புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா? Poll_c10சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா? Poll_m10சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா? Poll_c10சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா? Poll_m10சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா? Poll_c10சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா? Poll_m10சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா? Poll_c10சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா? Poll_m10சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா? Poll_c10சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா? Poll_m10சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா? Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா? Poll_c10சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா? Poll_m10சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா? Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா? Poll_c10சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா? Poll_m10சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா? Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா? Poll_c10சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா? Poll_m10சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா? Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 6:41 pm

அச்சம் என்ற இருளில் இருந்து மனிதனை விடுபடச் செய்தது, நெருப்பு தந்த வெளிச்சம். எடிசன் மூலமாக மின்விளக்காக மாறிய அந்த நெருப்பு இன்று பல்வேறு வடிவங்களில் உலகுக்கு ஒளி கொடுத்துக் கொண்டிருக்கிறது.


சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா? LU1pj7EUTeGuNM9bzFSw+5_2110127g
நெருப்பை ஆதி வடிவத்துடன் ஒப்பிடும்போது, இன்றைக்கு அதிகமான வெளிச்சத்தை விளக்குகள் உமிழ்ந்துகொண்டிருக்கும் அதேநேரம், சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும் அவை காரணமாக இருக்கின்றன.

குண்டு பல்புகள் என்று அழைக்கப்படும் ஒளி உமிழ் விளக்குகள் (Incandescent lamps) மின்சாரத்தை அதிக அளவில் வீணடிப்பதால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதும், புவி வெப்பமடைதல் (global warming) பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருப்பதும் நாம் அறிந்ததுதான்.

அதற்கு மாற்றாக சி.எஃப்.எல். (Compact Fluorescent Lamps) விளக்குகளைப் பயன்படுத்தலாம் என்று அரசே விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்ததால், மக்கள் மத்தியில் இந்த வகை மின்விளக்குகள் பிரபலமடைந்துள்ளன.

அரசு ஆதரவு

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு அரசியல் கட்சி ஒரு படி மேலே போய், வறுமைக்கோட்டுக்குக் கீழே வசிக்கும் மக்களுக்கு இலவசமாக சி.எஃப்.எல். மின்விளக்குகளைக் கொடுப்பதாகத் தேர்தல் வாக்குறுதி கொடுத்து, ஆட்சிக்கு வந்தவுடன் சுமார் 1.2 கோடி விளக்குகளை விநியோகமும் செய்தது.

இதுபோன்ற முயற்சிகளால் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியிருந்த குண்டு பல்புகள், இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக மினுங்கிக் கொண்டிருக்கின்றன.

புவி வெப்பமடைதல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் உலகம் முழுவதும் முனைப்பு காட்டப்படும் இந்த வேளையில், சுற்றுச்சூழலுக்கு நட்பான இந்த மாற்றம் வரவேற்கத்தக்கதுதான். அதேநேரம் சி.எஃப்.எல்.

பல்புகள் மின்சாரச் சிக்கனம் செய்வதைத் தாண்டி, சுற்றுச்சூழலுக்கு எந்த அளவுக்கு நன்மை பயக்கின்றன என்ற கேள்வியும் எழுகிறது.

மினமாட்டா விபத்து

சி.எஃப்.எல். பல்புகளில் பாதரசம் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுவது பலருக்கும் தெரியாது. இந்த வகை பல்புகளில் 4 மில்லிகிராம் வரை பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. பாதரசம் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் நண்பனல்ல.

ஜப்பானின் மினமாட்டா (Minnamata) நகரில் பாதரச மாசு கடலில் கலந்ததன் காரணமாக, மிகப் பெரிய சுகாதாரப் பிரச்சினை ஏற்பட்டது. மீன்கள் கூட்டம் கூட்டமாகச் செத்து மிதந்தன.

கடல் உணவைச் சாப்பிட்டவர்களுக்கு இன்னதென்று அறிய முடியாத நோய்கள் ஏற்பட்டன. குறிப்பாக நுரையீரல், சிறுநீரகம், மைய நரம்பு மண்டலப் பாதிப்பால் பல்வேறு நோய்களால் மக்கள் பீடிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம்தான் பாதரசம் என்ற வேதிப்பொருளின் நச்சுத்தன்மை குறித்து உலகில் விழிப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு உலகம் முழுவதும் பாதரசக் கழிவுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடங்கின.

அப்புறப்படுத்துதல்

இத்தகைய பின்னணியில்தான் சி.எஃப்.எல். விளக்குகள் தொடர்பான பிரச்சினையைப் பார்க்க வேண்டும். எரிந்து கொண்டிருக்கும்வரை இந்த விளக்குகளில் இருந்து பாதரசம் வெளியேறுவதில்லை.

பழுதான பின்னர்தான் பிரச்சினையே. பழுதடையும் விளக்குகள் பெரும்பாலும் உடைக்கப்படுவதால், அதில் உள்ள பாதரச நஞ்சு வெளியேறி, சுற்றுப்புறத்தில் கலக்கிறது.

இதில் நேரடியாகப் பெருமளவு பாதிக்கப்படுபவர்கள் குப்பைக் கூளங்களில் குப்பை சேகரிக்கும் துப்புரவாளர்களே. இந்த மின்விளக்குகளை மறுசுழற்சி (Recycling) செய்ய முடியும் என்றாலும், அது தொடர்பாகப் போதுமான விழிப்புணர்வு இல்லை.

சாதாரணமாகக் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுகிறார்கள். இதனால் பத்தோடு பதினொன்றாகச் சுற்றுச்சூழலை அவை நாசம் செய்துகொண்டிருக்கின்றன.

மறுசுழற்சி

சி.எஃப்.எல். பல்புகளில் கலந்திருக்கும் பாதரசம் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஆபத்தான வேதிப்பொருள் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதல் தேவை. அப்போது அவற்றைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஓரளவாவது ஏற்பட்டுவிடும்.

இதை அரசு முன்னின்று நடத்த வேண்டும். உதாரணமாக, புகையிலையால் ஏற்படும் தீங்குகளை விளக்க சிகரெட் அட்டைகளிலேயே எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனால் புகையிலையின் நுகர்வு குறையவில்லை என்ற விவாதம் ஒருபுறம் இருந்தாலும், புகையிலையின் தீங்குகள் குறித்துச் சாதாரண மக்களும் அறிந்துகொண்டிருப்பதை மறுக்க முடியாது. இந்தப் பல்புகளைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த, அவற்றின் அட்டைகளில் பாதரசம் குறித்த எச்சரிக்கை வாசகத்தை இடம்பெறச் செய்ய வேண்டும்.

அதேபோல், பல்பு தயாரிப்பு நிறுவனங்கள் மறுசுழற்சி மையங்கள் அமைப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். பயன்படுத்தி முடிந்த பல்புகளை இந்த மையங்களுக்குக் கொண்டுவந்து சேர்ப்பதில் துப்புரவுப் பணியாளர்களின் பங்கு அதிகம் என்பதால், இந்தச் செயலைச் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படிப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தும்போது சி.எஃப்.எல். மின்விளக்குகள் சுற்றுச்சூழலின் இணைபிரியாத தோழனாக இருக்கும்.

நன்றி : தினகரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Sep 20, 2014 5:59 pm

தங்காய் உம் கருத்துக் கோர்வையை ஆவலுடன் மூச்சு விடாமல் படித்தறிந்தேன். மிக அருமையான விழிப்புணர்வு ...... வரவேற்கிறேன். நன்றி தங்கையே. நன்றி.
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 20, 2014 6:17 pm

P.S.T.Rajan wrote:தங்காய் உம் கருத்துக் கோர்வையை ஆவலுடன் மூச்சு விடாமல் படித்தறிந்தேன். மிக அருமையான விழிப்புணர்வு ...... வரவேற்கிறேன். நன்றி தங்கையே. நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1089360

நன்றி ராஜன் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கு.கோகிலா
கு.கோகிலா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013

Postகு.கோகிலா Fri Oct 31, 2014 12:58 pm

நம் நாட்டில் எந்த ஒரு பொருளுக்கும் உரிய சாதக பாதகங்களை தெரிந்து கொள்ளாமலேயெ அதன் விளம்பர யுக்த்தியில் மயங்கி, அதன் விளைவுகளையும் அறிந்து கொள்ளாமல், சுற்றுப்புர சீர்கேட்டை யாதொரு குற்ற உணர்வும் இன்றி செய்து வருகிறோம். ஃபல்புகலை சரியான முறையில் மருசுழற்சி செய்யாமல் உடைபதினால் விசவாயு தாக்கும் என்பதே இன்னும் பரலான மக்களுக்கு தெரியாது என்பதே வேதனையான
விசயம் சகோதரி, தங்கள் பயனுள்ள இனைப்புக்கு நன்றி.

paiyaan
paiyaan
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 04/08/2014

Postpaiyaan Fri Oct 31, 2014 6:51 pm

சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா? 103459460 சி.எஃப்.எல். விளக்குகள் சுற்றுச்சூழல் நண்பனா? 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக