் நேருவே இல்லாத சூழ்நிலையில்..? 'இந்திராவே இந்தியா; இந்தியாவே இந்திரா’ என்ற பெரும் முழக்கமே யதார்த்த வடிவம் எடுத்தது.
நேரு தன்னுடைய இறுதிக் காலக்கட்டத்தில் எடுத்த தூய்மை நடவடிக்கை ஒன்று மறைமுகமாக இந்திராவுக்கு வசதியாகப் போனது. 1962 தேர்தலில் காங்கிரஸ் கட்சி பல்வேறு மாநிலங்களில் சரிவைச் சந்தித்தபோது நேரு மிகவும் வருந்தினார். தன்னுடைய லட்சியங்களை நிறைவேற்ற முடியாத ஏக்கம் ஒருபுறம், காங்கிரஸ் பிரமுகர்கள் மீது எழுந்த ஊழல் முறைகேடுகள் மறுபுறம் அவரை வாட்டியது. அப்போது நேருவும் காமராஜரும் சேர்ந்து எடுத்த முடிவுதான், காங்கிரஸ் கட்சியை வளர்த்தெடுப்பதற்கு வசதியாக மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவியை விட்டு விலகுவதும், கட்சிப் பணிகளுக்குத் திரும்புவதும் என்பது. 'கே பிளான்’ என்று வரலாற்றில் இது பதிவானது. இந்த அடிப்படையில், இதை முன்மொழிந்த காமராஜரே, தமிழக முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார். பிஜு பட்நாயக் (ஒடிசா), சந்திர பானு குப்தா (உத்தரப்பிரதேசம்), பஷி குலாம் முகமது (காஷ்மீர்), ஜீவராஸ் மேத்தா (குஜராத்), பகவதிராய் மண்ட்லோய் (மத்தியப் பிரதேசம்) ஆகிய முதலமைச்சர்களும் பதவி விலகினார்கள்.
மத்திய அமைச்சரவையில் இருந்து லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன்ராம், எஸ்.கே.பாட்டீல், பி.கோபால், கே.எல். ஸ்ரீமலி ஆகியோரும் பதவி விலகினார்கள். பதவியைவிட்டு விலகி, கட்சிப் பணியாற்ற பெரிய தலைவர்கள் செல்வது ஒரு பக்கம் நல்ல விஷயமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் நேருவின் எதிரிகள் வேறுமாதிரியாகச் சொல்ல ஆரம்பித்தனர். 'அனுபவம் வாய்ந்த தலைவர்கள் அனைவரது சிறகுகளையும் மறைமுகமாக நேரு வெட்டிவிட்டார்’ என்றனர். ஏனென்றால் அமைச்சர் பதவியை விட்டு விலகியவர்களில் பலருக்கும் கட்சிப் பணிகளோ, பதவிகளோ பின்னர் தரப்படவில்லை.
காமராஜரை அடுத்து லால்பகதூர் சாஸ்திரிதான் நேருவின் நம்பிக்கையைப் பெற்றவராக இருந்தார். பதவி விலகிய சாஸ்திரியை அழைத்து, மீண்டும் அமைச்சர் ஆக்கினார் நேரு. புவனேஸ்வர் காங்கிரஸ் மாநாட்டில் காமராஜர், காங்கிரஸின் அகில இந்திய தலைவர் ஆனதும், சில மாதங்களில் நேரு மறைந்ததும் நடந்தது. நேருவின் மறைவுக்குப் பிறகு சாஸ்திரியைப் பிரதமர் ஆக்குவதற்கு மொரார்ஜி தேசாய் தவிர வேறு யாரிடமும் எந்தத் தடங்கலும் இல்லாமல் போனது. சாஸ்திரி - மொரார்ஜி மோதலில் காமராஜர், சாஸ்திரி பக்கம் இருந்தார். அவரை பிரதமர் ஆக்க அனைத்தையும் செய்தார். அதைப் போலவே, அப்பாவின் மறைவுக்குப் பிறகு அமைதியாக உட்கார்ந்து அரசியல் நிகழ்வுகளை வேடிக்கை பார்த்துவந்த இந்திராவை, மத்திய அமைச்சரவைக்குள் கொண்டுவருவதற்கும் காமராஜர் நினைத்தார். தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இந்திரா ஆனார். மொத்தமே 17 மாதங்கள்தான் சாஸ்திரி பிரதமர் நாற்காலியில் அமருவதற்கு இயற்கை அனுமதித்தது.
அடுத்தது யார் என்ற கேள்வி அதற்குள் வரும் என்பதை காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்பார்க்கவில்லை. மீண்டும் மொரார்ஜி முகம் முன்னுக்கு வந்தது. நேர்மையாளர் என்று பெயர் எடுத்தாலும் நெகிழ்வுதன்மை இல்லாதவர் என்று பெயர் வாங்கியவர் மொரார்ஜி. அவரை சமாளிக்கவே முடியாது என்று காமராஜர் நினைத்தார். அப்போது இந்திராவைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. 'இந்திராதான் அடுத்த பிரதமர்’ என்ற முடிவோடு களத்தில் இறங்கிய காமராஜர், தனக்கு அடுத்த இடத்தில் இருந்த அல்லது தன்னைவிட பெரிய மனிதர்களாக இருந்த அனைவரிடமும் இந்திராவைப் பிரதமராக்குவதற்காக ஆதரவு கேட்டு அலைந்தார்.
நிஜலிங்கப்பாவோ, சஞ்சீவி ரெட்டியோ ஆரம்பக் கட்டத்தில் இந்திராவை ஆதரிக்கவில்லை. 'இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்’ என்றுதான் சொன்னார்கள். ஆனால் தன்னுடைய இத்தனை ஆண்டுகால கடும் உழைப்பால் திரட்டி வைத்திருந்த அத்தனை பேரையும், புகழையும் பயன்படுத்தி, இந்திராவை அனைவரும் ஏற்றுக்கொள்ள வைத்தார் காமராஜர். ஆனாலும் மொரார்ஜி, இந்திராவை எதிர்த்து தேர்தலில் நின்றார்.
ரகசிய வாக்கெடுப்பு நடந்த நாளில், வெண்மையான கதர் புடவையும் பழுப்புநிற காஷ்மீர் சால்வை அணிந்து, அதில் சிறு ரோஜாப் பூவையும் செருகி நாடாளுமன்ற மத்திய மண்டபத்துக்கு வந்தார் இந்திரா. மொரார்ஜியைப் பார்த்ததும் அருகில் சென்று கை கொடுத்தார். அடுத்த சில மணிநேரத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு 189 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக இந்திரா அறிவிக்கப்பட்டது அவரை பிரதமர் ஆக்க உழைத்த அனைத்துத் தலைவர்களுக்கும் மகிழ்ச்சியளித்தது.
ஆனால் அந்த மகிழ்ச்சியை இந்திரா நீடிக்கவிடவில்லை. காமராஜர் உள்ளிட்ட அனைவரையும் காயப்படுத்தும் காரியங்களைத் தொடங்கி முழு அதிகார மையமாக இந்திரா தனக்குத்தானே முடிசூட்டிக்கொண்டார்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2