புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புருஷன் Poll_c10புருஷன் Poll_m10புருஷன் Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
புருஷன் Poll_c10புருஷன் Poll_m10புருஷன் Poll_c10 
83 Posts - 44%
mohamed nizamudeen
புருஷன் Poll_c10புருஷன் Poll_m10புருஷன் Poll_c10 
6 Posts - 3%
prajai
புருஷன் Poll_c10புருஷன் Poll_m10புருஷன் Poll_c10 
6 Posts - 3%
Jenila
புருஷன் Poll_c10புருஷன் Poll_m10புருஷன் Poll_c10 
2 Posts - 1%
jairam
புருஷன் Poll_c10புருஷன் Poll_m10புருஷன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
புருஷன் Poll_c10புருஷன் Poll_m10புருஷன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
புருஷன் Poll_c10புருஷன் Poll_m10புருஷன் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
புருஷன் Poll_c10புருஷன் Poll_m10புருஷன் Poll_c10 
1 Post - 1%
M. Priya
புருஷன் Poll_c10புருஷன் Poll_m10புருஷன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புருஷன் Poll_c10புருஷன் Poll_m10புருஷன் Poll_c10 
127 Posts - 52%
ayyasamy ram
புருஷன் Poll_c10புருஷன் Poll_m10புருஷன் Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
புருஷன் Poll_c10புருஷன் Poll_m10புருஷன் Poll_c10 
10 Posts - 4%
prajai
புருஷன் Poll_c10புருஷன் Poll_m10புருஷன் Poll_c10 
8 Posts - 3%
Jenila
புருஷன் Poll_c10புருஷன் Poll_m10புருஷன் Poll_c10 
4 Posts - 2%
Rutu
புருஷன் Poll_c10புருஷன் Poll_m10புருஷன் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
புருஷன் Poll_c10புருஷன் Poll_m10புருஷன் Poll_c10 
2 Posts - 1%
jairam
புருஷன் Poll_c10புருஷன் Poll_m10புருஷன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
புருஷன் Poll_c10புருஷன் Poll_m10புருஷன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
புருஷன் Poll_c10புருஷன் Poll_m10புருஷன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புருஷன்


   
   
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Fri Sep 12, 2014 1:17 pm

புருஷன்



முன்னம் கோதாவரிக் கரையில் பிரம்மாண்டமான இலவ மரமொன்று இருந்தது. அங்கே மரப் பொந்தில் இரண்டு கிளிகள் வாசம் செய்து வந்தன.
ஒரு தினம் ஆண் கிளி பறந்து சென்று வெகு நேரமாகியும் கூடு திரும்பாததால் பெண் கிளி மிகவும் துக்கமடைந்தது. ''ஐயோ, இதென்ன இன்னுமவரைக் காணவில்லை. செல்வத்தையோ, விரும்பத்தக்க ஒரு பொருளையோ, அடைவதற்குச் செய்யும் பெரும் முயற்சியில் எப்போதும் அபாயம் கலந்துதானிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இவர் என்ன அபாயத்தில் சிக்கிக் கொண்டாரோ?'' என்று மனக்கிலேசமுற்று, கூட்டுக்கு வெளியும், உள்ளேயும் நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்த சமயம் ஆண் கிளி படபடவெனப் பறந்து வந்து சேர்ந்தது.

பெண்கிளியானது கோபத்துடன், ''நாதா, தாங்கள் இப்படி என்னைத் தனியாக விட்டுவிட்டு எங்​கே சென்றீர்? 'ஒருவன் ஆபத்தில் உதவியாயிருப்பதற்குச் செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும். செல்வத்தைக் காட்டிலும் தன் மனைவியைப் பாதுகாக்க வேண்டும்.' என்று நீதி நூல்கள் கூறவில்லையா?'' என்று கேட்டது.

அதற்கு ஆண் கிளியானது, ''பெண்ணே, பார்வையற்ற தன் மனைவியைப் பாதுகாக்க முயன்ற ராம்குமார் என்பவனின் கதையைக் கேட்டு வந்தேனாதலால் தாமதமாகிவிட்டது'' என்றதற்கு - பெண் கிளி, ''அதென்ன ராம்குமார் விருத்தாந்தம்? அதனை எனக்கு நீங்கள் சொல்ல வேண்டும்'' என்று அன்புடன் வேண்டிக்கொண்டது.

ஆண் கிளியானது சொல்லலுற்றது.

''பெண்ணே, முன்னம் சென்னையம்பதியில் ராம்குமார் என்ற ஒரு குமாஸ்தா நற்குணமுள்ளவனாக வாழ்ந்து வந்தான். அவனுக்கு சிவா என்றொரு பிரிய நண்பன் இருந்தான்.

''பெண்​ணே, எவனொருவனுக்கு இவ்வுலகில் தன் சினேகிதனோடு சல்லாபம் புரியவும், கூடியிருக்கவும் பேசவும் வாய்ப்புண்டாகிறதோ அவனை விடப் புண்ணியவான் யாருமில்லை.

ரகசியத்தை வெளியிடல், இருப்பு, கல்மனம், நிலையற்ற தன்மை, கோபம், விசுவாசமின்மை, சூதாடல் முதலியன நண்பனின் குற்றங்கள். இங்கு சொல்லியவற்றில் ஒரு குறைகூட நண்பன் சிவாவிடம் இல்லை.'

இவ்வாறு கூறிய ஆண் கிளி ராம்குமாரின் கதையைக் கூறலாயிற்று :

''பெண்ணே! ராம்குமார் பத்மினி என்ற பெண் அழகியைக் காதலித்தான். அவளோ பார்வையற்றவள். பார்வை இழந்தோர் பள்ளியில் பயின்று வந்த மாணவி.''

பெண் கிளி குறுக்கிட்டு, ''நாதா, குருட்டுப் பெண்ணையும்கூட ஒருவனால் காதலிக்க முடியுமா?'' என்று கேட்டது.

ஆண் கிளி சொன்னது : ''பெண்ணே, அழகு என்பது என்ன? இயற்கையாகவே ஒரு பொருளுக்கு அழகு உண்டா? அழகற்ற பொருள் என்று ஏதேனும் உண்டா? எவனுக்கு ஒரு பொருளில் விருப்பமுண்டோ அதுவே அவனுக்கு அழகுடையதாகின்றது. எவனொருவன் எவ்வெவற்றில் பற்றும் ஆர்வமும்  உடையவனாக இருக்கிறானோ அவ்வவைகள் அவனுக்கு அழகாகின்றன. பார்வையற்ற பத்மினிக்கும், அதே பள்ளியில் குமாஸ்தாவாகப் பணிபுரிந்து வந்த ராம்குமாருக்கும் காதல் அரும்பி இருவரும் திருமணம் செய்து கொள்வது என்று தீர்மானித்தனர்.

ஆனால் விதி மிகவும் வலிமையுள்ளது அன்றோ? உயிரோடிருக்கும் விதியுடைவன் கடலில் முழுகினாலும் சாக மாட்டான். தட்சகன் என்றும் கொடிய நச்சுப் பாம்பு தீண்டினாலும் உயிரோடிருப்பான். காலம் வராவிடின் நூறு அம்பினால் குத்தினாலும் சாகான். காலம் வரின் புல் நுனி குத்தினாலும் மரணமடைவான்.

சரவணமுத்து ஒரு போலீஸ்காரரை அடித்து விட்டதற்காக அவரும் ராம்குமாரும் சிறை சென்றதும் இப்படி ஊழ்வினைதான்'' என்றது கிளி.

''நாதா, சரவணமுத்து யார்? அவர் விருத்தாந்தம் என்ன? அதைச் சொல்ல வேண்டுகிறேன்'' என்று பெண் கிளி கேட்டுக் கொள்ள ஆண் கிளி சொல்லலாயிற்று.

''பெண்ணே, பார்வையற்ற அழகி பத்மினியின் தந்தைதான் சரவணமுத்து. மகளும் ராம்குமாரும் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள் என்று தெரிந்ததும் இருவருக்கும் அவர் மணமுடித்து வைத்தார். ஊழ்வினையால் திருமணதினத்தன்று ஒரு சம்பவம் நடந்தது.

வறுமை நிலையிலிருந்த சரவணமுத்து, மகள் பத்மினியின் கல்யாணச் செலவுக்காகத் தனக்குத் தெரிந்த ஒரு போலீஸ்காரரிடம் சிறிது பணம் கடன் வாங்கியிருந்தார். அந்தப் போலீஸ்காரரோ மகா உலோபி. அழகிற் சிறந்த பெண்ணே, எவனது வாழ்க்கை செல்வனின் வீட்டுக் கதவைத் தட்டவில்லையோ, அது புனிதமானது.

சரவணமுத்துவுக்குக் கடன் தந்த போலீஸ்காரர் சரவணமுத்துவைக் கடைத் தெருவில் வைத்து நாலு பேர் எதிரில் உடனடியாகத் தன் பணத்தைத் திருப்பிக் கேட்டார்.

அந்தப் போலீஸ்காரர் சரவணமுத்துவைக் கேவலமாகத் திட்டியதன் மறு உத்தரமாகச் சரவணமுத்துவும் போலீஸ்காரரைச் சில வார்த்தைகள் எதிர்த்துப் பேசியதால் போலீஸ்காரர் சரவணமுத்துவை நையப்புடைக்கலானார். இந்தச் சமயம் தெரு வழியே ராம்குமார் வர நேர்ந்தது.

தனது மாமனாரைப் போலீஸ்காரர் ஒருவர் தாக்கிக் கொண்டிருப்பது பொறாமல் அவன் அவரது உதவிக்கு விரைந்தான்.

வைத்தியருக்கு நோயாளிமீது விருப்பம். அரசு அதிகாரிகள் குடிகள் துன்பத்துக்குள்ளாகும் போது மகிழ்ச்சி அடைவர். தன்னை இருவர் தாக்கிக் காயப்படுத்தியதும் போலீஸ்காரர் ராம்குமாரையும், சரவணமுத்துவையும் கேஸ் எழுதிக் காராகிரகத்தில் தள்ளிவிட்டார்...''

ஆண் கிளி இப்படிச் சொல்லி முடித்ததும் பெண் கிளி கிலேசப்பட்டு, ''ஐயையோ, கல்யாணமான தினமே ராம்குமார் காராக்கிரகம் அனுப்பப்பட்டானா? என்னே அவனது ஊழ்?'' என்று துக்கித்தது.

''இன்னும் கேளாய் பெண்கிளியே...'' என்ற ஆண்கிளி தொடர்ந்து சொல்லலாயிற்று.

''தன் மனைவி பத்மினிமீது உயிரையே வைத்திருந்த ராம்குமார் தானும் அவள் தந்தையும் சிறை போனது அவளுக்குத் தெரிந்தால் எங்கே அவளுடைய மெல்லிய உயிர் பிரிந்துவிடுமோ என்று அஞ்சினான்.

அபாயம் வராமலிருக்கும் வரையுமே நாம் அதற்குப் பயப்பட வேண்டும். ஆனால் அது வந்து அடைந்ததும் அதை நீக்கத் தக்கதைச் செய்ய வேண்டும்.

சிறைச் சாலைக்குச் செல்லும் முன் தனது அருமை சினேகிதனான சிவாவைச் சந்தித்துத் தனக்கு உதவும்படி வேண்டிக் கொண்டான் ராம்குமார்.

''உயிர் நண்பனே, நான் சிறைச் சாலை சென்றது என் இனிய மனைவிக்குத் தெரியலாகாது. ஆறு மாதச் சிறைத் தண்டனையை ஆறு நிமிடமாக எண்ணிக் கழித்துவிட்டு வந்துவிடுகிறேன். அது பரியந்தம் என் ஸ்தானத்தில் நீ இருந்து உன்னை நானாக மனைவி எண்ணும்படி நீ நடிக்க வேண்டும்.''

சிவா இதனைக் கேட்டு அச்சமுற்று, ''ஐயோ.... இது எப்படிச் சாத்தியமாகும். நான் உன் ஸ்தானத்திலிருப்பதாவது'' என்று புலம்பினான்.

ஆண் கிளி இப்படிச் சொன்னதும் பெண் கிளி கேட்டது : ''நண்பனின் புலம்பல் நியாயமானதுதானே? கைப்பிடித்தவன் வேறொருவனிருக்க, அவனது ஸ்தானத்தைப் பர புருஷன் எவ்வாறு வகிப்பது? அது பாவமன்றோ? அந்தப் பாவச் செயலுக்கு ஒப்புக் கொள்ளும் நண்பன் சண்டாளனல்லவோ?'' என்று துக்கித்தது?

ஆண் கிளி மேலும் சொல்லலாயிற்று. ''கண்களுக்கு அன்பின் சஞ்சீவியாகவும், மனத்திற்கு ஆனந்தத்தின் இருப்பிடமாகவும் இருப்பவனும், சுக துக்கங்களில் கலந்து கொள்பவனுமான ஒரு நண்பனை அடைந்தவன் மிகவும் அதிர்ஷ்டசாலியன்றோ?''

நண்பனின் மனைவியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக நண்பன் கூறியபடி சிவா அந்த வீட்டிலேயே வாழ்ந்து வரலாயினான்.''

பெண் கிளி கேட்கலாயிற்று. ''நாதா, பருவப் பெண்ணின் அழகு பெரிய சீலர்களையும் குலைப்பதல்லவா?''

ஆண் கிளி சொன்னது : ''பெண் பிள்ளாய்! தீச்சுடரைத் தலைகீழாகப் பிடித்தாலும் அது மேல் நோக்கியே சுடர்விடுமன்றோ? தைரியமுடைய நேர்மையுள்ளவனுடைய அறிவானது இடர்க் காலத்திலும் மழுங்கிவிடுவதில்லை.

''பார்வையற்ற பத்மினியோடு வெகு ஜாக்கிரதையாகவே சிவா பழகி வரலானான். அவளை ஸ்பரிசிக்காமலும், அவள் இவனை ஸ்பரிசிக்கும்படியான சந்தர்ப்ப சூழ்நிலை ஏதும் வராதபடிக்கும், ஒரு சமயம் விரதம் என்றும், ஒரு சமயம் வெளியூர் செல்வது போலவும் மிக ஜாக்கிரதையாக விலகி நாட்களை எண்ணியவாறிருந்தான்.''

''இளமையான ஒரு ஆணும் பெண்ணும் ஒரே வீட்டில் எவ்வளவு காலம் அவ்வாறு கல்மிஷமில்லாமல் இருந்துவிட முடியும்?'' என்று பெண் கிளி கேட்டது.

ஆண் கிளி பதில் சொல்லியது. ''பெண்ணே, ராம்குமார் சிறையில் நூற்றெண்பது தினங்கள் - அதாவது ஆறு மாதம் இருக்க வேண்டுமென்ற தண்டனையானபடியால் அதனை அனுபவித்து மறுதினமே அவன் வீடு திரும்பி அவனை விடுவிக்க வேண்டுமென்றும், ஒரு தினம் தாமதித்தாலும் தான் விஷம் அருந்தி இறந்து விடுவேன் என்றும் சிவா நிபந்தனை வித்திருந்தான். 

ஆண் கிளி மேலும் சொல்லலாயிற்று. ''நெருப்பானது நெய்யை விழுங்க விழுங்க மேலும் பசி கொண்டு பற்றி எரிகிறது. ஓர் உத்தமமான பெண்ணுக்குக் கணவரின் பிரிவும் அப்படிப்பட்ட விரகத் தீயை ஏற்படுத்துகிறது. பார்வை இழந்த பத்மினிக்குத் தன் கணவனின் பிரிவும் அப்படிப்பட்ட விரகத் தீயை ஏற்படுத்துகிறது. பார்வை இழந்த பத்மினிக்குத் தன் கணவன் தன்னிடமிருந்து ஏன் விலகி விலகிச் செல்கிறார் என்று கிலேசமாயிருந்தது. கண் பார்வையற்ற தன்னால் ஒரு பயனும் அவருக்கு இல்லையென்று தன்னிடமிருந்து ஒதுங்குகிறார் என்ற ஐயம் அவளை வருத்தியது. உத்தம ஜாதிப் பெண்ணல்லவா?''

இஃது இவ்வாறிருக்க - காரியாலயத்திலிருந்து கிளம்பிய சிவா தனது டயரியைப் பார்த்தான்.

அன்றுடன் நூற்றெண்பதாவது நாள் முடிகிறது என்பதை உணர்ந்தான். வீட்டுக்கு ஆவலுடன் விரைந்தான்.

கதவைத் திறந்ததும் நண்பனை ஆவலுடன் அவன் கண்கள் தேடின. ராம்குமார் தான் வாக்களித்தபடி சிறையிலிருந்து வரவில்லை.

''சிறையிலிருந்து விடுதலை அடைந்த ராம்குமார் ஏன் குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லை? அதனை விளக்கிச் சொல்லுங்கள்'' என்று வினவிற்று பெண் கிளி.

ஆண் கிளி சொன்னது. ''பெண்ணே அதைத்தான் ஊழ் என்று கூறுகிறார்கள்.

''ராம்குமார் சிறையிலிருந்து விடுதலை அடைந்த தினம் சென்னையம்பதியில் பூர்ண அர்த்தால். போக்குவரத்து யாவும் ஸ்தம்பித்துப் போயிருந்தன.

அண்டை நாடான இலங்காபுரியில் இனக் கலவரம் மூண்டு தமிழ் மக்கள் கொல்லப்படுவதைக் கண்டித்துத் தலைநகரில் பூர்ண அர்த்தால் நடைபெற்றதால் போக்குவரத்துக்கு வசதியில்லாமல் சிறையிலிருந்து விடுதலைக்குப் பின் நடந்தே ராம்குமார் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான்.

உடற் களைப்பாலும், மனைவியையும் நண்பனையும் காணப்போகிறோமென்ற அளவுக்கு மீறிய ஆவலினாலும், மிதமிஞ்சிய பசியாலும், தலை சுற்றி ஒரு பூங்கா அருகில் படுத்து களைப்பு மிகுதியால் நெடுநேரம் கண்ணயர்ந்து விட்டான்.

இஃது இப்படியிருக்க விடுதலை அடைந்த ராம்குமார் வராததால் சிவா தான் ஏற்கனவே உறுதி எடுத்துக் கொண்டிருந்தபடி மாலையில் வீட்டுக்கு வந்ததும் விஷம் அருந்தி விட்டான்.

தன் உயிர் பிரியும் முன்னராவது நண்பன் வந்துவிட மாட்டானா என்று துடித்தான். ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்து விட்டான்.

பெண் கிளி கேட்கலாயிற்று - ''நாதா, அந்தக் கடிதத்தில் இருந்த விவரம் என்னவோ?''

ஆண் கிளி சொன்னது - கடிதத்தின் விவரமாவது : 'அன்பார்ந்த ராம்குமார், நீ சிறையிலிருந்து திரும்பும் வரை உனக்கு வாக்களித்தபடி உன் மனைவியிடமிருந்து ரகசியத்தைக் காப்பாற்றி, நானே நீ என்பது போல நடந்து கொண்டுவிட்டேன். எனது தாய் போலெண்ணி அந்த மாது சிரோமணியிடம் அவளது கற்புக்கு யாதொரு களங்கம் வராமல் நான் திரிகரண கத்தியுடன் சாமர்த்தியமாக நடந்து கொண்டேன்.

'ஒரு தாய்ப் பசுவின் காலானது கன்றைக் கட்டும் கம்பமாக அமைவது போலச் சில சமயம் சினேகிதர்களும் இன்னல்களுக்குக் காரணமாகிறார்கள்.

'வாக்களித்தபடி உன் தண்டனை முடிந்த நூற்றெண்பதாவது தினம் வரையில் நீ வராதபடியால் நான் விஷம் அருந்தி மடிகிறேன். இப்படிக்கு உன் தூய நண்பன் சிவா.' என்று இவ்விதமாக அந்தக் கடிதம் எழுதியிருந்தது'' என்று ஆண் கிளி சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தது.

''ரதிக்கு ஒப்பான அழகுடைய மனைவியே கேள். பார்வையற்ற பத்மினியும் அன்று இரவு தன் உள்ளக்கியிடக்கையைக் கணவனுக்குத் தெரிவித்துவிட அவனை இறுகக் கட்டி அவனுடைய அதர பானத்தைப் பெற்று, தான் அவன் அன்புக்கு ஏங்குவதைச் செயல்மூலம் தெரிவித்துவிட வேண்டுமென்று எண்ணியவாறு அவன் அறைக்கு மாலையில் சிற்றுண்டியுடன் சென்றாள்.

அவளுடைய வேலைக்கார சிறுமி, ''ஐயகோ, அம்மணி! நம் எஜமானர் கட்டிலில் விஷமுண்டு தேகமெல்லாம் நீலம் பாரித்துப் படுத்துக் கிடக்கிறார். அவரது சுவாசமும் நின்று போயிருக்கிறது'' என்ற துக்கச் செய்தியை அறிவித்தாள்.

இது கேட்டுப் பத்மினி துடிதுடித்து, ''ஐயோ! நான் என் செய்வேன்? விஷம் அருந்தி இறக்குமளவு என் கணவருக்கு நான் என்ன துரோகம் செய்தேன்? என்று மருகி, ஆற்றொணா துக்கத்துடன் கணவன் உடல்மீது விழுந்து புரண்டு அழுத சமயம் வேலைக்கார சிறுமி,

''தாயே, எழுமானரின் உடலருகே ஒரு கடிதம் உள்ளது'' என்று சொன்னாள்.

''அதனைப் படித்து உடனே சொல்லு. எனக்குப் பார்வை இல்லையே...'' என்றாள். கடிதத்தைச் சிறுமி படித்ததும் அரவம் தீண்டப்பட்ட ஆவினைப் போல் 'ஆ!' என்று துடித்த பத்மினி ''ஐயோ, மதி இழந்தேனே. கணவரின் நண்பரைக் கணவர் என்று எண்ணியிருந்த நானும் கற்புடைய ஒரு பெண்ணா? என்று புலம்பியவாறு அப்போதே விஷம் அருந்தித் தானும் மாண்டாள்.

சிறிது நேரத்தில் மெதுவே நடந்து வந்து சேர்ந்தான் ராம்குமார். நடந்த விவகாரங்களைத் தெரிந்து கொண்டான்.

''ஐயோ, இதற்கெல்லாம் நானல்லவா காரணம்! ஆருயிர் நண்பனையும், அருமை மனைவியையும் இழக்கக் காரணமான நான் இனி உயிருடன் இருத்தலாகாது'' என்று கூறியவாறு அவனும் மடிய எண்ணி விஷப் புட்டியைக் கையில் எடுத்த சமயம அவனது கையைப் பற்றி நிறுத்தினார் சரவணமுத்து.

ராம்குமாரின் கையைப் பற்றிக் கொண்டு சரவணமுத்து சொன்னார் : 'மாப்பிள்ளை. உண்மையில் சாக வேண்டியது நானல்லவா? இவற்றுக்கெல்லாம் மூலகாரணம் நானல்லா?'

கடன் கொடுத்த போலீஸ்காரரன் என்னைத் திட்டி அதட்டிய போது, சேவிக்கப்படத்தக்கவனுக்கும் சேவிப்போனுக்குமுள்ள தராதரம் தெரியாமல் நடந்து கொண்டுவிட்டேன். போலீஸ்காரரை நான் தாக்கியது தவறுதானே? நான் விஷம் அருந்துவதே பொருத்தமானது. எந்தக் குற்றமும் செய்யாத நீ சந்ததி தழைப்பதற்காக நல்லதொரு பெண்ணாகப் பார்த்து மணந்து கொண்டு அளவாக இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டு, பெண்ணாயிருந்தால் பத்மினி என்றும், ஆணாயிருந்தால் சிவா என்றும் பெயர் சூட்டி நீண்ட நாள் வாழ வேண்டும்.

இப்படி நீ வாழ்வதுதான் இறந்த உன் மனைவிக்கும், தோழனுக்கும், இறக்கப் போகிற எனக்கும் செய்கிற கைம்மாறாகும்'' என்று சொல்லி முடித்துக் கையிலிருந்து விஷத்தை அருந்தி அக்கணமே உயிர் நீத்தார்.

ஆண் கிளி இந்த விருத்தாந்தத்தைக் கூறி முடித்து, ''கதை கேட்ட பெண்ணே, பர புருஷனைத் தவறாகத் தொட்டுவிட்டோமே என்று இறந்த கற்பரசி பத்மினி, நண்பனுக்காக அவன் மனைவியைக் காத்து உயிர் நீத்த சிவா, தன் பாவத்துக்குப் பரிகாரமாக இறந்து சரவணமுத்து ஆகிய மூன்று பேரில் யார் உண்மையான தியாகி? சொல்லுவாயாக'' என்று கேட்டது.

அதற்குக் கதை கேட்ட பெண் கிளியானது ''நாதா, இறந்த மூன்று பேருடைய தியாகத்தை விட இத்தனை துக்கத்தையும் பொறுத்துக்கொண்டு, உயிர் வாழ்ந்து, வேறொரு மனைவியை மணந்து அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளின் வடிவத்தில் இறந்த தன் மனைவியையும் தோழனையும் காண்பதற்காக உயிர் வாழும் ராம்குமாரே சிறந்த தியாகி'' என்றது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக