புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10 
9 Posts - 4%
prajai
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10 
18 Posts - 4%
prajai
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_m10ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 04, 2014 5:22 pm


Posted Date : 13:02 (04/09/2014)Last updated : 13:09 (04/09/2014)
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Jaya%205(29)
நீதிபதி முடிகவுடரின் கண்டிப்பு!

18 வருடங்களாக நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20 ஆம் தேதி தீர்ப்பு. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை ஒட்டுமொத்த இந்தியாவே உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறது. தமிழக அரசியல் களத்திலும் ஏக எதிர்பார்ப்பு. அந்த நீண்ட நெடிய வழக்கை ஆரம்பத்தில் இருந்து அலசுவோமா..?

21.6.96 ல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 1.7.91 முதல் 30.4.96 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்" என்று கூறப்பட்டிருந்தது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையின் டிஜிபி-யாக இருந்த லத்திகா சரணை விசாரிக்க ஆணையிட்டார். அந்த விசாரணைக்குப் பிறகு, ஜெயலலிதா கைது செய்யப்பட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Sasi,%20ilavarasi
2004 தேர்தலில் மீண்டும் ஜெயலலிதா வெற்றிபெற்று முதல்வர் ஆனார். இதனையடுத்து தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, 2004 ல் இந்த வழக்கு பெங்களூரு தனி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பெங்களூரிலும் பல நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் மாற்றப்பட்டனர்.

எனவே அந்த காலக்கட்டத்தை எல்லாம் தாண்டிவிட்டு இந்த வழக்கின் 7 ஆவது நீதிபதியாக முடிகவுடர் நியமனத்துக்குப் பிறகு நடந்தவற்றை சற்று விரிவாக பார்க்கலாம்...

2013 அக்டோபர் 2 ஆம் தேதி வழக்கை விசாரிக்க ஆரம்பித்த முடிகவுடர், குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாதது குறித்து கேள்வி எழுப்பினார். ‘‘இது என்னுடைய நீதிமன்றம். இந்த வழக்கை விசாரிக்க முழு அதிகாரத்தையும் கர்நாடக உயர் நீதிமன்றம் எனக்குக் கொடுத்திருக்கிறது. இதுநாள் வரை இந்த வழக்கு எப்படி நடந்தது என்று எனக்கு ஆட்பேசணை இல்லை. இனி என்னுடைய ஒவ்வொரு வாய்தாவுக்கும் இந்த வழக்கின் குற்றவாளிகள் (ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன்) நான்கு பேரும் ஆஜராக வேண்டும். மீண்டும் 30 ஆம் தேதிக்கு வாய்தா போடுகிறேன். அன்று நான்கு பேரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் இல்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிப்பேன்’’ என்று கண்டிப்பு காட்டினார்.

இது ஜெயலலிதா தரப்பினரை அதிர்ச்சி அடைய வைத்தது. உச்ச நீதிமன்றத்தை அணுகி, ‘நீதிபதி நியமனத்தில் விதிமுறை மீறல் நடந்திருக்கிறது. கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் எங்கள் அனைவருக்கும் விலக்கு அளிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘‘முடிகவுடர் நியமனத்தில் என்ன விதிமீறல்கள் இருக்கிறது? அதற்கு சான்று ஏதாவது வைத்திருக்கிறீர்களா? வெறும் ஊகத்தின் அடிப்படையில் இப்படி குற்றச்சாட்டுகளை வைக்கக் கூடாது’’ என்றவர்கள், தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தால், ஜெயலலிதா ஒருவருக்கு மட்டும் 30 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் விலக்கு அளிப்பதாக உத்தரவிட்டனர்.

30 ஆம் தேதி வாய்தாவுக்கு சசிகலா, இளவரசி, சுதாகர் கோர்ட்டுக்கு வருவது உறுதியானதால், அ.தி.மு.க வக்கீல்கள் காலையிலேயே கோர்ட்டில் குவிந்திருந்தனர். சரியாக 10.30 மணிக்கு ஒயிட் அண்ட் ஒயிட் ஜிப்பாவில் சுதாகரன் வந்தார். 10 நிமிடங்கள் கழித்து ஒரே காரில் இளவரசியும் சசிகலாவும் கோர்ட் வளாகத்துக்குள் வந்திறங்கினார்கள். 6 ஆவது மாடியில் வழக்கு நடைபெறுவதால், ஜெ. தரப்பு வழக்கறிஞர்கள் ஒவ்வொரு மாடியிலும் லிப்ட் அருகே நின்று சசிகலா லிஃப்டில் செல்ல யாரும் இடையூறாக இருந்திடக் கூடாது என்று பாதுகாத்து அழைத்துச் சென்றனர்.

சசிகலா வழக்கத்துக்கு மாறாக மிகவும் வருத்தத்தோடு காணப்பட்டார். கழுத்தில் நகைகள் எதுவும் இல்லை. சிம்பிளாக இருந்தார். நேராக கோர்ட்டுக்குள் சென்று மூவரும் கூண்டுக்குள் ஏறி நின்று கைகளைக் கட்டி நீதிபதி முடிகவுடரைப் பார்த்து வணக்கம் வைத்தனர். முடிகவுடர் தலையை மட்டும் ஆட்டிவிட்டு அமரச் சொன்னார். கூண்டுக்குள்ளேயே பெஞ்ச் போடப்பட்டிருந்தது. வலது பக்கத்தில் சசிகலாவும், இடது பக்கத்தில் இளவரசியும், நடுவில் சுதாகரனும் நீதிபதியை பார்த்தவாறு அமர்ந்திருந்தார்கள்.

நீதிபதி முடிகவுடர்: ‘‘இன்னும் எத்தனை நாட்கள் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது?’’

ஜெ தரப்பு வழக்கறிஞர் குமார்: ‘‘தெரியவில்லை.’’

நீதிபதி முடிகவுடர்: ‘‘இந்த வழக்கை நவம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்தி போடுகிறேன்’’

குமார்: ‘‘உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி நியமனத்தில் விதிமுறை மீறல் இருப்பதாகவும், கோர்ட்டில் ஆஜராவதில் நான்கு பேருக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்று வழக்கு நடைபெற்றுக்கொண்டிருப்பதால், இந்த வழக்கை நான்கு வார காலத்துக்கு தள்ளிப்போட வேண்டும். குறைந்தது மூன்று வார காலத்துக்காவது தள்ளிப்போட வேண்டும்.’’

நீதிபதி முடிகவுடர், ‘‘இதை நீங்கள் ஆட்சேபிக்கிறீர்களா?’’ என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கிடம் கேட்டதற்கு அவர், ‘‘நான் ஆட்சேபிக்கவில்லை’’ என்றதால், நீதிபதி முடிகவுடர் வழக்கை நவம்பர் 21 ஆம் தேதிக்கு தள்ளிப்போடுவதாக சொன்னார்.

வழக்கு முடிந்ததும், வந்ததைப் போலவே சுதாகரன் தனி காரிலும், சசிகலா, இளவரசி இருவரும் தனி காரிலும் சென்றனர்.

- வி.கே. ரமேஷ்

புதிய நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா வருகையும், அதைத் தொடர்ந்த பரபரப்புகளும் நாளை...




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Sep 04, 2014 11:57 pm

இன்னும் கொஞ்ச நாள் இழுத்து இருந்தால் நல்லா இருந்திருக்கும் நம்ம அம்மாவுக்கு.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 05, 2014 5:51 pm

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு... தீர்ப்புக்கு இன்னும் 15 நாட்கள்! (மினி தொடர்: பகுதி-2)

சென்றார் முடிகவுடர்... வந்தார் குன்ஹா!

2004 ஆம் ஆண்டில் இருந்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கை பச்சப்பரே, மனோலி, ஆன்ரிக்ஸ், மல்லிகா அர்ஜுனையா, சோமராசு, பாலகிருஷ்ணா என ஆறு நீதிபதிகள் விசாரித்தனர். ஏழாவது நீதிபதிதான் முடிகவுடர்.

நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றதை அடுத்து, முடிகவுடர் பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தன்னுடைய முதல் விசாரணையிலேயே, ''இது என்னுடைய நீதிமன்றம். இனி ஒவ்வொரு வாய்தாவுக்கும் வழக்கின் நான்கு குற்றவாளிகளும் (ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன்) ஆஜராக வேண்டும்" என்று கண்டிப்பு காட்டினார் முடிகவுடர். அதனை அடுத்து உச்ச நீதிமன்றத்தை அணுகிய ஜெயலலிதா தரப்பு, ‘கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து எங்கள் அனைவருக்கும் விலக்கு அளிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு மட்டும் ஒரு நாள் விலக்கு அளித்தது. அதை அடுத்து அக்டோபர் 30 ஆம் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள்.
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Untitled%2012(94)
இந்நிலையில், 31.10.2013 ஆம் தேதி மாலையே வழக்கின் 8வது நீதிபதியாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விஜிலென்ஸ் துறையின் பதிவாளராக இருந்த ஜான் மைக்கேல் டி.குன்ஹா நியமிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்தது.

நவம்பர் 21 ஆம் தேதி... புதிய நீதிபதியான ஜான் மைக்கேல் டி.குன்ஹா முன்னிலையில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. ‘‘யார் அரசு வழக்கறிஞர்?’’ என அவர் கேட்டார். அரசு வழக்கறிஞர் பவானி சிங் உடல்நிலை சரியில்லாததால் அன்று வரவில்லை. ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களின் பெயர்களைக் கேட்டுத் தெரிந்துக்கொண்டவர், ‘‘இந்த வழக்கைப் பற்றி சுருக்கமாகச் சொல்லுங்கள்’’ என்று ஜெ. தரப்பைப் பார்த்து நீதிபதி கேட்டார்.
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Untitled%2013(80)
ஜெ. தரப்பு வழக்கறிஞர் குமார் எழுந்து, ‘‘1991 முதல் 1996 வரை முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது சொத்து குவித்ததாக 1997 ஆம் ஆண்டு சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். அப்போது தி.மு.க ஆட்சியில் இருந்தது. அவர்களால் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏ1, ஏ2, ஏ3, ஏ4 (ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன்) ஆகியோரின் சொத்துக்கள் அனைத்தும் ஏ1 (ஜெயலலிதா) உடையது என்றும், ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ் கம்பனியுடைய சொத்துக்களும் ஏ1 உடையது என்றும் கட்டட மதிப்பீட்டிலும் குளறுபடிகள் இருக்கிறது’’ என்றதும் குறுக்கிட்ட நீதிபதி, ‘‘எல்லா வழக்குகளிலும் குளறுபடிகள் இருக்கத்தான் செய்யும். அதைக் களைவது நம்முடைய பொறுப்பு’’ என்றார் சிரித்துக்கொண்டே. ‘‘இது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகப் போடப்பட்டுள்ளது’’ என்று சொன்னதோடு, தங்களுடைய தரப்பினர் ஆஜர் ஆகாததற்காக மனுவையும் கொடுத்தார்கள்.

தி.மு.க தரப்பு வழக்கறிஞர்கள், ஜெயலலிதாவின் அசையும் சொத்துகளான தங்க, வைர ஆபரணங்களை இங்கு கொண்டுவர வேண்டும் என்று மனு கொடுத்தார்கள். அனைத்தையும் கேட்டுக்கொண்ட குன்ஹா, ‘‘யாரும் எமோஷனல் ஆக வேண்டாம். அனைவரும் சேர்ந்தே கோப்புகளைப் பார்த்து நீதியை நிலைநாட்டுவோம்’’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

டிசம்பர் 6 ஆம் தேதி... வழக்கு விசாரணைக்கு வந்தபோது அன்பழகன் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், ‘‘ஜெயலலிதாவின் அசையும் சொத்துகளை முறைப்படி இங்கு கொண்டுவர வேண்டும்’’ என்றார்கள். குமார் தலைமையிலான ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள், ‘‘ஏற்கெனவே அவை நீதிமன்ற காவலில்தான் இருக்கின்றன. அவற்றை கொண்டுவரத் தேவையில்லை. இதை வைத்து தி.மு.க அரசியல் ஆதாயம் தேடுகிறது’’என்றனர்.

இதையடுத்து அரசு வழக்கறிஞர் பவானிசிங்கும், ‘ஜெயலலிதாவின் அசையும் சொத்துகளைக் கொண்டுவர வேண்டும்’ என்று மனு தாக்கல் செய்தார். இதையெல்லாம் அமைதியாக உற்றுக் கேட்டுக்கொண்டிருந்த நீதிபதி, ‘‘தீர்ப்பை 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்’’ என்றார்.

டிசம்பர் 12 ஆம் தேதி... அசையும் சொத்துக்களை நீதிமன்றத்துக்குக் கொண்டுவருவது குறித்து தீர்ப்பு வழக்கிய நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, ‘‘இந்த வழக்கின் எதிர் மனுதாரரான ஜெயலலிதாவின் அசையும் சொத்துகள் அனைத்தும் இந்த நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் பாராமுகமாக இருந்துவிட்டார். இந்தச் சொத்துகள் அனைத்தும் இந்த வழக்கின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. அதைப் பார்த்து தீர்ப்பு வழக்குவதுதான் முறையாக இருக்கும். அதுதான் சரியான பாதையில் செல்ல வழிவகுக்கும். 21 ஆம் தேதிக்கு வாய்தா போடுகிறேன்’’ என்றார்.

வீ.கே.ரமேஷ்

பெங்களூரு வந்த அந்த சொத்துக்கள் பற்றிய விவரம் நாளை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 06, 2014 4:53 am

யார் என்ன எழுதினாலும், அது மினி தொடராக இருந்தாலும் சரி, மெகா தொடராக இருந்தாலும் சரி, தீர்ப்பு ஜெயாவுக்கு ஆதராவகத்தான் இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் சசிகலா இவ்வழக்கில் ஜெயாவுக்குப் பதிலாக சிக்க வைக்கப்படுவார் என நம்புகிறேன்!



ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Sep 06, 2014 7:03 am

சிவா wrote:யார் என்ன எழுதினாலும், அது மினி தொடராக இருந்தாலும் சரி, மெகா தொடராக இருந்தாலும் சரி, தீர்ப்பு ஜெயாவுக்கு ஆதராவகத்தான் இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் சசிகலா இவ்வழக்கில் ஜெயாவுக்குப் பதிலாக சிக்க வைக்கப்படுவார் என நம்புகிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1085316

சரியாக சொன்னீர்கள் அண்ணா..இம்மறை அனைவரின் எதிர்பார்ப்பு அம்மையார் சிக்குவாரா என்பதைவிட அவர் எந்தவிதத்தில் நழுவப்பபோகிறார் என்ற நோக்கில்தான் உள்ளது..பொருத்திருந்து பார்ப்போம் அம்மையார் சிக்குவாரா..தோழி சிக்கப்போகிறாரா என்று...அரசுகளும் நீதிமன்றங்களுமே சரியில்லாத காலத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கும் சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 06, 2014 12:02 pm

அரசியல்வாதிகள் இந்தியாவில் நேர்மையான முறையில் நீதிமன்றத்தால் தண்டனை பெறுவது என்பது எந்த காலத்திலும் நடக்கபோவதில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 12:05 am

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு... (மினி தொடர்: பகுதி-3)

வெள்ளி நகைகள் எங்கே?

‘‘இந்த வழக்கின் எதிர் மனுதாரரான ஜெயலலிதாவின் அசையும் சொத்துகள் அனைத்தும் இந்த நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட வேண்டும். அதைப் பார்த்து தீர்ப்பு வழங்குவதுதான் முறையாக இருக்கும்’’ என்று டிசம்பர் 12 ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சொன்னார். அதனை அடுத்து மீண்டும் வழக்கு டிசம்பர் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா, ‘‘இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் சென்னையில் இருந்து பெங்களூரு கொண்டுவந்துவிட்டோம். அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. இனி வழக்கின் இறுதிக்கட்ட வாதத்தைத் தொடரலாமா?’’ என அரசு வழக்கறிஞர் பவானிசிங்கைப் பார்த்துக் கேட்டார்.

அதற்கு அரசு வழக்கறிஞர் பவானிசிங் அமைதியாக இருந்தார். இதைத் தொடர்ந்து ஜெ. தரப்பு வழக்கறிஞர் மணிசங்கர், ‘‘கொண்டுவரப்பட்ட சொத்துகள் பற்றிய விவரப் பட்டியல் வேண்டும்’’ என்றார்.

அதற்கு பதிலளித்த நீதிபதி குன்ஹா, ‘‘கோர்ட் ஆவணங்களில் உள்ள சொத்துக்கள்தான் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அந்த விவரப்பட்டியல் அனைவரிடமும் இருக்கிறது. அதனால் அந்த பட்டியலை கொடுக்க வேண்டியது இல்லை’’ என்றார்.

அதையடுத்து, ‘‘எங்களுக்கு சில சொந்த வேலைகள் இருப்பதால், வழக்கை ஒரு வார காலம் தள்ளிப்போட வேண்டும்’’ என்றார் மணிசங்கர். அதற்கு சம்மதம் தெரிவித்து நீதிபதி குன்ஹா, ‘‘வழக்கை ஒத்திவைக்கிறேன்’’ என்றார். வழக்கு விசாரணையின்போது ஜெ. தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.

3.2.2014 அன்று கோர்ட் கூடியது.

நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா வந்ததும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி நான்கு பேரும் ஆஜராகாததற்கு விலக்குக் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவிக்காததால் நீதிபதி அந்த மனுவை ஏற்றுக்கொண்டார்.

அரசு வழக்கறிஞர் பவானிசிங் நீதிபதியிடம் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘1996 ஆம் ஆண்டு ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ.55 லட்சத்து 80,000 மதிப்புள்ள 1,116 கிலோ வெள்ளி பொருட்களை, ஜெயலலிதாவின் ஆலோசகரான சென்னை கொட்டிவாக்கம் கற்பகம்பாள் நகரைச் சேர்ந்த பாஸ்கரன், சென்னை நீதிமன்றத்தில் இருந்து பெற்றுச் சென்றார். நீதிமன்றம் கேட்கும்போது அந்தப் பொருட்களை ஒப்படைப்பதாகக் கூறியிருந்தார். இந்தப் பொருட்களை பெங்களூரு கோர்ட்டில் ஒப்படைக்க அவருக்கு உத்தரவிட வேண்டும். அந்த நகைகளை, அரசு தரப்பு சாட்சியாக விசாரிக்கப்பட்ட வாசுதேவன் என்ற நகை மதிப்பீட்டாளரைக் கொண்டு நீதிமன்றத்தில் குறியீடு செய்ய வேண்டும்’’ என்றார்.

ஜெ தரப்பு வழக்கறிஞர் குமார் கடும் ஆட்சேபணைத் தெரிவித்து, ‘‘இந்த மனு மீது பதிலளிக்க 10 நாட்கள் அவகாசம் வேண்டும்’’ என்றார்.

நீதிபதி குன்ஹா, ‘‘இந்த வழக்கை விசாரிக்க நான் சம்பளம் வாங்குகிறேன். இது மக்களின் பணம். வழக்கை இழுத்தடித்து காலதாமதம் செய்ய என் மனசாட்சி இடம் அளிக்கவில்லை. இந்த வழக்கு 17 ஆண்டுகளாக நீடித்துக்கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தினமும் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்’’ என்றார்.

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், ‘கோர்ட்டில் மார்க் செய்யாத 149 நினைவு பரிசுப் பொருட்களை எடுத்துச் சென்றுவிட்டார்கள். அதைத் திருப்பித்தர வேண்டும்’ என்று ஒரு மனு தாக்கல் செய்தார்.

இதற்கிடையே மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் இயக்குநர் சண்முகம் சார்பில், அவரின் வழக்கறிஞர் தியாகராஜன், இந்தச் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரி ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுகள் மீதான விசாரணையை 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.

பிப்ரவரி 5 ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தி.மு.க-வின் பேராசிரியர் அன்பழகன் தரப்பு வழக்கறிஞரும் தர்மபுரி தொகுதி எம்.பி-யுமான தாமரைசெல்வன், ஒரு புதிய மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘அரசு வழக்கறிஞர் பவானி சிங் பிப்ரவரி 3 ஆம் தேதி தாக்கல் செய்த மனுவில் 1,116 கிலோ வெள்ளி பொருட்கள் ஜெயலலிதாவின் ஆலோசகர் பாஸ்கரன் என்பவரிடம் உள்ளதாகவும், அதை நீதிமன்றத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவில் குறிப்பிட்டுள்ள பாஸ்கரன் என்பவர் கடந்த 2013 டிசம்பர் 3 ஆம் தேதி இறந்துவிட்டார். அந்த செய்தி தினசரி நாளேடுகளில் வந்திருக்கிறது (அதற்கான ஆதாரத்தையும் இணைத்திருந்தார்). இந்த விவரம் தெரிந்தும் வேண்டும் என்றே உண்மையை மறைத்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி, இந்த வழக்கை இதற்கு முன் விசாரணை நடத்திய நீதிபதி பாலகிருஷ்ணா முன் ஆகஸ்ட் 23 முதல் 26 ஆம் தேதி வரை அரசு வழக்கறிஞர் பவானிசிங் வாதம் செய்தார். அப்போது பாஸ்கரன் உயிருடன் இருந்தார். அப்போது வெள்ளிப் பொருட்களை கொண்டுவர வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் ஏன் மனு தாக்கல் செய்யவில்லை. பாஸ்கரன் இறந்துபோன தகவல் அரசு வழக்கறிஞருக்கு எப்படி தெரியாமல் போனது?

நீதிபதி பாலகிருஷ்ணா முன் நான்கு நாட்கள் வாதம் செய்த அரசு வழக்கறிஞர், வழக்கு தொடர்பான ஆவணங்களை படிக்காமலும் முழுமையாக தெரிந்துகொள்ளாமலும் வாதம் செய்தாரா அல்லது வழக்கை தாமதப்படுத்தும் உள்நோக்கத்தில் செயல்படுகிறாரா என்று சந்தேகம் வருகிறது.

ஆகவே, வெள்ளிப் பொருட்களை கொண்டுவர வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அல்லது நீதிமன்றத்துக்கு உகந்ததாகக் கருதப்படும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.

நீதிபதி குன்ஹா அரசு வழக்கறிஞரைப் பார்த்து, ‘‘இதற்கு என்ன சொல்கிறீர்கள்’’ என்றார்.

அரசு வழக்கறிஞர் பவானிசிங், ‘‘எனக்கு முழு விவரம் தெரியாது. தகவல் பெற்று தெரிவிக்கிறேன்’’ என்றார்.

நீதிபதி குன்ஹா: ‘‘இந்த மனு மீதான ஆட்சேபணையை 6 ஆம் தேதிக்கு தாக்கல் செய்யலாம்’’ என்று அரசு மற்றும் ஜெ தரப்பு வழக்கறிஞர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.



ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 12:07 am

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு... ( மினி தொடர்: பகுதி - 4 )

பாஸ்கரன் உயிரோடு இருக்கிறாரா?

பிப்ரவரி 5 ஆம் தேதி...
ஜெ. தரப்பு வழக்கறிஞர் குமார், ‘கோர்ட்டில் மார்க் செய்யாத 149 நினைவு பரிசுப் பொருட்களை எடுத்துச் சென்றுவிட்டார்கள். அதைத் திருப்பித்தர வேண்டும்’ என தாக்கல் செய்த மனுவும், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் தரப்பில், சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ஜெ தரப்பு வழக்கறிஞர் குமார் தாக்கல் செய்திருந்த மனு மீது பதிலளித்த நீதிபதி குன்ஹா, ‘‘சாட்சியங்கள் அனைத்தும் விசாரித்து முடிந்துவிட்டது. வழக்கறிஞர்களின் வாதங்களும் முடிந்துவிட்டன. இந்த வழக்கில் நீதிபதி மட்டும்தான் மாற்றப்பட்டிருக்கிறார். அதனால், இறுதித் தீர்ப்பு முடிந்தவுடன் முறைப்படி பெட்டிஷன் போட்டு அந்த நினைவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்’’ என்று அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

மெடோ அக்ரோ ஃபார்ம் நிறுவன இயக்குநர் சண்முகம் மற்றும் ரிசர்வே அக்ரோ கம்பெனி இயக்குநர் குமார் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். மெடோ அக்ரோ ஃபார்ம் வழக்கறிஞர் தியாகராஜன், ‘‘எங்களுக்கு சொந்தமான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்தச் சொத்துகளை திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தி சென்னை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்னும் நிலுவையில் உள்ளது. அக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனத்துக்கு ஜெயலலிதா பங்குதாரர் மட்டுமே; உரிமையாளர் கிடையாது. எனவே, அந்த மனு மீதான தீர்ப்பு வரும் வரை, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும்’’ என்றார்.

இந்த வழக்கு 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பிப்ரவரி 6 ஆம் தேதி...
அன்பழகன் தரப்பு வழக்கறிஞரும், தர்மபுரி எம்.பி-யுமான தாமரைச்செல்வன், ‘பாஸ்கரன் இறந்ததை மறைத்து உள்நோக்கத்தோடு அரசு வழக்கறிஞர் பவானிசிங் மனு தாக்கல் செய்திருக்கிறார்’ என்று தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் பவானிசிங் பதில்மனு தாக்கல் செய்திருந்தார் அதில், ‘‘நான் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகச் சொல்வது தவறானது. பாஸ்கரன் இறப்பு பற்றி தெரியவில்லை’’ என்று கூறியிருந்தார்.

ஜெ. தரப்பு வழக்கறிஞர் குமாரும் பதில்மனு தாக்கல் செய்தார் அதில், ‘‘இந்த வழக்கின் மூன்றாம் நபரான அன்பழகனுக்கு மனு தாக்கல் செய்ய உரிமை இல்லை’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையில் நீதிபதி குன்ஹா நான்கு உத்தரவுகளை பிறப்பித்தார்.

1. லஞ்ச ஒழிப்புத் துறையினர் பாஸ்கரன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பதை விசாரித்து 15 ஆம் தேதிக்குள் கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
2. கைப்பற்றப்பட்ட வெள்ளிப் பொருட்களின் மஹஜர் பட்டியலைத் தாக்கல் செய்ய வேண்டும்.
3. பாஸ்கரன் வசம் உள்ள வெள்ளிப் பொருட்கள் பற்றிய சோதனைப் பட்டியல் விவரத்தையும் அறிவிக்க வேண்டும்.
4. ஜெயலலிதாவின் வீடு போயஸ்கார்டனில் வெள்ளிப் பொருட்களின் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அலமாரி சாவி யாரிடம் இருக்கிறது என்று தெரியப்படுத்த வேண்டும்’’ என்றார்.

பிப்ரவரி 15 ஆம் தேதி...
வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிப் பொருள்களை வைத்திருந்த ஜெயலலிதாவின் செயலாளரும் சட்ட ஆலோசகருமாக இருந்த பாஸ்கரன் குறித்த அறிக்கையை டி.எஸ்.பி சம்பந்தம் தாக்கல் செய்தார். அதில், ‘சென்னை அருகேயுள்ள சோழிங்கநல்லூர் வட்டாட்சியரால் பாஸ்கரனின் இருப்பிடத்தை உறுதிசெய்ய முடியவில்லை. சென்னை மாநகராட்சியில் பாஸ்கரன் மரணம் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், அவர் மரணம் அடைந்திருப்பதாகத் தெரிகிறது. அதற்கான சான்றிதழைப் பெற இயலவில்லை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைக் கடுமையாக ஆட்சேபித்த அரசுத் தரப்பு மூத்த வழக்கறிஞர் பவானிசிங், ‘‘பாஸ்கரன் உயிரோடு இல்லை என்று தமிழக ஊழல் தடுப்புத் துறை இயக்ககம் கூறுவதை நம்ப மாட்டேன். பாஸ்கரன் உயிரோடு இருக்கிறார் என்பதே என் கருத்து’’ என்றார்.

தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகனின் வழக்கறிஞரான தாமரைச்செல்வன், ‘‘2013, டிசம்பர் 2 ஆம் தேதி பாஸ்கரன் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் இறந்தார். அதற்கான இறப்புச் சான்றிதழ் வேலூர் மாநகராட்சியில் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி பெறப்பட்டுள்ளது" என்று கூறி, அதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

பிப்ரவரி 28...
‘ஜெயலலிதாவின் சட்ட ஆலோசகர் பாஸ்கரன் எடுத்துச் சென்ற 1,116 கிலோ வெள்ளிப் பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்' என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி குன்ஹா.

அதோடு, மார்ச் 7 ஆம் தேதி முதல் வழக்கின் இறுதி வாதத்தைத் தொடங்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.



ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 12:08 am

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு... ! ( மினி தொடர்: பகுதி-5)

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜெயலலிதா கொடுத்த வெள்ளித்தட்டு!

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதத்தில் ஏப்ரல் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் சில சுவாரஸ்ய காட்சிகள்...

வருமான வரித்துறை அதிகாரிகள் சீனிவாசன்,சீத்தராமன்,செல்வராஜ் ஆகியோர் அளித்துள்ள சாட்சியங்களைப் படித்து காட்டினார் பவானிசிங்.அதில், 1988 முதல் 1993 ஆண்டு வரை ஜெயலலிதாவுக்கு சொந்தமான கட்டடம், நிலம், திராட்சைத் தோட்டம், பண்ணை வீடு உள்பட பல வழிகள் வந்த வருமானம், செலவு, கடன் உள்பட அனைத்து விவரங்களையும் கொண்ட வருமான வரி ஆவணங்களைத் தாக்கல் செய்ததுடன், அவரது சொத்துகளுக்கான சொத்துவரி, வருமானவரி செலுத்திய விவரங்கள் இருப்பதைப் படித்துக் காட்டினார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அளித்துள்ள சாட்சியத்தையும் படித்துக்காட்டினார் பவானிசிங்.

'தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் அழைப்பின் பேரில் தலைமைச் செயலகத்தில் அவரைச் சந்தித்துப் பேசினேன். அப்போது ‘6.9.1995 அன்று வி.என்.சுதாகரன் திருமணம் நடக்கிறது; அதில் இசை நிகழ்ச்சி நடத்திக்கொடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.

அவரின் விருப்பத்தை ஏற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளில் இரவு 9.45 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை என்னுடன் சேர்ந்து 25-க்கும் மேற்பட்டவர்கள் நிகழ்ச்சி நடத்திக் கொடுத்தோம்.அதற்கு அன்பளிப்பாக எனக்கு வெள்ளித்தட்டு, வெள்ளி குங்குமச்சிமிழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நான் கட்டணம் எதுவும் வாங்கவில்லை.தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் தமிழ் திரையுலகின் மூத்த கலைஞராக இருந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் குடும்பத் திருமணம் என்பதால் கட்டணம் வாங்கவில்லை' என்று கூறியிருந்ததை படித்துக் காட்டினார்.

தஞ்சை மாவட்ட துணைப்பதிவாளர் கோவிந்தராஜ் கொடுத்துள்ள சாட்சியத்தில், 'சோமசுந்தரம் என்பவரின் மனைவி முத்துலட்சுமி பெயரில் இருந்த நான்கு சொத்துகள் முறையே ரூ.1,29,400, ரூ.1,39,000, ரூ.1,02,000 மற்றும் ரூ.1,20,000 என்ற மதிப்புடைய சொத்துகளை சசி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் 31.7.1995 அன்று பதிவுசெய்தோம்'என்று அளித்துள்ள சாட்சியத்தை படித்துக் காட்டினார்.

தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் மூத்த எலெக்ட்ரிக் இன்ஜினியர் திருத்துவராஜ் அளித்துள்ள சாட்சியத்தில், ‘எனது மேலதிகாரி தங்கவேலின் உத்தரவின் பேரில் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சிறுதாவூர் பண்ணைத் தோட்டம், பையனூர் பங்களா, ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் மற்றும் வழக்கின் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் ஆகிய கட்டடங்களில் மேற்கொண்டுள்ள எலெக்ட்ரிக்கல் பொருட்களை மதிப்பீடு செய்தோம். அதில் சிறுதாவூர் பண்ணைத் தோட்டத்தில் ரூ.17,50,000, பையனூர் பங்களாவில் ரூ.31,13189, ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் நிறுவனத்தில் ரூ.47,75,000, போயஸ் கார்டன் வீட்டில் ரூ.1,05,25,000 என்று மதிப்பீடு செய்து அறிக்கை கொடுத்தோம்’ என்ற சாட்சியத்தைப் படித்துக் காட்டினார்.

கோவை ராமநாதன் என்ற சார்பதிவாளர் அளித்துள்ள சாட்சியத்தில், ‘சசி என்டர்பிரைசஸ் மற்றும் கிரீன்ஃபார்ம் ஹவுஸ் ஆகிய நிறுவனங்களுக்காக 15 விவசாயிகளிடம் இருந்து நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கி பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்த நிலங்களை அப்போதைய மார்க்கெட் விலையை காட்டிலும் குறைவாக விலைக்கு வாங்கியுள்ளனர். நிலம் பதிவு செய்வதற்கான முத்திரை மற்றும் பதிவு கட்டணமும் குறைத்து செலுத்தப்பட்டுள்ளது’ என்று சொல்லியிருப்பதைப் படித்துக் காட்டினார்.

தியாகராஜசுவாமி என்ற சமையல்காரர் கொடுத்துள்ள சாட்சியத்தில், வி.என்.சுதாகரன் திருமணத்துக்கு சமையல் செய்ததற்காக ரூ 11 ஆயிரம் கட்டணத் தொகையை காசோலை மூலம் பெற்றதை, படித்துக் காட்டினார். அதையடுத்து, மெடோ அக்ரோ ஃபார்ம் நிறுவனத்துக்கு நிலம் வாங்கிக் கொடுத்தது தொடர்பான சாட்சியம அளித்திருந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் கண்ணன் மற்றும் கணேசன் ஆகியோரிடம் பவானிசிங் குறுக்கு விசாரணை நடத்தினார். "குற்றவாளிகளைக் காப்பாற்ற நீங்கள் பொய்யான தகவல் தெரிவித்திருக்கிறீர்கள்" என்றார்.

அதை கண்ணனும் கணேசனும் மறுத்தார்கள்.

வழக்கு விசாரணை தொடங்கியதும் லெக்ஸ் பிராபர்ட்டீஸ் கம்பெனி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குலசேகரன்,"இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எங்கள் நிறுவனங்களை விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்பது நியாயமான கோரிக்கை.எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து சொல்ல வாய்ப்பு கொடுக்க வேண்டும்" என்று மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு மீதான கோரிக்கைக்கு பதிலளித்த நீதிபதி குன்ஹா,"இந்த வழக்கு 14 ஆண்டுகளாக நடந்து வருகிறது.உங்கள் கம்பெனிகளை இடையில் சேர்க்கவில்லை.வழக்கு பதிவுசெய்த காலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.அப்போதே கம்பெனியை விடுவிக்க வேண்டும் என்று ஏன் கோரிக்கை வைக்கவில்லை. சென்னையில் விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது தூங்கிக்கொண்டிருந்தீர்களா? இந்த வழக்கு பெங்களூருக்கு மாற்றம் செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகள் முடிகிறது.எனக்கு முன் ஏழு நீதிபதிகள் வழக்கை விசாரணை நடத்தியுள்ளனர்.

ஏற்கெனவே அரசு மற்றும் குற்றவாளிகள் தரப்பு சாட்சியங்கள் விசாரணை முடிந்து, வழக்கறிஞர்கள் வாதமும் முடிந்துள்ளது.மீண்டும் வழக்கறிஞர்கள் வாதம் தொடங்கியுள்ளது.அப்போதெல்லாம் ஏன் கம்பெனியை விடுவிக்க வேண்டும் என்று கேட்கவில்லை.விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளபோது, மனு தாக்கல் செய்திருப்பதன் உள்நோக்கம் என்ன?" என்று கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை பார்த்து," என்ன சொல்கிறீர்கள்?" என்றார். அதற்கு பவானிசிங்,"இது தொடர்பாக நான் ஏற்கெனவே பதில்மனு தாக்கல் செய்துள்ளேன். அதில் கம்பெனிகள் அனைத்தும் குற்றவாளிகளின் சொத்துப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், அதை விடுவிக்க வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.

அதைக் கேட்டு அந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் நீதிபதி குன்ஹா.



ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 12:09 am

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு... ( மினி தொடர்: பகுதி-6)

ஜெயலலிதாவின் 306 சொத்து பட்டியல்!

மே 9 ஆம் தேதி அரசு வழக்கறிஞர் பவானி சிங்கும், அவரது ஜூனியர் மராடியும் நீதிபதி முன்பு ஜெயலலிதாவின் 306 சொத்துகளின் பட்டியலை மாறி மாறி வாசித்து முடித்தபோது, அத்தனை பரபரப்பு.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பின் இறுதி வாதம் 15வது நாளாக கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. சரியாக 10.30 மணிக்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா இருக்கையில் அமர்ந்தார்.

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், அசோகன், பன்னீர்செல்வம் ஆகியோர் ஆஜரானார்கள். தி.மு.க பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தரப்பில் வழக்கறிஞர்கள் சரவணன், நடேசன், பாலாஜி சிங், குமரேசன் ஆகியோர் ஆஜராகினர். குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வழக்கம்போல் ஆஜராகவில்லை.

அரசு வழக்கறிஞர் பவானி சிங், ''1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, முறைகேடாக யார் யாரிடம் எப்படியெல்லாம் சொத்துகளை வாங்கிக் குவித்திருக்கிறார் என்பதை இங்கு 2,500 பக்க சாட்சியங்கள் அடங்கிய ஆவணத்தோடு தெரிவிக்கிறேன்.

இந்த வழக்கு தொடங்குவதற்கு முன்பு குற்றவாளிகள் தரப்பில் 17 சொத்துகள் மட்டுமே இருந்தன. இந்த வழக்கு நடைபெற்ற காலகட்டத்தில் 306 சொத்துகள் அதிகரித்துள்ளன. அதில் 286 சொத்துகள் பல வழிகளில் வருமானத்துக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்டவை. இந்த வழக்கு காலத்துக்கு முன்பு இவர்களின் பொருளாதார நிலையும், வழக்கு நடைபெற்ற காலத்தில் இவர்களின் பொருளாதார நிலையும் சம்பந்தம் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது" என்று கூறி ஜெயலலிதா தரப்பின் சொத்துப் பட்டியலை காலை 10.30க்கு வாசிக்கத் தொடங்கினார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வாசிக்கத் தொடங்கியவர்கள், மாலை 4.15 மணிக்கு முடித்தனர்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் வாசித்த ஜெயலலிதாவின் 306 சொத்துப் பட்டியல் இதுதான்...

''இந்த வழக்கின் குற்றவாளிகளாகக் கருதப்படும் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் பெயர்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இவர்கள் பங்குதாரர்களாக இருந்து தொடங்கிய ஜெயா பப்ளிகேஷன், சசி என்டர்பிரைசஸ், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ஜே.எஸ்.ப்ராப்பர்ட்டீஸ், லெக்ஸ் ப்ராப்பர்ட்டீஸ், ஜெ ஃபார்ம் ஹவுஸ், ஜெயா கன்ஸ்ட்ரக்‌ஷன், ரிவர்வே அக்ரோ பிரைவேட் லிமிடெட், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், கிரீன் கார்டன், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், சூப்பர் டூப்பர் பிரைவேட் லிமிடெட் என 32 கம்பெனிகள் பெயரிலும் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன.

போயஸ் கார்டன் நிலம் மற்றும் கட்டடம் 10 கிரவுண்ட் 330 சதுர அடி விலை ரூ.1,32,009, ஹைதராபாத் சிட்டியில் பிளாட் நம்பர் 36ல் விரிவாக்கப்பட்ட 651.18 சதுர அடி கட்டடம் ரூ.50,000, ஹைதராபாத் பஷீராபாத் என்ற கிராமத்தில் திராட்சைத் தோட்டம் மற்றும் இரண்டு பண்ணை வீடுகள், வேலையாட்களுக்கான குவாட்டர்ஸ் உள்ளிட்ட 11.35 ஏக்கர் நிலம் ரூ.1,65,058. மேலும், அதே பகுதியில் 93/3 சர்வே எண்ணில் 3.15 ஏக்கர் ரூ.13,254 ஆகியவை சந்தியா மற்றும் ஜெயலலிதா பெயரில் வாங்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதா பெயரில் வட சென்னையில் சேயார் கிராமத்தில் விவசாய நிலம் வேதாசல முதலியார் மகன் நடேச முதலியாரிடம் 3.43 ஏக்கர் நிலம் ரூ.17,060, ஜெயலலிதா சசிகலா பெயரில் சென்னை-28, சீனிவாச அவின்யூ நிலம் மற்றும் வீடு 1,897 சதுர அடி வெங்கட சுப்பனிடம் இருந்து ரூ.5,70,039 வாங்கியது. சசிகலா பெயரில் சாந்தோம் ஆர்.ஆர். ஃப்ளாட் ரூ.3,13,530, சசி என்டர்பிரைசஸ் பெயரில் சென்னை-4, அப்பாஸ் அலிகான் ரோட்டில் ரூ.98.904க்கு ஷாப்பிங் மால், நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் ரோட்டில் 11 கிரவுண்ட் 736 சதுர அடி நிலம் ரூ.22,10,919, மவுண்ட் ரோடு, மயிலாப்பூரில் ஜெயலலிதா பெயரில் வாங்கிய நிலம் மற்றும் கடை ரூ.1,05409.

தஞ்சாவூர் மானம்புசாவடியில் 2,400 சதுர அடியில் நிலம் மற்றும் வீடு ரூ.1,57,125, அதே பகுதியில் 51,000 சதுர அடி காலி நிலம் ரூ.1,15,315, மீண்டும் அதே பகுதியில் காலி நிலம் ரூ.2,02,778 ஆகியவை சசி என்டர்பிரைசஸ் வாங்கியது.

சசிகலா பெயரில் திருச்சி அபிராமிபுரத்தில் நிலம் மற்றும் வீடு 3,525 சதுர அடி ரூ.5,85,420, ஜெயா பப்ளிகேஷன் பெயரில் கிண்டி தொழிற்பேட்டை நிலம் மற்றும் ஷெட் ரூ.5,28,039, புதுக்கோட்டை 1 கிரவுண்ட் 1,407 சதுர அடி நிலம் மற்றும் கட்டடம் ரூ.10,20,371க்கும், டான்சி நிலம் 55 கிரவுண்ட் ரூ.2,13,68,152, சசிகலா, இளவரசி, சுதாகரன் பெயரில் 900 ஏக்கரில் கொடநாடு டீ எஸ்டேட் மற்றும் ஃபேக்டரி ரூ.7,60,00,000, வெலகாபுரம் கிராமத்தில் மெடோ அக்ரோ ஃபார்ம்ஸுக்கு 210.33 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 1,200 ஏக்கர், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், முட்டுக்காடு, வெட்டுவாங்கேணி, பையனூர், சிறுதாவூர், சோழிங்கநல்லூர் செய்யூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, மன்னார்குடி என தமிழகத்தின் பல மாவட்டங்களில் காலி நிலம், கட்டடம், கடைகள் மற்றும் விளைநிலங்களும் வாங்கப்பட்டுள்ளன. சென்னையில் கிண்டி, டி.டி.கே ரோடு, மவுண்ட் ரோடு, லஸ் பகுதிகளில் இடங்கள், கட்டடங்கள் வாங்கப்பட்டுள்ளன.

பையனூர் பங்களா ரூ.1,25,90,261, ஹைதராபாத் திராட்சைத் தோட்டப் பண்ணை வீடு ரூ.6,40,33,901, போயஸ் கார்டன் வீடு விரிவாக்கம் ரூ.7,24,98,000, சிறுதாவூர் பங்களா ரூ.5,40,52,298 உட்பட பல இடங்களில் உள்ள பண்ணை வீடுகள், புதிய கட்டடங்களின் மராமத்துப் பணிகளின் செலவுகள் பட்டியலிடப்பட்டன.

இளவரசி அக்கவுன்டில் அபிராமிபுரம் இந்தியன் வங்கியில் ரூ.2,42,211, ஜெயலலிதா அக்கவுன்டில் மயிலாப்பூர் கனரா வங்கியில் ரூ.19,29,561, மயிலாப்பூர் ஸ்டேட் பேங்க்கில் ரூ.1,70,570 சசிகலா பெயரில் கிண்டி கனரா வங்கியில் ரூ.3,17,242, சுதாகரன் அக்கவுன்டில் அபிராமிபுரம் இந்தியன் வங்கியில் ரூ.5,46,577 என, பல பெயர்களில் பல வங்கிகளில் இருப்பு வைத்திருக்கிறார்கள்.

ஜெயலலிதா பெயரில் வாங்கப்பட்ட கார்கள் டாடா சியரா ரூ.4,01,131, மாருதி 800 ரூ.60,435, மாருதி ஜிப்ஸி, ட்ராக்ஸ் ஜீப், ஜெயா பப்ளிகேஷன் டாடா எஸ்டேட் கார், டாடா மொபைல் வேன் என பல மாடல்களில் 30க்கும் மேற்பட்ட கார்கள் வாங்கியிருக்கிறார்கள்.

போயஸ் கார்டனில் கைப்பற்றப்பட்ட 389 ஜோடி செருப்புகள் ரூ.2,00,902, 914 பட்டுப் புடவைகள் ரூ.61,13,700, மற்ற புடவைகள் ரூ.27,08,720 மற்றும் பழைய புடவைகள் ரூ.4,21,870, 28 கிலோ தங்க நகைகள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட வைரக்கற்கள் என 306 சொத்துகளின் அப்போதைய மதிப்பு ரூ.66,44,73,573’’ என்று விடாமல் வாசித்து முடித்தார்.



ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் 16 நாட்கள்! மினி தொடர்:   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக