புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10 
68 Posts - 41%
heezulia
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10 
319 Posts - 50%
heezulia
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_m10மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்கல்யான் --புல்லும் ஆயுதம்

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 27, 2014 10:27 am

First topic message reminder :

மங்கல்யான் --புல்லும் ஆயுதம்

மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 UjJdNkdtRHCy0OdJeXRR+vallavan_2127364f

குறைந்த செலவில் செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்புவதற்கு இந்தியா காட்டிய வழியை பிற நாடுகள் பின்பற்ற முற்படலாம்.

உள்ளபடி செவ்வாய்க்கு விண்கலம் ஒன்றை அனுப்பும் திறன் படைத்த ராக்கெட் இந்தியாவிடம் கிடையாது. ஆனாலும், மங்கள்யானை அனுப்பி இந்தியா உலக சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ) தகுந்த உத்தியைப் பின்பற்றியதன் மூலமே இது சாத்தியமாகியது.

இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மிகவும் நம்பகமானது என்பது 25 முறைகளுக்கும் மேல் நிரூபிக்கப்பட்டுள்ளது. அடுத்து நாம் உருவாக்கிவரும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் நம்பகத்தன்மை இனிதான் நிரூபிக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால், பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டினால் பொதுவில் ஒரு விண்கலத்தை மணிக்கு 27 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றி வரும்படி செலுத்த இயலும். ஒரு விண்கலம் பூமியின் பிடியிலிருந்து விடுபட்டு, செவ்வாய் நோக்கிச் செல்ல வேண்டுமானால், அது மணிக்கு சுமார் 40 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்தப்பட வேண்டும்.

ஆகவே, மங்கள்யான் திட்டம்பற்றி ஆரம்பத்தில் விவாதிக்கப்பட்டபோது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை மேலும் சில முறைகள் செலுத்தி, அதன் நம்பகத்தன்மை நிரூபிக்கப்பட்ட பின்னர் அதைக் கொண்டு மங்கள்யானைச் செலுத்தலாம் என்று யோசிக்கப்பட்டது. ஆனால், அதில் ஒரு பிரச்சினை இருந்தது. செவ்வாய் கிரகத்துக்கு நினைத்த நேரத்தில் விண்கலத்தைச் செலுத்த இயலாது. பூமியும் செவ்வாயும் இருக்கும் நிலைகளைப் பொறுத்து 26 மாதங்களுக்கு ஒரு முறைதான் வாய்ப்பான சமயம் கிட்டும். 2013-ம் ஆண்டு நவம்பர் முதல் 2014 ஜனவரி வரையிலான காலம் வாய்ப்பான காலமாகும். அதை விட்டால் 2016 ஜனவரி வரை காத்திருந்தாக வேண்டும். இஸ்ரோ அதுவரை காத்திருக்க விரும்பவில்லை. மிக நம்பகமான பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டையே பயன்படுத்த முடிவுசெய்தது. அது உண்மையில் துணிச்சலான முடிவாகும்.

கிராவிட்டி அசிஸ்ட் உத்தி

மங்கள்யானை செவ்வாயை நோக்கிச் செலுத்துவதற்கான வேகத்தைப் பெறுவதற்கு பூமியின் ஈர்ப்புவிசையையே பயன்படுத்திக்கொள்ளவும் முடிவுசெய்யப்பட்டது. அந்த உத்திக்கு கிராவிடி அசிஸ்ட் (Gravity Assist) என்று பெயர். இது ஒன்றும் புதுமையானது அல்ல. 2008-ம் ஆண்டில் சந்திரனுக்கு இந்தியாவின் சந்திரயான் அனுப்பப்பட்டபோது இதே உத்திதான் பயன்படுத்தப்பட்டது.

இந்தப் பின்னணியில்தான் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 2013 நவம்பர் 5-ம் தேதி மங்கள்யான் உயரே செலுத்தப்பட்டது. அத்தோடு அந்த ராக்கெட்டின் வேலை முடிந்துவிட்டது. மங்கள்யான் பூமியைச் சுற்றி வர ஆரம்பித்தது. எல்லா விண்கலங்களிலும் அவசியமானபோது அவற்றின் வேகத்தை அதிகரிக்க ‘லாம்’ (LAM) எனப்படும் இன்ஜின் இடம்பெறுவது உண்டு. மங்கள்யானில் அவ்வித இன்ஜின் இடம்பெற்றிருந்தது. 2013 நவம்பர் கடைசி வரை மங்கள்யான் பூமியை ஆறு முறை சுற்றியது. அந்த ஆறு முறைகளிலும் மங்கள்யானில் இருந்த இன்ஜின் அவ்வப்போது சிறிது நேரம் இயக்கப்பட்டது. ஆகவே, ஒவ்வொரு முறையும் பூமியை நெருங்கும்போது மங்கள்யானின் வேகம் அதிகரித்துக்கொண்டே போயிற்று. மங்கள்யான் ஏழாவது முறை சுற்ற முற்பட்டபோது அதன் வேகம் மணிக்கு 38 ஆயிரம் கிலோ மீட்டராக உயர்ந்துவிட்டிருந்தது. ஏழாவது முறை இன்ஜினை இயக்கியபோது வேகம் மணிக்கு 42 ஆயிரம் கிலோ மீட்டராக உயர்ந்து மங்கள்யான் டிசம்பர் முதல் தேதி செவ்வாயை நோக்கிப் பயணித்தது.

வட்டப் பாதைக்கு மாறுதல்

சூரியனைப் பூமி சுற்றுவதுபோல மங்கள்யான் அதன் பின்னர் இன்ஜின் உதவியின்றி விண்வெளியில் சூரியனைச் சுற்ற ஆரம்பித்தது. பூமி சூரியனை மூன்றாவது சுற்றுவட்டப் பாதையில் சுற்றுகிறது. செவ்வாய் கிரகம் நான்காவது வட்டப் பாதையில் சுற்றுகிறது. ஆகவே, மங்கள்யான் நான்காவது வட்டப் பாதைக்கு மாற வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் நெடுஞ்சாலையில் ஒரு லேனிலிருந்து அடுத்த லேனுக்கு மாற மெல்ல ஓரங்கட்டுவதுபோல மங்கள்யானின் பயணப் பாதையை அவ்வப்போது ஓரங்கட்ட வேண்டியிருந்தது. இறுதியில், செவ்வாயை நெருங்கிய கட்டத்தில் மங்கள்யானின் வேகம் குறைக்கப்பட்டு, அது கடந்த 24-ம் தேதி செவ்வாயின் ஈர்ப்புப் பிடியில் சிக்கி செவ்வாயைச் சுற்ற ஆரம்பித்தது.

முன்னுதாரணம் இல்லை

செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியுள்ள ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இந்தியா இப்போது நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால், கிராவிடி அசிஸ்ட் உத்தியைப் பயன்படுத்தி செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பியுள்ள ஒரே நாடு இந்தியாதான்.

சந்திரனுக்கு விண்கலங்களை அனுப்ப சீனா, அமெரிக்கா ஆகியவை கடந்த காலத்தில் கிராவிடி அசிஸ்ட் முறையைப் பயன்படுத்தியுள்ளன. வேறு கிரகங்களுக்கு விண்கலத்தை அனுப்பவும் பிற நாடுகள் இந்த உத்தியைப் பயன்படுத்தியது உண்டு. ஆனால், எந்த நாடும் செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்ப இந்த உத்தியைப் பயன்படுத்த முற்படவில்லை.

அதற்குக் காரணம் உண்டு. செவ்வாய்க்கு நேரடியாக விண்கலத்தை அனுப்புகிற அளவுக்கு அந்த நாடுகளிடம் சக்தி மிக்க ராக்கெட்டுகள் உள்ளன. அந்த வகையில் அமெரிக்காவின் நாஸாவினால் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட மாவென் விண்கலம் பூமியை ஒரு தடவை சுற்றிவிட்டு நேரே செவ்வாய்க்குக் கிளம்பியது.

புல்லும் ஆயுதம்

இனி, இந்த நாடுகள் குறைந்த செலவில் செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்புவதற்கு இந்தியா காட்டிய வழியைப் பின்பற்ற முற்படலாம். ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, ஜப்பான், சீனா ஆகியவற்றிடம் உள்ள ராக்கெட்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை ஓரளவில் சிறிய ராக்கெட் என்றே சொல்ல வேண்டும். ஆனால், வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதுபோல அந்த சிறிய ராக்கெட்டைப் பயன்படுத்தி செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தை இந்தியா அனுப்பியிருப்பது என்பது மிகப் பெரிய சாதனையே. ஆகவேதான், இந்தியாவால் எப்படி இதைச் சாதிக்க முடிந்தது என்று உலக நாடுகள் வியந்து நிற்கின்றன.

இதற்கிடையே இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி-2 வகை ராக்கெட் கடந்த ஜனவரியில் செலுத்தப்பட்டபோது சுமார் இரண்டு டன் கொண்ட செயற்கைக்கோளை வெற்றிகரமாக மேலே செலுத்தியது. அது தொடர்ந்து மேலும் சில முறை சோதிக்கப்பட இருக்கிறது. அடுத்தபடி யாக நாம் புதிதாக உருவாக்கிவரும் ஜி.எஸ்.எல்.வி-3 வகை அநேகமாக அடுத்த மாதக் கடைசியில் முதல் தடவையாக உயரே செலுத்திச் சோதிக்கப்படவிருக்கிறது. அது, மூன்று டன் எடையைச் சுமந்து செல்லக்கூடியது. அது வெற்றிபெற்றுவிட்டால் ராக்கெட் விஷயத்தில் இந்தியா சுயசார்பு நிலையை எட்டிப் பிடித்துவிடும்.

அடுத்து, 2018-ம் ஆண்டில் செவ்வாய்க்கு மேலும் ஒரு விண்கலத்தைச் செலுத்தத் திட்டம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.எல்.வி-3 ராக்கெட் மூலம் அனுப்புவதானால் நிறைய ஆராய்ச்சிக் கருவிகளுடன் கூடிய பெரிய விண்கலத்தை அதனுடன் அனுப்ப இயலும்.

நன்றி - என். ராமதுரை, மூத்த பத்திரிகையாளர்,
தமிழ் ஹிந்து

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 28, 2014 6:37 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:மங்கல்யான் மனதிற்குள் வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கும் .
நம்மளை பற்றி அறிவியல் செய்தி வெளிவந்த சமயத்தில் தான்
ஜெயலலிதா செய்தி வரவேண்டுமா ?
அவரை பற்றிய அவியல் செய்திகளை படிப்பதில் காட்டும் ஆர்வம் மிகுதியாக உள்ளதே .
நம்மை பற்றி தெரிந்து கொள்ள ரமணியன் /சரண்யாவை தவிர வேறு ஒருவரும் இல்லையே .அதிர்ச்சி அதிர்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1091520

ஹா...ஹா.........ஹா......நான் நேற்று  மங்கள் யான் அனுப்பிய புகைப்படங்கள் போட்டேனே ......நீங்க
பாரதேளோ  ? ..........நல்ல  பகிர்வு ஐயா,  ..........நான் தலைப்பை பார்த்தேன் நேற்றே...............ஏதோ ஜோக் என்று நினைத்து தவிர்த்துவிட்டேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1091560

பாக்காம இருக்க முடியுமா .போட்டோவிற்கு   பிறகு போட்டோ என செக்கசெவேனே ஒரே ரணகளமாயிடுத்தே
ஈகரை பூரா !
தலைப்பே பார்த்து ஜோக் என்ற அனுமானிப்பா ! ஹே கிருஷ்ணா ! நீதான் காப்பாத்தணும் !! ஜோக்குனா பிடிக்காதா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1091570

ஜோக் பிடிக்காது என்று இல்லை..............ஏனோ பார்க்க தோணலை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 28, 2014 8:10 pm

நல்ல தகவல்..இந்தியர்களிடம் எந்தப் பஞ்சம் வந்தாலும் ஒருபோதும் திறமைப் பஞ்சம் வராது என்பது அவ்வவ்ப்போது நீரூபிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது...சமீபத்திய நிருபீப்பு நிகழ்வு மங்கல்யான் விண்வெளிச்சாதனை.. மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 103459460 மங்கல்யான் --புல்லும் ஆயுதம் - Page 2 1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 28, 2014 8:16 pm

ஆம் தமிழ்நேசன் , திறமை உள்ளவர்கள் பலர் உளர் .
இங்கேயும் அரசியல் விளையாடுகிறது .
வேண்டுபவர்களை தூக்கி விடுவதும்
வேண்டாதவர்களை தூக்கி எறிவதும் காண்கிறோம் .
ரமணியன் .

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Sep 28, 2014 8:21 pm

T.N.Balasubramanian wrote:ஆம் தமிழ்நேசன் , திறமை உள்ளவர்கள் பலர் உளர் .
இங்கேயும் அரசியல் விளையாடுகிறது .
வேண்டுபவர்களை தூக்கி விடுவதும்
வேண்டாதவர்களை தூக்கி எறிவதும் காண்கிறோம் .
ரமணியன் .
மேற்கோள் செய்த பதிவு: 1091602

ஆம் ஐயா..அதுதான் இந்திய அரசியலின் சாபக்கேடு... சோகம் அதனால் நீதிமன்றங்கள் ஊழல் வழக்குகளை அதிகம் சந்திக்கிறது...அவ்வவ்ப்போது நடக்கும் இதுபோன்ற நல்லநிகழ்வுகள்தான் ஆறுதல் அளிக்கிறது புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக