புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிமை !  Poll_c10அடிமை !  Poll_m10அடிமை !  Poll_c10 
90 Posts - 71%
heezulia
அடிமை !  Poll_c10அடிமை !  Poll_m10அடிமை !  Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
அடிமை !  Poll_c10அடிமை !  Poll_m10அடிமை !  Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
அடிமை !  Poll_c10அடிமை !  Poll_m10அடிமை !  Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
அடிமை !  Poll_c10அடிமை !  Poll_m10அடிமை !  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அடிமை !  Poll_c10அடிமை !  Poll_m10அடிமை !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிமை !  Poll_c10அடிமை !  Poll_m10அடிமை !  Poll_c10 
255 Posts - 75%
heezulia
அடிமை !  Poll_c10அடிமை !  Poll_m10அடிமை !  Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
அடிமை !  Poll_c10அடிமை !  Poll_m10அடிமை !  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அடிமை !  Poll_c10அடிமை !  Poll_m10அடிமை !  Poll_c10 
8 Posts - 2%
prajai
அடிமை !  Poll_c10அடிமை !  Poll_m10அடிமை !  Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
அடிமை !  Poll_c10அடிமை !  Poll_m10அடிமை !  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அடிமை !  Poll_c10அடிமை !  Poll_m10அடிமை !  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அடிமை !  Poll_c10அடிமை !  Poll_m10அடிமை !  Poll_c10 
3 Posts - 1%
Barushree
அடிமை !  Poll_c10அடிமை !  Poll_m10அடிமை !  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அடிமை !  Poll_c10அடிமை !  Poll_m10அடிமை !  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிமை !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 15, 2014 8:09 pm

அன்று நாள் முழுக்க, 'பவர்கட்' என்பதை எதிர்பார்க்கவில்லை அப்பாஸ். மின்விசிறி நின்றதும், தூக்கமின்றி எழுந்தவன், முகம் கழுவ குழாயை திறந்தான். தண்ணீர் மெதுவாக வரவே, 'அடடே... மோட்டார் போட மறந்துட்டோமே... இனி சாயங்காலம் வரை தண்ணீருக்கு என்ன செய்வது...' என்ற கவலையில் கதவை திறந்தான். வெளியே கிடந்த அன்றைய தினசரி பேப்பரை எடுத்து விரித்தவன், 'ஞாயித்துக்கிழமை ஒரு நாள் தான் லீவு; நிம்மதியா, 'டிவி' பாக்கலாம்ன்னா முடியல...' என்று மனதிற்குள் சலித்துக் கொண்ட போது, மொபைல் சிணுங்கியது. ஊரிலிருந்து அம்மா...

அவனுக்கு அம்மாவிடம் பேசவே பயமாக இருந்தது. எப்ப பார்த்தாலும் கல்யாணப் பேச்சு; எத்தனையோ முறை மறுத்தும், அம்மா ஏதாவது ஒரு பெண்ணைப் பற்றி சொல்லிக் கொண்டேயிருப்பார். வேறு வழியின்றி எடுத்துப் பேசினான்...

''அப்பாசு... ஓட்டல்ல சாப்பிட்டா உடம்பு கெட்டுரும்டா; ஒரு நல்ல பெண்ணா பாத்திருக்கேன். பேசாம ஒத்துக்கோ... அடுத்த மாசம் நிக்கா வச்சுக்கலாம்.''
''ஏம்மா இப்படி தொந்தரவு செய்றீங்க... நீங்க பாக்குற பொண்ணு எனக்கு கண்டிப்பா பிடிக்காது; எனக்கு பிடிச்ச மாதிரி ஒரு பொண்ணப் பாத்தா நானே சொல்றேன்; அப்ப எனக்கு அவளை கட்டி வையுங்க.''
''சரி... அப்படி யாராவது இருந்தா சொல்லேன்.''
''இதுவரை இல்ல,'' என்று சொல்லி தொடர்பை துண்டித்தான்.

வீட்டில் தனியாக இருக்க போரடிக்கவே, மூர் மார்க்கெட்டுக்கு புறப்பட்டு சென்றான். சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருந்த பழைய மூர் மார்க்கெட் எரிந்து போனதில், மிச்சமிருந்த இடம் அல்லிக்குளம் என்று அழைக்கப்படுகிறது. இது, புத்தகங்கள், பறவைகள், மீன்கள் மற்றும் 'சிடி' கேசட்டுகள் போன்றவை வாங்க நல்ல இடம். வாரத்திற்கு ஒருநாள் நிச்சயமாக அப்பாசை அங்கு பார்க்கலாம். தனக்கு பிடித்த புத்தகங்கள், 'சிடி'க்கள் வாங்கிய பின், மறக்காமல் சில பறவைகளை வாங்குவான்.

அபூர்வமான வெளிநாட்டு பறவைகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டு இருக்கும். அதை கூண்டோடு வாங்கி, கூண்டில் இருக்கும் பறவைகளை விடுவித்து, சுதந்திரமாக பறக்க விடுவான். கடைக்காரருக்கு இதைப் பார்க்க வியப்பாக இருக்கும். 'ஆசைப்பட்டு வாங்கி, அதை வீட்டில வச்சு வளர்க்காம, இப்படி பறக்க விட்டு காசை வீணாக்கறானே... இவன் என்ன பைத்தியமா...' என்பதைப் போல பார்ப்பார். இன்று அவனிடம் அதை நேரிடையாக கேட்டு விட்டார். அவன் சிரித்தபடியே, ''ஒரு அடிமையை விடுதலை செய்வது, பெரிய புண்ணியம்ன்னு இஸ்லாம் சொல்லுது; அதைத்தான் செய்கிறேன்,''என்றான்.

'இவனப் போய் கிறுக்கன்னு நினைச்சோமே...' என, வெட்கப்பட்டார் கடைக்காரர்.
மறுநாள் தன் அலுவலகத்தில் பிசியாக இருந்த போது, நண்பன் நியமத் வந்தான்.
''நேத்து சரியான அயிட்டம் கெடச்சது; பாரின் சரக்கு,'' என்றபடி கண் சிமிட்டினான் நியமத்.
அதை கேட்காதவன் போல, தன் வேலையில் கவனம் செலுத்தினான் அப்பாஸ்.
''எனக்கொரு சந்தேகம் அப்பாஸ்...''
''சரக்கப் பத்தியா?''
''இல்ல... உன்னப் பத்தி!''
''கேள்...''

''நீ ஆம்பள தான?''
முறைத்தான் அப்பாஸ்.
''வீட்டுல பாக்குற பொண்ணையும் கட்டிக்க மாட்டேங்குற; எங்களோடவும், 'வீக்என்டு'ல வந்து, 'என்ஜாய்' பண்ண மாட்டேங்குற; அதான் கேட்டேன்.''
''ஆம்பளங்கிறதுக்கு அடையாளம் அதுமட்டும் தானா?''

''பின்ன?''
''சமயம் வரும் போது காட்டறேன்.''
அந்த வாரமே அதற்கான சமயம் வாய்த்தது.
சனிக்கிழமை மாலை அவனை தேடி வந்தான் நியமத்.
''ஈ.சி.ஆர்., ரோட்ல சந்தை கூடியிருக்காம்... வா போகலாம்.''

அப்பாசுக்கு அதில் துளி கூட இஷ்டமில்லை. அவன் இந்த மாதிரி விஷயங்களில் சுத்த சைவம். மறுக்க வாயெடுத்த போது, ''எனக்கொரு சந்தேகம்,'' என்றான் நியமத். பேசாமல் அவனுடன் ஒட்டிக் கொண்டான். 'என்ன தான் நடக்கும் பார்த்து விடுவோமே...' என்று எண்ணினான்.

ஈ.சி.ஆர்., ரோடு லேசாக இருள் சூழ ஆரம்பித்த போது, பைக்குகள் பறந்து கொண்டிருந்தன. எல்லாம் ஜோடிகள்; முன் பக்கமிருந்த ஆண்கள் ஹெல்மெட்டிலும், பின்பக்கமிருந்த பெண்கள் துப்பட்டாவிலும் தங்கள் முகத்தை மூடியிருந்தனர். இவர்கள் மட்டும் பெண் துணை இல்லாமல் போவதை அந்தப்பக்கம் போன சிலர், ஒரு மாதிரியாக பார்த்தனர். பனையூர் அருகில் ஆள் அரவமற்ற சந்தில் பைக்கை நிறுத்தினான் நியமத். சற்று தொலைவில் ஒரு வேன் நின்றிருந்தது; அதில் சாய்ந்தபடி ஒரு ஒல்லியான ஆள் நின்றிருந்தான். அவனை நெருங்கினான் நியமத்.

''ஒரு ராத்திரிக்கு ஆயிரம் ரூபாய்,'' என்றான் அந்த ஒல்லி.
''ஓகே,'' என்றபடி அப்பாசிடம் திரும்பி, ''நீயும் வா,'' என்றான். அப்பாஸ் மறுக்க, ''ஒருமுறை சும்மா பாருங்க சார்; உங்க மனசு மாறிவிடும்,'' என்றான் அந்த ஒல்லி.

மறுத்தவனின் பார்வை ஏதேட்சையாய் வேனுக்குள் உட்கார்ந்திருந்தவளை நோக்கி சென்றது..
சிறகொடிந்த கிளியைப் போல ஒரு தேவதை அமர்ந்திருந்தாள். அவளைப் பார்த்து அதிசயித்தான்.
''எப்படி... நான் சொல்லலே?''

மறுபடியும் அப்பெண்ணை பார்த்தான். இருபத்திரண்டு வயசிருக்கும்; அவளுடைய கண்கள் ஏதோ பேசுவதை போல அவனிடம் கெஞ்சின. உதடுகள், 'ப்ளீஸ்' என்று முனங்கியது.

அவன் எத்தனையோ பெண்களை பார்த்திருக்கிறான். ஆனால், இப்படி ஒரு அழகியை பார்த்ததில்லை. அவன் பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று அவள் அழுது, ''என்னை காப்பாற்றுங்கள்... நான் அப்படிப்பட்ட பெண் கிடையாது; ப்ளீஸ்,'' என்று உரத்த குரலில் சொன்னாள்.

அவனுக்கு எதுவும் புரியவில்லை. ''இவளுக்கு என்ன விலை?'' என்று கேட்டான் அப்பாஸ்.
''ஆயிரம் ரூபாய்.''

''அப்படியே மொத்தமாக வாங்கிக்குறேன்; விலையை சொல்?'' என்று அப்பாஸ் கேட்க, ''டேய்... உனக்கு என்ன பைத்தியமா?'' என்றான் நியமத். ஒல்லிக்கு ஒன்றும் புரியவில்லை. அவனுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டதால், சும்மா கேட்டு வைப்போம் என்று, ''ஐம்பதாயிரம் ரூபாய்,'' என்று சொன்னான்.
''ஓகே... கொஞ்சம் பொறு,''

தொடரும்....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 15, 2014 8:10 pm

என்று சொல்லி, பக்கத்திலிருந்த ஏ.டி.எம்.,க்கு சென்று பணத்தை எடுத்து வந்து ஒல்லியின் கைகளில் திணித்தான் அப்பாஸ். அப்பெண் வேனிலிருந்து இறங்கினாள். அவளை ஒரு ஆட்டோவில் ஏற்றிய அப்பாஸ், ''நியமத்... நாளை சந்திப்போம்,'' என்றான்.

சென்னையை நோக்கி ஆட்டோ சென்று கொண்டிருந்தது; மவுனத்தை உடைத்தாள் அப்பெண், ''ரொம்ப நன்றி... உங்க காசை நான் திருப்பி கொடுத்திடுறேன்.''

''பரவாயில்ல... பணம் தேவையில்ல.''
''வேற என்ன வேணும்?'' என்று தன் பெரிய கண்களில் பயத்தை காட்டினாள்.
''நீங்க அந்த மாதிரி பெண் கிடையாது என்றால், நானும் அந்த மாதிரி ஆண் கிடையாது.''
''பின்ன ஏன் அங்க வந்தீங்க?''

''உங்கள காப்பாத்த இறைவன் என்னை அழைச்சிருக்கலாம்; ஒரு அடிமையை விடுதலை செய்வது, பெரிய நன்மை என்று இஸ்லாம் கூறுகிறது. நான் அதைத்தான் செய்தேன்,'' என்றான் அப்பாஸ். அவளுடைய முகத்தில் மலர்ச்சி.

''என் பெயர் நர்கீஸ்; பெங்களூர்ல இருந்து வர்றேன். இங்க ஒரு வாரம் எங்க அலுவலக கிளையில பயிற்சி. என் தோழி ஸ்டேஷனுக்கு வர்றதா இருந்தா; ஆனா, வரல. வழி தெரியாம இவங்ககிட்ட சிக்கிட்டேன்... நல்ல வேளை இறைவன் உங்கள அனுப்பி, என்னை காப்பாத்திட்டான்,''என்றாள்.
அவளிடம் தன்னைப்பற்றி கூறினான் அப்பாஸ். ஆட்டோ அவன் தங்கியிருந்த வீட்டு அருகில் வந்து நின்றது.
''நர்கீஸ்... இந்த ராத்திரி நேரத்துல நீங்க தனியா போறது பாதுகாப்பில்ல. அதனால என் வீட்லேயே தங்கலாம்; விடிஞ்சதும் போங்க.''

வீட்டில் பிரெட் மற்றும் ஆம்லெட் செய்து இருவரும் சாப்பிட்டனர். அறைக்குள் அவளும், வெளியே அவனும் படுத்துக் கொண்டாலும், நெடுநேரம் வரை இருவரும் தூங்கவில்லை, புரண்டு கொண்டிருந்தனர்.
அதிகாலையில் அப்பாஸ் எழுந்த போது, நர்கீஸ் தொழுது கொண்டிருந்ததை பார்த்தான். தலைமுடியை மறைத்தபடி அவள் துணி கட்டியிருந்த அழகும், கைகளை தூக்கி இறைவனிடம் துஆ கேட்ட போது, அந்த மருதாணி பூசிய கைகள் அவனை இம்சித்தது. பின் கொஞ்ச நேரம் குர்ஆன் ஓதிவிட்டு, தஸ்பீஹ் எடுத்து, ஜிகிர் செய்ய ஆரம்பித்தாள். அதற்குள் அப்பாஸ் சூடாக டீ போட்டு எடுத்து வந்தான். அவள் சிரித்தபடி, ''தேங்ஸ்... நீங்க ஒரு நல்ல கணவராக இருப்பீங்க... உங்க வருங்கால மனைவி கொடுத்து வைச்சவங்க.''
அப்பாஸ் வெட்கப்பட்டான். அவன் வெட்கப்படும் போது, இன்னும் அழகாக இருப்பதை கவனித்தாள் நர்கீஸ்.
பிரிட்ஜிலிருந்த தோசை மாவை எடுத்து, தோசை வார்த்தான் அப்பாஸ்; மிக்சியில் சட்னி அரைத்தாள் நர்கீஸ். இருவரும் சேர்ந்து சாப்பிட்டனர்.

''நர்கீஸ்... நான் சீக்கிரமா ஆபிஸ் போகணும். நீங்க நிதானமா தயாராகி போங்க; போகும் போது, சாவியை பக்கத்து வீட்டு சித்ரா ஆன்ட்டியிடம் கொடுத்துடுங்க. கீழே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஒரு ஆட்டோ டிரைவரிடம் சொல்லி வச்சுட்டுப் போறேன். நீங்க போக வேண்டிய இடத்துக்கு பத்திரமா அழைச்சிட்டு போவாரு. நீங்க ஆபிஸ் போனதும், மறக்காம போன் செய்யுங்க,'' என்று தன் போன் நம்பரை அவளுக்கு தந்தவன், அவளுடைய நம்பரை வாங்கிக் கொண்டான்.
ஆபிசில் வேலை மும்முரத்தில் இருந்த அப்பாஸ், நர்கீசிடமிருந்து போன் வரும் என ஆசையுடன் எதிர்பார்த்தான்; வரவில்லை. நியமத்து தான் வந்தான்.
''டேய்... உன்ன என்னமோ நெனச்சேன்; நீ பலே ஆசாமிடா... அப்படியே மொத்தமா வாங்கிட்டியே!''
''நீ நெனக்கிற மாதிரி கிடையாது,'' என்றவன், நர்கீசிடமிருந்து போன் வராததால், அவனே, அவளை போனில் அழைத்தான்.

''சாரி... பிசியாக இருந்தேன்; தப்பா நெனச்சுக்காதீங்க ப்ளீஸ். எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி,'' என்றாள் நர்கீஸ்.

இரவு சோர்ந்து போய் வீட்டிற்கு போகவே பிடிக்காமல் அப்பாஸ் வீடு திரும்பிய போது, வீட்டிற்குள் விளக்கு எரிந்தது; வியப்புடன் காலிங்பெல்லை அழுத்த, ஓடிவந்து கதவை திறந்தாள் நர்கீஸ்.
பிங்க் நிற சுடிதாரில் அவள் அழகு ஜொலித்தது. அவளைப் பார்த்ததும், அப்பாஸ் முகத்தில் பிரகாசம். வீட்டை பெருக்கி சுத்தமாக வைத்திருந்தாள். திரைச்சீலைகளை மாற்றியிருந்தாள். வாஷிங்மிஷினிலிருந்த அவனது துணிகளை துவைத்து வைத்திருந்தாள். அவனுக்காக மட்டன் பிரியாணி செய்திருந்தாள்.
''நர்கீஸ்... இதையெல்லாம் ஏன் செய்தீங்க?''

''நீங்க என்னை விலைக்கு வாங்கியிருக்கீங்க; நான், உங்க அடிமை. உங்களுக்காக இதை கூடவா செய்யக்கூடாது எஜமானே,'' என்று கூற, சிரித்து விட்டான் அப்பாஸ்.
ரொம்ப நாள் கழித்து வீட்டு சாப்பாட்டை நிதானமாக, அனுபவித்து சாப்பிட்டான். தன் சமையலை அவன் ருசித்து சாப்பிடுவதை, வைத்த கண் வாங்காமல் பார்த்து மகிழ்ந்தாள் நர்கீஸ்.
''உங்களுக்கு ஊருல இருந்து ஒரு கடிதம் வந்திருக்கு.''
''பார்த்தேன்; அம்மா அனுப்பியிருக்கலாம்.''
''ஏன்... படிக்கல?''

''அந்தக் கடிதத்துல என்ன இருக்கப் போகுது...கல்யாணம் செய்துக்க தொண தொணப்பும்; ஏதாவது சொதப்பல் பொண்ணோட போட்டோவும் இருக்கும்,'' என்றான்.
இப்படியே ஒரு வாரம் கழிந்தது. நர்கீஸ் அவனுடைய வீட்டிலேயே தங்கினாள். அது அவனுக்கும் பிடித்திருந்தது.

அன்றும் அவள் வீட்டில் இருப்பாள் என்று ஆசையுடன் அவளுக்காக பூ, ஸ்வீட் வாங்கி வந்தான். ஆனால், வீட்டில் நர்கீசை காணோம். அவளின் கடிதம் மட்டுமே இருந்தது.
'அப்பாஸ் என் அலுவலக பணி முடிந்து ஊருக்குச் செல்கிறேன்; உங்களுடன் பேச பலமுறை மொபைலில் முயன்றேன். 'சுவிட்ச் ஆப்' என்றே வந்தது. உங்களுடன் இருந்த இந்த ஒரு வாரம் மறக்க முடியாதது; காலம் முழுக்க உங்களுடன் இருக்க விரும்புகிறேன். உங்க கூண்டை விட்டு பறக்க எனக்கு இஷ்டமில்லை; உங்க அடிமையாக இருக்கவே ஆசைப்படுகிறேன். எதிலும் தாமதம் செய்யாதீர்கள்; அலமாரியில் உங்க அம்மாவின் கடிதம் உள்ளது. பிரித்து படியுங்கள்...'

நர்கீசின் கடிதத்தை படித்ததும், அம்மாவுடைய கடிதத்தை, பிரித்து பார்த்தான். இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடி போனான். அம்மா அனுப்பியிருந்த மணப்பெண்ணுடைய புகைப்படத்தில் நர்கீஸ் இருந்தாள். வாழ்க்கையில் அப்படி ஒரு சந்தோஷத்தை அவன் அதுவரை அனுபவித்தது இல்லை.

அவனுக்கு அம்மாவிடம் பேச வேண்டும் போல இருந்தது. இதுவரை அம்மா தான் போன் செய்து கொண்டிருந்தாள். முதல் முறையாக அம்மாவிற்கு தான் போன் செய்து, 'நீ பார்த்த பெண் எனக்கு பிடிச்சிருக்கு; நான் அவளையே கட்டிக்குறேன்...' என சொன்னால், அம்மா எவ்வளவு சந்தோஷப்படுவாள். ஆனால், அம்மாவுடைய மொபைல், 'நாட் ரீச்சபீள்' என்று வந்தது. நர்கீசுக்கு போன் செய்ய நினைத்தான். அதைவிட, அவள் எதிரில் சென்று, அவளுக்கு இன்ப அதிர்ச்சியை தர வேண்டும் என்று நினைத்து கதவை பூட்டி, ரயில்வே ஸ்டேஷன் நோக்கி, பைக்கில் பறந்தான்.

'நானும் உன்ன ரொம்ப நேசிக்கிறேன் நர்கீஸ்... உங்கிட்ட சொல்லலாம்ன்னு தான் ஒவ்வொரு நாளும் நினைந்தேன். ஆனா, ஏனோ தைரியம் வரல. ஒரு வேளை நான் உன்ன விரும்புறத சொல்லி, நீ மறுத்துட்டா அதை என்னால தாங்கிக்க முடியாது. ஆனா, இப்ப சொல்றேன்... நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன் என்கிறத. கொஞ்சம் பொறு... ரயிலே புறப்படாதே... நான் வந்து கொண்டிருக்கிறேன்...' என்று மனதுக்குள் பலவாறாக நினைத்து, ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டுமே என்கிற வேகத்தில், பைக்கில் பறந்தவனை பற்றியும், அவனது காதலை பற்றியும் எதிரே குடித்து விட்டு லாரி ஓட்டி வரும் டிரைவருக்கு என்ன தெரியும்?
ஒரு நொடியில் தூக்கி வீசப்பட்டான் அப்பாஸ். சற்று தொலைவில் கிடந்த மொபைல் இசைத்தது. நர்கீஸ் தான் அழைக்கிறாள் என்று அவனுக்கு தெரியும்; ஆனால், பேச முடியவில்லை.

'இனி நான் உன் அடிமையில்லை; உன்னை விட்டு சுதந்திரமாக பறந்து போகிறேன்...' என்று, அவனது உயிர் அவனை பார்த்து சிரித்தது.

அப்சல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 15, 2014 8:51 pm

அச்சச்சோ .மோசமாய் முடித்துவிட்டார்களே கதையை சோகம் நல்ல படியா கல்யாணம் பண்ணின்ண்டு இருக்கக்கூடாதோ.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக