புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_m10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_m10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 
62 Posts - 34%
i6appar
 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_m10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_m10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_m10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_m10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_m10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_m10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_m10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_m10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_m10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_m10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 
62 Posts - 34%
i6appar
 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_m10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_m10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_m10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_m10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_m10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_m10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_m10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_m10 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 15, 2014 10:37 pm

 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Jaihindh_shenbaraman_pillai
ஜெய் ஹிந்த் என்ற கோஷத்தைத் தந்த செண்பகராமன் பிள்ளை
(Chempakaraman Pillai, செப்டம்பர் 15, 1891– மே 26, 1934)


அவருடைய பிறந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து இந்தக் கட்டுரை மலர்கிறது.

அதற்கு முன்னர் அவர் குறித்த சிறுகுறிப்பு:

செண்பகராமன் 1891 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியான புத்தன் சந்தை என்ற ஊரில் பிறந்தார். தந்தை சின்னசாமிப்பிள்ளை; தாயார் நாகம்மாள். சின்னசாமிபிள்ளை திருவாங்கூர் சுதேச அரசாங்க சேவையில் தலைமை கான்ஸ்டபிளாக இருந்தார்.

இவர் இளம் வயதிலேயே விளையாட்டிலும் சிலம்பம், வாள்வீச்சு போன்ற கலைகளிலும் சிறந்து விளங்கினார். திருவனந்தபுரம் மன்னர் உயர் நிலைப் பள்ளியில் தம் பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். பின் ஐரோப்பா சென்ற செண்பகராமன் முதலில் இத்தாலியிலும் பின்னர் ஸ்விட்சர்லாந்து பல்கலைக் கழகத்திலும் பயின்று பல பட்டங்கள் பெற்றார். ஐரோப்பிய மொழிகள் பலவற்றைக் கற்றுத்தேர்ந்தார். பெர்லின் பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.

***

அகில இந்திய வானொலியைக் கேட்போர் கவனித்திருக்கலாம். காலையில் நிகழ்ச்சிகள் தொடங்கும்போது வந்தேமாதரம் என்ற வார்த்தைகளோடு தொடங்கி, இரவு ஒலிபரப்பை முடித்துவைக்கும் போது ஜெய்ஹிந்த் என்று சொல்லி முடிப்பதைக் கேட்டிருக்கலாம். இந்த இரண்டு வார்த்தைகள், அதாவது இந்த இரண்டு கோஷங்களும்தான் இந்திய சுதந்திரப் போரில் முக்கியமான இடத்தை வகித்தது. வந்தேமாதர கோஷம் கிளம்பிய இடம் வங்கம் என்றால், ஜெய்ஹிந்த் என்ற கோஷம் எழும்பியது ஒருவகையில் தமிழகம் என்று சொல்லலாம். வங்கமும் தமிழகமும்தானே சுதந்திரப் போரில் பெரும்பான்மையான பங்கை ஆற்றியிருக்கின்றது.

வந்தேமாதர கோஷம் தந்த பக்கிம் சந்திர சட்டர்ஜியை நாம் அறிவோம். அதுபோல் ஜெய்ஹிந்த் கோஷத்தை பிரபலப்படுத்திய ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா?

தமிழகத்தில் அசகாய சூரனைக் குறிக்கும் சொல்லாக ஒரு வார்த்தையை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ”ஏ! நீ என்ன பெரிய எம்டனோ?” என்று சர்வசாதாரணமாகக் குறிப்பதைப் பார்க்கிறோம். அது என்ன எம்டன்? யார் அந்த எம்டன்?

எம்டன் என்பவர் உதாரணமாகக் காட்டக்கூடிய வகையில் ஒரு மனிதரல்லர்; உண்மையில் அது ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு போர்க்கப்பல்.
குறைவான, ஆனால் குறி தவறாத, விசைமிக்க ஆயுதங்களுடன் கவச பலமில்லாத, ஆனால் வெகு வேகமாகச் செல்லக்கூடிய கப்பல். ஆஇது முதலாம் உலக யுத்தத்தில் ஆங்கிலோ – பிரெஞ்ச் வகையறா கூட்டணியின் merchant navyக்கு ஒரு பெரும் சாபக்கேடாக விளங்கியது.

பிற்காலத்தில் எம்டன் என்ற ஓர் அசகாய சூரன் நிஜமாகவே இருந்ததாக மக்கள் நினைக்கும் வகையில் சாகசங்களைப் புரிந்ததாக அது விளங்கியிருக்கிறது.

சுதந்திரப் போராட்டம் தீவிரமாக இருந்த தென்னகத்தில் கரிசல் பூமியான திருநெல்வேலி மண் எப்படி எண்ணிறைந்த வீரர்களைத் தந்ததோ அதுபோல் நாஞ்சில் நாடும் தன் பங்குக்கு ஒரு வீரனைத் தந்தது.

சின்னச்சாமி – நாகம்மாள் என்ற சாதாரண ஏழைத்தாய்- தந்தையருக்குப் பிறந்த அம் மாவீரன், பின்னாளில் ஜெர்மனியின் சர்வாதிகாரி, உலக நாடுகளையெல்லாம் குலைநடுங்க வைத்த ஹிட்லரையே தலைவணங்க வைத்தான் என்பது வரலாறு .

“ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அடிமைப்பட்ட மக்கள் உலகின் எந்தக் கோடியில் இருந்தாலும் அங்கே சென்று, அவர்களின் அடிமைத் தளைகளைத் தகர்த்தெறிவேன்” எனச் சூளுரைத்த அந்த நாஞ்சில் நாட்டு வீரன்தான் ஜெய்ஹிந்த் செண்பகராமன்.

தென்னாப்பிரிக்காவில் கறுப்பின மக்களின் துயர் துடைக்க அவர்களுக்கு ஆதரவாக எப்படி காந்தியடிகள் போராட்டம் நடத்தி அவர்களுக்கு உரிமைகள் கிடைக்கச் செய்யப் பாடுபட்டாரோ அதுபோன்று செண்பகராமனும் செய்திருக்கிறார். அவருடைய தியாகப் போராட்ட வாழ்வு அவ்வளவு மேன்மையானது; தைரியமானது… கருப்பு வெள்ளை இனவெறி தலைவிரித்தாடிய அமெரிக்கப் பேரரசின் இனவெறியில் சிக்கி, நாள்தோறும் செத்துப் பிழைத்த நீக்ரோ மக்களுக்காகக் குரல் கொடுத்தார், செண்பகராமன்.

அவர்கள் அனுபவித்த கொடுமைகளைக் கண்டு மனம் நொந்து, அப்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சனைச் சந்தித்தார். கறுப்பின மக்களின் துயரங்களை அவரிடம் எடுத்துரைத்தார். ஆனால் உட்ரோ வில்சனோ “பெரும்பான்மை மக்களின் கருத்திற்கு மாறாக தம்மால் நடந்து கொள்ள இயலாது” என்று மறுத்துரைத்துவிட்டார்.

அப்படி இருந்தும் மனத்தில் கொஞ்சம்கூட சோர்வுறாமல், தன்னைக் கொலை செய்யக் காத்திருக்கும் இனவெறியர்களின் கடும் மிரட்டலையும் மீறி, ஊர் ஊராகச் சென்று நீக்ரோ மக்களைச் சந்தித்துத் தனது வலிமையான கருத்துப் பிரசாரத்தை நடத்தினார் செண்பகராமன். அவர்களின் உள்ளத்தில் கோரிக்கைக்காகப் போராடும் எண்ணத்தை விதைத்தார்.

அது 1914 ஆம் வருடம். முதலாம் உலகப் போர் தொடங்கிய காலகட்டம். உலகு இரு அணிகளாகப் பிளவுபட்டு மோதிக் கொண்டது. அந்த சந்தர்ப்பத்தைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டார் செண்பகராமன். இந்திய சுதந்திரப் போராட்டக் களத்திலேயே கவனம் இருந்த செண்பகராமனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கியது.

அமைதிவழியில் ஆங்கிலேயர் கையைக் காலைப் பிடித்து அடிமையாக ஆட்சி புரிவது வீண் என்று கருதினார். அமைதி என்ற மொழி ஆங்கிலேயருக்குப் புரியாது; அவர்கள் வன்முறையாலும் ஆயுத பலத்தாலும்தான் நம் நாட்டை அடிமைப்படுத்தினார்கள்; எனவே அவர்களுக்கு அந்த மொழிதான் புரியும் என்கின்ற சித்தாந்தத்தில் அவருடைய உள்ளம் உறுதி கொண்டது.

எனவே ஆயுத பலத்தால் நாட்டை மீட்க ஒரு படை வேண்டும் என்ற எண்ணத்தால் அப்போது மிகவும் வலிமையாக இருந்த ஜெர்மன் படையின் ஆதரவை நாடினார் செண்பகராமன்.

ஜெர்மன் மன்னர் கெய்சரின் ஆதரவோடு முதல்முதலாக இந்திய தேசிய தொண்டர் படை என்ற படையை செண்பகராமன் நிறுவினார். ஐ.என்.வி என்ற பெயர் கொண்ட இந்த அமைப்பு, ஒரு ராணுவ பலம் கொண்ட அமைப்பாகவே தயாரானது. இந்தப் படையின் பேராற்றல் கண்டு பிரிட்டிஷ் அரசு கலக்கம் அடைந்தது.

இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும். வங்கச் சிங்கம் சுபாஷ் சந்திரபோஷ், ஐ.என்.ஏ என்ற இந்திய தேசிய ராணுவத்தை அமைப்பதற்கு முன்னோடீயாக இருந்தது செண்பகராமன் அமைத்த ஐ.என்.வி… 1933 ஆம் ஆண்டில் வியன்னாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் சுபாஷ் சந்திர போஸும் செண்பகராமனும் தாய்நாட்டு விடுதலை குறித்து பேசிக் கொண்டிருந்த போது, செண்பகராமன் வகுத்துக் கொடுத்த திட்டங்கள் சுபாஷ் சந்திர போஸை வெகுவாகக் கவர்ந்தது. அந்தத் திட்டங்களின் அடிப்படையிலேயே தன்னுடைய ஐ.என்.ஏ வை வடிவமைத்தார் சுபாஷ் சந்திரபோஸ். அதுபோல் ஜெய்ஹிந்த் என்ற வீர முழக்கமும் செண்பகராமன் சுபாஷ் சந்திரபோஸுக்குக் கொடுத்த மந்திரம்தான், அதனால்தான் அவர் ஜெய்ஹிந்த் செண்பகராமன் என்ற பட்டப் பெயருடனேயே அழைக்கப் பட்டார்.

இவ்வளவு சிறப்பான திட்டங்களை வைத்திருந்த செண்பகராமன், ஜெர்மன் படையினரோடு சேர்ந்து கொண்டு, உலகையே உலுக்கப் புறப்பட்டார். அதற்கு அவர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட கப்பலே எம்டன்… இந்தக் கப்பல் மூலம் உலகம் முழுதும் சென்று ஆங்கிலக் காலனியாதிக்க நாடுகளுக்குச் சென்று, அங்கு ரகசியப் போர் தொடுத்து ஆங்கில அரசை மிரட்ட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

முதல் உலகப்போர் முதன்முதலாக மேற்கு ஐரோப்பாவில் தொடங்கியது. பின்பு அதுவே கொஞ்சம் கொஞ்சமாகக் கிழக்கு நாடுகளிலும் பரவியது. கடைசியில் ஜெர்மனியும் பிரிட்டனுமாக நேருக்கு நேர் மோதின. பிரிட்டன் கடற்படையினர், போரில் தங்களை வெல்லுபவர்கள் எவருமே கிடையாது எனச் சற்று ஆணவத்தோடு இருந்தனர். இந்த விவரத்தை அறிந்த ஜெர்மானியர், பிரிட்டனுடைய மேலாதிக்க எண்ணத்தை முறியடிக்கத் திட்டமிட்டனர்.

1908 – ஆம் ஆண்டு போலந்து நாட்டின் கப்பல் கட்டும் துறையான ‘டான்ஜிக்’ கில் ஜெர்மானியக் கப்பல் நிபுணர்களால் வெகு சிரமப்பட்டுக் கட்டப்பட்ட ஒரு விசித்திரப் போர்க் கப்பலின் பெயரே ‘எம்டன்’ என்பது. அதை ஒரு நீர்மூழ்கிக் கப்பல் என்றே பலரும் எண்ணினர். ஆனால் ‘எம்டன்’ நீர்மூழ்கிக் கப்பல் அல்ல! அது ஒரு சிறிய விசித்திரமான போர்க்கப்பல்தான்.

எம்டன் 1908ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 25 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. நிலக்கரியில் இயங்குவதாயினும், அதிகபட்ச வேகத்தில் 6000 மைல்களுக்கு மீண்டும் எரிபொருள் நிரப்ப வேண்டிய தேவையில்லாமல் திரியக்கூடியது. இதிலுள்ள பீரங்கிகள் வேகமாகச் சுடும் திறன் கொண்டவை. நீர் மட்டத்திற்கு அடியில் விளங்கும் கப்பலின் பாகத்தைக் குறிபார்த்துச்சுட்டு, எதிரிக்கப்பல்களை விரைவில் மூழ்கடிப்பதே ஆஇதன் சிறப்பு.

முதலாம் உலக யுத்தத்திற்கு முன்னர் ஜெர்மனிக்கு உலகின் சில பாகங்களில் காலனிகள் ஆஇருந்தன. அவையெல்லாம் பின்னால் சீனா, பிரிட்டன், ஆஸ்திரேலிய, கபிரான்ஸ் ஆகியவற்றால் கபளீகரம் செய்யப்பட்டுவிட்டன. அந்தச் சமயத்தில் காலனிநாடுகளின் பாதுகாப்புக்காக ஜெர்மன் ஒரு கடற்படைப் பிரிவு வைத்திருந்தது. அதில்தான் எம்டென் முதன்முதலில் ஆஇணைக்கப்பட்டது.

பெரும்பாலும் ஒரு லோன் ரேஞ்சராகவே அது செயல்பட்டது. தன்னுடைய சப்ளை முகாம்களுக்குச் செல்லாமலும், சப்ளை கப்பல்களைச் சந்திக்க முடியாமலும் -இருந்தபோதெல்லாம், அந்த சந்தர்ப்பங்களில் அது எதிரிக் கப்பல்களை வேட்டையாடி அவற்றிலிருந்து தனக்கு வேண்டிய பொருள்களைக் கொள்ளையடித்துத் தன்னிறைவைப் பெற்றுக்கொண்டது.

அது எப்பொழுது வரும், போகும் என்பது யாராலும் அறியமுடியாததாக இருந்தது. தன்னுடைய நிறம், கொடிகள், புகைக்கூண்டு, வடிவம் ஆகியவற்றை மாற்றிக்கொண்டு மாறுவேடத்தில் வந்து எதிரிகளை ஏமாற்றிவிடும். கடலுடன் கடலாக மறைந்து கொள்ளும் மாயாஜாலவேலைகளெல்லாம் அதற்கு அத்துப்படி. போதாததற்கு புகைமண்டலத்தை ஏற்படுத்திக்கொண்டு அதற்குள் புகுந்து மறைந்து ஓடிப்போய்விடும். வந்த சுவடு தெரியாமல் மறைந்தும் போய்விடும்.

அதன் அளவுக்கு வேகமான கப்பல்களோ அல்லது அத்தனை தூரத்திற்குச்செல்லும் கப்பல்களோ வேறு எந்த நாட்டிலும் இல்லை.

அக்காலத்தில் மிக மாடர்னான கடற்படை என்று பெயர்பெற்ற ஜப்பானிடம்கூட இல்லை. பலம் மிகுந்த பல போர்க்கப்பல்களைச் சமாளித்து அவற்றிடமிருந்து தப்பிச்சென்றுவிடும். முதலாம் உலயுத்தத்திலேயே எதிரி கப்பல்களுக்கு அதிக சேதத்தைத் தனிப்பட ஏற்படுத்திய பெருமைக்குரியது.

இப் போர்க்கப்பலில், பல ரகசிய சாதனங்களையும் அடுக்கி வைத்திருந்தனர். போர் தொடங்கிய சமயத்தில் ஜெர்மன் மன்னர் வில்லியம் கெய்ஸர், எல்லாக் கடற்பகுதிகளிலும் பிரிட்டனுடைய போர்க்கப்பல்களைத் திணறச் செய்ய வேண்டுமென்று சிறப்பு உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

அதன்படி ஜெர்மானியர் கடலில் வேகமாகச் செல்லக்கூடிய தங்களது ‘எம்டன்’ கப்பலை இந்தியக் கடற்பகுதிகளில் தாக்குதல்களை நடத்த அனுப்பினர். பிரதம கமாண்டர் ‘வான்முல்லர்’ இச் செயலுக்குப் பொறுப்பேற்றார். அவருக்குத் துணையாக இந்தியரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் சி. செண்பகராமன் பிள்ளையை அழைத்துச் செல்ல அவர் முற்பட்டார்.

அப்படி இந்திய வீரரான டாக்டர் செண்பகராமன் பிள்ளையை கேப்டன் வான்முல்லர் தனக்குத் துணையாக எம்டன் கப்பலில் அழைத்துச் செல்வதற்குக் காரணம், செண்பகராமனிடம் இருந்த பொறியியல் திறமைதான்!

தமிழகத்தின் தென்மேற்குப் பகுதியான திருவாங்கூரில் பிறந்து வளர்ந்து மகாராஜா கல்லூரியில் படித்த மாணவனே செண்பகராமன் பிள்ளை. அந்நாளில் நம் நாட்டில் ஆங்கிலேயே ஆட்சியை எதிர்த்து இந்தியர்கள் நடத்திய போராட்டங்கள் ஏராளம்! இதனை நேரிலேயே கண்ட கல்லூரி மாணவனாகிய செண்பகரானின் இளம் உள்ளத்திலும் இந்த சுதந்திரக்கனல் புகையத் தொடங்கியது. திருவாங்கூர் சமஸ்தானத்தில் பிரிட்டிஷாருக்கு எதிராகப் பெரியவர்கள் நடத்தும் போராட்டங்களிலும் மாணவனான செண்பகராமன் கலந்து கொள்ளத் தவறியதில்லை.

ஜெர்மனி நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்திருந்த சர் வில்லியம் ஸ்டிரிக்லாந்து என்ற ஒற்றர், திருவாங்கூரிலும் சிறிது காலம் தங்கியிருந்தார். அச் சமயங்களில் மாணவன் செண்பகராமன் பிரிட்டிஷாருக்கு எதிராகச் செயல்படுவதையும் அவனுடைய துடிப்பான செயல்பாட்டையும் கண்டு ஸ்டிரிக்லாந்து வியப்படைந்தார். இந்த மாணவனை ஜெர்மனிக்கு அழைத்துச் சென்று, ஆங்கிலேயர் மீதுள்ள வெறியை மேலும் தூண்டிவிட்டு, அவனை ஒரு பெரும் புரட்சிக்காரனாகப் பரிமள்஢க்கச் செய்ய வேண்டும் என்று அவர் திட்டமிட்டார். அவனது பெற்றோர்களின் அனுமதியோடு ஸ்டிரிக்லாந்து செண்பகராமன் பிள்ளையைத் தன்னுடன் ஜெர்மனிக்கு அழைத்துச் சென்றார்.

செண்பகராமன், அங்குக் கல்லூரியில் படித்துப் பட்டங்கள் பெற்றார். அப்போது, ஜெர்மனியில் தங்கியிருந்த இந்தியத் தீவிரவாத எண்ணம் கொண்ட விடுதலைப் போராளிகளின் நட்பு அவருக்குக் கிடைத்தது. அவர்களுடைய தொடர்பினால் ஜெர்மானியச் சக்கரவர்த்தியைச் சந்தித்தார். முதலில் அவருடன் சாதாரணமாகவே நட்பு கொண்டிருந்தார். நாட்கள் செல்லச்செல்ல, இருவருமே நெருங்கிய நண்பர்களானார்கள். கெய்ஸரின் உத்தரவுப்படி ஜெர்மனி கடற்படையில் பொறியாளராக செண்பகராமனும் பதவி உயர்வு பெற்றார். கடற்படையின் பொறியியல் படிப்பில் டாக்டர் செண்பகராமனுக்கு இணை வேறு எவருமே இல்லை என்கின்ற நிலை வந்தது. அதனால்தான் வான்முல்லர் உலகப் போரில் ஜெர்மானியப் போர்க்கப்பலான ‘எம்டனில்’ உதவிப் பொறியாளராக செண்பகராமனை அழைத்துச் சென்றார்.

1914 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாத இறுதியில் ‘எம்டன்’ சீனக் கடற்பகுதியில் தனது ஆட்டங்களைக் காண்பித்துவிட்டு, இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்தது. இதனுடைய திடீர்த் தாக்குதல் மிகவும் வியப்பை ஏற்படுத்தியது. அங்கங்கே தனது கொடியை இடத்திற்குத் தக்கவாறு மாற்றிக் கொண்டு, அந்தந்த நாட்டுத் துறைமுகங்களில் தனக்கு வேண்டிய நிலக்கரி மற்றும் வேறு சாதனங்களைத் தந்திரமாகப் பெற்றது!

தன்னிடம் பயணம் செய்ய வருபவர்களுக்கு, உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமலிருக்க ஆங்காங்கு உணவுப் பொருள்களையும் சேகரித்துக் கொண்டது. ‘எம்டனை’த் தாக்க முயன்ற மற்ற நாட்டுக் கப்பற்படையினர், தோல்வியைத்தான் தழுவினர். அவர்களால் எம்டனைப் பிடித்து அடக்க முடியவில்லை.

பசிபிக் கடல் மற்றும் சீனக்கடலில் ‘எம்டனின்’ தாக்குதல்களை அறிந்த பின்னரே பிரிட்டிஷார் தங்களது அதிகாரத்தின் கீழுள்ள நாடுகளுக்கெல்லாம் ‘எம்டனை’ப் பற்றிய எச்சரிக்கைகளை மேலும் மேலும் விடுவித்தவண்ணம் இருந்தனர்.

அப்போது பர்மாவிலுள்ள ரங்கூன் துறைமுகம் ஆங்கிலேயர்களுக்கு மிக முக்கியத் துறைமுகமாக விளங்கியது. எனவே ரங்கூன் துறைமுகத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, எந்த வெளிநாட்டுக் கப்பல்களும் நுழையாதபடி, துறைமுக எல்லையைக் கட்டுக்கோப்புக்குள் கொண்டு வந்தனர் பிரிட்டிஷார். துறைமுகத்தையும் மூடியே வைத்தனர்.

அதனால் எம்டன் கப்பலால் ரங்கூன் துறைமுகத்திற்குள் செல்ல முடியவில்லை. எனவே அந்தமான் தீவிற்குச் செல்லத் திட்டமிட்டது. ஆனால்
அந்த நேரத்தில் பருவநிலை சரியாக இல்லை. கடலில் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. அதனால் அது அந்தமான் தீவுக்கும், ரங்கூனுக்குமாக வட்டமடித்துக் கொண்டே இருந்தது.

அதோடு ‘எம்டன்’ சென்னைத் துறைமுகத்தைத் தாக்க எப்படியும் வரும் என்ற பீதியும் அப்போது பரவியிருந்தது.

1914 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை. அன்று மாலை மாறுவேடத்தில் மீனவனாகச் சென்னை கடற்கரையில் வந்து வேவு பார்த்துவிட்டுச் சென்றார் செண்பகராமன். அன்று இரவு சரியாக 9.30 மணி…..! சென்னை ஜார்ஜ் டவுன், ராணுவப் பாராவோடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. துறைமுகப் பகுதிகளில் டிராம் வண்டிகள், ‘டாங்கா’ வண்டிகள், மோட்டார் கார்கள், கை ரிக்ஷாக்கள் ஓடிக் கொண்டிருந்தன.

அப்போது திடீரென்று கடலிலிருந்து ‘பளிச்… பளிச்’ சென்று, கண்களைப் பறிக்கும் ஒளி வீசியடித்தது. அம் மாதிரியான புது வெளிச்சத்தை சென்னை மக்கள் அதுவரையில் பார்த்ததேயில்லை. வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என பாதசாரிகளும், வண்டிகளில் பயணம் செய்வோரும், வானத்தை நோக்கிச் சுற்றும் முற்றும் பார்ப்பதற்குள், பயங்கரமான இடியோசை கேட்டது. காதுகள் கேட்கும் திறனை இழக்கும்படியான ஓசையைக் கேட்டதும், அதிர்ச்சியடைந்து சாலையில் ஓடிக்கொண்டிருந்த டிராம் வண்டிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அதிலிருந்த பயணிகள் அஞ்சி மூலைக்கொருவராய் ஓடி மறைந்தனர்.

அப்போதுதான் ஜெர்மானியப் போர்க்கப்பலான ‘எம்டன்’ சென்னைக் கடற்கரையை நெருங்கி தனது பீரங்கிக் குண்டுகளைத் தட்டிவிட்டது. ‘எம்டன்’ போர்க்கப்பலின் முன்பகுதியிலிருந்த ‘சர்ச் லைட்’ டின் மிகப் பிரகாசமான ஒளி கண்களைப் பறிக்கும்படியாக வீசியது. அதன் பீரங்கியின் ஓசை பேரிடியைப் போல ஒலித்தது.

உடனே ராயபுரம் காசிமேட்டிலுள்ள பிரிட்டிஷாரின் ‘உஷார் கடற்படை’யினர் தங்களது ‘சர்ச் லைட்’ வெளிச்சத்தைக் கடல் மீது வீசியடித்துப் பார்த்தனர். அப்போதுதான் அவர்களுக்கே அது தங்களது எதிரியான ஜெர்மானியரின் போர்க்கப்பலான ‘எம்டன்’ என்பது தெரிய வந்தது. உடனே அவர்கள் அதனைக் குறி வைத்துச் சுட்டனர். ஆனால் அதற்குள் ‘எம்டன்’ வெகு வேகமாக, கடல் அலைகளுக்குள் புகுந்து புகுந்து வெகுதூரம் சென்று மறைந்துவிட்டது.

‘எம்ட’னிலிருந்து கிளம்பிய குண்டுகள் சென்னைத் துறைமுகத்தின் வெளியே நின்றிருந்த ‘ஸூப்ரா’ என்ற பிரிட்டிஷ் கப்பலின் மேல் தளத்திலிருந்த ‘லைட் சிக்னலர்’ பிளெச்சர் என்பவரைத் தாக்கி அவரை அவ்விடத்திலேயே மரணமடையச் செய்துவிட்டது.

அதனருகில், ஆங்கிலேயருக்குச் சொந்தமான ‘பர்மா ஷெல் ஆயில் டாங்குகள்’ மீது குண்டுகள் விழுந்தன. குண்டுகள் விழுந்த சில நிமிடங்களுக்குள் அந்த இரண்டு எண்ணெய் டாங்குகளில் திடீரெனத் தீப்பிடித்து எரிந்தது. அதிலிருந்து வெளிப்பட்ட புகை வானமண்டலத்தைச் சூழ்ந்து ‘புகை மண்டல’மாகியது. அங்கிருந்த ஒரு காவல்காரரும், ரோந்துக் காவலரும் மரணமடைந்தனர்.

அடுத்த குண்டுகள் சென்னை உயர்நீதிமன்றத்தின் அருகே வெடித்ததில், அது அங்குள்ள பலமான சுற்றுச்சுவரை அடியோடு பெயர்த்துத் தள்ளியது. மற்றொரு குண்டு ‘செயின்ட் ஜார்ஜ் கோட்டை’ யின் அருகேயுள்ள மணற்பாங்கான இடத்தில் விழுந்து, வெடிக்காமல் மணலில் புதைந்துவிட்டது.

‘எம்டன்’ சென்னையைத் தாக்கிய செய்தி சில நிமிடங்களுக்குள் சென்னை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலெல்லாம் பரவி மக்களை அதிரச் செய்துவிட்டது. மக்கள் கும்பல் கும்பலாக ஓடிவந்து விபத்து நேர்ந்த இடத்தைப் பார்வையிட்டனர். இதற்குள் ஆயுதம் தாங்கிய காவல்படையினர் விபத்து நேர்ந்த இடங்களில் எல்லாம் மக்கள் அருகில் செல்ல முடியாதபடி குதிரைப்படை மீது ‘ரோந்து’ வந்தனர்.

மறுநாள் சென்னையிலிருந்து வெளிவந்த ‘தி மெயில்’, ‘ஹிண்டு’, ‘சுதேசமித்திரன்’ ஆகிய நாளேடுகள் ‘எம்டன்’ தாக்குதல் செய்திகளை சிறப்புச் செய்தியாக வெளியிட்டன. இதனைப் படித்த சென்னை மற்றும் சுற்றுப் பகுதியிலிருந்த மக்கள் பெரும் கவலையில் மூழ்கினர். அதனால் பெரும்பாலான மக்கள் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு, வேறு எங்காவது செல்லமுடிவு செய்து ஊரைக் காலி செய்தனர்.

இந்தச் சம்பவத்தால் ஆங்கில அரசு பெரும் அதிர்ச்சியடைந்தது. அதற்குக் காரணமானது ‘எம்டன்’ என்ற கப்பல்தான் என்றபோதிலும், ஆயுதத்திலோ கருவியிலோ என்ன இருக்கிறது? அதை இயக்கும் அல்லது நடத்தும் மனிதனின் ஆற்றல்தானே முக்கியம்? அந்த வகையில் வீரன் செண்பகராமனின் செயல் இங்கே நினைவுகூரத்தக்கது.

சென்னையிலிருந்து கொழும்புவுக்குச் சென்று, அங்கிருந்து அக்டோ பர் 28ஆம் தேதி பினாங்கு சென்று அங்கு சில போர்க்கப்பல்களை அழித்துவிட்டுச் சென்றது. பர்மாவுக்கும் சென்று அங்குள்ள சில துறைமுகங்களில் இருந்த கப்பல்களை அழித்தது. அந்தமான் தீவுக்கும் சென்றது. ஆகவே எம்டனின் பராக்கிரமம் மட்டுமல்லாது, டாக்டர் செண்பகராமன் பிள்ளையின் வீரமும் தமிழகம் இலங்கை மலாயா பர்மா ஆகிய இடங்களில் இருந்த தமிழர்களிடையே நன்கு பரவிவிட்டது.

இப்படி, இந்திய நாட்டின் விடுதலையைத் தனது உயிர் மூச்சாகக் கொண்டிருந்த அந்தமாவீரன், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் உலக சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு துன்பப் படுபவர்களுக்காகவும் பாடுபட்டார். அதன் அடிப்படையில் அவர் தென்னாபிரிக்காவிற்கும் பயணம் செய்தார்.

அங்குள்ள கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். கென்யாவில் டாக்டர் செண்பகராமன் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க பேருரையைப் பற்றிக் கேள்விப்பட்ட காந்தியடிகள், அவரைப் பெருமையோடு பாராட்டினாராம்… பண்டித ஜவஹர்லால் நேரு தனது சுயசரிதையில், “நாஜிகளுடன் கலந்து, சற்றும் பயமின்றிப் பணிபுரிந்த சொற்ப அளவிலான இந்தியர்களில் செண்பகராமன் முதன்மையானவர்” என்று புகழ்ந்து எழுதியிருக்கிறார்.

“விடுதலை பெறக்கூடிய தகுதி இந்தியர்களுக்குக் கிடையாது” என்று ஒருமுறை சொன்னார் ஹிட்லர். அதனால் வருத்தமுற்ற செண்பகராமன், ஹிட்லருக்கு இந்தியா பற்றியும் அதன் தலைவர்கள் குறித்தும் அசைக்கமுடியாத பல தகவல்களைக் கூறி வாதம் புரிந்தார். அவருடைய கூர்மையான வாதத்திறமைக்கு முன்னர் ஹிட்லரின் பேச்சு எடுபடவில்லை.

இந்தியர் பற்றிய தன்னுடைய கருத்துக்காக வருத்தம் கொண்ட ஹிட்லர், எழுத்து மூலமாக செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார். ஆனால் எப்போதும் பெருமிதத்திலேயே அலைந்து கொண்டிருந்த ஜெர்மன் நாஜிகளுக்கு இந்தச் சம்பவம் கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.

ஒரு இந்தியரின் கருத்துக்காக ஹிட்லர் தலைவணங்கியதை நாஜிக்களால் ஜீரணிக்க முடியவில்லை. அவர்கள் செண்பகராமனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினர். அதன்படி, உணவில் விஷம் வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றனர். 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாள் அவரது அன்பு மனைவி ஆலட்சுமிபாயின் மடியில் உயிர் துறந்தார் செண்பகராமன் பிள்ளை. அப்போது அவருக்கு வயது 42. அவர் மனைவிக்கு வயது 28.

நாஜிக்களால் தாம் கொல்லப்படுவோம் என முன்பே தெரிந்திருந்தால், தன்னுடைய மனைவி லக்ஷ்மிபாயிடம் ஒரு ஆசையைத் தெரிவித்திருந்தார். அவருடைய அந்த ஆசை – நாட்டுப் பற்றாளன் ஒருவனின் உண்மையான ஆசை. அவர் சொல்லியிருந்தது – நாடு சுதந்திரம் அடைந்து, சுயராஜ்யக் கொடி பறக்கும் கப்பலில்தான் பாரதம் திரும்புவேன். அப்படி முடியாமல் போய், நான் இங்கேயே இறக்க நேர்ந்தால், என் உடலை எரித்து, அஸ்தியை எடுத்துக்கொண்டுபோய், என் சுவாசம் தவழும் சுதந்திர இந்தியாவின் நாஞ்சில் நாட்டு வயல்களிலும் கரமனை ஆற்றின் படுகைகளிலும் தூவிவிடவேண்டும்…ஔ என்றார்.

செண்பகராமனின் மனைவி லக்ஷ்மிபாய் நன்கு படித்தவர், தைரியசாலி. அதனால் தன் மனைவியை அவர் ஜான்ஸி என்றே அழைப்பாராம். அதற்கேற்ப செண்பகராமன் இறந்தபிறகு அவருடைய அஸ்தியை எடுத்துவைத்திருந்த லக்ஷ்மிபாய், 1936 இல் இந்தியா திரும்பினார்.

அதன்பிறகு இந்தியா சுதந்திரம் பெற்று, வெகுநாட்கள் கழித்து, 1966 இல் அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தியிடம் தன் கணவனின் ஆசையைச் சொன்னார் லக்ஷ்மிபாய். அந்த மாவீரனின் ஆசையை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார் திருமதி இந்திராகாந்தி அவர்கள். அதன்படி சுதந்திர இந்தியாவின் கொடி பறக்கும் ஒரு கப்பலில் செண்பகராமனின் அஸ்தி எடுத்துவரப்பட்டு, கரமனை ஆற்றிலும் நாஞ்சில் வயல்களிலும் தூவப்பட்டது.

“சுதந்திர இஆந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்” என்று ஆசைப்பட்டார் ஜெர்மன் மன்னர் கெய்சர்.
அவருடைய விருப்பம் நிறைவேறாமல் போனாலும், செண்பகராமனின் விருப்பம் 1966 செப்டம்பர் 19 ஆம் நாள் இந்திய அரசின் உதவியோடு நிறைவேறியது.

அந்த மாவீரனின் நாட்டுப் பற்றும் ஊர்ப்பற்றும் அந்த வகையில் இருந்தது. சுக்கா மிளகா சுதந்திரம் – சும்மா கிடைப்பதற்கு?! எத்தனை மாவீரர்களின் உயிர்த்தியாகத்தால் வளர்ந்தது இந்த சுதந்திரப் பயிர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கிடைத்த சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்துவதே- இம்மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி!

கட்டுரை: – செங்கோட்டை ஸ்ரீராம்



 ‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக