புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10 
48 Posts - 51%
heezulia
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - அக்டோபர்

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Oct 01, 2014 1:58 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று - அக்டோபர்'1

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 TQat2DEsR8O2kyO4OCPd+October-1

கிமு 331 - மகா அலெக்சாண்டர் பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ் மன்னனை போரில் வென்றான்.

959 - முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.

1787 - "சுவோரொவ்" தலைமையில் ரஷ்யர்கள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தனர்.

1788 - நியூவென் ஹியூ வியட்நாமின் மன்னராகத் தன்னை அறிவித்தார்.

1795 - பிரான்ஸ் பெல்ஜியத்தைப் பிடித்தது.

1799 - புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டான்.

1800 - ஸ்பெயின் லூசியானாவை பிரான்சிடம் தந்தது.

1814 - நெப்போலியனின் தோல்வியை அடுத்து ஐரோப்பாவின் புதிய அரசியல் வரைபடத்தை வரைவதற்காக வியென்னா காங்கிரஸ் கூடியது.

1827 - இவான் பஸ்க்கேவிச் தலைமையில் ரஷ்ய இராணுவம் ஆர்மேனியாவின் தலைநகர் யெரெவானைப் பிடித்தது.

1843 - நியூஸ் ஒஃப் தெ வேர்ல்ட் பத்திரிகை லண்டனில் வெளியிட ஆரம்பிக்கப்பட்டது.

1854 - இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.

1869 - உலகின் முதல் தபால் அட்டை ஆஸ்திரியாவில் வெளியிடப்பட்டது.

1880 - இந்தியாவுடனான காசுக்கட்டளை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1880 - முதலாவது மின் விளக்கு தொழிற்சாலையை தொமஸ் எடிசன் ஆரம்பித்தார்.

1887 - பிரித்தானியரினால் பலூசிஸ்தான் கைப்பற்றப்பட்டது.

1892 - இலங்கையில் இந்திய இரண்டு அணா நாணயம் செல்லுபடியற்றதாக்கப்பட்டது. பதிலாக வெள்ளி நாணயம் அறிமுகமானது.

1895 - பிரெஞ்சுப் படைகள் மடகஸ்காரின் அண்டனனாரிவோ நகரைக் கைப்பற்றினர்.

1898 - ரஷ்யாவின் முக்கிய நகரங்களிலிருந்து யூதர்கள் இரண்டாம் நிக்கலாஸ் மன்னனால் வெளியேற்றப்பட்டனர்.

1910 - லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ் கட்டடம் பெரும் குண்டுவெடிப்பினால் தகர்க்கப்பட்டது. இதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

1918 - முதலாம் உலகப் போர்: அரபுப் படைகள் சிரியாவின் டமாஸ்கஸ் நகரைக் கைப்பற்றினர்.

1931 - ஜோர்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது.

1943 - இரண்டாம் உலகப் போர்: நேப்பில்ஸ் கூட்டுப் படைகளிடம் வீழ்ந்தது.

1949 - மா சே துங்கினால் மக்கள் சீனக் குடியரசு அறிவிக்கப்பட்டது.

1953 - ஆந்திரா மாநிலம் உருவாக்கப்பட்டது.

1960 - சைப்பிரஸ், மற்றும் நைஜீரியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றன.

1961 - கிழக்கு மற்றும் மேற்கு கமரூன் ஒன்றுபட்டு கமரூன் சமஷ்டிக் குடியரசு ஆகியது.

1965 - இந்தோனேசியாவில் நிகழ்ந்த கம்யூனிசப் புரட்சி ஜெனரல் சுகார்ட்டோவினால் முறியடிக்கப்பட்டது.

1969 - கொன்கோர்ட் விமானம் முதற்தடவையாக ஒலியின் வேகத்தை மீறியது.

1971 - வால்ட் டிஸ்னி உலகம் புளோரிடாவில் அமைக்கப்பட்டது.

1975 - சிஷெல்ஸ் சுயாட்சியைப் பெற்றது. எலீஸ் தீவுகள் கில்பேர்ட் தீவுகளிலிருந்து பிரிக்கப்பட்டு துவாலு என்ற பெயரைப் பெற்றது.

1977 - பிரேசில் கால்பந்தாட்ட வீரர் பெலே இளைப்பாறினார்.

1978 - துவாலு ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1979 - ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயை பனாமாவுக்கு மீள் அளித்தது.

1982 - சொனி நிறுவனம் முதலாவது குறுந்தட்டு ஒலிபரப்பு சாதனத்தை (CDP-101) வெளியிட்டது.

1992 - விடுதலைப் புலிகள் கட்டைக்காடு இராணுவக் காவலரணைத் தாக்கி பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினர்.

1994 - பலாவு ஐநாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

2001 - ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையைத் தகர்க்க தற்கொலைப் படையினர் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

2005 - பாலியில் நடந்த குண்டுவெடிப்பில் 23 பேர் கொல்லப்பட்டனர்.

2006 - பாண்டிச்சேரி மாநிலத்தின் பெயர் புதுச்சேரி என மாற்றம் பெற்றது.

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 05, 2014 6:42 pm

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Oct 05, 2014 6:44 pm

krishnaamma wrote://1799 - ஆங்கிலேயரினால் பிடிக்கப்பட்ட கட்டபொம்மன் கயத்தாறு கொண்டுவரப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான்.//

எத்தனை நூற்றண்டுகள்  கழித்தும் நம் மனதில் வாழ்கிறார் அவர் புன்னகை

கட்டபொம்மனை பற்றி இன்னொரு விஷயமும் இருக்கு கிருஷ்ணாம்மா. இதையும் கொஞ்சம் படித்து பாருங்கள். என்னால் நம்பமுடியவில்லை. எந்த அளவிற்கு உண்மை என்பதும் தெரியவில்லை.

கெட்டி பொம்மு நாயக்கன் பாஞ்சால குறிச்சியில் ஒரு பாளையகாரனாக ஆட்சி செய்து மக்களோடு சேர்ந்து இந்திய விடுதலை போராட்டத்தை முதலில் துவங்கினான் என்றும் , அவன் வெள்ளையருக்கு எதிராக போர் புரிந்தான் என்றும் இன்று வரை பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது . வந்தேறிகளின் வரலாற்றை மட்டுமே படித்து வந்த நாம், நமது வரலாற்றை இழந்து நிற்பது ஏதோ எதேச்சையாக நிகழ்ந்தது அல்ல . நமது உரிமைகளையும் உடமைகளையும் இழந்தது இருட்டடிப்பு செய்யப்பட்டது திட்டமிட்ட செயல் ஆகும்.

இனி கெட்டி பொம்மனின் வீர தீர செயல்களை நம் முன்னோர்கள் பதிவு செய்துள்ளதை கொஞ்சம் காலத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் உண்மை விளங்கும் .

புதிய வந்தேறிகளான ஆற்காட்டு நவாபிடமிருந்து வரி வசூல் செய்யும் உரிமை பெற்ற வெள்ளைகரனுக்கும் பழைய வடுக வந்தேறியான கெட்டி பொம்மு நாயக்கனுக்கும் இடையே தென் தமிழ் நாட்டு பகுதியில் வரி வசூல் கொள்ளை சம்பந்தமாக நடந்த பூசல் எப்படி சுதந்திரபோர் அல்லது போராட்டமாகும் !

வீரபாண்டிய கட்டபொம்மன் திரை படத்தை பார்த்துவிட்டு அந்த மாயை அகலாதொருக்கு இதெல்லாம் அதிர்ச்சி செய்தியே !!

முதலில் கெட்டி பொம்மு நாயக்கனை கட்டபொம்மன் என அடையாலபடுதுவதே
ஒரு வரலாற்று பிழையாகும் . மூவேந்தர் மரபின் மூத்த குடியான பாண்டிய வம்சதாருக்கும் வடுக வந்தேறியான தெலுங்கு கெட்டி பொம்முவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

வடுக வந்தேறி ஆட்சியாளர்கள் தமிழகத்தை கைப்பற்றி ஆளத் தளைப்பட்ட பொது தங்கள் வடுக அடையாளத்தை மறைக்கும் வண்ணம் தங்கள் பெயரோடு சோழர் , பாண்டியர், என்ற அடை மொழிகளை பயன்படுத்தினர் , இதன் காரணமாக சில குழப்பங்கள் ஏற்பட்டன . இந்த உண்மையை தமிழர்கள் விளங்கி கொள்ளவேண்டும்.

இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் மொழி வழி தேசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டுவிடும் சூழலிலேயே வீட்டிலும், இரண்டு பிற மொழியினர் தனியே பேசிக்கொள்ளும் போதும் அவரவர் தாய் மொழியிலேயே ''மாட்லாடி கொள்ளும் போது'' ஒரு ஆட்சியாளனாக இருந்த தமிழ் மண்ணை ஆண்ட கெட்டி பொம்மு நாயக்கன் திரை படத்தில் வருவது போல் தமிழில் வீர வசனம் பேசியிருப்பானா ?
ஜாக்சன் துரையிடம் ''டப்பு லேது'' என்று தான் மாட்டிலாடியிருப்பார். என்பதை பொய்யுரை பரப்புவோர் கவனிக்க வேண்டும் .

மேலும் இந்த கெட்டி பொம்முவின் முன்னோரான ஜெகவீர கெட்டி பொம்மு பாளையக்காரன் ஆனதே குறுக்கு வழியில்தான் . முதலில் கிழக்கிந்திய கம்பெனியோடு சேர்ந்துகொண்டு வரி வசூல் செய்த கெட்டி பொம்மு பின்னாட்களில் கிழக்கிந்திய கம்பெனியோடு ஏற்பட்ட முரண் பாடு காரணமாக கம்பெனிக்கு திரை செலுத்தி வந்த எட்டையபுரம் பாளையத்தின் மீது அடிக்கடி சண்டையிட்டு பொது மக்களை சூறையாடினான் . அவன் தன் குடிமக்களிடமே அதிக வரிகளை வற்புறுத்திப் பெற்றான், கம்பெனிக்கு துணிகள் நெய்து வழங்கி வந்த நெசவாளர்களை துன்புறுத்தி அவர்களிடமிருந்து பணம் பறித்தான், அவர்களை சாட்டையால் அடித்தும், கை கால்களை கட்டிவைத்து அட்டை பூசிகளை கடிக்க விட்டும் கொடுமை செய்தான் . கெட்டி பொம்முவின் கையாட்கள் நெசவாளர்களின் வீடுகளை கொள்ளையிட்டு அவர்களின் பெண்களின் வாயில் மண்ணை கொட்டியும், நெசவாளர்களின் கண்களில் கள்ளி பாலை ஊற்றியும் கொடுமை படுத்தினர் . பலருடைய பற்கள் அடித்து நொறுக்க பட்டதுடன் செருப்படியும், சாட்டையடியும் வழங்கப்பட்டது.

ஆனால் கெட்டி பொம்மு ஆங்கிலேயரை எதிர்த்து போராடினான் என்றும் அவனே முதல் சுதந்திர வீரன்போல பொய்யுரை பரப்புவோர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் 2004 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள முனைவர் கே .கே .பிள்ளையின் ''தமிழகவராலாறு , மக்களும் பண்பாடும்'' என்ற நூலை படிக்கவும்.

மேலும் கெட்டி பொம்மு திருசெந்தூரில் தீப ஆராதனை மணி அடிப்பதை பாஞ்சால குறிச்சியில் கேட்பதற்காக வழி நெடுக மணி மண்டபங்கள் கட்டிவைத்தான் . அவைகள் கற்றளிகள் அல்ல வெறும் ஓலை குடிசைகளே ! அவைகள் கட்டபட்டதிலும் தமிழர்களே பாதிக்கப்பட்டனர். ஏனெனில் பனை ஓலைகளையும் , மரங்களையும் யாரையும் கேட்காமல் வெட்டி கொண்டு வந்தனர் . இதனால் பனை மரத்தை ஆதாராமாக கொண்டு வாழ்க்கை நடத்திய நாடார் சாதி மக்கள் வெறுப்படைந்தனர் . ஒரு முறை கெட்டி பொம்முவின் கையாட்களுக்கும் குரும்பூர் நாடார்களுக்கும் பெரும் சண்டை நடந்தது. இதனால் நாடார் சாதி மக்கள் ஒருபோதும் அவனை ஆதரித்தது இல்லை. இதை நா.வானமாமலை பதிபுத்துள்ள ''வீரபாண்டிய கெட்டி பொம்மு கதை பாடல்'' நூல் மூலம்அறியலாம்.

ஆயுதம் ஏந்திய பாஞ்சாலன் குறிச்சியின் ஆட்கள் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட கூலியாட்களுடன் எட்டயபுரத்தை சேர்ந்த அச்சங்குளம் கிராமத்தில் கம்மங் கதிர்களை அறுத்துக் கொள்ளையிட்டு சென்றனர் . இது தொடர்பாக எட்டப்ப நாயக்கன் 15.01.1799-ல் ஜாக்சனுக்கு புகார் அனுப்பினான் . ஊத்துமலை பாளையத்தில் கங்கை கொண்டான் வட்டத்திலுள்ள மனியகாரரை மிக மோசமாக நடத்தி இரவு நேரத்தில் கால்நடைகளையும் , அங்கிருந்த பொருட்களையும் கொள்ளையடித்ததுடன் பணம் கேட்டும் மிரட்டியுள்ளனர் என்று 13.06.1799-ல் ஊத்துமலை பாளையக்காரர் லூசிங்க்டனுக்கு கடிதம் எழுதியுள்ளார். 05.08.1799-ல் சிவகிரி பாளையக்காரர் அனுப்பிய புகார், 07.08.1799-ல் ஊத்துமலை பாளையக்காரர் அனுப்பிய புகார் ஆகியவற்றில் கெட்டி பொம்முவின் தம்பி துரைசிங்கம், தானாபதி பிள்ளை ஆகியோருடன் கோலார்பட்டி, ஏழாயிரம்பண்ணை, அழகாபுரி, நாகலாபுரம், காடல்குடி, குளத்தூர், மணியாச்சி , மேலமந்தை, ஆத்தங்கரை, கடம்பூர் பாளையங்களை சேர்ந்தவர்களும் கொள்ளையடித்துள்ளனர் என்பதும், எட்டயபுரம், ஊத்துமலை, சொக்கம்பட்டி, ஆவுடயாபுரம், தலைவன் கோட்டை ஆகிய கும்பினிய ஆதரவு பாளையக்காரர் களுக்கும் போதிய பாதுகாப்பு அழிக்க கோரி மேற்கண்ட கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது. இந்த வரலாற்றை J.F. KERANS - Some Account of the Panchalamkurichy polegar and the State of Trinelvelly . என்ற நூலில் பதியப்பட்டுள்ளது.

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Oct 05, 2014 6:50 pm

ayyasamy ram wrote:

இன்றளவும் யாராலும் மறந்துவிட முடியாத வீரமிகு வசனங்கள். வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 1571444738

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 05, 2014 8:42 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:நானும் விக்கிலிருந்து தான் போட்டிருக்கேன் விமந்தினி .........14 நாள் இருந்த குல்சாரிலால் நந்தா வை 2 வதாக சேர்திருப்பங்க   போல இருக்கே!

ஒரு நாள் பதவியில் இருந்தாலும், அதுவும் கணக்கு தானே கிருஷ்ணாம்மா. வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 1571444738 வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 1571444738

ஸோ, லால் பகதூர் சாஸ்த்திரி நம் நாட்டின் 3 வது பிரதமர் என்பது தானே சரி? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Oct 05, 2014 11:08 pm

krishnaamma wrote:

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 05, 2014 11:10 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:நானும் விக்கிலிருந்து தான் போட்டிருக்கேன் விமந்தினி .........14 நாள் இருந்த குல்சாரிலால் நந்தா வை 2 வதாக சேர்திருப்பங்க   போல இருக்கே!

ஒரு நாள் பதவியில் இருந்தாலும், அதுவும் கணக்கு தானே கிருஷ்ணாம்மா. வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 1571444738 வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 1571444738

ஸோ, லால் பகதூர் சாஸ்த்திரி நம் நாட்டின் 3 வது பிரதமர் என்பது தானே சரி? புன்னகை
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1093119

புன்னகை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Oct 06, 2014 12:00 am

வரலாற்றில் இன்று - அக்டோபர்' 6

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 C0c2dLcDT3CTRaxOdYxI+October-6

1582 - கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.

1683 - வில்லியம் பென் தன்னுடன் 13 ஜெர்மனியக் குடும்பங்களை பென்சில்வேனியாவுக்கு அழைத்துவந்து குடியேற்றினார். இவர்களே முதன் முதலாக அமெரிக்காவுக்கு குடியேறிய ஜெர்மன் மக்களாவர்.

1762 - ஏழாண்டுப் போர்: பிரித்தானியாவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் மணிலாவில் இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்தது. ஏழாண்டுப் போர் முடிவடையும் வரையில் பிரித்தானியா மணிலாவைத் தன் பிடியில் வைத்திருந்தது.

1789 - பிரெஞ்சுப் புரட்சி: முன்னைய நாள் பெண்களின் போராட்ட அணியை வேர்சாய் அரண்மனையில்
எதிர்கொண்ட பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அங்கிருந்து பாரிஸ் திரும்பினான்.

1795 - கேணல் பாபற் என்பவரின் தலைமையில் பிரித்தானியப் படையினர் மன்னாரை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.

1847 - சாமுவேல் பிஸ்க் கிறீன் பருத்தித்துறையை வந்தடைந்தார்.

1849 - ஹங்கேரிய விடுதாலைப் போரின் முடிவில் போராளிகள் 13 பேர் "அராட்" (தற்போது ருமேனியாவில்) என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டனர்.

1854 - இங்கிலாந்தில் நியூகாசில் மற்றும் கேற்ஸ்ஹெட் நகரங்களில் பரவிய பெருத் தீயில் 54 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணகானோர் காயமடைந்தனர்.

1870 - ரோம் இத்தாலியின் தலைநகரானது.

1889 - தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையின் உச்சி முதன் முதலில் எட்டப்பட்டது.

1889 - தோமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது அசையும் திரைப்படத்தைக் காண்பித்தார்.

1890 - யாழ்ப்பாண நகரில் "சின்னக்கடை" எனப்படும் முக்கிய சந்தையில் கடைத்தொகுதி ஒன்று இடிந்து வீழ்ந்ததில் பலர் கொல்லப்பட்டுப் பலர் படுகாயமடைந்தனர்.

1903 - ஆஸ்திரேலியாவின் உயர் நீதிமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்றது.

1908 - ஆஸ்திரியா தன்னுடன் பொஸ்னியா ஹெர்செகோவினாவை இணைத்துக் கொண்டது.

1923 - முதலாம் உலகப் போர்: இஸ்தான்புல்லில் இருந்து பெரும் வல்லரசுகள் வெளியேறின.

1927 - முதலாவது பேசும் படம் த ஜாஸ் சிங்கர் வெளியானது.

1939 - இரண்டாம் உலகப் போர்: போலந்தின் கடைசி இராணுவத்தினர் தோற்கடிக்கப்பட்டனர்.

1955 - வயோமிங்கில் டிசி-4 விமானம் ஒன்று வீழ்ந்ததில் 66 பேர் கொல்லப்பட்டனர்.

1966 - எல்எஸ்டி ஐக்கிய அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.

1973 - 80,000 எகிப்தியப் படைகள் சூயஸ் கால்வாயைக் கடந்து இஸ்ரேலிய பார் லேவ் கோட்டை அழித்து, யொம் கிப்புர் போரை ஆரம்பித்தனர்.

1976 - பார்படோசில் இருந்து புறப்பட்ட கியூபா விமானம் ஒன்று பிடெல் காஸ்ட்ரோவுக்கெதிரான தீவிரவாதிகளால் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டதில் 73 பேர் கொல்லப்பட்டனர்.

1976 - தாய்லாந்தில் அரசுக்கெதிராக இடம்பெற்ற மாணவர் போராட்டம் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1977 - மிக்-29 வானூர்தி தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.

1981 - எகிப்திய அதிபர் அன்வர் சாதாத் கொலை செய்யப்பட்டார்.

1987 - பிஜி குடியரசாகியது.

1995 - சூரியனுக்கு அடுத்ததாக கோளைத் தன்னகத்தே கொண்ட பெரும் விண்மீன் 51 பெகாசி கண்டறியப்பட்டது.

2002 - பிரெஞ்சு எண்ணெய்த் தாங்கி யேமனில் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.

2008 - அநுராதபுரம் குண்டுவெடிப்பு: தற்கொலைக் குண்டுவெடிப்பில் இலங்கையின் இராணுவத் தளபதி ஜானக பெரேரா உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.

2010 - தமிழ் விக்கிப்பீடியாவில் 25,000 கட்டுரை இலக்கு எட்டப்பட்டது.

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 06, 2014 7:31 am

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 103459460

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Oct 06, 2014 9:50 am

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 103459460

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 3838410834

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Oct 06, 2014 1:05 pm

நல்ல பதிவுகள் விமந்தனி !

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 103459460 வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 3 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக