புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_lcapதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_voting_barதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_rcap 
155 Posts - 79%
heezulia
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_lcapதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_voting_barதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_lcapதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_voting_barதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_lcapதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_voting_barதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_lcapதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_voting_barதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_lcapதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_voting_barதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_lcapதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_voting_barதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_lcapதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_voting_barதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_lcapதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_voting_barதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_rcap 
320 Posts - 78%
heezulia
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_lcapதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_voting_barதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_lcapதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_voting_barதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_lcapதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_voting_barதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_lcapதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_voting_barதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_lcapதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_voting_barதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_lcapதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_voting_barதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_lcapதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_voting_barதொடுதல் கற்போம்... கற்பிப்போம்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடுதல் கற்போம்... கற்பிப்போம்!

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 7:26 pm

First topic message reminder :

குட் டச்... பேட் டச்...

ராராட்டத் தூணசைய
ராமர் கையில் அம்பசைய
அம்பு முழுதசைய
ஆளப்பிறந்தவனோ
வில்லு முருகசைய
விளங்கப் பிறந்தவனோ
சங்கு முழங்க சமுத்திரத்தில்
மீன் முழங்க
எங்கும் முழங்கவென்று
எழுந்தருளி வந்தவனோ

பிள்ளைக்கலி தீர்க்க வந்த குழந்தையை ஒரு தாய் தான் வணங்கும் கடவுளுக்கு இணையாக நினைத்து பாடும் பாடல் இது. இன்றைய கணக்கெடுப்புப்படி நம் நாட்டில் 54 சதவிகித குழந்தைகள் ஆண்டுதோறும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். இக்குழந்தைகளில் 24 சதவிகிதம் ஆண் குழந்தைகள். பொதுவாக நம் கலாசாரத்தில் ஆண் குழந்தைகள் அழுவது ஏற்கப்படுவதில்லை. ‘ஆம்பளைப் பையன் அழக்கூடாது’ என்று சொல்லியே வளர்த்து வருகிறோம். குறுகிய வட்டங்களில் ஆண் குழந்தைகள் தம்மை அடைத்துக் கொள்வதற்கு இதுவும் காரணமே. ‘யாரால் எல்லாம் நம் குழந்தைகளுக்கு ஆபத்து வரும்’ என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

சில உதாரணங்கள் இங்கே... தோழி ஒருவர், 8வது படிக்கும் அப்பா இல்லாத பையனை முடி வெட்ட ஒரு குறிப்பிட்ட சிகையலங்கார நிலையத்துக்கு அழைத்துச் செல்வது வழக்கம். பையன் உள்ளே இருக்கும்போது தோழி வெளியில் இருப்பார்... சில முறைகளுக்குப் பிறகு, பையன் ‘அங்கே முடிவெட்ட வர மாட்டேன்’ என்று சண்டை பிடித்து கோபத்துடன் பொருட்களை உடைத்திருக்கிறான். மெதுவாக விசாரித்ததில் அந்த சலூன் கடைக்காரரும் அவரின் தோழரும் அந்த பையனை மிகவேதனைப்படுத்தி இருப்பது தெரியவந்தது.

நம் நாட்டில் பெண்கள் தாயாகக் கருதப்படுவதால் அவர்கள் தவறிழைக்க மாட்டார்கள் என்ற எண்ணம் உண்டு. ஆனால், சில பெண்கள் தங்களுடைய நிறை வேறாத மன இச்சைகளை தீர்க்க சிறு குழந்தைகளை உபயோகிப்பதும் அதிர்ச்சிகரமான விஷயம். மனவியல் வல்லுநர்கள் இதற்கு என்ன பெயரிட்டு அழைத்தாலும் சிதைவது குழந்தையின் வாழ்க்கையே. இவர், அவர் என எவ்வித வேறுபாடும் இன்றி, குழந்தைகளைச் சுற்றி உள்ள அனைவருமே சந்தேகப்பட வேண்டியவர்களே. சில உறைவிடங்கள், ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளவர்களும் பெருமளவில் இதுபோன்ற பாதிப்புகளுக்கு ஆளாவதும் நிதர்சனம்.

சில மதத் தலைவர்கள் கூட இந்தச் சர்ச்சையில் சிக்க காரணம் அடக்கி வைக்கப்படும் அவர்களின் வாழ்க்கை முறை. அதற்குப் பலியாவதோ குழந்தைகள்தான். வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் சிலர் கூட, அதிக பணத்துக்கும் போதைப் பொருட்களுக்கும் ஆசை காட்டி குழந்தைகளை அவர்கள் பக்கம் இழுத்து, அவர்களின் இச்சைகளை நிறைவேற்றி விடுகின்றனர். நாளடைவில் போதையின் பிடியில் சிக்கிச் சீரழியும் குழந்தைகள் தாமாகவே இந்த வேலையை செய்ய முன்வருகின்றனர். ஆண் குழந்தைகளுக்கு ஏற்படும் இந்தப் பாதிப்பு பிற்காலத்தில், அவர்கள் மண வாழ்க்கையில் பெரிய சிக்கலை உண்டாக்கும். பெண்கள் மேல் ஒருவித பயமும் வெறுப்பும் குரோதமும் இருக்கும்.

பெண் குழந்தைகள் அழுதாவது ஆறுதல் தேடும், ஆண் குழந்தைகளின் மனதில் இது தீராத வடுவாகவே இருக்கும். அவர்கள் தங்களை ஒரு முழுமையான ஆணாகவே நினைக்க மாட்டார்கள்... எப்போதும் ஒரு பதற்றம் இருக்கும். மண வாழ்க்கையில் முழுதாக ஈடுபட முடியாமல் பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாவார்கள். பெண்களைக் கொடுமைப்படுத்தும் ஆண்கள் ஏதோ ஒரு வகையில் அவர்களின் குழந்தைப் பருவத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பவர்களாகவே இருக்கிறார்கள் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. ஆண் குழந்தைகளை குடும்ப விஷயங்களில் ஒதுக்கி வைக்கக் கூடாது. பெண் குழந்தைகளை ஈடுபடுத்துவது போலவே, வீட்டுப் பணிகள் அனைத்திலும் ஈடுபடுத்த வேண்டும்.

அவர்களின் வயதுக்கேற்ற உடல் மாற்றங்களை அவர்களுக்கு புரிய வைத்தல் மிக அவசியம். அவர்களின் கூச்சம், பயம், அச்சம் போன்றவற்றை தெளிவாக விளக்க வேண்டியதும் பெற்றோரின் கடமையே. ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் பெண்கள் மேல் வரும் ஈர்ப்பு குறித்தும், அதன் சாதக, பாதகங்கள் குறித்தும் நண்பனை போல் உரையாடி விளக்குங்கள். பெண்குழந்தைகளின் உடலை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவது போல, ஆண் குழந்தைகளுக்கும் அறிவுறுத்த வேண்டியது அவசியம். பெண்களைப் போலவே பையன்களும் 12 - 15 வயதுக்குள் உடலியல் மாறுதல்களை சந்திக்கிறார்கள். குரல் மாறுவது, உடலில் ரோமங்கள் வருவது, உயரமாவது, வியர்வை வாசம் வருவது, மார்பு வடிவம் மாறுவது... இவை மட்டுமின்றி, ஆண் உறுப்புகளில் ஏற்படும் மாறுதல்களும் அவர்களை அதிகக் குழப்பத்தில் ஆழ்த்தும். பெண்கள் பூப்பெய்தினால் வீட்டில் உள்ளவர்கள் எதாவது கொஞ்சமாவது சொல்லித் தருவார்கள்.

பையன்களுக்கு அந்த வாய்ப்பு இல்லாததால் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகின்றனர். சக பையன்களுக்குள் பேசிக்கொள்வதில் பாதி ஊகங்களாகவும், மீதி பயங்களாகவுமே இருக்கின்றன. திடீரென அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வம் குறைவதும் தனிமையை விரும்புவதும் அதிக கோபமும் சண்டை போன்றவையும் அவர்களின் குழப்பங்களின் வெளிப்பாடே. இந்த வயதையும் இந்த வயதில் மற்றவர்களை எப்படிக் கையாளுவது என்பதையும் தெளிவாக அவர்களுக்கு கற்றுத் தர வேண்டியது பெற்றோரின் கடமையே.

நன்றி : தினகரன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 7:38 pm

கண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே
பூத்த புதுமலரே பொக்கிஷமே கண்மணியே
யார் அடித்து நீ அழுதாய் அழுத கண்ணில் நீர் ததும்ப
பேர் உரைத்தால் நான் பெருவிலங்கு பூட்டிடுவேன்
அத்தை அடித்தாளோ அரளிப்பூ செண்டாலே
மாமன் அடித்தானோ மல்லிக்கைப்பூ பந்தாலே...

குழந்தைகளின் ஒரு சொட்டு கண்ணீருக்கு தாய் இத்தனை விளக்கம் கேட்கிறாள். நாம் நம் குழந்தைகளுக்காக காது கொடுக்கிறோமா? இத்தனை நாள் இல்லாவிட்டால் போகட்டும்... இனியாவது அவர்களுக்காக நேரம் ஒதுக்கி கேட்க வேண்டியது நம் கடமை. பள்ளி, ட்யூஷன், கோச்சிங் கிளாஸ், வார இறுதி வகுப்புகள், மற்ற பள்ளிகளுக்கு சென்று பங்கேற்கும் போட்டிகள், ட்ரெயினிங் சென்டர், இன்னும் என்னென்ன இடங்களுக்கு யாருடன் சென்று வந்தாலும், விசாரணை போல இல்லாமல் தோழமையுடன் நடந்ததை கேட்டறிய வேண்டும்.

எப்போதுமே குழந்தைகளுக்கு வீட்டுக்கு வந்ததும் யாரிடமேனும் பகிர வேண்டும் என்ற ஆவல் இருக்கும். நாமோ வேலைச்சுமையில் நிராகரித்திருப்போம்... அதை மனதில் கொண்டே அவர்களும் தவிர்க்கின்றனர் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.முடிந்த வரை குழந்தைகளின் நண்பர்கள், அவர்களின் பெற்றோரிடம் அறிமுகம் இருப்பது நன்று. ட்யூஷன் போன்ற மற்ற வகுப்புகளுக்கும் ஒரு முறையேனும் பெற்றோர் இருவரும் சென்று அறிமுகம் தருவதும் அவசியம்.

எந்த வயதிலிருந்து ‘குட் டச்... பேட் டச்...’ சொல்லித் தரலாம்? எப்படிச் சொல்லித் தருவது?

இதெல்லாம் நமக்கு நம் பெற்றோர் சொல்லித் தரவில்லையே? நாமெல்லாம் வளரவில்லையா? இதுபோன்ற கேள்விகள் எழுவது வழக்கம்தான். சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் தென்கோடி நகரில் பள்ளி மாணவர்களுக்கு இதை அறிமுகப்படுத்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி தொடங்கும் முன், அந்த மாணவர்களை அழைத்து வந்திருந்த ஆசிரியர்களிடம், ‘குட் டச்... பேட் டச்... என்றால் என்ன’ என்று கேட்ட போது, அவர்களுக்கு அது பற்றி எந்த அறிமுகமும் இல்லை என்பது தெரிய வந்தது. எங்கள் உரையை அவர்களிடமிருந்தே தொடங்க வேண்டியதாயிற்று. பெற்றோரைத் தாண்டி ஒரு குழந்தை சட்டென ஒரு விஷயத்தை புரிந்துகொள்வது ஆசிரியர்களிடமிருந்துதான். சரி... இப்போது நீங்கள் சொல்லுங்களேன்... உங்கள் குழந்தைகளுக்கு குட் டச்... பேட் டச்... என்றால் என்னவென்று எப்படி சொல்வீர்கள்?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 7:39 pm

குட் டச்...

இந்த விஷயத்தை டெக்னிகலாக கூறி குழந்தைகளை குழப்ப வேண்டாம்... மிக மிக எளிதாக, அவர்கள் வழியிலேயே சொல்லி புரியவைப்பதுதான் நல்லது. எந்த ஒரு டச் அவர்களை ‘ரொம்பவே கம்ஃபர்டபிளாக’ உணர செய் கிறதோ அது குட் டச். உதாரணமாக... அம்மாவோ அப்பாவோ ‘குட்மார்னிங்’ சொல்லி அணைப்பது, ஆசிரியர்கள் பிள்ளைகளின் முதுகில் தட்டிக் கொடுப்பது, நண்பர்களுடன் செய்யும் ஹை ஃபைவ், ஷேக் ஹேண்ட்ஸ், செல்லமாக மாமாவோ, சித்தப்பாவோ, அக்காவோ தலையில் கொட்டுவது, தடவுவது என்று எந்த ஒரு தொடுதல் அவர்களை அன்பாகவும் பாதுகாப்பாகவும் உணரச் செய்கிறதோ, அது குட் டச்... ‘அவர்கள் சம்திங் ஸ்பெஷல்’ எனத் தொடுதலில் உணர்தலும் குட் டச்... தொடுதல், முத்தமிடுதல் கூட சில நேரம் பாதுகாப்பாக உணரச் செய்யும்.

பேட் டச்...

அறிமுகமானவர்களோ, அறிமுகமற்றவர்களோ தேவையற்ற வேளையில் தேவையற்ற உடல் பகுதிகளில் தொடுவதும், அத்தொடுதலை மனதும் உடலும் விரும்பாததுமே பேட் டச். அப்படித் தொடுபவர் களை பார்த்தாலே குழந்தைகள் பதற்றம் அடைவார்கள், அவர்களிடமிருந்து மறைமுகமாக விலகி இருக்க விரும்புவார்கள். அது அவர் களையும் அறியாமல் வெளிப்படும். இதை அவர்கள் சில நேரம் சொல்லி யும் உணர்த்துவார்கள். அந்தத் தொடுதல் அவர்களுக்கு ஒரு பயத்தை உருவாக்கும்... மூட் அவுட் செய்யும்... கவனமின்மையை உண்டாக்கும். குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டியவற்றில் முக்கியமானது எப்படி ‘நோ’ சொல்லுவது என்பதே. அவர்களின் உடல் குறித்த தெளிவான அறிமுகம், செல்ஃப் சேஃப்டி, சேஃப் பாடி ரூல், ரகசியம் என்றால் என்ன? வெளியிடங்களில் பாதுகாப்பு, இன்டர்நெட் பாதுகாப்பு, அறிமுகமற்றவர்களிடம் எப்படிப் பழகுவது, பணிபுரியும் பெற்றோர் எனில் வீட்டில் தனிமையில் இருக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு இவை அனைத்தையும் இங்கு விவாதிக்கலாம். முதலில் குழந்தைகளின் உடலமைப்பு பற்றிய அறிமுகம். ஏற்கனவே கூறியதுபோல, இக்கால குழந்தைகள் மிக புத்திசாலிகள்... நீங்கள் அவர்கள் பேசத் தொடங்கும் காலகட்டத்திலிருந்தே இந்த அறிமுகத்தை ஆரம்பிக்கலாம்.

உன் உடலை நீ அறிவாய்!

எங்கிருந்து இதைத் தொடங்குவது என்ற குழப்பம் பலருக்கு இருக்கிறது. ஆணோ, பெண்ணோ - முதலில் அவர்கள் உடல் பற்றிய அறிவும் தெளிவும் அவசியம். நாமும் அங்கிருந்தே தொடங்குவோம். பெண்கள் உடலில் முதலில் கவனிக்கப்படுவது மார்பகங்கள். இப்போதும் கூட 8 வயது முதல், பெண்குழந்தைகளின் பெரிய சந்தேகங்கள் மார்பு பற்றியதே.

மார்புகள் வளர்ச்சி...

உன் வயது 8 - 11 வரையா? கண்ணாடி முன் நின்று உடலை ஒரு முறை பாரேன். ஏதேனும் மாறுதல் தெரிகிறதா? பிரெஸ்ட் மிக லேசாக வளர்ந்திருக்கிறதா? எங்காவது வலிக்கிறதா? இன்னும் கொஞ்ச நாட்களில் நீ பெரிய அக்கா ஆவதற்கான அறிகுறிகள் இது. உடலில் உள்ளே நடக்கும் ஹார்மோன் மாறுதல்கள் வெளியில் தெரிகிறது. இதைக் கண்டு பயப்பட வேண்டாம். ஆமாம்... பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை! உன் வயது 12க்கும் மேலா? மார்புகளை குறித்த கவலை வேண்டாம். அதன் அளவு என்பது உடலில் சுரக்கும் ஹார்மோன் மற்றும் கொழுப்பைப் பொறுத்தது. உன்னால் அதனை கட்டுப்படுத்த முடியாது. அவசியமும் இல்லை. அடுத்தவர்களின் மார்பு வளர்ச்சி குறித்து தோழிகளுடன் பேசும் போது, அவர்களுக்கும் சொல். இந்த வளர்ச்சியை மாற்ற எந்த உடற்பயிற்சியும் தேவையில்லை... இது மிக இயல்பானது... பெரிதோ சிறிதோ செய்ய முடியாது... அது தேவையில்லை... கவலையும் வேண்டாம்!

இதுதான் மார்புகளின் வளர்ச்சி நிலை

கண்ணாடியில் கூர்ந்து பார்த்தால் உன் ஒரு கண் போல இன்னொரு கண் இருக்காது. மிகச் சிறிய வித்தியாசம் இருக்கும். அதே போல உன் காதுகளையும் பாரேன். அதுவும் அளவில் சிறு மாறுதலோடுதான் இருக்கும். அதே போலத்தான் உன் மார்புகளும். இரண்டுக்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கும். ஆனால், அது உனக்கு மட்டுமே தெரியும். உடலை குறித்து முழு அறிவோடு இருந்தால் நீ பயப்பட வேண்டாம். இது போலவே பையன்களுக்கும் அந்தந்த வயதில் மாறுதல் வரும். அதையும் தெரிந்து கொள்வோம்.

நன்றி : தினகரன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக