புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேர்மை தப்பா அம்மா? Poll_c10நேர்மை தப்பா அம்மா? Poll_m10நேர்மை தப்பா அம்மா? Poll_c10 
7 Posts - 64%
heezulia
நேர்மை தப்பா அம்மா? Poll_c10நேர்மை தப்பா அம்மா? Poll_m10நேர்மை தப்பா அம்மா? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நேர்மை தப்பா அம்மா? Poll_c10நேர்மை தப்பா அம்மா? Poll_m10நேர்மை தப்பா அம்மா? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நேர்மை தப்பா அம்மா? Poll_c10நேர்மை தப்பா அம்மா? Poll_m10நேர்மை தப்பா அம்மா? Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
நேர்மை தப்பா அம்மா? Poll_c10நேர்மை தப்பா அம்மா? Poll_m10நேர்மை தப்பா அம்மா? Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நேர்மை தப்பா அம்மா? Poll_c10நேர்மை தப்பா அம்மா? Poll_m10நேர்மை தப்பா அம்மா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நேர்மை தப்பா அம்மா? Poll_c10நேர்மை தப்பா அம்மா? Poll_m10நேர்மை தப்பா அம்மா? Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
நேர்மை தப்பா அம்மா? Poll_c10நேர்மை தப்பா அம்மா? Poll_m10நேர்மை தப்பா அம்மா? Poll_c10 
8 Posts - 2%
prajai
நேர்மை தப்பா அம்மா? Poll_c10நேர்மை தப்பா அம்மா? Poll_m10நேர்மை தப்பா அம்மா? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நேர்மை தப்பா அம்மா? Poll_c10நேர்மை தப்பா அம்மா? Poll_m10நேர்மை தப்பா அம்மா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நேர்மை தப்பா அம்மா? Poll_c10நேர்மை தப்பா அம்மா? Poll_m10நேர்மை தப்பா அம்மா? Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
நேர்மை தப்பா அம்மா? Poll_c10நேர்மை தப்பா அம்மா? Poll_m10நேர்மை தப்பா அம்மா? Poll_c10 
3 Posts - 1%
mruthun
நேர்மை தப்பா அம்மா? Poll_c10நேர்மை தப்பா அம்மா? Poll_m10நேர்மை தப்பா அம்மா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேர்மை தப்பா அம்மா?


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Sep 20, 2014 8:32 pm


“லஞ்சம் தவிர்த்து - நெஞ்சம் நிமிர்த்து.”
அன்று உமாசங்கர்... இன்று சகாயம்...
ஐ.ஏ.எஸ் ரெட் சிக்னல்

நேர்மை தப்பா அம்மா? P90b
'லஞ்சம் தவிர்த்து - நெஞ்சம் நிமிர்த்து!’ - சகாயத்தை ஓடஓட விரட்டிக்கொண்டு இருக்கிறது இந்த ஒரு வரி. கடந்த தி.மு.க ஆட்சியின்போது நாமக்கலில் இருந்து சகாயத்தை எந்த முழக்கம் விரட்டியதோ, அதுதான் இன்று அ.தி.மு.க ஆட்சியிலும் கைத்தறித் துறையில் இருந்து விரட்டி உள்ளது. அன்று தி.மு.க எம்.பி ஒருவர் காரணம் என்றால், இன்று அ.தி.மு.க மந்திரி ஒருவர் காரணம். ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது என்பதற்கு உதாரணம்... சகாயம்!

இது ஏதோ தமிழ்நாட்டுக்கு மட்டுமான பிரச்னை அல்ல. முலாயம் சிங்கின் மகன் ஆளும் உத்தரப்பிரதேசத்தில், துர்காசக்தி நாக்பால் துன்பத்தை அனுபவிக்கிறார்; சோனியாவின் மருமகன் வதேராவின் ஊழல்களை அம்பலப்படுத்தியதால், ஹரியானாவில் அசோக் கேம்பா விரட்டப்படுகிறார்.

' 'லஞ்சம் தவிர்த்து - நெஞ்சம் நிமிர்த்து’ என்ற சொற்றொடரை நிர்வாகத் தாரகமந்திரமாக, நேர்மைப் புரட்சிக்கு அடிப்படை அடையாளமாக, எல்லா அலுவலகங்களிலும் எழுதச் சொல்லிப் பின்பற்ற அறிவுறுத்தியவன் நான். அதனால் அலுவலர்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவும், உளமார நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் நான். 'ஏழை மக்கள் பெருவாரியாக வாழும் நாட்டில், மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு, லஞ்ச லாவண்யத்தில் ஊறிப்போகும் அலுவலர்களை, கிரிமினல்களாகக் கருதி குற்றவியல் நடைமுறைச் சட்டம் 110-ன் கீழ் ஏன் கொண்டுவரக் கூடாது?’ என்று கேட்டு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளேன். இதுபோல நடவடிக்கை எடுத்தால், ஆறு மாதங்களுக்குள் லஞ்ச லாவண்யத்தை முற்றிலுமாகக் களைய முடியும்’ - என ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்குக் கடிதம் எழுதிவிட்டு பெட்டியைக் கட்டினார் சகாயம். இப்போதும் அப்படி ஒரு கடிதத்தை இன்றைய முதல்வருக்கு சகாயம் எழுதி இருக்கக்கூடும்.

பதவிக்கு வந்த 23 ஆண்டுகளில், சகாயத்துக்கு இது 24-வது இடமாறுதல். கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராக இருந்தவரை, இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி துறைக்கு மாற்றினார்கள். அந்த உத்தரவு போடப்பட்ட அதே இரவில், அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக மாற்றி விட்டார்கள்!

இமாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி விஜித் சௌத்ரி, தனது 31 ஆண்டு பணிக்காலத்தில் 52 முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஹரியானாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் அசோக் கேம்பாவும், முகமது ஹாயினும் இந்தியாவில் அதிக தடவை இடமாற்றம் செய்யப்பட்டவர்கள். இவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பணியிட மாறுதல்.

'பதவியில் இருப்பவர்களுக்குப் பல்லக்குத் தூக்குபவர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், சகாயம் கதிதான் ஏற்படும்’ என்று எல்லோருக்கும் விடுத்த பகிரங்க எச்சரிக்கைதான் இது. அரசுக்கு வரவேண்டிய 16 ஆயிரம் கோடிப் பணத்தை தனியார் கிரானைட் நிறுவனங்கள் சுரண்டிக் கொழுக்கின்றன என்று சகாயம் அனுப்பிய கடிதத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா படிப்பதற்கு முன்னதாக, 'படிக்கக் கூடாதவர்’ படித்தார். 'உன்னை இந்த இடத்தில் இருந்து ஒரே நாளில் மாற்றிக்காட்டுகிறேன்’ என்று சகாயத்திடம் சவால்விட்டார். கோயில் மாநகரத்தின் கரன்சி கடவுள் நினைத்ததுதான் நடந்தது. சகாயம், மாற்றப்பட்டார். அன்சுல் மிஸ்ரா, மதுரை மாவட்ட ஆட்சியர் ஆனார். இயற்கை வளம் எப்படி எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டது என்பதைத் துல்லியமாகக் கணித்து சுமார் 30 ஆயிரம் கோடி மதிப்பிலான கற்களைப் பறிமுதல் செய்தார் அன்சுல் மிஸ்ரா. ஆனால், அவற்றை அவர் ஏலம் விடுவதற்கு முன்னதாக, அவரும் பணியிடம் மாற்றப்பட்டார். இருப்பினும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவர் உருவாக்கிய குற்ற ஆதார ஆவணங்களை யாராலும் மாற்ற முடியாது. இதேபோலத்தான் தூத்துக்குடி ஆட்சியர் ஆஷிஷ்குமார், கார்னெட் விவகாரத்தில் கை வைத்தார். தூக்கியடிக்கப்பட்டார்.

சத்துணவுப் பணியாளர் வேலைகூட காசுக்கு கூவிக்கூவி விற்கப்பட்டபோது, விண்ணப்பங்களின் தரத்துக்கு ஏற்ப பணியாளர் பட்டியலைத் தயாரித்து, அப்பாவி அபலைகளின் வாழ்வில் ஒளியேற்றக் காரணமாக இருந்தவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பாலாஜி. இவர் இப்படி கம்பீரமாக நடந்துகொள்கிறாரே என்பதைப் பார்த்து, இன்னும் சில மாவட்ட ஆட்சியர்களும் அவர் பாதையைப் பின்பற்றி சத்துணவுப் பணியாளர் ஆணைகளை வழங்கினார்கள். லஞ்சத்தின் மீது ஒருவர் கை வைத்தாலே அஞ்சி நடுங்குபவர்களுக்கு, சிலர் ஒன்றாகச் சேர்வது பிடிக்குமா? பாலாஜி பணியிடம் மாற்றப்பட்டார். உள்ளாட்சித் துறையில் இருந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு மாற்றப்பட்ட உதயச்சந்திரன், அங்கும் முறைகேடுகளைக் கண்டுபிடித்து ரெய்டுகள் செய்ய... ஊட்டிக்கு டீத்தூள் விற்பனையைக் கண்காணிக்க அனுப்பப்பட்டார். இந்த வரிசையில் இப்போது சகாயம். முந்தைய அ.தி.மு.க ஆட்சியின்போது உமாசங்கர் ஐ.ஏ.எஸ் கொளுத்திய அனலை, இப்போது சகாயம் மூட்டியிருக்கிறார்.

இதற்கு எந்த ஆட்சியும் விதிவிலக்குக் கிடையாது. அன்றைய முதலமைச்சர் கருணாநிதியின் படத்தைப் போடாமல் காஞ்சிபுரம் ஆட்சியர் அழைப்பிதழ் அச்சடித்தார். கருணாநிதியின் செயலாளர்களான 'ரா’க்களில் ஒருவர் அவரை மிரட்டினார். 'அழைப்பிதழை மாற்றாவிட்டால், அமைச்சர் வர மாட்டார்’ என்றார். 'நாளை காலையில் விழா. இரவுக்குள் இன்னோர் அழைப்பிதழ் அடிக்க வாய்ப்பு இல்லை’ என்றார் இவர். காலையில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, காஞ்சிபுரம் விழாவுக்குப் போகவில்லை. ஆனாலும், விழா நடந்தது. பிறகு அந்த அதிகாரிக்கு, 'எதிர்க் கட்சிக்காரர்’ என முத்திரை விழுந்தது.

சமத்துவபுரம் பயனாளிகள் என்று தி.மு.க அட்டை வைத்திருந்தவர்கள் பட்டியலை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கொடுத்தபோது, 'இவர்களுக்கு வீடு ஒதுக்கினால், ஆட்சிக்குக் கெட்ட பெயர் வரும்’ என்று சொல்லும் துணிச்சல் ஓர் அதிகாரிக்கு அன்று இருந்தது. 'இது ஏன் வீண் வம்பு?’ என்று அவர் சொன்னதை ஏற்கும் தன்மை அன்றைய ஆட்சிக்கும் இருந்தது. அப்படிப்பட்ட அதிகாரியே தன்னுடைய விருப்ப ஓய்வை நீதிமன்றத்தில் போய் வாங்கவேண்டிய நெருக்கடி இந்த ஆட்சியில். அவரால் அன்று வாழ்க்கை பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிதான், இன்று அதிகார வளையத்தில் இருக்கிறார். ஆனாலும் முன்னாள் அரசு அதிகாரிக்கு 'நன்றி செலுத்துவதால்’ என்ன பயன்?
நேர்மை தப்பா அம்மா? P90
சுயநல அதிகாரிகள், தங்களுக்குள் 'தி.மு.க. ஐ.ஏ.எஸ்-கள்’ என்றும் 'அ.தி.மு.க ஐ.ஏ.எஸ்-கள்’ என்றும் பிரிந்துகொள்கிறார்கள். இரண்டு கட்சிகளுக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், இரண்டு கட்சிகள் சம்பாதிக்கும் கரன்சிக்கும் இவர்களுக்கும் நிச்சயம் தொடர்பு உண்டு. கட்சிக்கு சம்பாதித்துக் கொடுக்கிறோம் என்ற போர்வையில், அவர்களும் சுரண்டிக்கொள்கிறார்கள். இரண்டு ஆட்சிகளிலும் நேர்மையான அதிகாரிகள் பந்தாடப்படுவதற்கு, இந்தக் கரைவேட்டி கட்டாத, கட்சிக் கறை தாங்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான் காரணம். கிரானைட் முறைகேடு, மதுரை ஆட்சியராக யார் இருந்தபோது அதிகம் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதற்காகவே அந்த அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டும் நடந்தது. அடுத்த சில நாட்களிலேயே கிரானைட் வழக்கைக் கண்காணிக்க வேண்டிய துறைக்கு, அதே அதிகாரியை நியமிக்கும் அசிங்கமான கோப்பு தயாராகிறது என்றால், சோரம்போன அதிகாரிகள் இடையிலான 'லாபி’ அந்த அளவுக்குப் பலமாக இருக்கிறது என்று அர்த்தம்!

கருணாநிதி ஆட்சியில், நம்பியார் என்கிற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், தலைமைச் செயலாளராக இருந்தார். அவரிடம் ஒரு கருத்தைச் சொல்வதற்கு முன், கருணாநிதியே யோசிப்பார். அமைச்சர்கள், தங்கள் லீலைகளை அவரிடம் காட்டினால், மாட்டிக்கொள்வார்கள். முறைகேடுகளுக்கு எதிரான முழு வில்லன்தான் அந்த நம்பியார். ஆனால் இப்போது, முடிவே எடுக்காதவர்கள் காலம். தன்னிடம் எந்தக் கோப்பு வந்தாலும், 'முதல்வரின் பரிசீலனைக்கு’ என்று எழுதியே தலைமைச் செயலாளர் காலத்தை ஓட்டிவிட்டவர் ஷீலா பாலகிருஷ்ணன். அந்தத் திறமையின் பரிசாக, 'ஆலோசகர்’ பதவி தரப்பட்டுள்ளது அவருக்கு. ஆங்கிலத்தில் முதல்வருக்குப் பிடிக்காத வார்த்தை 'அட்வைஸ்’. ஆனால், அதற்கெனவே ஒருவரை நியமித்துள்ளார்கள் என்றால் பாருங்கள்!

இன்னொரு பக்கம் 'மகரபூஷண’ங்கள். இவர் மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில், 'முதல்வரின் பொற்பாதங்களை வணங்கி’க் கேட்டுக்கொண்டவர். ஒன்று, எந்த முடிவும் எடுக்காத ஷீலா பாலகிருஷ்ணனாக இருக்க வேண்டும். அல்லது வாழ்த்து மாலைகள் பாடும் மகரபூஷணமாக வலம் வர வேண்டும். இந்த இரண்டு ரகங்களுக்குத்தான் மரியாதை. நேர்மை, நியாயம், நீதி, நெறிமுறைகள் பேசுபவர்களுக்கு ரணங்களே பரிசு.

ஆனால், காலம் இவர்களை இப்படியே விட்டுவிடப்போவது இல்லை. கடந்த ஆண்டு, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஒன்று திரண்டு உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டினார்கள். 'அரசியல்வாதிகளாலும் ஆட்சியாளர்களாலும் பந்தாடப்படும் அதிகாரிகளுக்கு என்ன தீர்வு?’ என்று கேட்டார்கள். 'அதிகாரிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கை தவிர்க்கப்பட வேண்டும்; பணியிட மாற்றத்தை ஒழுங்குசெய்ய வேண்டும்; குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை ஒருவரை இடமாற்றம் செய்யக் கூடாது’ என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பி.சி.கோஷ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 'ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அடிக்கடி இடமாற்றம் செய்வது, மக்கள் நலத் திட்டங்களைப் பாதிக்கச்செய்வதோடு அரசின் நிர்வாகப் பணிகளையும் சீர்குலைக்கும். அதிகாரிகள் அரசின் வாய்மொழி உத்தரவுகளை நிறைவேற்றக் கூடாது. ஆட்சியாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட பணி தொடர்பாக எழுத்துபூர்வமான உத்தரவுகளை மட்டுமே நிறைவேற்ற வேண்டும்’ என்றும் உத்தரவிட்டார்கள்.

எழுத்துபூர்வமான உத்தரவுகளைக் கட்டாயப்படுத்தினாலே, பாதி முறைகேடுகள் குறையும். பணியிட மாற்றம் தொடர்பாக, ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்கொண்ட சிவில் சர்வீஸஸ் போர்டு அமைக்க வேண்டும் என்பதும் உச்ச நீதிமன்றம் உத்தரவு. அதை அமைத்தால் பழிவாங்கும் செயல்பாடுகள் பாதி குறையும். முதலமைச்சர் அலுவலகத்தில் இருக்கும் மூன்று பேர் மட்டும் அல்ல, 300 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் முழுமையாகப் பங்கு எடுக்கும்போதுதான் ஓர் ஆட்சி முழுமை பெறும். முழுமை பெற வேண்டுமா என்பதை முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும்!

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Sat Sep 20, 2014 8:44 pm

செவிடன் காதில் ஊதிய சங்கு!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 20, 2014 11:38 pm

ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கங்கள் இருக்கிறதா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக