புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10 
90 Posts - 78%
heezulia
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10 
255 Posts - 77%
heezulia
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_m10ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 20, 2014 9:28 pm

First topic message reminder :

ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை

ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட போலே (40)  கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டவர். அந்த வீடியோவின் இறுதியில் மற்றொரு அமெரிக்கரும் தோன்றுகிறார். அவர் சிரியாவில் இருந்து 2013ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட பத்திரிக்கையாளர்.

ஈராக் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிப்பதற்காகவே இந்த படுகொலையை பயங்கரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 12, 2015 5:16 pm

சீனாவிலும் ஐஎஸ்ஐஎஸ் ஊடுருவலா?

ஈராக், சிரியா, லிபியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் தீவிரவாத செயல்களை செய்து வந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், ஆசியாவின் மிகப் பெரும் வல்லரசு நாடான சீனாவிலும் ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதனை உறுதிபடுத்தி உள்ள சீனாவின் ஜின்ஜியாங் மாகாண அரசு, அவர்களை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணம் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் எல்லைக்கு அருகே உள்ளது.

இங்கு ஏற்கனவே பல்வேறு தீவிரவாத இயக்கத்தினர் வலுவாக செயல்பட்டு வருகின்றன. சீனாவில் அவ்வபோது நடக்கும் வன்முறைகளுக்கு இவர்கள் தான் காரணம். இவர்களை ஒடுக்குவதற்கு அம்மாகாண அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், அவர்கள் அவ்வபோது தலை தூக்கத் தான் செய்கின்றனர்.

இந்நிலையில், அந்த வட்டாரத்தின் அனைத்துலக எல்லை வழியாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக சீன அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. மியான்மர் நாட்டின் எல்லை வழியாக சீனாவிற்குள் கடந்த சில நாட்களாக முன்னர் சிலர் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டனர்.

அதேபோல், போலியான கடவு அட்டைகள் வைத்து இருந்தவர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சீன அரசிற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, அவர்கள் ஐஎஸ் தீவிரவாதிகளாக இருக்க வாய்ப்புள்ளது தெரிய வந்துள்ளது.

இது குறித்து ஜின்ஜியாங் மாகாண அரசு கூறுகையில், “கைது செய்யப்ப்பட்டவர்களிடம் முறையான விசாரணை நடைபெற்று வருகின்றது. அத்துமீறி நுழைபவர்கள் யாராக இருந்தாலும், மிகக் கடுமையான தண்டனை கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Mar 12, 2015 7:07 pm

.

சீனாவில் முஸ்லிம் சிறுபான்மையினர் அதிகமாக தஜிகிஸ்தான் எல்லையில் உள்ளனர்

அவர்கள் ஊய்கூர் முஸ்லிம் அன்று அழைக்கப்படுவர், அவர்களே அதிகமாக அம்மாகாணங்களில் தீவிரவாத தாக்குதலகளை நடத்தி வருகின்றனர். சீனாவும் தகுந்த தண்டனை அவர்களுக்கு கொடுத்து வருகிறது

சமீபத்தில் இஸ்லாம் இமாம்களை வீதியில் வைத்து நடனமாட செய்தது நினைவிருக்கலாம்

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Uygur-imamlar-dans

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 13, 2015 12:05 am

வீதியில் வைத்து நடனமாட வைத்தார்களா? ஏன்?

தண்டனையா?

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 13, 2015 12:08 am

இப்பொழுது தான் பார்த்தேன் சஜீவ்! இதற்கு முன் இந்தச் செய்தியை அறிந்ததில்லை!

Imams Forced to Dance on in street in China

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Fri Mar 13, 2015 7:57 am

சிவா wrote:வீதியில் வைத்து நடனமாட வைத்தார்களா? ஏன்?

தண்டனையா?

சிவா wrote:இப்பொழுது தான் பார்த்தேன் சஜீவ்! இதற்கு முன் இந்தச் செய்தியை அறிந்ததில்லை!

Imams Forced to Dance on in street in China

தண்டனை என்று தெரியவில்லை.. கொஞ்சம் குறும்பு செய்திருப்பார்கள்.. அந்நேரங்களில் அதிக அளவில் கத்திக் குத்து சம்பவங்கள் அந்த மாகாணங்களில் நடந்தது, அங்குள்ள இஸ்லாம் பள்ளிகளும் அதில் தொடர்பு படுத்தப்பட்டன..

அதனால் தான் மன அமைதிக்கு வேண்டி சீன யோகா சோகம் சோகம் சோகம்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 16, 2015 1:45 am

ஈராக், சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல்

ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்க கூட்டுப்படைகள் குண்டுவீசி வான்வழி தாக்குதல் நடத்தின. ஈராக்கின் அல்ஆசாத், அல் ஹவாஜா ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில், போர்க்கருவிகள், வாகனங்கள் சேதமடைந்தன.

இதேபோல், சிரியாவில், துருக்கியின் எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் வாகனங்கள் சேதம் அடைந்தன.

இந்த தகவலை அமெரிக்க கூட்டுப்படைகள் தெரிவித்துள்ளன.

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 16, 2015 2:02 am

ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் குளோரின் அமிலம் உபயோகம்: ஏராளமான மக்கள் பாதிப்பு

அர்பில்: ஈராக் நாட்டில் குர்தீஷ் பிராந்தியம் தன்னாட்சி அதிகாரம் பெற்றது. இப்பகுதிகளில் ஏராளமான எண்ணெய் கிணறுகள் உள்ளன. இவற்றை கடந்த வருடம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி கைப்பற்றி வைத்திருந்தனர். அத்துடன், குர்தீஷ் பிராந்தியத்தில் அர்பில் உள்பட பல்வேறு நகரங்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இன்றுவரை வெடிகுண்டு மற்றும் தற்கொலை படை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அவர்களை ஒடுக்க, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் களத்தில் இறங்கின. அமெரிக்காவின் தொடர் வான்வழி தாக்குதலை தொடர்ந்து, ஈராக் மற்றும் குர்தீஷ் பாதுகாப்பு படை களத்தில் வலுவுடன் இறங்கியது. இதைத் தொடர்ந்து, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றிய எண்ணெய் கிணறுகளை யும் நகரங்களையும் மீட்டு வருகின்றனர். இந்நிலையில், குர்தீஷ் பிராந்தியத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தும் கார் வெடிகுண்டு தாக்குதலில் குளோரின் அமி லத்தை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் குளோரின் அமிலம் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப் பட்டு உள்ளது. இந்த குளோரின் அமில தாக்குதலினால் ஏராளமான மக்கள் உடல் சிதறி இறந்துள்ளனர்.

பலர் கை, கால்களை இழந்து முடமாகி உள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் குளோரின் அமிலத்தை போர் ஆயுதமாக பயன்படுத்தியதால், ஏராளமான மக்களுக்கு வாந்தி, மயக்கத்துடன் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன என்று குர்தீஷ் பிராந்திய பாதுகாப்பு கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 20, 2015 4:37 am

ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ள 39 இந்தியர்களை விடுவிக்க துருக்கியின் உதவியை நாடியது இந்தியா

போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈராக்கில், வேலை செய்து வந்த 39 இந்தியர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகள் கையில் சிக்கியுள்ளனர். நீண்ட நாட்களாக ஐ.எஸ். பிடியில் உள்ள அவர்களை மீட்க உதவுமாறு துருக்கிக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக துருக்கி வெளியுறவுத்துறை மந்திரி மெவ்லுட் கவுசொக்லுவுடன் பேசிய சுஷ்மா சுவராஜ், ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து 39 தீவிரவாதிகளை விடுவிப்பது தொடர்பாகவும், பிராந்தியத்தில் நிலவும் தீவிரவாத மிரட்டல்களை எதிர்கொள்வது பற்றியும் விவாதித்தார். அப்போது சுஷ்மாவுக்கு பதிலளித்த கவுசொக்லு கூறுகையில், இந்தியர்கள் கடத்தப்பட்டது பற்றி இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் அனைத்தும் உறுதிப்படுத்தப்படாதவை என்றார்.

கடந்த வருடம் மொசூலில் இந்திய பணியாளர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட போது, அவர்கள் எங்குள்ளனர் என்பது பற்றிய தகவல்களை துருக்கி நாடு தான் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் வரும் நவம்பர் மாதம் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் பிரதமர் மோடி, துருக்கி செல்வது பற்றி இருவரும் கலந்தாலோசித்தாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையது அக்பருதீன் கூறியுள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 22, 2015 11:41 pm

ஐ.எஸ்., கொலைப் பட்டியல் வெளியீடு : அமெரிக்க வீரர்கள் 100 பேருக்கு குறி

டமாஸ்கஸ்: தங்கள் அமைப்பிற்கு எதிராக செயல்படும், 100 அமெரிக்க ராணுவ வீரர்களின் புகைப்படத்துடன் கூடிய பட்டியலை, இணையத்தில் வெளியிட்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், அவர்களை கண்டதும் கொலை செய்யுமாறு, தங்கள் ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், உலகம் முழுவதும் தங்கள் அமைப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தங்கள் அமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டு ராணுவ வீரர்களை கொல்ல செயல் திட்டம் வகுத்துள்ளனர்.

'இஸ்லாமிக் ஸ்டேட் ஹேக்கிங் டிவிஷன்' என்ற பெயரில் செயல்படும், ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் இணையப் பிரிவினர், 100 அமெரிக்க ராணுவ வீரர்களின் பட்டியலை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதில், அமெரிக்க ராணுவம், விமானப் படை, கப்பல் படையை சேர்ந்த முக்கிய வீரர்களின் புகைப்படத்துடன் கூறிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அதோடு, அமெரிக்காவில் வசிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்., ஆதரவு சகோதரர்கள், இந்த பட்டியலில் இடம் பெற்றவர்களை கண்டதும் கொலை செய்யுமாறு பயங்கரவாதிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது, அமெரிக்கா மட்டுமின்றி, உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்து, அமெரிக்காவின் ராணுவ மற்றும் முக்கிய அரசு துறைகளின் இணையதளங்களை 'ஹேக்' செய்து பெறப்பட்டவை என, பயங்கரவாதிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும், இந்த தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது. பட்டியலில் இடம் பெற்றுள்ள ராணுவ வீரர்கள் பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களிலிருந்து பெறப்பட்டவை என, அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதன் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாகவும், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அமெரிக்கா தெரிவித்துள்ளது.ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பின் இந்த கொலைப் பட்டியல் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 07, 2015 3:18 am

இஸ்லாமிக் அல்லாத உடைகளுக்கு தீவிரவாதிகள் தடை ;இறுக்கமாக ஜீன்ஸ் அணிந்த வாலிபருக்கு ஜெயில்

சிரியா மற்றும் ஈரான் சில பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுபாட்டில் வைத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பல்வேறு சட்டதிட்டங்களை அங்கு நிறைவேற்றி வருகிறார்கள். அங்கு தற்போது இஸ்லாம மத சம்பந்தம் அல்லாத ஆடைகள் அணிய தடை விதிக்கபட்டு உள்ளது. மேலும் இஸ்லாமிய சட்டங்களுக்கு மீறிபவர்களை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டு உள்ளனர். இதன படி இறுக்கமாக ஜீன்ஸ் அணிந்த வாலிபர் ஒருவருக்கு ஜெயில் தண்டனை கொடுத்து உள்ளனர்.அவருக்கு 10 நாட்கள் ஜெயில் தண்டனை விதிக்கபட்டு உள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் எதிர்ப்பு குழு இந்த சட்ட திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். ஐஎஸ் வினோதமான சட்ட திட்டங்களை கொண்டு வந்து அதை எதிர்ப்பவர்கள் கடவுளின் சட்டங்களை எதிர்ப்பவர்களாக கூறி கைது செய்ய படுகிறார்கள். மொபைல் போனில் இசை கேட்டால் கூட துன்புறுத்த்ப்படுகிறார்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்  - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக