புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மவுன போராளி Poll_c10மவுன போராளி Poll_m10மவுன போராளி Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
மவுன போராளி Poll_c10மவுன போராளி Poll_m10மவுன போராளி Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
மவுன போராளி Poll_c10மவுன போராளி Poll_m10மவுன போராளி Poll_c10 
2 Posts - 5%
prajai
மவுன போராளி Poll_c10மவுன போராளி Poll_m10மவுன போராளி Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மவுன போராளி Poll_c10மவுன போராளி Poll_m10மவுன போராளி Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
மவுன போராளி Poll_c10மவுன போராளி Poll_m10மவுன போராளி Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
மவுன போராளி Poll_c10மவுன போராளி Poll_m10மவுன போராளி Poll_c10 
1 Post - 2%
Balaurushya
மவுன போராளி Poll_c10மவுன போராளி Poll_m10மவுன போராளி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மவுன போராளி Poll_c10மவுன போராளி Poll_m10மவுன போராளி Poll_c10 
383 Posts - 49%
heezulia
மவுன போராளி Poll_c10மவுன போராளி Poll_m10மவுன போராளி Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
மவுன போராளி Poll_c10மவுன போராளி Poll_m10மவுன போராளி Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
மவுன போராளி Poll_c10மவுன போராளி Poll_m10மவுன போராளி Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மவுன போராளி Poll_c10மவுன போராளி Poll_m10மவுன போராளி Poll_c10 
26 Posts - 3%
prajai
மவுன போராளி Poll_c10மவுன போராளி Poll_m10மவுன போராளி Poll_c10 
7 Posts - 1%
sugumaran
மவுன போராளி Poll_c10மவுன போராளி Poll_m10மவுன போராளி Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மவுன போராளி Poll_c10மவுன போராளி Poll_m10மவுன போராளி Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மவுன போராளி Poll_c10மவுன போராளி Poll_m10மவுன போராளி Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மவுன போராளி Poll_c10மவுன போராளி Poll_m10மவுன போராளி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மவுன போராளி


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 1:34 pm

''எங்கிட்ட பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லப்பா.''
''நீ சொன்னா, உங்கம்மா கேப்பான்னுதான் உங்கிட்ட வந்தேன்.''
''நீங்க செஞ்ச எந்த நல்ல செயலச் சொல்லி, அம்மாகிட்ட பேச முடியும்...''
''அப்ப... இப்படியே நாங்க தனித் தனியாதான் வாழணுமா?'' குரல் உயர்ந்தது.

''எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்லேர்ந்து நீங்க ரெண்டு பேரும், ஒரே குடும்பத்துக்குள்ள இருந்தாலும், தனித்தனியா தானப்பா வாழ்ந்துகிட்டு இருந்தீங்க. உங்களுக்கும், அம்மாவுக்கும் முனீஸ்வரன் - முனீஸ்வரிங்கிற பேர் ஒற்றுமையத் தவிர, வேறெந்த ஒற்றுமையும் இருந்ததா எனக்கு நெனைவில்லப்பா,'' சொல்லிவிட்டு பிளாஸ்க்கில் வைத்திருந்த காபியை ஊற்றிக் கொடுத்தாள் வித்யா. அதை வாங்கி, டீப்பாயின் மீது வைத்தார்.

''காபிய எடுத்து குடிங்கப்பா,'' என்றாள்.
''எனக்கு ஒண்ணும் வேணாம்,'' என்று கோபமாக பேசியவர், தொடர்ந்து, ''வீட்டையும் விட்டுட்டு, உங்க ரெண்டு பேரையும், பேரப்பிள்ளைகளையும் விட்டுட்டு எங்கதான் போயிட்டா... உன்னோட அக்கா வீட்டுலயும் இல்ல; உன்னோட வீட்டுலயும் இல்ல. எங்க இருக்கான்னு சொல்லப் போறியா இல்லயா...'' என்றார்.
''அதை நீங்க தான் கண்டுபிடிக்கணும்.''

''அப்ப உனக்குத் தெரியும்; ஆனா, சொல்ல மாட்டே... அப்படித்தான...''
''ஆமா...''குரலை உயர்த்தி பேசலானாள் வித்யா. அவளின் பேச்சொலி அடுத்த வீடு வரை கேட்டிருக்கும். ஆனால், அதைப் பற்றியெல்லாம், அவள் கவலைப்படுவதாக தெரியவில்லை. மனதுக்குள் தேக்கி வைத்திருந்த எண்ணங்கள் எல்லாவற்றையும் கொட்டிவிட தீர்மானித்து விட்டாள். அதற்கான சந்தர்ப்பத்திற்காக தானே இத்தனை ஆண்டுகள் காத்திருந்தாள்.

''பொண்ணாப் பொறந்தவ ஒண்ணு, புருஷனோட வாழணும்; இல்லாட்டா மனுசனோட வாழணும்.
'ஒரு நாள் அம்மா, மிக்சியில சட்னி அரைச்சுக்கிட்டு இருந்தப்ப, ஜாரோட மூடி எதிர்பாராம கழண்டு விழ, மூடி மேல வச்சிருந்த அம்மாவோட விரல் ஜாருக்குள்ள போயி, பிளேடுக்குள்ள சிக்கி, ரத்தம் கொட்ட ஆரம்பிச்சிருச்சு. ஜார் முழுக்க ஒரே ரத்தம்... வலி தாங்க முடியாம அம்மா கதறி அழுதுகிட்டு இருக்காங்க.

நீங்க எதையும் கண்டுக்காம, 'டிவி' பாத்துட்டுதானேப்பா இருந்தீங்க. நானும், அக்காவும் டியூஷன் முடிஞ்சு, வீட்டுக்குள்ள நொழஞ்சப்ப அம்மாவோட அழுகைச் சத்தம் கேட்டு எங்க ரெண்டு பேருக்கும், இதயமே நின்னு போச்சு. அக்கா உங்க மேல கோவப்பட்டு, 'ஏம்ப்பா அம்மாவ ஆசுபத்திரிக்கு கூட்டிட்டுப் போகல'ன்னுன்னு கேட்டதுக்கு, நீங்க என்ன பதில் சொன்னீங்கன்னு ஞாபகமிருக்கா?

''மூடிய இறுக்கிப் புடுச்சு அரைக்க வேண்டியதுதான, கவனக்குறைவா அரைச்சா இப்படித்தான் நடக்கும்; இவ கவனமெல்லாம் யார் மேல இருந்துச்சோ'ன்னு சொல்லிட்டு, ஓட்டலுக்கு போய், மூக்குமுட்ட சாப்பிட்டுட்டு வந்தீங்களேப்பா.
''மனிதாபிமனமே இல்லாத உங்கள மனுசன்னு சொல்லணுமா... பொறுப்பில்லாத உங்கள புருஷன்னு சொல்லுணுமா...

''வயித்து வலியால அம்மா கஷ்டப்பட்டுட்டு இருந்தப்ப, ஆறுதலா ரெண்டு வார்த்தை பேசியிருப்பீங்களா... வலி, வேதனையால துடிச்சிகிட்டு இருந்தப்ப கூட இரக்கமே இல்லாம, 'வயிறு வலிக்கிற மாதிரி நல்லா நடிக்கிறே... பாசாங்கு செய்தா வீடு உருப்படுமா... ரெஸ்ட் எடுக்கணும்ன்னு நினைச்சா, உங்காத்தா வீட்டுக்குப் போய், சீமான் மக மாதிரி நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு, வரணும்ன்னு நெனச்சா வா; இல்லாட்டி அந்த பிச்சகார வீட்லேயே காலம் முழுசும் இருந்துக்கோ. இந்த ரெண்டு பொட்டப் புள்ளங்களையும் காப்பாத்த, இன்னொரு பொண்டாட்டியக் கட்டிக்கிட்டு சந்தோஷமா இருப்பேன்'னீங்க.

''உங்க வார்த்தைகளை கேட்டு, அம்மா மனசுக்குள்ள எப்படி புழுவா புழுங்கி துடிச்சுருப்பாங்க; எங்களுக்காகதானேப்பா பொறுமையா வாழ்ந்தாங்க.

''இதையெல்லாம் பாத்தபிறகும், உங்களுக்காக நான் எப்படிப்பா அம்மாட்ட பேச முடியும்? நல்ல வேளை என்னோட புருஷன் உங்கள மாதிரியில்ல. குழந்தையையும், என்னையும் நல்லா பாத்துக்கறாரு,'' என்றவள், ''சரி; உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்; சாப்பிட்டு போங்க,'' என சமையறைக்குள் நுழைந்தவள், சாப்பாட்டுத் தட்டுடன் ஹாலுக்கு வந்த போது, அப்பா இல்லை.

'அப்பாவின் இடதுபக்க கன்னம் வீங்கியிருந்ததே...அதப்பத்தி கேட்குறதுக்குள்ள கிளம்பி போய்ட்டாரே... ஒரு வேளை பல்வலியாக இருந்தாலும், இருக்கும்... என, தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

இளைய மகளின் வீட்டை விட்டு வெளியே வந்த முனீஸ்வரன், 'இதுவரைக்கும், என்னைய எதிர்த்து யாருமே பேசினதில்ல; என்னோட சம்பாத்தியத்தில தின்னு வளர்ந்த நாயி, எப்படியெல்லாம் பேசிருச்சு; என்னைய பதில் பேசவே விடலையே...' என்று பொருமிக் கொண்டே நடந்தவர், 'ரெண்டு வாரமா இந்த கன்னம் வேறு வீங்கி, வலி உயிர் போகிறது. போன வாரம் டாக்டரப் பார்த்தோமே... இன்னக்கு வரச் சொல்லி இருந்தாரு. என்னன்னு அதையும் கேட்டுட்டு வீட்டுக்கு போவோம்...' என நினைத்து, மருத்துவமனை நோக்கி நடந்தார்.
''டாக்டர்... கன்னம் ரொம்ப வலிக்குது; என்னால வலியைத் தாங்க முடியல,''என்றார்.

''வலி குறையுறதுக்கு, ஊசி போட்டுங்கோங்க. அப்படியே பக்கத்து ரூம்ல போயி, போன வாரம் நீங்க எடுத்துகிட்ட ஸ்கேனிங் ரிப்போர்ட்டை வாங்கிட்டு வாங்க,'' என்றார் டாக்டர்.
வாங்கி வந்து டாக்டரிடம் காட்டினார் முனீஸ்வரன்.
''உங்க கூட யார் வந்திருக்காங்க?'' ரிப்போர்ட்டை மேலும், கீழுமாக பார்த்தவாரே கேட்டார் டாக்டர்.
''நான் மட்டும்தான் வந்திருக்கேன்; எதுக்கு கேக்குறீங்க டாக்டர்?''

''இது சாதாரண வீக்கமில்ல; 90 சதவீதம், புற்றுநோய் மாதிரிதான் தெரியுது,''என்றார்.
'' புற்றுநோயா... என்ன டாக்டர் சொல்றீங்க?'' அதிர்ச்சியானார் முனீஸ்வரன்.
''இப்படி ஒரு நோய், எங்க பரம்பரைக்கே வந்ததில்லையே டாக்டர்... நான் பீடி, சிகரெட் கூட குடிக்கறதில்லை. அப்புறம் எப்படி எனக்கு இந்த நோய்,'' என்று கண்கலங்க கேட்டார்.
''பீடி சிகரெட் மட்டும் காரணமாக இருக்க முடியாது,'' என்ற டாக்டர் விளக்கத் துவங்கினார்...

''புளித்துப் போன உணவு வகைகள், கெமிக்கல் கலப்புள்ள பொருட்கள், ஈ மொய்த்த தின்பண்டங்கள், பாக்கெட்டில் அடைத்திருக்கும் நொறுக்குத் தீனிகள் இவற்றிலெல்லாம் கூட நோய் வர வாய்ப்பிருக்கு. இனிமே, நீங்க கவனமாக இருக்கணும், அடிக்கடி வந்து செக்கப் செஞ்சுக்கணும். மாத்திரை எழுதித் தாரேன்; காலை, மாலை என ரெண்டு வேளையும், தவறாம சாப்பிடுங்க... கவுன்டர்ல்ல பில்ல கட்டிருங்க,'' என்று சொல்லி, அடுத்த நோயாளி உள்ளே வருவதற்காக, மணியை அழுத்தினார்.

மெடிக்கல் ஸ்டோர் சென்று மாத்திரைகளை வாங்கியவர், நேராக வீடு வந்து சேர்ந்தார். வருகிற வழி முழுவதும், 'எனக்கு புற்று நோயா... ரொம்ப நாளைக்கு உசுரோட இருக்க மாட்டேனோ...' என்ற மனக் கலக்கத்துடனே கதவைத் திறந்தார்.

கொரியர் வந்ததாக, பக்கத்து வீட்டுக்காரர் வந்து, ஒரு கவரைக் கொடுத்தார். சோபாவில் அமர்ந்தவாறே, கவரைப் பிரித்தார். பெங்களூரிலிருந்து மூத்தமகள் சித்ரா எழுதியிருந்தாள்.

தொடரும்................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 1:35 pm

''எங்க கூட தங்குறதுல உங்களுக்கு என்னம்மா கஷ்டம்?''
''அது சரிபடாதுடி.''
''ஏம்மா?''

''மருமகன் வீட்டுல உக்காந்து திங்குறான்னு ஊரு உலகத்துல நாலு பேரு, நாலு விதமா பேச, நாமளே எடம் கொடுத்துறக் கூடாது. உங்கள பாக்கணும் போல இருந்துச்சுன்னா வந்து பாத்துட்டுப் போறதோட நிறுத்திக்கணும். நிரந்தரமா தங்குற வேலையெல்லாம் வச்சுக்கக்கூடாது.''
''அப்பா கூட இருந்தவரைக்கும் குஞ்சுகளைக் காப்பாத்துற கோழி மாதிரி, எங்கள கண்ணுக்குள்ள வச்சு காப்பாத்துனீங்க. அவரை பிரிஞ்சு வந்த இந்த நேரத்துல, நாங்க உங்கள காப்பாத்த மாட்டோமாம்மா,'' என்றாள் சித்ரா.

''இன்னக்கி நேத்தா, நான் அவரோட மல்லுக்கட்டிக்கிட்டு இருக்கேன். வாக்கப்பட்டு வந்த நாள்ல இருந்து ரெண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தந்தான். உங்கள வளர்த்து ஆளாக்கணுங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் அடி, உதை வாங்கி அவரோட குடும்பம் நடத்தினேன். இப்ப என் உடம்புல தெம்பில்ல.
'கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளுனாரு.

எத்தனை நாளைக்குத்தான் நானும் பொறுமையாய் போறது. அதுதான், இந்தத் தடவ வீட்டை விட்டு வெளியேறிட்டேன். நான் எப்படி சம்பாதிச்சு சாப்பிடுவேன்னு நெனச்சுதானே என்னை வெளியே தள்ளி, கதவ அடச்சாரு... அவரு கண்ணு முன்னாலேயே, நான் சம்பாதிச்சு சாப்பிடணும். படிச்சுருந்தா எங்கயாவது ஆபீஸ்ல வேல பாக்கலாம்; நான்தான் படிக்கலேயே... அந்த எளக்காரம் அவருக்கு.

'முதியோர் காப்பகம் ஒண்ணுல சமையல் வேலைக்கு ஆள் தேவைன்னு கேள்விப்பட்டேன். அங்க போயிட்டா சாப்பாட்டுக்கு சாப்பாடு, பாதுகாப்புன்னு நிம்மதியா காலத்த கழிச்சுருவேன்,'' என்றாள் அம்மா.
''இத்தன வயசுக்கப்புறமும் கஷ்டப் படணுமாம்மா... உன் பொண்ணுங்க நாங்க நல்லாத்தான இருக்கோம். நாங்க உங்க செலவுக்கு பணம் தர மாட்டோமா...''

''அதெல்லாம் வேண்டாம் சித்ரா; உங்களுக்கு என்ன பாக்கணும் போல தோணுச்சுன்னா ரெண்டு பேரும் எப்பனாலும் வாங்க. அப்ப நான் கிளம்பறேன்; குழந்தைய பத்திரமா பாத்துக்கோ,''என்றாள்.
சித்ராவின் பார்வைக்கு, அவளது தாய் மவுனப் போராளியாக தெரிந்தாள். தன் கோபத்தை எல்லாம் ஒன்று திரட்டி, அப்பாவுக்கு கடிதம் எழுதத் துவங்கினாள்.

அன்புள்ள அப்பாவுக்கு,

அம்மா என்னுடைய வீட்டிற்கு வந்து ரெண்டு நாள் தங்கிட்டுப் போனாங்க. அதன்பின், அவுங்க உங்க வீட்டுக்கு வந்திருக்க மாட்டாங்களே... அம்மா எங்க போனாங்கன்னு தேடியிருப்பீங்க. ஆனா, தெரிஞ்சிருக்காது.

இனிமே, நீங்க சாம்பாதிச்ச காச வச்சு, நீங்க மட்டுமே செலவழிச்சுக்கலாம். உலகத்திலேயே நீங்க ஒருத்தர்தான் உழைக்கிற மாதிரியும், அந்தக் காசில எங்களக் காப்பாத்தினதை, ஒரு தியாகம் மாதிரி நெனச்சீங்க. அடிக்கடி, ஒரு டயலாக் சொல்வீங்களேப்பா... ஞாபகம் இருக்கா? நான் ஒருத்தன் உழைச்சு, இந்த வீட்ல மூணு நாய் சாப்பிடுதுன்னு.

என்னிக்காவது ஒரு நாள், உங்களுக்கு பதில் சொல்லணும்ன்னு நெனப்பேன். அந்த வீட்ல இருந்தவரைக்கும் உங்களப்பாத்தா பயம். ஏன்னு கேளுங்கப்பா... கடவுள் உங்களுக்கு நாக்கில விஷம் தடவி வச்சுருக்காரு; நான் ஏதாவது சொல்லப்போக, நீங்க அத தப்பர்த்தமா எடுத்துகிட்டு, எங்க மூணு பேரையுமே கெட்ட வார்த்தையால சவுக்கால அடிச்சமாதிரி பேசுவீங்க; அதுதான் பேசல. உங்க டயலாக்கிற்கு இன்னிக்கு பதில் சொல்றேன்ப்பா...
யார் தான் சம்பாதிக்கல?

கிராமத்துல செத்துப் போனவனை, பாடையில வச்சு துாக்கிட்டு போயி சுடுகாட்டுல, அவனுக்கு வெட்டின குழிக்குப் பக்கத்தில எறக்கி வச்சதுக்கப்புறம், துண்டை விரிச்சு வச்சுருவாங்களாம். அங்க கூடியிருக்கிறவங்க எல்லாரும் அவரவர் வசதிக்கேத்தபடி காசு, பணத்தைப் போடுவாங்களாம். அதுக்குப் பேரு, 'போடு பணம்' அல்லது 'கட்டப்பணம்'ன்னு பேரு. அந்தப் பணத்தை எடுத்து, சொந்தக்காரங்ககிட்ட குடுத்திடுவாங்க. செத்த பொணம் கூட, தன் குடும்பத்துக்கு சம்பாதிச்சு குடுக்குது.

ஒரு தடவ உங்கள எதிர்த்துப் பேச தொண்டை வரைக்கும் வார்த்தை வந்திருச்சு. அம்மா தான் என்னைய தடுத்து, 'நீ நியாயத்த பேசப் போக, அவரு உன்னைய வீட்டுக்கு வெளியில நிற்க வச்சு, மகள்ன்னு கூட பாக்காம கெட்ட வார்த்தையால திட்டுவாரு. அத உன்னால தாங்க முடியாது; தாலி கட்டின பாவத்துக்காக, இந்த மனுஷன்கிட்ட நான் படுறபாடு பத்தாதா... நீங்க வேற படணுமா... 'அரசு அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்'ன்னு ஒரு பழமொழி இருக்கு. எல்லாத்துக்கும் சேத்துவச்சு, ஒருநாள் அனுபவிப்பாரு'ன்னு சொன்னாங்க.

அம்மாவுக்கு கர்ப்பப்பை ஆபரேஷன் செய்து நடக்கக் கூட முடியாம இருந்தப்ப, உங்க வீட்டு உறவுச் ஜனங்கள் அம்மாவைப் பாக்க வீட்டுக்கு வந்திருந்த போது, 'வந்தவங்களுக்கு சோறாக்கிப் போட மாட்டியா'ன்னு அதிகாரத் தோரணையில பேச ஆரம்பிச்சீங்க.
'என்னால நடக்கக் கூட முடியலங்க; ஓட்டல்ல இருந்து அவங்களுக்கு சாப்பாடு வாங்கிட்டு வந்துருங்க'ன்னு அம்மா சொன்னதுக்கு, உங்களுக்கு வந்துச்சே கோபம்...

'மருத்துவமனையில் தான் நாலஞ்சுநாள் ரெஸ்ட் எடுத்தியே... அது பத்தாதா... தண்ணியா பணத்தை செலவழிச்சேனே... உன்னை பாக்க வந்ததுக்கு அவங்க பட்னியா போகணுமா... நீ செத்துத் தொலைஞ்சிருந்தாலாவது மூணா நாளு பால ஊத்திட்டு, நான் பாட்டுக்கு நிம்மதியா இருந்திருப்பேன்'னு சொல்லிட்டு, வந்தவங்கள கூட்டிட்டு ஓட்டலுக்கு போனீங்க.

இப்படி, ஒவ்வொரு நாளும் அம்மாவுக்கு எவ்வளவு டார்ச்சர் குடுக்க முடியுமோ, அவ்வளவு டார்ச்சர் குடுத்து, அவங்க மனச நோகடிச்சுருக்கீங்க. உங்கள எதுத்து பேச முடியாம, ஒரு நாள் தற்கொலை செஞ்சுக்க முயற்சி எடுத்தாங்களாம். ரெண்டு பொண்ணுங்க மொகமும் கண்ணு முன்னால வந்து நின்னுச்சாம். 'நாம செத்துப் போயிட்டா, இவன் பாட்டுக்கு இன்னொரு பொண்டாட்டிய கட்டிட்டு சந்தோஷமா இருக்க, எம்பொண்ணுங்கதான் நடுத்தெருவுல நிக்கணும்'ன்னு நினைச்சு தற்கொலை முடிவ கைவிட்டாங்களாம். இது, அம்மாவே ஒரு முறை என்கிட்ட சொன்னாங்க.

இன்னொரு சமயம், அவங்கள அடிச்சு, வெளியே தள்ளி கதவை அடச்சீங்க. மழையிலே நனைஞ்சிட்டு வராண்டாவிலேயே படுத்து கிடந்தாங்களே... யாருக்காக? எங்களுக்காகத்தான்.

உங்ககூட அம்மா இதுவரை வாழ்ந்தது போதும்ப்பா. ஆண்டவன் உங்களுக்கு, இதுவரை எந்த நோயையும் தரல; தந்திருந்தா, அதோட வலியும், வேதனையும் உங்களுக்கு புரிஞ்சிருக்குமோ என்னமோ!
கடைசியா ஒண்ணே ஒண்ணுமட்டும் சொல்லிட்டு கடிதத்தை முடிச்சுக்கறேன். இனிமே, அம்மா திரும்பி வருவாங்கன்னு கனவுல கூட நினைக்காதீங்க.
இப்படிக்கு,
மவுனப் போராளியின் மகள் சித்ரா.

கடிதத்தை, இருமுறை வாசித்துப் பார்த்தார் முனிஸ்வரன்.
'மவுனப்போராளியின் மகள் சித்ரா' என்ற வரியை மட்டும் ஒருமுறைக்கு பலமுறை உச்சரித்துப் பார்த்தார்; மனம் கனத்தது.

'வேணாம்ன்னு நெனச்ச காலத்துல எல்லாம் காலச்சுத்தியே கிடந்தா. இப்போ அவ தேவைன்னு நினைக்கறப்ப பிரிஞ்சுட்டாளே... இதைத்தான் விதின்னு சொல்லுவாங்களோ... எனக்கு, இப்படி ஒரு நோய் வரும்ன்னு கனவா கண்டேன்; அவள அடிச்சி துரத்தியிருக்கக் கூடாதோ...

ஒரு வேளை மனசால சாபம் கொடுத்துட்டாளோ... பத்தினி சாபம் பலிச்சிருச்சோ?'

தனக்குத்தானே புலம்பி, தவித்தார் முனீஸ்வரன்.

-ரா.கலாராணி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 2:27 pm

இந்த மாதிரி ஆளுங்களுக்கு இப்படித்தான் முடிவு வரணும்...............ஆனால் நிறைய பேர் தப்பிச்சுடுவாங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Oct 08, 2014 3:19 pm

வேணும், நல்லா வேணும்.  மண்டையில் அடி கெட்டு நொந்த பிறகு தான் தேடுவார்கள்.
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



மவுன போராளி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமவுன போராளி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மவுன போராளி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 08, 2014 5:38 pm

மவுன போராளி 3838410834 மவுன போராளி 3838410834


வேணாம்ன்னு நெனச்ச காலத்துல எல்லாம் காலச்சுத்தியே கிடந்தா. இப்போ அவ தேவைன்னு நினைக்கறப்ப பிரிஞ்சுட்டாளே... இதைத்தான் விதின்னு சொல்லுவாங்களோ... எனக்கு, இப்படி ஒரு நோய் வரும்ன்னு கனவா கண்டேன்; அவள அடிச்சி துரத்தியிருக்கக் கூடாதோ... wrote:




நோய் வந்தும் புத்தி வரலயே. சுயநலமாத் தானே யோசிக்கிறான்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 5:43 pm

விமந்தனி wrote:வேணும், நல்லா வேணும்.  மண்டையில் அடி கெட்டு நொந்த பிறகு தான் தேடுவார்கள்.

ம்....ஆமாம் விமந்தினி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 5:44 pm

ஜாஹீதாபானு wrote:


மவுன போராளி 3838410834 மவுன போராளி 3838410834





நோய் வந்தும் புத்தி வரலயே. சுயநலமாத் தானே யோசிக்கிறான்

ஆமாம் பானு................ எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 08, 2014 6:50 pm

தவறு செய்தவர்கள் அனைவருக்கும் தண்டணை கிடைக்கத்தான் செய்கிறது..ஆனால் அவர்கள் உணர்வதுதான் இல்லை சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 08, 2014 7:28 pm

தமிழ்நேசன்1981 wrote:தவறு செய்தவர்கள் அனைவருக்கும் தண்டணை கிடைக்கத்தான் செய்கிறது..ஆனால் அவர்கள் உணர்வதுதான் இல்லை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1093851

ஆமாம் நேசன், ஆனால் தவறே செய்யாமல் முதலில் கஷ்டப்படுத்தப்டுகிரார்களே அவர்களுக்கு ஏன் அந்த நிலை? சொல்லமுடியுமா ?....................ஏன் என்றால்...நான் நிறைய முறை அப்படி மாட்டி இருக்கேன் .............. அழுகை அழுகை அழுகை அது தான் தலை எழுத்தா?????????????சோகம்

அது எவ்வளவு நிஜமோ இதுவும் அவ்வளவு நிஜம் தானே நேசன் ? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Oct 08, 2014 7:42 pm

krishnaamma wrote:
தமிழ்நேசன்1981 wrote:தவறு செய்தவர்கள் அனைவருக்கும் தண்டணை கிடைக்கத்தான் செய்கிறது..ஆனால் அவர்கள் உணர்வதுதான் இல்லை சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1093851

ஆமாம் நேசன், ஆனால் தவறே செய்யாமல் முதலில் கஷ்டப்படுத்தப்டுகிரார்களே அவர்களுக்கு ஏன் அந்த நிலை? சொல்லமுடியுமா ?....................ஏன் என்றால்...நான் நிறைய முறை அப்படி மாட்டி இருக்கேன் .............. அழுகை அழுகை அழுகை அது தான் தலை எழுத்தா?????????????சோகம்

அது எவ்வளவு நிஜமோ இதுவும் அவ்வளவு நிஜம் தானே நேசன் ? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1093861

ஆமாம்..நல்லவர்களுத்தான் சோதனை..

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா...கர்ணா...
வருவதை எதிர்கொள்ளடா..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக