புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_m10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_m10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_m10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_m10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_m10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_m10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_m10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_m10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_m10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_m10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_m10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10 
435 Posts - 47%
heezulia
உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_m10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_m10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_m10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_m10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10 
30 Posts - 3%
prajai
உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_m10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_m10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_m10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_m10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_m10உலக மெகா பெண் இயக்குநர்கள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக மெகா பெண் இயக்குநர்கள்!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 7:07 am

உலக மெகா பெண் இயக்குநர்கள்!
சினிமா
ஆர்.சரண்


உலக சினிமாவில் பெண்களின் பங்களிப்பு தனித்துவமானது. இந்த வகையில் மனதை வசீகரிக்கும், சிந்தனையைக் கீறிப்பார்க்கும் உன்னத சினிமாக்களை இயக்கிய பெண் இயக்குநர்கள் சிலரைப் பற்றிய சினி மினி அறிமுகம் இங்கே!

சமீரா மக்மல்பஃப்

'உலக சினிமா’ என்று கொண்டாடப்படும் ஈரானிய சினிமாவின் மிகமுக்கிய இயக்குநரான மோஹ்சென் மக்மல்பஃப்பின் மகள், சமீரா. 8 வயதில் அப்பாவின் புகழ்பெற்ற படமான 'தி சைக்ளிஸ்ட்’ல் குழந்தை நட்சத்திரமாக நுழைந்த இவர், 17-வது வயதில் 'தி ஆப்பிள்’ என்ற படத்தை இயக்கினார். ஈரானில் தன் பெற்றோர்களால் 11 வருடங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு, பின்பு பக்கத்து வீட்டினர் உதவியால் மீட்கப்பட்ட இரண்டு சிறுமிகளைப் பற்றிய கதை இது. 'கேன்ஸ்’ திரைப்பட விழாவில் உலகின் இளம் இயக்குநர் இயக்கிய படம் என்கிற பிரிவில் 98-ம் ஆண்டில் இந்தப் படம் தேர்வானது.
உலக மெகா பெண் இயக்குநர்கள்! P38
இரண்டே ஆண்டுகளில் நூற்றுக்கும் அதிகமான உலகத்திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு அருமையான துவக்கத்தை சமீராவுக்கு 'ஆப்பிள்’ தர, 'பிளாக் போர்ட்ஸ்’, 'செப்டம்பர் 11’, 'அட் ஃபைவ் இன் தி ஆஃப்டர்நூன்’, 'டூ லெக்டு ஹார்ஸஸ்’ என பெண் கல்வியையும், போரால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களையும் களமாகக்கொண்ட படங்களாகத் தொடர்ந்து இயக்கினார். இப்போது 34 வயதாகும் சமீரா, 2007-ல் ஆப்கானிஸ்தானுக்கே போய் தீவிரவாதிகளின் மிரட்டல்களுக்கும் குண்டுவீச்சுக்கும் இடையே 'டூ லெக்டு ஹார்ஸஸ்’ படத்தை இயக்கினார். இப்போது, அடுத்த படத்துக்காக நீண்ட இடைவெளிவிட்டுக் காத்திருக்கிறார் சமீரா.

தீபா மேத்தா

பிறப்பால் இந்தியரான தீபா, இப்போது கனடாவில் குடியுரிமை பெற்று டொராண்டோ நகரில் வசிக்கிறார். பஞ்சபூதங்களில் முக்கியமான நீர், நிலம், நெருப்பு போன்றவற்றை மையமாக வைத்து 'ட்ரையாலஜி’ எனப்படும் மூன்று வெவ்வேறு உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சினிமாக்களை இயக்கியதால் உலகின் கவனத்தை ஈர்த்தவர். சமூகம் பேசத் தயங்கும் விஷயங்களைக் கதைக்களமாக அமைத்து சினிமாக்களை உருவாக்குவது தீபா மேத்தாவின் பிரத்யேக ஸ்டைல். 'ஃபயர்’ படம் சர்சைக்குரிய விஷயமாகக் கருதப்படும் பெண் ஓரினச்சேர்க்கை விஷயத்தை தைரியமாகப் பேசியது. 'வாட்டர்’ திரைப்படம் பாப்ஸி சித்வா என்பவர் எழுதிய 'வாட்டர்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இளம்வயதில் விதவையான ஒரு பெண்ணை, முதிய விதவைகள் வாழும் இல்லத்தில் வாழ்நாள் முழுக்க வசிக்கவைக்க முனையும் சமூகத்தைப் பற்றி காட்டமாகப் பேசியது. கலாசார காவலர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சில அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு, படம் திரையிடப்பட்ட தியேட்டர்களுக்கு மிரட்டல்கள்கூட விடப்பட்டன. ஆனாலும், படம் உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்தது. 1998-ல் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பட்டது, இவரின் 'எர்த்’ படம். 1947-ல் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது நிகழ்ந்த சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டதுதான் இந்த எர்த்!
உலக மெகா பெண் இயக்குநர்கள்! P38a

மீரா நாயர்

பத்மபூஷண் விருதுபெற்ற நம் இந்திய பெண் இயக்குநர், மீரா. மும்பை மாநகரின் அழுக்குப் பக்கங்களை படையல் வைத்தது இவர் இயக்கிய முதல் படம் 'சலாம் பாம்பே’. மும்பையில் வாழும் சாலையோர சிறுவர்களைப் பற்றிய இப்படம் உலகத்திரைப்பட விழாக்களில் இந்தியாவின் மீது கவனம் விழ காரணமாக அமைந்தது. 'காமசூத்ரா: ஏ டேல் ஆஃப் லவ்’, 'மான்சூன் வெட்டிங்’, 'அமீலியா’, 'நேம்சேக்’, 'வானிட்டி ஃபேர்’ போன்ற முக்கியப் படங்களை இயக்கிய இவர், தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று நியூயார்க்கில் வசித்து வருகிறார்.

கேத்ரின் பிகலோ

2008-ல் வெளியான, காத்ரின் இயக்கிய 'தி ஹர்ட் லாக்கர்’ படம், சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதோடு சேர்த்து உலகம் முழுவதும் 42 உயரிய விருதுகளைக் குவித்தது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், 2008-ல் இந்தப் படத்துக்கு போட்டியாக இறுதிச் சுற்றுவரை நாமினேட் செய்யப்பட்டது, 'அவதார்’. இதில் விசேஷம்... 'அவதார்’ படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன், இவருடைய முன்னாள் கணவர். அகில உலக ஊடகங்கள் தொழில்நுட்ப ரீதியாக மிரட்டிய 'அவதார்’ படத்துக்கே ஆஸ்கர் என ஆரூடங்கள் சொன்னபோது, அமெரிக்க பாம்ப் ஸ்குவாடு, ஈராக்கில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அழித்தொழிக்கும் சம்பவங்களின் கோவையான 'தி ஹர்ட் லாக்கர்’ படம், வித்தியாசமான திரைக்கதை உத்தியால், பணியில் இருக்கும் வீரர்களின் நுண்ணுணர்வை எடுத்துச் சொல்லி, ஆஸ்கரை வென்றது.

2001 செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல் சம்பவம் தொடங்கி, பாகிஸ்தானின் அபோடாபாத்தில் மே 2, 2011-ல் ஒசாமா பின்லேடனை சுற்றிவளைத்து சுடப்பட்டது வரை அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத்துறையின் பணிகளை கேண்டிட் கேமரா பாணியில் விவரித்திருந்தது இவருடைய இன்னொரு படமான 'ஜீரோ டார்க் தர்ட்டி’. கற்பனைக்கு எட்டாத உழைப்போடு இவர் உருவாக்கியது இப்படம். ஆனால், நாட்டின் மிகமுக்கியமான ரகசிய தகவல்களைப் படத்துக்காக எப்படியோ திருடிவிட்டனர் என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் சில மாதங்கள் முன்புவரை இவரை விசாரணை வளையத்தில் வைத்திருந்து, அண்மையில்தான் விடுவித்தது. அந்த அளவுக்கு தத்ரூபமாக பின்லேடன் வேட்டையை படமாக்கி இருந்தார் கேத்ரின்.
உலக மெகா பெண் இயக்குநர்கள்! P38b

சோஃபியா கப்போலா

'தி காட் ஃபாதர்’ படத்தை இயக்கிய, பிரபல அமெரிக்க சினிமா இயக்குநர் ஃபிரான்சிஸ் ஃபோர்டு கப்போலாவின் செல்ல மகள். 43 வயதாகும் சோஃபியாவின் இரண்டாவது படமான 'லாஸ்ட் இன் டிரான்ஸ்லேஷன்’, 2003-ல் ரிலீஸ் ஆகி பலத்த வரவேற்பைப் பெற்றது. டோக்கியோ நகரில் எதேச்சையாக சந்தித்துக்கொள்ளும் வயதான நடிகருக்கும், இளம் கல்லூரி மாணவிக்கும் இடையே நிகழும் ரொமான்ஸ்தான் படத்தின் கதை. வசூலை வாரிக்குவித்த இப்படம், ஆஸ்கர் விருதுப் பட்டியலில் சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதை பிரிவில் நாமினேட் செய்யப்பட்டது. முதன்முதலாக சிறந்த இயக்குநருக்கான பிரிவில் ஒரு பெண் இயக்குநர் பெயர் நாமினேட் செய்யப்பட்டது இந்தப் படத்துக்காகத்தான். இயக்கத்துக்கான விருது கிடைக்காவிட்டாலும், 'சிறந்த ஒரிஜினல் ஸ்க்ரீன்ப்ளே’ பிரிவில் விருதை வாங்கி, தலைமுறை பெருமையைக் காப்பாற்றினார் சோஃபியா. ஆம்... தாத்தா கார்மைன் கப்போலா, அப்பா ஃபிரான்சிஸ் ஃபோர்டு கப்போலா என குடும்பமாய் வாங்கிய ஆஸ் கர் பட்டியலில் தன் பெயரையும் சேர்த்துக்கொண்டார்.

பெண்களின் பார்வையில் இன்னும் அழகாகவும், ஆழமாகவும் விரிகிறது திரை!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 7:10 am

பதினேழு வயதினிலே..!

17 வயதிலிருக்கும் சர்வதேச ஸ்டார் டீன் பெண்கள் சிலரின் புரொஃபைல்!

பிரிட்டனி வென்ஞர்

அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக மாணவி. மூளையைப் பயன்படுத்தி படிக்க வேண்டிய வயதில், புதிதாக ஒரு மூளையையே உருவாக்கிவிட்டார். ஆம்... திசுக்களின் மாதிரிகளை வைத்து புற்றுநோய்க்கான கூறுகளை அறியும் செயற்கை மூளையை உருவாக்கியுள்ளார் வென்ஞர். ஜீன்களின் வரிசையையும் தகவலையும் பிரித்தறியும் திறன் கொண்டது இந்த செயற்கை மூளை. இவருடைய ஆராய்ச்சிக்காக 'டெட் எக்ஸ் அட்லாண்டா’வில் இவருக்கு வழங்கப்பட்டது 50 ஆயிரம் டாலர் ஸ்காலர்ஷிப்!

செயற்கை இதயம், நுரையீரல்... உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்கிறோம்!
உலக மெகா பெண் இயக்குநர்கள்! P96


பெக்கி ஜி


முழுப்பெயர் ரெபெக்கா மரியா கோமெஸ். இதை எப்படி பெக்கி ஜி எனச் சுருங்க முடியும் என்று கேட்கக் கூடாது. இவர் பாடல் புனைவார், அதை மிக ஸ்டைலாகப் பாடுவார், பாடிக்கொண்டே ஆடவும் செய்வார். ராப் சிங்கர். அமெரிக்காவை மெல்ல உசுப்ப ஆரம்பித்திருக்கிறார் இந்த ஸ்வீட் செவன்டீன் லாஸ் ஏஞ்சலஸ் ராட்சஸி. இந்த ஆண்டு வெளியான இவருடைய 'ஷவர்’ ஆல்பம் இவரை பாப் உலகில் பரபரப்பாக்கியிருக்கிறது.

'பாப்’பரசி!


டெய்லர் ஃபெர்ன்ஸ்

பிறந்தது அமெரிக்க மண். ஆனால், மண்ணை மிதிக்க நேரம் இல்லை பெண்ணுக்கு. காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்காத குறை. நினைவு தெரிந்த வயதிலிருந்தே கார் ரேஸ்தான் சாப்பாடே! எட்டு வயதானபோது, ஜூனியர் நோவிஸ் குவார்ட்டர் மிட்ஜெட் போட்டியில் வென்றதில் ஆரம்பித்தது இவருடைய முதல் சாதனை. ஒவ்வொரு வயதிலும் அந்த வயதில் செய்யப்பட்ட முந்தைய சாதனைகளை முறியடிப்பதுதான் இவருடைய பொழுதுபோக்கு! நேஷனல் மிட்ஜெட் - யு.எஸ்.ஏ.சி. சீரிஸ் எனும் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றிருப்பது சாதனை!

கியர்... சியர்!
உலக மெகா பெண் இயக்குநர்கள்! P96aa
சிமர் மல்ஹோத்ரா

நம் இந்தியப் பட்டாம்பூச்சி. புதுடெல்லியில் பிறந்து வளர்ந்தவர். 'தெர் இஸ் அ டைட்’ (There is a tide) என்பது இவருடைய முதல் நாவல். புவியை நேசிக்கும் ஒரு பொலிடிக்கல் கதை இது. இவர், ஒரு சமூக சேவை நிறுவனமும் நடத்துகிறார். டெல்லியில் சம்பிரதாயமான குடும்பத்தில் பிறந்த ஒரு பெண், அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் படிக்கச் செல்கிறாள். அங்கு அவளுக்கு ஏற்படும் அனுபவங்கள் அவளை அரசியல் உலகுக்குத் தள்ளுகிறது... இதுதான் சிமர் மல்ஹோத்ராவை புகழ்பெறச் செய்திருக்கும் கதையின் ஒன்லைன்.

புக்கர், நோபல் எல்லாம் இனிதான்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 7:15 am

பதினேழு வயசு... ஒரு சர்ப்ரைஸ் சர்வே!
சர்வே
அவள் விகடன் டீம்


படங்கள்: வீ.சக்தி அருணகிரி, கா.முரளி, தி.கௌதீஸ், அ.ஆமினா பீவி, கோ.க.தினேஷ், நா.ராஜமுருகன்

'அவள் விகடன் பதினேழாம் ஆண்டு சிறப்பிதழுக்காக ஒரு ஸ்பெஷல் சர்வே...' என்று யோசித்தபோது, நம் கண்களில் மின்னியவர்கள்... பட்டாம்பூச்சிகளாக சிறகடித்துக்கொண்டிருக்கும் பதினேழு வயது ப்ளஸ் டூ மாணவிகள்தான். புரிந்தும் புரியாமலும் இருக்கும் இரண்டும்கெட்டான் வயதான இந்த வயதில் எடுக்கும் முடிவுகள்தான், அடுத்தடுத்த ஆண்டுகளில் இவர்களுடைய வாழ்க்கையைத் தீர்மானிப்பதாக இருக்கும். ஆம்... கல்லூரியில் காலடி எடுத்து வைப்பதற்கான கடைசி படியில் நின்றுகொண் டிருக்கும் வயதாயிற்றே!
உலக மெகா பெண் இயக்குநர்கள்! P184
இந்த மாணவிகளின் உலகம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக ஏழு கேள்விகள் கொண்ட சர்வே தாளுடன் விகடன் மாணவ பத்திரிகையாளர்கள் களத்தில் இறங்கினார்கள். சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், விருத்தாசலம், திருச்செங்கோடு, விருதுநகர், கோவில்பட்டி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், கரூர், நாமக்கல், திருவாரூர், திண்டிவனம், தேனி, புதுச்சேரி, புதுக்கோட்டை, பெரம்பலூர், திண்டுக்கல் என பல ஊர்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 2,500 மாணவிகளை நேரடியாக சந்தித்து, அவர்களிடம் இருந்து பதில்களைப் பெற்றனர்.

இந்த சர்வேயின்போது, நமக்குக் கிடைத்த அனுபவம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்...


தேனி, அரசு, பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வே தாளை நன்கு படித்த மாணவிகள். 'நீங்கள் படிப்பது ஸ்டேட் கவர்ன்மென்ட் ஸ்கூல், சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஸ்கூல், பிரைவேட் ஸ்கூல்?' என்ற கேள்வியைப் படித்ததும் சற்றுத் திணறி, ''இதுக்கு அர்த்தம் என்ன?'' என்று தயக்கத்துடன் கேள்விகளை வீசினார்கள். தெளிவுபடுத்திய பிறகும்கூட ஏதோ ஒரு சந்தேக மனதோடுதான் பதிலை நிரப்பினார்கள்.
உலக மெகா பெண் இயக்குநர்கள்! P184a
'ப்ளஸ் டூ-வுக்கு பிறகு என்ன படிக்க ஆசை?' என்ற கேள்விக்கு டாக்டர், இன்ஜினீயர் என்று கொடுக்கப்பட்டிருந்த ஆப்ஷன்களைவிட, 'மற்றவை' என்று கோடிட்ட இடத்தில் டீச்சர், அக்ரி என்று எழுதி ஆச்சர்யப்படுத்தினார்கள் நிறைய மாணவிகள். இவர்களிடம் ''டீச்சர் ஆகி என்ன பண்ணப் போறீங்க?'’ என்றபோது வந்த பதில், அதிர்ச்சியில் உறைய வைத்தது. ''டீச்சர் வேலையில நிறைய நேரம் சும்மாவே பொழுது போக்கலாம்' என்பதுதான் அவர்களின் பதில்!
உலக மெகா பெண் இயக்குநர்கள்! P184b
'உங்களை எந்தவிதத்தில் அழகுபடுத்திக்கொள்ள விரும்புகிறீர்கள்?' என்ற கேள்விக்கு, ''வீட்டுலதான்... வெளியில போறதுக்கு அப்பா - அம்மா விடமாட்டாங்க'’ என்று தங்களின் சூழ்நிலையைப் புரியவைத்தார்கள் நடுத்தர மற்றும் சிறுநகரங்களைச் சேர்ந்த மாணவிகள். ஆனால், சென்னை, கோவை போன்ற சில நக ரங்களின் மாணவிகளின் பதில் இதற்கு நேரெதிர். முடிந்தால் வாரத்துக்கு ஒரு தடவைகூட பியூட்டி பார்லருக்கு விசிட் அடிப்பவர்களும் இவர்களில் அதிகம் இருக்கிறார்கள். பெரும்பாலும் பெற்றோருடன் மட்டுமே செல்ல அனுமதி கிடைக்கிறது.

நடுத்தர மற்றும் சிறுநகர மாணவிகளில் சிலருக்குத்தான் 'ஃபேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்கள் பற்றி தெரிந்திருக்கிறது. ஆனால், 'பர்சனலாக ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறீர்களா?' என்ற கேள்விக்கு 'ஸ்மார்ட் போன்' என்பது பற்றியே சில ஊர்களில் தெளிவுபடுத்தவும் வேண்டியிருந்தது. புதுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவிகளில் பெரும்பாலானவர்களுக்கு 'ஸ்மார்ட் போன்' பற்றி அத்தனை அறிமுகம் இல்லாமல்தான் இருக்கிறது.

சென்னை போன்ற பெரு நகரங்களில் இருக்கும் மாணவிகளில் 'பர்சனல் போன் வைத்திருக்கிறீர்களா?' என்ற கேள்விக்கு அக்கம்பக்கம் பார்த்துவிட்டு, ''இதை அவசியம் சொல்லணுமா? ஏன்னா, நாங்க வாட்ஸ்ஆப் எல்லாம் யூஸ் பண்றோம்னு தெரிஞ்சா, ஸ்கூல்ல என்ன சொல்வாங்களோனு பயமா இருக்கு'’ என்று தயக்கத்துடன் பதிலை 'டிக்’ செய்தார்கள். சென்னை பள்ளிகளைப் பொறுத்தவரை, பெரும்பாலான மாணவிகளிடமும் பர்சனல் போன் இருக்கிறது. இதில் காஸ்ட்லி மொபைல்களும் அடக்கம். தினமும் பள்ளி விட்டதும், டியூஷன், ஸ்பெஷல் கிளாஸ், வீட்டுப்பாடம் எல்லாவற்றையும் முடித்துவிட்டு இரவு சக மாணவிகளோடு 'வாட்ஸ்ஆப்’பில் சாட் செய்வதுதான் இவர்களுடைய முக்கியமான வேலை.
உலக மெகா பெண் இயக்குநர்கள்! P184e
''எப்போ பார்த்தாலும் படி... படி... படி... இந்த வார்த்தையை தவிர, ஸ்கூலுக்கோ, பேரன்ட்ஸுக்கோ வேற வார்த்தையே கிடைக்காது. ஏகப்பட்ட பிரஷருக்கு மத்தியில இருக்கிற எங்களுக்கு, 'வாட்ஆப்’ல சாட் பண்றது மட்டும்தான் ஒரே ரிலாக்ஸேஷன். ஸோ வீ என்ஜாய்ட் இட்!'’ என்று கண்களில் சந்தோஷம் பறக்க சொல்கிறார்கள், சென்னை மாணவிகள்.

சென்னை மாணவிகளிடம் ''ஃப்ரண்ட்ஸோட அடிக்கடி எந்த டாபிக் பற்றி பேசுவீர்கள்?'’ என்று கேட்டதும்... ''பேரன்ட்ஸ் பிரஷர் பத்திதான்'’ என்று கோரஸாக பதில் வந்து அதிர வைத்தது. ''அந்தப் பொண்ணு பாரு எப்படி படிக்கிறானு கம்பேரிசன் வேற பண்ணுவாங்க. அவங்களோட டார்ச்சர் பத்திதான் அதிகம் பேசுவோம்'' என்பவர்கள், இன்டர்நெட்டை படிப்பு தவிர கேம்ஸ் ஆட, ஃபேஸ்புக்கில் உலாவ, டிவீட் அடிக்க என்று சகலத்துக்கும் உபயோகிக்கிறர்கள்.

பொதுவாக பிள்ளைகளின் டிரெஸ் சென்ஸ் விஷயத்தில் நடுத்தர மற்றும் சிறு நகரங்களில் சுடிதார் மாதிரியான உடைகளும்... மாநகரங்களில் மார்டர்ன் உடைகளும் அதிகமாக மாணவிகளால் விரும்பப்படுகின்றன. ஆனால், மாநகரங்களிலும் பெற்றோர்களின் கட்டளைக்கிணங்க அதிகமான மாணவிகள் சுடிதார்தான் அணிகிறார்கள்.

மாநகரம், நடுத்தர நகரம் மற்றும் சிறுநகரம் என்று எல்லா ஊர் மாணவிகளுமே பெரும்பாலும் சினிமா மீது கூடுதல் ஆர்வத்தோடுதான் இருக்கிறார்கள். சக மாணவிகளிடம் படிப்பைத் தவிர, இவர்கள் அதிக மாக விவாதிப்பது சினிமா பற்றித்தான்! சொல்லப் போனால், படிப்பைக் காட்டிலும் அதிகமாக விவாதிக் கும் விஷயமாகவே இருக்கிறது இந்த சினிமா!

இதற்கு அவர்கள் சொல்லும் பதில் - ''சினிமா தான் எங்களுக்கு ஒரே பொழுதுபோக்கு!''

சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் சர்வே கேள்விகளை கொடுத்ததும்தான் தெரிந்தது, அங்குள்ளவர்களுக்கு தமிழ் பேச மட்டுமே தெரியும். படிக்கத் தெரியாது என்கிற விஷயம்! இத்தனைக்கும் அவர்களில் பெரும்பாலானவர்கள், தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே! அவர்களுக்கெல்லாம் கேள்விகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாம் சொல்லிக்கொண்டே வர, அதைக் கேட்டுக் கேட்டு விடைகளை 'டிக்’ செய்தார்கள்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 7:19 am

இந்தப் பெண்ணுக்கு என்ன வயசு?


உலக மெகா பெண் இயக்குநர்கள்! P92

இந்தப் படத்தில் உள்ள பெண்ணைப் பாருங்கள். இவருக்கு என்ன வயதிருக்கும் என்று யூகியுங்கள். 16, 20, 25... மிஞ்சிப் போனால் 30 என்று நீங்கள் சொன்னால், உண்மையில் அவர் அசத்தும் அழகிதான்! இவர், சீன நடிகை லியு ஜியாக்யுங் (Liu xiaouqing). இவருக்கு இப்போது வயது, 59. இந்த வயதிலும் 'இளமையான நடிகை’ என்கிற பட்டத்துடன் வசீகரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார்!

'வாவ்!’ என்று மூக்கின் மீது விரல் வைக்கும் முன்னர், இவர் செய்துகொண்டிருக்கும் மற்றொரு சாதனையையும் அறிந்தால் புருவங்கள் உயர்த்துவீர்கள்!

சீனாவில் நடந்த 'ஃபென்குவா ஜுயோடை' என்ற மேடை நாடகத்தில், 16 வயதுப் பெண்ணாக நடித்து, கொஞ்சமும் வயதில் சந்தேகம் வராத அளவுக்கு தன் இளமையால் பார்வையாளர்களுக்கு மேஜிக் காட்டி வருகிறார்.

வெயிட்... வெயிட்... இதோடு ஆச்சர்யம் முடிந்துவிடவில்லை.

தன் இளமைக் காலத்தில் சாதாரண தொழிலாளியாக பயணத்தை ஆரம்பித்த இவர், 20-ம் வயதில் நடிகையாகி, 1975 - 1991 வரை முன்னணி நடிகை இடத்தை தக்கவைத்திருந்தார். பிறகு, நடிப்புக்கு இடைவெளிவிட்டு, பிசினஸில் கவனம் செலுத்தி, முன்னணி தொழிலதிபராகி சீனாவையே தன்னை திரும்பிப்பார்க்க வைத்தார். சீனாவின் 50 பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தனக்கும் இடம் கிடைத்துவிட, மீண்டும் 2004-ல் நடிக்க வந்து, இன்னமும் இளமை மாறாத ரகசியத்துடன் வசீகரித்து வருகிறார் லியு.

சீனாவில் வழங்கப்படும் சிறந்த நடிகைக்கான '100 ஃப்ளவர்ஸ்’ விருதை வென்று அசத்தியிருக்கும் லியு சொல்லும் அழகின் ரகசியம் - ''கோபம் என்பதே எனக்கு வராது. இந்த சாது குணம்தான் என் அழகின் ரகசியம்!''

கேட்டுக்கொண்டீர்களா லேடீஸ்?!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 7:20 am

''மாத்தி யோசிச்சா... மகத்தான வெற்றி!’'
டெய்லரிங்


உலக மெகா பெண் இயக்குநர்கள்! P30a
மடிப்புக் கலையாத புதுத் துணியைத் தைப்பதற்கு நூற்றுக்கணக்கில் கடைகள் உள்ளன நம் ஊரில். பழைய, சாயம் போன அல்லது அளவில் பெரியதாகிப் போன உடைகளை மாற்றித் தைத்துத் தருவதற்குத்தான் தையல்காரர்கள் கிடைக்கமாட்டார்கள். ஆனால், சென்னை, மயிலாப்பூர், லஸ் கார்னரில் இருக்கும் 'ரீ-ஸ்டிட்ச்’ல், கோடி ரூபாய் கொடுத்தால்கூட புதுத்துணியைத் தைக்க மாட்டார்கள். 'ஒன்லி ஆல்டரேஷன்’ என்பதுதான் அவர்களின் தொழில் மந்திரம்!

ஆல்டரேஷனுக்காக வந்திருந்த சுடிதார்கள் மற்றும் பேன்ட், சட்டைகளே ஹேங்கர் முழுக்கத் தொங்கிக்கொண்டிருக்க, ஒருவர் உடைகளைப் பிரிக்க, மற்றொருவர் பிரித்தவற்றை வெட்ட என சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது அந்தக் கடையின் அலுவலகம். புத்துணர்ச்சியுடன் நம்மிடம் பேசிய அதன் உரிமையாளர் சசிகலா, ''மூணு தலைமுறைகளா, எங்க குடும்பத் தொழிலே தையல்தான். எங்க அப்பா, மாமனார், கொழுந்தனார்கள், நாத்தனார் வீட்டுக்காரர்னு எல்லாருமே டெய்லர்ஸ். கணவர் முருகதாஸ் மட்டும் பேங்க்ல வேலை பார்க்கிறார். அவரும் ஓய்வுநேரத்தில் தையல் வேலைகள் பார்ப்பார். இந்த ஊசியும் நூலும்தான் எங்களுக்கு சோறு போடுற தெய்வங்கள். கல்யாணத்துக்கு அப்புறம், தையல் கடை ஆரம்பிக்க யோசிச்சப்போ, 'புதுத்துணி தைக்கிறதுக்கு நிறைய பேர் இருக்காங்க. ஆனா, செஞ்சு தர ஆளில்லாத ஆல்டரேஷன் வேலைகளுக்காகவே நாம ஏன் ஒரு கடையை ஆரம்பிக்கக் கூடாது?’னு என் கணவர் கேட்டார். மத்தவங்க செய்யத் தயங்குற, செய்ய மறுக்குற அல்லது சோம்பேறித்தனப்படுற அந்த பலவீனத்தையே பலமா எடுத்துக்கிட்டு கடையை ஆரம்பிச்சோம். கடகடனு கஸ்டமர்கள் கிடைச்சாங்க. ஏன்னா, அந்தளவுக்கு இந்த வேலைகளுக்கான தேவை இருந்ததுதான்'' என்றவர்,

''எல்லா வகையான ஆல்டரேஷன் வேலைகளையும் செய்வோம். பேன்ட் இடுப்புப் பகுதியில ஆல்டரேஷன், பொதுவா யாரும் பண்ண மாட்டாங்க. நாங்க செய்வோம். இதுக்காகவே எங்க கடைக்கு நிறைய கஸ்டமர்ஸ் வர்றாங்க. பிராக்டிகல் பிரச்னை இருக்கிறதால, பிளவுஸ், உள்ளாடைகளைத் தவிர்த்து, மத்தபடி சுடிதார், நைட்டி, டாப்ஸ், குர்தி, பாட்டம், பேன்ட், ஜீன்ஸ் எதுவா இருந்தாலும், முழுசாப் பிரிச்சுட்டு தைக்கிறது, பெரிய சைஸ் டிரெஸ்ஸை சின்னதாக்குறது, சுடிதார் டாப்ஸ் கழுத்து பெரிசாயிடுச்சுனா ஏதாவது டிசைன் பண்ணி அளவா தைச்சுக் கொடுக்கிறதுனு நிறைய பண்ணிட்டு இருக்கோம். மாடியில் யூனிட் இருக்கு'' என்றவர், நம்மையும் அழைத்துக்கொண்டு படி ஏறினார். சிறிய இடத்தில் ஏழெட்டு மெஷின்கள் போடப்பட்டு, ஆண்களும் பெண்களும் பரபரப்பாகத் தைத்துக்கொண்டிருந்தனர்.

''அஞ்சு டெய்லர்ஸ், 3 ஆபீஸ் ஸ்டாஃப் வேலை செய்றாங்க. இந்த வேலைக்கு ஆள் கிடைக்கிறது கஷ்டம். ஆனாலும் ரொம்ப சின்ஸியரா வேலை செய்ற இந்தமாதிரி ஸ்டாஃப்தான் எங்களுக்குப் பெரிய வரம். உபயோகிக்க முடியாத பழைய உடையை, திரும்பப் போட்டுக்கற மாதிரி 'ஆல்டர்’ பண்ணித் தர்றதுக்கு, அதிக கற்பனை சக்தியும் கிரியேட்டிவிட்டியும் வேணும். அதுவும் பழைய லுக் போகாம, பண்ணித் தரணும். சில ஷர்ட் எல்லாம் நிறம் நல்லா இருக்கும், காலர் மட்டும் வெளுத்திருக்கும். இதுமாதிரி ஷர்ட்களை, காலரைப் பிரிச்சு, ரிவர்ஸ் பண்ணி, பழைய அசல் சட்டை மாதிரியே கொண்டுவந்துடுவோம்.

புது உடைகள்ல சின்னதா கிழிசல் இருந்தா, அதே நூல்ல 'டார்னிங்’ பண்ணித் தர்றதும் உண்டு. சைஸ் ஆல்டரேஷன், பாக்கெட் தைக்கிறது, ஜிப் வெச்சுத் தைக்கிறது, லுங்கி, புடவை ஓரம் அடிக்கிறதுனு... நிறைய வரும். வேலையைப் பொறுத்து 25 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரை சார்ஜ் பண்றோம்'' என்ற சசிகலாவுக்கு தொழிலில் முதுகெலும்பாக இருப்பவர், கணவர். இந்தத் தம்பதிக்கு பல் டாக்டர், இன்ஜினீயர், சி.ஏ மாணவி என்று மூன்று மகள்கள்.

''நடுத்தர வர்கம் மற்றும் வசதி குறைஞ்சவங்களை மனசுல வெச்சுத்தான் இதைத் தொடங்கினோம். இப்போ எங்ககிட்டே வர்றவங்க எல்லாம் வசதியானவங்களும் அப்பர் மிடில் கிளாஸும்தான். ஃபாரின் கஸ்டமர்ஸும் நிறைய. அங்கே இருந்து வர்றப்போ, பெட்டி நிறைய பேன்ட், சட்டைகளை அள்ளிட்டு வந்து ஃபிட்டா தைச்சுட்டுப் போவாங்க. சின்ன வயசுல எங்ககிட்ட டிரவுசரை ஆல்டர் பண்ணிப் போட்டுக் கிட்டவங்களோட வாரிசுகளுக்கும் இப்போ தைச்சுக்கிட்டிருக்கோமே!'' என்று புன்னகை மாறாமல் சொல்லும் சசிகலா, தான் மாற்றியோசித்த தொழி லில், தற்போது வெள்ளி விழா கடந்து பயணித்துக்கொண்டிருக்கிறார் வெற்றியுடன்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 7:22 am

அழகை அள்ளிக்கோங்க!
டிப்ஸ்


உலக மெகா பெண் இயக்குநர்கள்! P78
ஆயிரம் கைகளால் அள்ளி அள்ளிக் கொடுத்தாலும், பெண்கள் 'இன்னும் கொஞ்சம்...’ எனக் கேட்பார்கள், அழகுக் குறிப்புகளை! இதோ, தலை முதல் பாதம் வரை பொலிவாக்கவல்ல பியூட்டி டிப்ஸை வழங்குகிறார், அழகுக் கலை நிபுணர் வசுந்தரா.

நெற்றிச் சுருக்கம், வயதான தோற்றம் தரும். இதைத் தவிர்க்க, தினமும் பாலாடை 2 டீஸ்பூன், வெள்ளரிக்காய் ஜூஸ் 1 டீஸ்பூன், தேன் 2 சொட்டு, ஆரஞ்சு ஜூஸ் ஒரு டீஸ்பூன் கலந்து, சுருக்கம் இருக்கும் இடத்தில் தடவி, அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். இப்படி தொடர்ந்து செய்துவந்தால், சருமம் இயல்பு நிலைக்குத் திரும்புவதோடு, மேற்கொண்டு சுருக்கம் வராமலும் தவிர்க்கும்.

புருவம் அடர்த்தியாக வேண்டுமா... ஆலிவ் ஆயில், விளக் கெண்ணெய், கரி சலாங்கண்ணிச் சாறு இவற்றை தலா கால் டீஸ்பூன் எடுத்துக் கலந்து, புருவத்தில் தடவி, மசாஜ் செய்து வரலாம்.

மாதுளம் பழச்சாறு, பாலாடை தலா ஒரு டீஸ்பூன் கலந்து, இதழ் களில் தடவி மசாஜ் செய்து வந் தால், வசீகரிக்கும் பிங்க் நிற லிப்ஸ் உங்களுடைய தாகும்!

காய்ந்த கறிவேப்பிலை 100 கிராம் எடுத்து வெறும் வாணலியில் வறுக்கவும். பிறகு, ஒரு லிட்டர் ஆலிவ் ஆயிலை அதிலேயே ஊற்றிக் கொதிக்க வைக்கவும். பிறகு, ஆறவைத்து சேமிக்கவும். இதை வாரம் 2 அல்லது 3 தடவை தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்துக் குளித்து வந்தால், முடி நன்கு வளர்வதுடன் கருமையாகவும் இருக்கும்.

சிலருக்கு மூக்கில் கரும்புள்ளிகள் தோன்றும். இந்த புள்ளிகளை நகத்தால் கிள்ளிப் பார்த்தால் முடி போல் இருக்கும். அவை முடிகளல்ல, அழுக்குகள். இப்படி அழுக்குக் காரணமாக வரும் கரும்புள்ளிகளைப் போக்க, சர்க்கரையை (ஜீனி) பவுடர் ஆக்கி, அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, விரலை நனைத்து, கரும் புள்ளிகள் இருக்கும் இடத்தில், தேய்த்து வர... கரும்புள்ளிகள் மறையும்.

பெரும்பாலும் காதுகளை யாரும் கவனிப்பதில்லை. காதின் பின்புறம் அழுக்கு சேர்ந்து அடை போல மாறிவிடும். இதைப் போக்க, கோலோனை ஒரு பஞ்சில் நனைத்து, காதின் பின்புறத்தை சுத்தம் செய்யலாம். காட்டன் பட்ஸ்களை கோலோனை நனைத்து, காது மடல்களை மேலாகச் சுத்தம் செய்யலாம்.

குங்குமப்பூ ஒரு கிராம் எடுத்து கசக்கி, 10 மில்லி பாதாம் ஆயிலில் கலந்து, லேசாக சூடாக்கி, கை, கால், கழுத்து, முகம் பகுதிகளில் தடவவேண்டும். 15 நிமிடம் கழித்து பாசிப்பயறு மாவு அல்லது கடலைமாவு 2 டீஸ்பூன் எடுத்து, அரை கப் தயிருடன் கலந்து, ஏற்கெனவே ஆயில் தடவிய இடத்திலேயே தடவி மசாஜ் செய்து, 5 நிமிடம் கழித்து கழுவினால், உடலும் முகமும் வசீகரிக்கும்.

தோலுடன் சீவப்பட்ட உருளைக்கிழங்கை அரைத்து ஜூஸ் எடுத்து, பஞ்சில் தொட்டு கண்களின் கீழ் கருவளையம் இருக்கும் இடத்தில் தடவவேண்டும். 5 நிமிடம் கழித்து வீட்டில் தயாரிக்கும் வெண்ணெயை எடுத்து நடுவிரலால் கருவளையங்களின் மீது தடவி மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து முகம் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்துவந்தால் கருவளையம் காணாமல் போகும்.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 7:25 am

‘செல்’லும் இடமெல்லாம் சிறப்பு!
டிப்ஸ்

உலக மெகா பெண் இயக்குநர்கள்! P177
போட்டோ, வீடியோ போன்றவற்றை போன் மெமரியில் சேமித்து வைக்கும்போது, அதில் அளவுக்கதிகமான டேட்டாக்கள் சேர்வதால் போன் ஸ்லோவாகலாம். எனவே, டேட்டாக்களை மெமரி கார்டில் சேமித்து வைக்க வேண்டும்.

அவ்வப்போது செல்போனின் ராம் மெமரியை செக் செய்யுங்கள். மெமெரி ஃபுல் ஆகும் நிலை வரும்போது, தேவையில்லாதவற்றை டெலிட் செய்துவிடுங்கள். இல்லையெனில், போன் எப்போது வேண்டுமானாலும் ஹேங் ஆகலாம்.

செல்போன் ஸ்லோ ஆவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, தேவையில்லாத ஆப்ஸ்களை வைத்திருப்பது. எனவே, அவ்வப்போது செக் செய்து பயன்படுத்தாத ஆப்ஸ்களை அகற்றிவிடுங்கள்.

ஐபோன் வைத்திருப்பவர்கள், 'ஃபைண்டு மை ஐபோன்’ என்கிற ஆப்ஷனை ஆன் செய்து வைத்திருங்கள். இதனால், உங்கள் போன் தொலைந்து போக நேர்ந்தால், அதை எடுத்தவர்களால் உங்கள் போனை ரீசெட் செய்து பயன்படுத்த முடியாது.

இரவு நேரங்களில் போனை சார்ஜில் போட்டுவிட்டு, காலையில் எடுப்பது பலரின் வழக்கம். இது சார்ஜ் ஆன பிறகும் செல்போனை மின் இணைப்பிலேயே வைத்திருக்கும். இப்படி அதிகப்படியான நேரம் மின் இணைப்பிலேயே இருப்பதால், பேட்டரி சீக்கிரமே வீக் ஆகும்.

உதவி: சென்னை, 'ஹலோ எஸ்.எஸ்.எஸ் மொபைல் ஷாப்’ சர்வீஸ் இன்ஜினீயர் சரவணன்


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 7:34 am

நெட் ஜோக்ஸ்!


உங்களுக்கு வயசாயிடுச்சா..?!

எழுபதுகளில் இருக்கும் அந்தக் கணவன், மனைவி இருவருக்கும் மறதிப் பிரச்னை. ''நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை மறக்காமல் இருக்க, ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்...'' என்று அறிவுறுத்தினார் டாக்டர். அன்று மாலை காபி தயாரிக்க எழுந்த பாட்டியிடம், ''எனக்கு இன்னிக்கு டீ கொடு... பேப்பரில் எழுதி எடுத்துட்டுப் போ...'' என்றார் தாத்தா. ''டீதானே, எனக்கு மறக்காது...'' என்ற பாட்டியிடம், ''அப்படியே ரெண்டு பிஸ்கட்டும் எடுத்துட்டு வா... நான் வேணும்னா பேப்பர்ல எழுதித் தரட்டுமா..?'' என்றார் தாத்தா. ''டீயும், பிஸ்கட்டும்தானே... எனக்கு மறக்காது...'' என்று கிளம்பிய பாட்டியை மீண்டும் அழைத்தவர், ''தாகமா இருக்கு... கொஞ்சம் தண்ணியும் எடுத்துட்டு வா. எதுக்கும் நான் பேப்பர்ல எழுதித் தர்றேனே..!'' என்று கேட்க, ''அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நான் உங்களுக்கு டீ, பிஸ்கட், தண்ணி எடுத்துட்டு வர்றேன்!'' என்று கிச்சனுக்குள் சென்றார் பாட்டி.

15 நிமிடங்கள் கழித்து வந்த பாட்டி காபி கோப்பையைத் தாத்தாவிடம் கொடுக்க, அவருக்கோ கோபம்.

''நான் உங்கிட்ட கேட்ட பிரெட் எங்கே..?!''

வாலுப் பசங்க!

வகுப்பில், பென்ச்சில் இருந்து எழுந்து ஆசிரியையிடம் சென்றான் சாம்.

''செய்யாத ஒரு விஷயத்துக்காக நான் தண்டனை அனுபவிக்கணுமா மிஸ்..?''

''நிச்சயமா இல்ல...''

''நான் இன்னிக்கு ஹோம்வொர்க் பண்ணல!''




தன் கர்ப்பிணி அம்மாவின் வயிற்றைப் பார்த்து குழப்பமாகிக் கேட்டான் அவள் முதல் பையன்.

''உள்ள என்னம்மா இருக்கு..?''

''ஒரு அழகான தங்கச்சி பாப்பா!''

''அவளை ஏம்மா நீங்க சாப்பிட்டீங்க..?!''


டிஷ்யூம்... டிஷ்யூம்!

ராஜேஷ§க்கும் லாவண்யா வுக்கும் சண்டை. இருவரும் பேசி ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டது. மறுநாள் காலை ஆறு மணிக்கு வெளியூர் போக வேண்டிஇருந்தது ராஜேஷ§க்கு. தூக்கத்தில் கும்பகர்ணனான அவனை இதுபோன்ற அதிகாலை வேலைகளுக்கு வழக்கமாக லாவண்யாதான் எழுப்பிவிடுவாள். 'ஆனால், இந்த மௌனயுத்த சமயத்தில் எப்படி அவளிடம் எழுப்பச் சொல்லிக் கேட்பது?' யோசித்த ராஜேஷ், 'நாளை காலை ஐந்து மணிக்கு என்னை எழுப்பிவிடவும்... முக்கிய வேலை இருக்கிறது...’ என்று ஒரு பேப்பரில் எழுதி, லாவண்யா படுக்க வருவதற்கு முன்பாக அவள் தலையணை மீது வைத்துவிட்டு தூங்கிவிட்டான்.

மறுநாள் காலை ராஜேஷ் விழித்து கடிகாரம் பார்த்தபோது, மணி ஏழரை. அலுவல் சம்பந்தமான முக்கியமான பயணம் தாமதமாகிவிட்டதில், ராஜேஷ் ரொம்பவே அப்செட்! அருகில் நின்றிருந்த லாவண்யாவிடம், ''முக்கியமான வேலைனு சொல்லியும், என்னை நீ எழுப்பிவிடல இல்ல?!'' - தாம்தூம் என்று குதிக்க, அவள் முறைத்தபடியே அவன் தலையணையைக் கைகாட்டினாள். அதன் அருகே ஒரு பேப்பர் படபடத்துக்கொண்டிருந்தது. ராஜேஷ் எடுத்துப் படித்தான்...

'மணி அஞ்சு ஆயிடுச்சு... முக்கியமான வேலை இருக்குனு சொன்னீங்களே... எழுந்திரிங்க..!’


அம்மா ராக்ஸ்!

ஒவ்வொரு முறை புது லிப்ஸ்டிக் போட்டுப் பார்க்கும்போதும், பாத்ரூம் கண்ணாடியில் முத்தமிட்டுச் செல்லும் தன் மகளின் பழக்கத்தை அவள் அம்மா எவ்வளவோ கண்டித்தும், அவள் அதை நிறுத்துவதாக இல்லை.

அன்றும் பாத்ரூம் கண்ணாடியில் மகள் முத்தமிட்டு வந்திருக்க, கடுப்பானாள் அம்மா. அங்கிருந்தே மகளை அழைத்தாள்...

''டீனா... நான் இங்க வெச்சிருந்த பிரஷ்ஷைக் காணாமே... பார்த்தியா..?''

''எந்த பிரஷ்ம்மா..?!''

''அதான்... டாய்லெட் க்ளீனிங் பிரெஷ்... நீ முத்தம் கொடுக்கிற கண்ணாடியைக்கூட தேய்ப்பேனே..?''

''!!!!!''


பொம்மைக் கதை... உண்மைக் கதை!

தாத்தா இனி பிழைக்க மாட்டார் என்று கூறிவிட்டார் டாக்டர். தன் நாட்களை எண்ணிக்கொண்டிருந்த தாத்தா, ''நீ பரண்ல வெச்சிருக்கிற அந்தப் பெட்டியில அப்படி என்னதான் இருக்குனு நான் தெரிஞ்சுக்கணும்..!'' என்றார் பாட்டியிடம், தன் கடைசி ஆசையாக. அமைதியாக ஆமோதித்த பாட்டி, அந்தப் பெட்டியை எடுத்து வந்து தாத்தாவிடம் கொடுக்க, அதில் இரண்டு பொம்மைகளும், 25 ஆயிரம் ரூபாய் பணமும் இருந்தது.

''என்ன இது..?''

''எனக்குத் திருமணமானபோது, என் பாட்டி எனக்கொரு அறிவுரை கூறினார்... 'எப்போதெல்லாம் உன் கணவர் உன்னைக் காயப்படுத்துகிறாரோ, அப்போதெல்லாம் அமர்ந்து ஒரு பொம்மை செய். மனம் அமைதியடைந்துவிடும்’ என்றார்.''

தாத்தா பெட்டிக்குள் பார்த்து, 'நல்லவேளை... இரண்டு பொம்மைகள்தான் இருக்கின்றன!’ என்று மனதுக்குள் மகிழ்ந்தவாறே,

''சரி... இந்தப் பணம்..?'' என்றார்.

''நான் செய்த பொம்மைகள் விற்று சம்பாதித்தது!''


நீயா... நானா?!

''டாக்டர்... என் மனைவிக்கு வரவர காது சரியா கேட்கலைனு நினைக்கிறேன்...'' என்ற தினேஷிடம், டாக்டர் அவர் மனைவியின் செவித்திறனை சோதிக்க ஒரு வழிமுறையைச் சொல்லி அனுப்பினார். வீட்டுக்குச் சென்ற தினேஷ், கிச்சனில் நின்ற மனைவியிடம் இருந்து 40 அடி தூரத்தில் நின்றுகொண்டு, ''விஜி... இன்னிக்கு டின்னருக்கு என்ன?'' என்றான். விஜியிடம் இருந்து பதில் இல்லை. அடுத்ததாக, 30 அடி தூரம் வரை அருகில் சென்று, ''விஜி... இன்னிக்கு டின்னருக்கு என்ன?'' என்று கேட்க, பதில் இல்லை. சந்தேகம் கிட்டத்தட்ட உறுதியாக, டாக்டர் சொன்னபடி 20 அடி தூரத்தில் நெருங்கி நின்றபடி, ''விஜி... இன்னிக்கு டின்னருக்கு என்ன?'' என்றான். சமையலை கவனித்தபடியே, ''தோசை! இதோட மூணாவது முறை சொல்றேன்!'' என்றாள் விஜி கடுப்பாக!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 23, 2014 8:37 am

எல்லாமே அருமையான தகவல் தமிழ்நேசன் . உலக மெகா பெண் இயக்குநர்கள்! 103459460 உலக மெகா பெண் இயக்குநர்கள்! 3838410834
கடைசி பொம்மையும் , நீயா நானாவும் அறிமுகமான ஒன்றுதான் .
சீன நடிகை , Liu xiaouqing. சீன நாட்டின் REKHA வோ ?

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 23, 2014 8:39 am

ஒவ்வொருவர் வீட்டிலும் ,
அவரவர் மனைவிதான்
உலகமஹா இயக்குனர்
என்பதே உண்மை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக