புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10 
87 Posts - 64%
heezulia
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10 
423 Posts - 76%
heezulia
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
prajai
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
sram_1977
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_m10குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குன்ஹா தீர்ப்பு முழு விவரம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 08, 2014 5:22 pm

First topic message reminder :

கற்பனை செய்ய முடியாத கணக்கு அது!

இந்தியாவையே தனது தீர்ப்பை நோக்கி திருப்பியவர் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா. 1,136 பக்கங்களுக்கு எழுதப்பட்ட தீர்ப்பு அது. முதல் 894 பக்கங்களுக்கு வழக்கின் பின்னணி, குற்றச்சாட்டுகள், அதற்கான ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள், வழக்கில் சேர்க்கப்பட்ட சாட்சிகள் ஆகியவை தனித்தனித் தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன.

குற்றம்சாட்டப்​பட்டவர்​களுக்கு எதிராக உள்ள சாட்சிகள், ஆவணங்கள் ஆகியவை உறுதியாக உள்ளன என்பதும் அவற்றை எதிர்த்துக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அளித்த சாட்சியங்களும் 100 பாயின்ட்களில் விவரிக்கப்படுகின்றன. அதன் பிறகு, 895-வது பக்கத்தில் ஆரம்பித்து 907-வது பக்கம் வரை நீதிபதியின் தீர்ப்பும் 908 முதல் 910-ம் பக்கம் வரை தண்டனையும் விவரிக்கப்பட்டுள்ளன.
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 P3
அந்தப் பக்கங்களில் உள்ள விவரங்​கள்தான் இவை...

''ஜெயலலிதா, தமிழக முதலமைச்சராக இருந்த 1991-1996 காலகட்டத்தில் அவருடைய வருமானம் 9 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரத்து 94 ரூபாயாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அவர் செய்த செலவுகள் 8 கோடியே 49 லட்சத்து 6 ஆயிரத்து 833 ரூபாய். இதுபற்றி மிக நியாயமான சந்தேகங்களை வழக்கின் புகார்தாரரான அரசுத் தரப்பினர் எழுப்பி உள்ளனர். ஆனால், இந்தக் காலகட்டத்தில் அசையாச் சொத்துகளின் மதிப்பு 53 கோடியே 60 லட்சத்து 49 ஆயிரத்து 954 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்த அசையாச் சொத்துகள் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய மூவரின் கணக்குகளில் வருகின்றன. ஆனால், அவை எந்த வழியில் வந்தன என்பதற்குக் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. அதுபற்றி அவர்களால் நியாயமான கணக்கு வழக்குகளைச் சமர்ப்பிக்க முடியவில்லை. தீர்ப்பு அளிக்கப்படும் இந்த நேரத்தில், தங்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு முன்பாக நீதிமன்றம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயங்களாகக் குற்றவாளிகள் தரப்பினர் சில தகவல்களை நீதிமன்றத்துக்குத் தந்துள்ளனர்.

முதல் குற்றவாளியான ஜெயலலிதா, 'இந்த வழக்கு தன்னுடைய அரசியல் எதிரிகளால், அரசியல் காரணங்களுக்காகவும் தன்னை பழிவாங்குவதற்காகவும் போடப்பட்டது. வழக்கை எனக்கு எதிராகப் போடும்போது என்னுடைய வயது 48. அதன்பின் 18 வருடங்களுக்கு வழக்கு இழுத்தடிக்கப்பட்டு உள்ளது. இப்போது என்னுடைய வயது 66. இந்த இடைப்பட்ட நாட்களில் வழக்கின் காரணமாக நான் தீராத மன உளைச்சலுக்கு ஆளானேன். அதன் காரணமாக என்னுடைய உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் போன்ற நோய்களால் அவதிப்படுகிறேன். அதனால் நீதிமன்றம் தீர்ப்புச் சொல்லும்போது, தனக்கு இருக்கும் இந்தப் பிரச்னைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று சொல்லியுள்ளார்.

இரண்டாவது குற்றவாளி (சசிகலா), 'இந்த வழக்கு அரசியல் காரணத்துக்காகப் போடப்பட்டது. இத்தனை ஆண்டுகளில் எனக்குத் தீராத மன உளைச்சல், நீரிழிவு மற்றும் கண் பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது குற்றவாளி (சுதாகரன்), 'இந்த வழக்கு அரசியல் காரணத்துக்காகப் போடப்பட்டது. வழக்குப் போடப்பட்டபோது, பிறந்த என் குழந்தைக்கு, இப்போது அவருக்கு 18 வயதாகிறது. இந்த வழக்குக்காக நான் இழுத்தடிக்கப்பட்ட காலத்தில் என்னுடைய தாயாரை இழந்துவிட்டேன்'' என்று கூறியுள்ளார்.

நான்காவது குற்றவாளி (இளவரசி), 'இந்த வழக்கின் காரணமாக நான் உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தப்பட்டேன். அதனால் எனக்குப் பல நோய்கள் ஏற்பட்டுள்ளன. நான் கணவரை இழந்தவர். என்னுடைய குழந்தைகளைப் பாதுகாக்கும் மொத்தப் பொறுப்பும் என் ஒருவருக்கே உள்ளது. தண்டனை வழங்கும்போது இவற்றை நீதிமன்றம் கருத்தில்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார். இவர்களின் வழக்கறிஞர்களான பி.குமார், மணிசங்கர் ஆகியோரும் இதையே தங்கள் கருத்துகளாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த நீதிமன்றம், 'நிரஞ்சன் ஹேமச்சல் Vs மகாராஷ்டிரா அரசு’ என்ற வழக்கின் தீர்ப்பின் சாரத்தை நினைவுபடுத்துகிறது. அந்தத் தீர்ப்பில், 'ஊழலையும் அதன் தாக்கத்தையும் எடைபோடும்போது, குற்றம் செய்தவரின் தகுதியை வைத்து அதை எடை போடக் கூடாது. அப்படிச் செய்யவும் முடியாது. ஏனென்றால், ஊழல் என்பது ஒரு தேசத்தின் வளர்ச்சி. தொலைநோக்குத் திட்டம் என தேசத்தின் முன்னேற்றத்துக்கான அனைத்து அம்சங்களையும் சிதைத்து தேசத்தைப் பாழாக்கும். பொருளாதார வளர்ச்சியைச் சீர்குலைத்துக் குழி தோண்டிப் புதைத்துவிடும்’ என்று உச்ச நீதிமன்றம் நிரஞ்சன் ஹேமச்சல் வழக்கில் குறிப்பிட்டு உள்ளது. அதைக் கருத்தில்கொண்டே இந்த வழக்கின் தீர்ப்பை நோக்கி நாம் போக வேண்டும். ஏனென்றால், அதிகாரத்தில் உள்ளவர்களின் அதிகார மீறல், பொறுப்பில் உள்ளவர்கள் பேராசை காரணமாக தவறான வழிமுறைகளில் பொருளீட்டு¢ம் வேட்கை போன்றவற்றுக்கு இந்த வழக்கு மிகச் சிறந்த உதாரணம். அதிகாரத்தில் உள்ளவர்களின் இதுபோன்ற செயல்பாடுகள் ஜனநாயக நாட்டின் கட்டமைப்பைத் தகர்த்துவிடும்.

பொது ஊழியர் ஆவதற்கு முன்பாக குற்றவாளிகள் தரப்பில் காட்டிய வருமானம் 2 கோடி ரூபாய். ஜெ-சசி என்டர்பிரைசஸ் நிறுவனம், ஜெயா பப்ளிகேஷன் ஆகியவற்றின் வருமானங்களும் இந்த இரண்டு கோடி ரூபாய்க்குள் அடங்கிவிடுகிறது. ஆனால், பொறுப்பில் இருந்த ஐந்து ஆண்டுகளில் அவர்களின் வருமானம் உயர்ந்துள்ள வேகத்தை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. இவர்கள் தரப்புக்குச் சொந்தமான பண்ணை 900 ஏக்கர் பரப்பை உடையது. அதை வெறும் ஏழு கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாகக் கணக்கு சமர்ப்பித்துள்ளனர். அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலையில்கூட இப்படி வாங்க முடியாது. அதாவது வெறும் 10,000 ரூபாய்க்கு ஒரு ஏக்கர் நிலம் என்ற வகையில் வாங்கி உள்ளனர். இப்படிப் பார்த்தால் ஒரு முழு கிராமத்தையே வாங்கிவிடலாம். இவர்களின் நிறுவனங்கள் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களைத் தங்களுக்குச் சொந்தமாக வைத்துள்ளனர். ஆனால், அந்த 3 ஆயிரம் ஏக்கர் நிலம் எந்த வருமானத்தில் வாங்கப்பட்டது என்பதை அவர்களால் சொல்ல முடியவில்லை. அவற்றின் மதிப்பு எல்லாம் அரசு மதிப்பீட்டில் கணக்கிடப்பட்டு, இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. சந்தை மதிப்பீட்டின்படி கணக்கிட்டால், இவற்றின் மதிப்பை நாம் கற்பனையில்கூட கணக்குப் போட முடியாத அளவில் உயர்ந்து நிற்கும்.

ஜெயலலிதா இப்படிச் சொத்துகளை வாங்குவதற்கு மற்றவர்கள் உதவி உள்ளனர். புதிது புதிதாக நிறுவனங்களைத் தொடங்கியும் செயல்படாத நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தியும் ஜெயலலிதா சொத்துகளைச் சேர்க்க மற்றவர்கள் உதவியுள்ளனர். அந்த நிறுவனங்களில் யாரும் எந்த முதலீடும் செய்யவில்லை. அவற்றின் பங்குகளை வாங்கவில்லை. அதில் எந்த வர்த்தகமும் நடக்கவில்லை. ஆனால், நிறுவனம் இவர்களுக்குச் சொந்தமாக உள்ளது. அவற்றின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி, சம்பாதித்த சொத்துகளை அந்தக் கணக்கில் சேமித்து வைக்கவும் அவற்றைத் தங்களுக்கு உரியதாக்கிக் கொள்ளவும் மட்டுமே செய்துள்ளனர். வாதப் பிரதிவாதங்களில் இவை எல்லாம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது. அதாவது சொத்துகளை வாங்கிக் குவிப்பதற்கான பணப்பரிமாற்றம் மட்டுமே இந்த வங்கிக் கணக்குகளில் நடந்துள்ளது.

தமிழ்நாடு அரசாங்கத்தின் மிகப் பெரிய பொறுப்பில் இருந்துகொண்டு, ஜெயலலிதா இந்தக் குற்றங்களில் ஈடுபட்டது குற்றத்தின் கனத்தை அதிகரிக்கிறது. ஏன் அதிகரிக்கிறது என்றால், 'மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி’ என்று நீதிமொழி அறிவுறுத்துவதை இங்கு உணர வேண்டும். அந்த வகையில் பார்த்தால், ஜெயலலிதா தனக்குக் கீழ் இருந்த அரசு இயந்திரங்கள், கட்டமைப்புகள், அவற்றைச் சார்ந்த பொதுமக்கள் என ஒட்டுமொத்த சமூகத்துக்கும் தவறான வழியைக் காண்பித்துள்ளார். இப்போது இவர்களுக்குத் தண்டனை வழங்கும்போது, இங்கு 'பி.சுப்பையா Vs கர்நாடக அரசு’க்கும் வழக்கில் இடையில் நடந்த கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் சாரத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். அந்தத் தீர்ப்பில், 'உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் தவறு செய்யும்போது, அதில் காட்டப்படும் சலுகை, ஒரு சமூகத்துக்குச் செய்யும் கேடாக முடியும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தன் மீது கருணைகாட்ட வேண்டும் என்பதற்காகக் குற்றவாளிகள் சொன்ன காரணங்கள் எதுவும் நியாயமான காரணங்கள் அல்ல. வழக்கு 18 ஆண்டுகள் நடந்தது என்பதில் சந்தேகம் இல்லை. அதற்குக் காரணம் யார் என்பதையும் இப்போது ஆராய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நீதிக்குச் சமாதிகட்ட முயற்சிகள் நடந்ததால்தான் இந்த வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் இந்த வழக்குக்கு 5 ஆண்டுகளுக்கு தடை இருந்ததை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அதன் பிறகு நிறைய நேரத்தை வீணடித்தது குற்றவாளிகளே. அதையும் யாரும் மறுக்க முடியாது. இந்த வழக்குக்கு எந்த வகையிலும் பயன்தராத விஷயங்களைக் கேட்டு தாமதம் செய்தனர். இந்த வழக்குக்கு எந்தத் தொடர்பும் இல்லாத சட்ட நடைமுறைகளைச் சொல்லி தாமதம் செய்தனர். தேவையற்ற காரணங்களைச் சொல்லி சலுகைகளைப் பெற்று வழக்கை தாமதம் செய்தனர். இப்படியே அவர்கள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்தனர். எனவே, இவர்கள் சொன்ன காரணங்கள் தண்டனையைக் குறைப்பதற்கு ஏற்ற காரணங்கள் அல்ல.

மேலும், குற்றத்தின் தீவிரம், சொத்துகளின் அளவு, அவற்றைச் சம்பாதிக்கக் குற்றவாளிகள் பயன்படுத்திய வழிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் தண்டனையை தீர்மானிக்க முடியும். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்க சட்டத்தில் இடம் உள்ளது. சட்டம் சொல்லும் உச்சபட்ச தண்டனையில் பாதிக்கும் மேலாக இவர்களுக்கு வழங்கினால்தான் இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டதாகும். ஏனென்றால் இந்த வழக்கின் தீவிரம் அப்படி. அந்தவகையில் ஒவ்வொரு குற்றவாளிக்கும் 4 ஆண்டுகளை சிறைத் தண்டனையாக விதிக்கிறேன்.''

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட விதம் அடுத்த இதழில்!


-ஜோ.ஸ்டாலின், படம்: ரமேஷ் கந்தசாமி

ஜூனியர் விகடன்


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 18, 2014 7:02 pm

ஜெ.வீட்டில் சோதனையில் சிக்கிய நகைகள்
குன்ஹா தீர்ப்பு விவரம் - 5

குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 P31a
தங்கம், வைர நகைகள் போயஸ் கார்டன் வீட்டில் குவித்து வைக்கப்பட்டு இருந்ததை ஊழல் தடுப்பு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அப்படி கண்டு​பிடிக்கப்பட்ட நகைகளில் ஜெயலலிதா 1991-ம் ஆண்டு பதவிக்கு வருவதற்கு முன் வைத்திருந்தது எவ்வளவு? பதவிக்கு வந்தபிறகு வாங்கிக் குவித்தவை எவ்வளவு? அவற்றின் மதிப்பு என்ன? என்ற விவரங்களை நீதிபதி குன்ஹா தன்னுடைய தீர்ப்பில் அரசுத்தரப்பு சாட்சிகளையும் ஆவணங்களையும் வைத்துத் தெளிவாக நிரூபித்த விதம்... இதோ!

குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 P30a

ஜெ. வீட்டில் 5 நாள்கள் சோதனை!

''ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில், அதிரடி சோதனை நடத்த ஊழல் தடுப்பு போலீஸாருக்கு சென்னை பெருநகர முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 1996, டிசம்பர் 7-ம் தேதி ஊழல் தடுப்பு போலீஸார் நல்லம்ம நாயுடு தலைமையில், ஜெயலலிதாவின் வீட்டுக்குச் சென்றபோது, ஜெயலலிதா வேறு ஒரு வழக்கில் கைதாகி சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, நல்லம்ம நாயுடு உடனடியாக சென்னை மாநகரக் காவல் துறை ஆணையரைச் சந்தித்து, ஜெயலலிதாவைச் சிறையில் சந்திக்க அனுமதி கேட்டார். அவரைச் சிறையில் சந்தித்த நல்லம்ம நாயுடு, போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைக் காட்டி, 'சோதனை நடத்தும்போது உங்கள் தரப்பில் யாராவது இருக்க வேண்டும். அதனால் உங்களுக்கு நம்பிக்கையானவர்களை நியமியுங்கள்’ என்றார். அதன்படி, பாஸ்கரன் மற்றும் விஜயன் என்ற இருவரை ஜெயலலிதா தனது சார்பில் நியமித்தார்.

மதியம் 12.30 மணிக்கு நல்லம்ம நாயுடு தலைமையில் சென்ற ஊழல் தடுப்பு போலீஸார் மற்றும் ஜெயலலிதா சார்பில் நியமிக்கப்பட்ட பாஸ்கரன் மற்றும் விஜயன் ஆகியோர் போயஸ் கார்டன் வீட்டுக்குச் சென்று, இரவு பகலாக 5 நாட்கள் சோதனை நடத்தியுள்ளனர். சோதனையின்போது முத்து, பவளம், ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட தங்க வைர ஆபரணங்கள் கிலோ கணக்கில் சிக்கின. உடனே, அவற்றை போயஸ் கார்டன் வீட்டில் இருக்கும் இரண்டு அறைகளில் வைத்துப் பூட்டி லஞ்ச ஒழிப்புத் துறை சீல் வைத்தது. அறையின் சாவிகள் ஜெயலலிதா நியமித்த பாஸ்கரனிடமே ஒப்படைக்கப்பட்டன.

இதையடுத்து நல்லம்ம நாயுடு, சுங்கத் துறை கூடுதல் ஆணையரைத் தொடர்புகொண்டு நகைகளை மதிப்பீடு செய்வதற்கு அனுபவம் வாய்ந்த ஒருவரை அனுப்பும்படி கேட்டார். அதன்படி சுங்கத் துறை ஆணையர், தங்கள் துறையில் நகைகளை மதிப்பீடு செய்வதில் 10 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த வாசுதேவன் என்பவரை அனுப்பி வைத்தார். 20-ம் தேதி நகைகளை மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்றது. அப்போது, ஊழல் தடுப்பு போலீஸ் அதிகாரி நல்லம்ம நாயுடு, சிறப்பு கலெக்டர் கிருஷ்ண​மூர்த்தி, வழக்கறிஞர் சேகர், சந்திரசேகர், ஜெயலலிதாவின் அத்தை, போலீஸ்காரர்கள் கல்யாண​சுந்தரம், புருஷோத்தமன் மற்றும் நகை மதிப்பீட்​டாளர் வாசுதேவன் ஆகியோர் அங்கு இருந்துள்ளனர். பாஸ்கரன், இவர்கள் முன்னிலையில் அறைகளைத் திறக்க, வாசுதேவன் நகைகளை மதிப்பீடு செய்துள்ளார். மதிப்பீடு செய்யப்பட்ட நகைகளின் எண்ணிக்கை, அவற்றின் எடை ஆகியவற்றை நல்லம்ம நாயுடு தலைமையிலான போலீஸார் பட்டியல் போட்டு மகஜர் தயாரித்துள்ளனர். அதன்பிறகு தங்கம் மற்றும் வைர நகைகளை நந்தனம் கருவூலத்துக்கு எடுத்துச் சென்று உள்ளனர். வெள்ளிப் பாத்திரங்கள் எதை​யும் அவர்கள் எடுக்கவில்லை. அவற்றை பாஸ்கரனிடமே ஒப்படைத்து போயஸ் கார்டன் வீட்டிலேயே வைக்கச் சொல்லிவிட்டனர்.''

மகஜர் விவரம்

''1996, டிசம்பர் 21-ம் தேதியிட்டு தயாரிக்கப்​பட்ட மகஜரில் உள்ள விவரம், '20.12.1996 அன்று மதியம் 3.30 மணியில் இருந்து மறுநாள் காலை 8.30 மணி வரை 36, போயஸ் கார்டன் இல்லத்தில் நகை மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்றது. ஜெயலலிதா சார்பில் வி.பாஸ்கரனும் இவற்றைப் பார்வையிட்டார்.

அரசாங்கத்தின் சார்பில் சென்னை மாவட்ட கலெக்டரின் பி.ஏ-வான டி.ஏ.டி.​ஆபிரகாம், நகர நிலச் சீரமைப்புச் சிறப்பு தாசில்தார் பக்கிரிசாமி ஆகியோர் இருந்தனர். நகைகளை மதிப்பீடு செய்தவர் சுங்கத் துறையில் நகை மதிப்பீட்டு வல்லுநராக உள்ள வாசுதேவன். இவர் 1991-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர். நீதிமன்ற உத்தரவுப்படி இந்த நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டன. அந்த மகஜரில் உள்ள விவரங்கள்படி, 468 வகைகளில் அந்த வீட்டில் நகைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அத்துடன், 13 வகையான தங்க நகைகள் 16, செவாலியே சிவாஜி கணேசன், தி.நகர் என்ற முகவரியில் இருந்த வீட்டில் இருந்தும் கைப்பற்றப்பட்டன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 P30
இந்த விவரங்கள் அனைத்தும் சரியானவை என்பதை ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட பாஸ்கரனும் அரசுத் தரப்பினரும் கையெழுத்திட்டு உள்ளனர். இதையடுத்து பாஸ்கரனுக்கு ஒப்புகை ரசீதும் கொடுக்கப்பட்டு உள்ளது. மகஜரின்படி 468 விதமான தங்க வைர ஆபரணங்கள் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டவை என்பது உறுதியாகிறது. அவை என்னென்ன நகைகள், அவற்றின் எடை, அதன் விலை மதிப்பு எவ்வளவு என்ற விவரங்கள் பட்டியல் போட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.

நகைகள் தன்னுடைய வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டவை என்பதை ஜெயலலிதா தரப்பு மறுக்கவில்லை. ஆனால், போயஸ் கார்டன் மற்றும் சிவாஜி கணேசன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகளின் மதிப்பையும் விலையையும் அரசுத் தரப்பு தவறாகக் கணக்கிட்டு உள்ளது என்று வாதிடுகின்றனர். அத்துடன் அரசுத் தரப்பு கைப்பற்றிய 23,113 கிராம் தங்க ஆபரணங்களும் 4,475 கிராம் எடையுள்ள மற்றொரு செட் ஆபரணங்களும் 91-க்கு முன்பாகவே தங்களிடம் இருந்தவை என்று சொல்கிறார்.''

ஜெ.விடம் இருந்த மொத்த நகைகள்

''1991-க்கு முன்பே சசிகலாவிடம் 1,802 கிராம் தங்க ஆபரணங்கள் இருந்தன என்றும் தங்களின் வாதத்தில் குறிப்பிடுகின்றனர். அ.தி.மு.க தொண்டர்களால் நினைவுப் பரிசுகளாக வழங்கப்பட்ட 3,365 கிராம் எடையுள்ள தங்க வாள், கேடயம் போன்றவற்றை தான் சம்பாதித்த சொத்துகளாகக் கருதுவது நியாயமில்லை. அ.தி.மு.க தொண்டர்கள் வழங்கிய அந்த நினைவுப் பரிசுகளைப் பாதுகாப்புக் கருதி தன்னுடைய வீட்டில் வைத்திருந்ததாகவும் ஜெயலலிதா குறிப்பிடுகிறார். மேலும் 'எனது வீட்டிலும் சிவாஜி கணேசன் வீட்டிலும் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகளை மதிப்பீடு செய்துள்ள வாசுதேவன், அவற்றை முற்றிலுமாக தவறாக மதிப்பிட்டுள்ளார். ஏனென்றால், அவர் கைப்பற்றிய வருடத்தின் மதிப்பில் நகைகளைக் கணக்கிட்டுள்ளார். ஆனால், அவை எல்லாம் பூர்வீக நகைகள். புதிய மாடல்கள் வரும்போது, அதற்கேற்ப பழைய நகைகளை அழித்து, புதிய டிசைன்களில் செய்வது எங்கள் வழக்கம். பூர்வீக நகைகளைப் புதிய வடிவத்துக்கு மாற்றும்போது அதன் மதிப்பைக் கணக்​கீடுகளில் குறிப்பிடுவது எளிதான காரியம் அல்ல. அதோடு மிக முக்கியமாக 1991-96 வரை பதவியில் இருந்த காலத்தில் புதிய நகைகள் வாங்கியதற்கு ஆதாரமாக எதையும் அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.''

அரசுத் தரப்பு சாட்சியம்


''இந்த இடத்தில் அரசுத் தரப்பு சாட்சி சுப்புராஜ் நீதிமன்றத்தில் சொன்ன விவரங்கள் முக்கியமானவை. இவர் கோவை, ராஜவீதியில் உள்ள கீர்த்திலால் காளிதாஸ் அண்டு கம்பெனியின் மேனேஜராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர். அவர் நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்தில், 'கீர்த்திலால் காளிதாஸ் அண்டு கம்பெனி மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற நிறுவனம். அந்த நிறுவனத்தின் நிர்வாகியும் பங்குதாரருமான சாந்தகுமாரும் நானும் சேர்ந்து, 1992-ம் வருடம் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்குச் சென்றோம். நாங்கள் அங்கு சென்ற ஐந்து நிமிடத்தில் சசிகலா வந்தார். எங்கள் முன் 4 டிரேக்களில் தங்க வைர நகைகள் கொண்டுவந்து வைக்கப்பட்டன. அந்த நகைகளை மதிப்பீடு செய்து தரவேண்டும் என்று சசிகலா எங்களிடம் கேட்டார். அத்துடன் நகைகள் வாங்கியதற்கான எந்த பில்களும் கிடையாது என்றும் சொன்னார். இதையடுத்து நாங்கள் அந்த நகைகளை மதிப்பீடு செய்து கொடுத்தோம்.

1986-87 காலகட்டத்தில் வாங்கியதாக சசிகலா சொன்ன 19 நகைகளையும், 1987-88 காலத்தில் வாங்கியதாக 44 நகைகளையும், 1988-89-ல் வாங்கியதாகச் சொன்ன 69 நகைகளையும், 1989-90-ல் வாங்கியதாகச் சொன்ன 96 நகைகளையும் எடைபோட்டு ஒரு பேப்பரில் தெளிவாகக் குறித்துக்கொண்டு கோவை திரும்பிவிட்டோம். கோவை வந்தபிறகு, அவற்றுக்கு விலை மதிப்பீடு செய்து அதுபற்றித் தனித்தனியாக நான்கு அறிக்கைகளை கொரியர்மூலம் போயஸ் கார்டன் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைத்தோம். அந்த நான்கு அறிக்கைகளும் சசிகலா பெயரில் வேண்டும் என்று கேட்டதால், அவருடைய பெயருக்கே அறிக்கை கொடுத்தோம். நாங்கள் கணக்கிட்டதில் அந்த நகைகளின் மதிப்பு ஒரு கோடியே 41 லட்சத்து 18 ஆயிரத்து 91 ரூபாய்’ என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த நகை மதிப்பீட்டுக்காகத் தங்களுக்குத் தரவேண்டிய தொகைக்கு நான்கு பில்களையும் அனுப்பியதாகவும், இப்போது வரை அந்தத் தொகை தங்களுக்கு வரவில்லை என்றும் கூறி உள்ளனர்.

மேலும், 'ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தி கைப்பற்றப்பட்ட 468 நகைகளில் 29 நகைகளை மட்டும்தான் தங்களால் இப்போது அடையாளம் காணமுடிகிறது. மற்றவை எல்லாம் நாங்கள் பார்க்காத புதிய ரகங்கள்’ என்று சொல்லி உள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள உம்மிடி பங்காரு செட்டி அறக்கட்டளை தங்க நகைக்கடையை நடத்துபவர் ஸ்ரீஹரி. இவர் மற்றொரு அரசுத் தரப்பு சாட்சி. வி.பி.சி.டி. (உம்மிடி பங்காரு செட்டி டிரஸ்ட்) என்று எழுத்துகள் பொறிக்கப்பட்டி​ருக்கும் நகைகள் அனைத்தும் இந்தக் கடையில் இருந்து வாங்கப்பட்டவை. இந்த ஆதாரத்தின்படி ஜெயலலிதா வீட்டில் சோதனையில் கண்டுபிடிக்கப்​பட்ட பல நகைகள் உம்மிடி பங்காரு செட்டி நகைக்கடையில் இருந்து வாங்கியவைதான். 1975-க்குப் பிறகு, ஜெயலலிதா இவரிடமும் நகைகளை வாங்கி வருகிறார் என்று ஸ்ரீஹரி தன்னுடைய சாட்சியில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, அவர் சார்பில் ஒருவர் தன்னைத் தொலைபேசியில் அழைத்து, 'முதலமைச்சருக்கு தங்க, வைர ஆபரணங்கள் வேண்டும். கொண்டு வாருங்கள். வாங்கும் நகைகள் அனைத்துக்கும் அவர்கள் பணம் கொடுத்துவிடுவார்கள். ஆனால், பணம் செலுத்தியதற்கான பில்கள் தேவை இல்லை’ என்று சொன்னதாகத் தனது சாட்சியத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், சசிகலாவுக்கு வைர ஒட்டியாணம் செய்து கொடுத்ததையும் அதற்கான தொகையை, தான் பெற்றுக் கொண்டதையும் ஸ்ரீஹரி தனது சாட்சியத்தில் சொல்லி உள்ளார். இவர் ஜெயலலிதாவுக்காக நகைகளை மதிப்பீடு செய்து கொடுத்த சான்றிதழ்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார். ஜெயலலிதாவின் வீட்டில் நடந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட நகைகளில் இவர், தான் பார்த்ததாக 51 நகைகளை அடையாளம் கண்டும் சொல்லி உள்ளார்.

அதன்படி ஸ்ரீஹரி 62 நகைகளை மதிப்பிட்டு சான்றிதழ் கொடுத்துள்ளார். அதன் விலைமதிப்பு ஒரு கோடியே 9 லட்சத்து 8 ஆயிரத்து 206 ரூபாய். மேலும் 1991-ம் ஆண்டு 26 நகைகளை மதிப்பீடு செய்து சான்றிதழ் கொடுத்துள்ளார். அதன் விலைமதிப்பு 19 லட்சத்து 30 ஆயிரத்து 852 ரூபாய். 1992-ம் ஆண்டு 26 நகைகளை மதிப்பீடு செய்து கொடுத்துள்ளார் அதன் விலைமதிப்பு 19 லட்சத்து 30 ஆயிரத்து 852 ரூபாய். அதே வருடம் மார்ச் மாதம் இவர் ஜெயலலிதாவுக்காக மதிப்பீடு செய்து கொடுத்த நகைகளின் மதிப்பு 23 லட்சத்து 90 ஆயிரத்து 58 ரூபாய். இதுபோன்ற மதிப்பீடுகளை அடிப்படையாக வைத்து ஜெயலலிதா 1991-ம் ஆண்டுக்கான சொத்துவரியை தாக்கல் செய்துள்ளார்.''

இதுபோல் பதவிக்கு வந்தபிறகு தாக்கல் செய்த சொத்துவரி ஆதாரங்களின்மூலம் ஜெயலலிதா சிக்கிக் கொண்ட விதம் அடுத்த இதழில்...

- ஜோ.ஸ்டாலின்


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 24, 2014 8:43 pm

நடராசன் மூலமாக இவ்வளவு நகைகள் கிடைத்திருக்குமா?
குன்ஹா தீர்ப்பு விவரம் - 6


நீதிபதி குன்ஹா வழங்கிய பரபரப்பான தீர்ப்பின் தொடர்ச்சி...


குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 P30

''சசிகலா 1990-91-ம் ஆண்டுக்கான சொத்துக் கணக்கை 1993-ம் ஆண்டு தாக்கல் செய்துள்ளார். அதில், அவர் தன்னிடம் தங்க வைர ஆபரணங்களின் மதிப்பு 12 லட்சத்து 95 ஆயிரத்து 704 ரூபாயும் 5 கிலோ வெள்ளிப் பொருட்களின் மதிப்பு 27 ஆயிரத்து 468 ரூபாய் என்றும் கணக்குக் காட்டி உள்ளார்.

ஆனால், 1991-92-ம் ஆண்டுக்கான சொத்துக் கணக்கை அவர் தாக்கல் செய்தபோது, தன்னிடம் இருக்கும் தங்க வைர ஆபரணங்களின் மதிப்பு ஒரு கோடியே 10 லட்சத்து 13 ஆயிரத்து 946 ரூபாய் என்றும் வெள்ளிப் பொருள்களின் மதிப்பு 70 லட்சத்து 61 ஆயிரத்து 400 ரூபாய் என்றும் குறிப்பிட்டு ள்ளார். ஒரு வருடத்துக்குள் சசிகலாவுக்கு 1 கோடியே 67 லட்சத்து 52 ஆயிரத்து 174 ரூபாய்க்கு தங்க, வைர ஆபரணங்கள் உயர்ந்துள்ளன. ஜெயலலிதா, சசிகலா தரப்பில் இதற்குக் காரணமாக, 1991-ம் ஆண்டில் இருந்து 1992-ம் ஆண்டுக்குள் தங்க வைர ஆபரணங்களின் விலை கூடியதாகவும் மேலும் அந்தக் காலத்தில் தங்கம், வைரம் மற்றும் வெள்ளி ஆகியவற்றால் செய்யப்பட்ட ஆபரணங்கள், வாள்கள், கேடயங்கள் போன்றவை அன்பளிப்புகளாகவும் பரிசுகளாகவும் தங்களுக்குக் கிடைத்தன என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த இடத்தை நாம் கவனமாகப் பார்க்க வேண்டும். 1991-ம் ஆண்டுக்கான சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்தபோது, அவர்களுக்கு வராத பரிசுப் பொருள்கள், 1991-க்குப் பிறகுதான் வந்திருக்கின்றன என்பதை அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.''

மொத்த நகைகளின் மதிப்பு


''ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், 'நகைகளை மதிப்பிட்ட சுங்கத் துறை அதிகாரி வாசுதேவன் அந்தத் துறையில் நிபுணத்துவம் குறைந்தவர்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் நகைகளின் மதிப்புகளைத் தவறாகக் கணக்கிட்டு அவற்றுக்கு விலை நிர்ணயம் செய்துள்ளதாகத் தன்னுடைய வாதத்தில் சொல்கிறார். ஆனால், வாசுதேவன் 10 ஆண்டுகள் இந்தத் துறையில் அனுபவம் வாய்ந்தவர் என்பது அரசுத் தரப்பாலும் சுங்கத் துறையின் மூலமும் நிரூபிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜெயலலிதா, சசிகலாவிடம் இருந்த நகைகளை மதிப்பீடு செய்தபோது, அதற்கு மெட்லர் எலெக்ட்ரானிக் என்ற பிரத்யேக தராசை வாசுதேவன் பயன்படுத்தியிருக்கிறார். எடை போடுவதற்கு முன்பு, தராசின் இரண்டு பக்கங்களும் சரியான அளவில் நின்றதையும் அவர் உறுதிப்படுத்தி உள்ளார். அதை ஊழல் தடுப்பு அதிகாரி நல்லம்ம நாயுடு, ஜெயலலிதா தரப்பில் இருந்த பாஸ்கரன், வழக்கறிஞர்கள் சேகர் மற்றும் சந்திரசேகர், கலெக்டர்(சிறப்பு) கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஜெயலலிதாவின் அத்தை ஆகியோர் ஒப்புக்கொண்டு உள்ளனர்.
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 P31
மேலும், நகைகளின் தரத்தை அறிய, பொற்கொல்லர்கள் பயன்படுத்தும் உரைகல்லை வாசுதேவன் பயன்படுத்தி உள்ளார். வைரங்களின் தரத்தை

10 ஜ் என்ற லென்ஸைப் பயன்படுத்தி கணக்கிட்டு உள்ளார். அவருடைய மதிப்பீட்டின்படி, அந்த வைரங்கள் 4சி எடை கொண்டவை என்பது தெரியவந்து உள்ளது. மேலும், அந்த வைரங்களில் தீட்டப்பட்டு இருந்த பட்டைகள், அதன் தூய தன்மை, வைரங்களின் நிறம் ஆகியவற்றையும் கருத்தில்கொண்டுதான் வாசுதேவன் அவற்றின் மதிப்பைக் கணக்கிட்டுள்ளார். அப்படி அவர் கணக்கிட்டதன்படி, ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் எடை அளவு 23 கிலோ 113 கிராம் என்பது தெரியவந்தது. அதன்விலை அன்றைய தேதியில் 91 லட்சத்து 57 ஆயிரத்து 253 ரூபாய். வைரத்தின் விலை அன்றைய தேதியில் இரண்டு கோடியே 43 லட்சத்து 92 ஆயிரத்து 790 ரூபாய். மொத்தமாக தங்க வைர ஆபரணங்களின் மதிப்பு 3 கோடியே 35 லட்சத்து 50 ஆயிரத்து 43 ரூபாய் என்று கணக்கிட்டுள்ளார்.

இது தவிர்த்து போயஸ் கார்டன், வீட்டில் நடத்திய சோதனையில் 42 நகைப் பெட்டிகள் கைப்பற்றப்பட்டு, அவற்றிலும் நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. அதில் சில பெட்டிகளில் கைக்கடிகாரங்களும், மற்றவற்றில் 131 நகைகளும் இருந்தன. அதன் எடை 4 கிலோ 475 கிராம். அதன் மதிப்பு அன்றைய விலையில் 17 லட்சத்து 37 ஆயிரத்து 266 ரூபாய். வைரம் பதிக்கப்பட்ட தங்கக் கம்மல் விலை 47 லட்சத்து 61 ஆயிரத்து 816 ரூபாய் என்று கணக்கிட்டு உள்ளார். அதேசமயம், குறுக்கு விசாரணையில், வாசுதேவன் மதிப்பீட்டாளர் மட்டும்தான் என்பதும் விலை நிர்ணயம் செய்யும் வேலையில் அவருக்கு அனுபவம் இல்லை என்பதும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரால் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், வாசுதேவன் எடை போட்ட நகைகளுக்கு விலையைக் கணக்கிடும்போது, 1996-ம் ஆண்டு விலையில் அவற்றைக் கணக்கிட்டு உள்ளார் என்பதும் தெரியவருகிறது. எனவே, வாசுதேவன், கணக்கிட்ட எடையை மட்டும¢ நாம் எடுத்துக்கொள்ளலாம். விலையின் மதிப்பீட்டில் குளறுபடி உள்ளதால், அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.''

வருமானவரி தாக்கல் விவரம்

''மேலும், ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், தன்னுடைய வாதத்தில், 'அரசுத் தரப்பு பட்டியலிட்டு உள்ள நகைகளில், வரிசை எண் 284 மற்றும் 285-ல் உள்ள நகைகள், முதலமைச்சர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே ஜெயலலிதாவிடம் இருந்தவை’ என்றும் 'அவற்றையும் அரசுத் தரப்பு சேர்த்து சொத்து மதிப்பைக் கணக்கிட்டு குற்றம்சாட்டுகிறது’ என்றும் தெளிவுபடுத்தி உள்ளார். இந்த இடத்தில் நாம் கவனமாக ஆதாரங்களைப் பரிசீலித்து முடிவுக்கு வர வேண்டும்.

ஜெயலலிதாவைப் பொறுத்தவரையில், அவர் 1965-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வருமானவரி மற்றும் சொத்துவரி செலுத்தி வந்துள்ளார். 1987-ம் ஆண்டில் இருந்து 1990 வரையிலான கணக்குகளை அவர் 1992-ம் ஆண்டு செலுத்தி உள்ளார். அப்போது அவரிடம் இருந்த நகைளை கீர்த்திலால் காளிதாஸ் அண்ட் கம்பெனியைச் சேர்ந்த சுப்புராஜ், சாந்தகுமார் ஆகியோர் மதிப்பிட்டுக் கொடுத்துள்ளனர்.

அந்த மதிப்பீட்டில் 7,040 கிராம் வைரம் இடம்பெற்றுள்ளது. இதைத்தான் அவர் பதவிக்கு வருவதற்கு முன்பே அவரிடம் இருந்த வைரங்களாக ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பி.குமார் குறிப்பிடுகிறார். ஆனால், இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், 1987-ல் இருந்து அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான வருமானவரியை மொத்தமாக 1992-ல் தாக்கல் செய்துள்ளார். 1992-ம் ஆண்டுக்கான வருமானவரியை 1993-ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி செலுத்தி உள்ளார். அடுத்தடுத்த ஆண்டுகளில் செய்யப்பட்ட இந்த வருமானவரி கணக்குத் தாக்கலில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. அது பற்றி வருமானவரித் துறை கேள்வி எழுப்பியபோது, ஓர் ஆண்டில் தங்க வைர ஆபரணங்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டதாகவும், மேலும், தங்களுக்கு இந்தக் காலத்தில் அதிக எண்ணிக்கையில் பரிசுப் பொருள்கள் கிடைத்ததாகவும் காரணம் சொல்லி உள்ளனர். இதையடுத்து வருமானவரித் துறை உதவி ஆணையர், 'கடந்த ஆண்டில் உங்களுக்கு அன்பளிப்பாக 19 புதிய ஆபரணங்கள் கிடைத்துள்ளன என்றும் அவற்றின் எடை 7,040 கிராம் என்றும் 101.49 சி எடையுள்ள வைரங்களும் கிடைத்துள்ளன என்றும் சொல்லி உள்ளீர்கள். ஆனால், அவற்றை முறையாகப் பட்டியல் இடவில்லை’ என்று சொல்லி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தெளிவாக சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் பரிசுப் பொருள்கள் மற்றும் புதிய நகைகள் 1992-க்குப் பிறகே வந்துள்ளன என்பதும் நிரூபணமாகிறது.''

ஆண்டுவாரியாக சசிகலா சொன்ன நகைகள்

''மேலும், கீர்த்திலால் காளிதாஸ் அண்ட் கம்பெனி நிர்வாகி சாந்தகுமாரின் சாட்சியத்தில் இருந்து நமக்குத் தெரியவருவது என்னவென்றால், 1992-ம் ஆண்டில்தான் ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரும் நகைகளைத் தரம் பிரிப்பதற்காக இவர்களை அழைத்துள்ளனர். இவர்களிடம் கிலோ கணக்கில் நகைகளை மட்டும் கொடுத்து, எந்தெந்த நகைகள் 1987, 1988, 1989, 1990 ஆகிய ஆண்டுகளில் வாங்கப்பட்டவை என்ற விவரங்களை ஆண்டுவாரியாக சசிகலாவே சொல்லி உள்ளார். ஆனால், அவை எல்லாம் உண்மையிலேயே அந்த ஆண்டுகளில்தான் வாங்கப்பட்டவை என்பதற்கான ரசீதுகள் சாந்தகுமாரிடம் காட்டப்படவில்லை. அவற்றை நீதிமன்றத்திலும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. ஒருவேளை 1992-க்கு முன்பே முறையாக ஒவ்வோர் ஆண்டும் வருமானவரி தாக்கல் செய்து, அவற்றில் அந்த நகைகளை ஜெயலலிதா கணக்குக் காண்பித்து இருந்தால், அதுவாவது நம்பும்படியாக இருந்திருக்கும். ஆனால், அவசர அவசரமாக 1992-ல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கான வருமானவரியைத் தாக்கல் செய்து, அவற்றில் நகைகளைப் பிரித்துக் காண்பித்து இருப்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. மேலும், அவற்றின் தரத்தை தற்போது மதிப்பிடுவது வருமானம் மற்றும் சொத்துவரி செலுத்துவதற்காக மட்டுமே என்று சசிகலா சாந்தகுமாரிடம் கூறியுள்ளார்.

இதிலிருந்து நமக்குத் தெரியவருவது என்னவென்றால், 1991-க்குப் பிறகு அவர்களிடம் குவிந்த நகைகளை பழைய தேதியிட்டுக் கணக்குக் காட்டி வருமானவரியைத் தாக்கல் செய்துள்ளனர். அப்படி வரி கட்டியதால் மட்டுமே ஒரு வருமானம் நல்ல வழியில் வந்த வருமானமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த வருமானம் எந்த வழியில் வந்தது என்பதை 'பொது ஊழியர்’ சொல்லியாக வேண்டும். ஆனால், இவ்வளவு ஆயிரக்கணக்கான கிலோ தங்கமும் வைரமும் தனது வீட்டுக்கு எப்படி வந்தது என்பதை ஜெயலலிதாவால் கடைசி வரை சொல்லவே முடியவில்லை. இவை அனைத்தும் சசிகலாவின் பெயரில் இருப்பதை மூத்த வழக்கறிஞர் பி.குமார் நமக்கு நினைவூட்டுகிறார். அப்படியானால் சசிகலாவுக்கு இவ்வளவு நகைகள் எப்படி வந்தன? அவர் அதை நிரூபிக்க வேண்டும் அல்லவா? அவர் இந்த நகைகளை எங்கு வாங்கினார்? எப்படி வாங்கினார்? எந்தத் தேதியில் வாங்கினார்? என்ற விவரங்களையும் சொல்ல முடியவில்லை.

ஆனால், சசிகலாவின் பெயரில் நகை மதிப்பீட்டு அறிக்கையை மட்டும் ஆண்டுக்கு ஆண்டு தயாரித்து வைத்துள்ளனர். ஒருவேளை அவர் வாங்கவில்லை என்றாலும், அவர் கணவர் நடராசன் மூலமாக இவ்வளவு நகைகள் அவருக்குக் கிடைத்திருக்குமா என்றால், அதற்கும் வாய்ப்பே இல்லை என்பதை அரசுத் தரப்பு சரியாக நிரூபித்துள்ளது. ஏனென்றால், 1991-ம் ஆண்டு வரை அவருடைய கணவர் ஓர் அரசு ஊழியராகத்தான் இருந்துள்ளார். ஒரு ஸ்கூட்டர் வாங்குவதற்கே அரசாங்கத்திடம் இருந்து 3,000 ரூபாய் முன்பணமாக அவர் பெற்றுள்ளார். எனவே, அவர் மூலமாக இவ்வளவு நகைகள் வந்திருக்க வாய்ப்பில்லை. இந்த ஆதாரங்களின் மூலம் தங்கமும் வைரமும் ஜெயலலிதாவால் சசிகலாவின் பெயரில் வாங்கிக் குவிக்கப்பட்டன என்பதை அரசுத் தரப்பு நிரூபித்துள்ளது. ஆனால், இதை மறுப்பதற்கு ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரிடமும் ஆதாரங்கள் இல்லை. எனவே, குற்றச்சாட்டு நிரூபணமாகிறது.''

நீதிமன்றம் போட்டுக் காட்டிய கணக்கு

''வாசுதேவனுடைய மதிப்பீட்டில் குளறுபடி இருப்பதாலும், சாந்தகுமாரின் மதிப்பீடு முன்தேதியிட்டு நடந்திருப்பதாலும், நகைகளின் எடைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு, அவற்றின் விலையை இந்த நீதிமன்றமே தீர்மானிக்கிறது. ஜெயலலிதாவிடம் இருந்து அரசுத் தரப்பு கைப்பற்றிய நகையின் எடை 27 ஆயிரத்து 588 கிராம். ஆனால், அதில் ஜெயலலிதா பதவிக்கு வருவதற்கு முன்பே அவரிடம் இருந்த நகைகளாக, தற்காப்புச் சாட்சிகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட அளவு 7 ஆயிரத்து 40 கிராம். எனவே, அவற்றை இந்த வழக்கில் இருந்து தள்ளுபடி செய்துவிடுகிறேன்.

அப்படிச் செய்தால், மீதம் இருக்கும் 20 ஆயிரத்து 548 கிராம் எடை தங்கம், ஜெயலலிதாவின் பதவிக்காலத்தில் சம்பாதித்தவை என்றாகிறது. இதற்கு விலையாக, ஜெயலலிதா தரப்பு மற்றும் அரசுத் தரப்பு என இருவருமே ஏற்றுக்கொண்ட, 1992-ம் ஆண்டின் தங்க விலை நிலவரப்படி கணக்கிடுவது என்று நீதிமன்றம் முடிவு செய்கிறது. அதன்படி, அந்தக் காலத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 334 ரூபாயாக இருந்துள்ளது. அப்படியானால் ஒரு கிராம் தங்கத்தின் விலை 433 ரூபாய் 40 பைசாவாகிறது. அந்த விலையில் 20 ஆயிரத்து 548 கிராம் தங்கத்தைக் கணக்கீடு செய்தால், 20548ஜ்433.4=8905503.20 என்ற விலை வருகிறது. மேலும், ஜெயலலிதாவிடம் இருந்த வைரங்களின் மதிப்பு 1 கோடியே 62 லட்சத்து 61 ஆயிரத்து 820 ரூபாய் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. அந்தத் தொகையை தங்க நகையின் மதிப்போடு சேர்த்துக் கணக்கிட்டால், 2 கோடியே 51 லட்சத்து 59 ஆயிரத்து 144 ரூபாய் வருகிறது. இத்தனை மதிப்புடைய தங்கத்தாலும் வைரத்தாலும் இழைக்கப்பட்ட நகைகள் அனைத்தும் ஜெயலலிதாவால் முறைகேடான வழியில் சம்பாதிக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவிக்கிறது.''

தொடரும்...

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 24, 2014 8:47 pm

முதலமைச்சருக்கு கொடுக்கப்படும் அன்பளிப்பும் லஞ்சம்தான்!'
குன்ஹா தீர்ப்பு விவரம் - 7

குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 P30a
ஜெயலலிதா, தனக்கு பிறந்த நாள் பரிசாக 2 கோடியே 92 லட்சத்து 52 ஆயிரத்து 71 ரூபாய் வந்தது என்றும், அதை முறைகேடான வழியில் தான் சம்பாதிக்கவில்லை என்றும் இந்த வழக்கில் குறிப்பிட்டார். ஆனால், பொது ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் எல்லா அன்பளிப்பும் லஞ்சம்தான். அதுவும் ஊழல் கணக்கில்தான் சேர்க்கப்படும் என்று நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தனது தீர்ப்பில் எடுத்துக்காட்டி உள்ளார்.



பரிசாக வந்தது எவ்வளவு?


''ஜெயலலிதா தரப்பு இந்த நீதிமன்றத்தில் எடுத்து வைக்கும் வாதம் என்னவென்றால், 'ஜெயலலிதா அவருடைய 44-வது பிறந்தநாளை, 1992-ம் வருடம், பிப்ரவரி 24-ம் தேதி கொண்டாடினார். ஜெயலலிதா மீது அன்பும் மரியாதையும் வைத்துள்ள அவருடைய கட்சித் தொண்டர்கள், பிறந்தநாள் பரிசாக ஏராளமான பொருள்களை வழங்கினார்கள். அவர்களில் பலர், பிறந்தநாள் பரிசாக ஜெயலலிதாவுக்கு லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்தனர். சிலர் ரொக்கமாக கொடுத்தனர். சிலர் செக் மற்றும் டி.டி-யாகக் கொடுத்தனர். அந்த வகையில் 2 கோடியே 15 லட்சத்து 12 ரூபாய் ஜெயலலிதாவுக்குக் கிடைத்தது. அதுபோல, வெளிநாட்டில் வசித்த ஒருவர் ஜெயலலிதாவுக்கு 77 லட்சத்து 52 ஆயிரத்து 59 ரூபாய்க்கான டி.டி-யை பிறந்தநாள் பரிசாக அனுப்பி இருந்தார். ஜெயலலிதா, 1992-93-ம் ஆண்டு வருமானவரி மற்றும் சொத்துக்கணக்கை தாக்கல் செய்தபோது, இந்த விவரங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதை ஏற்றுக்கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள், வெளிநாட்டில் இருந்து வந்த பணத்துக்கும், பரிசாகக் கிடைத்த தொகைக்கும் தனியாக வரி விதித்தனர். அதையும் ஜெயலலிதா சரியாகக் கட்டி உள்ளார். ஆனால், லஞ்ச ஒழிப்புத் துறை இதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் குற்றம் சாட்டி உள்ளது’ என்பதுதான்.

இதை நிரூபிக்க ஜெயலலிதாவின் வழக்கறிஞர், இந்த வழக்கின் விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடுவிடம் நடத்திய குறுக்கு விசாரணையில் பதிவு செய்யப்பட்ட விவரங்களைக் கோடிட்டுக் காட்டி உள்ளார். மேலும், 'தமிழக அரசியலில் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் தாங்கள் சார்ந்த கட்சியின் தலைவருடைய பிறந்தநாளுக்கு பலவிதமான பரிசுகளை, பொருள்களாகவும் பணமாகவும் கொடுப்பது வழக்கம். அதன்படி ஜெயலலிதாவுக்கும் கொடுக்கப்பட்டது. அதை 75 சாட்சிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். 112 ஆவணங்கள் இதற்கு ஆதாரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன’ என்று தன்னுடைய வாதத்தில் குறிப்பிட்டுள்ளார். 'அமெரிக்க டாலரில் டி.டி-யாக வந்த 77 லட்சத்து 52 ஆயிரத்து 591 ரூபாய், 1992-93-ம் ஆண்டு தாக்கல் செய்த வருமானவரிக் கணக்கில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதுபோல, அதே ஆண்டில் சசிகலாவுக்கு அமெரிக்க டாலரில் டி.டி-யாக கிடைத்த 51 லட்சத்து 47 ஆயிரத்து 951 ரூபாய் பற்றியும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது’ என்றும் வாதிட்டுள்ளார்.

உளுந்தூர்பேட்டை மணிராஜ்!


ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர், தன்னுடைய வாதத்துக்கு வலு சேர்க்கும் வகையில் சாட்சிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளார். ஜெயலலிதா தரப்புக்கு ஆதரவாக சாட்சி சொன்ன, மணிராஜ், 'நான் ஒரு வழக்கறிஞர். உளுந்தூர்பேட்டையில் வசித்து வருகிறேன். 1992-ம் ஆண்டில் இருந்து தென்னாற்காடு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளராக இருக்கிறேன். எங்கள் கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதாவின் பிறந்த நாளை நாங்கள் ஒவ்வொரு வருடமும் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். அவருடைய 44-வது பிறந்தநாளையும் சிறப்பாகக் கொண்டாட நினைத்து, அதற்காக நான் பொறுப்பு வகிக்கும் இளைஞரணி உறுப்பினர்கள் 110 பேர்களிடம் பணம் வசூல் செய்து, அதில் வந்த 1 லட்சத்து 65 ஆயிரத்து 200 ரூபாயைக் கொடுத்தேன். அந்தத் தொகையை ஜெயலலிதாவின் பெயரில் டி.டி-யாக எடுத்தேன்’ என்று சொல்லி உள்ளார்.
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 P30(1)
மணிராஜ் சொன்ன சாட்சியம் உண்மைதான் என்று கோதண்டபாணி, சுந்தரபாண்டியன் என்ற இரண்டு சாட்சிகள் உறுதி செய்துள்ளனர். இவர்களில் கோதண்டபாணி 1,500 ரூபாயையும், சுந்தரபாண்டியன் 2,000 ரூபாயையும் ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்காக, மணிராஜிடம் கொடுத்ததாகவும் சொல்லி உள்ளனர்.

விழுப்புரம் இந்தியன் வங்கி!

ஜெயலலிதா தரப்பின் மற்றொரு சாட்சி, ஆர்.பி.பரமேஸ்வரன். இவர் 2 லட்சத்து 16 ஆயிரத்து 500 ரூபாயைத் தன்னுடைய கட்சிக்காரர்களிடம் இருந்து வசூலித்து, அதை டி.டி-யாக மாற்றி ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்பளிப்பாகக் கொடுத்ததாகக் கூறி உள்ளார். இவரிடம் பணம் கொடுத்த அ.தி.மு.க தொண்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் பி.எம்.எஸ்.மணி ஆகியோர் இதை உறுதிப்படுத்தி உள்ளனர். இவர்கள் தங்கள் பங்காக முறையே 3,000 மற்றும் 1,000 ரூபாயைக் கொடுத்ததாகவும், இதற்காக, கட்சிக் கூட்டம் போடப்பட்டு, அதில் ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு பரிசளிக்க வசூல் நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு சாட்சி அ.தி.மு.க தொண்டர் டி.கே.மூர்த்தி. இவர் தன்னுடைய கட்சிக்காரர்களிடம் இருந்து பணம் வசூலித்து, 2 லட்சத்து 96 ஆயிரத்து 800 ரூபாய் கொடுத்ததாகச் சொல்லி உள்ளார். இதை, தங்கராஜ், ராமச்சந்திரன் என்ற சாட்சிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும், வசூல் தொகையை டி.கே.மூர்த்தியும் தங்கராஜும் சேர்ந்து இந்தியன் வங்கியினுடைய விழுப்புரம் கிளையில் டி.டி எடுத்ததாகவும் சொல்லி உள்ளனர். ஆனால், அதற்கான ரசீது நகல் தற்போது தங்களிடம் இல்லை என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.

சேலம் நடேசன்!

சேலம் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் நடேசனும், தன்னுடைய அணி சார்பில், ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கியும், தன்னுடைய கட்சித் தொண்டர்களிடம் பணம் வசூல் செய்து 3 லட்சத்து 42 ஆயிரத்து 300 ரூபாய்க்கு சேலம் இந்தியன் வங்கியில் டி.டி எடுத்து ஜெயலலிதாவுக்கு அனுப்பியதாகவும் சொல்லி உள்ளார்.

தகவல் தர முடியாத ஆடிட்டர்!

ஜெயலலிதா தரப்பின் தற்காப்பு சாட்சி ஆடிட்டர் சண்முகம், பாரா 48-ல், ''ஜெயலலிதாவின் 44-வது பிறந்தநாளுக்கு வரைவோலை மூலமாக 2 கோடியே 15 லட்சத்து 12 ரூபாய் அவருடைய கட்சித் தொண்டர்கள் வகையில் வந்தது'' என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும், வெளிநாட்டில் இருந்து, 77 லட்சத்து 52 ஆயிரத்து 591 ரூபாய் கிடைத்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார். இவற்றை எல்லாம் ஜெயலலிதா தன்னுடைய வருமானவரிக் கணக்கில் முறையாகக் காட்டி உள்ளதாகவும் கூறி உள்ளார். இந்த சாட்சிகள் அத்தனைபேரும் மேலும் ஒரு விஷயத்தையும் நீதிமன்றத்துக்கு தெளிவுபடுத்தி உள்ளனர். அது என்னவென்றால், ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்காக பணம் வசூல் செய்து அனுப்ப வேண்டும் என்று, தங்கள் கட்சியின் தலைமையிடம் இருந்தோ அல்லது மாவட்டத் தலைமையிடம் இருந்தோ எந்த உத்தரவும் வரவில்லை. இதையெல்லாம் ஜெயலலிதாவின் மீது உள்ள மரியாதை மற்றும் அன்பின் காரணமாக தாங்களே செய்ததாகவும் சொல்லி உள்ளனர்.

ஆனால், ஆடிட்டர் சண்முகத்தை அரசுத் தரப்பு குறுக்கு விசாரணை செய்தபோது, 1991-92 முதல் 1995-96 வரை ஜெயலலிதாவுக்கு வருமானவரிக் கணக்குகளை சண்முகம் தாக்கல் செய்யவில்லை. மாறாக, ஆடிட்டர் ராஜசேகர் என்பவர்தான் தாக்கல் செய்தார் என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. அதனால், இந்த வழக்கில் சர்ச்சைக்குரிய வருடமாக சேர்க்கப்பட்டுள்ள 1991 முதல் 96 வரையில் ஜெயலலிதாவின் சொத்துகள் பற்றியோ, அப்போது அவருக்கு வந்த வருமானம் பற்றியோ ஆடிட்டர் சண்முகத்தால் சரியான தகவல்களை நீதிமன்றத்துக்குக் கொடுக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்த அன்பளிப்புகள் விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வரலாம். தற்போது, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களில் 2145-வது ஆவணத்தின்படி, ஜெயலலிதா 1987-88 முதல் 1992-93 வரையிலான வருமானவரிக் கணக்கை, 1992-ம் ஆண்டு நவம்பர் மாதம் மொத்தமாக தாக்கல் செய்துள்ளார். அப்படி தாக்கல் செய்த ஆவணங்களில், எந்த இடத்திலும் தனக்குப் பிறந்த நாள் பரிசாக டி.டி-க்களாக கோடிக்கணக்கில் பணம் வந்தது என்ற விவரத்தை சொல்லவில்லை.

அண்ணாநகர் மதுரா வங்கி!

அதன்பிறகு பல ஆண்டுகள் கழித்து, 1991-ம் ஆண்டுக்கான சொத்துக் கணக்கை தாக்கல் செய்யும்போது, '1990-க்குப் பிறகு தங்க வைர ஆபரணங்களின் விலை, சந்தையில் இயல்பாகக் கூடியுள்ளது. மேலும், நான் 1990-க்கான வருமானவரியைத் தாக்கல் செய்தபோது, எனக்கு அன்பளிப்பாக தங்க வைர ஆபரணங்கள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் நிறையக் கிடைத்தன. மேலும், அண்ணாநகரில் உள்ள மதுரா வங்கியின் சேமிப்புக் கணக்கு எண்.5158-ல் தனக்கு அன்பளிப்புகளாக செக் மற்றும் டி.டி-யில் பணம் வந்துள்ளன. எனவே, அதற்கான மதிப்பு அறிக்கையை தற்போது தாக்கல் செய்கிறேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். அதுபோல், 18.03.1994 அன்று வருமான வரித்துறைக்கு எழுதிய கடிதத்தில், ''தனக்கு அன்பளிப்புகளாக ரொக்கப்பணம், டி.டி மற்றும் தங்க வைர ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்கள் போன்றவை வெவ்வேறு எண்ணிக்கையில் வெவ்வேறு ஆண்டுகளில் கிடைத்தன என்றும் கூறி உள்ளார்.

நகைகள்...நகைகள்...நகைகள்!

இதில் இருந்து என்ன தெரியவருகிறது என்றால், 1992-நவம்பரில் மொத்தமாக தாக்கல் செய்த வருமானவரிக் கணக்குகளில், பிறந்தநாள் அன்பளிப்புகள் பற்றி ஜெயலலிதா குறிப்பிடவில்லை. ஆனால், அதன்பிறகு சில ஆண்டுகள் கழித்து தனக்குப் பிறந்தநாள் அன்பளிப்புகள் கிடைத்தன என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அப்போதும்கூட எந்தப் பிறந்தநாளில் எவ்வளவு அன்பளிப்புகள் கிடைத்தன. அதற்கு முந்தைய பிறந்தநாட்களில் கிடைத்தது எவ்வளவு, அதற்கடுத்து வந்த பிறந்தநாட்களில் கிடைத்த அன்பளிப்புகள் எவ்வளவு என்பது பற்றிய விவரங்களை ஜெயலலிதா தெளிவாகக் குறிப்பிடவில்லை. 1991-ல் தொடங்கி முதல் மூன்று ஆண்டுகளில் அன்பளிப்புகளாகக் கிடைத்தவை எல்லாம் நகைகள்... நகைகள்... நகைகள்தான் என்று குறிப்பிட்டுள்ளார். அதில் ரொக்கமாகக் கிடைத்தவை என்று எதுவும் காட்டப்படவில்லை. காசோலை கணக்குகளும் இல்லை.. வரைவோலை கணக்குகளும் இல்லை. ஆனால், அதன்பிறகு பல வருடங்கள் கழித்து முந்தைய ஆண்டுகளுக்கான சொத்துக்கணக்கைத் தாக்கல் செய்யும்போது, தனக்கு அன்பளிப்புகளாக செக், டி.டி மற்றும் ரொக்கமாகப் பணம் வந்தது என்று ஜெயலலிதா சொல்கிறார். இந்த வருமானங்களை, வருமானவரித்துறை ஆணையர், அவர்களுடைய சட்டப்படி, எந்த வழியில் வந்தது என்று தெரியாத வருமானம் என பதிவு செய்து வைத்துள்ளனர். இதை எதிர்த்துக்கூட ஜெயலலிதா, தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அதுவும் இப்போது வரை நிலுவையில் உள்ளது. இதுபோல், ஒரு பொது ஊழியர் தன்னுடைய வருமானத்துக்கு அதிகமாகத் தன்னிடம் இருக்கும் சொத்துகளை அன்பளிப்புகளாக வந்தவை என்று சொன்னால், அதை ஏற்றுக்கொண்டு அந்த வருமானத்தை நியாயமான வழியில் சம்பாதித்த வருமானமாகக் கருத முடியாது.

எது உண்மையான வருமானம்?

மத்தியப்பிரதேச மாநில அரசு ஸ்s அவாத் கிஷோர் குப்தா வழக்கின் தீர்ப்பு இதற்குச் சிறந்த உதாரணமாக உள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பில், 'பொது ஊழியரின் தகுதிப்படி, அவருடைய வருமானம் என்பது அவரது அலுவலகத்தின் மூலம் வரும் ஊதியம் மற்றும் ஊக்கத்தொகை மட்டுமே. அந்த அளவுகோலை மீறி, ஒரு பொது ஊழியரின் கையில் இருக்கும் மற்ற வருமானங்களைச் சரியான வருமானமாகக் கொள்ள முடியாது. எதிர்பாராமல் ஒருவருக்குக் கிடைக்கும் பணம், ஊழல்கள் மூலம் வரும் லாபங்கள், குற்றங்கள் அல்லது முறைகேடான செயல்களில் ஈடுபடுவதன் மூலம் கிடைக்கும் ஆதாயங்கள் போன்றவற்றை நல்ல வருமானமாகக் கருத முடியாது.

அதன்படி பார்த்தால், இரண்டு கோடிக்கும் அதிகமான பணமும், வெளிநாட்டில் இருந்து வந்த 77 லட்சத்தையும் தனக்கு பிறந்தநாள் அன்பளிப்பாகக் கிடைத்ததாக ஜெயலலிதா கூறுவதை ஏற்கமுடியாது. இவை எல்லாம் அவர் முதலமைச்சராக இருந்ததால்தான் அவருக்கு வந்துள்ளன. அவர் அந்தப் பதவியில் இல்லாதபோது இந்த அன்பளிப்புகள் அவருக்கு வந்ததா? இல்லையே. ஜெய​லலிதாவின் கட்சித் தொண்டர்கள், அவரிடம் அன்பைப் பெறுவதற்கும் கட்சியில் அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் இவ்வளவு பெரிய தொகையை பிறந்தநாள் பரிசாகக் கொடுத்தார்கள் என்றால், அதற்குப்பிறகு வந்த பிறந்தநாட்களின்போது, அவர்கள் ஏன் இவ்வளவு அன்பளிப்புகளைக் கொடுக்கவில்லை?

'அன்பளிப்புகளுக்கும் தடை!’

ஆனாலும், ஜெயலலிதாவின் கட்சிக்காரர்கள் ஜெயலலிதாவுக்கு அன்பளிப்புகளை கொடுத்தது உண்மை என்று சொல்லி, அதற்கான ஆதாரங்களை கொடுத்துள்ளனர். அந்த ஆதாரங்களில் சில ஓட்டைகள் இருந்தாலும் அவற்றை இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. ஆனால், முதலமைச்சராக இருப்பவர் அன்பளிப்புகளை வாங்கி, அவற்றைத் தனது உரிமையாக்கிக் கொள்வது ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி தவறாக இருக்கும்போது, அவருடைய கட்சிக்காரர்கள் அன்பளிப்புகளை நாங்கள்தான் கொடுத்தோம் என்று சொல்லும் சாட்சியால் என்ன பயன்?

இதை உச்ச நீதிமன்றம் தெளிவாக வரையறுத்துச் சொல்லி உள்ளது. 'பொது ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது எப்படி தடை செய்யப்பட்டுள்ளதோ, அதுபோல் அன்பளிப்புகள் வாங்குவதும் தடை செய்யப்படுகிறது. ஏனென்றால், பொது ஊழியராக இருப்பவர் அன்பளிப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டால், லஞ்சம் வாங்குவதற்கு சட்டம் உருவாக்கி வைத்துள்ள தடைகளை அன்பளிப்பு என்ற வழியில் எளிமையாகக் கடந்துவிடுவார்கள். அதனால், லஞ்சம் வாங்க விதிக்கப்பட்டுள்ள தடையும், அதற்கான தண்டனையும் அர்த்தமற்றதாகிவிடும். அதனால்தான், லஞ்சம் பெறுவதும் லஞ்சம் கொடுப்பதும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 161 மற்றும் 165 சட்டப்படி குற்றமாக்கப்பட்டு உள்ளது. ஏனென்றால், வாங்குவது மட்டுமல்ல, லஞ்சம் கொடுக்க முன்வருவதும், அரசு இயந்திரத்தின் சீரான போக்கை பழுதடையச் செய்துவிடும். எனவேதான், ஒருவர் பொது ஊழியருக்கு லஞ்சம் கொடுப்பதும், அதை பொது ஊழியர் பெற்றுக் கொள்வதும் என்ற இரண்டுமே குற்றமாகிறது. மேலும் இந்திய தண்டனைச்சட்டம், 161 மற்றும் 165-ல் பிரிவு எஸ்.5 ஊழலற்ற அரசு நிர்வாகத்தையும் பொது ஊழியரின் பொது வாழ்வின் துய்மையையும் உறுதி செய்கிறது. எனவே, பரிசுப் பொருள்களாக வந்திருந்தாலும், அவற்றுக்குச் சரியான ஆதாரங்கள் இருந்தாலும்கூட , அவற்றை ஜெயலலிதா பெற்று தனது உடைமையாக்கிக்கொண்டது ஊழல் தடுப்புச் சட்டப்படி குற்றம்தான்!''

- என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

ஹைதராபாத் திராட்சைத் தோட்ட வருமானம் பற்றி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் அடுத்த இதழில்...

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 25, 2014 8:16 am

தமிழ்நேசன் அவர்களின் இப்பதிவிற்கு நன்றி .... நீதி அரசர்களுக்கு உதவியாக அமையுமே...

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 25, 2014 8:29 am

ஒருவர் பண பலத்தாலும் பதவி பலத்தாலும் ஆர்பறிப்போர்களுக்கு பணிந்து ஆதாயம் அடைய கைகட்டி சரண்டர்ஆகும் அரசுஅதிகாரிகள் இருப்பதால்தான்...அரசியல் வாதிகளும்,பணபலம், படை பலம்படைத்தவர்கள் இலகுவாக குற்றம்புரிய முடிகிறது.... எனவே அவர்கள் குற்றம்புரிய உடந்தையான அரசு அதிகாரிகளுக்கும்( பொய் பதிவு செய்யும் பதிவாளர், கைகட்டி ஊழலுக்கு அடிபணியும் ஐ.ஏ.எஸ்அதிகாரிகள், உயர அதிகாரம் படைத்த அதிகாரிகள் .......) தண்டனை அளிக்க வேண்டும். அப்போதுதான் இவ்வாறான குற்றங்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்....

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Oct 25, 2014 8:38 am

லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை  அதிகாரிகள் மக்களிடமிருந்து புகார்வந்தால் மட்டுமே...... பணம்கொடுத்து நாடகமாடி குற்றம்புரிபவரை பிடிப்பதுடன்.. இல்லாமல் அவர்கள்திடீர் திடீரென பல  அரசு  அலுவலகங்ஙளுக்கு சென்று  நேர்மையாக  பார்வை செய்ய நினைத்து  செயல்பட்டால்  குற்றம்செய்ய   நினைப்பவர்களும் பயப்படுவார்கள். கையூட்டு வருவதைபார்த்து பணிபுரிய மாட்டார்கள். மேலும் கையும் களவுமாக லஞ்ச ஊழலில் பிடிபட்டவர்களை உடனே பணியிலிருந்தும் நீக்கவேண்டும். அவர்களிடம்  விசாரணை வழக்குஎன நீட்டிப்பு செய்வதையும்   குறைக்கவேண்டும்...அப்போதுதான்  அனைவரும்   தன்கடமையை ஒழுங்காக தாமதமின்றி எதையும் எதிர்பார்த்து கோப்பை நிறுத்தாமல் செய்வார்கள்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 29, 2014 6:49 am

திராட்சை தோட்டத்து கணக்கு... வழக்கு!
குன்ஹா தீர்ப்பு விவரம் - 8

குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 P37a
ஜெயலலிதாவின் திராட்சைத் தோட்ட வருவாய் பற்றி நீதிபதி குன்ஹா தெரிவித்த கருத்துகள் இவை:

''1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை வாங்கிக் குவித்தார் என்பது அரசுத் தரப்புக் குற்றச்சாட்டு. அதற்கு ஆதாரமாகப் பல ஆவணங்களை அரசுத் தரப்பு, நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. ஜெயலலிதா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, தன்னிடம் இருக்கும் சொத்துகள் தனக்கு முறையான வருமானங்கள் மூலம் சேர்ந்தவை என்று பல ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த வகையில் அவர் ஆந்திர மாநிலம், ஹைதராபாத், ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ஜே.டி.மெட்லா திராட்சைத் தோட்டத்தில் இருந்து தனக்கு 52 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் வந்தது என்று குறிப்பிடுகிறார். இதை மறுக்கும் அரசுத் தரப்பு, திராட்சைத் தோட்டத்தில் இருந்து, ஜெயலலிதாவுக்கு 1991-96 காலகட்டத்தில் கிடைத்த மொத்த வருமானம் வெறும் 5 லட்சத்து 78 ஆயிரத்து 340 ரூபாய் மட்டுமே என்று ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளது. அரசுத் தரப்பின் இந்த வாதத்துக்கு வலுச்சேர்க்க அவர்கள் சார்பில் மூன்று சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு உள்ளனர்.

அதில் முதல் சாட்சி கே.ஆர்.லதா. இவர் ஆந்திர மாநிலம், ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடைய சாட்சியத்தின் மூலம் நீதிமன்றத்துக்கு தெரியவருவது, 1996-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லதாவும் மற்றொரு தோட்டக்கலைத் துறை அதிகாரி சஞ்சய் குமாரும் சேர்ந்து ஜெயலலிதாவின் திராட்சைத் தோட்டத்தில் ஆய்வு நடத்தி உள்ளனர் என்பது அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் சூப்பிரண்டென்ட் கதிரேசனும் இவர்களுடன் இருந்துள்ளார்.

அடுத்த அரசுத்தரப்பு சாட்சி கொண்டா ரெட்டி. இவர் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர். லதாவும் சஞ்சய் குமாரும் ஆய்வறிக்கை அளித்த பின் கொண்டாரெட்டி திராட்சைத் தோட்டத்துக்குச் சென்றுள்ளார். இவர் ஆய்வுசெய்த பின், லதா மற்றும் சஞ்சய் குமார் அளித்த ஆய்வறிக்கையை அடிப்படையாக வைத்தும் இவர் திராட்சைத் தோட்ட வருமானத்தை மதிப்பீடு செய்துள்ளார். திராட்சைச் செடிகளின் வயது, அவற்றின் வளர்ச்சி ஆகியவற்றை இவருடைய மதிப்பீட்டுக்கு அடிப்படையாக வைத்து வருமானத்தைக் கணக்கிட்டுள்ளார். இவருடைய மதிப்புப்படி அங்கிருந்த 'அனாப் இ சாகி’ திராட்சைச் செடிகளின் வயது 15. விதையற்ற திராட்சைகளின் வயது நான்கு. இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில், 1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதாவுக்கு 6 லட்சத்து ஆயிரத்து 380 ரூபாய் கிடைத்திருக்கும் என்று மதிப்பிட்டுள்ளார்.

இந்த சாட்சிகளை எல்லாம் தன்னுடைய வாதத்தில் கடுமையாக எதிர்க்கும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், 'அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், அடிப்படையிலேயே பல தவறுகள் உள்ளன. அதைத் தயாரித்த சாட்சிகள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசி உள்ளனர். தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் கொண்டா ரெட்டி, தன்னுடைய அறிக்கையை சொந்தக் கணிப்பில் செய்துள்ளார். அதுவும் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முதல் நாள்தான் தன்னுடைய அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

மேலும், ஜெயலலிதா தன்னுடைய திராட்சைத் தோட்டத்தில் இருந்து கிடைத்த வருமானம் பற்றி, 1987 முதல் 1993 வரை அவர் தாக்கல் செய்துள்ள வருமானவரிக் கணக்கில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த அடிப்படையில் 1992-93-ம் ஆண்டிலேயே ஜெயலலிதாவுக்கு திராட்சைத் தோட்டத்தின் மூலம் 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இதை வருமானவரித் துறை மதிப்பீட்டு அதிகாரியும் ஏற்றுக் கொண்டுள்ளார். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் ஜெயலலிதா தன்னுடைய வருமானவரிக் கணக்கில் திராட்சைத் தோட்ட வருமானத்தைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் அவருக்கு திராட்சைத் தோட்டத்தில் இருந்து கிடைத்த வருமானம் 52 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்பது தெளிவாகிறது’ என்று தன்னுடைய வாதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குன்ஹா தீர்ப்பு முழு விவரம் - Page 2 P37
இந்த இரண்டு வாதங்களையும் கவனமாகப் பரிசீலித்து இவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில் நாம் வருமானத்தைக் கணக்கிடலாம். ஜெயலலிதா தன்னுடைய திராட்சைத் தோட்ட வருமானமாக, 1987-88-ல் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய். 1988-89-ல் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். 1989-90-ல் ஏழு லட்சம். இந்த விகிதத்தில் அந்த வருமானத்தை ஆண்டுக்கு ஆண்டு உயர்த்தி 1992-93-ம் ஆண்டில் 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என்று காட்டி உள்ளார். இதை மதிப்பீட்டு அதிகாரி ஏற்றுக்கொண்டு சான்றிதழ் அளித்துள்ளார். ஆனால், வருமானவரித் துறை இந்த வருமானம் உண்மையானதாக இருக்க முடியாது என்று, ஜெயலலிதாவின் வருமானவரிக் கணக்கை 1998-ம் ஆண்டில் மறு ஆய்வுக்காகத் திறந்துள்ளது. அதற்கு வருமானவரித் துறை சொல்லும் காரணம், ஜெயலலிதா திராட்சைத் தோட்ட வருமானமாகக் காட்டியிருக்கும் மதிப்புக்கு அவர், எந்தவிதமான ஆவணங்களையும் காட்டவில்லை. வெறும் கணிப்பில் மட்டுமே தாக்கல் செய்துள்ளார். அதனால், அந்தக் கணக்கை மறு ஆய்வுக்கு உட்படுத்தினோம் என்று சொல்லி உள்ளார். ஏனென்றால், 1993-ல் ஜெயலலிதாவின் திராட்சைத் தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, ஒரு வருடத்துக்கு அதில் வருமானமாக 12 ஆயிரம் ரூபாய் மட்டுமே வந்துள்ளது. காய்கறிகள் மூலம் ரூ.5,000-ல் இருந்து 6,000 ரூபாய் வரை கிடைக்க வாய்ப்பிருந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும். இந்தக் கணக்கை ஹைதராபாத் வேளாண்மைக் கல்லூரியில் உள்ள ஆய்வுப் பிரிவில் சமர்ப்பித்து, திராட்சைகள் மூலம் எவ்வளவு வருமானம் வரும் என்று கணக்கிடப்பட்டு அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி பார்த்தால், அந்தத் தோட்டத்தில் இருந்து வருடத்துக்கு 60 ஆயிரம் ரூபாய் வருவாய்கூட தாண்டாது. அப்படியிருக்கும்போது, அவர் 1986-ம் ஆண்டிலேயே தனக்கு திராட்சைத் தோட்டத்தின் மூலம் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கிடைத்திருப்பதாகக் கூறியதை ஏற்க முடியவில்லை. அதனால், தாக்கல்செய்த வருமானவரிக் கணக்கை மீண்டும் மறு ஆய்வுக்கு உட்படுத்த, வருமானவரிச் சட்டம், 1961 பிரிவு 147-ன்படி அதில் வழி உள்ளது. அதன்படி ஜெயலலிதாவின் கணக்கு மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது என்று சொல்லி உள்ளார். வருமானவரித் துறையின் இந்த மறு ஆய்வை ஜெயலலிதா எதிர்த்து தீர்ப்பாயத்தில் முறையிட்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளார். தீர்ப்பாயம் வருமானவரித் துறையின் நடவடிக்கையை ரத்து செய்துவிட்டது. அத்துடன் ஜெயலலிதாவின் வருமானம் 1992-93-ம் ஆண்டிலேயே ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் என்றும் உறுதிப்படுத்தி உள்ளது.

ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார், இதைத்தான் முழுமையாக நம்பி தன்னுடைய வாதத்தை எடுத்து வைத்துள்ளார். ஆனால், கிரிமினல் வழக்கைப் பொறுத்தவரையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் மூலம்தான் தீர்ப்பளிக்கப்படுமே தவிர, வருமானவரித் துறை அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்க முடியாது.

எனவே, இங்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் திராட்சைத் தோட்டத்தின் வருமானத்தைக் கணக்கிடலாம்.

ஜெயலலிதாவின் திராட்சைத் தோட்டம் 15 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. அதில் 50 சதவிகிதம் முதல் 60 சதவிகிதம் மட்டும்தான் வேளாண்மை செய்யப்பட்டுள்ளது. மீதி உள்ள இடத்தில், பண்ணை வீடு, ஊழியர்களின் குடியிருப்பு, சாலைகள், பாதைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக திராட்சைத் தோட்டம் அமைந்துள்ள இடம் மிகவும் சிறிய பகுதி. மற்ற பகுதிகளில் தர்பூசணி, கத்தரிக்காய் போன்றவை பயிரிடப்பட்டு உள்ளன. இந்த நிலத்தில் இருந்து தனக்கு பல லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது என்று சொல்லும் ஜெயலலிதா, அதற்கு ஆதாரமாக எந்தவிதமான கணக்கு வழக்குகளையும் சமர்ப்பிக்கவில்லை. அப்படி ஒரு கணக்கு வழக்கை அவர் பராமரிக்கிறார் என்பதற்கே எந்த ஆதாரமும் நீதிமன்றத்தில் வைக்கப்படவில்லை. வருமானவரி தாக்கல்செய்த ஆதாரங்களை மட்டுமே வைக்கிறார். அதைத்தான் வருமானவரித் துறையே கேள்வி எழுப்பி இருக்கிறதே?

ஆவணங்களாக சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில், ஜெயலலிதாவின் பதினான்கரை ஏக்கர் திராட்சைத் தோட்டத்தில் 10 ஏக்கரில் மட்டுமே விவசாயம் நடைபெற்றது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் 10 ஏக்கரை மட்டும் நீதிமன்றம் எடுத்துக்கொள்கிறது. 1991-96 காலகட்டத்தில் திராட்சை மூலம் கிடைத்த வருமானம் ஓர் ஏக்கருக்கு 20,000 ரூபாய் என அப்போதிருந்த விலைமதிப்பின் மூலம் தெரியவருகிறது. அதையே நீதிமன்றம் எடுத்துக்கொள்கிறது. ஓர் ஏக்கருக்கு 20,000 என்றால், 10 ஏக்கருக்கு இரண்டு லட்சம் ரூபாய். ஆக, ஐந்து ஆண்டுகளுக்கு 10 லட்சம் ரூபாய் வருகிறது. இதையே ஐந்தாண்டுகளில் ஜெயலலிதாவுக்கு திராட்சைத் தோட்டம் மூலம் கிடைத்த வருமானமாக இந்த நீதிமன்றம் எடுத்துக்கொள்கிறது. ஜெயலலிதா தரப்பு சொன்ன 52 லட்ச ரூபாய் வருவாய் என்பதையும் அரசுத் தரப்பு சொன்ன 5 லட்சம் வருவாய் என்பதையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது.''

தீர்ப்பின் விவரம் தொடர்கிறது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Nov 23, 2014 7:58 pm

அன்பர் தமிழ் நேசன்........ மேலும் தீர்ப்பின் நிலவரம் ஏன் தொடரவில்லை ............

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக