புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_m10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10 
48 Posts - 60%
heezulia
மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_m10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_m10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_m10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_m10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_m10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_m10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_m10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_m10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_m10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10 
43 Posts - 60%
heezulia
மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_m10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_m10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_m10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_m10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10 
2 Posts - 3%
Guna.D
மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_m10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_m10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_m10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_m10மொட்டுக்கள் மலரும் பொழுது! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொட்டுக்கள் மலரும் பொழுது!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 14, 2014 6:52 pm

பாக்கியம் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள்.
'அட... முதுகுவலி இல்லையே... பேரன் வாங்கிக் கொடுத்தானே டைகர் பாமோ, லயன் பாமோ, இந்த அளவுக்கு பிரமாதமாக வேலை செய்கிறதே!'

''அம்மா... இப்ப எப்பிடி இருக்கு உன் முதுகு வலி,'' என்று கேட்டபடியே வந்தான் கேசவன்.
''ம்... அப்படியே தான் இருக்கு,'' என்று, முகத்தை மாற்றிக் கொண்டு சொன்னாள்.
உடனே, குரலையும் மாற்றி, ''கல்யாணம் ஆன நாள்ல இருந்து கொஞ்சமா, நஞ்சமா நான் உங்களுக்காக கஷ்டப்பட்டது... முதுகொடிய கிச்சன்ல வேலை, ஸ்கூல் விட்டதும் உங்கள கூட்டிகிட்டு வர்றது, பாடம் சொல்லிக் கொடுக்கிறது, காய்கறி, மளிகைன்னு கடைக்கு போய்ட்டு வர்றது, தோட்ட வேலைன்னு பட்ட பாட்டுக்கு அளவே இல்லை... சரி சரி மீனா எங்க?''

''சமையல்ல பரபரப்பா இருக்காம்மா; சங்கீதாவுக்கு இன்னிக்கு காலேஜ்ல, ப்ரெண்ட்ஸ் கெட் டு கெதர்... அதுக்காக ஸ்பெஷல் சமையல் போய்க்கிட்டுருக்கு.''
''அதென்ன ஸ்பெஷல் சமையல்; அவியலா, எரிசேரியா?'' என்றாள் கண்ணை சுருக்கி.
''பாஸ்தா, மஷ்ரூம் பீட்சா, க்ரீம் ஆப் ப்ராக்கோலி, கறிலசான்யா... அப்புறம்,'' என்று யோசித்தவனை, அவள் சடாரென்று நிமிர்ந்து பார்த்தாள்.

''நீ பேசுறது என்ன பாஷை... சாப்பாடு பத்தித் தானே கேட்டேன்?'' என்றாள் எரிச்சலுடன்.
''நானும் அதைப்பத்திதாம்மா சொன்னேன்,'' என்று, சிரித்தான். ''இதெல்லாம் இத்தாலி மற்றும் தாய்லாந்து நாட்டு உணவு வகைகள் பசங்களுக்கு, இதெல்லாம் ரொம்ப பிடிக்குதும்மா இப்பல்லாம்.''

''ரொம்ப நல்லா இருக்குடா நீ பேசறது... நமக்குன்னு பாரம்பரியம், கலாசாரம் இல்லையா... தேங்காய் அரச்சு விட்ட சாம்பார், பல காய்கறி போட்ட அவியல், எல்லா பருப்பும் போட்ட அடைன்னு, நம்ம தென்னிந்திய சமையலுக்கு ஈடு இணை உண்டா... பசங்களுக்கு, இதை நாம தானே எடுத்துச் சொல்லணும்.''
அவன் சட்டென்று நகர்ந்தபடி, ''சரி சரி சொல்லலாம். நீ ஓய்வு எடும்மா,'' என்று சொல்ல, அவள் அப்படியே, தொப்பென்று சோபாவில் உட்கார்ந்தாள்.

திடீரென்று ஏதோ ஒரு வாசனை. என்ன வாசனை இது... அறிந்திராத புது நறுமணம். அப்படியே நாசியை கீறிக் கொண்டு உள்ளே போகிறது. வெளிநாட்டு சென்ட் போல, ஒரு அடர்ந்த புது வாசனை.
''தள்ளி உட்காரு பாட்டி,'' என்றபடியே, ராகுல் வந்தான்.

தன்னுடைய ஐ - பேடு, லேப் - டாப், மொபைல் போன் எல்லாவற்றையும் பரப்பி வைத்தான். வேகமாக ஒன்றை ஆன் செய்து, ஒயரை சேர்த்து, காதில் சொருகி பரபரப்பாக இருந்தான்.
''இடம் தான் இருக்கே... உக்காரேன்,'' என்றாள்.
''பாட்டு கேக்குறியா பாட்டி?''
''பாட்டா... என்ன பாட்டு?''
''பாப் மார்லியோடது; ராப் சூப்பரா இருக்கும்... இந்தா காதுல மாட்டிக்கோ,'' என்று, அவன் அந்த சிறிய ஒலி பெருக்கியை அவள் காதில் வைக்க வந்த போது, அவள் முகத்தை சுளித்தாள்.

''சேச்சே... மார்லியாவது, பார்லியாவது. நாதஸ்வரம், தவில், மிருதங்கம் இப்படி ஏதாவது, வாத்தியக் கச்சேரி இருந்தா கேக்கறேன்; ஒரே சத்தமா, இரச்சலா இருக்கற உங்க பாட்டெல்லாம், வேண்டவே வேண்டாம் எனக்கு,''
''சரி, லேடி காகா கேக்கறியா... மரியா பாட்டு நல்ல மெலடியாக இருக்கும். இல்லன்னா, மடோனா பாட்டு கூட பிரமாதமா இருக்கும். ஒரு முறை கேட்டுப் பாரு பாட்டி,'' என்றான், மிக ஆர்வத்துடன்.

அவள் கண்டிப்பான குரலில், ''வேண்டாம்ன்னா வேண்டவே வேண்டாம். நமக்குன்னு இசை இருக்கு. அதுல, எல்லா தாளம், லயம், ஸ்வரம், கட்டுன்னு இருக்கு; வேற நாட்டு இரச்சல் இசை தேவையே இல்ல... ம்... இதெல்லாம் சொன்னா புரியுமா உனக்கு?'' என்று, முனைப்புடன் சொன்னாள்.
அவனும் சற்று கோபத்துடன், ''உன்னை மாத்தவே முடியாது பாட்டி,'' என்று, அத்தனையையும் எடுத்துக் கொண்டு, சடாரென்று எழுந்து போனான்.

'சே...என்ன பசங்கள் இதெல்லாம்...' என்று, கோபத்துடன் அவள் முணுமுணுத்தாள். 'பேஷன் பேஷன் என்று அலைகிறதுகளே தவிர, வேர்களை பற்றிய கவலையே இல்லை. ஒரு கீர்த்தனை கற்றுக் கொள்வோம், ஆலாபனை என்றால் என்ன, தொகையறா என்றால் என்ன, தியாகையர் எப்படி ராகத்தையும், பக்தியையும் இணைத்தார், கண்ணதாசன் எளிமையான தமிழில், எப்படி அற்புத பாடல்களை படைத்தார் என்றெல்லாம் யோசிக்கிறதுகளா...

'அந்தக் குட்டி சங்கீதா... நாளைக்கே கல்யாணம், காட்சி என்று நடந்து, இன்னொரு வீட்டுக்கு போகப் போகிறவள், ஒரு வத்தக்குழம்பு, ஒரு பருப்பு துவையல் என்று கற்றுக் கொள்கிறாளா? இல்லை அம்மாக்காரி தான் கற்றுக் கொடுக்கிறாளா? நாள், கிழமை என்றால் அரிசி, கடல பருப்பு பாயசம் கூட செய்யத் தெரியாம இப்படி வளர்க்கிறாள் பெண்ணை...'

''பாட்டி பாத்தியா பாட்டி... நானும், அம்மாவும் சேர்ந்து, பாஸ்தா செய்துருக்கோம்; நெட்ல பாத்து பாத்து செய்தோம். சூப்பரா வந்திருக்கு; டேஸ்ட் பாக்குறியா நீ...'' என்று, ஓடி வந்த சங்கீதாவை பார்த்து, அவள் முகம் திருப்பிக் கொண்டாள்.

''ப்யூர் வெஜிடேரியன் பாட்டி, மூணு கலர் குடைமிளகாய், சோளம், சீஸ், பனீர் போட்டு செஞ்சோம். டேஸ்ட் பாக்குறீயா பாட்டி,'' என்று, மறுபடியும் ஆர்வமாக கேட்ட பேத்தியை பார்த்து, அவள், 'சள்'என்று விழுந்தாள்.
''நாம என்ன இத்தாலியில இருக்கோமா இல்ல பாரிஸ்ல இருக்கோமா... எப்ப பாத்தாலும் நூடுல்ஸ், பர்கர், பிட்சான்னு சாப்பிடறதுக்கு.

நம்ம நாட்டு சமையல்ல இல்லாத ஸ்பெஷல் அயிட்டமா... பிசிபேளாபாத், பகாளாபாத், பொரிச்ச குழம்புன்னு எத்தனை இருக்கு... அந்தக் காலத்துல, எங்கம்மா எட்டு வயசுல இருந்தே சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சுட்டா தெரியுமா... பத்து, பதிமூணு வயசுல எல்லாம் நாங்க முழு சமையல தயார் செய்துடுவோம். இப்படி, வெளிநாட்டு உணவா தேடி தேடி அலஞ்சு, அதை பெருமையா வேற சொல்லிக்குற... எல்லாம் உன் அப்பாவை சொல்லணும். அசட்டு செல்லம் கொடுத்து, உங்களை எல்லாம் கெடுக்கறான்,'' என்றாள்.

''போ பாட்டி,'' என்று, உதட்டை பிதுக்கி, எழுந்து போனாள் சங்கீதா.
பூபதி வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டமாம். 3:00 மணிக்கு தகவல் வந்தது. குடும்பத்துடன் வர வேண்டுமாம்.
''ராகினி... நாம எல்லாரும் கண்டிப்பா போகணும். சின்ன வயசு பிரெண்ட்ஸ் நாங்கள்லாம். அவன் பசங்களும், நம்ம பசங்களும் ஒரே ஸ்கூல், ஒரே காலேஜ்ன்னு வளர்றதுங்க. அவன் ஒய்ப் நீலாவும், உனக்கு பிரெண்ட். நான் கொஞ்சம் சீக்கிரமா கிளம்பி, கிப்ட் வாங்கிட்டு வந்துடறேன். நீ அம்மா, பசங்க எல்லாம் தயாரா இருங்க...'' என்று, கேசவன் கூப்பிட்டு, சொல்லி விட்டான்.
அவள் மாமியாரிடம் விரைந்தாள்...

''அத்தை... பூபதி இருக்காரே... அவர் வீட்டுல இன்னிக்கு பிறந்த நாளாம்; கூப்பிட்டுருக்காங்க எல்லாரும் போகணுமாம். உங்க மகன் இப்பதான் போன் பண்ணி சொன்னார். 4:00 மணிக்கு ரெடியாயிடலாம்,'' என்றாள்.
''நான் எதுக்கு?'' என்றாள் அலட்சியத்துடன் பாக்கியம்.
''முட்டை போட்ட கேக்கும், பாட்டும், கூத்துமா இருக்கும்; எனக்கு அதெல்லாம் சரியா வராது. நான் நிம்மதியா, 'டிவி'ல சீரியல் பாக்குறேன்; எனக்கு அடையும், சட்னியும் செய்து வைச்சுட்டு நீ கிளம்பு.''

''அது சரி அத்தே... உங்க தோழி சரோஜம்மா அங்க தானே இருக்காங்க, உங்களுக்கும் அவங்களை பாத்த மாதிரி இருக்குமே.''
''ம் சரி... பாக்கலாம்.''
''அத்தை...''
''சொல்லு!''

''உங்க மகன், சுடிதார் வாங்கிக் கொடுத்திருக்காரு... போட்டுக்கவா?''
''என்ன சுடிதாரா...சங்கீதா போட்டுக்கற மாதிரியா?''
''மசக்கலி, அனார்கலி மாதிரிலாம் இல்லத்த, சிம்பிள் சுடிதார்,'' என்றாள்.
''வீட்டுல உங்க ரூம்ல போட்டுக்க வாங்கிக் கொடுத்திருப்பான். வெளில வாசல்ல போகும் போது அதெல்லாம் வேணாம்; அடக்கமா, அடர் கலர்ல புடவய கட்டிக்க,'' என்றாள்.

கருத்துப் போன முகத்தில், வருத்தம் அப்பிக் கொள்ள, திரும்பிப் போனாள் ராகினி.
''வாங்க வாங்க... எல்லாரும் வாங்க; கேசவம்மா வாங்க... பெரியவங்க வீடு தேடி வந்ததுக்கு, ரொம்ப சந்தோஷம்,'' என்று, பூபதியும், நீலாவும் கார் கதவை திறந்து வரவேற்றனர்.

ஹாலின் அலங்காரம் கண்ணைப் பறித்தது. வண்ண விளக்குகள், சரம் சரமாக இயற்கையும், செயற்கையுமான பூக்கள். மணம் வீசும் பிரியாணி. புல்லாங்குழல் இசைக்கும் இந்திப் பாடல். நட்ட நடுவில், வட்ட வடிவில், மேஜையில் மிகப் பெரிய பிறந்த நாள் கேக்!
அதில் வரையப்பட்டிருந்த புகைப்படம்; அது சரோஜம்மா!

திகைப்புடன், மறுபடி அந்த கேக்கையே பார்த்தாள் பாக்கியம். ஆமாம்... அந்த பர்த்டே கேக்கில், சரோஜம்மாவின் புகைப்படம் மிக அழகாக பிரின்ட் செய்யப்பட்டிருந்தது. அப்படியானால், சரோஜாவுக்கா பிறந்த நாள்!

''வா பாக்கியம் வா வா... எப்பிடி நல்லா இருக்கீயா...'' என்று, சரோஜா மலர்ந்த முகத்துடன், வரவேற்றாள்.
எழுபது வயது சரோஜாவின் மெல்லிய உடலை, எளிமையான டிசைனர் புடவை, அழகாக வெளிப்படுத்தியது. புருவங்களை லேசாக திருத்தி, கன்னங்களுக்கு ரூஜ் பூசி, உதடுகளுக்கு இளவர்ண லிப்ஸ்டிக் வரைந்து, இன்னும் அடர்வாகவே இருந்த கூந்தலுக்கு சீயக்காய் குளியல் கொடுத்து, சிறிய பொட்டும், மெல்லிய மையுமாக சரோஜா இந்தி சினிமாவில் வரும் அழகான தாதிம்மா போல ஜொலித்தாள்.
''உனக்கா சரோஜா பிறந்த நாள்... இவ்வளவு கிராண்டா...'' என்று, அவள் வாய், தானாகவே கேட்டு விட்டது.
சரோஜா வெட்கத்துடன் சிரித்தது கூட, எழிலாக இருந்தது.

''பேரன், பேத்தி செய்ற வேலை இதெல்லாம். கிழவிக்கு ஏம்மா இதெல்லாம்ன்னு கேட்டா, சண்டைக்கு வராங்க. சரி, பசங்க தான் விளையாட்டா இருக்காங்கன்னா, மகனும், மருமகளும் படுத்தற பாடு. நீலா தான் பியூட்டி பார்லர் பொண்ணை வீட்டுக்கு வரவழச்சா; டிசைனர் புடவையும் அவதான் வாங்கினா. 'இதெல்லாம் தேவையா'ன்னு கேட்டாலே, கோபம் வருது எல்லாருக்கும்!''

''இதுமட்டுமல்ல... இதுக்கு மேலேயும் செய்வோம் எங்க பாட்டிக்கு...''என்று, ஓடிவந்த பேரக்குழந்தைகள், ஆளுக்கு ஒரு பக்கம் கட்டிக் கொண்டு, முத்த மழை பொழிந்தனர்.
பேத்தி கரகரத்தது...

''எங்க பாட்டி மாதிரி, அருமையான மனுஷிய எங்க தேடினாலும் பாக்க முடியாது. அந்தக்காலத்துல, எங்க காலத்துலன்னெல்லாம் பேசாத பாட்டி, எங்க புது டேஸ்ட்டுக்கெல்லாம் மதிப்பு கொடுக்குற பாட்டி, ஸ்லீவ்லெஸ், லெகின்ஸ் போட்டாலும், 'அழகா இருக்கே'ன்னு பாராட்டிட்டு, தனியா கூப்பிட்டு, 'கண்ணு... நம்ம உடம்பு என்கிறது புனிதமான விஷயம்; அதை நாலு பேர் பாக்க விட்டு மலினப்படுத்திக்க வேண்டாம்'ன்னு சொல்வாங்க. புது டிஷ் செய்தா, அவங்களும் எங்க கூட உட்கார்ந்து ஆசையா சாப்பிடுவாங்க; அப்புறம் பொறுமையா, 'எப்பவும் நம்ம மண்ணுல, நம்ம கூடவே வளர்ந்து, பூத்து, காய்ச்சு, கனியாகிற தாவரங்கள் தான் நல்லது; பிட்சா, பர்கர் இதெல்லாம் ஒரு மாறுதலுக்கு தாராளமா சாப்பிடலாம். ஆனா, நம்ம உடம்புக்கு ஆரோக்கியம் தர்ற, நம்ம ஊர் காய்கறிகளை மறக்கவே கூடாது'ன்னும் சொல்வாங்க.''
பேரனும் படபடத்தான்.

''ஆமா... என் கூட உட்கார்ந்து, பாட்டி, '3டி' படம், ரோமெடி படம் பாப்பாங்க. அர்த்தம் கேட்டு கேட்டு ஆர்வமாக தெரிஞ்சுக்குவாங்க. கார்ட்டூன் கூட பாப்பாங்க. அப்புறம் அவங்க பாக்குற பழைய படங்களையும் பாக்க சொல்லுவாங்க. அதுல இருக்குற கருத்து, சத்தியத்தன்மை, வீரம், உண்மைன்னு எடுத்து சொல்லுவாங்க. எங்களோட ஆப்ரிகன் ராப் கேட்குற பாட்டிக்காக, நாங்களும் வீணை கேப்போம். சூப்பர் பாட்டி எங்க பாட்டி... என்னம்மா அப்படி பாக்குற; நான் சொல்றது சரி தானே?''
நீலா உடனே தலையாட்டி, தொடர்ந்தாள்...

''அவங்க என்னை பெறாத தாயார். குயில் கூவி, துயில் எழுப்புன்னு பாட்டுல வரும். ஆனா, என்னை தினமும் அவங்க தான் எழுப்புவாங்க. அதுவும் கன்னத்துல முத்தமிட்டு, 'குட்மார்னிங்' சொல்லி, 'மாடர்ன் உடைகள் உடுத்திக்கோ; புடவையை ஸ்டைலா போடு, புருஷனோட சின்னதா, பெரிசா, 'டூர்' போய்ட்டு வா; எப்பவும் சமையலறை, தோட்டம்ன்னு அழுக்கா இருக்காதே... 'பளிச்'ன்னு சிரிச்சுகிட்டு, அழகா இரு. சமையல்ல புதுசு புதுசா, எதையாவது கத்துக்கிட்டே இரு'ன்னு சொல்லி, அம்மாவை விட, மேலா சொல்லித் தருவாங்க. ஒரு முறை கூட அவங்க கடிஞ்சு பேசினதே இல்ல. அம்மா... ஐ லவ் யூ!'' என்றாள்.

கடைசியாக மகன், ''எல்லாரும் சொல்றது நூறு சதவீதம் நிஜம். எங்கம்மா உண்மையிலேயே ஒரு வைரம். சின்ன வயசுல பட்ட கஷ்டங்களை, தன் மனதை கெட்டியாக்கிடாம பாத்துக்கிட்டு, இன்னும் நெகிழ்ச்சியா, பேரன்பா, பெருந்தன்மையா தன்னை மாத்திக்கிட்டவங்க. பிச்சிப்பூ மொட்டுக்கள், மாலை நேரத்துல பூத்து, மணம் வீசுகிற மாதிரி, என் அம்மா மனசு, எப்பவும் மணம் வீசிக்கிட்டே இருக்கும்,'' என்று சொல்லி, நெகிழ்ச்சியால் அழுதபோது, அங்கே பேரமைதி நிலவியது.

பாக்கியத்தின் கெட்டி தட்டிப் போன மனசு, முதல் முறையாக ஒரு துளி ஈரத்தை, உணர ஆரம்பித்தது.

வானதி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக